மத்திய திட்டங்கள் | ||||||||||||||||
தமிழ்நாடு:
I. நிறுவனங்களின் கடன் வசதிகள்:
தரமான விதை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு உதவி செய்தல்
| ||||||||||||||||
II. பண்ணை இயந்திரமயமாக்குதல் திட்டம்:
1. வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டம்:
| ||||||||||||||||
2. செயல்முறைப் பரப்பின் நில மேம்பாட்டுத் திட்டம்:
| ||||||||||||||||
நில மேம்பாடு-இயந்திரங்களுக்கான வாடகை மதிப்பு விவரங்கள்:
| ||||||||||||||||
3. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
திட்டத்தின் பெயர்: தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP)திட்டசெயலாக்க இடம்: அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர) வேலைகளின் விவரம்: பின்வருமாறு:
| ||||||||||||||||
மழைநீர் அறுவடை மற்றும் நீர்வெளியோடல் மேலாண்மைத் திட்டம் மற்றும் நபார்ட் உதவியுடன் மழைநீர் அறுவடைத் திட்டம்:
மழைநீர் அறுவடை மற்றும் நீர் வெளியோடல் மேலாண்மைத் திட்டம்:
திட்டம் செயல்படும் இடம்: அனைத்து மாவட்டங்களும் (சென்னை மற்றும் நீலகிரி தவிர)
நபார்ட் உதவியுடன் மழைநீர் அறுவடைத் திட்டங்கள்:
திட்டம் செயல்படும் இடம்: காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம். கடலுார், வேலுார், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவங்கை, துாத்துக்குடி, கோயமுத்துார் மற்றும் நீலகிரி.
| ||||||||||||||||
5. புதியமோட்டார்பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்:
திட்டத்தின் பெயர் : புதிய மோட்டார்பம்ப்செட்களைக்கொண்டு பழைய மோட்டார்பம்ப்செட்களை மாற்றி அமைத்தல்.செயல்படும் இடம் : அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர) வேலைகளின் விவரம்: பழைய, தரமற்ற மோட்டார்பம்ப்செட்களை புதிய BIS மோட்டார்பம்ப்செட்கள்கொண்டு மாற்றி அமைத்தல் மற்றும் மின் துணைக்கருவிகளை புதுப்பித்தல். வழங்கப்படும் நன்மைகள்: (மானியம்)
| ||||||||||||||||
செயல் முறை விளக்கங்கள் மூலமாக 40000 எக்டர் பரப்புகளில் திருந்திய நெல் சாகுபடியை செயல்படுத்துதல்:
a. விதைகள் மற்றும் இதர இடுபொருள்களை எக்டருக்கு ரூ.800/- என்ற அளவில் வழங்குதல்.
b. உருளைக் களையெடுக்கும் கருவி மற்றும் குறியிடும் கருவியை @ ரூ.2200/- எக்டர் வழங்குதல்.
3000 சுய உதவிக்குழு பெண்களுக்கு உருளைக்களைப்பான் (நெல் களையெடுக்குங்கருவி) மற்றும் குறியிடும் கருவியை வழங்குதல்.
| ||||||||||||||||
Friday, September 2, 2016
விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய திட்டங்கள்
சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதற் காக விண்ணப்பிப்பது எப்படி?
சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதற் காக விண்ணப்பிப்பது எப்படி?
சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதற் காக விண்ணப்பிப்பது எப்படி? என்று வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சேரன்மாதேவி தோட்டக்கலை உதவி இயக்குனர் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு மானியம்
உலகமெங்கும் நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் சிக்கனமாக நீரை பயன்படுத்தி, வருங் கால தலைமுறைக்கு வளமான நீர்வளத்தை விட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மேலும் அபரிமிதமாக நீரை பயன்படுத்துவதை விட, அளவாக நீரை பயன்படுத்தும் போதுதான் நிறைவான மகசூல் பெற முடிகிறது என்பது அறிவியல் பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே தான் நீர் சிக்கனத்துக்கும், நிறைமகசூலுக்கும் ஒருசேர வழிவகுக்கும் சொட்டுநீர் பாசன முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அவற்றை அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்க உதவுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்குகிறது.
