வளம் குன்றா வேளாண்மைக்கான கொள்கைகள் - இந்தியா
இந்திய அரசின் கொள்கைகள் பொதுவாக உணவு தானியங்கள் தன்னிறைவு பெறுவதையே வலியுறுத்தும். ஆனால் வேளாண்மையை நிலைபெறச் செய்ய முக்கியத்துவம் தருவதில்லை. 1970 மற்றும் 1980 களில் வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் வளர்ச்சி முக்கியத்துவம் பெறும் வகையில் வளர்ந்து, 1990களில் குறைய ஆரம்பித்தது. இந்த நிலையை 2000 -ம் ஆண்டில் மிகவம் மோசமடைந்தது. ஒட்டுமொத்த வேளாண் உற்பத்தி மற்றும் உணவு தானிய உற்பத்தி 2000-01 லிருந்து 2002-03 வருட காலங்களில் (இந்திய அரசு, 2002) எதிர்மறை வளர்ச்சியை காண்பித்தது. வேளாண் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் குறைவு என்பது மிக முக்கியமான பிரச்சனையாக மாறியது. அதனால், வளம் குன்றா வேளாண்மை வளர்ச்சிக்கான அணுகுமுறைகள் மிக முக்கியமானது. இந்த ஆய்வு இந்தியாவின் எதிர்கால உணவு தன்னிறைவை பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல் சர்வதேச சந்தைகளின் விளைவுகளை ஏற்றுக் கொள்வதற்கும் தகுந்த மாதிரி வடிவமைக்கப்பட வேண்டும்.
இந்திய வேளாண்மையின் சுற்றுச்சூழல் சவால்கள்
இந்திய வேளாண்மையின் சவால், சுற்றுச்சூழல் பாதிப்பைத் தணித்து, உற்பத்தியை அதிகரித்தலாகும். நிலம், நீர் மற்றும் காற்று போன்ற வேளாண் செயல்திறனை நிர்ணயிக்கும் வளத்தின் தரத்தை பாதுகாப்பதில் அடங்கும். இருப்பினும் பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது மகசூல் குறைப்புகள், ஓரளவு நிலம் மற்றும் நீர் சுரண்டல் விளைவாக இருக்கலாம். மகசூல் குறைவு பல காரணிகளால் தீர்மானிக்கப்படுகிறது, நிலம் மற்றும் நீரின் சுரண்டலினாலும் இருக்கலாம்.
நிலம் தரமிழப்பு இந்திய விவசாயத்தின் ஒரு முக்கிய பின்னடைவு. 1980 களின் ஆரம்பத்தில் தோராயமாக 53 சதவீதம் (173.6 மில்லியன் ஹெக்டேர்கள்) இந்திய புவியியல் பகுதியில் வேளாண் அமைச்சகத்தின் படி தரமிழந்த நிலமாகக் கருதப்பட்டது (GOI, 2001a): நீர் தேங்கி சாகுபடி பரப்பு சுமார் 6 சதவிகிதம் பாதிக்கப்படும் போது கார மற்றும் அமில நிலங்கள் இரண்டும் சேர்ந்து சுமார் 3 சதவிகிதம் பாதிக்கப்படும். நில சீரழிவின் முக்கிய செயல்முறையாக மண் அரிப்பு இருக்கிறது (நீர் மற்றும் காற்றின் அரிப்பு காரணமாக) (GOI, 2001a). தேசிய தொலை உணர்வு முகமை (NRSA) தொகுத்த தரவுகள் இந்தியாவின் மொத்த நிலப்பரப்பில் 15 சதவீதம் (2000 NRSA) தரமிழந்த சாகுபடி செய்யக்கூடிய பாலைவன நிலத்தைக் கொண்டதாகும் என்று சுட்டிக்காட்டியது. இந்த நிலத்தில் மூன்றில் ஒரு பங்கு, மனித நடவடிக்கைகள் மூலம் தரமிழக்கப்பட்டது, கிட்டத்தட்ட அரைப்பங்கு மனித நடவடிக்கைகள் மற்றும் இயற்கை காரணங்களால் (2000 NRSA) தரமிழக்கப்பட்டது. சாதா ஈ.டி.ஏ.எல்.(2004), 1980 மற்றும் 1990 களில் நிலம் தரமிழத்தல் மற்றும் உணவு தானிய உற்பத்திக்கிடையே ஒரு எதிர்மறை மற்றும் குறிப்பிடத்தக்க எதிர்மறை உறவு காணப்படுவதைக் கண்டுபிடித்தது.
