Tuesday, September 27, 2016

சத்து மாவு பொடி

  • 1. கேழ்வரகு - 250 கிராம்
  • 2. கம்பு - 250 கிராம்
  • 3. சோளம் - 200 கிராம்
  • 4. மக்காச்சோளம் - 200 கிராம்
  • 5. சம்பா கோதுமை - 10 கிராம்
  • 6. பாசி பயிறு - 10 கிராம்
  • 7. ஜவ்வரிசி - 10 கிராம்
  • 8. வேர்கடலை - 10 கிராம்
  • 9. முந்திரி - 10 கிராம்
  • 10. பாதாம் - 10 கிராம்
  • 11. பொரிகடலை - 10 கிராம்
  • 12. சிகப்பரிசி - 10 கிராம்
  • 13. ஏலக்காய் - 5 
  • அனைத்தையும் தனி தனியாக வறுத்து ஆறவைக்கவும்.
  • பின் மிஷினில் கொடுத்து பொடியாக்கி ஆறவைத்து கொள்ளவும்.
  • இதை 100 மில்லி பாலுக்கு 1 மேஜைக்கரண்டி வீதம் சேர்த்து கஞ்சி காய்ச்சலாம்

குழந்தைக்கு என்ன உணவு கொடுக்கலாம்?


என்ன உணவு கொடுக்கலாம்?
இன்றைய காலகட்டத்தில் தனிக்குடித்தனம் என்பது அதிகமாகிவிட்டது. வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் வேலை என்று இருப்பதால், இது தவிர்க்க இயலாததும் ஆகிவிட்டது. பெரியவர்கள் துணை மற்றும் ஆலோசனை இல்லாத காரணத்தால் நிறைய தாய்மார்களுக்கு குழந்தை வளர்ப்பில் நிறைய சந்தேகங்கள் தோன்றும். பெரும்பாலான இளம் தாய்மார்கள் வருந்துவதும், குழம்புவதும் குழந்தையின் உணவு விசயத்தில்தான். எந்தக் காலக்கட்டத்தில் என்ன உணவு கொடுப்பது என்பது அனுபவசாலியான தாய்மார்களுக்குக்கூட தடுமாற்றம் தரும் விசயமாக இருக்கிறது.
என்னதான் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினாலும், சில நேரங்களில் மருத்துவர்கள் பரிந்துரைப்பது மட்டும் போதுமானதாக இருப்பதில்லை. பெரியவர்களிடம் கேட்டால், சமையல் குறிப்பில் தேவையான உப்பு என்பது போல், சிலர் "கொஞ்சமாக கொடுங்கள்" என்பார்கள், சிலர் "எல்லாமே கொடுக்கலாம்" என்பார்கள். 'கொஞ்சமாக' என்றால் எவ்வளவு என்பது யாருக்கு தெரியும்? எல்லாமே கொடுக்கலாம் என்றால் மட்டன் பிரியாணி கொடுக்கலாமா என்று கேட்கத் தோன்றும். எனவே, இந்த உணவு விசயத்தை இந்த பாகத்தில் கொஞ்சம் தெளிவாக விளக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.
Baby healthy foodகுழந்தைக்கு உணவு கொடுத்தல் என்பது சாதாரண செயல். சத்தான உணவு கொடுத்தல் என்பது பொறுப்பான செயல். வளரும் குழந்தைக்கு வெறும் உணவு என்பதைவிட சத்தான உணவு கொடுத்தல் ஒவ்வொரு தாயின் கடமை. பிற்காலத்தில் குழந்தையின் பெரும்பாலான ஆரோக்கியம் சம்பந்தமான விசயங்களை, ஆரம்ப நாட்களே முடிவு செய்கின்றன. எனவே, பிறந்த தினத்தில் இருந்து குழந்தையின் உணவு விசயத்தில் அதிக அக்கறை செலுத்துதல் மிகவும் அவசியமான ஒன்று.
குழந்தைக்கு ஒரு வருடத்திற்குள் என்னென்ன உணவைக் கொடுக்கலாம் என்பதைப் பற்றி என் அனுபவத்தில் கற்றுக் கொண்டதை, எனது குழந்தைகளின் மருத்துவர் உதவியோடு இங்கு எழுதுகிறேன். 6 மாதம் வரை தாய்பால் மட்டுமே போதுமானது. ஒருவேளை தாய்ப்பால் குழந்தைக்கு போதவில்லை என்ற சந்தேகம் எழுந்தால், மருத்துவரை சந்தித்து கேட்டால் அவர் குழந்தையின் எடை, ஆரோக்கியம் இவற்றைக் கணக்கிட்டு எப்பொழுது என்ன மாதிரியான திட உணவு கொடுக்கலாம் என்பதை சொல்வார்.
பிறந்த குழந்தைக்கு குறைந்தது நாலு மாதம் வரை தாய்ப்பால் மட்டும் போதுமானது. மருத்துவர்கள் 6 மாதம் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை பரிந்துரைப்பார்கள். குழந்தை பிறந்து 4 மாதங்களுக்கு அல்லது 6 மாதங்களுக்கு பின்னரே திட உணவு கொடுக்க தொடங்க வேண்டும்.
திட உணவு தயாரிக்க குழந்தைக்கு ஃபார்முலா மில்க் தேவையில்லை. பசும்பாலே போதுமானது. பசும்பாலை ஒரு வயதிற்கு மேல் தான் கொடுக்கவேண்டும் என்பதைக் கேட்டு பசும்பாலையே தவிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. திட உணவுக்கு சிறந்தது பசும்பால் தான் என்றாலும், விரும்பினால் ஃபார்முலாவிலும் கலந்து செய்யலாம். ஃபார்முலாவை சேர்த்தே கூழ் காய்ச்சக் கூடாது. அதிலுள்ள சத்துக்கள் நிறைய அழிந்து விடும். கூழ் காய்ச்சிய பிறகு, கடைசியாக ஃபார்முலாவை கலந்து ஊட்ட வேண்டும்.
குழந்தைக்கு முதன்முறையாக உணவை கொடுக்கும்போதே இந்த அளவு கொடுத்துவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு திணிக்கக்கூடாது. சில குழந்தைகள் 6 மாதங்கள் வரை திட உணவு சாப்பிட தயாராகாது. குழந்தையின் விருப்பத்தை புரிந்து கொண்டு உணவு புகட்ட வேண்டும். இதற்கு கொஞ்சம் பொறுமை தேவைப்படும். ரெடிமேட் உணவுகளை விட, வீட்டில் தயாரித்துக் கொடுக்கும் உணவே எப்போதும் சிறந்தது. அரிசி கூழ் முதல் உணவாக கொடுக்க ஏற்றது. நன்கு வெந்த சாதத்தை 1/2 கப் தண்ணீரில் நன்கு அடித்து, வடிகட்டி கஞ்சி போல் செய்து முதல் நாள் ஒரு ஸ்பூன் அளவு கொடுக்கலாம். விரும்பினால் ஒரு மேசைக்கரண்டி வரை கொடுக்கலாம். அதனையே முதல் நான்கு நாட்களுக்கு கொடுத்துப் பார்க்க வேண்டும். பிறகு அதனை மெல்ல 4 மேசைக்கரண்டி என்ற அளவில் அதிகப்படுத்தி கொடுக்கலாம். முதல் சில வாரங்களுக்கு காலை வேளையில் மட்டும் கொடுத்து, பின்னர் மெல்ல இரவிலும் கொடுக்க ஆரம்பிக்கலாம்.
குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, கோதுமை கூழ் போன்றவை. கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.
வேக வைத்த சாதத்தை மசித்து கஞ்சி போல கொடுக்கலாம். இட்லி, தோசை சாம்பார் கொடுக்கலாம். ஓட்ஸ், சத்து மாவு, ராகிப் பொடியை பாலுடன் கலந்து கூழ் போல் காய்ச்சிக் கொடுக்கலாம். சப்பாத்தியை பாலில் ஊறவைத்து மசித்துக் கொடுக்கலாம். காய வைத்துப் பொடித்த கேரள நேந்தரன் வாழைக்காய் பொடியை பாலுடன் காய்ச்சிக் கொடுக்கலாம்.
குழந்தைக்கு 6 மாதத்திற்குப் பிறகு தயிர் கொடுக்கலாம். வேகவைத்த முட்டையின் மஞ்சள் கருவை கொடுக்கலாம். 11 மாதம் முடிவடைந்தவுடன் வெள்ளைப் பகுதியையும் கொடுக்கலாம். வேக வைத்த காய்கறி, பருப்புடன் சாதமும், நெய்யும் கலந்து மசித்துக் கொடுக்கலாம்.
Baby healthy foodபலவகையான தானியங்களை கலந்து சத்து மாவு காய்ச்சி கொடுப்பார்கள். அதனுடன் சீவி காயவைத்த மரவள்ளி கிழங்கு மற்றும் சீவி காயவைத்த நேந்தரன் காயையும் சேர்த்து பொடித்து கூழ் காய்ச்சினால் மிகவும் நல்லது. மீன், ஆட்டிறைச்சி போன்றவற்றை 7 மாதத்திற்குப் பிறகு சூப்பாக முதலில் கொடுக்கலாம். பிறகு மெல்ல மிக்சியில் அடித்துக் கொடுக்கலாம். குழந்தையின் உணவில் இனிப்பு சேர்ப்பது நல்லதல்ல. அப்படி சேர்க்க விரும்பினால் வெல்லத்தை சேர்த்துக் கொடுக்கலாம். 7 மாதம் முடிந்தபிறகு கேரள நேந்தரன் பழத்தை வேக வைத்து, நடுவில் உள்ள விதையை நீக்கி அரைத்து கொடுக்கலாம். இது மிகவும் சத்தானது.
முதன்முதலாக குழந்தைக்கு உணவு கொடும்போது மிக்ஸியில் நன்கு அடித்து விட்டு பேஸ்ட் போல் செய்து (ஆப்பம் மாவு பதத்திற்கு) கொடுக்க வேண்டும். பிறகு ஒரு 7 மாதம் ஆனவுடன் மெல்ல பேஸ்ட் போல் அடிக்காமல் கைய்யாலோ ஃபோர்காலோ மசித்து விட்டு கொடுக்கவேண்டும். குழந்தை பேஸ்டாகவே சாப்பிட்டு பழகினால் பிறகு மசிக்காமல் உணவை சாப்பிடவே செய்யாது. பிறகு ஒரு வருடம் முடிவதற்கு முன்னரே மசித்து கொடுப்பதையும் நிறுத்தி விட்டு, அப்படியே சிறிய சிறிய துண்டுகளாகக் கொடுத்து சாப்பிட பழக்க வேண்டும்.
குழந்தைக்கு ஏற்ற பழ வகைகள்
வாழைப்பழம் - ஒரு (முட்)கரண்டியால் பழத்தை கட்டியில்லாமல் நன்றாக மசித்து, சிறிது பால் கலந்து கொடுக்கலாம். முதலில் கால் பழம் அளவிற்கு கொடுத்து பழக்கப்படுத்திய பிறகு, சிறிது சிறிதாக அதிகரித்து ஒரு பழம் வரை கொடுக்கலாம்.
ஆப்பிள் - ஆப்பிளை இட்லி தட்டில் வேக வைத்து, மசித்து, பாலுடன் கலந்து அல்லது அப்படியே கொடுக்கலாம். சில குழந்தைகளுக்கு ஆப்பிள் மலச்சிக்கலை உண்டாக்கிவிடும். அந்த பிரச்சனை இருந்தால் ஆப்பிளை தவிர்த்து பப்பாளி கொடுக்கலாம்.
அவக்கோடா எனப்படும் பட்டர் ஃப்ரூட்டும் மிகவும் நல்லது. இதில் கொழுப்புச் சத்து அதிகம். நன்றாக பழுத்த பழத்தை மசித்து கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு கொழுப்புச் சத்து மிகவும் அவசியம்.
அதனால் குழந்தைகளுக்கு கொடுக்கும் பாலில் தண்ணீர் கலப்பது சரியல்ல.
பியர்ஸ் பழத்தையும் ஆப்பிள் போலவே வேகவைத்து மசித்து கொடுக்கலாம்.
சப்போட்டாவை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். நல்ல சத்துள்ள பழ வகை அது. அதனையும் விதை நீக்கி மசித்துக் கொடுக்கலாம். constipation க்கு பப்பாளிப் பழத்தை மசித்துக் கொடுப்பது நல்ல பலனளிக்கும்.
வேக வைத்து மசித்த காய்கறிகள்:
பழங்களைக் கொடுத்து பழக்கி, 2 வாரத்திற்குப் பிறகு காய்கறிகளை கொடுக்கலாம். காய்கறிகளை நன்கு வேக வைத்து மசித்து, வடிகட்டி நீரை மட்டும் கொடுக்க வேண்டும். குழந்தைக்கு 7 மாதம் வரை வடிகட்டித்தான் கொடுக்க வேண்டும். ஏழு மாதங்களுக்கு பிறகு அப்படியே மசித்துக் கொடுக்கலாம்.
முதலில் 2 ஸ்பூன் விகிதம் கொடுத்து குழந்தைக்கு அது ஒத்துக் கொள்கிறதா என்பதை பார்த்துவிட்டு, பிறகு சிறிது சிறிதாக அளவை அதிகரிக்கலாம். அடர் பச்சை நிறத்தில் உள்ள கீரை வகைகள் மற்றும் கேரட், பரங்கி போன்றவை மிக நல்லது. காய்கறிகளை கொடுக்கும்பொழுது உப்பு சேர்க்க அவசியம் இல்லை. அதிலேயே தேவைக்கேற்ப சோடியம் உள்ளது. காய்கறி பழங்களை இட்லிதட்டில் ஆவியில் வேகவைத்து எடுப்பது நல்லது. அப்போதுதான் அதிலுள்ள சத்துக்கள் வீணாகாது.
இரும்புச் சத்துக்கு தேவையானது வைட்டமின் சி. அதனால் திட உணவுடன் ஆரஞ்ச் ஜூஸ் கொடுக்கலாம். முதல் சில மாதங்கள் தண்ணீர் கலந்து ஆரஞ்ச் ஜூஸ் கொடுப்பது நல்லது. புளிப்புள்ள பழ வகைகளை குழந்தைக்கு பார்த்து தான் கொடுக்கவேண்டும். சில குழந்தைகளுக்கு அது ஒத்துக் கொள்ளாது. உதட்டை சுற்றிலும் சிறிய சிவப்பு நிற பருக்கள் போல் தோன்றும்.
Baby healthy foodஒரு வயதிற்குள் நாம் வீட்டில் என்னென்ன சமைப்போமோ அதையே குழந்தையையும் சாப்பிட பழக்க வேண்டும். ஒரு வயது வரை மிளகாயை அறவே சேர்க்காமல் இருப்பது நல்லது. அதற்கு பதில் மிளகையோ(pepper), குடை மிளகாயையோ சிறிதளவு சேர்க்கலாம்.
எந்த உணவை முதன்முதலாக கொடுப்பதாயினும், நான்கு நாட்கள் கழித்துதான் வேறு ஒரு புதிய உணவைக் கொடுக்க வேன்டும். அந்த நான்கு நாட்களில் குழந்தைக்கு அந்த உணவு ஒத்துகொண்டதா, இல்லையா என்று தெரிய வரும். சில குழந்தைகளுக்கு எது சாப்பிட்டாலும் வயிறு இறுகி கான்ஸ்டிபேஷன் ஆகும். அந்த குழந்தைகளுக்கு காலையில் எழுந்து பால் கொடுப்பதற்கு பதில் இளநீர் கொடுத்தால் வயிறு இளகிவிடும். பழுத்த மாம்பழம் அல்லது பப்பாளிப் பழத்தை கெட்டியாக அடித்து, கூழ் போல் ஊட்டி விடலாம். சரியாகிவிடும்.
ஒவ்வாமை
குழந்தைகளுக்கு சில சமயம் உணவுகளால் ஒவ்வாமை ஏற்படலாம். அதனால் தான் ஒரு புதிய உணவு கொடுத்து நான்கு நாட்கள் காத்திருந்து, வேறு புதிய உணவை கொடுக்க சொல்கின்றார்கள். சில குழந்தைகளுக்கு அது உயிருக்கே ஆபத்தாகக் கூடிய அளவுக்கு கூட ஒவ்வாமை ஏற்படும்.
குறிப்பாக முட்டை, பசும்பால் போன்றவை சில குழந்தைகளுக்கு சுத்தமாக சேராது. உணவு கொடுக்கும்பொழுதே அல்லது சில மணி நேரத்துக்கு பிறகு வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, உடம்பில் பருக்கள் அல்லது சிவப்பு நிற திட்டுக்கள் தோன்றுதல், உதடு வீக்கம், சுவாசக் கோளாறு போன்றவை தோன்றினால் என்ன உணவு கொடுத்தோம் என்று யோசிக்க வேண்டும். குழந்தை மிகவும் அசௌகரியம் காட்டத் தொடங்கினால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
உதாரணத்திற்கு எனக்கு தெரிந்த குழந்தைக்கு முட்டை சேராது. முதன் முறையாக முட்டை கொடுக்கும்போது அழத் தொடங்கி, பிறகு தொண்டை அடைத்து மூச்சு திணறத் தொடங்கிவிட்டது. அதனால் அது போன்ற உணவுகளை முதல் நாள் 1/2 ஸ்பூன் மட்டுமே கொடுத்து பார்க்க வேண்டும். தேனை குழந்தைக்கு ஒரு வயது வரை கொடுக்க கூடாது என்பார்கள். என்றாலும் நம் ஊரில் அதனை கொடுப்பார்கள். அப்படி கொடுக்கும்பட்சத்தில் சிறு தேனீயின் தேனை வாங்கி குழந்தைக்கு கொடுக்கலாம். அது குழந்தைக்கு மருந்தாகும்.
உணவு சாப்பிட மறுத்தால்
Baby healthy foodசில குழந்தைகள் உணவை விழுங்காமல் நாக்கால் வெளியே தள்ளிவிடும். இந்த செய்கையினால் சோர்ந்து போகாமல் அப்போதைக்கு நிறுத்தி விட்டு, ஒரு வாரம் கழித்து மீண்டும் முயற்சிக்கலாம். குழந்தைகள் இயல்பிலேயே வாயில் படும் பொருட்களை வெளியில் தள்ள முயற்சி செய்யும். நாளடைவில் அந்த பழக்கம் மாறிய பின்னர் உணவை முழுங்கத் தொடங்கும்.
சில குழந்தைகளுக்கு முதன்முறை ஸ்பூனால் கொடுக்கும்பொழுது பிடிக்காமல் போகலாம். உணவை சாப்பிட மறுத்தால், நமது ஆள்காட்டி விரலை நன்கு சுத்தமாக கழுகி அதில் உணவை சிறிய அளவில் தடவி குழந்தைக்கு கொடுக்கலாம். உணவு சுவை பழகிய பின்னர் ஸ்பூன் கொண்டு கொடுக்கலாம்.
ஸ்பூன்கள் கொண்டு உணவு கொடுக்கும் போது மிகவும் எச்சரிக்கையாக இருத்தல் அவசியம். சிறுகுழந்தைகள் படுவேகமாக கையால் தட்டிவிடும். அப்போது குழந்தையின் வாயில், முகத்தில் பட்டுவிட வாய்ப்புள்ளது. அதனால் கூர்மையான, வெட்டும்படி உள்ள சில்வர் ஸ்பூன்களை உபயோகித்தல் கூடாது. குழந்தைகளுக்கென்றே உள்ள பிரத்தியோக குட்டி ப்ளாஸ்டிக் ஸ்பூன்களை பயன்படுத்துவது பாதுகாப்பானது.
சில குழந்தைகள் கூழாகவே சாப்பிட விரும்புவார்கள். சிறிய கட்டிகள் தென்பட்டால் அல்லது சிறிது கட்டியாக இருந்தாலும் சாப்பிட மறுப்பார்கள். மெல்ல அரைத்து ஊட்டுவதை நிறுத்த வேண்டும் என்றாலும், கெட்டியான உணவை விடாப்பிடியாக ஊட்ட முயன்றால் குழந்தைக்கு சாப்பிடுவதில் ஆர்வம் இல்லாமல் போய்விடும். அது சாப்பிட மறுத்து, அதனால் அதற்கு போதிய சத்துக்கள் கிடைக்காமல் போய்விடும் அபாயம் உள்ளது. எனவே எதையும் கட்டாயப்படுத்தாமல், அதன் போக்கிலேயே சென்று கொஞ்சம் கொஞ்சமாக மாற்ற வேண்டும். இப்போது அரைத்த உணவையே கொடுத்து மூன்று நாட்களுக்கொருமுறை ஒவ்வொரு ஸ்பூன் கெட்டியாக மசித்ததையும் கொடுத்து பழக்க வேண்டும்.
Baby healthy foodநன்றாக சாப்பிடும் சில குழந்தைகள் திடீரென சாப்பிடாமல் இருப்பது அல்லது விரும்பி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ஒன்றை திடீரென சாப்பிட மறுப்பது என்பது குழந்தையின் சுபாவம். குழந்தை மறுத்து தலையை திருப்பவோ, துப்பவோ, அழுகவோ செய்தால் நிறுத்தி விட்டு சிறிது நேரத்திற்கு பிறகு கொடுத்து பார்க்க வேண்டும். உணவில் ஆர்வமில்லாத குழந்தைகளை நாம் சாப்பிடும்பொழுது பக்கத்தில் அமர வைத்து சாப்பிட்டால், அதை பார்த்து அவர்களுக்கும் சாப்பிடும் ஆர்வம் வரும்.
குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க தொடங்கும் வரை தண்ணீரே தேவையில்லை என்றாலும், முன்பே தண்ணீர் அடிக்கடி கொடுக்காமல் விட்டால் பின்னாளில் தண்ணீர் குடிக்கவே மாட்டார்கள். எனவே நன்கு காய்ச்சி ஆற வைத்த நீரை அவ்வபோது கொடுத்து பழக்க வேண்டும்.

