Friday, July 1, 2016

விமானத்தை உருவாக்கியது ரைட் சகோதரர்களா? : மறைக்கப்பட்ட உண்மை!



இது ஒரு புதிய தொடர் பதிவு : “அறிந்ததும் மறந்ததும்” என்ற தலைப்பில் நாம் அறிந்த அறிவியல் விஞ்ஞானத்தையும் அதை சார்ந்த நம்ப முடியாத ஆனால் உண்மையாக இருக்க கூடியதுமான விடையங்களைப்பற்றி பேச உள்ளேன்/ளோம். ஏற்கனவே ஏலியன்ஸ், லெமூரியா பதிவுகளில் இவ் விடையங்களை தொட்டிருந்தேன். ஆனால் இங்கு தெளிவாக பேசலாம். இப் பேச்சு “நம் அறிவில்” பற்றி பலர் சிந்திக்க உதவும் என்ற நம்பிக்கையில் தொடர்கிறேன். :)
விமானம்,
அனைவரும் அறிந்த ஒன்று… இன்றைய உலகம் சுருங்க முக்கிய காரணமாக அமைந்த ஒரு சாதனம்.
பறவை வாணில் பறப்பதை பார்த்து நாம் ஏன் அது போல் ஒரு சாதனத்தை உருவாக்க முடியாது என்ற கேள்வி எழுந்ததன் விளைவாக 17 டிசம்பர் 1903 ஆம் ஆண்டு ஓர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட் என்ற இரட்டை சகோரதர்கள் விமானத்தை உருவாக்கி உலகையே வியக்க செய்தனர்.
இது இருக்கட்டும் அனைவரும் அறிந்த தகவல் தான், ஆனால் விமானத்தை இவர்களுக்கு முதலே இன்னொருவர் உருவாக்கிவிட்டார் என்று வரலாற்று சான்றுகளுடன் சிலர் கூறுகின்றனர். நியூசிலாந்தை சேர்ந்த ரிச்சர்ட் பியர்ஸ் (Richard Pearce ) என்ற இயந்திரவியலாளர் 31 மார்ச் 1903 ஆம் ஆண்டு முதலாவது விமானத்தை பரிசோதித்துள்ளார். ஆனால் அவரிடம் புகைப்பட ஆதாரங்கள் இருக்கவில்லை. மீண்டும் விமானத்தில் மாற்றங்களை செய்து 11 மே 1903 ஆம் ஆண்டு பலர் முன்னிலையில் விமானத்தை இயக்கி காட்டினார், ஆனால் தரையிறக்கும் போது விமத்திற்குள்ளானதில் விமானம் முற்றாக சேதமடைந்தது. மீண்டும் அதை சரி செய்து இயக்குவதற்கு முன்னர், ரைட் சகோதரர்கள் முந்திக்கொண்டனர்/ இது பலரும் அறியாத ஒரு வரலாற்றுதகவல்.
ஆனால், நாம் இங்கு பார்க்க நினைப்பது அது அல்ல…
நம் இராமாயணத்தில் விமானங்கள் பற்றி பல சந்தர்ப்பங்களில் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இராவணன் பயண்படுத்திய புட்பக/புஷ்பக விமானத்தை கருதலாம். மனிதர்களை ஏற்றிக்கொண்டு பறக்கும் சாதனம் அப்போதே பயன்பாட்டில் இருந்துள்ளதிற்கு இது ஒரு உதாரணம். ஆனால், சான்றுகள் / படிவுகள் என்று பார்த்தால் இந்த உதாரணத்தின் பெறுமதி இன்றைய திகதி வரைக்கும் பூச்சியம் தான். அதனால், நாம் இராமாயணத்தை கொண்டு விமான தொழில் நுட்பத்தை பற்றி விவாதிப்பது பொருத்தமற்ற ஒன்று. ஆனால், விவாதிப்பதற்கு எகிப்து இருக்கிறது!
எகிப்து சுமார் 10000 – 5000 ஆண்டுகளுக்கு முட்பட்ட ஒரு ராச்சியத்தின் எச்சங்களை கொண்டு இன்றும் உலகின் தொழில் நுட்பத்திற்கு சவால் விட்டுக்கொண்டிருக்கும் ஒரு மர்ம பூமி என்று சொல்லலாம்.
எகிப்திய பிரமிட்டுக்கள் அதன் அமானுட தொழில் நுட்பத்திற்காக இன்றுவரை ஆராயப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.
அப்படி எகிப்தை ஆராய்ந்த போது அச்சு அசலாக இன்றைய விமானத்தை ஒத்த பல உருவங்கள் / பொம்மைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ( இங்கு இருக்கும் படங்களில் நீங்கள் காண்பது எகிப்திய அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட உருவங்களையே.)
இந்த உருவங்கள் நிச்சயமாக உங்களிடையே பல கேள்விகளை உருவாக்கும். விமானத்தை 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் கண்டுபிடித்து கொண்டாடினோம். ஆனால், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நம் முன்னோர் விமானத்தை பயன்படுத்தியுள்ளனரே அது எப்படி? அந்த அளவிற்கு தொழில் நுட்ப அறிவு இருந்திருந்தால் பிற்காலத்தில் அது ஏன் அழிந்தது? என்ற பல கேள்விகள் எழும்.
சிலர் நினைக்கலாம், பெரிய அளவில் விமானங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை வெறும் உருவ பொம்மைகள் தானே, அது அவர்களின் கற்பனை உருவங்களாகவும் இருக்கலாம் என்று.
ஆனால், அந்த சின்ன உருவங்களை கவணமாக பார்த்தோமானால் மேலும் வியப்பு காத்திருக்கிறது. ஆம், அதன் செட்டைகள் மற்றும் பின்புற அமைப்பு என்பன இன்றைய விமான அமைப்பை 100% ஒத்துள்ளது. ( காற்றில் விமானம் தளம்பாது பயணிக்க உதவும் பின் புற அமைப்பைக்கூட அந்த பொம்மையில் வடித்துள்ளார்கள். ஏன்? எப்படி? )
இதுவும் திருப்தியான சான்றாக இல்லை என்பவர்கள்… கீழுள்ள புகைப்படங்களை பாருங்கள். இவை பூமியின் பல்வேறு இடங்களில் மலை முகடுகள் தரைகளை மட்டமாக்கி உருவாக்கப்பட்ட பண்டைய விமான ஓடுதளங்கள்!
நாம் நவீன விமானத்திற்கான ஓடு தளங்களை எப்படி உருவாக்கியுள்ளோமோ, அதே போல் உண்மையை சொன்னால் எம்மை விட ஒரு படி மேலே மிகப்பிரமாண்டமான முறையில் அவர்கள் இந்த ஓடு தளங்களை உருவாக்கியுள்ளார்கள்.
இன்றைய இந்த “அறிந்ததும் மறந்ததும்” தகவல் இதோடு நிக்கட்டும்.
இதற்கும் “எம் அறிவியல்” இற்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கிறீர்களா? அப்படியானால் நிச்சயம் நீங்கள் “லெமூரியா” பதிவை வாசிக்க வேண்டும். அப்போது தான் எகிப்து உருவாகியது எப்படி? அதற்கு மூலகாரணம் யார் என்பதை அறிந்து வியப்பீர்கள். :)
மீண்டும் அடுத்த வாரம் இதன் தொடர்ச்சி உடனும்  வேறு ஒரு தெரியாத தகவலுடனும் சந்திப்போம்!
உங்கள் விவாத கருத்துக்கள் நிச்சயம் இந்த ஆக்கத்தை செம்மையாக்கும். :) நான் விட்ட பிழைகளை திருத்தி வாசிப்போருக்கு சிறந்த தகவலை வளங்கும். :)

