Tuesday, September 27, 2016

எண்ணையைத் தேடி பயணம்

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு🚴🏿

என்பது பழமொழி இன்று திரவியம் தொலைத்தும்ஆரோக்கியம் தேடு என்பது புதுமொழி.  ஆரோக்கிய வாழ்விற்காக தமிழர்கள் எங்கும் ஓடவோ தேடவோ தேவையேயில்லை.
நமது முன்னோர்களின் வாழ்க்கை முறையை ஆராய்ந்து பின்பற்றினாலே போதுமானது.!

அப்படி நாம் பின்பற்றியே தீர வேண்டிய ஒரு முக்கிய ஆரோக்கிய முறைகளில் கல்செக்கு எண்ணை சமையலும்  மிக முக்கியமானது.!
ஊட்டச்சத்துப் பற்றாக்குறையே
இன்று மழலைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் காணப்படும் முக்கிய வியாதிகளாய் இருக்கிறது. அல்லது ஆஸ்துமா, சக்கரைவியாதி, இரத்தஅழுத்தம்,புற்றுநோய் போன்ற நோய்கள் வராமல் தடுக்கத் தேவையான நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலின் சீர்குலைவிற்கு ஊட்டச்சத்தின்மையே முக்கியக் காரணமாக விளங்குகிறது. என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இன்று ஒப்புக்கொள்ள ஆரம்பித்துள்ளார்கள்.! உடல் செல்கள் அனைத்தும் கொழுப்புதான், உடல் செல்களை புதுப்பிக்கத் தேவையானப் பொருளும் கொழுப்புதான், உடலில் இறந்த செல்களை உடனுக்குடன் வெளியேற்ற உடலுக்குத் தேவையான முக்கியப் பொருளும் கொழுப்புதான்.! உண்மை இவ்வாறு இருக்க கொழுப்புள்ள உணவுகளே வேண்டாம் என்றுகூறி உலக வர்த்தக நிறுவனங்கள் செய்துவந்த  போலி விளம்பரங்களை நம்பி செக்கெண்ணைய் சாப்பிட்டுவந்த
தமிழர்கள் சுத்திகரித்து கொழுப்பை நீக்கிய சூரியகாந்தி எண்ணைய் பயன்படுத்த ஆரம்பித்ததோடு வேர்க்கடலை,தேங்காய்,பருப்புவகைகளை வேறுவிதமாக உண்பதையும் குறைத்துக் கொண்டோம். இது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதையும் இதனால் என்னென்ன சீரழிவுகள் வந்தது என்பதையும் இன்று கண்கூடாக கண்டுவிட்டோம். இதுமட்டுமின்றி மரபணுமாற்றிய விதைகள், இரசாயண உரங்கள் என்று இயற்கையின் அரவணைப்பை இழந்து வந்த நிலையில் அய்யா நம்மாழ்வாரின் வழிகாட்டுதலில் ஆயிரக்கணக்கண மக்கள் விழிப்புணர்வு பெற்றனர். இன்று  பல இரசாயண மருத்துவர்களே இயற்கையை நோக்கி திரும்பிவருகிறார்கள். இது ஒரு மகத்தான வெற்றி.  இன்று