நாட்டு மாடு-சீமை மாடு அடிப்படை வித்தியாசங்கள்

நாட்டு மாடுகள் பற்றி புரிந்து கொள்ள அடிப்படையில் நாடு என்றால் என்ன என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நாடு என்றால் என்ன..?
இன்று உள்ளது போல படைபலம் கொண்டு தன்னால் இயன்ற அளவு பிடித்து கொள்வது நாடு அல்ல. நாடு என்பது ஒவ்வொரு பகுதியின் நீர் வடிகாலை பொறுத்து அங்கு நிலவும் சீதோஷ்ண நிலை, மண்ணின் தன்மை பொறுத்து அமையும். ‘தன்னிறைவு பெற்ற ’ சீதோஷ்ண-சமூக-கலாசார-பொருளாதார மண்டலங்கள்.

உதாரணம்:
கொங்கு நாடு மலைகள் சூழ்ந்து, அந்த மலைகளில் இருந்து வடியும் நீர் காவிரி உள்ளிட்ட நதிகளின் நீர்பிடிப்பு பகுதியாக இருக்கும். பாண்டிய நாட்டுக்கு வைகை போல சீதோஷ்ண மண்டலங்களே நாடுகள்.
நாடுகள் பிரிக்க பட்டாலும், இந்த தன்னிறைவு கொள்கை அடிப்படையில் பிரிக்கப்பட்டன. இதையே சனாதன கொள்கை (Sustainability) என்று சொல்வார்கள். அதாவது அந்நாட்டின் பெரும்பான்மை தேவைகளுக்கு அந்நாட்டை விட்டு வெளியே செல்ல தேவை இருக்காது.

நாடுகள் ஏன்?
நம் கிராமங்களே சனாதன கொள்கையின் அடிப்படையில் உருவானவைகளே!. வீட்டில் ‘செலவு டப்பா’ என்று சொல்கிறோமே ஏன்..? அது ஒன்றுதான் செலவாக இருந்தது. அதாவது வெளியில் சென்று வாங்க வேண்டியது. மீதி பொருட்கள் எல்லாம் உள்ளூரிலேயே கிடைக்கும் படி நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள்.
அப்படியான நாடுகளில், அந்த நாடுகளுக்கேற்ப மண்ணின் நுண்ணுயிர்கள் முதல் செடி கொடிகள், காய் கறிகள், தானியங்கள், விலங்குகள், மனிதர்கள் அவர்தம் குணங்கள் செயல்பாடுகள் என அனைத்தும் மாறுபடும். இதையே நாட்டு ரகங்கள் என்கிறோம். இவை அந்த மண்ணின் தன்மையும், நீரையும், சீதோஷ்ண நிலையையும் அனுசரித்து வருவதால் அம்மண்ணிற்கேற்ற வகைகள்-அதை தாங்கி வாழ கூடியதும் ஆகும்.Bos Taurus-Bos Indicus
சீமை மாடுகளை ‘உயர் ரக’ என்னும் ஆடை மொழி கொடுத்து நம் நாட்டிற்குள் “பல்வேறு சக்திகள்” திட்டமிட்டு நுழைத்து விட்டன. ஆனால் அவை முதலில் நம் மாடுகளே அல்ல. தற்கால அறிவியல் உலகம் ஒவ்வொரு உயிரினத்திற்கும் கொடுக்கும் உயிரியல் பேரை (Zoological Name) கொண்டே அறியலாம்.
நாட்டு பசுக்கள் – Bos Indicus.
சீமை மாடுகள் (பன்றிகள்) - Bos Taurus
எனவே, சீமை மாடுகள் என்பன நம் மாட்டின் வகை என்பதே தவறு.

அவசியம் ஒரு நாட்டு மாடு...
ரொம்ப முக்கியம் அல்ல ரொம்ப அவசியம்
நாட்டு பசுக்கள் 1.5-4 லிட் கறக்கையில் சீமை மாடுகள் (பன்றிகள்) ஆறு - பத்து லிட் பால் கறக்கிறது. ஏன்..?
அதற்கு இயற்கையிலேயே பெண்மை தன்மை மிகுதி. பெண்மை ஹார்மோன் அதிகம். மூன்று நான்கு ஈத்துக்களில் சினை பிடிக்கும் தன்மை நின்று விடும். போதாக்குறைக்கு சீமை மாடுகளில் மரபணு மாற்றம் ஹார்மோன் ஊசி என்று ஏற்றி அதன் உடல் செயல்பாட்டையே கெடுத்து விடுகிறார்கள். சீமை காளைகளை பார்த்தால் உணர்ச்சியற்ற ஜடமாக நிற்கும். அதன் பாலியல் உணர்வு மிக குறைவு. இதனால் சீமை பன்றி பாலை குடித்தால் கொஞ்சம் கொஞ்சமாக நமது உடலின் ஹார்மோன் சமநிலை தடுமாற துவங்கும்.
உணர்ச்சி பெருக்கடைந்த பெண்கள், உணர்ச்சி குறைபாடுடைய ஆண்கள் என்று சமூகம் சமநிலையை இழக்கும். இதனால் சமூகத்தில் கற்பொழுக்கம் சாத்தியமற்றதாகிறது.

✯ இந்த ஹார்மோன் சமநிலை தடுமாற்றம் உடலின் அனைத்து செயல்பாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. கர்ப்பப்பை கோளாறுகள், பால் சுரப்பு, முறையற்ற மாதவிடாய் கோளாறு, சீக்கிரம் மாதவிடாய் நின்று விடுதல் என மறைமுக பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
✯ சீமை மாடுகளை யார் வேண்டுமானாலும் தொடலாம் பால் கறக்கலாம். எதுவும் செய்யாமல் ஜடமாக நிற்கும். இதன் பாலை குடிக்கும் ஆண்களும் பெண்களும் அதுபோலத்தான் இருப்பார்கள். ரோஷம்-சொரணை குறையும் . மூளையின் செயல்பாட்டில் வேகம் குறையும். முன்னாளில் சின்ன வார்த்தை தவறி சொன்னாலும் அதன் உள்ளர்த்தத்தை புரிந்து கொள்வதும், கிட்டே நெருங்கி வரும்போதே எட்ட தள்ளி நின்று பேசும் பெண்களையும், சிறிய அவமதிப்பென்றாலும் உடனடியாக ரியாக்ட் செய்யும் பெரியவர்களையும் கண்டுள்ளோம். இன்று எவ்வளவு மட்டமாக பேசினாலும் சொரணை கேட்டு போனதுபோல் நிற்கும்படி குணம் எப்படி மாறியது..?
✯ நாட்டு பசுக்களின் உடலில் ஆண்-பெண் ஹார்மோன் சரி விகிதமாக சீராக உள்ளது. அதன் பால் மூலம் கிடைக்கும் பொருட்களை பயன்படுத்தும்போது சீரற்ற ஹார்மோன் உள்ள உடலையும் சீராக்கும். இதனால் சீரான முறையான ஒழுக்கமான வாழ்க்கையை வாழ நம் உடலும் ஒத்துழைக்கும்.
✯ நாட்டு பசுக்களை அதன் எஜமானரை தவிர கண்டவர்கள் எல்லாம் தொட முடியாது. ஓரிடத்தில் தொட்டால் அந்த இடத்தை மட்டும் சிலிர்த்து காட்டும். அவ்வளவு உணர்வு உள்ளது. அதன் பாலை தொடர்ந்து பயன்படுத்தும் போது புத்தி கூர்மை, ரோஷம், வீரம், தன்னிலை உணர்தல் எல்லாம் சரிவர நடக்கும்.
✯ சீமை மாடுகளை பயன்படுத்துவோர், அதன் தாக்கம் முதல் தலைமுறையில் தெரியா விட்டாலும், மரபணு மூலமாக இரண்டாம் அல்லது மூன்றாம் தலைமுறையில் நிச்சயம் தெரிந்து விடும்.!

