Saturday, October 22, 2016

விதைப்பந்து

விதைப்பந்து என்பது...மண் மற்றும்
பசுஞ்சாணத்தால் ஆன உருண்டை.
இதனுள் பயன்தரும் மரங்களின்
விதைகளை பொதிந்து உருவாக்கிய
பந்து... விதைகளை சேகரித்து ,அதை
பாதுகாத்து அதனை இயற்கை
எறிகுண்டுகளாக பரவலாக்கிய
மிகவும் தொன்மையான எகிப்திய
நாட்டு விவசாய முறையாகும்.
இரண்டாம் உலகப் போருக்குப்பின்
ஜப்பான் நாட்டில் விளைநிலங்களைத்த
விர்த்து எரிமலை சாம்பல்
படிந்தபகுதியில் விதைப்பந்துகளை
வானிலிருந்து தூவியே காடுகளை
உருவாக்கினர்.
விதை பந்துகளை தயாரிக்க
தேவையான
பொருட்கள் :
1. செம்மண் அல்லது களிமண்
2. தரமான பலன்தரும் விருட்சங்களின்
விதைகள். 3. பசுஞ்சாணம்
4. நீர்
செய்முறை :
செம்மண்ணில் பாதியளவு சாணத்தை
கலந்து நீரூற்றி பிசைந்து
உருண்டையாக உருட்டிக் கொள்ள
வேண்டும். அதன் நடுவே நீங்கள்
சேகரித்த விதைகளை வைத்து
உருண்டையாக்கி விடுங்கள். முதலில்
நிழலில் உலர்த்தி பிறகு வெயிலில் ஒரு
நாள் காயவைக்கவும்.இதனால்
உருண்டைகளில் வெடிப்பு வராது.
சூரிய வெப்பத்தில் ஒரு நாள்
காய்ந்தால் அது இறுகி விடும்.
நீங்கள் வெளியே செல்லும் போது மரம்
நட வாய்ப்புள்ள இடங்களில் வீசி
செல்லுங்கள். அவ்விதை மழை
வரும்வரை எலி, எறும்பு,
பறவைகளிடமிருந்து பாதுகாப்பாய்
இருக்கும். ஒரு வருடம் வரை விதை
பத்திரமாக முளைக்க ஏற்றதாக
இருக்கும்.
விதைகளைப் பொருத்தவரை சில
நாட்களுக்கு முளைக்க தேவையான
சத்துக்கள் விதையிலேயே இருக்கும்.
மண்ணில் கலந்துள்ள சாணமானது,
மண்ணில் நுண்ணுயிர்களை உருவாக்கி
செடியின் வேர் மண்ணில் எளிதில்
செல்ல ஏற்ற வகையில் இலகுவாக்கி
விடும். மண்ணின் கடினத்தன்மையை
அகற்றி மிருதுவாக்கி விடும்.
சாணத்தை உண்ணும்
நுண்ணுயிர்களின்கழிவை செடியின்
வேர் உண்டு... தன்னை அம்மண்ணில்
நிலைப்படுத்திக் கொள்ளும்.
ஆனால் வெறும் விதைகளை
விதைத்தால் அவை மற்ற
உயிரினங்களால் உணவாக்கப்படலாம்.
வெப்பத்தால் தன் முளைக்கும்
தன்மையை இழந்து விடலாம்.
நிலமானது செடி வளர்வதற்கான
ஏற்றதாக இல்லாமல் கடினமானதாக
இருக்கலாம். அதனால் விதை
முளைக்காது. ஆனால் விதைப்பந்தில்
தண்ணீர் பட்டவுடன் இலகுவதுடன்
நுண்ணுயிர்களை உண்டாக்கி நிலத்தை
இலகுவாக்கி விடும்.
எனவே உங்கள் வீடுகளில் சிறிது
செம்மண் மன்றும் சாணத்தை
சேகரித்து வையுங்கள். பழங்களை
சாப்பிட்ட பின் நல்ல விதைகளை
எடுத்து சேகரித்து வையுங்கள்.
ஓய்வு நேரத்தில் விதைப்பந்தை
உருவாக்கி வைத்து வெளியே
செல்லும்போது தோதான இடம்
பார்த்து வீசி விடுங்கள்.
விளைநிலங்களை தவிர்க்கவும்.
கோடை காலமானாலும் வீசி
விடுங்கள். பறவைகள் கூட தனக்கு
உணவளித்த மரத்திற்கு நன்றிக்கடனாக
விதைகளை எச்சமாக விதைத்துச்
செல்கிறது.
சாலைதோறும் மரங்களை நட்டு
வைக்க அசோகராக இருக்க வேண்டும்
என்று அவசியமில்லை.
இயற்கையை நேசிக்கும்
மனமும்,ஆர்வமும் அதற்கான
மெனக்கிடல் இருந்தால் போதும்,
விதைப்பந்துகள் தயாரித்து விடலாம்.
வரும் ஐப்பசி அடைமழையை
விதைபந்துகளுடன் வரவேற்போம்.
நன்றி நட்புக்களே!!