விழிப்புணர்வு மிக்க மக்களின் பார்வை முழுவதும் இயற்கையை நோக்கி திரும்பிவிட்டது. இயற்கை விவசாயம், இயற்கை மூலிகை மருத்துவம், இயற்கை மூலிகை உணவுதயாரிப்பு போன்ற வகையில் பல்வேறு தரப்பினர் இன்று  மக்கள் மத்தியில் சேவையாற்றி வருகிறார்கள். அவர்களின் ஒருவர்தான் சுத்தமல்லி சீனிவாசன் இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பே வழக்கொழிந்துவிட்ட இயற்கை கல் மரச்செக்கு எண்ணையை உற்பத்தி செய்துவருகிறார். இயற்கையில் விளைந்த எள், வேர்க்கடலை,நாட்டுத்தேங்காய்,  இவற்றை பயன்படுத்தி  100% இயற்கையான முறையில் எண்ணைய் தயாரித்து வழங்கிவருகிறார்.! அதுமட்டுமில்லாமல் எள்,தேங்காய்,வேர்க்கடலை போன்றவற்றில் குறைந்தது 30 கிலோ இவரிடம் காயவைத்து 2 கிலோ கருப்பட்டியும்  கொடுத்தால் நமது கண்முன்னாடியே எண்ணையாக இயற்கை முறையில் செக்கில் ஆட்டிதருகிறார். <ஒரு லிட்டருக்கு 120 ரூபாய் கூலி>  இயற்கை, எள்,தேங்காய் போன்றவற்றை விவசாயிகளிடம் நேரில் வாங்குவதற்கும் உதவுபுரிகிறார்.! இவருக்கு உதவியாக இவரின் 70 வயது பெரியப்பா உடனிருக்கிறார்.! இறையருளால் கடந்தமாதம் இவரிடம் வாங்கிய நல்லெண்ணையை ஒரு நண்பர் நமக்கு வழங்கி இருந்தார் அதில் கொஞ்சம் சுக்கை மட்டும் தட்டிப்போட்டு  காய்ச்சி ஒரு பக்கவாத நோயாளிக்கு தடவிவிட்டேன். செய்த உடனேயே நல்ல மாற்றம் தெரிந்தது. பிறகு தொடர்ந்த பயிற்சியில்  இன்று
அந்த மனிதர் தனியாக நடைப்பயிற்சி செய்யுமளவு தயாராகிவிட்டார்.!
அதற்கு இந்த எண்ணையின் பங்கும் முக்கியமானது.! அதன்பிறகுதான் ஒருநாள் சுத்தமல்லிக்கு நேரில் சென்று இந்த எண்ணையை வாங்கி
பல்வேறு மூலிகை தயாரிப்பிற்கும் வீட்டு சமையலுக்கும் பயன்படுத்தி வருகிறேன்.! எனது மனைவி இந்த தேங்காய் எண்ணையை காய்ச்சாமல் தலையில் தேய்த்தாலே நன்றாக முடி வளருகிறது என்கிறார்.!  இயற்கையின் குணம் மகத்தானது.  இதை மறந்து இன்னும் சிலர் அமேசான் காட்டிற்கு பயணம் சென்று கொண்டிருக்கிறார்கள் .!
செக்கெண்ணையை ஆட்டிய பின்  வரும் திறை புண்ணாக்குடன் கொஞ்சம் கருப்பட்டியை கலந்து வைத்துள்ளார் . சீனிவாசன்.அதை சாப்பிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு பசியே வரவில்லை. எண்ணைய் வாங்குபவர்களுக்கு கொஞ்சம்
திறையை  இலவசமாகவும்
அதிகம் வேண்டுமானால்
விலைக்கும்  தருகிறார்கள்.
அபாரசுவையுடன் இருக்கும் இதில் பெயருக்குக் கூட மண் கடிக்கவில்லை. அதற்கான காரணத்தை கேட்டபோது எள்ளை
சலிப்பதற்கென்றே  ஒரு இயந்திரம் இருப்பதை காட்டினார். அதில் எள்ளை கொட்டிவிட்டால் மண்,தூசு,சிறிய கற்கள் என்று அனைத்தையும் அது சுத்தமாக்கி, பருவமாக்கி தந்துவிடுகிறது.
பிறகு  ஒரு துணியை விரித்து அதில் எள்ளை காயவைத்து செக்கில் போடுகிறார்கள்.! பலேபலே, சுத்தம் செய்ய இயந்திரம். எண்ணைய் ஆட்ட மாடும் மனிதனும்  ஆகா, இதுவல்லவோ மகத்துவம்..