*பொது அறிவு*

1. இதயத்தின் சராசரி எடை 300 கிராம்கள்

2. ஒரு நாள் இதயத் துடிப்பின் சராசரி அளவு 1,03,680 முறை.
3. நாம் ஒரு நாளைக்கு 25,900 முறைகள் சுவாசிக்கிறோம். சுவாசிக்கும் அளவு 400 கன அடி காற்று.
4. மூளைக்குத் தேவையான பிராணவாயு – உள்ளிழுக்கும் பிராணவாயுவில் 20 சதவிகித அளவு.
5. உடலின் வலது பக்க இயக்கங்களை இடப்பக்க மூளையும் இடதுபக்க இயக்கங்களை வலப்பக்க மூளையும் கட்டுப்படுத்துகிறது.
6. உடலின் மொத்த எடையில் இரத்தம் எட்டு சதம் உள்ளது.
7. ரத்தத்தில் மூன்று வகை உள்ளன. இரத்த சிவப்பணு, வெள்ளை அணு, பிளேட்லெட்கள்.
8. இரத்த சிவப்பணு எரித்ரோசைட் என்றும், வெள்ளை அணு லியூக்கோசைட் என்றும் அழைக்கப்படுகிறது.
9. இரத்தக் குழாய்கள் இதயத்திற்கு இரத்த்த்தை ஒரு நிமிடத்திற்குள் கொண்டு போய் சேர்க்கின்றன.
10. மனித உடலில் ஐந்தரை லிட்டர் இரத்தம் உள்ளது.
11. ரெடினா என்பது விழித்திரை
12. ஹைப்போஜியுஸியா என்பது நாக்கில் ஏற்படும் நோய். இதன் அறிகுறி சுவை குறைந்து விடும்.
13. ஓரோபாரின்க்ஸ் என்பது வாயின் பின்பகுதி, தொண்டையில் சேருமிடம்.
14. கருவிலுள்ள குழந்தையின் இதயம் நான்காவது வாரத்திலிருந்து துடிக்கத் துவங்குகிறது.
15. மீடியாஸ்டினம் என்பது இரண்டு நுரையீரல்களுக்கு இடைப்பட்ட பகுதி
16. ப்ளூரா என்பது நுரையீரல் உறை
17. இன்சுலின் – இதன் வேலை ரத்த்த்தில் இருக்கும் சர்க்கரை அளவை சரியாக வைப்பது.
18. சிறுநீரகங்கள் கீழ் முதுகில், முதுகுத் தண்டிற்கு இருபக்கமும் உள்ளன.
19. அல்வியோலஸ் என்பது மெல்லிய சுவருடைய காற்று செல். மனித நுரையீரல்களில் 750,000,000 அல்வியோலஸ் செல்கள் உள்ளன.
20. ஒரு குழந்தை 330 எலும்புகளுடன் பிறக்கிறது.
21. உடலில் 206 எலும்புகள் உள்ளன.
22. பிபுல்லா என்பது முழங்காலையும் குதிகாலையும் இணைக்கும் எலும்பு
23. மனித உடலில் உள்ள நீளமான எலும்பு தொடை எலும்பு.
24. மனித உடலில் உள்ள சிறிய எலும்பு காது எலும்பு.
25. மனித உடலில் உள்ள முதுகெலும்புகள் 33.
26. முகத்தில் உள்ள எலும்புகள் 14.
27. கைகளில் உள்ள எலும்புகள் 27.
28. மனித உடலில் எளிதில் உடையும் பகுதி கழுத்துப் பட்டை எலும்பு.
29. மூளையில் பெரிய பகுதி பெரு மூளை – செரிப்ரம் என்று அழைக்கப்படுகிறது. இது பேச்சு, பார்வை, கேட்டல், நுகரல், சிந்தனை, ஞாபகம், செயல், உணர்வு, இயக்கம் போன்றவற்றை கட்டுப்படுத்துகிறத.
30. சிறு மூளை உடல் சமன்பாடு, அசைவுகளை இணைத்தல் பணியை செய்கிறது.
31. உணவுப் பாதையின் நீளம் – வாய் முதல் மலவாய் வரை 15 அடிகள்
32. நகமாக வளரும் புரதப் பொருள் கெரட்டின்.
33. எலும்பு மஜ்ஜை ஒரு நாளைக்கு 25000 கோடி இரத்த சிவப்பணுக்களை உருவாக்குகிறது.
34. மூக்கில் 60 மில்லியன் உணர்வு செல்கள் உள்ளன.
35. மனித உடலிலுள்ள எலும்புகள் ஒன்பது கிலோ எடை கொண்டதாக இருக்கும்.
36. பெருவிரலுக்கும் மூளைக்கும் தொடர்பு அதிகமாக உள்ளது.
37. நம் தலையில் சுமார் 1,50,000 முடிகள் உள்ளன.
38. 30 வயதிற்கு மேல் புதிய தலை முடி உருவாகுவதில்லை.
39. குருதி உறைதலுக்கு காரணமான நொதி திராம்பின்
40. ஒரு மனிதன் உடலில் ஒரு நாளைக்கு ஒன்று முதல் ஒன்றரை லிட்டர் சிறுநீர் உற்பத்தியாகிறது.
41. சிறுநீர்ப்பை 600 மிலி சிறுநீரை கொள்ளும் திறனைக் கொண்டுள்ளது.
42. இருமும் போது ஏற்படும் ஒலியின் வேகம் மணிக்கு 245 மைல்கள்.
43. இருதயப் பணியின் ஒரு சுழற்சி முடிய 0.8 வினாடி நேரமாகிறது.
44. உடலில் வளராத, மாறாத பகுதி கண்ணிலுள்ள பாப்பா.
45. ஒரு நாளில் இரத்தம் நமது உடலில் 1680 மைல் தூரம் அளவு ஓடும்.
46. குடலில் மொத்த நீளம் 9 மீட்டர்.
47. உடலில் வேர்க்காத பகுதி உதடுகள்
48. உடலில் குளிர்ச்சியான இடம் மூக்கின் நுனி.
49. மூளையின் எடை சராசரி ஒன்றரை கிலோ.
50. உடலின் சீரான வெப்பநிலை 98.4 டிகிரி பாரன்ஹீட்.
51. ஒரு நாளில் 1200 முதல் 1500 மிலி வரை உமிழ் நீர் சுரப்பாகிறது.
52. வெஸ்டிபுலே – எனப்படுவது பற்கள், கன்னத்திற்கு இடைப்பட்ட பகுதி.
53. சைனஸ் என்பது முக எலும்புகளிலுள்ள காற்றறைகள்.
சுவாசிக்கும் காற்றை நுரையீரலுக்கு தகுந்தவாறு சீர்படுத்துவது இதன் பணியாகும். குரல் தெளிவாக இருக்க, முக எலும்புகள் கனம் குறைய இது உதவுகிறது.
54. இரத்தக் கசிவு 1 முதல் 3 நிமிடங்கள் இருக்கும்.
55. இரத்தம் உறைவதற்கான நேரம் 4 முதல் 8 நிமிடங்கள்.
56. உடலின் தோல் மூன்று அடுக்கால் ஆனது. தோலின் மேலடுக்கு எபிடெர்மிஸ், இதில் இரத்த ஓட்டம் இல்லை. தோலின் இரண்டாவது அடுக்கு டெர்மிஸ் பகுதி என்றும், அடிப்புற அடுக்கு அடித்தோல் என்றும் அழைக்கப்படுகிறது.
57. மார்பை பாதுகாக்கும் எலும்பின் பெயர் ரிப்ஸ்.
58. நமது உடலில் மிகவும் கெட்டியான தோல் பாதத்தில் உள்ளது.
59. கழுத்து வலி மருத்துவத் துறையில் செர்விகல் ஸ்பான்டிலிடிஸ் என்று அழைக்கப்படுகிறது.
60. ஹைப்பர் தெரிமியா என்பது உடல் வெப்பநிலை அதிகமாகுதல்.
61. ரேணுலா என்பது நாக்குக்கு அடியில் தோன்றும் நீர்க்கட்டி
62. எலும்பு, பற்களில் உள்ள புரதம் ஆஸ்சின்.
63. மனித உடலில் வியர்வை சுரப்பிகள் சுமார் 3 மில்லியன்களுக்கு மேல் உள்ளன.
64. செரடோனின் – வேதிப்பொருள் குறையும் போது தலைவலி ஏற்படும்.
65. வேகஸ் நரம்பிற்கு இதயத் துடிப்பை குறைக்கும் தன்மை உள்ளது.
66. இரத்தத்திற்கு நிறம் கொடுப்பது ஹீமோகுளோபின்.
67. பெருங்குடலின் நீளம் 100 முதல் 150 செ.மீ ஆகும். சிறுகுடலின் நீளம் 5 மீட்டர்.
68. பெருங்குடலின் பணி தண்ணீர் மற்றும் தாது உப்புக்களை உறிஞ்சுதல்.
69. உடலின் மிகப் பெரிய சுரப்பி கல்லீரல்.
70. பித்தப்பை கல்லீரலின் கீழ்ப் பாகத்தில் அமைந்துள்ளது.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..!

வெறும் தரையில் படுத்து ஏன் உறங்கக் கூடாது?


நம் உடலின் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். தரையில் படுத்தால் பூமியின் குளிர்ச்சியால் நம் உடல் வெப்பம் குறையும் எனவே உடல் வெப்பத்தை அதிகரிக்க அளவுக்கு அதிகமாக சர்க்கரை மற்றும் ஆக்சிஜனைப் பயன்படுத்தும். எனவே உடலில் தசைநார்களில் சேர்த்துவைக்கப்பட்டுள்ள கிளைக்கோஜன் எனும் சர்க்கரை தேவையில்லாமல் செலவாகும்.

மேலும் நுரையீரல் அதிகமாக வேலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே வீசிங் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.

எனவே எப்போது படுத்தாலும் வெறும் தரையில் படுக்க வேண்டாம். ஏதாவது ஒரு விரிப்பை விரித்து அதில் படுக்கவும். தியானம், யோகா போன்ற பயிற்சிகள் செய்யும்போது வெறும் தரையில் செய்யக்கூடாது. மனித உடல் சக்தி வடிவமானது. இந்த உடலை சூட்சும சரீரத்தில் உள்ள சக்கரங்களே இயக்குவதாக ஆன்றோர்கள் தெரிவிக்கின்றனர். உலகில் உள்ள அனைத்து இயந்திரங்களும் சக்கரத்தின் வழியாக நகர்வதைப் போல மனிதனின் வளர்ச்சிக்கு அவனுள் உள்ள ஏழு சக்கரங்களே உதவி புரிகின்றன. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை, சஹஸ்ரஹாரம் என்ற ஏழு சக்கரங்களும் மனிதனை ஒரு பரிணாமத்தில் இருந்த மற்றொரு பரிணாமத்திற்கு இட்டுச் செல்கின்றன.

முன்னோர் வார்த்தைகள் எந்த ஒரு காரியமும், காரணமின்றி இருக்காது. அது போலத்தான் முன்னோர்களின் சொற்களிலும், செயல்களிலும் ஒரு அர்த்தம் இருக்கும். ஜபம் செய்யும் போதும், தியானம் செய்யும் போதும், உணவு அருந்தும் போதும், வெறும் தரையில் உட்கார்ந்து கொள்ளக்கூடாது. பொதுவாக வெறும் தரையில் படுத்து உறங்கக்கூடாது. மேலும், இடது கையை நிலத்தில் ஊன்றிக் கொண்டும்,நின்று கொண்டு, படுத்துக் கொண்டும், சாப்பிடக்கூடாது என தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. இதற்கான காரணத்தை தெரிந்து கொள்வோம்.

வீட்டில் மின்சாரக்கம்பி முதலியவற்றை தொடும் போது ஷாக் அடிக்கிறது ஷாக் அடிக்காமல் இருக்க எல்லா வீடுகளிலும் கைக்கு உறை போடுவதில்லை. உடனே வீட்டில் உள்ள மனைப்பலகையை கீழே போட்டு மின்சார ஒயரைத் தொட்டு பழுது பார்க்கிறோம். இரும்பு நாற்காலியை பயன்படுத்தாமல் மரப்பலகையை ஏன் போட்டுக் கொள்கிறோம். என்றால் அது மின் கடத்தாப் பொருள் மின் அதிர்ச்சி மின்சாரத்தை தொடுவதால் அதிர்ச்சி ஏற்படக் காரணம், மின்சாரம் உடல் வழியாக மண்ணுக்குள் ஊடுருவி நம்மை அதிர்வடையச் செய்கிறது. இதனை மின்கடத்தாப் பொருளாக இருக்கக்கூடிய காய்ந்த மரப் பலகையை கொண்டு தடுத்துக்கொள்கிறோம்.

அதுபோலவே நம் உடலில் உள்ள சக்தி வெளியேறாமல் இருக்கவே முன்னோர்கள் வெறும் தரையில் படுத்துறங்கக் கூடாது என்று கூறியுள்ளனர். உடல் என்னும் சக்தி உடம்பு உணவால் ஆன பிண்டம். உணவு உயிருக்கு சக்தி தரும். ஜபம் செய்யும் போது உடலுக்கு சக்தி தரும். ஆகாரம் உண்ணும் போதும் சக்தி பெறப்படுகிறது. அச்சக்தி நிலத்தில் இறங்காமல் இறங்காமல் இருக்க சக்தியை கடத்தாத மனைப்பலகை, மான் தோல், புலித்தோல், தர்பாசனம், ஆகியவற்றில் அமர்தல், தொன்மையான பழக்கமாக இருந்து வந்துள்ளது.

எப்படி உறங்குவது?

வெறும் தரையில் படுத்தால் நாளைடைவில் உயிர்சக்தியானது குறைந்து உடல் பலம் இழக்கிறது. எனவே உறங்கும் போது உடலில் உயிர்ப்புறும் சக்தி நிலத்தில் இறங்காமல் இருக்க ஒரு துணியையாவது விரித்தே படுக்க வேண்டும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை இலக்கியங்களும், ஜைனர் குகைக்கோவில் படுகைகளும் நிறுவுகின்றன. நம் உடல் நலம் கருதி அமைந்த இந்த சாஸ்திர வழக்கங்கள் அறிவியல் ரீதியானவையே எனவே குளிர்ச்சியாக இருக்கிறது என்று வெறும் தரையில் படுத்து உறங்குவது ஆபத்தானது என்று கூறியுள்ளனர் முன்னோர்கள்.!

இன்னுமாங்க சக்கரைக்கு மருந்து சாப்டுறீங்க?

" ஆமாங்க வேற வழி என்னதான் யோகாசனம், நடைப்பயிற்சி பண்ணினாலும்  சக்கரை நார்மலுக்கு வரலையே "

எப்பங்க மருந்தை நிறுத்தப்போறீங்க?
" சக்கரை நார்மலுக்கு வந்ததும் மருந்தை நிறுத்தீருவேங்க "
என்னங்க, இப்படி அப்பாவியா இருக்கீங்க.! இரண்டாயிரமாவது  ஆண்டில்  சாப்பிடும் முன்  சக்கரை  அளவு 130 வரை இருக்கலாம் என்றார்கள் இப்பொழுது 110 வரை தான் இருக்க வேண்டும் என்கிறார்கள். பிறகெப்படி உங்களுக்கு சக்கரை குறையும்? வெள்ளக்காரன்  எங்கோயோ இருநெதுட்டு மருத்துவ ஆராய்ச்சிங்கற பேர்ல என்னத்தையாவாவது உள றிட்டு போறான் அவனுக்கு மருந்து விக்கணும்லா ஆனால்,  உங்களுக்கு நோய் போகனும்னா நம்ம நாட்டு சித்தர்களும் யோகிகளும் சொல்றத கேளுங்க  ஆவரைக்குடிநீரை பத்து நாள் குடிச்சா ச க்கரையால் வந்த அத்தனை அறிகுறிகளும் குணமாகும்னு   சொல்கிறார் சித்த மருத்துவ மேதை  சிவ சண்முகம் , ஆறுமாதம் வரை தொடர்ந்து யோகா பண்ணினால் எத்தகைய நிலையில் செயலிழந்துள்ள கணையத்தையும் மீண்டும் சீராக இயங்க வைத்துவிடலாம்     என்று வழிகாட்டியதோடு பயிற்சி முறையையும தெளிவாக வகுத்தளித்துள்ளார்   யோகி பெங்களூர் சுந்தரம்  அய்யா    இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா?

 "தெரியாமல்  என்ன அதுதான் எவனைப்பாத்தாலும் வெந்தயத்தை   பிசைஞ்சி குடி  , கொத்தமல்லியை காய்ச்சிக்குடினு எதையோ உளறிட்டுப் போறானே  இதற்கெல்லாம் ஆதாரம் எங்க இருக்கு?

"ஹஹ்ஹா … அய்யா.!
 எதையும் ஆதாரத்தை வைத்துதான் நம்ப வேண்டும் என்று உங்களை நம்ப வைத்ததில் தான்  வெள்ளக்கார மருத்துவத்தின் வெற்றியே அடங்கி உள்ளது.  உங்கள் உடலை உணர அடுத்தவன் கண்டுப்பிடிச்ச   மிசினும் அளவீடும்தான்   வேணுமினா தமிழன் பல்லாயிரம் காலமாக கண்டறிந்த அத்தனை மருத்துவ ஞானமும்  குப்பை என்றும்  இத்தனை காலமும் மனிதன் உயிரை இந்த  மண்ணில் நிலை நிறுத்தி வைத்த முன்னோர் வாழ்க்கை நெறியும்
 முட்டாள் தனமானது என்று  ஒப்புக்கொள்கிறீர்களா?

 இப்படி நாம் கேட்டதும் எல்லாம் உண்மைதான்   ஒத்துக்கொள்கிறேன்.அடிக்கடி சிறுநீர் போகிறது  அதை நிறுத்த ஏதாவது உபயம் கூறுங்கள் என்றார் பெரியவர்  சரியென்று  ஒரு முன்னோர் வழி முறையை கூறி இதை பத்துநாள் செய்யுங்கள்  என்று கீழ்கண்ட  வழிமுறையை கூறினேன்  ஆங்கில மரு ந்துகளை பாதியாக குறைத்துவிட்டு எளிய யோகாப் பயிற்சியோடு இதை  சக்கரைக்கு பல ஆண்டுகாக மருந்து சாப்பிட்டு வரும் கோமாளிகள்  யாரும் பயன்படுத்தி பயனடையலாமே…!

ஆவாரைக்குடிநீர்

 நாவல் பட்டை, 
மருதம்பட்டை, 
கோரைக்கிழங்கு.
 கடுக்காய்,
 தான்றி, 
நெல்லி வற்றல், 
கட்டுக்கொடி, 
போஸ்தக்காய் தோல், 
கடலழிஞ்சிப்பட்டை, 
ஆவரைப்பூ, 
ஆவாரைப்பட்டை, 
ஆவாரை வேர்ப்பட்டை.


செய்முறை:-
     இப்பன்னிரண்டு சரக்குகளும் வகைக்கு ஒரு  35 கிராம் வீதம் எடுத்து இடித்து சூரணித்து வைத்துக் கொண்டு, வேண்டும்போது ஒன்றரை தேக்கரண்டி சூரணத்தை கால்படி <300 மில்லி>நீரில் போட்டு, அரைக்கால் படியாக சுண்டக் காய்ச்சி ஆறவிட்டு வடித்துச் சாப்பிடவும்.  இப்படி தினம் இரு வேளையாக பத்து நாட்கள் சாப்பிட மதுமேகம் அதனாலுண்டான அதிக தாகம், நீர்ப்போக்கு, அழலை இவை நீங்கும்.!  - சித்த வைத்தியத் திரட்டு

செய்துதான் பாருங்களேன்.!

சக்கரை நோயாளிகள் இயற்கை வழியில் செயற்கை மருந்துகளை நிறுத்தி இன்பமாக வாழ நமது இன்சுலின் என்ற ஆவணப்படத்தை பாருங்கள்.!

