Tuesday, October 25, 2016

வாட்ஸ்ஆப் .... எப்படி..?

    வயது பாரபட்சம் பார்க்காமல் வாட்ஸ்ஆப் ஆனது அனைவரையும் சென்றடைந்துள்ளது என்பது நாம் அனைவருமே ஒற்றுக்கொள்ள வேண்டும். ஏனெனில், நீங்கள் மற்றும் உங்களை சுற்றியுள்ள பெரும்பாலான மக்கள் அனைவருமே ஒரு வாட்ஸ்ஆப் பயனாளி தான். 

    ஒவ்வொரு முறையும் வாட்ஸ்ஆப் தனது மேம்படுத்தலின் போது கவர்ந்திழுக்கும் அம்சங்களை வெளிக்கொண்டு வந்து மேலும் பலமான ஒரு மெசேஜிங் செயலியாக நிரூபித்துக் கொண்டே இருக்கிறது.


எப்படி..? 
ஒரே ஒரு மட்டும் பயன்படுத்த நேரிடும் தொலைபேசி எண்களை உங்கள் காண்டாக்ட் லிஸ்டில் சேமிக்க விரும்பாதவரா நீங்கள்..? அப்படியென்றால், குறிப்பிட்ட தொடர்பை எண்ணை சேமிக்காமலேயே அந்த வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்புவது எப்படி என்பதை பற்றிய எளிமையான வழிமுறைகளை கொண்ட தொகுப்பே இது.!

வழிமுறை #01 
கீபேர்டில் எண்ணை டைப் செய்யவும்.!

குறிப்பிட்ட தொலைபேசி எண் முதல் படியாக நீங்கள் செய்தியை அனுப்ப விரும்பும் குறிப்பிட்ட தொலைபேசி எண்ணை உங்கள் கீபேர்டில் டைப் செய்ய வேண்டும். உங்கள் போன் டயலரை பயன்படுத்த வேண்டும் என்ற ஒரு குறிப்பை மறக்க வேண்டாம்.

வழிமுறை #02 
பின்னர் மெனு பட்டனை அழுத்தவும்.!

சேமிக்க அல்லது மெசேஜ் மெனு பட்டனை அழுத்தியதும் நீங்கள் டைப் செய்த எண் சார்ந்த சில ஆப்ஷன்கள் உங்களிடம் கேட்கப்படும். அதாவது, நம்பரை சேமிக்க அல்லது மெசேஜ் அனுப்ப மற்றும் பல கேட்கப்படும்.

வழிமுறை #03 
இப்போது மெசேஜ் ஆப்ஷனை அணுகவும்.!


டெக்ஸ்ட் மெசேஜ் இப்போது மெனு வழங்கும் ஆப்ஷனைகளில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் ஆப்ஷனை பெற முடியும் அதை கிளிக் செய்வதின் மூலம் நீங்கள் டெக்ஸ்ட் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்பதை உறுதி செய்வீர்கள்

வழிமுறை #04 
வாட்ஸ்ஆப் மெசேஜ் கிளிக் செய்யவும்.!


ரீடைரக்ட் 
இறுதிப்படியாக மெசேஜ் ஆப்ஷனில் வாட்ஸ்ஆப் மெசேஜ் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும் பின்னர் நீங்கள் நீங்கள் வாட்ஸ்ஆப் ஆப்ளிகேஷனுக்கு ரீடைரக்ட் செய்யப்படுவீர்கள், பின்னர் குறிப்பிட்ட எண்ணிற்கு நீங்கள் வாட்ஸ்ஆப் மெசேஜ் அனுப்பலாம்.

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை சேர்க்க/நீக்க/மாற்ற எளிய வழிகள்.!

வாட்ஸ்ஆப் அதன் பீட்டா பதிப்பின் மூலமாக கடந்த சில வாரங்களாக பல புதிய மற்றும் அற்புதமான அம்சங்களை வெளியிட்டுள்ளது. அந்த அம்சங்களில் டூடுல் ஸ்டிக்கர்கள், க்விக் மீடியா பார்வேர்ட் லின்க் போன்றவைகளும் அடங்கும். உடன் அது மட்டுமின்றி வாட்ஸ்ஆப் க்ரூப் சார்ந்த அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. இப்போது முதல் க்ரூப் அட்மின் குழுவில் இணைவதற்கான அழைப்பு இணைப்பை குறிப்பிட்ட நபருக்கு அனுப்ப வேண்டும். அது ஒருபக்கம் இருக்க நீங்கள் என்ன பல அட்மின்களை சேர்க்க அல்லது நீக்க வேண்டும் அல்லது க்ரூப் அட்மினை மாற்ற வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்..?

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ஆட் செய்வது எப்படி..? 

வழிமுறை #01 : 
குறிப்பிட்ட க்ரூப்பிற்குள் நுழைந்து மெம்பர்களை இணைக்க க்ரூப் இன்போ ஆப்ஷனுக்குள் செல்லவும்
வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ஆட் செய்வது எப்படி..?

வழிமுறை #02 : 
யாரை க்ரூப் அட்மினாக தேர்வு செய்ய விரும்புகிறீர்களோ அவரை லாங் டாப் செய்யவும். பின்னரே உங்கள் ஸ்க்ரீனில் ஒரு மெனு தோன்றும் அதில் குறிப்பிட்ட க்ரூப்பின் அட்மினிஸ்களில் ஒருவராக குறிப்பிட்ட நபரை தேர்வு செய்யவும்
வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ரீமூவ் செய்வது எப்படி..?

வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மினை ரீமூவ் செய்வது எப்படி..? 

வழிமுறை : 
க்ரூப்பின் பார்ட்டிசிபன்ட்ஸ் லிஸ்ட் தனை திறந்து அட்மினின் காண்டாக்ட்டை லாங் டாப் செய்யவும் பின்னர் குறிப்பிட்ட நபரை ரிமூவ் செய்யவும். யார் அட்மினை ரிமூவ் செய்தாரோ அவரே மீண்டும் அவரை ரீ ஆட் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


வாட்ஸ்ஆப் க்ரூப் அட்மின் சேன்ஞ் செய்வது எப்படி..? 

இம்முறையில் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு செயல்முறை நிகழ்வுகளுமே அடங்கும். முதலில், தற்போதைய க்ரூப் அட்மின் மற்றொரு நபரை க்ரூப் அட்மினாக மாற்ற அனுமதி பெற வேண்டும். பின்னர் உங்களை அட்மிநீ தன்னை நீக்கி கொண்டு பின்னர் பார்ட்டிசிபன்ட் ஆக தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment