Tuesday, March 14, 2017

என்ன பண்ணாலும் உங்க தலையில இருக்க பொடுகு போகமாட்டீங்குதா?


இங்கு ஆண்களின் தலையில் இருக்கும் பொடுகைப் போக்க சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.



பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் பொடுகு. இந்த பொடுகை ஆரம்பத்திலேயே கவனித்து போக்க முயற்சிக்காவிட்டால், பின் அதுவே தலைமுடியை அதிகம் உதிரச் செய்து, தலைமுடியை மெலியச் செய்யும்.

Simple Ways To Get Rid Of Dandruff In Men
பல ஆண்கள் தங்களுக்கு இருக்கும் பொடுகைப் போக்க எத்தனையோ ஷாம்புக்களை மாற்றியிருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரிந்திருக்காது. ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில சிகிச்சைகளைப் பின்பற்றினால், பொடுகுத் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இஞ்சி

இஞ்சி

இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி காட்டன் பயன்படுத்தி தடவி, 1 மணிநேரம் கழித்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை என 2 வாரம் தொடர்ந்து பின்பற்றினால், பொடுகு முற்றிலும் போய்விடும்.

கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு

கற்றாழை ஜெல்லுடன், பாதி எலுமிச்சையைப் பிழிந்து சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பொடுகு விரைவில் நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி அலசிய பின், ஆப்பிள் சீடர் கலவையால் தலைமுடியை அலசி, 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், சீக்கிரம் பொடுகு போய்விடும்.

புதினா மற்றும் வேப்பிலை

20 வேப்பிலையுடன், 10 புதினா இலைகளை எடுத்து, 4 கப் நீரில் போட்டு, பாதியாக நீர் குறையும் வரை கொதிக்க வைத்து இறக்கி, அந்த இலைகளை அரைத்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து, நீரில் அலச வேண்டும்.

பேக்கிங் சோடா

2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 3-5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு 1 முறை மட்டும் தான் செய்ய வேண்டும்.

பூண்டு

5-6 பூண்டு பற்களை எடுத்து அரைத்து சாறு எடுத்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15-20 நிமிடம் கழித்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

புளித்த தயிர்

3-4 ஸ்பூன் புளித்த தயிரை ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, நன்கு 30-60 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை பின்பற்றினால், பொடுகு வேகமாய் போய்விடும்.

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா?

வழுக்கை மற்றும் முடி உதிர்வால் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். இப்பிரச்சனைகளுக்கு மூலிகை எண்ணெய் என்ற பெயரில் பல எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. இருப்பினும் அந்த எண்ணெய்களில் முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு நிச்சயம் சில கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்கும். கெமிக்கல்களின் உதவியுடன் கிடைக்கும் எந்த ஒரு நிவாரணமும் நிரந்தர பலனை அளிக்காது. ஆகவே நமக்குள்ள தலைமுடி பிரச்சனைகளுக்கு நம் முன்னோர்கள் மேற்கொண்ட இயற்கை மூலிகை எண்ணெய்கள் நல்ல தீர்வைத் தரும். இங்கு வழுக்கை மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கான ஓர் அற்புதமான மூலிகை எண்ணெயின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: 
விளக்கெண்ணெய் - 50 மிலி 
தேங்காய் எண்ணெய்- 20 மிலி 
ரோஸ்மேரி எண்ணெய் - 10 மிலி 
லாவெண்டர் எண்ணெய் - 5 மிலி 

செய்முறை: 
முதலில் ஒரு சிறு டப்பாவில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் எண்ணெய்களை சேர்த்து டப்பாவை மூடி நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். இப்போது எண்ணெய் தயார்.

பயன்படுத்தும் முறை: 
இந்த எண்ணெய் கலவையை தினமும் 2-3 முறை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், 2 வாரங்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். மூலிகை எண்ணெயின் சிறப்பு இந்த மூலிகை எண்ணெய் மயிர்கால்களின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர ஊக்குவிக்கும். இதனால் தலைமுடியின் அடர்த்தியும் அதிகரிக்கும். குறிப்பு இந்த எண்ணெயை தலைக்கு தடவுவதால் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் தலைக்கு குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள இயற்கை எண்ணெய் முற்றிலும் வெளியேறி, ஸ்கால்ப்பின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். மேலும் இந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து!

இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.


உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும். இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும். 

இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்
.
தேவையான பொருட்கள்: 
விதை இல்லாத பேரிச்சம் பழம் - 3-4 
இஞ்சி சாறு- 2 டீஸ்பூன் 

பேரிச்சம் பழம் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும். இஞ்சி இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும். 