அதிசய மூலிகை எண்ணைய்🌿

*கொழுப்பு

*உடல்பருமன்
*இதயநோய்
*கட்டி
*புற்றுநோய்
*சிறுநீரகசெயலிழப்பு
*சக்கரைநோய்
*ஆஸ்துமா
*உடல்வீக்கம்
*உடல்வலி
*மூட்டுவலி
*பக்கவாதம்
*முடக்குவாதம்
*பார்க்கின்சன்
*கர்ப்பபைகட்டி
*ஆண்மைக்குறைவு
*குழந்தையின்மை
*தைராய்டு போன்ற  சித்தர்களால் வகுக்கப்பட்ட 4448 வியாதிகளையும்
ஒரே எண்ணையின் மூலம் குணப்படுத்த முடியும்.!
சீக்கிரம் செய்முறையை சொல்லுய்யா, நாலு குரூப்பில
பகிருகிறேன்னு சொல்றீங்களா?
ஆச,தோச, அப்பளம் வட.!
இந்த எண்ணையை பயன்படுத்த ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே
உடலில் ஆரோக்கியமான நல்ல மாற்றம் தெரியும். எந்த விதமான நோய்களுக்காக அலோபதி மருந்து எடுத்துக் கொண்டிருப்பவர்களும் அதிகப்பட்சம் ஆறுமாதத்தில் அதை  விட்டுவிடலாம்.!
அதிசய எண்ணையை தினமும் ஒருவேளை மட்டும் உள்ளும் புறமும் நோய்க்கு தகுந்தவாறு பயன்படுத்தினால் போதும். 🍄இயற்கை உணவுகளை அதிகம் பயன்படுத்த வேண்டும் என்பதை தவிர வேறு பத்தியம் எதுவுமில்லை.!
மருந்து உட்கொள்ளும் முறை, மருந்தோடு கலந்து உண்ண வேண்டிய துணை வீட்டு மருந்துகள்,
எளிய மூச்சுப்பயிற்சி முறை, கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை
போன்ற அனைத்தும் அதிசய மருந்து எண்ணையோடு, வழங்கப்படும் குறிப்பு சீட்டில் கூறப்பட்டுள்ளது.!
🐾இந்த எண்ணை நமது சிறுவயது முதல் பெற்ற பாரம்பரிய சித்த மருத்துவ அனுபவம் மற்றும் 🍁கடந்த ஆறு வருடங்களாக சிறுநீரகச் செயலிழப்பு, பக்கவாதம், சக்கரைவியாதியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா & இயற்கை மூலிகை மருத்துவ முறைகளை வழங்கி குணப்படுத்திய மருத்துவ ஞானத்தால் தயாரிக்கப்பட்டது.!
மத்திய அரசின்  பதிவுபெற்றது
நமது நிறுவனம்.!
*மூலிகை எண்ணைய் 100 % இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது.! இயற்கையில் விளைந்த உணவுப்பொருட்கள் மற்றும் மூலிகைப் பொருட்களை இயற்கையான வழிமுறையில்
சுத்திகரித்து எண்ணையாக
தயாரிக்கப்பட்டது.!

@இதை பயன்படுத்தினால்
,உங்கள் ஆரோக்கியத்தில் ஒர்
அதிசயம் நிகழுவது உறுதி.!

விலை :200 ml
 RS 200/-

உங்கள் தேவைக்கும்
வியாபார விசாரணை களுக்கும்தொடர்புகொள்க.!
AUM HERBALS
9629368389
amyogatrust.blogspot.in

தெரியுமா சேதி?

உடல் செல்கள் என்பதே கொழுப்புப் படலம் தான். ஆணின் உயிரணு பெண்ணின் கர்பபைக்குள் நுழைந்து பெண்ணின் உயிரணுவோடு கலந்து புதிய உயிர் உற்பத்தி தொடங்கும் முதல் விநாடி முதல் ஒரு செல் பல செல்களாக பெருகி வளர்ந்து கிட்னி, இதயம், நுரையீரல்,கண்,காது,மூக்கு என்று ஒரு உயிராக உடல் வடிவம் பெறுவதற்கு மட்டுமல்ல உடல் ஒழுங்காக இயங்கவும், இறந்த செல்களை வெளியேற்றவும், தொடர்ந்து எந்த தேய்மான வியாதிகளும், உயிர்க்கொல்லி நோய்களும் நம்மை  தாக்காமல் காக்கவும்  , நமது உயிரணு மூலம் புதிய உயிரை உருவாக்கவும் கொழுப்பு நிறைந்த உணவுகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.!  எந்த  கொழுப்பையும்  எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று எந்த மருத்துவர் பரிந்துரைக்கிறாரோ அவர், செல்களால் ஆன மனித உடலை மரணத்தை  நோக்கி அழைத்து செல்கிறார் என்பதே உண்மை.🐚

நமக்கு நல்ல கொழுப்பை அளிக்கும் பொருட்கள்:

தேங்காய்,
வெண்ணெய்,
நெய்,
தே.எண்ணெய் (Virgin)
 ந.எண்ணெய் (செக்கு)
பாதாம் பருப்பு,
அக்ரூட்,
குறைவாக முந்திரி,
பனீர்,
மாட்டுப்பால் (Whole Milk; not pocked milk or skimmed milk),
நாட்டுக் கோழி முட்டை

இவற்றை தவறாது சேர்த்து, குறைவாக ஸ்டார்ச்சும், அதிகமாக காய் கனிகளைச்  சேர்த்து வந்தால் நோய் இல்லை, செல்களின்  சுழற்சி முறைக்கும் அழிவில்லை🌖

சேர்கவே கூடாத  உணவுகள்:

எல்லாவகை  ரிஃபைன்டு  ஆயில்கள்,

வெள்ளை சர்க்கரை,
மைதா, பிராய்லர் கோழிகள்
, செவிள், செதில் இல்லாத மீன்கள், மிருக இரத்தம்,மிருகக் கொழுப்பு, பாக்கெட் கோதுமைமாவு, பாக்கெட் மசாலாப் பொடிகள், கலர்ப்பொடி,சுவைப்பொடி,
பீட்ஸா,
பர்கர்,
கடை சமோசா,
ஹல்வா,
எல்லா வித ஜங்க் உணவு,
மற்றும்
கடையில் விற்கும் குளிர் பானங்கள்.
---------------------

டி.வியில்  சொல்கிறார்களே என விழுந்தடித்து ஒரு மணிநேரம் ஓட வேண்டியதே  இல்லை. மித வேக நடையே போதும். அதைவிட விசேடமானது  அரை மணி யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி.

நேரத்திற்கு சாப்பாடு என்பது தவறு. பசித்தால் சாப்பாடு என்பதே சரி.

இரவு ஆறு-ஏழு மணி நேரத் தூக்கம் அவசியம்.

இவையாவும் உடலுக்கு.🏊

நேர்மை,எளிமை, அன்பு,மறப்பது, மன்னிப்பது, பிறருக்கு உதவுவது, எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பது, பிறரை நேசிப்பது  போன்றவை மனதிற்கு🌹

இதுவே ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை தேவை
நன்றி DR. எலிசபெத் சாமுவேல் MBBS MD
நன்றி பலராமன் அய்யா.!

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா?

ஒருவர் ஆரோக்யமாக இருக்கின்றாரா? இல்லையா?

எப்படி தெரிந்துக்கொள்வது?

"மாஸ்டர் செக்கப்" செய்துகொள்வதுதான், இன்று பரவலாக நம்பப்படும் ஒரு முறை!

பரிசோதனை செய்வது என்பது "சொந்தக்காசில் சூனியம்" வைத்துக்கொள்வது போன்றது!

நோயில்லாமல் வாழ்க்கை நடத்திக்கொண்டிருப்பவரை,
"நீ நோயாளிதான்"
என நம்பவைத்து மருந்து மாத்திரை விற்கும் நிறுவனங்களுக்கு நிரந்தர வாடிக்கையாளாராக்கும்
"தந்திர வியாபார வலை" தான் பரிசோதனை செய்ய பரிந்துரைப்பது,
அல்லது
"அப்படியிருக்கும், இப்படியிருக்கும்"
என பயமுறுத்தி பரிசோதனை செய்ய தூண்டுவது!

நம்மில் அநேகர் இதில் மாட்டிக்கொண்டு, இல்லாத நோய்க்கு மருத்துவம் செய்து, உள்ளபடியே நோயை வரவழைத்துக் கொண்டவர்கள்தான்!

மோசமாக பாதிக்கப்படுபவர்கள்(most affected victims)

நன்கு படித்தவர்கள்(?),
பணம் படைத்தவர்கள்(double income),
புகழடைந்தவர்கள்!

எப்படி?

ஒவ்வொருவரின் உடலும் நாங்கள் சொல்வதுபோல்தான் இயங்கவேண்டும்!    
சர்க்கரை நோய் ரீடிங் 80/140,
இரத்த அழுத்த நோய் ரீடிங் 80/120, சிறுநீரக நோய் ரீடிங் 1.02,
கொழுப்பு அளவு, உப்பு அளவு இப்படிதான் இருக்க வேண்டும் என்று,
WHO பரிந்துரையின்படி சில அளவுகளை நிர்ணயித்திருக்கிறது நவீன மருத்துவம்!

இதை நாமும் உண்மை என நம்பி, நோயாளிகளாக மாறிகொண்டிருக்கிறோம்!

இத்தகய "ரீடிங்குகள்" நவீனவிஞ்ஞானத்தின் "நன்கொடைகள்"!

 Our Body mechanism is beyond science!

நம் உடல் இயற்கை விதிகளின்படி இயங்குகிறது!
ஒவ்வொருவரின் உடலியக்கமும் ஒவ்வொருமாதிரி இயங்குகிறது!
உலகில் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இருக்காது!

"யாருக்கும் கைரேகைஒன்றுபோலிருக்காது"!      

உலகின் ஒவ்வொரு மூலையில் உள்ள மனிதனும்,
வெவ்வேறு தட்பவெப்ப நிலை,
வெவ்வேறு உணவுபழக்கம்,
வெவ்வேறு  உணவு உண்ணும் முறை,
வெவ்வேறு கலாச்சாரம்,
வெவ்வேறு  "ஜீன்கட்டமைப்பு".......!

இது உண்மையானால் ஒவ்வொரு மனிதனின் உடலியக்கமும் தனித்தன்மையுடையதாகத்தானே
(unique) இருக்கும்!

அப்படியானால் எந்த இருவரின் உடலியக்கமும் ஒன்றுபோல் இயங்காது!

அப்படியானால்,

"உலகில் பல மூலைகளிலிருக்கும் எல்லோருக்கும் ஒரே ரீடிங் இருக்கவேண்டும்",
என்று ஆங்கில மருத்துவ உலகம்,
"அடம் பிடிப்பது" எப்பேற்பட்ட
"முட்டாள் தனம்"!

இதை சரியென்று ஏற்றுக்கொண்டு, அதற்குத்தக்கப்படி உடலியக்கத்தை மாற்றுவது எவ்வளவு பெரிய "அறியாமை"!

எனவே இந்தபரிந்துரைகளை கட்டவிழ்த்துவிடும் "Master check-up"
இந்த நூற்றாண்டின்
"மாபெறும் வியாபார மோசடி"!

அப்படியானால் ஒரு மனிதன் ஆரோக்யமாக இருப்பது, இல்லாதது, எப்படி தெரிந்துக் கொள்வது?
வரும் முன் காப்பது எப்படி?

இந்நிலை உங்களுக்கு இருக்கிறதா என உறுதி செய்துகொள்ளுங்கள்!

1. தரமான பசி.
2. தரமான தாகம்.
3. தரமான தூக்கம்.
4. தரமான தாம்பத்ய உறவு.

"தரம்" என்ன என்பதிலில் ஒவ்வொருவாருக்கும் ஒவ்வொரு புரிதல் இருக்கும்!
இங்குதான் குழப்பம் ஆரம்பம்!

இதை இன்னுமொரு பதிவில் தனிதனியாக புரிந்துக்கொள்ள முயல்வோம்!

எனவே மேற்சொன்ன நான்கும் திருப்தியாக இருந்தால்,
"நீங்கள் ஆரோக்யாமாக இருக்கிறீர்கள்" என உறுதி செய்துகொள்ளலாம்!

ஏதாவது ஒன்று திருப்தியில்லையானாலும்,
ஆரோக்ய குறைவுஉள்ளது என்பதையும் உறுதியாக்கிக்கொண்டு ஆரோக்யம் தேடதுவங்கலாம்!
. 🌻இணையப்பகிர்வு

இலகுவான மருத்துவக் குறிப்புக்கள்

🖥1) பொன்மேனி தரும் குப்பைமேனி:

குப்பை மேனி இலையையும் உப்பையும் சேர்த்து அரைத்து சொறி, சிரங்குகளுக்குத் தேய்த்துவர குணமாகும்.

2) தேளை விரட்டும் குடியோட்டிப்பூண்டு:
பிரம்ம தண்டின் பச்சை வேரைச் சிதைத்து தேள்கடி வாயில் வைத்துக் கட்ட நஞ்சு நீங்கும்.

3) வயிற்றுவலி போக்கும் நறுவலி:
நறுவிலிப்பட்டையை இடித்துச் சாறு பிழிந்து, தேங்காய்ப் பாலில் கலக்கி குடிக்க கடினமான வயிற்றுவலி போகும்.

4) காற்று சுத்திகரிப்பான் – சர்க்கரை:
சர்க்கரையை நாட்பட்ட நோயாளிகளின் படுக்கை அறையில் புகைக்க சுத்தக்காற்று உண்டாகி அறை சுத்தப்படும்.

5) தலைபாரம் நீக்கும் கிராம்பு:
கிராம்பை நீர்விட்டு மை போல அரைத்து நெற்றியிலும் மூக்கு தண்டின் மீதும் பற்றிட தலைபாரம் நீரேற்றம் குணமாகும்.

6) காயத்துக்கு காட்டாமணக்கு:
காயம்பட்டு, இரத்தம் வெளிப்பட்ட இடத்தில் காட்டாமைக்கு பாலைப் பூச குருதி நிற்கும். காயமும் ஆறும்.

7) உப்பலுக்கு உப்பிலாங்கொடி:
மாந்தத்தினால் குழந்தைகளின் வயிறு உப்பிக் காணின், உப்பிலாங்கொடியை அரையில் கட்டத் தீரும்.

8) குழந்தையை காப்பான் கரிப்பான்:
கரிசாலைச் சாறு 2 துளியுடன், 8 துளி தேன் கலந்து கொடுக்க கைக்குழந்தைகளுக்கு உண்டாகும் நீர்க்கோவை நீங்கும்.

9) கடலையும் அடிதடியும்:
கடலை இலையை வேகவைத்து அடிபட்ட வீக்கம், மூட்டுப் பிசகல் முதலியவைகளுக்குச் சூட்டோடு வைத்துக் கட்ட தீரும்.

10) மயக்கத்துக்கு ஏலம்:
ஏலக்காய் 1 பங்கு, பனைவெல்லம் ½ பங்கு சேர்த்து, எட்டுப்பங்கு நீர்விட்டுக் காய்ச்சி கொடுக்க பித்த மயக்கம் நீங்கும்.

11) புளியிருக்க புண்ணேது?
புளியிலை, வேப்பிலை இவ்விரண்டையும் சமஅளவு எடுத்து இடித்து எட்டுபங்கு நீர்விட்டுக் காய்ச்சி புண்களைக் கழுவி வர, ஆறாத புண்கள் ஆறும்.

12) பால்கட்டுக்கு பாசிப்பயிறு:
பாசிப்பயிறு மாவை வெந்நீர் விட்டுக் களியாகக் கிளறி மார்பில் பற்றிட பால்கட்டு குறைந்து வீக்கமும் குறைந்து போகும். மார்பின் நெறிக்கட்டிகளும் குறையும்.

13) மயிர்கறுக்க மருதோன்றி:
மருதோன்றி இலை, நிலவாரை இரண்டையும் சேர்த்து அரைத்துப் பூச மயிர் கறுக்கும்.

14) வாந்தி நீக்கும் நெல்லி:
நெல்லியீர்க்கு, கருவேம்பீர்க்கு, வேப்பீர்க்கு மூன்றையும் சேர்த்து இடித்து, நீர்விட்டுக் காய்ச்சிக் கொடுக்க வாந்தி உடனே நிற்கும்.

15) படர்தாமரைக்கு:
அறுகம்புல்லும், மஞ்சளும் சேர்த்து அரைத்து படர்தாமரையில் பூச தீரும்.

16) பல் ஈறு, வீக்கம், வலிக்கு:
கிராம்பு, கற்பூரம், ஓமம் எடுத்து நன்றாகத் தட்டி வீக்கம் உள்ள ஈறுகளில் வைத்து சிறிது நேரம் சென்றபின் வாய் கொப்பளிக்க பல் ஈறு, வீக்கம் தீரும்.

17) மலச்சிக்கலுக்கு:
பிஞ்சு கடுக்காய் – 100 கிராம், சுக்கு – 100 கிராம், எடுத்து தட்டி 1 குவளை நீரில் போட்டு காய்ச்சி இரவு படுக்க போகும்பொழுது குடித்து விட்டு படுக்கவும். நன்றாக மலம் இளகும்.

18) மூலம் அகல:
ஆகாசத் தாமரை இலையை அரைத்து தொடர்ந்து தடவி வந்தால் மூலம் அகன்று விடும்.

19) முகப்பொலிவிற்கு:
உலர்ந்த ரோஜா இதழ்களுடன் சிறிது பன்னீரும் சந்தனமும் அரைத்து முகத்தில் தடவ தோலின் நிறம் பொலிவு பெறும்.

20) சூட்டினால் உண்டாகும் இருமலுக்கு:
மிளகை தூள் செய்து சம அளவு பனைவெல்லம் கலந்து சுண்டைக்காய் அளவு ஒரு நாளைக்கு மூன்று வேளை சாப்பிட வேண்டும்.

