Thursday, April 6, 2017

மண்ணை வளப்படுத்த


இயற்கை வழி விவசாயத்தை கையில் எடுப்போர் , இரசாயணத்திலிருந்து இயற்கை வழி விவசாயத்துக்கு மாறுவோர் முதலில் செய்யவேண்டியது மண்ணை வளப்படுத்துவது ஆகும்.
soil_whattype
மண் எவ்வளவு வளமாக உள்ளதோ அந்த அளவுக்கு நாம் மகசூல் எடுக்கலாம் இயறக்கை ஒத்துழைத்தால். மண்ணை எடுத்து பார்த்தல் புட்டு போல பொலபொலன்னு இருக்கனும் அது தான் வளமிக்க மண் ஆகும். அதை எவ்வாறு செய்வது என்று கீழே பார்ப்போம்.
ஒரு முறை பசுந்தாள் உரப் பயிரிட்டு அது பூக்கும் தருணத்தில் மடக்கி உழுவதை விட சிரமம் பாராது மூன்று முறை பயிரிட்டு மடக்கி உழுதால் உங்கள் மண் வளமிக்கதாக ஆகும். பசுந்தாள் வளர்ச்சியில் ஒவ்வொரு நிலையிலும் எதாவது ஒரு சத்து அபரிமிதமாக இருக்கும்.
1. முதலாவதாக விதைத்து 20வது நாளில் மடக்கி உழுதுவிட வேண்டும்.
2. மீண்டும் விதைத்து அடுத்த முறை 45 வது நாளில் மடக்கி உழுதுவிடவேண்டும்.
3. அடுத்து விதைத்து 90 நாட்கள் வளரவிட்டு மீண்டும் மடக்கி உழுதுவிடவேண்டும்.
இப்படி செய்வதன் மூலம் அனைத்து சத்துகளும் முழுமையாக மண்ணில் சேரும். இதை செய்து முடிக்க 6 மாத காலம் பிடித்தாலும் இப்போது உங்கள் மண்ணில் போதுமான சத்துக்கள் உருவாக்கி இருக்கும்.  அய்யா நம்மாழ்வார் கூறியது.

No comments:

Post a Comment