இந்திய விவசாயத்தில் நீர் மற்றொரு முக்கிய காரணியாகும். விவசாயம், பாசனம் மூலம், (2003 வியாஸ்) 1990 ஆம் ஆண்டு நாட்டின் மொத்த நீரின் பயன்பாடு 83 சதவீதம் ஆகும். பசுமைப் புரட்சியின் போது, விவசாயத்தில் தண்ணீர் உபயோகம் கடுமையாக உயர்ந்தது, 1970-71 மற்றும் 2000-01 இடையே 31.1 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 54.68 மில்லியன் ஹெக்டேராக அதிகரித்த போது ஒரு தடவைக்கு மேல் பாசனம் பெறும் பரப்பு 7.09 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 20.46 மில்லியன் ஹெக்டேராக இதே காலத்தில் அதிகரித்தது. நிலத்தடி நீர், பாசன இந்தியாவின் முக்கிய ஆதாரங்களில் ஒன்று, அது துரிதமாகக் குறைந்து வருகிறது. நிலத்தடி நீரின் இருப்பை விட 85 சதவீதத்திற்கும் அதிகமாக தண்ணீர் எடுப்பது 1984- 85 மற்றும் 1998-99 க்கு இடையே 5700 தொகுதிகளுக்கும் அதிகமான தொகுதிகளில் 253 லிருந்து 428 இருண்ட தாலுக்காக்களாக அதிகரித்துள்ளது. நிலத்தடி நீர் குறையும் பிரச்சினை ஆந்திர பிரதேசம், கர்நாடகம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் போன்ற மானாவாரி மாநிலங்களில் காணப்படுகிறது.
நவீன தொழில்நுட்பம் சார்ந்த விவசாய அமைப்புகள் அறிமுகம், கூடுதலாக அதிகமான தண்ணீரின் பயன்பாட்டை ஊக்குவித்தல் என்றால் ரசாயன உரங்கள், ரசாயன பூச்சிக்கொல்லிகள் மற்றும் அதிக மகசூல் தரக்கூடிய இரகங்களைப் போன்ற இடுபொருட்களின் பயன்பாடுகள் ஆகும். 1970 மற்றும் 2002 க்கும் இடையில் உரத்தின் பயன்பாடு ஐந்து மடங்கு உயர்ந்து 17360 ஆயிரம் டன்னாக அதிகரித்தது. ரசாயன ஊட்டச்சத்துக்களின் சமச்சீரற்ற விகிதம் இந்திய உர பயன்பாட்டில் ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. பூச்சிக்கொல்லியின் பயன்பாடு 1970-71 ல் 24.32 மில்லியன் டன்னிலிருந்து 1999-00 ல் 46.2 மில்லியன் டன் வரை அதிகரித்துள்ளதுடன் 1988-89ன் போது 75.42 மில்லியன் டன் என்ற உச்ச பயன்பாடாக இருந்தது. (சி.எஸ்.இ. 1999). அதிக மகசூல் விதை வகைகள் ஒரு பயிர்சாகுபடிக்கும் விவசாயிகளின் ஒரே நேரத்தில் பல பயிரிடும் நெகிழ்வுத் தன்மையும் விவசாய பல்லுயிர் வகைகளும் குறைய வழிவகுக்கிறது.
இந்திய அரசாங்கம் மேலாண்மை மற்றும் முதல் ஐந்து வருடத் திட்டத்திலிருந்து விவசாய அபிவிருத்தி வளங்களைப் பாதுகாத்தலின் அவசியத்தை உணர்ந்தது என்றாலும், ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளே போதுமானதாக இருந்திருக்கும். உதாரணமாக, அரசாங்கத்தின் முயற்சிகளால் மட்டுமே தரமிழந்த மொத்தப் பரப்பில் 17.28 சதவீதம் மறு உற்பத்தி செய்ய முடிந்தது. (173.6 மில்லியன் ஹெக்டேர்; ஜி.ஓ.ஐ.2001ஏ). இந்தியாவின் தேசிய விவசாய கொள்கை (என்.ஏ.பி.) (2000 ஜி.ஓ.ஐ.) மேலாண்மை மற்றும் வளங்களைப் பாதுகாத்தலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி கொள்கையை நாட்டின் இயற்கை, பொருளாதார ரீதியாகவும், தொழில்நுட்ப ரீதியாகவும் தரமுள்ள சூழல் மற்றும் நாட்டின் இயற்கை வளங்களில் சமூகத்தில் ஒத்துக் கொள்ளப்பட்ட பயன்பாடுகளான நிலம், நீர் மற்றும் மரபணு மானியம் நிலையான வேளாண்மை மேம்பாட்டிற்காக உயர்த்துகிறது.
மத்திய மற்றும் மாநில அரசுகள் விவசாயத்தை ஊக்குவிக்க பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. என்.ஏ.பி. நிலம் மற்றும் மண்ணின் தரத்தை மேம்படுத்தல், நீரின் பயன்பாடு மற்றும் தரத்தை மேம்படுத்தல் மற்றும் விவசாய சமூகத்தின் உணர்வு (ஜி.ஓ.ஐ. 2000) உயர் முன்னுரிமை பெறும் என்று கூறியது.