21) கல்லடைப்புக்கு – தாம்பூலம்:
எருக்கம் பூவின் மொக்கு ஏழு எடுத்து சுண்ணாம்பு போடாமல் வெற்றிலை பாக்குடன் வைத்து உண்ணவும். இப்படி 2 அல்லது 3 வேளையில் கல் விழும்.

22) தாய்ப்பால் சுரக்க கீரை:
கோவை இலையை நெய்யில் வதக்கி, வெள்ளைப் பூண்டு சேர்த்து வதக்கி, கால் வயிறு கீரை, காலையில் உண்டு விட்டு ஆகாரம் சாப்பிடவும். இவ்வாறு 3 நாள் செய்ய பால் சுரக்கும்.

23) அரையாப்பு தீர:
எலுமிச்சம் வேர், சத்திசாரணைவேர் அரைத்து கெச்சக்காய் அளவு நல்லெண்ணையில் கலந்து சாப்பிடவும் 3 நாளில் தீரும்.

24) குழந்தைகள் பேதிக்குப் பிட்டு வகை:
புளியாரை, வாழைப்பூ சமனெடை எடுத்து இடித்து பிட்டவியல் செய்து தேன் சேர்த்து பிசைந்து கொடுக்க பேதி நிற்கும்.

25) கர்ப்பிணிகளுக்கு குடிநீர்:
கர்ப்பிணிகளுக்கு மலசலம் கட்டினால், ஒரு பலம் பழைய நெல்லிவற்றலை இடித்துக் குடிநீர் செய்து சமஅளவு பசும்பால் விட்டு சாப்பிட, மலசலம் வெளியேறும்.

26) பசி உண்டாக:
புதினா சாறு 1 பங்கு, எலுமிச்சம் பழச்சாறு 3 பங்கு கூட்டி கொஞ்சம் சர்க்கரை சேர்த்துக் கொள்ளவும்.

27) இருமலுக்கு தேனூறல்:
5 பலம் தேனை நன்றாய்க் காய்ச்சி சுடுகையில் மிளகுத்தூள் படிகாரம் (12 கிராம்) போட்டுக் குலுக்கி கொடுக்கவும்.

28) வெள்ளை தீர்க்கும் புங்கன்:
புங்கன் கொழுந்தை நெகிழ அரைத்து நல்லெண்ணெய் கலந்து கொடுக்க வெள்ளை தீரும்.

29) அரையாப்புக்கு அரிசிக் களிம்பு:
முருங்கை வேர்ப்பட்டையும், புழுங்கலரிசியும் உப்பும் சேர்த்து அரைத்து கட்ட கட்டி கரையும்.

30) துத்தி டீ:
துத்தியிலை கஷாயம் வைத்து பால், சர்க்கரை கலந்து கொடுக்க மேகச்சூடு தணியும்.

31) வாய்ப்புண் தீர்க்கும் மருதாணி:
மருதாணி இலையைப் பஞ்சுபோல் இடித்து அரைப்படி தண்ணீர் விட்டு காய்ச்சி வடித்து வாய் கொப்புளிக்கத் தீரும்.

32) நீர்த்துவார எரிவு தீர:
வால்மிளகு 5 கிராம், நல்ல நீர்விட்டு அரைத்து தண்ணீரில் கலந்து 1 நாளைக்கு 4 முறை கொடுக்கவும்.

33) அஜீரண பேதிக்கு:
மிளகை வறுத்துப் பொடி பண்ணி திரிகடி பிரமாணம் தேனில் கொள்ளத் தீரும்.

34) உடல் இளைத்தவருக்கு:
பூசினிவித்தின் பருப்பை எடுத்து பொடித்துக் காய்ச்சிய பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கூடும்.

35) இரத்த கடுப்புக்கு:
மாங்கொட்டை பருப்பை அரைத்து பாலில் கலக்கி உண்டு வர இரத்தகடுப்பு, சீதக்கடுப்பு இவை குணமாகும்.

36) வெளுத்த மயிர் கறுக்க:
கரிய போளத்தை நெல்லிக்காயின் சாற்றால் அரைத்துப் பூசி வந்தால் மயிர்கள் கறுத்து வளரும்.

37) தொண்டை கம்மல் தீர:
கற்பூர வள்ளிச் சாற்றில் கற்கண்டுத் தூள் ஒரு சிட்டிகை போட்டுச் சாப்பிட்டால் தொண்டைக்கம்மல் நிவர்த்தியாகும்.

38) வண்டுகடிக்கு:
வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இவை நீங்கும்.

39) சூட்டுக்குத் தைலம்:
அகத்திக்கீரை சாறும், நல்லெண்ணெயும் சமனாய்க் கூட்டி அடுப்பிலேற்றி வெந்தயத்தைப் பாலிலறைத்துப் போட்டுத் தைலபதமாக காய்ச்சி இறக்கி தலைமுழுகி வந்தால் சகல சூடுந்தணியும் தேகம் குளிர்ச்சியாகும்.

40) கிருமிகள் விழ:
வேப்பீர்க்கு 10 வராகன், கடுக்காய் தோல் 4 வராகன், பிரண்டை சாற்றில் மைபோலரைத்து சுண்டை காயளவெடுத்து விளக்கெண்ணெயில் மத்தித்து கொடுக்க கிருமிகள் வந்துவிடும்.

41) மூலம் தீர்க்கும் ஆவாரை:
ஆவாரங் கொழுந்து, ஆவாரம்பட்டை, அறுகன் வேர் இவைகளை சமஅளவு எடுத்து உலர்த்தி சூரணம் செய்து 2 வேளை தேனில் (அ) நெய்யில் உண்டுவர உள்மூலம் தீரும்.

42) மூலத்திற்கு வேது:
இளநீரில் வல்லாரை இலையை அவித்து, வரும் ஆவியை மூலத்தில் காட்டிப் பிறகு இலையை வைத்துக் கட்டிகொள்ள உடனே குணமாகும்.

43) ஈளை தீர்க்கும் இம்பூரல்:
இம்பூரல் செடியும் வல்லாரைச் செடியும் சமஅளவு எடுத்து இடித்து குடிநீராக்கி உட்கொள்ள சுவாசகாசம், ஈளை இருமல் குணமாகும்.

44) கைநடுக்கம் தீர:
தூதுவளையை மைபோல அரைத்து சுண்டைக்காய் அளவு காலைமாலை பசும்பாலில் 15 நாள் சாப்பிட தீரும்.

45) இருமல் தீர:
இலவங்கப்பட்டை ஒன்றரை பலம், வால்மிளகு கால் பலம் பொடித்து 3 வேளையாக நெய்யில் தர இருமல் தீரும்.

46) காதில் சீழ் வருதல் தீர:
இந்துப்பு, சுக்கு சமஎடை கூட்டிப் பொடித்து, வெண்ணெயில் போட்டு காய்ச்சி 4 முதல் 5 முறை விட சீழ் வடிதல் தீரும்.

47) தொண்டை புண்ணிற்கு:
நவாச்சாரத்தை கோழிமுட்டை வெண்கருவில் அரைத்து தொண்டைக்குழியில் தடவ தீரும்.

48) தலைவலிக்கு:
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம் சூரணம் செய்து 1 கிராம் தேனில் உண்ண ஒற்றை தலைவலி தீராத தலைவலி தீரும்.

49) சீதபேதிக்கு:
நாட்டுச் சர்க்கரையும், நெய்யும் கலந்து சாப்பிட தீரும்.

50) யானைக்கால் வீக்கம் வடிய:
முருங்கைப் பட்டையுடன் சிறு அளவு கடுகு சேர்த்தரைத்து லேசாக பற்று போட யானைக்கால் வீக்கம் வடியும்.

51) விக்கல் தீர்க்கும் இந்துப்பு:
இந்துப்பு சூரணத்தை நெய்யுடன் கலந்து உண்ண விக்கல் நிற்கும்.

52) புண்கள் ஆற:
தாழம்பூவின் சுட்ட சாம்பலை புண்களின் மீது தூவி வர ஆறும்.

53) முடி உதிர்வதை தவிர்க்க:
நன்கு முற்றிய தேங்காயை சிறிது தயிர்விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்தால் முடி உதிர்வதைத் தவிர்க்கலாம்.

54) கட்டிகள் உடைய:
சிவப்பு கீரைத்தண்டு இலையை அரைத்துக் கட்டிகள் மருவுகளுக்கு தடவி வந்தால் பழுத்து உடையும்.

55) அண்ட வாத கட்டு:
பப்பாளி இலையை அறைத்து, இரவில் வீக்கத்தின் மீது கட்டி வர அண்டவாயு, அண்டவீக்கம், தீரும்.

56) கண் பூ குணமாக:
சிவப்பு நாயுருவி இலையை கண்ணில் பிழிந்து வர கண் பூ மாறும்.

57) இரத்த மூத்திரத்திற்கு:
மாதுளம்பூ, கசகசா, வேம்பு, இவைகளை சூரணித்து 3 தடவை 5 மிளகளவு பாலுடன் கொடுக்க இரத்த மூத்திரம் குணமாகும்.

58) இரத்த மூலம் குணமாக:
வாழைப்பூ சாறுடன் சீரகத்தை கலந்து அரைத்து தினசரி காலையில் பருக வேண்டும்.

59) அசீரணம் குணமாக:
கொத்தமல்லி பூவை குடிநீர் செய்து காலை, மாலை 2 வேளை அருந்த அசீரணம் மற்றும் பித்த சம்பந்தமான நோய்கள் தீரும்.

60) வேர்க்குரு நீங்க:
சந்தனத்தை பன்னீரில் அரைத்து பூசலாம்.

61) தேக ஊறலுக்கு:
கொட்டை கரந்தை இலையை நிழலில் உலர்த்தி பொடித்து சூரணம் செய்து வேளைக்கு 5 கிராம் வீதம் தேன் கலந்து உண்ண 5 நாளில் ஊறல் மிக குறையும்.

62) சூட்டிருமலுக்கு:
சிறுதுத்தி விதையைப் பால்விட்டு ஊறவைத்து காலையில் எடுத்து அந்த கோழையுடன் சிறிது கற்கண்டுதூள் சேர்த்து 6 வேளை சாப்பிட இருமல் எளிதில் விலகும்.

63) நெருப்பு சுட்ட புண்ணிற்கு:
வெந்தயத்தை நீர்விட்டு அரைத்து மேற்பூச்சாக பூச எரிச்சல் தணிந்து ஆறும்.

64) நீர்க்கடுப்பு எரிவு தீர:
எலுமிச்சம் பழச்சாறும், நல்லெண்ணெய்யும் கலந்து சாப்பிட நீர்க்கடுப்பு, எரிவு தீரும்

65) சகல விஷத்திற்கும்:
நசியம்குப்பை மேனியிலை வெற்றிலை, நவச்சாரம் இவைகளை சிறுநீர் விட்டுத் தட்டித் துணியிற் கட்டி நாசியில் நசியமிட சகலவிஷமும் கலைந்து விடும்.

66) பெரியோர்களுக்கு மலக்கட்டு நீங்க:
சூரணம்கருவேப்பிலை தூளும், வல்லாரையிலை தூளும் சமமாய் எடுத்து தேனில் குழைத்து இரவில் போசனம் செய்த பிறகு சாப்பிட்டு வரவும்.

67) பால் உண்டாக:
ஆலம் விழுதும், ஆலம் விதையும் சமன் கொண்டு பாலில் காய்ச்சி உண்டால், பாலில்லாத பெண்களுக்கு பால் உண்டாகும்.

68) தோலில் ஊறல், தடுப்பு இவற்றிற்கு:
ஏலரிசி பொடியை வல்லாரை இலைச்சாறு விட்டு அரைத்து காயவைத்து பின் கொட்டைக் கரந்தையை நிழலில் உலர்த்தி பொடித்து, இரண்டையும் சேர்த்து ஒன்றாக கலந்து வேளை 2 கிராம் வீதம் 3 வேளை உண்ண வேண்டும்.

69) உடல் வலுவுண்டாக:
சிறியவர் முதல் பெரியவர் வரை அத்தி, ஆலம், அரசு, இதன் விதைகளை சம அளவில் எடுத்து பாலில் அரைத்து 5 கிராம் காலை மட்டும் உட்கொள்ள பிற நோயிலிருந்து பாதிக்கப்பட்ட உடலையும் உரமாக்குகிறது.

70) குடற்புண் தீர்க்கும் மணத்தக்காளி:
மணத்தக்காளி கீரையைச் சமைத்தோ, மணத்தக்காளிப் பழத்தை வற்றல் செய்து உணவுடன் சேர்த்து தினந்தோறும் உண்டுவர வயிற்றுப்புண் குணமாகும்.

71) தேமல் மறைய:
கருங்சீரகத்தை எண்ணெய்விட்டு கருக வறுத்து அதனை காடி விட்டரைத்து பூச சொறி, தேமல் குறையும்.

72) வாயு கலைய:
வெள்ளைப் பூண்டின் மேல் தோலை அகற்றி பசும்பாலில் இட்டு காய்ச்சி அருந்த வாயு கலையும்.

73) பாலுண்ணி மறைய:
சிவப்பு முள்ளங்கி இலையை உலர்த்தி சருகுபோலாக்கி அதனை எரித்து சாம்பலாக்கி, சாம்பலில் கொஞ்சம் எடுத்து ஆமணக்கு எண்ணெய்விட்டு குழப்பி ஒரு வெள்ளைத் துணி மீது தடவி பாலுண்ணி மீது சில தினங்கள் போட குணமாகும்.

74) தொண்டை நோய்க்கு:
கடுகை குடிநீர் செய்து தேன்விட்டு உள்ளுக்கு கொடுக்க தொண்டை நோய் நீங்கும்.

75) பெளத்திரம் நீங்க:
குப்பை மேனிச் சூரணமும், திப்பிலி சூரணமும் சமஅளவு கலந்து 1கி நெய்யில் உட்கொள்ள பெளத்திரம் நீங்கும்.

76) தீச்சுட்ட புண்களுக்கு:
வேப்பங் கொழுந்தைச் சிதைத்து ஆமணக்கிலையில் பொதித்து உப காந்தலில் பொதித்து வெந்த பதத்தில் எடுத்து மேற்படி புண்மேல் வைத்துக்கட்ட தீச்சுட்டபுண் ஆறிவிடும்.

77) தேக பலமுண்டாக:
நத்தை சூரி விதையை அரைத்து அல்லது சூரணித்து பாலில் உட்கொண்டு வந்தால் தேக பலமுண்டாகும்.

78) படைகளுக்கு:
பொன்னாவாரை வேருடன் சந்தனத்தை சேர்த்து அரைத்து தடவி வந்தால் படைகள் உதிர்ந்து மறைந்து போகும்.

79) கண்நோய் தீர:
வெள்ளை (அ) சிவப்பு நந்தியாவட்டை பூவை பிழிந்து அந்த ரசத்தை 2 – 3 துளி கணக்காய் காலை மாலை கண்களுக்கு விட்டு வர கண்நோய் தீரும்.

80) கற்றாழை நாற்றத்திற்கு:
கோஷ்டத்தைப் பசுவின் பால் விட்டரைத்து பாலில் கலக்கி உட்கொண்டு வந்தால் கற்றாழை நாற்றம் நீங்கும்.

81) சேற்று புண்ணிற்கு:
மருதோன்றி இலையை அரைத்து பூச குணமாகும்.

82) நகச்சுற்று குணமாக:
வெற்றிலையுடன் கற்சுண்ணாம்பு சேர்த்தரைத்து சீழ்கோர்த்த நகச்சுற்றுக்கு பூசலாம்.

83) முகப்பரு குணமாக:
சங்கை பன்னீரில் உரைத்து பூசலாம்.

84) புழுவெட்டு குணமாக:
அரளிச் செடியின் பாலை புழுவெட்டுள்ள இடங்களில் தடவி வர மயிர் முளைக்கும்.

85) பொடுகு குணமாக:
வெள்ளை மிளகு (அ) நல்ல மிளகை பாலில் அரைத்து தலைக்குத்தடவி குளித்து வந்தால் பொடுகு வராது.

86) தழும்பு மறைய:
வேப்பம்பட்டைக் கியாழத்தைக் கலக்கி அதில் வரும் நுரையை தடவி வரலாம்.

87) முறித்த எலும்புகள் கூட:
வேரை உலர்த்திப் பொடித்து 2 கிராம் கொடுத்துவர, முறிந்த எலும்புகள் சீக்கிரம் கூடும்.

88) பால் சுரக்க:
பால் சுரக்கவும், பால் கட்டி உண்டாகும் முலை வீக்கத்தை கரைக்கவும் வெற்றிலையைத் தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்துக் கட்டலாம்.

89) தண்ணீர் தெளிய:
தேற்றான் விதையை தண்ணீரில் உரைத்து கரைத்தால் தண்ணீர் தெளிந்து நிற்கும்.