இங்கு இரண்டு நாட்டுக் காளைகள் உள்ளன இரண்டும் கொழுகொழுனு சிக்குனு இருந்தது. அடடா, இதுபோன்ற மாட்டை நான்ப் பார்த்தில்லையேனு கிட்டப்போகப் போனா … போகாதீங்க  அய்யா.! குழாய் <பேன்ட்> போட்டவங்க கிட்டப் போன மிரளும் ஏன்னா, அது உங்களை அதுக்கு ஊசிபோட வந்த மருத்துவருன்னு நினைக்கும். என்றார்; ஓ.! ஊசின்னா ஒனக்கும் பயமா? சரிசரி என்று தள்ளிவந்தால் இயல்பாக இருக்கிறது கால் நடைகள்.!

எங்கள் குலதொழிலே எண்ணைய் ஆட்டுவதுதான். இன்று இந்த தொழிலே குறைந்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் இயந்திரத்தை வைத்து எண்ணைய் ஆட்டிக் கொடுக்கிறார்கள்.! ஆனால், நாங்கள் மீண்டும் பாரம்பரிய கல்செக்கில் எண்ணைய் ஆட்டுவது  மனதிற்கு மகிழ்ச்சியாய் உள்ளது. மற்றபடி
இதில் பெரிய லாபம் என்று ஒன்றும் கிடையாது. உழைப்பிற்கான
கூலியே  கிடைக்கும். மக்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு நாம் உதவுகிறோம். என்ற ஆத்மதிருப்தி எனக்கு கிடைக்கிறது. அதுவே நமது குறிக்கோள் என்றதோடு விடைபெறும் போது இரண்டு பொட்டலங்களில் ஒரு பொடியை தந்துவிட்டார்.
அதை தலையில் தேய்த்து குளித்தால்  ரெம்ப வறட்சியாகவும் இல்லாமல் எண்ணைய் பிசுக்கும் இல்லாமல் ஒரு வகையான  சுத்தமான தலைமுடியை
தருகிறது.! தலைகுளிர நல்லெண்ணைய் தேய்த்து விட்டு இந்தப்பொடியை தேய்த்து குளித்தால்  எண்ணைய்  பிசுக்கெல்லாம் போய் கொஞ்சுண்டு மட்டும் எண்ணைய் தேய்த்த அடையாளம் தெரிகிறது.! எல்லாமே ஆச்சரியமாகதான் உள்ளது.!  யாருகண்டா? ஒருவேளை
இதுவே சொரியாஸிஸ்
வியாதிக்கான  மருந்தாய்  கூட இருக்கலாம்.!
மற்றொரு ஆய்வுப்பூர்வமான தகவல் என்னவென்றால்  நல்லெண்ணையை ஒரு பாத்திரத்தில் நிரப்பி அதில் ஒரு கருங்கல் துண்டை போட்டு வைத்துவிட்டு ஒரு மாதம் கழித்து அந்தக் கல்லை எடுத்து  உடைத்துப் பார்த்தால்   அதில்   உள்ள ஒவ்வெரு  உள்புற  பக்கத்திலும் எண்ணைய் ஊடுருவிய  அடையாளத்தை பார்க்க முடியும்.! கருங்கல்லுக்குள் கூட ஊடுருவும் தன்மை நல்லெண்ணைய்க்கு உண்டு என்றால் நரம்பும் சதையுமான மனித உடலுக்குள்  எவ்வளவு வேகமாக ஊடுருவி  பிணியை தீர்க்கும்  என்பதை நினைவில் கொள்ளவும்.! தேங்காய் எண்ணையை பற்றி  கூறுவதென்றால்  அது உடலுக்குள் வேகமாக ஊடுருவாது .ஆனால் உடலில் உள்ள வெப்பசக்தி  வெளியேற விடாமல் காக்கும் அற்புத குணம்  அதற்கு உண்டு. அதனால்தான் குளிர்   பிரதேசங்களில் வசிப்பவர்கள் தேங்காய் எண்ணையை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.! எதிரெதிர் துருவங்களாக இயங்கும்  இந்த இரண்டு எண்ணைகளுமே மனிதனின் பாதுகாப்பு அரண்கள். இந்த விசயத்தை சீனிவாசன் அவர்கள் கூறும்போது நம்மால் வியக்காமல் இருக்க முடியவில்லை. பதிலுக்கு நாமும் அவருக்கு ஒரு வியப்பை அளித்தோம்.!


🌅டாக்டர்.எலிசபெத்
சாமுவேல் அவர்கள் கொழுப்பைப் பற்றியும்
செக்கெண்ணையின்
 அவசியத்தைப் பற்றியும் கூறிய
ஒளிபடத்தை அவரிடம் எடுத்துக் காட்டினேன். பார்த்து வியந்து, என்னங்க இது.! இயற்கை வழியில் வந்த மருத்துவர்கள் தான் இதுபோன்ற உண்மைகளை கூறி வருகிறார்கள்.! ஆனால், ஆங்கில மருத்துவ நிபுணரான இந்தம்மா இதை கூறுவது அதிசயமாய் தான் இருக்கிறது.! என்றார்; அதானே, ஆனாலும்,
ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவனை கூட
மறைக்க முடியாதே.!
பிறகெப்படி, இயற்கை ஞானத்தை மறைக்க முடியும்.! மனசாட்சி உள்ள மருத்துவர்கள் ஒப்புக்கொண்டாலே
போதும்.! மக்கள் ஆரோக்கியமும்
நமது முன்னோர் வாழ்வியலும்
பாதுகாக்கப்படும்.! என்றவாறு.!
பிரியாவிடைப் பெற்றேன்.!

உங்கள்  தேவைக்கு நேரடியாகவோ அல்லது
கூரியர்
 மூலமாகவோ
பெற்றுக் கொள்ளலாம்.!
நல்லெண்ணைய்,
தேங்காய் எண்ணைய்,கடலை எண்ணைய்

லிட்டர் -
300 ரூபாய்/-

தொடர்பிற்கு:9443284469
8124346169

ssss ஆயில் மில்
பாரதியார் நகர்,
சுத்தமல்லி,
திருநெல்வேலி
நெல்லை மாவட்டம்.!

இயற்கையோடு
 இயைந்து இன்புற்று
 வாழ்வோம் 🌺

-ஏகப்பிரியன் D.Y.T
amyogatrust.blogspot.in
100% இயற்கையான மூலிகை
தயாரிப்புகளுக்கு
Aum Herbals
Mobile:9629368389

No comments:

Post a Comment