பத்தாம் ஐந்தாண்டு திட்டம் (2002 ஜி.ஓ.ஐ.), 2002 முதல் 2007 வரை, மழைநீர் சேகரிப்பு, நிலத்தடி நீர் மறு உற்பத்தி நடவடிக்கைகள் மற்றும் நிலத்தடி நீர் சுரண்டலைக் கட்டுப்படுத்தல், நீர்பிடிப்பு பகுதி மேம்பாடு, நீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் மேலாண்மை மூலம் இயற்கை வள மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தலாகும். உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற விவசாய இடுபொருட்களான பயன்பாடு குறித்து திட்டம் சொல்வது என்னவென்றால் சரிவிகிதமற்ற தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்து இடுவதால் நுண்ணூட்டச் சத்துக் குறைபாட்டை அதிகரிக்கும் மற்றும் மண்ணின் அங்கக கார்பனைக் குறைக்கும், முழுமையான விவசாய சூழல் அணுகுமுறை ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மற்றும் பூச்சி மேலாண்மையை வலியுறுத்துகிறது.
மேலும், பத்தாவது ஐந்தாண்டு ஆவணம் விவசாயத்தில் வளங்களின் நிலையான பயன்பாடு மற்றும் மேலாண்மையில் ஒரு 'வாய்ப்புள்ள பகுதியாக' அங்கக வேளாண்மை அங்கீகரிக்கப்படுகிறது.
இந்திய வேளாண்மையின் சோதனை, எதிர்கால வேளாண் வளர்ச்சி மற்றும் உற்பத்தியையும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளும் இல்லாமல் இரண்டையும் ஒரே நேரத்தில் நிலையானதாக எடுத்துச்செல்வதாகும். சுற்றுச் சூழல் சவால், குறிப்பாக நிலம் தரமிழப்பு, நிலத்தடி நீர் சுரண்டல், நீர் தேங்குதல், வேதி வேளாண் இடுபொருட்களின் அதிகமான பயன்பாடு எதிர்கால வேளாண்மையின் முன்னால் உள்ள பிரச்சினைகள். இப்பிரச்சினைகளை வெளிக்கொணர,அங்கக வேளாண்மை உள்பட நிலையான வேளாண்மையை மேம்படுத்த வலியுறுத்தும் கொள்கைகளை வகுக்க வேண்டும். இப்பிரச்சினைகளை வெளிக்கொணர, வெவ்வேறு விதமான அணுகுமுறைகள் மற்றும் கொள்கைக் குறிப்புகள் தேவைப்படுகிறது. வேளாண் இடுபொருட்களை வளங்குன்றாமல் வைத்திருப்பதில் அங்கக வேளாண்மை கடினமான பணியாகும், இது நிறைய கொள்கை நடவடிக்கைகளுடன் சந்தை முன்னேற்றத்திற்கு தேவையான தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை மாற்றுவதற்கு பல பிரச்சினைகளில் சம்பந்தப்படுகிறது. இந்திய வேளாண்மையின் ஒரு பகுதியாக இருக்கும் சிறு குறு விவசாயிகளை ஒன்றிணைப்பதாகும். ஆனாலும், சிறு குறு விவசாயிகள் அங்கக வேளாண்மை செய்பவர்கள் என கருதப்படுகிறார்கள், கடுமையான வளச் சிக்கலினால்
அங்கக வேளாண்மையை ஒருபடி முன்னே எடுத்துச் செல்லலாம்.
வளம் குன்றா வேளாண்மையை அளவிடும் காரணிகள் |
வளங்குன்றா வேளாண்மையின் சுட்டிக்காட்டிகள்
வளங்குன்றா வேளாண்மையை நேரடியாக அளவிட முடியாது; அது நீண்ட கால அளவில் செயல்பட்டாலும் மிகவும் மழுப்பலான ஒரு கருத்தாக உள்ளது. நம்முடைய அமைப்பை எவ்வாறு வளங்குன்றாத அளவில் வைக்கலாம் என்பதை ஆலோசிக்கும் போது அளவிடும் நிகழ்வுகளை அடையாளங் காணும் போது சிறந்த ஒன்றாக செய்ய முடியும். இவைகளை சுட்டிக்காட்டிகள் என அழைக்கிறோம். மனித முயற்சிகள் பலவற்றில் உதவுவதற்கு சுட்டிக்காட்டிகள் பரவலாக வரையறைகளாகப் பயன்படுத்தப்படுகிறது. உதாரணத்திற்கு நுகர்வோர் விலைக்குறியீட்டு எண் உள்நாட்டு உற்பத்தியில் சுட்டிக்காட்டிகளாக இருந்தாலும் கச்சாதான் பொருளாதார செயல்திறனில் கச்சாதான் சுட்டிக்காட்டியாக இருக்கிறது. வளங்குன்றா வேளாண்மைக்கான சில வேலைகள் ஆஸ்திரேலியாவில் சுட்டிக்காட்டிகளின் முன்னேற்றத்திற்கு முதலிலேயே செய்து முடிக்கப்பட்டிருக்கிறது. 1992 ல் வேளாண்மை மற்றும் வள மேலாண்மையின் நிலைக்குழு, ஒரு வல்லுநர் குழுவை அமைத்து சுட்டிக்காட்டிகளை மேம்படுத்தி அவை மண்டல மற்றும் மாநில அளவிலான நிர்வாகத்தினரால் பயன்படுத்தப்படுகிறது. வளங்குன்றா வேளாண்மையின் சுட்டிக்காட்டிகள் தேசிய கூட்டுத்திட்டத்தை நிறுவுதலுக்கு வழிவகுக்கிறது, இது வளங்குன்றா ஆஸ்திரேலிய வேளாண்மையின் தரமதிப்பீட்டைத் தயார் செய்வதற்கான நோக்கமாகும்.