90) கண் நீர் கோர்த்தல் தணிய:
மஞ்சள் நீரில் ஒரு சிறிய வெண்சீலைத்துண்டை நனைத்து நிழலிலுலர்த்தி வைத்துக் கொண்டு கண்நோய் உள்ளவர்கள், இச்சீலையைக் கொண்டு கண்களை துடைத்துவர கண்சிவப்பு, கண்ணருகல், கண்வலி, கண்ணில் நீர்கோர்த்தில் இவை தணியும்.

91) புகையிலை நஞ்சுக்கு:
வெங்காய கிழங்கு சாற்றை உட்கொள்ள புகையிலை நஞ்சு மாறும்.

92) குடிவெறியின் பற்று நீங்க:
மிளகாய் செடியுடன் இலவங்கப்பட்டை, சருக்கரை சேர்த்து குடிநீரிட்டுக் கொடுக்க குடிவெறியின் பற்று நீங்கும்.

93) நீரிழிவு நீங்க:
தொட்டாற்சுணுங்கி இலையையும், வேரையும் உலர்த்திப் பொடித்து பாலில் 4-8 கிராம் சேர்த்துக் கொடுக்க நீரிழிவு நீங்கும்.

94) பெரும்பாடு தணிய:
அசோக பட்டையை இடித்துச் சாறுபிழிந்து கால் முதல் ஒரு உச்சிகரண்டியளவு கொடுத்துவர பெரும்பாடு தணியும்.

95) நரம்பு தளர்ச்சி நீங்க:
அமுக்கராக் கிழங்குபொடி 1 பங்கும், கற்கண்டு 3 பங்கும் சேர்த்து, வேளைக்கு 4 கிராம் காலை மாலை உட்கொண்டு, அரை அல்லது ஓர் ஆழாக்குப் பசுவின் பால் சாப்பிட்டுவர, நரம்பு தளர்ச்சி நீங்கும்.

96) வீக்கத்திற்கு ஒற்றடம்:
நொச்சி இலையை வதக்கி ஒற்றடமிட வீக்கம், கீல்வாயு தீரும்.

97) மூட்டுப் பூச்சிகள் அகல:
ஆகாயத் தாமரை பூண்டை மூட்டுப் பூச்சிகள் நிரம்பிய இடங்களில் வைக்க, இது வாடுந்தறுவாயில் உண்டாகும் ஒருவித வெகுட்டல் மணத்தால் இப்பூச்சிகள் வராது.!
98.கைக்குத்தல் அரிசியில் சுக்கை தட்டிப்போட்டு கஞ்சி காய்த்து குடித்துவர வாய்வுப்பிடிப்பு, வயிற்று உப்புசம் அகலும்.!
99.வெந்தயத்தை அரைத்தேக்கரண்டி அளவெடுத்து இரவில் அரைடம்ளர் நீரில் ஊறவைத்து காலையில் குடித்துவர
நீரழிவு கட்டுப்படும்.!
100.நல்லெண்ணைய்
பத்து துளியெடுத்து அதில் 8 துளிநீர்விட்டு விரலால் குளப்ப பசைபோன்று வரும் அதை முகச்சுறுக்கம், கருவளையம் உள்ள இடத்தில் பூசி சிறிது நேரம் சென்று குளித்துவர அவை மாறும்.!

எண்ணையைத் தேடி பயணம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு🚴🏿

என்பது பழமொழி இன்று திரவியம் தொலைத்தும்ஆரோக்கியம் தேடு என்பது புதுமொழி.  ஆரோக்கிய வாழ்விற்காக தமிழர்கள் எங்கும் ஓடவோ தேடவோ தேவையேயில்லை.
நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து பின்பற்றினாலே போதுமானது.!

அப்படி நாம் பின்பற்றியே தீர வேண்டிய ஒரு முக்கிய ஆரோக்கிய முறைகளில் கல்செக்கு எண்ணை சமையலும்  மிக முக்கியமானது.!
ஊட்டச்சத்துப் பற்றாக்குறையே
இன்று மழலைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் காணப்படும் முக்கிய வியாதிகளாய் இருக்கிறது. அல்லது ஆஸ்துமா, சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம்,புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கத் தேவையான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலின் சீர்குலைவிற்கு ஊட்டச்சத்தின்மையே முக்கியக் காரணமாக விளங்குகிறது. என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இன்று ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.! உடல் செல்கள் அனைத்தும் கொழுப்புதான், உடல் செல்களை புதுப்பிக்கத் தேவையானப் பொருளும் கொழுப்புதான், உடலில் இறந்த செல்களை உடனுக்குடன் வெளியேற்ற உடலுக்குத் தேவையான முக்கியப் பொருளும் கொழுப்புதான்.! உண்மை இவ்வாறு இருக்க கொழுப்புள்ள உணவுகளே வேண்டாம் என்றுகூறி உலக வர்த்தக நிறுவனங்கள் செய்துவந்த  போலி விளம்பரங்களை நம்பி செக்கெண்ணைய் சாப்பிட்டுவந்த
தமிழர்கள் சுத்திகரித்து கொழுப்பை நீக்கிய சூரியகாந்தி எண்ணைய் பயன்படுத்த ஆரம்பித்ததோடு வேர்க்கடலை,தேங்காய்,பருப்புவகைகளை வேறுவிதமாக உண்பதையும் குறைத்துக் கொண்டோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதையும் இதனால் என்னென்ன சீரழிவுகள் வந்தது என்பதையும் இன்று கண்கூடாக கண்டுவிட்டோம். இதுமட்டுமின்றி மரபணுமாற்றிய விதைகள், இரசாயண உரங்கள் என்று இயற்கையின் அரவணைப்பை இழந்து வந்த நிலையில் அய்யா நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் ஆயிரக்கணக்கண மக்கள் விழிப்புணர்வு பெற்றனர். இன்று  பல இரசாயண மருத்துவர்களே இயற்கையை நோக்கி திரும்பிவருகிறார்கள். இது ஒரு மகத்தான வெற்றி.  இன்று
விழிப்புணர்வு மிக்க மக்களின் பார்வை முழுவதும் இயற்கையை நோக்கி திரும்பிவிட்டது. இயற்கை விவசாயம், இயற்கை மூலிகை மருத்துவம், இயற்கை மூலிகை உணவுதயாரிப்பு போன்ற வகையில் பல்வேறு தரப்பினர் இன்று  மக்கள் மத்தியில் சேவையாற்றி வருகிறார்கள். அவர்களின் ஒருவர்தான் சுத்தமல்லி சீனிவாசன் இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்துவிட்ட இயற்கை கல் மரச்செக்கு எண்ணையை உற்பத்தி செய்துவருகிறார். இயற்கையில் விளைந்த எள், வேர்க்கடலை,நாட்டுத்தேங்காய்,  இவற்றை பயன்படுத்தி  100% இயற்கையான முறையில் எண்ணைய் தயாரித்து வழங்கிவருகிறார்.! அதுமட்டுமில்லாமல் எள்,தேங்காய்,வேர்க்கடலை போன்றவற்றில் குறைந்தது 30 கிலோ இவரிடம் காயவைத்து 2 கிலோ கருப்பட்டியும்  கொடுத்தால் நமது கண்முன்னாடியே எண்ணையாக இயற்கை முறையில் செக்கில் ஆட்டிதருகிறார். <ஒரு லிட்டருக்கு 120 ரூபாய் கூலி>  இயற்கை, எள்,தேங்காய் போன்றவற்றை விவசாயிகளிடம் நேரில் வாங்குவதற்கும் உதவுபுரிகிறார்.! இவருக்கு உதவியாக இவரின் 70 வயது பெரியப்பா உடனிருக்கிறார்.! இறையருளால் கடந்தமாதம் இவரிடம் வாங்கிய நல்லெண்ணையை ஒரு நண்பர் நமக்கு வழங்கி இருந்தார் அதில் கொஞ்சம் சுக்கை மட்டும் தட்டிப்போட்டு  காய்ச்சி ஒரு பக்கவாத நோயாளிக்கு தடவிவிட்டேன். செய்த உடனேயே நல்ல மாற்றம் தெரிந்தது. பிறகு தொடர்ந்த பயிற்சியில்  இன்று
அந்த மனிதர் தனியாக நடைப்பயிற்சி செய்யுமளவு தயாராகிவிட்டார்.!
அதற்கு இந்த எண்ணையின் பங்கும் முக்கியமானது.! அதன்பிறகுதான் ஒருநாள் சுத்தமல்லிக்கு நேரில் சென்று இந்த எண்ணையை வாங்கி
பல்வேறு மூலிகை தயாரிப்பிற்கும் வீட்டு சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறேன்.! எனது மனைவி இந்த தேங்காய் எண்ணையை காய்ச்சாமல் தலையில் தேய்த்தாலே நன்றாக முடி வளருகிறது என்கிறார்.!  இயற்கையின் குணம் மகத்தானது.  இதை மறந்து இன்னும் சிலர் அமேசான் காட்டிற்கு பயணம் சென்று கொண்டிருக்கிறார்கள் .!
செக்கெண்ணையை ஆட்டிய பின்  வரும் திறை புண்ணாக்குடன் கொஞ்சம் கருப்பட்டியை கலந்து வைத்துள்ளார் . சீனிவாசன்.அதை சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு பசியே வரவில்லை. எண்ணைய் வாங்குபவர்களுக்கு கொஞ்சம்
திறையை  இலவசமாகவும்
அதிகம் வேண்டுமானால்
விலைக்கும்  தருகிறார்கள்.
அபாரசுவையுடன் இருக்கும் இதில் பெயருக்குக் கூட மண் கடிக்கவில்லை. அதற்கான காரணத்தை கேட்டபோது எள்ளை
சலிப்பதற்கென்றே  ஒரு இயந்திரம் இருப்பதை காட்டினார். அதில் எள்ளை கொட்டிவிட்டால் மண்,தூசு,சிறிய கற்கள் என்று அனைத்தையும் அது சுத்தமாக்கி, பருவமாக்கி தந்துவிடுகிறது.
பிறகு  ஒரு துணியை விரித்து அதில் எள்ளை காயவைத்து செக்கில் போடுகிறார்கள்.! பலேபலே, சுத்தம் செய்ய இயந்திரம். எண்ணைய் ஆட்ட மாடும் மனிதனும்  ஆகா, இதுவல்லவோ மகத்துவம்..

இங்கு இரண்டு நாட்டுக் காளைகள் உள்ளன இரண்டும் கொழுகொழுனு சிக்குனு இருந்தது. அடடா, இதுபோன்ற மாட்டை நான்ப் பார்த்தில்லையேனு கிட்டப்போகப் போனா … போகாதீங்க  அய்யா.! குழாய் <பேன்ட்> போட்டவங்க கிட்டப் போன மிரளும் ஏன்னா, அது உங்களை அதுக்கு ஊசிபோட வந்த மருத்துவருன்னு நினைக்கும். என்றார்; ஓ.! ஊசின்னா ஒனக்கும் பயமா? சரிசரி என்று தள்ளிவந்தால் இயல்பாக இருக்கிறது கால் நடைகள்.!

எங்கள் குலதொழிலே எண்ணைய் ஆட்டுவதுதான். இன்று இந்த தொழிலே குறைந்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இயந்திரத்தை வைத்து எண்ணைய் ஆட்டிக் கொடுக்கிறார்கள்.! ஆனால், நாங்கள் மீண்டும் பாரம்பரிய கல்செக்கில் எண்ணைய் ஆட்டுவது  மனதிற்கு மகிழ்ச்சியாய் உள்ளது. மற்றபடி
இதில் பெரிய லாபம் என்று ஒன்றும் கிடையாது. உழைப்பிற்கான
கூலியே  கிடைக்கும். மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் உதவுகிறோம். என்ற ஆத்மதிருப்தி எனக்கு கிடைக்கிறது. அதுவே நமது குறிக்கோள் என்றதோடு விடைபெறும் போது இரண்டு பொட்டலங்களில் ஒரு பொடியை தந்துவிட்டார்.
அதை தலையில் தேய்த்து குளித்தால்  ரெம்ப வறட்சியாகவும் இல்லாமல் எண்ணைய் பிசுக்கும் இல்லாமல் ஒரு வகையான  சுத்தமான தலைமுடியை
தருகிறது.! தலைகுளிர நல்லெண்ணைய் தேய்த்து விட்டு இந்தப்பொடியை தேய்த்து குளித்தால்  எண்ணைய்  பிசுக்கெல்லாம் போய் கொஞ்சுண்டு மட்டும் எண்ணைய் தேய்த்த அடையாளம் தெரிகிறது.! எல்லாமே ஆச்சரியமாகதான் உள்ளது.!  யாருகண்டா? ஒருவேளை
இதுவே சொரியாஸிஸ்
வியாதிக்கான  மருந்தாய்  கூட இருக்கலாம்.!
மற்றொரு ஆய்வுப்பூர்வமான தகவல் என்னவென்றால்  நல்லெண்ணையை ஒரு பாத்திரத்தில் நிரப்பி அதில் ஒரு கருங்கல் துண்டை போட்டு வைத்துவிட்டு ஒரு மாதம் கழித்து அந்தக் கல்லை எடுத்து  உடைத்துப் பார்த்தால்   அதில்   உள்ள ஒவ்வெரு  உள்புற  பக்கத்திலும் எண்ணைய் ஊடுருவிய  அடையாளத்தை பார்க்க முடியும்.! கருங்கல்லுக்குள் கூட ஊடுருவும் தன்மை நல்லெண்ணைய்க்கு உண்டு என்றால் நரம்பும் சதையுமான மனித உடலுக்குள்  எவ்வளவு வேகமாக ஊடுருவி  பிணியை தீர்க்கும்  என்பதை நினைவில் கொள்ளவும்.! தேங்காய் எண்ணையை பற்றி  கூறுவதென்றால்  அது உடலுக்குள் வேகமாக ஊடுருவாது .ஆனால் உடலில் உள்ள வெப்பசக்தி  வெளியேற விடாமல் காக்கும் அற்புத குணம்  அதற்கு உண்டு. அதனால்தான் குளிர்   பிரதேசங்களில் வசிப்பவர்கள் தேங்காய் எண்ணையை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.! எதிரெதிர் துருவங்களாக இயங்கும்  இந்த இரண்டு எண்ணைகளுமே மனிதனின் பாதுகாப்பு அரண்கள். இந்த விசயத்தை சீனிவாசன் அவர்கள் கூறும்போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பதிலுக்கு நாமும் அவருக்கு ஒரு வியப்பை அளித்தோம்.!


🌅டாக்டர்.எலிசபெத்
சாமுவேல் அவர்கள் கொழுப்பைப் பற்றியும்
செக்கெண்ணையின்
 அவசியத்தைப் பற்றியும் கூறிய
ஒளிபடத்தை அவரிடம் எடுத்துக் காட்டினேன். பார்த்து வியந்து, என்னங்க இது.! இயற்கை வழியில் வந்த மருத்துவர்கள் தான் இதுபோன்ற உண்மைகளை கூறி வருகிறார்கள்.! ஆனால், ஆங்கில மருத்துவ நிபுணரான இந்தம்மா இதை கூறுவது அதிசயமாய் தான் இருக்கிறது.! என்றார்; அதானே, ஆனாலும்,
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை கூட
மறைக்க முடியாதே.!
பிறகெப்படி, இயற்கை ஞானத்தை மறைக்க முடியும்.! மனசாட்சி உள்ள மருத்துவர்கள் ஒப்புக்கொண்டாலே
போதும்.! மக்கள் ஆரோக்கியமும்
நமது முன்னோர் வாழ்வியலும்
பாதுகாக்கப்படும்.! என்றவாறு.!
பிரியாவிடைப் பெற்றேன்.!

உங்கள்  தேவைக்கு நேரடியாகவோ அல்லது
கூரியர்
 மூலமாகவோ
பெற்றுக் கொள்ளலாம்.!
நல்லெண்ணைய்,
தேங்காய் எண்ணைய்,கடலை எண்ணைய்

லிட்டர் -
300 ரூபாய்/-

தொடர்பிற்கு:9443284469
8124346169

ssss ஆயில் மில்
பாரதியார் நகர்,
சுத்தமல்லி,
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம்.!

இயற்கையோடு
 இயைந்து இன்புற்று
 வாழ்வோம் 🌺

-ஏகப்பிரியன் D.Y.T
amyogatrust.blogspot.in
100% இயற்கையான மூலிகை
தயாரிப்புகளுக்கு
Aum Herbals
Mobile:9629368389

அத்திப்பழத்தின் பலன்கள் & 40 வகை கீரைகள்

அத்திப் பழம்..!


1.தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,

2 மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,

3. நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.

4. போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.

5.தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.

6.சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும்.!