பயன்கள்
சொட்டுநீர் பாசனத்தினால் நீரும், சத்துக்களும் வேரினில் கிடைக்கின்றன. நீரை சிக்கனப்படுத்தலாம். பாசனத்துக்கு தனியே ஆள் விட தேவையில்லை. அதனால் பாசன ஆள் செலவு முற்றிலும் குறைகிறது. சத்துக்குள் நேரடியாக வேருக்கு கிடைப்பதால், அவை வீணாகாமல் பயிருக்கு கிடைக்கின்றன. ஒரு ஆய்வின்படி தழைச்சத்தை நேரடியாக மண்ணில் இடும்போது உரத்தில் 30 முதல் 50 சதம் வரை மட்டுமே பயிருக்கு கிடைக்கிறது. அதையே கரையும் உரப்பாசனமாக சொட்டுநீர் பாசனத்தின் மூலம் கொடுக்கும் போது 95 சதம் தழைச்சத்து பயிருக்கு கிடைக்கிறது. அதேபோல் மண்ணில் நேரடியாக இடும் போது 50 சதம் மட்டுமே கிடைக்கும் சாம்பல் சத்து, கரையும் உரப்பாசனமாக சொட்டு நீர் பாசனத்தின் மூலம் கொடுக்கும் போது 80 சதம் கிடைக்கிறது.
வேரை நீர் நேரடியாக சென்றடைவதால், இடையே களைகள் முளைப்பது குறைகிறது. களையெடுக்கும் செலவு பெருமளவு மிச்சமாகிறது. குறிப்பாக களையெடுத்து மீள முடியாத வாழையில் சொட்டு நீர் பாசனம் ஒரு வரப்பிரசாதம். களைகளின் போட்டியின்றி பயிர்கள வளர்வதால் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. மொத்தத்தில் 30 சதம் முதல் 60 சதம் வரை மகசூல் கிடைக்கிறது. முன்னதாகவே முதிர்ச்சிக்கு வருவதால், முன்கூட்டியே கையில் காசு பார்த்து விடலாம். அடுத்த பயிர் சாகுபடியை முன்னதாகவே மேற்கொள்ளலாம். விளைபொருளின் தரமும், எடையும், பொலிவும் அதிகரிப்பதால் நல்ல விலை கிடைக்கிறது.
யாருக்கு மானியம்?
சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளை கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும். பொதுவாக நீராதாரம் கொண்ட சின்னச் சிறு விவசாயிகள் இரண்டு, மூன்று பேர் சேர்ந்தும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
வருவாய்த்துறை நில வகைபாட்டின்படி நன்செய் நிலமென்றால் 2½ ஏக்கருக்குள்ளும், புன்செய் நிலமென்றால் 5 ஏக்கருக்குள்ளும் சொந்த நிலமுள்ளவர்கள் சிறு, குறு விவசாயி. பயன் பெற விரும்புவோர் சிறு, குறு விவசாயிகளுக்குரிய சான்றிதழை வருவாய் தாசில்தாரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள்
நிலத்தின் கணினி பட்டா, சாகுபடி செய்துள்ள அல்லது செய்யவுள்ள பயிர் பரப்பை சர்வே எண்கள் வாரியாக குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகல், இருப்பிட முகவரியை தெளிவாக குறிப்பிடும் ரேஷன் கார்டு நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மூன்று ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் அதற்கான வருவாய் தாசில்தாரிடம் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே வாழை, காய்கறிகள், மிளகாய், மலர்ப்பயிர்கள், பழ மரப்பயிர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் சேரன்மாதேவி, அம்பை வட்டார சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் சேரன்மாதேவி, அம்பை பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள உதவி தோட்டக்கலை அலுவலர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். இதர வட்டார சிறு, குறு விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.