செய்முறை: 
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். 

உட்கொள்ளும் முறை: 
தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்துவிடும்.
(குறிப்பு இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், அதிகப்படியான கொஸ்ட்ரால் குறையும். முக்கியமாக இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.)

ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்ஆப் வசதி. .! !

அலுவலக எண், தனிப்பட்ட உபயோகம் என இன்று ஒருவரே பல எண்களை வைத்துக் கொண்டிருப்பது சாதாரணமான சங்கதி. இதனால் இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களை பயன்படுத்துவோரும் இன்று அதிகம்.


ஆனால், இந்த போன்களில் இருக்கும் பிரச்சினை, இருக்கும் இரண்டு எண்களில் ஒரு எண்ணிலிருந்து மட்டும்தான் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும். மற்றொரு எண்ணைக் கொண்டு, அதே மொபைலில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது. இதனால், வாட்ஸ்ஆப் பயன்பாட்டுக்காக மட்டும் வேறொரு புது மொபைலை நாடும் நிலை உள்ளது.


ஆனால் தற்போது, ஒரு மொபைலில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


நீங்கள் டூயல் சிம் மொபைல் பயன்படுத்துபவர் என்றால், திசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் மொபைலில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


இதற்கான வழிமுறைகள் மிக எளியவை. திசா செயலியை https://goo.gl/bW2ELo என்ற இணைப்பின் மூலம் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.


அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, உங்கள் மற்றொரு எண்ணை (அதாவது வாட்ஸ்ஆப் பயன்படுத்தாத எண்) '+91' என குறியீட்டோடு தரவும். (உதாரணம்+91 98765*****) அடுத்து வெரிஃபை செய்வதற்கான கட்டம் வரும். இதைத் தாண்டினால் ஒரே நேரத்தில் இரண்டு எண்களுக்கு தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்த உங்கள் மொபைல் தயாராகிவிடும். நீங்கள் ஏற்கெனவே வைத்துள்ள வாட்ஸ்ஆப் இல்லாமல், திசா செயலிக்குள் இன்னொரு வாட்ஸ்ஆப் பக்கம் உருவாகிவிடும்.


ஆனால் தற்போது திசா செயலியில் உள்ள வாட்ஸ்ஆப் மூலம் செய்திகளை அனுப்ப மட்டுமே முடியும். வாட்ஸ்ஆப் கால்கள் (Whatsapp call) செய்ய முடியாது. அதே போல ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் மட்டுமே தற்போது இந்த செயலி வேலை செய்யும்.

3 பச்சை எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுவது எப்படி?

இங்கு எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றுவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அதனால் அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படுவதோடு, உறவுகளுக்குள் பிரச்சனைகள் மற்றும் பணப்பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். 

இப்போது இந்த கட்டுரையில் எலுமிச்சையைக் கொண்டு வீட்டிலிருக்கும் கெட்ட சக்தியை எப்படி வெளியேற்றுவது என்று பார்க்கப் போகிறோம். 

பொதுவாக எலுமிச்சை பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. அது உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றில் மட்டுமின்றி, கெட்ட சக்தியை வெளியேற்றவும் உதவும். சரி, இப்போது பச்சை எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றுவது எப்படி என்று காண்போம்.

வழி #1 
இது மிகவும் எளிய வழி. இந்த வழியில் 3 பச்சை எலுமிச்சையை எடுத்துக் கொண்டு, வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை எப்போது மஞ்சளாகவோ அல்லது கருப்பாகவோ மாறுகிறதோ, அப்போது அதை தூக்கி எறிந்துவிட்டு, அப்பகுதியில் மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும். 

வழி #2 
மழை நீரில் எலுமிச்சையின் தோலைப் போட்டு கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும். 

வழி #3 ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சையை வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சையை வைக்கவும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும். 

வழி #4 
வேலை செய்யும் இடம் அல்லது மேஜையில் 3 எலுமிச்சையை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. 

வழி #5 
ஒரு கண்ணாடி பௌலில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும். 

வழி #6 
வெளியே செல்லும் போது 1 பச்சை அல்லது மஞ்சள் நிற எலுமிச்சையை பாக்கெட் அல்லது பையில் வைத்துக் கொண்டு சென்று, வீடு திரும்பியதும், இரவில் அந்த எலுமிச்சையை வெளியே எடுத்துப் பாருங்கள். அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி வந்த எதிர்மறை ஆற்றலை எலுமிச்சை ஈர்த்துள்ளது என்று அர்த்தம். 

வழி #7 
வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்குங்கள். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்துவிடுங்கள். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம் ?