40 வகை கீரைகளும் அதன் முக்கிய பயன்களும்:

🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும்.
🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும்.
🌿சிறுபசலைக்கீரை- சருமநோய்களைத் தீர்க்கும் பால்வினை நோயை குணமாக்கும்.
🌿பசலைக்கீரை- தசைகளை பலமடையச் செய்யும்.
🌿கொடிபசலைக்கீரை- வெள்ளை விலக்கும் நீர் கடுப்பை நீக்கும்.
🌿மஞ்சள் கரிசலை- கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும்.
🌿குப்பைகீரை- பசியைத்தூண்டும்.வீக்கம் வத்தவைக்கும்.
🌿அரைக்கீரை- ஆண்மையை பெருக்கும்.
🌿புளியங்கீரை- சோகையை விலக்கும், கண்நோய் சரியாக்கும்.
🌿பிண்ணாருக்குகீரை- வெட்டையை, நீர்கடுப்பை நீக்கும்.
🌿பரட்டைக்கீரை- பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும்.
🌿பொன்னாங்கன்னி கீரை- உடல் அழகையும், கண்ஒளியையும் அதிகரிக்கும்.
🌿சுக்கா கீரை- ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு மூலத்தை போக்கும்.
🌿வெள்ளை கரிசலைக்கீரை- ரத்தசோகையை நீக்கும்.
🌿முருங்கைக்கீரை- நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம்பெறும்.
🌿வல்லாரை கீரை- மூளைக்கு பலம் தரும்.
🌿முடக்கத்தான்கீரை- கை, கால் முடக்கம் நீக்கும் வாயு விலகும்.
🌿புண்ணக்கீரை- சிரங்கும், சீதளமும் விலக்கும்.
🌿புதினாக்கீரை- ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும்.
🌿நஞ்சுமுண்டான் கீரை- விஷம் முறிக்கும்.
🌿தும்பைகீரை- அசதி, சோம்பல் நீக்கும்.
 🌿முரங்கைகீரை- சளி, இருமலை துளைத்தெரியும்.
🌿முள்ளங்கிகீரை- நீரடைப்பு நீக்கும்.
🌿பருப்புகீரை- பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும்.
🌿புளிச்சகீரை- கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும்.
🌿மணலிக்கீரை- வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும்.
🌿மணத்தக்காளி கீரை- வாய் மற்றும் வயிற்றுப்புண் குணமாக்கும், தேமல் போக்கும்.
🌿முளைக்கீரை- பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும்.
🌿சக்கரவர்த்தி கீரை- தாது விருத்தியாகும்.
🌿வெந்தயக்கீரை- மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும்.
🌿தூதுவலை- ஆண்மை தரும். சருமநோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும்.
🌿தவசிக்கீரை- இருமலை போக்கும்.
🌿சாணக்கீரை- காயம் ஆற்றும்.
🌿வெள்ளைக்கீரை- தாய்பாலை பெருக்கும்.
🌿விழுதிக்கீரை- பசியைத்தூண்டும்.
🌿கொடிகாசினிகீரை- பித்தம் தணிக்கும்.
🌿துயிளிக்கீரை- வெள்ளை வெட்டை விலக்கும்.
🌿துத்திக்கீரை- வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும்.
🌿காரகொட்டிக்கீரை- மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும்.
🌿மூக்கு தட்டைகீரை- சளியை அகற்றும்.
🌿நருதாளிகீரை- ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.

உடலில் தங்கியிருக்கும் நச்சுக்கள் நீங்க

வெந்தயம் ... மூன்று தேக்கரண்டி

ஓமம் . ... மூன்று தேக்கரண்டி
மிளகு ........... ஒரு தேக்கரண்டி
சுக்கு ................ மூன்று துண்டுகள் (சுத்தி செய்தது )
எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியே பொன்னிறமாக வறுத்து எடுத்து ஒன்றாகச் சேர்த்து அரைத்து சூரணமாக்கவும்
நூறு மில்லி நீரைக் கொதிக்க வைத்து இறக்கி அதில் கால் தேக்கரண்டி சூரணம் சரத்துக் கலந்து மிதமான சூட்டில் இரவு உணவுக்குப் பின் அரை மணி நேரம் கழித்து குடிக்க வேண்டும்
பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை இந்த தீநீரைக் குடித்தால் போதுமானது தினமும் குடிக்கத்தேவை இல்லை
இவ்வாறு குடித்து வர உடலில் தங்கியுள நச்சுக்கள் நீங்கி இரத்தம் தூய்மை அடையும் .உடல் பூரிப்படையும்
இது ஒரு அனுபவ எளிய வீட்டு மருத்துவம் ஆகும்.!

கொள்ளுப்பால்---உணவே மருந்து!


இயற்கைப்பால் பற்றி அனைவரும் அறிந்ததே. ”கொழுத்தவனுக்கு கொள்ளு” என்பது முதுமொழி. அதாவது உடல் கொழு கொழு என்று இருப்பவர்கள் கொள்ளைப் பயன் படுத்தினால் அது உடல் எடையைக் குறைத்து உடலில் உள்ள உப்புகளை வெளியேற்றும். உப்புதான் மிக முக்கிய காரணம் உடலில் ஊளை சதை போடுவதற்க்கு, அது நீரை சேர்த்து வைத்துக் கொள்ளும் குணமுடையது.
100 கிராம் கொள்ளை நன்கு சுத்தப்படுத்தி, அதன் பின் அதை முளைக்கட்ட வேண்டும். ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் முளைவிடும். (இது சூரிய சக்தியின் அடிப்படையில் தான் இருக்கும், குளிர் காலத்தில் மூன்று நாட்கள் கூட ஆகலாம்) அதாவது போதுமான சூரிய சக்தி அதற்கு கிடைத்தால்தான் அதன் வளர்ச்சி ஊக்குவிக்கப்பட்டு முளைவிடும்.
முளைவிட்ட (1-1.5 Cms முளைவிட்டப் பின்) சிறிது தேங்காய் துருவலையும் சேர்த்து மிக்ஸியில், ஓட விட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்க்க வேண்டும். தேங்காய் சட்னிக்கு அரைப்பது போல் பதம் வந்ததும் அதை இறக்கி துணி அல்லது வடிகட்டி உதவியுடன் பால் பிழிந்து கொள்ளவும்.
பலன்கள்: சிறுநீர் நன்றாக வெளியேறும். (அத்துடன் தேவையில்லாத உப்புகளும் வெளியேறி உடல் எடை குறையும்). சளித்தொல்லை நீங்கும். பக்க வாதத்தால் கை, கால் விழுந்து போனவர்களுக்கு இந்த கொள்ளுப்பால் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும். உடலுக்கும் நல்ல சக்தி கொடுக்கும். ஒரு நாளைக்கு ஒரு தடவைக்கு மேல் குடிக்கவேண்டாம். ஒரு நபருக்கு 100 கிராம் கொள்ளில் இருந்து வரும் பால்தான் மருந்தின் அளவு.!

நீரழிவு நோய் குணமாக


மாமரத்தின் தளிர்
இலையை உலர்த்தி
பொடியாக்கி வைத்து
கொள்ளவும். 1 ஸ்பூன்
வெந்நீரில் கொதிக்க
வைத்து தினமும்
காலை வெறும் வயிற்றில்
சாப்பிட்டு வர நீரழிவு
நோய் குணமாகும்..

எச்சரிக்கை -- மூலிகை ஆபத்துகள்


மூலிகை ஆபத்துகள்
---------------------------

சமீப காலத்தில் இயற்கை மீதும் மூலிகை மருந்துகளின் மீதும்
மக்களுக்கு அப்படியே  அக்கறையும் அன்பும் பொத்துக்
கொண்டு வந்துவிட்டது.!
இதன் விளைவால் பல திடீர் மூலிகை கம்பெனிகளும்  மூலிகை மருத்துவர்களும் வெளிநாட்டு மூலிகைகளை விற்பவர்களும் பெருகி வருகிறார்கள்.! இது உண்மையில் வரவேற்க தக்க விசயம்.!

ஆனால் ஒவ்வெரு மூலிகைகளுக்கும் சுத்திகரிப்பு முறை பயன்படுத்தும் முறை ஒத்த குணமுள்ள மூலிகை  ஆற்றலை முறிக்கும் குணமுள்ள மூலிகை என்றும் எடுக்க வேண்டிய அளவு, காலம், சேர்த்து பயன்படுத்த வேண்டிய பொருட்கள் என்றும்  பல பட்டியலே இருக்கிறது.! இவற்றை கடைப் பிடிக்காமல் சும்மா

கடுக்காய் கொடுத்தால் பேதிபோகும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு அதை நமது மடத்தில் உள்ள நாய்களுக்கு கூட கொடுக்க வேண்டும்.! என்று நித்யானந்தா போன்ற அறிவாளிகளே உளறி வருவது கவலை அளிக்கும் விசயமாய்  இருக்கிறது.!

சமீபத்தில் கர்பப்பையில் ஒருகிலோ அளவில் ஒரு கட்டியோடு ஒரு அம்மா நமது மையத்திற்கு வந்திருந்தார்.!  இரண்டு வருடத்திற்கு முன்பு சிறுசிறு கட்டிகளாகத்தான் இருந்தது. பிறகு அதைக் கரைக்க ஆறுமாதமாக DXN என்ற வெளிநாட்டு மூலிகை மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டேன். பிறகு விட்டுவிட்டேன் சமீபத்தில் வலி வந்ததால் ஸ்கேன் செய்து பார்த்தபோது தான் கட்டி இப்படி பெருத்திருப்பது தெரிந்தது என்றார்.

பொதுவாக வெளிநாட்டு மூலிகை என்று டப்பா ஆறாயிரம் பத்தாயிரம் என்று விற்பவை எல்லாம் போலியானவை அவற்றில் நிறைய செயற்கை விட்டமினும் புரோட்டினுமே கலந்துள்ளது.! அதனால், அவை உடலுக்கு உடனடி தெம்பை கொடுக்கும்  புரோட்டின் எப்படி உடலை வளர்க்குமோ அப்படியே உடலில் உள்ள கட்டியையும் வளர்க்கவே செய்யும்.!


இது தெரியாமல் மல்டிலெவல் மார்க்கெட்டின் மூலம் இதை விற்பவர்கள் அனைவரும் இது கேன்சர் செல்லை அழிக்கும், சிறுநீரக செயலிழப்பை சீராக்கும் என்றெல்லாம் கூறி தங்கள் லாபத்திற்காக வெளிநாட்டு மோகம் கொண்ட முட்டாள் நோயாளிகளிடம் விற்றுவருகிறார்கள்.!


நோயில்லாமல் கடுக்காயை தொடர்ந்து தினமும் தின்றுவந்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும், பெருங்குடல் பலவீனம் ஏற்படும், கல்லீரல் வீக்கம் உருவாகும், உடல் சோம்பல், உடல்வலி உருவாகும்.! கடினமான மலச்சிக்கல் உள்ள வயதான நோயாளிகள் மட்டும் தினமும் இரவில் அரைத்தேக்கரண்டி கடுக்காய்பொடியை சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.! தினமும் வளமையாக பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் சேர்ந்த திரிபலாவையோ அல்லது இவற்றுடன் ஆடாதோடை , சுக்கு சேர்ந்த பஞ்சமூலி சூரணத்தையோ குறிப்பிட்ட மாதங்கள் வரை தொடர்ந்து எடுக்கலாம்.!

திரிபலாவும் பஞ்சமூலி சூரணமும் இரத்தத்தை சுத்திகரிக்கும், உடல் எடையை குறைக்கும், சக்கரையை கட்டுக்குள் வைக்கும், உடல் எடையை கூட்டும், உடலில் உள்ள உப்புச்சத்தை குறைக்கும், வாத, பித்த, கப நோய்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும், வாய்ப்புண்ணை குணமாக்கும் எல்லாம்  உண்மைதான் ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

வெளிநாட்டு மூலிகைகள் முழுவதும் நஞ்சு.!


அதுபோலவே ஒரு மாத மருந்திற்கு 6000, 7000 என்று கட்டணம் வசூலிக்கும் அனைத்து மருத்துவர்களும் அதில் ஸ்டீராய்டு மருந்துகளை கலந்தே கொடுக்கிறார்கள். முன்னோர்கள் விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்றார்கள் சித்தர்களோ எல்லா வியாதிக்கும் 48 நாட்கள் போதும் என்றார்கள் ஆனால் இந்த நவீன வியாபாரிகளோ குறைந்தது ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரை அவர்களிடம் இரசாயணம் கலந்த மூலிகைகளை  வாங்கி உண்ணுங்கள் என்கிறார்கள்.! ஆறு மாதத்தில் நோயை கட்டுப்படுத்த எந்த மருத்துவ சிகாமணியும் வேண்டாம், சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் போதும் எந்த மூலிகை மருந்தும் இல்லாமல் உடம்பு தன்னைத் தானே குணமாக்கிக் கொள்ளும்.!

நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
MObiLe:9629368389

இயற்கை மூலிகை தயாரிப்புகள்


1. பஞ்சமூலி சூரணம்
உடல் பருமன், மலச்சிக்கல், மூட்டுவலி, கண்சிகப்பு, இழுப்பு, சக்கரை வியாதி போன்ற வியாதிகளை கட்டுப்படுத்துவதோடு உடலில் உள்ள கழிவுகளை சுத்திகரித்து முழு ஆரோக்கியத்தை உணரவைக்கும்.
நெல்லிக்காய் , தான்றிக்காய், கடுக்காய், ஆடாதோடை, சுக்கு சேர்த்து தயாரிக்கப்பட்டது.
100% இயற்கையானது.!
950 கிராம் 400 ரூபாய்

2. மூலிகை தேனீர்
ஆவரம்பூ, தாமரைப்பூ, ரோஜாப்பூ, செம்பருத்திப்பூ, வாழைப்பூ, சுக்கு, கொத்தமல்லி, அதிமதுரம், ஏலக்காய், மிளகு போன்ற 24 இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்ப மூலிகை தேனீர் பொடி
உடல் சுறுசுறுப்பு தரும், நோய் எதிர்ப்பை அதிகப்படுத்தும், சளி, இருமல், புற்று செல்களை அழிக்கும் திறன் கொண்டது.!
950 கிராம் 500 ரூபாய்


3. மூலிகை பல்பொடி
 வேப்பம் பட்டை, ஆலம்பட்டை, ஆவாரம் பட்டை, கிராம்பு, இந்துப்பு போன்ற 18 மூலிகைகளின் கலவை.
பல்சொத்தை, பல்லரிப்பு, பல்வலி ஈறுகளில் இரத்தம் வடிதல், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாட்டால் அடிக்கடி நோய்வாய்ப்படுதல் போன்றவற்றை குணப்படுத்தும் அதிசய பல்பொடி.!

4. 950 கிராம் 500 ரூபாய்
மூலிகை குளியல் பொடி
ரோஜா, சந்தனம், ஆவாரம், விலாமிச்சு, வேட்டிவேர் கர்போக அரிசி போன்ற பல்வேறு மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட 100% இயற்கையான குளியல் பொடி.!
உடல் அரிப்பு, தேமல், கரும்புள்ளி, வயதான தோற்றத்தை குணப்படுத்துவதுடன் எலும்புகளையும் தோலையும் வலிமைபடுத்த உடலில் சுரக்கும் மெலனின் சுரப்பின் ஆற்றலை அதிகப்படுத்தும்.!
950 கிராம் 600 ரூபாய்


6. சர்க்கரை வியாதி சூரணம்
உடல் சோர்வு, அதிமூத்திரம் படபடப்பு போன்ற குறைபாடுகளை போக்கி இன்சுலின் சுரப்பை சீராக்கும் அற்புத மருந்து.!
சிறுகுறிஞ்சான், நாவல்கொட்டை, கடுக்காய், பன்னீர்ஜோதி, கொத்தமல்லி, வெந்தயம் போன்ற 10 மூலிகைகளின் கலவை.!