விவசாய நிலம் வாங்க 10 லட்சம் வரை கடன்
விவசாய நிலம் வாங்க 10 லட்சம் வரை கடன்
Leave a reply
சாதாரணமாக, நிலம் வாங்குவதற்கு வங்கிகளில் கடன் பெறுவது சற்றுக் கடினமே. வியாபார நோக்கில் இல்லாமல், சொந்தமாக பயிர் செய்ய நினைக்கும் சிறு, குறு விவசாயிகள், சொந்தத்தில் நிலம் வாங்கி பயிர் செய்வதற்கு கடன் உள்ளிட்ட உதவிகளை வங்கிகள் செய்து கொண்டிருக்கின்றன. இந்த விஷயத்தில், பொதுமக்களுக்கு உதவி வருகிறது ‘தேசிய விவசாய கிராமப்புற மேம்பாட்டு வங்கி’யான ‘நபார்டு’ (NABARD-National Bank for Agriculture and Rural Development).இதற்காகவே, ‘விவசாயிகள் நிலம் வாங்கும் திட்டம்’ என்கிற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறது நபார்டு. இதன் மூலம் சிறு மற்றும் குறு விவசாயிகள் நிலம் வாங்க உதவி செய்கிறார்கள். 2 முதல் 10 லட்ச ரூபாய் வரை கடன் பெற சாத்தியம் உண்டு.
நபார்டு வங்கியானது, நேரடியாக கடன் தருவதில்லை. நாடு முழுக்க ஆங்காங்கே இருக்கும் வங்கிகள் மூலம் தான் இந்தக் கடனை வழங்கிவருகின்றது. இந்தக் கடனைப் பெற விரும்பும் நபர், சிறு அல்லது குறு விவசாயி என்கிற வரையறைக்குள் இருக்க வேண்டும் (2.5 ஏக்கருக்கு கீழே நிலம் வைத்திருப்பவர்கள்தான் சிறு, குறு விவசாயிகள் என்று வரையறுக்கப்படுகின்றனர்), வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவராக இருக்க வேண்டும் என பல நிபந்தனைகள் உள்ளன. நிலமற்ற விவசாயிக்கும் இந்தக் கடன் வழங்கப்படும்.
தாழ்த்தப்பட்ட/மலைவாழ் இனத்தைச் சேர்ந்தவராக இருந்தால், ‘தாட்கோ’ (TAHDCO – Tamil Nadu Adi Dravidar Housing and Development Corporation Limited) மூலமாக நிலம் வாங்க சிறப்புத் திட்டத்தையும் நடைமுறையில் வைத்திருக்கிறது நபார்டு.
இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெற, உங்களின் வருட வருமானம் ஒரு லட்சத்துக்குக் குறைவாக இருக்க வேண்டும்; வயது 18 – 55 வரை இருக்கவேண்டும்; உங்கள் குடும்பத்தில் யாரும் அரசாங்கத்திடமிருந்து வேறு எந்த வகையிலும் மானி யம் பெற்றவராக இருக்கக் கூடாது; வேறு இனத்தவரிடம் நிலத்தை வாங்க வேண்டும்; 5 ஆண்டுகள் வரையில் நிலத்தை வேறு பெயருக்கு மாற்றவோ, விற்கவோ கூடாது; நிலத்தை வாங்கியதும் விவசாயத்தைத் தொடங்க வேண்டும்; நிலத்தில் விவசாயம் மட்டுமே செய்ய வேண்டும் என்று பல்வேறு நிபந்தனைகள் இதற்கு உண்டு. இந்த வகையில், நிலத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள வழி காட்டி மதிப்பைப் பொறுத்தே கடன் தொகை கிடைக்கும்; அதிகபட்சமாக 7.5 லட்ச ரூபாய் வரை கடன் பெறலாம். இதற்கு 30% மானியம் உண்டு. அதிகபட்சமாக 2.25 லட்ச ரூபாய் வரை மானியம் கிடைக்கும். மேற்சொன்ன நிபந்தனைகளுக்கு உட்பட்டு நிலம் வாங்க நினைக்கும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவர்கள், ‘தாட்கோ’ நிறுவனத்துக்கு ‘ஆன் லைன்’ மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். அந்த நிறுவனம், விண்ணப்பத்தை பரிசீலித்து, கடன் தரச்சொல்லி, வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும். அதனடிப்படையில், வங்கிகளிடமிருந்து கடனைப் பெறலாம்.