கேன்சர் வலப் பலகாரணங்கள் உண்டு. ஆனால் இதுவே முதன்மைக் காரணி.



உங்களுக்குத் தலைவலி. உடனே ஓர் ‘ஆஸ்ப்ரோ’ தலைவலி மாத்திரை கொடுப்பார்கள். அந்த மாத்திரை உங்களுக்கு நிவாரணமல்ல. வலி என்கிற உணர்வு உனக்கு இல்லாமல் செய்கிறது அவ்வளவுதான். அந்த மாத்திரை உன் தலைவலியை அழிக்காது. அந்த வலியைப் பற்றி உனக்குத் தெரியாமல் செய்கிறது. அது உன்னைக் குழப்புகிறது. தலைவலி அங்கேயே இருக்கிறது. ஆனால் அதை உணர்வதில்லை. ஒரு மாதிரியான மறதியை ஏற்படுத்துகிறது.
ஆனால் முதலில் தலைவலி ஏன் அங்கே இருக்கிறது? சாதாரண மருந்து அதைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. நீ ஒரு மருத்துவரிடம் போனால் முதலில் ஏன் தலைவலி இருக்கிறது என்பதைப் பற்றி அவர் கவலைப்படமாட்டார். உனக்குத் தலைவலி இருக்கிறது. பிரச்னை அவருக்கு மிகவும் சாதாரணமானது. ‘அறிகுறி இருக்கிறது. மருந்தை, ஏதோ ஒரு மருந்தை, அல்லது ரசாயனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.அந்த அறிகுறி மறைந்துவிடும்.’ தலைவலி மறைந்துவிடும் ஆனால் மறுநாள் வயிறு கெட்டுப்போகும். இன்னொரு அறிகுறி வந்துவிட்டது.
மனிதன் ஒன்றுதான். மனிதன் முழுமையானவன். உறுப்புகளின் தொகுதி. நீங்கள் பிரச்னையை ஒரு மூலையில் தள்ளலாம். அது இன்னொரு மூலையில் கிளம்பும். இன்னொரு மூலைக்குப் போக நேரமாகும்; அவ்வளவுதான். அந்தப் பகுதிக்குப் பயணமாகிற நேரம். ஆனால் அது வந்தே தீரும். பிறகு அந்த இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குத் தள்ளப்படும்.
மனிதனுக்குப் பல பகுதிகள் இருக்கின்றன. ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு தள்ளிக்கொண்டே போகும்.
இதனால் ஆரோக்யமாவதற்குப் பதிலாக நீ மேலும் மேலும் நோய்வாய்ப்படுவாய். மேலும் பல சமயங்களில் சின்ன வியாதி பெரிய வியாதியாக மாறும்.
உதாரணமாக, தலைவலியை அனுமதிக்காவிட்டால், வயிற்று வலியை அனுமதிக்காவிட்டால், முதுகு வலியை அனுமதிக்காவிட்டால், எந்த வலியையும் அனுமதிக்காவிட்டால் வலி வருகிறது.
நீங்கள் எதையோ எடுத்துக் கொள்கிறீர்கள். அதை நிறுத்துகிறீர்கள்.
பல ஆண்டுகளுக்கு இதே முறையில் அதை அடக்குகிறீர்கள். இது அடக்குமுறை. பிறகு எல்லா நோய்களும் ஒன்றாக சேருகின்றன. ஒரு திட்டமிட்ட முறையில் தன்னை நிலைநாட்டிக் கொள்கிறது.
அது புற்றுநோயாக மாறலாம்.
