Tuesday, November 15, 2016

சிறுநீரக கற்கள் மற்றும் பித்த கற்களை ஒரே வாரத்தில் கரைக்கும் அற்புத நாட்டு மருந்து!

  இங்கு பலரும் அவஸ்தைப்படும் சிறுநீரக கற்கள் மற்றும் பித்த கற்களை ஒரே வாரத்தில் கரைக்கும் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.


    தற்போது உட்கார்ந்தே வேலை செய்வதால், சிறுநீரகங்களில் பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. பெரும்பாலான சாப்ட்வேர் கம்பெனிகளில் வேலை செய்வோர் சிறுநீரக பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகின்றனர். சிறுநீரகங்களில் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு முறையற்ற ஊட்டச்சத்து மற்றும் நீரேற்றம் தான்.

  ஒவ்வொருவரும் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக்கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகளை தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இங்கு அவற்றின் அறிகுறிகளும், இந்த கற்களை கரைக்க உதவும் ஓர் அற்புத நாட்டு மருந்து குறித்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

    சிறுநீரக கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் 
சிறுநீரக கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்
* அடி முதுகுப் பகுதியில் வலி 
* இயல்புக்கு மாறான சிறுநீர் 
* சிறுநீரில் இரத்தம் 
* குளிர் காய்ச்சல், குமட்டல், வாந்தி



பித்தக்கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள்
பித்தக்கற்கள் இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் 
* வயிற்றின் வலதுப் பக்கத்தில் கடுமையான வலி 
* குளிர் காய்ச்சல் 
* கடுமையான குமட்டல் மற்றும் வாந்தி 
* மார்பக எலும்பிற்கு கீழே வலி 
* நெஞ்செரிச்சல் 
* செரிமான பிரச்சனை



தேவையான பொருட்கள்: 
விர்ஜின் ஆலிவ் ஆயில் - 0.25 லி 
எலுமிச்சை தோல் - 250 கிராம் 
சர்க்கரை பவுடர் - 250 கிராம் 
தேன் - 250 கிராம் 
நறுக்கிய பார்ஸ்லி வேர் - 250 கிராம்


தயாரிக்கும் முறை:

* முதலில் எலுமிச்சை தோலை பேக்கிங் சோடா கலந்த வெதுவெதுப்பான நீரில் கழுவிக் கொள்ள வேண்டும். 
* பின் அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் பார்ஸ்லி வேர் சேர்த்து நன்கு அரைத்து, ஒரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும். 
* பின்பு அதில் தேன், ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும். 
* இறுதியில் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாத்துப் பயன்படுத்தவும்.


உட்கொள்ளும் முறை: 

   இந்த கலவையை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 1 டேபிள் ஸ்பூனும், இரவில் படுக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூனும் சாப்பிட வேண்டும். இப்படி தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வர, விரைவில் சிறுநீரக கற்கள் மற்றும் பித்தக் கற்கள் கரைவதைக் காணலாம்.