கொடுக்கப்பட்ட சுட்டிக்காட்டியின் பயன்பாடுகளைத் தீர்மானிக்க நிறைய காரணிகள் பயன்படுத்தப்படுகிறது.
- இது அளவிடக்கூடியதா?
- இது பயன்படுத்துவதற்குத் தொடர்புடையதா அல்லது எளிதானதா?
- குறிப்பிடப்படும் படத்தைத் தருமா?
- இது பிரிக்க எளிதானதா? மற்றும் அதிக நேரத்திற்கு வழக்கங்களைக் காண்பிக்குமா?
- மாற்றங்களுக்குப் பொறுப்பானதா?
- ஒப்பிடுவதற்குக் குறிப்புகளைக் கொண்டிருக்கிறதா?
- பயன்பாட்டாளர்கள் அதன் முக்கியத்துவத்தைப்பெற முடிகிறதா?
மண்டல /தேசிய சுட்டிக்காட்டிகள் 4 முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்படுகிறது.
- லாபம்
- நிலையான உற்பத்திக்கு நிலம் மற்றும் தண்ணீரின் தரம்
- நிர்வாகத்திறன் மற்றும் சூழ்நிலையின் தாக்கம்
சுட்டிக்காட்டிகளை விவசாயிகளுக்கு சம்பந்தமுடையதாக செய்ய முடியுமா?
சுட்டிக்காட்டிகளைப் பற்றி விவசாயிகளுடன் கலந்துரையாடும் முறை அவர்களையே வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு தகவலாக உள்ளது. நடைமுறைக்கு சுட்டிக்காட்டிகளைக் கொண்டு வருவதற்காக அவர்களுடைய வசதிகளையும் தேவைகளையும் விளக்குவதன் மூலம் அந்த தீர்மானித்தல் இல்லாததால், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், விவசாயிகள் விருப்பமில்லாமல் இருக்கிறார்கள் என்பதைக் கண்டுபிடித்தார்கள். எனவே, நிலையான சுட்டிக்காட்டிகளுக்கு விவசாயிகள் ஏன் கவனத்தில் கொள்வதில்லை.
- சுட்டிக்காட்டிகள் ஆரம்ப நிலையிலேயே மாற்றங்களை அறிவிக்க மற்றும் ஆலோசனை தேவைப்பட்டாலும் அதில் தோன்றுகிறது.
- லாபகர சுட்டிக்காட்டிகள் வலிமையையும் பலவீனத்தையும்மற்றும் வழக்கங்களையும் தெளிவாகக் காண்பிக்கிறது.
- நில மற்றும் நீர் சுட்டிக்காட்டிகள் இயற்கை வளப் பிரச்சினைகளைத் தெளிவாகக் காண்பிக்கிறது. இந்த இயற்கை வளம் உறங்குவான் மற்றும் கண்ணுக்குத் தெரியாதவரை கண்டுபடிக்க முடியாது.
- திறமைகளை நேர்மையாக வெளிப்படுத்துவதற்கு மற்றும் தொழில் முன்னேற்றத்திற்குத் திட்டமிடுதலுக்கு நிர்வாகத்திறமைகளான சுய தணிக்கையினால் தனி வியாபார பங்குதாரர்களை உடனமர்த்திக்கொள்ள முடியும்
- கண்ணுக்குத் தெரியாத தாக்கத்தைக் கவனித்தல் தனி வியாபாரத்தை உறுதிப்படுத்தல், தரத்தை நிலைநிறுத்தல் மற்றும் பெரிய அளவிலான சமூகத்துக்கு பிரச்சினைகளில் பங்கு கொள்வதில்லை.
வளம்குன்றா வேளாண்மையின் ஆராய்ச்சி & கல்வி திட்டம் |
நிலையான வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டம் (SARE) SARE என்பது வளம் குன்றா வேளாண்மை செய்முறைகளை ஆய்வு செய்வது மற்றும் வெளியீடுவதற்கான அமெரிக்கா வேளாண் துறையாகும். இந்த திட்டத்தில், 3000-க்கும் மேற்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
முதலில், இந்த திட்டம் குறைந்த இடுபொருள் இடும் வளம் குன்றா வேளாண்மை திட்டமாக இருந்தது. பின் 1985-ம் ஆண்டு வேளாண்மையில் வேதிப்பொருட்களின் பயன்பாட்டை குறைப்பதற்கான அறிவியல் சார்ந்த செய்திகள் விவசாயிகளுக்கு தரும் வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தில் காங்கிரஸில் SARE என்று தொடங்கப்பட்டது. LISA திட்டம் 1998-ல் 3.9 மில்லரியன் டாலருடன் தொடங்கப்பட்டது. உணவு, வேளாண்மை, பாதுகாத்தல் மற்றும் வர்த்தக சட்டம் 1990 என்படி LISA, என்பது நிலையான வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித் திட்டமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனுடன் இரண்டு திட்டங்கள் சேர்க்கப்பட்டன. ஒன்று, ஒருங்கிணைந்த பயிர், கால்நடை செயல்பாட்டிற்கான ஆய்வுகளுக்கும், மற்றொன்று, விரிவாக்க சேவை நிறுவனங்களுக்கு பயிற்சி கொடுப்பதும் ஆகும். 1991-ல் SARE திட்டம் சுற்றுப்புற பாதுகாப்பு நிறுவனத்துடன் இணைந்து, சுற்றுப்புறச் சூழலுடன் இணைந்த வேளாண்மையை நிர்வகிக்க ஆரம்பிக்கப்பட்டது.