உங்களிடம் சொந்த நிலம் இருக்கும்பட்சத்தில், குறுகியகால பயிர்க் கடன் வழங்கப்படுகிறது. இது, விளைபொருட்களுக்கு தகுந்தபடி மாறுபடும். நெல், கரும்பு, வாழை என ஒரு ஏக்கருக்கு இவ்வளவு ரூபாய் என்று வங்கிகள் நிர்ணயம் செய்து வைத்துள்ளன. அதன் அடிப்படையில் இந்தப் பயிர்க்கடன் வழங்கப்படும். நிலத்தின் மதிப்பில் 80% முதல் 90% வரை, நிலத்தை மேம்படுத்துவதற்காகவும் கடன் வழங்கப்படுகிறது. கிணறு வெட்டுதல், போர் அமைத்தல், சொட்டுநீர் பாசன வசதி செய்தல் உள்ளிட்டவற்றுக்கு இந்தக் கடன் தொகையைப் பயன்படுத்தலாம்.
நாட்டின் உற்பத்தியாகும் உணவுப் பொருட்களில் சுமார் 30 சதவிகித பொருட்கள், போதுமான கிடங்கு, சந்தை, பதப்படுத்தல் போன்றவை இல்லாமையால், வீணாகி குப்பைக்குச் செல்கின்றன. இதற்காகவே உணவு பதப்படுத்தும் தொழில்களுக்கு தனி அமைச் சகம் அமைக்கப்பட்டு, அத்தொழிலில் ஈடுபடுபவர்களுக்கு 25% வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்தச் செய்தியையும் மனதில் குறித்துக் கொள்ளுங்கள்!”
இணையம் மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி ?
இணையம் மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி ? How to Earn Money through Internet
Saturday, 11 February 2012
இது 1 பைசாவிற்காக தினமும் ஒரு மணி நேரம் விளம்பரங்களைப் பார்வையிடும் PTC தளம் பற்றிய பதிவோ அல்லது 5 டாலர் பெறுவதற்காக மாதம் முழுதும் மின்னஞ்சல்களைப் படிக்கும் தளம் பற்றிய பதிவோ அல்ல . இதில் நான் பகிர்ந்து இருக்கும் தளம் என் சொந்த
அனுபவத்தில் எழுதுவது .கடந்த 4 மாதங்களாக குறிப்பிட்ட ஒரு நல்ல வருவாயை பெற்ற பிறகே இது குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இது குறித்த சந்தேங்களை கருத்துக்கள் மூலமாக கேளுங்கள் .
அனுபவத்தில் எழுதுவது .கடந்த 4 மாதங்களாக குறிப்பிட்ட ஒரு நல்ல வருவாயை பெற்ற பிறகே இது குறித்து உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் . இது குறித்த சந்தேங்களை கருத்துக்கள் மூலமாக கேளுங்கள் .