7.  அமுக்ரா மாத்திரை
அமுக்ரா, சுக்கு, சிறுநாகப்பூ, மிளகு, கிராம்பு, ஏலக்காய், போன்ற 16 மூலிகைகளை பசும்பால் மற்றும் வாழையிலையால் சுத்திகரித்து செய்யப்படும் ஆரோக்ய மாத்திரை
நரம்புத்தளர்ச்சி, பக்கவாதம், கர்பபைக்கோளாறு, ஆண்மைக்குறைவு, தைராய்டு சீரின்மை, போன்றவற்றை குணப்படுத்துவதோடு வாய்வு சம்மந்தப்பட்ட அனைத்து வியாதிகளைகளையும் சீராக்கி நரம்பு மண்டலத்தை பலப்படுத்தும்
ஆரோக்ய மாத்திரை
100 மாத்திரை 300 ரூபாய்

8.  யோகா புத்தகம் & வீடியோ
சூரியநமஸ்காரம் உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட யோகாசனம், பிராணாயாமம்,கிரியை,தியானம், இயற்கை வாழ்வியல் வழிமுறைகள் அடங்கிய முழுமையான யோகா பயிற்சி நூல்
மற்றும் குறுந்தகடு
இரண்டும் சேர்த்து 350 ரூபாய்.!
இன்சுலின் <DVD>
<இயற்கை வழியில் சக்கரை நோயை வென்றவர்களின் உண்மை நிகழ்வு>
*சக்கரை நோய் விளக்கம்
*குணப்படுத்தும் யோகா நுட்பங்கள்
*வாழ்வியல் வழிமுறைகள்
*பயணடைந்தோர் பேட்டி
அடங்கிய முழுமையான படைப்பு
நன்கொடை 250/-
நமது அறக்கட்டளையின் பல்வேறு இலவச பயிற்சிகளுக்கு நிதி திரட்டவே நமது தரமான 100% இயற்கையான மூலிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. நட்பாளர்கள் இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி உங்கள் உடலையும், மனதை ஆரோக்கிய மாக்கி என்றும் நலமாக வாழ அன்போடு வேண்டுகிறோம்.!
வாழ்க வளமுடன்.!
நலம் பெருகட்டும் … தொடர்புக்கு:9629368389

நிலக்கடலை


உணவே மருந்து.
நிலக்கடலை இருக்க தனியாக போலிக் ஆசிட் மாத்திரை தேவையா????
நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியா முழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.
நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாக இருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகுஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம். நிலக்கடலைசெடியை சாப்பிடும் ஆடு, மாடு, நாய், வயல் வெளியே சுற்றி உள்ளபறவைகள் எல்லாம் ஒரே நேரத்தில் குட்டி போடுவது இதற்கு நல்லஉதாரணம்.
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் இனப்பெருக்கம் விரைவாக நடக்கிறது. எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாதது மட்டுமல்லாது குழந்தைப் பேறும் உடன் உண்டாகும்!.

இரத்த சோகை நீங்க..


இரத்த உற்பத்திக்குச் சாப்பிட வேண்டிய உணவுகள்

உடலில் உள்ள இரத்தம் சுத்தமில்லாமல் இருந்தால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக் கோளறுகள் போன்றவை உண்டாகலாம். அதனால் உடலின் அடிப்படை சக்தியான இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது அவசியமாகும். இயற்கை உணவுகள் மூலம் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது எப்படி? ரத்தத்தை எப்படி உடலுக்கு உற்பத்தி செய்யலாம் என பார்ப்போம்.

நாவல் பழத்தைத் அடிக்கடி சாப்பிட்டு வர‌ இதயத்திற்கு மிகுந்த பலத்தைக் கொடுப்பத்துடன் உடலில் இரத்தம் அதிகமாக‌ ஊறும். பேரீச்சம் பழத்தை தேனில் மூன்று நாட்களுக்கு ஊற வைத்து பிறகு வேளைக்கு 2 அல்லது மூன்று வீதம் சாப்பிட்டு வந்தால் உடலில் ரத்தம் ஊறும். தினசரி இரவு அரை தம்ளர் தண்ணீரில் உலர்ந்த 3 அத்திப்பழத்தை போட்டு, காலை வெறும் வயிற்றில் குடித்தால் ரத்தம் பெருகும்..

பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். செம்பருத்திப் பூவை நடுவில் இருக்கும் மகரந்தத்தை தவிர்த்து சுத்தி உள்ள இதழ்கள் மட்டும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர வெட்டை சூடு தீர்ந்து இரத்தம் விருத்தியாகும்.

முருங்கைக் கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழிமுட்டை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வர இரத்தம் விருத்தியாகும். இஞ்சிச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் இரத்தம் சுத்தப்படுத்தப்படுகிறது.

தக்காளிப் பழம் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமாகும். ஆனால், வாத நோய் உள்ளவர்கள் தவிர்த்தல் நல்லது. இலந்தைப் பழம் சாப்பிட்டால் இரத்தத்தை சுத்தம் செய்வது மட்டுமில்லாமல், சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளும். பசியையும் தூண்டும் தன்மை கொண்டது. விளாம்பழம் சாப்பிட்டால் இரத்தத்தில் உள்ள கிருமிகள் அழிந்துபோகும்.

மூலிகை நீர்


சித்தர்களின் வாக்குப்படி மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்படும் நீர்கள் நோய் தடுப்பில் சிறப்பிடம் பெறுகின்றன. உணவுக்கு உணவாகவும், மருந்துக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. இச்சுவை நீர்களை காலை, மாலை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் விரைவில் பலன் கிடைக்கிறது. சாதாரண சுவைநீர்கள், மூலிகை சேர்வதால் நோய் தடுக்கும் சுகநீராய் மாறுகிறது.

ஆவாரம்பூ நீர்

“ஆவாரைப் பூத்திருக்க சாவாரைக் கண்ட துண்டோ” என்ற பழமொழிக்கு ஏற்ப நீரிழிவுக்கு ஆவாரைப்பூவின் அற்புதத்தை அறியலாம். மஞ்சள் நிறமுள்ள இப்பூ தங்கச்சத்தை தன்னகத்தே கொண்டுள்ளது. ஆவாரம்பூ சுவை நீர் நீரிழிவு, பெரும்பாடு, குடற்புண், நீர்க்கடுப்பு, வெள்ளைப்போக்கு ஆகியன வராமல் தடுக்கிறது. நூறு மில்லி நீரில் பத்து ஆவாரம் பூக்களை போட்டு காய்ச்சி, வடிகட்டி காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து தேவையெனில் காபித்தூள் அல்லது டீத்தூள் கஷாயத்தில் கலந்து காலை, மாலை வெறும் வயிற்றில் குடிக்கவும்.

கரிசாலை நீர்

சிறுநீரக செயலிழப்பு, அதிக இரத்தக் கொதிப்பு, புற்றுநோய், காச நோய், வெண்புள்ளி, எலும்பு தேய்மானம் ஆகியன வராமல் கரிசாலை சுவைநீர் தடுக்கிறது. மேற்சொன்ன ஆவாரம்பூ சுவை நீர் தயாரிப்பதுபோல் ஆவாரம்பூத் தூளுக்குப் பதிலாக கரிசாலைதூளை இரண்டு கிராம் போட்டுக் கொள்ளவும். தினசரி காலையில் மட்டும் கரிசாலைச்சுவை நீர் அருந்தி வரவும்.

செம்பருத்தி நீர்

செம்பருத்தி பூ நீர் இதய சுவர் ஓட்டை, இதய வால்வு, தேய் மானம், வழுக்கை, இரத்த சோகை ஆகியன வராமல் தடுக்கிறது. இது மாதவிடாய் கோளாறுகளை சரி செய்கிறது. குடல் இறக்கம், கர்ப்பப்பை இறக்கம் ஏற்படாதும் தடுக்கிறது. காய்ச்சிய பாலை அடுப்பிலிருந்து இறக்கி வைத்து அதில் அடுக்கு செம்பருத்திப்பூ இதழ்கள் ஐந்து போட்டுப் பத்து நிமிடம் பாலை மூடி வைத்து பின் வடிகட்டி விட வும். பால் சிவப் பாகி இருக்கும். இனிப்பு சேர்த்து வடிகட்டி காலையிலும், மாலையிலும் குடிக்கவும். சளி தொந்தரவு உள்ளவர்கள் பால் காய்ச்சும் போது தோல் நீக்கிய சிறு துண்டு இஞ்சியை நசுக்கி சேர்த்துக் கொள்ளவும்.

நன்னாரி நீர்

“தோன்றும் மழலைகள் உத்தாமணி வேரால், தோல் நோய்கள் மடிவது நன்னாரி வேரால்” என்பதன் மூலம் நன்னாரியின் நற்பண்பை நவிலலாம். நூறு மில்லி நீரில் ஐந்து கிராம் நன்னாரி வேரை நசுக்கிப் போட்டு கொதிக்க வைத்து காய்ச்சி வடிகட்டிய கருமை நிற கஷாயத்தை காய்ச்சிய பாலில் கலந்து இனிப்பு சேர்த்து உபயோகிக்கவும்.

துளசி நீர்

குடல் காய்ச்சல், மஞ்சள் காமாலை, மலேரியா, காலரா நோய்கள் வராமல் துளசி சுவை நீர் தடுக்கும். மேலும் குடல்வால் அழற்சி ஏற்படாது. காய்ச் சிய நூறு மில்லி சூடான பாலில் இரண்டு கிராம் துளசி இலை பொடியைக் கலந்து, மூடி வைத்து பத்து நிமிடங்கள் சென்று இனிப்பு சேர்த்து, தேவை யெனில் காபி அல்லது டீ கஷாயம் சேர்த்து வடிகட்டி தினசரி காலையில் மட்டும் குடிக்கவும். அடிக்கடி பல ஊர்கள் தண்ணீர் குடிப்போரும், தொற்று நோய்கள் பரவும் காலங்களிலும் இந்த துளசி சுவை நீரை பயன்படுத்தி பலன் பெறலாம்.

வல்லாரை நீர்

யானைக்கால், வலிப்பு, மலடு, பக்கவாதம், மூலம், மூட்டுவலி, இரத்தக்குழாய் தடிப்பு போன்ற நோய்கள் வராமல் வல்லாரை சுவை நீர் தடுக்கும். “காய சித்திக்கு புளியாரை„ கபால கோளாறுக்கு வல்லாரை” என்பார்கள். வல்லாரை இலைப்பொடி இரண்டு கிராம் எடுத்து மேற்கண்டுள்ள துளசி சுவை நீர் தயாரிப்பதுபோல் வல்லாரை சுவை நீர் தயாரித்துக் கொள்ளவும். காலை, மாலை இருவேளையும் குடிக்கவும். எல்லோருக்கும் என்றும் ஏற்றது வல்லாரை சுவை நீராகும். இச்சுவை நீர்கள் குறிப்பிட்டுள்ள நோய்கள் வராமல் தடுக்கவும், குணப்படுத்தவும் கூடியது. எனவே நோயுள்ளோரும், பயன்படுத்தி பயன் பெறலாம்.

உடல் எடையை அதிகரிக்க

உடல் எடையை அதிகரிக்க


300 கிராம் அளவு வெள்ளரிக்காயை  தோல்நீக்கி சிறிய துண்டுகளாக வெட்டி  எடுத்துக் கொண்டு அதனுடன் 10 பேரிச்சம் பழங்களையும் சிறியதாக வெட்டி இரண்டையும் இரவில் ஒரு பாத்திரத்தில் மூடிவைத்து விட்டு
அடுத்தநாள்  காலையில் இவற்றை வெறும் வயிற்றில் தொடர்ந்து 30 நாட்கள் உண்டுவந்தால் எடை அதிகரிக்கும். !

நலம் பெருகட்டும் …

தொப்பை குறைய..


இயற்கை வழியில் உடல் பருமன், தொப்பையை குறையுங்கள்

தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி 60 நிமிடம் யோகா பயிற்சி
தினமும் ஒருவேளை சமைக்காத பழம், காய்கறி தானிய உணவு அதோடு வழக்கமான உணவில் இஞ்சி, பூண்டு, மிளகு, தினம் ஒரு கீரை போன்றவற்றை சாப்பிடுவதோடு இடையில் ஸ்நாக்ஸ் டீ, காபிக்கு பதிலாக ஆப்பிள், சாத்துக்குடி, எலுமிச்சை,பைனாப்பிள் பழச்சாறுகளை குடித்துவந்தால்  எடை குறையும்.!

அதோடு தேவைப்பட்டால்  தினமும் இரவில் ஒரு தேக்கரண்டி திரிபலா சூரணத்தை அரை டம்ளர் நீரில் கரைத்து தூங்குவதற்கு அரைமணி நேரம் முன்பு குடித்து வந்தால் எடையும் தொப்பையும் வேகமாக குறையும்.!
நலம் பெருகட்டும் …

இயற்கை உணவுத் திட்டம்

காலை 7 முதல் 9 மணிக்குள்


முதல் நாள்

இரண்டு நாட்டு வாழைப்பழம்
ஒரு இளநீர்
50 கிராம் வேர்க்கடலை

இரண்டாம் நாள்

அரைமூடி தேங்காய்.
50 கிராம் அவல்.
25 கிராம் கருப்பட்டி.

மூன்றாம் நாள்

கோதுமை புட்டு,
கருப்பட்டி,
இரண்டு நாட்டு வாழைப்பழம்

நான்காம் நாள்

கொய்யா 4 துண்டு
ஆப்பிள் 2 துண்டு
பப்பாளி 4 துண்டு
ஆரஞ்ச் 5 துண்டு
மாதுளை பாதியளவு
பாதாம் பருப்பு 10 எண்ணிக்கை.

ஐந்தாம் நாள்

முளைகட்டிய கொண்டைக் கடலை 100 gr
பேரிச்சம் பழம் 50 கிராம்
வெள்ளரிக்காய் ஒன்று

ஆறாம் நாள்

அத்திப்பழம் 3
ஆரஞ்ச் 3
முந்திரிப் பருப்பு 10 எண்ணிக்கை

ஏழாம் நாள்

முளைகட்டிய சிறுபயறு 50 கிராம்
உலர் திராட்சை 50 கிராம்
மரவள்ளிக்கிழங்கு 100 கிராம்

மேற்கூறிய உணவுகளை வாரத்தில் உள்ள ஏழுநாட்களும் ஏழு விதமான காலை உணவாக மாற்றிமாற்றி உண்ணலாம்

இவ்வரிசையை மாற்றியோ அல்லது தேவைக்கு ஏற்ப, கூட்டியோ குறைத்தோ உண்ணலாம். இது தவிர,  கம்பு, வரகு சோளம்,கைக்குத்தல் அரிசி போன்றவற்றை இடித்து வைத்து தேங்காய், கருப்பட்டிப் போட்டு பிசைந்தோ காய்ச்சியோ சாப்பிடலாம்!

மதியம் 1 முதல் 2 மணிக்குள்

கேரட் 50 கிராம்
நெல்லிக்காய் 50 கிராம்
பீட்ரூட் 50 கிராம்
பாகற்காய் 50 கிராம்
சக்கரை வள்ளிக் கிழங்கு  50 கிராம்
உருளைக் கிழங்கு 50 கிராம்
வெள்ளரி 100 கிராம்
ஊட்டி மிளகு 1
எலுமிச்சை 1
மிளகுத்தூள் சிறிது இந்துப்பு சிறிது. மேற்கண்ட காய்கறிகளில் நமக்கு பிடித்த  காய்கறிகளில் மூன்று காய்கறிகளை மட்டும் தினமும் வெட்டி துண்டுத்துண்டாக நறுக்கிப் போட்டு அதில் எலுமிச்சையை பிழிந்து மிளகு உப்புத்தூவி  கலந்து உண்ணலாம்.!

மாலை

பட்டாணி,சிறுபயறு,கொண்டைக்கடலை,
கொள்ளு, பெரும்பயறு , வேர்க்கடலை போன்ற தானியங்கள் அல்லது பாதாம் பருப்பு முந்திரி , உலர் திராட்சை போன்றவற்றுடன் வாழைத்தண்டு ஜூஸ் பப்பாளி ஜூஸ்  எலுமிச்சை, கருப்பட்டி கலந்த பானகம் போன்ற ஏதேனும் ஒன்றை சேர்த்துக் கொள்ளலாம்.!

இரவு

7 முதல் 8 மணிக்குள்

மாம்பழம் 2 துண்டு
அன்னாசி 2 துண்டு
சப்போட்டா 1
இதோடு சாத்துக்குடி ஆப்பிள், மாதுளை, நெல்லிக்காய், பாகற்காய் போன்ற ஏதேனும் ஒரு ஜூஸ் பனங்கற்கண்டு/ தேன் கலந்து அருந்தலாம்.!

இந்தக் குறிப்பில் உள்ள அனைத்துவகை பழம் காய்கறிகளை தவிர அந்தந்த சீசனில் கிடைக்கும் தர்பூஸ், நொங்கு,நாவல், ஸ்ட்ராபெரி போன்ற பழங்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.!
பொதுவாக காலையில் தேங்காயும் பழமும் மதியம் காய்கறிகளும் தானியமும் இரவில் பழமும் ஜூஸ் வகைகளும் சாப்பிடுவது நல்லது.!
தினமும் ஒரே வகை பழம் காய்கறிகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.!

மேற்கண்ட உணவுமுறையை முடிந்தவரை சரியாக பின்பற்றினால் உடல் பருமன்,நீரழிவு,சிறுநீரக செயலிழப்பு, புற்றுநோய், மலச்சிக்கல், இரத்த அழுத்தம், குழந்தையின்மை போன்ற எந்த வகையான கோளாறுகளாய் இருந்தாலும் மூன்றுநாளில் கட்டுப்பட்டு 1 முதல் ஆறு மாதத்தில் குணமடையும்.!

(முற்றிய நிலையில் உள்ள நோயாளிகளையும் அறுவை சிகிட்சை செய்தே ஆக வேண்டிய நிலையில் இருப்பவர்களையும் தவிர)

நலம் பெருகட்டும் …