அடிக்கடி கேட்கும் கேள்விகள்
வளங்குன்றா வேளாண்மை என்றால் என்ன?
வளங்குன்றா வேளாண்மை தற்போதைய உற்பத்திக்குக் குறைவில்லாமல் அதிக உணவு, தீவனம், அல்லது ஆற்றல் பயிர் விளைச்சலை வழங்க முடியும். பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களுக்கு மாற்றாக விவசாயிகள் ஒரு நிலையான அணுகுமுறையை எடுக்கிறார்கள். பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவர்கள் பயிர் சுழற்சி மற்றும் விவசாய அமைப்பின் மற்ற மாற்றங்களை பயன்படுத்துகிறார்கள். உதாரணமாக, மண் செறிவூட்டல், ஆரோக்கியமான தாவரங்களை உருவாக்கிவிடும், அது நோய் எதிர்ப்புத் தன்மையைப் பெறும். கவர் பயிர்கள் அரிப்பைத் தடுத்தல் மற்றும் களைகளைக் கட்டுப்படுத்தல் மற்றும் இயற்கை விலங்குகள் பூச்சிகளைக் கட்டுப்படுத்த உதவி செய்கிறது. இதன் விளைவாக விவசாயிகள் பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் பயன்பாட்டைக் குறைத்தல் மூலம் பண சேமிப்பு மற்றும் சூழலை பாதுகாக்கிறது.
- வளங்குன்றா வேளாண்மையின் பொருள் விளக்கம் என்ன?
சூழலைப் பாதுகாக்கும் போது தற்போதைய பண்ணை வளங்களை அதிகப்படுத்தல் மற்றும் மறுசுழற்சி மூலம் லாபத்தை உறுதிப்படுத்தலுக்கு வளங்குன்றா வேளாண்மை முயற்சிக்கின்றது. உள்ளூர் சமூகத்துடன் ஒரு பரஸ்பர நன்மை பயக்கும் உறவு மூலம் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கு, வளங்குன்றா உத்திகள் விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறது.
- அங்கக வேளாண்மை வளங்குன்றா வேளாண்மையின் மற்றொரு பெயரா?
இல்லை. இல்லை அது ஒரு தவறான கருத்தாகும். அது உண்மை என்றாலும் வளங்குன்றா வேளாண்மையின் குடையின் கீழ் வரும். அது வளங்குன்றா வேளாண்மையைப் பின்பற்றாமல், எப்பொழுதும் அங்கக வேளாண்மையைப் பின்பற்றுகிறது.
- எப்படி அங்கக வேளாண்மை வளங்குன்றா வேளாண்மையிலிருந்து வேறுபடுகிறது?
கரிம விவசாயம், எந்தெந்த செயற்கை கூட்டு ரசாயன பூச்சிக்கொல்லிகளைப் பயிர்கள் மீது பயன்படுத்த முடியும் என கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது. கனிம உரங்கள் அல்லது கூடுதல் பயன்பாடு அனுமதிக்க முடியாது மண் அல்லது நுண்ணுயிர் கொல்லிகள் பயன்படுத்தப்பட வேண்டும் விலங்கு உற்பத்தி செய்ய வேண்டும். மண்ணில் கனிம உரங்கள் அல்லது அதன் கூடுதல் பயன்பாட்டை அனுமதிக்க முடியாது, விலங்கு உற்பத்தியில் நுண்ணுயிர்க் கொல்லிகளைப் பயன்படுத்த முடியாது. பயிர்களை இயற்கை வழிப்பயிராக சந்தைப்படுத்துவதற்கு முன்பு பயிர் வயல்கள் மூன்று வருடங்கள் வரை இரசாயன உரங்களைக் கண்டிப்பாகப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். வளங்குன்றா வேளாண்மை முறைக்கு இந்தக் கட்டுப்பாடுகள் தேவையில்லை.
- வளங்குன்றா வேளாண்மையில் யார் பங்கு பெற வேண்டும்?