எந்த ஊரில் என்ன வாங்கலாம் ?

வாங்கலாம்… வாங்க!
ஊருக்கு ஊர் மால் கல்ச்சர் பரவி வரும் இக்காலகட்டத்தில், எல்லா ஊரிலும் எல்லா வகையான பொருட் களும் கிடைக்கும் என்றாலும், ஒவ்வொரு பொருளும் தரம் குறையாமல் தயாராகி விற்பனைக்கு வருவது சில குறிப்பிட்ட ஊர்களில்தான். அப்படிப்பட்ட சில ஊர்களும் அதற்குரிய சிறப்புப் பொருட்களும்…

குமாரபாளையம் லுங்கி
இடம்: குமாரபாளையம் (நாமக்கல்)
பொருள்: லுங்கி.

சிறப்பு: கேரளத்து சேட்டன்கள் முதல் இந்தியா முழுவதும் விரும்பி அணிவது இங்கு தயாராகும், லுங்கி எனப்படும் கைலிகள்தான்.
விலை: 120 ரூபாய்.


நெய்க்காரப்பட்டி வெல்லம்
இடம்: நெய்க்காரப்பட்டி (திண்டுக்கல்)
பொருள்: வெல்லம்.

சிறப்பு: தமிழகம் முழுக்க அச்சுவெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் இங்கிருந்து அனுப்பப் படுகிறது. நல்ல வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட வெல்லம் முதல் தரமானது.
விலை: தரத்தையும் நிறத்தையும் பொறுத்து ஒரு கிலோ ரூபாய் 25-ல் இருந்து தொடங்குகிறது.

கும்பகோணம் வெற்றிலை
இடம்: கும்பகோணம் (தஞ்சாவூர்)
பொருள்: வெற்றிலை.

சிறப்பு: கறுப்பு நிறத்தில் அதிக காரமாக இருக்கும் கம்மாறு வெற்றிலை, கற்பூர வாசனை மிகுந்த கற்பூர வெற்றிலை. வெளிர் நிறத்தில் காரம் இல்லாத ஓரளவு சாதாரண வெற்றிலை என பல ரகங்கள் கிடைக்கும்.
விலை: ஒரு கவுளி ரூபாய் 60-ல் இருந்து ஆரம்பம்.

நத்தம் ரெடிமேட் சட்டைகள்
இடம்: நத்தம் சென்ட்ரல் சினிமா வீதி (திண்டுக்கல்)
பொருள்: சட்டை.

சிறப்பு: சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற பாம்பே காட்டன், நெப்சி கதர், மெஜுராகோட்ஸ் என பலவகை சட்டைகள் தயார் செய்வதுதான் நத்தம் சிறப்பு. தமிழ்நாடு முழுக்க இங்கிருந்தே விநியோகம்.
விலை: 65 ரூபாயில் தொடங்கி பையில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப சட்டைகள் கிடைக்கும்.

சீர்காழி பிரம்பு நாற்காலிகள்
இடம்: சீர்காழி (நாகப்பட்டினம்)
பொருள்: பிரம்பு ஊஞ்சல், சோபா போன்றவை.

சிறப்பு: தரமான பிரம்புப் பொருட்களைக் குறைந்த விலையில் மட்டுமில்லாமல், பல டிசைன்களில் வாங்க தமிழகத்திலேயே சிறந்த இடம்.
விலை: ஊஞ்சல், சேர் 2,000 ரூபாய் முதல் 5,000 வரை. சோபாசெட் 18,000 ரூபாய் முதல் 25,000 வரை.

கரூர் வீட்டு உபயோகத் துணி வகைகள்
இடம்: கரூர் (கரூர் பஸ் நிலையத்துக்குப் பின்புறமுள்ள 80 அடி சாலை)
பொருள்: வீட்டு உபயோக துணி வகைகள்

சிறப்பு: திரைச்சீலைகள் மேஜை விரிப்புகள் முதல் ஏப்ரான், கிளவுஸ் என பல ரகங்கள் கிடைக்கும். இவற்றில் உங்கள் விருப்பத்தின் பேரில் எம்ப்ராய்டரியும் செய்து தரப்படுவது கூடுதல் சிறப்பு.
விலை: இங்கு 200 ரூபாய்க்கு விற்கப்படும் திரைச்சீலை மற்ற ஊர்களில் 2,000 ரூபாய்க்கு விற்கப் படுகிறது.

பத்தமடை பாய் 
இடம்: பத்தமடை (திருநெல்வேலி)
பொருள்: பாய்.

