Thursday, September 8, 2016

பேப்பாலில் எப்படி அக்கவுண்ட் தொடங்குவது? (paypal details for tamil).

பேபால் இணையவங்கி 


மிக மிக நம்பிக்கைக்குரிய, நல்ல பெயர்பெற்ற, மிகச்சிறந்த இணையவங்கி நீங்கள் இணையத்தில் சம்பாதித்த பணத்தை உடனடியாகப் பெற விரும்பினால் பேப்பாலில் ஒரு அக்கவுண்ட் வைத்திருங்கள். தேவையான நேரத்தில் நீங்கள் சம்பாதித்த பணத்தை வேலைவாய்ப்பு தளத்தில் இருந்து உங்கள் பேபால் அக்கவுண்டிற்கு மாற்றினால், அதிலிருந்து உடனடியாக உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு ரூபாயாகவே வந்துவிடும்.

பேப்பாலில் எப்படி அக்கவுண்ட் தொடங்குவது?

1) முதலில் www.paypal.com என்ற முகவரிக்குச் செல்லவும்.
2) Sign up என்ற பட்டனை அழுத்தவும். பின்பு கீழுள்ள படத்தைப் போல ஒரு படிவம் தோன்றும்.
3) அதில் india என தேர்வு செய்து, An account for individuals என்ற தலைப்பின் கீழுள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும்.
4) பின்பு தோன்றுகிற படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
• Email address: உங்கள் ஈமெயில் முகவரி
 Choose a password: பேபால் கணக்கிற்கு உபயோகிக்க விரும்பும் கடவுச்சொல்
• Re-enter password: பேபால் கணக்கிற்கு உபயோகிக்க விரும்பும் கடவுச்சொல்
• First name: உங்கள் பேன்கார்டில் உள்ள முதற்பெயர்
• Middle name: உங்கள் பெயரில் இரண்டாவது சொல் இருந்தால் இதில் தெரிவிக்கவும்.
• Last name: தங்கள் பேன்கார்டில் உள்ள தந்தை / கணவன் பெயர்
• Date of birth: பிறந்த நாள்
• Nationality: இலங்கை
• Address line 1: முகவரி
• Address line 2: முகவரிக்கான முதல் கட்டம் போதாவிட்டால், இக்கட்டத்தை பயன்படுத்தலாம்.
• Town/City: உங்கள் ஊர்
• tate: உங்கள் மாநிலம்
• PIN code: உங்கள் பின் கோடு
• Mobile Number: உங்கள் மொபைல் நம்பர்

எல்லாம் முடிந்த பிறகு, படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்கள் பேபால் கணக்கு ரெடி. அதன் பின்பு, நீங்கள் விரும்பினால் உங்கள் கிரடிட்/டெபிட் கார்டுகளை இணைக்கலாம் என ஒரு செய்தி வரும். அதெல்லாம் தேவையில்லை, அச்செய்தியின் கீழுள்ள Go to My Account என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது உங்கள் பேப்பால் கணக்கு தோன்றும். அதன் இடப்பக்கத்தில் உள்ள “Confirm Identity” என்ற தொடுப்பைச் சொடுக்கவும். அதில் உங்கள் பேன் கார்டு, பேங்க் அக்கவுண்ட் தகவல்களைச் சமர்பிக்கலாம்.