பண்ணை வளங்களின் மேம்படுத்தப்பட்ட மேலாண்மையின் செலவுகளைக் குறைக்க மற்றும் விவசாய லாபத்தை மேம்படுத்த விருப்பம் உள்ள முயற்சி செய்பவர்கள். எல்லோரும் வளங்குன்றா வேளாண்மையில் பங்களிக்கவும் மற்றும் தங்கள் சொந்த நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு தங்கள் கருத்தை மதிப்பு மிக்கதாக செய்யும் முயற்சிக்கும் வரவேற்கப் படுகிறார்கள். உள்ளூர் சமூகத்துடன் இணைந்து சூழலில் இணக்கமான லாபம் தரும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தார்மீக கடமையைத் தவிர வேறு ஒரு குறிப்பிட்ட நிலையான தேவைகள் இல்லை.
- விவசாய பண்ணை ஒரு நவீன அணுகுமுறையை வளங்குன்றா வேளாண்மையில் பயன்படுத்துமா?
வளங்குன்றா வேளாண்மையின் பொருள் குறைந்த விளைச்சல் அல்லது ஏழை விவசாயிகளுக்கான முறை என்பது அல்ல. இது 19-ம் நூற்றாண்டின் வகைப்படுத்துதல் முறையாகும். மாறாக, வளங்குன்றா வேளாண்மை, தற்போதைய வேளாண் சாதனைகள் எந்த விவசாயத்தை நம்பியிருக்கும் வளங்களின் மதிப்பு குறையாமல் அதிக லாபம் மற்றும் பண்ணை லாபத்தைப் பராமரித்தல் போன்ற சிக்கலான அணுகுமுறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பயிர் சுழற்சி வேலைகள் பூச்சிக் கட்டுப்பாட்டைக் குறைத்தல் செலவுகள் போலவே, உயர் விளைச்சல் ரகங்களின் செலவுகளும் இருக்கிறது, அது போலவே, நேற்றைய குறைந்த விளைச்சல் தரும் இரகங்களின் செலவுகளும் இருக்கிறது. விவசாயத்தை வளங்குன்றாமல் செய்வது என்பது, பயிர்களைத்தின்னும் பூச்சிகளைக் கவனிப்பது என்று பொருளல்ல. அது உயர் தரமான மண், பயிர் சுழற்சி, மற்றும் நன்மை பயக்கும் பூச்சிகளைப் பயன்படுத்தி ஒரு முற்றிலும் மாறுபட்ட வழியில் பூச்சிக் கட்டுப்பாட்டை நெருங்குதலாகும்.
நாம் நமது விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளைக் குறைவாக மதிப்பிட்டால், சிறந்த இன்றைய உற்பத்தியை ஏற்றுக்கொண்டால், மிகவும் மாசுபட்டுள்ள விவசாயத்தைத் தான் நாம் இந்த நாட்டில் செய்ய முடியும். அதிக உற்பத்தியை மேம்படுத்தும் சவாலில், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வளங்களைக் கொடுக்க வேண்டும்.
- வளங்குன்றா வேளாண்மைக்கு பூங்காக்கள் மற்றும் வனப்பகுதிகளுக்கு ஒதுக்கிய நிலம் தேவைப்படுமா?
வளங்குன்றா வேளாண்மை எதிர்ப்பாளர்கள் அது குறைவாக மகசூலை உற்பத்தி செய்வதனால் பூங்கா மற்றும் சரணாலயத்திற்கு ஒதுக்கிய நிலங்களை மீட்டு விவசாயத்தின் அடிப்படை உணவு மற்றும் எரிபொருள் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்த வேண்டும். ஆனால் அப்படி செய்யத் தேவையில்லை. ஆனால் வளங்குன்றா வேளாண்மை குறைவான மகசூலைத் தருவதில்லை. தொழில்துறை விவசாயத்தை விட நீண்ட கால முறைக்கு அதிக திறன் அவசியம் இல்லை, எனவே பயிர்களின் குறைந்த அளவு உற்பத்திக்கு அதே அளவு நிலம் போதுமானது. நிலையான விவசாயத்தை இயற்கை பகுதிகளில் மாற்றத் தேவையில்லை நிலங்களை நமக்கு தேவைப்படும் பூங்காக்கள் மற்றும் பொழுது போக்குக்காக ஒதுக்கியது, நமது விவசாயத்தைப் பாதிக்காது. இந்த நாட்டில் பூங்காக்களின் அத்து மீறல் என்பது வெறுமனே ஒரு கருத்து. பிரச்சனை என்னவென்றால், அச்சுறுத்தல் குறிப்பாக நகரங்களை சுற்றியிருக்கும் வளர்ச்சி, விவசாயத்தில் முன்னிறுத்துகிறது. நகரப்பகுதிகள், விவசாயத்திற்குக் கிடைக்காமல் செய்த பண்ணை நிலங்களை ஏப்பமிடுவது தொடர்கிறது. நகரங்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவும், விவசாய பயன்பாட்டுக்குரிய பண்ணை நிலங்களைப் பாதுகாக்கவும் ஐக்கிய அமெரிக்கா சில கொள்கைகளை வகுத்துள்ளது. இது குறிப்பாக முக்கியமானது, நீண்ட தூர வேளாண் நிலங்களிலிருந்து வரும் உணவுப்பொருட்களை விட, உள்ளூர் வேளாண் நிலங்களிலிருந்து வரும் உணவுப்பயிர்கள் மக்களைச் சென்றடைவது தான் குறிக்கோளாக இருக்கிறது.