பெரும்பாலும் இணையத்தில் உள்ளவர்கள் அனைவரும் கோப்புகளை பகிர்வதற்கு உபயோகிக்கும் தளங்கள் Mediafire .com , Rapidshare .com , Hotfile .com ,filesonic .com , megaupload .com போன்றவை ஆகும் ( இதில் megaupload மற்றும்filesonic ஆகியவை இப்போது உபயோகத்தில் இல்லை என்பதை அறிந்திருப்பீர்கள் .)இது போன்ற தளங்களில் உங்கள் கோப்புகளை பகிர்ந்து கொள்வதால் உங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு எளிதாக இருக்கலாம் ஆனால் இதன் மூலம் லாபம் ஈட்டுவது மிக மிகக் கடினம் . ( 1000 டவுன்லோடுக்கு 10 முதல் 15 டாலர் வரை மட்டுமே கிடைக்கும் ) ஆனால் இதே வசதியை content locking system என்று சொல்லப்படும் தளங்கள் 600 முதல் 800 டாலர் வரை அளிக்கின்றன (1000 டவுன்லோடிற்கு) .உதாரணமாக பாடல்கள் மற்றும் மென்பொருட்கள் , தகவல்கள் அடங்கிய கோப்பை பகிர்வோர் இந்த இணையத்தை உபயோக்கிகலாம் .
இப்படி நமக்கு பணம் தருவதால் இவர்களுக்கு என்ன நன்மை?
இணையத்தைப் பொறுத்தவரை தமக்கு நன்மை இன்றி ஒருவரும் நமக்கு பணம் தரப் போவதில்லை . இவர்கள் தளத்தில் ஒருவர் ஏதேனும் கோப்பை டவுன்லோட் செய்ய வேண்டுமெனில் நாம் அதற்கு சர்வே போன்று ஏதேனும் செய்ய வேண்டும் ( நீங்கள் அல்ல கோப்பை யார் டவுன்லோட் செய்கிறார்களோ அவர்கள் ). அந்த சர்வேயை அவர்கள் முடித்த பின் தான் குறிப்பிட்ட கோப்பை டவுன்லோட் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் டவுன்லோட் செய்த பின் உங்கள் கணக்கில் ௦.60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து இருக்கும் . இவை அனைத்தையும் வழங்கும் இந்தத் தளத்தின் பெயர் ஷேர்காஷ் (sharecash )
சரி இதனை இப்போது எவ்வாறு உபயோகிப்பது என்று பார்ப்போம் .
முதலில் இங்கே சென்று பதிவு செய்து கொள்ளுங்கள் . (www.sharecash.org)
நீங்கள் பகிர விரும்பும் கோப்பை பதிவேற்றவும் ( upload )
கோப்பை பதிவேற்றிய பின் upload manager மூலம் உங்கள் கோப்பின் தரவிறக்கச் சுட்டியைப் பெறவும் (டவுன்லோட் லிங்க்)
அவ்வளவு தான் இப்போது இந்த தரவிறக்கச் சுட்டியை உங்கள் வலைத்தளத்தில் பகிருங்கள் ( உதாரணமாக தூய தமிழில் குழைந்தைகள் பெயர் என்ற கோப்பை நீங்கள் ஷேர்காஷ் மூலமாக பதிவேற்றி
உங்கள் வலைத்தளத்தில் இணைத்துள்ளீர்கள் ) உங்கள் வலைத்தளத்திற்கு வரும் வாசகர்கள் தரவிறக்கச் சுட்டியை சொடுக்கி கோப்பை தரவிறக்கம் செய்யும் போது கீழே உள்ளது போன்று தோன்றும் .
ஆம் அவர்கள் இதில் ஏதேனும் ஒரு சர்வேயை முடித்தால் மட்டுமே ( 2 நிமிடத்திற்கு மேல் ஆகாது ) இந்தக் கோப்பை தரவிறக்கம் செய்ய முடியும் . அவ்வாறு அவர்கள் தரவிறக்கம் செய்யும் போது உங்கள் கணக்கில் .60 முதல் 2 டாலர் வரை சேர்ந்து விடும் , ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் பணத்தை பேபால் , அல்லது மணிபுக்கர் மூலம் பெற்றுக் கொள்ளல்லாம்
இது மிக மிக நம்பகத்தன்மையான தளம் , நீங்கள் சரியாக உபயோகித்தால் நிச்சயம் சம்பாதிக்க முடியும் .
தளத்தில் இணைய இங்கே செல்லவும் . (www.sharecash.org)
Subscribe to:
Posts (Atom)