சிறு நீரக செயலிழப்பு என்றால் என்ன?
இடுப்புப் பாகத்தின் கீழ்ப்பகுதியில் இரண்டு சிநீரகங்கள் (Kidney / ies) அமைந்துள்ளன. இவற்றின் பிரதான தொழில் சிறுநீரை உற்பத்தி செய்தல். சரீரத்திலிருந்து அகற்றப்படவேண்டிய நீர், கழிவுப்பபொருட்கள் ஆகியன சிறுநீரில் அடங்கியுள்ளன. கழிவப்பொருட்களை அகற்றுவதுடன் இரத்த அமுக்கம், உப்பு அமிலம், ஈமோகுளோபின் ஆகியவற்றை கட்டுப்படுத்துகின்றன. இரண்டு சிறுநீரகங்களும் தாக்கப்பட்டு 60-70% வரை சிறுநீரகம் வேலை செய்யாது இருந்தால் மட்டுமே ஒரு நோயாளிக்கு சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்று நாம் சொல்லுவோம். 90% க்கு மேல் அவை வேலை செய்யாவிடின் அந்த நோயாளிக்குக் கடுமையான சிறுநீரகச் செயலிழப்பு என்று சொல்லுவோம்.
சிறுநீரகச் செயலிழப்பின் இனங்கள் எவை? விசேஷமானவை இரண்டு வகை.
சடுதியான சிறுநீரகச் செயலிழப்பு – இது குறுகிய காலத்தில் விருத்தி அடையும்: பொதுவாக தொழிற்பாடு திரும்பவும் வரக்கூடியது. ( உ+ம்: பாம்புக்கடியைத் தொடர்ந்து)
நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பு – இது பல மாதங்கள் , வருடங்களாக விருத்தியடையும். ஆனால் தொழிற்பாடு திரும்பி வராது. (உ+ம்:திரும்பத்திரும்ப சிறுநீரக அழர்ச்சி தோன்றுவது.) மேலே கூறப்பட்ட இரண்டு இனங்களை விட, கலப்பான வேறு இனங்களும் உண்டு.
சிறுநீரகச் செயலிழப்பு யாருக்கு வரக்கூடும்?
சிறு பராயம் முதல் முதிர் வயது வரை எவருக்கும் வரக்கூடும். இது ஆண், பெண் இருசாராருக்கும் வரும். ஆனால் முன்பு அடிக்கடி, சிறுநீரக நோய்கள் வந்தவர்களுக்கு வர அதிக வாய்ப்புண்டு.
சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் என்ன?
பிள்ளைகளிலும் பெரியவர்களிலும் இந்தக் காரணம் வேறுபடுகிறது. வளர்ந்தவர்களில், சடுதியான சிறுநீரக செயலிழப்புக்குக் காரணமாய் இருப்பவை பாம்புக்கடி, சிறுநீரக அழர்ச்சி, நஞ்சு, போதைப்பொருள், பாரிய சத்திரசிகிச்சை, கடுமையான தொற்று நோய்கள் என்பன. வளர்ந்தோரில் காணப்படும் நாட்பட்ட சிறுநீரசச் செயலிழப்புக்கு பொதுவான காரணம், நீண்ட கால சிறுநீரக அழர்ச்சி, இரத்த அமுக்கம், புறொஸ்ரேற் நோய், சிறுநீரக்தில் உண்டாகும் கல்லு என்பனவும் பொலிசிஸ்ரிக் (Polycystic) சிறுநீரக நோயும் ஆகும். சிறுநீரகத் தொற்றுக்கள், சில வேளைகளில் தாமாகவே சிறுநீரகச் செயலிழப்பை உண்டாக்குகின்றன. எப்படியாயினும் சிறுநீரகச் செயலிழப்பு உள்ளவா்களில் சிறுநீரகத் தொற்று, சிறுநீரகத் தொழிற்பாட்டை மிக மோசமாக்கி விடும்.
பிள்ளைகளிலே சிறுநிரகத் தொற்று, சிறுநீரக அழர்ச்சி என்பன அதிகமாகக் காணப்படினும் அவர்களுக்கு சிறுநீரகச் செயலிழப்பு வருவது மிகவும் அரிது. அநேகருக்கு நாட்பட்ட சிறுநீரக செயலிழப்புக்குக் காரணம் கண்டுகொள்வது மிகவும் கடினம்.