- உயிர் எரி சக்திப் பயிர்களை நிலையாக வளரச்செய்ய முடியுமா?
நிலையான வழியில் வளர்ச்சியடைந்தால், உயிர்எரிசக்தியை, மின்சாரம், எரிபொருள் இரண்டிலும் சில இடர்ப்பாடுகளுடன் நிலையாக உற்பத்தி செய்வதை விட எண்ணெய், நிலக்கரி மற்றும் அணுசக்தித் தொழில்நுட்பங்களில் உற்பத்தி செய்வதில் நிறைய இடர்ப்பாடுகள் உள்ளது. உயிர்சக்திப் பயிர்கள் மற்ற சக்தி நிலையங்களிலிருந்து வெளிவிடப்படும் வெப்பத்தை எடுத்துக்கொண்டு உலக காலநிலை மாற்றத்தில் பங்கு கொள்கிறது. ஆனால் உயிர்சக்தி முன்னேற்றத்தினுடைய வேகமான உலக விரிவாக்கம் விரும்பத்தகாத சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார விளைவுகள் உணவு, நார்ப்பயிர்கள், தொழில் மூலப்பொருட்களின் உற்பத்தியின் உலகத்திறனைக் குறைக்க வாய்ப்புள்ளது. யூ.சி.எஸ். வழிகாட்டும் கொள்கைகளின் தொகுப்பை வைத்திருக்கிறது அது நாட்டுக்கு உயிர்சக்தி முன்னேற்றத்தில் ஒரு முறையில் உதவி செய்கிறது; வாய்ப்புகளை அதிகப்படுத்தியும் மற்றும் இந்த புதுப்பிக்கும் வளங்களுடன் இணைந்துள்ள சவால்களைக் கண்டு பிடிக்க உதவுகிறது. 9.வளங்குன்றா வேளாண்மை அறிவியல் பூர்வமானதா? வளங்குன்றா வேளாண்மை உறுதியாக அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. பயிர்கள், பூச்சிகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகளுக்கிடையே பலதரப்பட்ட நெருங்கிய தொடர்பு, விலையுயர்ந்த தொழில்நுட்பத் தேவைகளான பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களின் தேவையைத் தவிர்க்கிறது. இந்த மாதிரியான அறிவு நிறைய அறிவியல் துறைகளில் மேற்கொண்ட ஆராய்ச்சியைப் பொறுத்து இருக்கிறது; அதில் பூச்சியியல், களை அறிவியல், உழவியல் துறைகள் அடங்கியுள்ளது. அறிவியல் விஞ்ஞானிகள் இந்தக்களத்தில் ஒன்றாகப் பணியாற்றும் பொழுது, வேளாண்மை ஒருமுறை எனப் புரிந்து கொள்வார்கள். ஒரு நல்ல உதாரணமாக, மெய்னே உருளைக்கிழங்கு சுற்றுச் சூழலியல் திட்டம் இருக்கிறது, பெரிய அளவிலான, நடந்து கொண்டிருக்கும் பல கட்டுப்பாட்டுக் கல்வி சூழ்நிலையியல் மற்றும் பொருளாதாரவியல் மற்றும் தாவர உயிரியலாளர்கள் பொருளாதார ரீதியான உருளைக்கிழங்கு உற்பத்தியைப் புரிந்து கொள்ள மெய்னே உருளைக்கிழங்கு சுற்றுச்சூழல் முறைத் திட்டத்தில் ஒருங்கிணைந்து பணியாற்றினார்கள். உருளைக்கிழங்கு வளர்ப்பவர்களில், யார் பூச்சிக்கொல்லிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள் அல்லது இரசாயனப் பூச்சிக்கொல்லிகள் அல்லது உரத்தினைப் பயன்படுத்துவதைக் குறைத்தலுக்கு ஆலோசனை தேவைப்படுகிறவர்களுக்கு மதிப்பு மிக்க தகவலைக் கொடுத்தல் வேண்டும். மண், பூச்சிகள் மற்றும் உருளைக்கிழங்கு இவற்றை வைத்து ஆராய்ச்சி செய்தல் ஒரு நீண்ட கால தொகுப்பாகும். பல முக்கிய குறிக்கோள்கள், உதாரணமாக, மண்வளம், தாவரத்தின் வளரும் தன்மை, பூச்சிக் கொல்லிகளின் தன்மைகள் மற்றும் நன்மை செய்யும் பூச்சிகள். களைகள், பூச்சிக்கொல்லிகள் மற்றும் பல்வேறு காலநிலை மற்றும் அழுத்த நிலைகளின் கீழ் உருளைக்கிழங்கு மகசூலினுடைய கலந்துரையாடல்கள் மேல் விரிவான மற்றும் பயனுள்ள தகவலின் பரந்த அளவு மூலம் திட்டம் உருவாகிறது. (ஆல்போர்டு, ஆர்.