Sunday, June 12, 2016

இந்தியாவிலேயே 100% நட்டமான தொழில்கள் இரண்டே இரண்டுதான்.
1) Shampoo   2) Cinema
ஆனாலும் இத்தொழில்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது?
1) இந்தியாவின் ஒரு ரூபாய் நாணயத்துக்கு இன்னும் மதிப்பிருப்பதாக மக்களை நம்ப வைத்து முட்டாளாக்குவது.
2) செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி என ஊடகங்கள் எத்தனை இருந்தாலும் சினிமா என்னும் ஊடகம் மட்டுமே ஒருநாட்டில் உள்ள அதிப்பெரும்பாண்மையான மக்களை மிகக்குறுகிய காலத்திற்குள் சென்றடைகின்றது. மக்களின் மனநிலையை கட்டுக்குள் வைப்பதும் அதை திசைமாற்றுவதுமான தந்திரத்தை ஆள்வோர்கள் இதைப்பயன்படுத்தியே செய்துவருகிறார்கள்.
தன்னை எதிர்த்து வருகிற 100 பேரை அடித்து வீழ்த்தும் வீரம், மறைந்திருந்து தாக்கும் ஒருவனைக் கண்டறியத் தவறினால் வீணாகிவிடும்.
பேரறிவாளர்களாலோ, விஞ்ஞானிகளாலோ இவ்வுலகம் ஆளப்படவில்லை. தன்னைச்சுற்றியிருக்கும் எவ்விதமான மனிதரையும் கட்டுப்படுத்தி முட்டாளாக்கும் திறமையே இவ்வுலகை ஆள்வதற்கான அடிப்படைத் தகுதியாகும்.
என் எதிரியையே நான் குருவாக ஏற்றிருக்கிறேன். அவனை வீழ்த்த எனக்கே பாடம் எடுக்கும் அவன் ஒரு பல்கலைக்கழகம்.