சிறப்பு: உலகப் புகழ்பெற்ற பத்தமடை பாயை இந்திய குடியரசுத்தலைவரிலிருந்து விக்டோரியா மகாராணி வரை பலரும் பாராட்டி இருக்கின்றனர். கம்பளிப் படுக்கை, கோரைப் பாய், பிரம்புப் பாய், ஈச்சம் பாய் என்று பல வகை பாய்கள் தயாரிக்கப்படுகின்றன.
விலை: இங்கு 150 ரூபாய்க்கு விற்கப்படும் பாய் வெளியூர்களில் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


திண்டுக்கல் பூட்டு
இடம்: திண்டுக்கல்.
பொருள்: பூட்டு

சிறப்பு: மாங்காய் பூட்டு, கதவுக்கான சதுரப் பூட்டு, அலமாரிப் பூட்டு, இழுப்பான் பூட்டு முதல் கோயில்களுக்காக 20 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட பூட்டுக்களும் இங்கு தான் உருவாக்கப்படுகிறது. 8 அங்குல மணிப்பூட்டுகள் சிறப்பு வாய்ந்தவை… இதில் சாவியைப் போட்டு சுழற்றும்போதெல்லாம் மணிச்சத்தம் வரும்.
விலை: 50 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை.

சென்னிமலை போர்வை
இடம்: சென்னிமலை (ஈரோடு)
பொருள்: போர்வை
.
சிறப்பு: சென்னிமலை போர்வை…15 ஆண்டுகளுக்கு நிறமும் தரமும் நின்று பேசுமாம்.
விலை: 150 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்ப போர்வைகள் கிடைக்கின்றன.

மார்த்தாண்டம் தேன்                                                      இடம்: மார்த்தாண்டம் (கன்னியாகுமரி)
பொருள்: தேன்.

சிறப்பு: இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு, அக்மார்க் தேனை உற்பத்தி செய்து, விவசாய கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலையில் விற்பனையாகிறது.
விலை: அரை கிலோ தேன் 100 – 150 ரூபாய். மற்ற ஊர்களில் இதைவிட 2 அல்லது 3 மடங்கு விலை.

தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!

திருநெல்வேலி - அல்வா

ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா

கோவில்பட்டி - கடலைமிட்டாய்

பண்ருட்டி - பலாப்பழம்

மார்த்தாண்டம் - தேன்

பவானி - ஜமுக்காளம்

உசிலம்பட்டி - ரொட்டி

நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்

பொள்ளாச்சி - தேங்காய்

வேதாரண்யம் - உப்பு

சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா

சாத்தூர் - காராசேவு, மிளகாய்

மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து

மாயவரம் - கருவாடு

திருப்பூர் - பனியன், ஜட்டி

உறையூர் - சுருட்டு,கைத்தறி புடவை

கும்பகோணம் - வெற்றிலை, சீவல்

தர்மபுரி - புளி, தர்பூசணி

ராஜபாளையம் - நாய்

தூத்துக்குடி - உப்பு

ஈரோடு - மஞ்சள், துணி

தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை

நீலகிரி - தைலம்

ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி

கல்லிடைக்குறிச்சி - அப்பளம்

காரைக்குடி - ஓலைக்கூடை

செட்டிநாடு - பலகாரம்

திருபுவனம் - பட்டு

குடியாத்தம் - நுங்கு

கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்

ஆலங்குடி - நிலக்கடலை

கரூர் - கொசுவலை

திருப்பாச்சி - அரிவாள்

காஞ்சிபுரம் - பட்டு, இட்லி

நாகப்பட்டினம் - கோலா மீன்

திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்

பத்தமடை - பாய்

பழனி - பஞ்சாமிர்தம், விபூதி

மணப்பாறை - முறுக்கு, மாடு

உடன்குடி - கருப்பட்டி

கவுந்தாம்பட்டி - வெல்லம்

ஊத்துக்குளி - வெண்ணெய்

கொடைக்கானல் - பேரிக்காய்

குற்றாலம் - நெல்லிக்காய்

செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா

சங்கரன் கோவில் - பிரியாணி

அரியலூர் - கொத்தமல்லி

சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை

கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்

திருச்செந்தூர் - கருப்பட்டி

குளித்தலை - வாழைப்பழம்

ஆம்பூர் - பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்..

ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய்,தக்காளி

ஓசூர் - ரோஜா

நாமக்கல் - முட்டை

பல்லடம் - கோழி

குன்னூர் - கேரட்
.
விருதுநகர் - பரோட்டா

திருச்சி - லால்கடை பூந்தி

வாணியம்பாடி - பிரியாணி , தோல் உற்பத்தி பொருள்கள்..