ஏ. 1996. சூழ்நிலையியல், பொருளாதாரம் மற்றும் உருளைக்கிழங்கின் பயிரிடும் திட்டத்தின் மேலாண்மை: மெய்னே உருளைக்கிழங்கு சுற்றுச்சூழல் முறைத் திட்டத்தின் முதல் நான்கு வருடங்களின் விவரம் மெய்னே வேளாண்மை மற்றும் வன சோதனை நிலையம், மெய்னே பல்கலைக்கழகம், புல்லடின் 843.) வளங்குன்றா வேளாண்மை, வலுவான அறிவியல் ஆதாரத்தைச் சார்ந்திருக்கிறது, இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. தொழில் முறை வேளாண்மை சம்பந்தமான, வெவ்வேறு விதமான கலவையான வேளாண்மை முறையில் அறிவியல் விஞ்ஞானிகள் இன்னும் தெரியாத இணைப்புகளைத் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆனாலும் வேதியியலாளர்கள் பூச்சிக்கொல்லிகளை உருவாக்குகிறார்கள், வளங்குன்றா வேளாண்மைக்கு வளமான மண்களில் உள்ள வெளிக்கொண்டு வராத ஆச்சரியங்களைக் கண்டுபிடிக்க மண் அறிவியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். உயிரியலாளர்கள் பயிர்கள் களைக்கொல்லி களைத் தாங்கி வளரும் தன்மை கொண்டவைகளாக உருவாக்க வேண்டும். வளங்குன்றா வேளாண்மைக்கு அறுவடை செய்யவும், பயிர்களைப் பயன்படுத்தி களைகளைக் கட்டுப்படுத்தவும் புது வழிகளைக் கண்டுபிடிக்கவும் அதிகமாகக் களை சுற்றுச்சூழலியலாளர்கள் தேவைப்படுகிறார்கள். 10.வளங்குன்றா வேளாண்மை வேலை செய்கிறதா? இந்த கேள்விக்கு பதிலளிப்பது நிறைய காரணங்களால் சிக்கலானது. வளங்குன்றா வேளாண்மையின் பொருள் மாறக்கூடியது மற்றும் பல வகையான வழக்கங்களை சுட்டிக்காட்ட முடியும் ஆனால், ரசாயனத்தைப் பயன்படுத்துவதைத் தடுத்தலைச் சார்ந்திருக்கிறது.மேலும்,வளங்குன்றா முறைகள் வளர்ச்சிக்கு நேரம் எடுத்துக்கொள்ளும். மண்ணின் தரத்தையும், முக்கியத்துவத்தையும் நிலை நிறுத்துவதற்கு பாரம்பரிய வேளாண்முறை வருடக்கணக்கில் எடுத்துக்கொள்ளும். பாரம்பரிய வேளாண்மையைப் பயன்படுத்திப் பயிர் வளர்த்தலில் மண்ணிற்கு ரசாயன உரங்களைப் பயன்படுத்தி ஊட்டமளித்தல் மற்றும் அவைகள் தரமற்ற நிலத்தில் வளர்வதை வளங்குன்றா வேளாண்மை தக்க வைக்கும் என்பது தவறான கருத்தாகும். ஒப்பீடு வெவ்வேறு விதமான பருவநிலை மற்றும் காலநிலையில் நீண்ட காலத்திற்கு செய்வதுதான் மதிப்புள்ளதாக இருக்கும். தவிர, ஒப்பீட்டின் முடிவு, வளங்குன்றா அணுகுமுறை அதிக உற்பத்தி மற்றும் பொருளாதார ரீதியாகத் தகுதி உடையது.(Northwest Area Foundation, A better row to hoe: The economic, environmental and social impact of sustainable agriculture, 1994.) ஒப்பீட்டைக் கணக்கில் எடுக்கும் போது, ஒன்றைக்கணக்கில் வைத்துக்கொள்வது முக்கியமானது, மகசூல் குறைவானால், விவசாயிகளின் குறைந்த லாபத்திற்கு வளங்குன்றா வேளாண்மையைக் காரணம் சொல்லக்கூடாது. குறைந்த மகசூல் கிடைத்தால் முடிவு, உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகளுக்குக் குறைந்த செலவு அல்லது சக்தி, உண்மையில் வயலில் லாபம் அதிகரித்துத் தான் கிடைக்கும். வளங்குன்றா முறையின் பண்ணைக்குத் தேவையான வெளிப் பொருட்கள் லாபத்தைக் கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. மேலும், இயற்கைச் சீற்றங்களால் வேளாண்மைக்குத் தாக்கம் ஏற்படுத்துகிறது என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. பாரம்பரிய வேளாண்மையின் எதிர்பார்க்க முடியாத விளைவுகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளும் போது வளங்குன்றா உற்பத்தி முறையில் அதை வலிமையாக்குகிறது.
|
|
|
|
|
|
|