சிறுநீரக செயல் இழப்பிற்கான இதர காரணங்கள் :
- அதிகமான ரத்த இழப்பு,
- வாந்தி -பேதி போன்றவற்றினால் உடலில் அதிகமான நீர் இழப்பு,
- தேவையான தண்ணீர் குடிக்காதது.
- மருந்துகள் சாப்பிடுவதன் மூலம் உடலிலிருந்து தண்ணீர் அதிக அளவில் வெளியாவது.
- சிறுநீரகங்களுக்குத் தேவையான ரத்த சப்ளை, சரிவர கிடைக்காமல் போவது.
- சிறுநீர்க்குழாய் (ureter), சிறுநீர்ப்பை ஆகியவைகளில் ஏற்படும் அடைப்பு.
- வயிற்றில் உண்டாகும் கட்டி,
- சிறுநீரகத்தையும் யூரிடரையும் (ureter) அமுக்குவதால் ஏற்படும் அடைப்பு ஆகிய காரணங்களினால் சிறுநீரகம் `செயல் இழக்க’ ஆரம்பித்துவிடுகிறது. ஒரு மடக்கு தண்ணீர் கூட குடிக்காமல், அதிக நாட்கள் படுக்கையில் இருப்பவர்களுக்கு, சிறுநீரகம், செயல் இழந்து போகும். அதனால்தான், அதிக நாட்கள் உண்ணாவிரதம் இருப்பவர்களுக்கு, முதலில் கிட்னி ஒழுங்காக வேலை செய்கிறதா, இல்லையா என்று சோதனை செய்து பார்ப்பார்கள்.
- பசி, பட்டினியுடன் கிடந்தும், கிட்னி இன்னும் கெட்டுப் போகவில்லை என்றால், உண்ணாவிரதத்தை இன்னும் கொஞ்ச நாட்களுக்கு நீட்டிக்கலாம். கிட்னி சரியாக வேலை பார்க்கவில்லை என்று தெரிந்தால், உடனே உண்ணாவிரதத்தை முடித்து விடுவதுதான் உடலுக்கு நல்லது.
- பயங்கர விபத்தினால் உடல் பாகங்கள் நசுங்கி, சிதைந்து போகுதல் மற்றும் அதிகமான தீக்காயம் ஏற்படுதல் முதலிய சமயங்களில் உடல் தசைகள் அதிகமாக பாதிக்கப்பட்டு, தசைநார்கள் கூழாகி, சிறுநீரகங்களிலுள்ள பில்டர்களை அடைத்து விடுவதால், சிறுநீரகங்கள் செயல் இழந்து விடுவதும் உண்டு.
- இதேமாதிரி, சில நேரங்களில், சிறுநீரகக் கற்களால் கூட பாதை அடைபட்டுக் கொண்டு, `கிட்னி பெயிலியர் – kidney failure ‘ ஏற்படுவதுண்டு. ஆனால் எந்தப் பக்கம் கற்கள் இருக்கிறதோ, அந்தப் பக்கம் உள்ள சிறுநீரகம் மட்டும்தான் பாதிப்படையும். மற்றொரு பக்கத்தில் இருக்கும் சிறுநீரகத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஒரே ஒரு சிறுநீரகம் உள்ளவர்களுக்கு, இந்த சிறுநீரகக்கற்கள் அடைத்தால், ஆபத்து தான்.
- கட்டுப்பாட்டில் இல்லாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம் இவைகளும் `கிட்னி பெயிலியர்’ ஏற்பட காரணங்களாகும்.சிறுநீரகம் சரியாக வேலை செய்யாவிட்டால், ஒரு நாள் கூட, நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியாது. உடலில், சொல்ல முடியாத, எதிர்பார்க்காத தொந்தரவுகளெல்லாம் வர ஆரம்பித்து விடும்.
- சிறுநீரக பாதிப்பை, மருந்து, மாத்திரைகளால் சரிபண்ண முடியவில்லையென்றால், உடலிலிருந்து வெளியே போகவேண்டிய கழிவுப்பொருட்கள், உடலிலுள்ள ரத்தத்தில் சேர ஆரம்பித்துவிடும். இந்தக் கழிவுப் பொருட்களை எப்படி வெளியே அனுப்புவது? இந்தக் கழிவுப் பொருட்கள் கலந்த ரத்தத்தை எப்படி சுத்தம் பண்ணுவது? இதற்கான அடுத்த நடவடிக்கைதான் `டயலிசிஸ்’ என்பதாகும்.