ஒன்றாக சேர்ந்தவையெல்லாம் தன்னை நிலைநாட்டிக்கொண்டு பெரிதாக வெடிக்கலாம்.
புற்றுநோய் என்பது மனிதனின் அடக்கப்பட்ட நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம். ஒரு தனியான நோயை எப்படி அடக்குவது என்பது இப்போது நமக்குத் தெரியும்.
இப்போது அது தனி நோயல்ல. இப்போது ஒட்டுமொத்தத் தாக்குதல். எல்லா நோய்களும் ஒன்று சேர்ந்து விட்டன. கை கோர்த்துக் கொண்டன. ஒரு ராணுவத்தையே உருவாக்கி விட்டன. இப்போது படை உன்னைத் தாக்குகிறது. அதனால் தான் மருந்துகள் தோல்வி அடைகின்றன. இப்போது அதற்கான மருந்தைக் கண்டுபிடிக்கிற சாத்தியக் கூறுகள் குறைவு.
புற்றுநோய் ஒரு புதிய நோய். இது கற்கால சமூகத்தில் இல்லை. ஏன்? கற்கால சமூகத்தில் ஏன் இல்லை என்று ஏன் கேட்க வேண்டும்? காரணம், கற்கால மனிதன் எதையும் அடக்குவதில்லை. அதற்கு அவசியமில்லை. அது உன்னுடைய அமைப்பிலேயே இருக்கிற புரட்சியாளன். நீ அடக்காவிட்டால், புரட்சியாளன் தோன்றப் போவதில்லை. சின்ன விஷயங்கள் வரும், போகும்.
உனக்குத் தலைவலி இருந்தால் அது உடல்நலக் குறைவல்ல. அது உன் நோயல்ல. உண்மையில், அடிப்படையில் ஏதோ கோளாறு இருக்கிறது என்பதைக் காட்டுகிற அறிகுறி. அடிப்படைக்குச் செல்லுங்கள். அங்கே என்ன தவறு என்று கண்டுபிடியுங்கள்.
தலை உங்களுக்கு ஓர் எச்சரிக்கையைக் கொடுக்கிறது. ஓர் ஆபத்து எச்சரிக்கை. ஒரு சங்கொலி. ‘உடலைக் கவனி. ஏதோ ஒரு தவறு நடக்கிது’ என்கிறது. சரியாக இல்லாத ஏதோ ஒன்றை நீங்கள் செய்கிறீர்கள். அது உங்கள் உடலின் ஒருங்கிசைவை அழிக்கப் போகிறது. இனிமேல் அதை செய்யாதே. இல்லையென்றால் உன் தலைவலி உன்னை நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கும்.
தலைவலி என்பது நோயல்ல. தலைவலி உங்கள் எதிரியுமல்ல. அது உங்கள் நண்பன். அது உங்கள் சேவையில் இருக்கிறது. உங்கள் இருப்புக்கு அது மிகவும் அவசியம். ஏதாவது தவறு நடந்தால் அது உங்களை எச்சரித்துக் கொண்டே இருக்க வேண்டும். அந்தத் தவறைத் திருத்திக் கொள்வதற்குப் பதிலாக நீங்கள் ஒரு தலைவலி மாத்திரையைப் போட்டு அந்த எச்சரிக்கை மணியை அணைத்து விடுகிறீர்கள்.
இது அபத்தம். இதுதான் மருந்தில் நடக்கிறது. இதுதான் மருத்துவ சிகிச்சையில் நடக்கிறது. அறிகுறிக்கான சிகிச்சை.
இதனால்தான் அவசியமானது தவறிப் போகிறது.

அவசியம் என்பது ஆதாரத்தைத் தேடிப்போவதுதான்.--ஓஷோ