- ரத்தத்திலுள்ள கழிவுப்பொருட்களையும், விஷப்பொருட்களையும் வெளியே அனுப்பும் வேலையை, சிறுநீரகத்திற்குப் பதிலாக செய்யும் வேலையை `டயலிசிஸ் (dialysis)’ என்றும், இந்த வேலையை செய்யும் கருவியை `டயலைஸர்’ என்றும் கூறுவதுண்டு. `செயற்கை சிறுநீரகம்` என்று சொல்லக்கூடிய 1 அடி நீளமுள்ள ஒரு கருவியும், 5 அடி உயரமுள்ள இன்னொரு கருவியும் சேர்ந்துதான், ரத்தத்தை சுத்தம் செய்யும் வேலையைப் பார்க்கின்றன.

சிறுநீரகச் செயலிழப்பை எப்படி அடையாளம் காண்பது :
- சிறுநீரக செயலிழப்பின் ஆரம்பத்திலே நோயாளியிடத்தில் குறிப்பாகக் கொள்ளக்கூடிய எதுவித அறிகுறிகளும் இராது. சிறுநீரகச் செயலிழப்பு உண்டு என்ற சந்தேகத்தின் பேரில் இரத்தம் சிறுநீர் ஆகியவற்றை பரிசோதித்தே திட்டமாக அறியமுடியும். சிறுநீரகச் செயலிழப்பில் பின்வரும் அறிகுறிகள் காணப்படும்.
- கடுமையான பசியின்மை, பிரட்டு, சத்தி, விக்கல், வாந்தி.
- மூச்சு விடுவதில் கஸ்டம்
- முகம் கால், வயிற்றுப் பகுதியில் வீக்கம்.
- சிறுநீர் குறைவாகக் கழித்தல், (சடுதியான சிறுநீரகச் செயலுழப்பு) அல்லது கூடுதலான சிறுநீர் கழித்தல் (நாள் கடந்த சிறுநீரக செயலிழப்பில்)
- இரத்தச் சோகை (Anaemia) (நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு)
சிறுநீரக செயலிழப்பபை எப்படி உறுதிப்படுத்துவது?
யூரியா (Blood urea) சீரம் கிறியற்றினின் (Serum creatinine) என்பவற்றைப் பரிசோதித்து சிறுநீரக செயலிழப்பை உறுதிப்படுத்தலாம். சிறுநீரகச் செயலிழப்பில் யூரியாவும், சீரம் கிறியற்றினினும் கூடுகின்றன. 24 மணித்தியாலங்களுக்கும் கூடுதலாக சிறுநீரைச் சேர்த்து அதிலே கிறியற்ரினி்ன் கிளியறன்ஸ்(Creatinine clearance) பரிசோதனையை நடத்தினால், அது சிறுநீரகச் செயலிழப்பு என்பதை வைத்தியர் திட்டவட்டமாக அறிந்து கொள்ள உதவும். சிறுநீரகச் செயலிழப்பின் முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்காக இப்பரிசோதனை அடிக்கடி செய்யப்படுகிறது. சிறுநீரகச் செயலிழப்பிற்குக் காரணமாக இருப்பது என்ன என்பதை அறிந்து கொள்ள , அல்றா சவுண்ட் ஸ்கான் (Ultra sound scan) னும் வைத்தியருக்கு உதவுகின்றன.
சிறுநீரகச் செயலிழப்புக்கு செய்யக்கூடிய பராமரிப்பு முறைகள் எவை?
- உணவு தரப்படுத்தல்./ மாற்றல்.
- மருந்துச் சிகிச்சை(Druy therapy)
- டயலைசிஸ் (Dialysis)
- சிறுநீரக மாற்றுச் சிகிச்சை.
- உணவு மாற்றம் – உணவிலே புரதச்சத்து, பொட்டாசியம், உப்பு நீர் என்பனவற்றைக் கட்டுப்படுத்துவது சாதாரண வழக்கம். புரதச்சத்து அடங்கியுள்ள இறைச்சி, முட்டை, மீன் ஆகியவற்றை நாள் வீதம் ஒரு அளவிற்குக் குறைக்க வேண்டும். இளநீர் பழவகைகள், பொரித்த உருழைக்கிழங்கு ஆகியவற்றில் பொட்டாசியம் இருப்பதால் இவை தவிர்க்கப்பட வேண்டும். கூடுதலான இரத்த அமுக்கம், உடல் வீக்கம், மூச்சு விடக் கஸ்டம் இவை இருந்தால் உப்பு குறைக்கப்பட வேண்டும். பாவிக்க கூடிய தண்ணீரின் அளவை உமது வைத்தியரே தீர்மானிக்க வேண்டும்.
- மருந்துச் சிகிச்சை(Drug therapy) – நோயாளியின் சிறுநீர் செயலிழப்பு நிலையைப் பொறுத்து பல வித மருந்துகள் தேவைப்படும்… உடலின் வீக்கத்தைக்குறைக்க – டையூறற்ரிக்ஸ் (Diuretics) (உ+ம்வ்றுஸெமைட் (frusemide) இரத்த அமுக்கத்தைக் குறைக்க – அன்றிஹைபரென்சிவ்ஸ் (Antihypertensives) (உ+ம்: மீதைல்டோபா methyilopa) வாந்தி சத்தியைக் குறைக்க –அன்ரிஎமெற்றிக்ஸ் (Antiemetics) உ+ம் மெற்ரோகுளோபிறமைட் (Metoclopramide) இரத்தக் குறைவுக்கு –இரத்தம் ஏற்றல், எரித்திரோபொயிற்ரின், இது விலை கூடிய மருந்து. சிறுநீர்த் தொற்றைப் பராமரிக்க—அன்றிபையொற்றிக் (உ+ம் :அமொக்சிலின்)
- டயலைஸிஸ் – சிறுநீரகச் செயலிழப்பில் மேலே கூறப்பட்ட இரண்டு முறைகளும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தாவிட்டால் யூரியா, பொட்டாசியம் எனும் உப்புக்கள் ஆபத்தான நிலைக்கு கூடிவிடும். இந்நிலையில் நோயாளி மரிக்கவும் கூடும். உடலிலுள்ள அழுக்குகளாகிய யூரியா, பொட்டாசியம் என்பவற்றை வெளியேற்றும் முறையே டையலைசிஸ் எனப்படுகிறது. டையலைசிஸ் பற்றிய தலையங்கம் வேறோர் துண்டுப்பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சிறுநீரக மாற்றுச் சிகிச்சை -எதுவித மாற்றமும் எற்படாத நாட்பட்ட சிறுநீரக செயலிழப்பிற்கு திரும்பத் திரும்ப டையலைசிஸ் சிகிச்சை அளித்தல் , ஆபத்தானதும் செலவு அதிகமாக இருக்கும். இப்படிப்பட்ட நோயாளருக்கு சிறுநீரகம் மாற்றம் செய்வது நல்லது என சிபார்சு செய்யப்பட்டுள்ளது இந்த நிலையில் சுகதேகி ஒருவரின் (இருப்பவரோ,இறந்தவரோ) சிறுநீரகம் நோயாளிக்கு மாற்றப்படுகிறது. சிறுநீரக மாற்று பற்றிய தலையங்கம் வேறொரு பிரதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியுமா?
ஆம். ஒரு அளவிற்கு. இந்நோய் வர காரணமாக இருக்கும் பாம்புக்கடியை தவிர்ப்பதும். நீரிழிவிற்கு நேரத்தோடு சிகிச்சை பெறுவதும், கூடிய இரத்த அமுக்கம் வராது தடுப்பதும், சிறுநீரக அழர்ச்சி ஏற்படாது பார்ப்பதும், புரஸ்ரேட் பிரச்சினையை தவிர்ப்பதும், சிறுநீரக தொற்று ஏற்படாது பார்ப்பதும் இந்நோயை தடுக்கக் கூடிய வழிகளாகும் .அனேக நோயாளிகள் போதிய பராமரிப்பபை பெறுவதில்லை. வைத்தியரின் உதவியையும் இடைநிறுத்தி விடுகின்றனர். சிறுநீரில் காணப்படும் அசாதாரண நிலை குறித்து (உ+ம்:அல்பியுமின், செங்கலங்கள் க சிந்தித்து நோயை இனம் கண்டு அதை குணப்படுத்த நடவடிக்ககை எடுக்க வேண்டும். சிறுநீரக செயலிழப்பு முதிர்ச்சியடைததாய் இருந்தால் அதை தடுப்பது முடியாத காரியமாகும்.
நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொ ள்ள முடியுமா..?
முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக் குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டு த்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தி யம் இல்லை. ஆனா ல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச் சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற் றுக் கொள்ளலாம்.