இலுமினேட்டி மர்மக்குழுவின் ரகசியத்திட்டங்கள்! : லண்டன் : (வீடியோ ஆதாரம்)

 போன இலுமினேட்டி பதிவில் அதிர்ச்சியான இலுமினேட்டி குழுமத்தின் கொடூரமான ரகசியத்திட்டங்களின் அதிர்ச்சிப்பகுதியை பார்க்க ஆரம்பித்திருந்தோம்! இன்று அதன் தொடர்ச்சியைப்பார்க்கலாம்…

2001 ஆம் ஆண்டு அமெரிக்கா பென்டகன் தாக்குதள் அதற்கு முன்னராகவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை சில சான்றுகளுடன் பார்த்திருந்தோம், இன்று மேலும் சில உறுதியான சான்றுகளைப்பார்த்துவிட்டு. இலுமினேட்டி குழுமம் 2005 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற குண்டுத்தாக்குதலுடன் எப்படி சம்பந்தப்பட்டது என்பதைப்பார்க்கலாம்!
இந்தப்படத்தைப்பாருங்கள், பிரபல ” த ஸிம்ஸன்- The Simpsons” காட்டூன் சித்திரத்தின் முன்னட்டையில் இடம்பெற்ற சித்திரம் இது!
1997 ஆம் ஆண்டு வெளியான இப் புத்தகத்தின் அட்டையைப்பாருங்கள். பின் புறத்தில் உலக வர்த்தகமையக்கட்டிடம் வரையப்பட்டுள்ளது அதே வேளை, புத்தகத்தின் விலை 9 டொலர்கள் என்பது அதன் அருகில் பொறிக்கப்பட்டுள்ளது.
கூர்ந்து கவணித்தீர்கள் என்றால் புரியும், அந்த டொலர் அடையாலமானது பல வகைகளில் மாற்றி அமைக்கும் போது 2001 ஆண்டையும், விலை 9 டொலர் என்பது “செப்டொம்பர்” மாதத்தையும் அருகில் உள்ள இரட்டை கோபுரக்கட்டிடம் “11” ஆம் திகதியையும் தெட்டத்தெளிவாக குறிக்கின்றது!
தற்போது 2001ஆம் ஆண்டு March மாதம் வெளியான The Lone Gunman எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு காட்ச்சியைப்பாருங்கள்.

இது தான் உலக வர்த்தகமையத்தாக்குதலின் போது நடந்தது!
இச் சான்றுகளை நீங்கள் முழுமையாக நம்பத்தேவையில்லை, எனினும் உங்களுக்குள் தற்போது ஒரு சந்தேகம் எழுந்திருக்கவேண்டும்! சிந்தியுங்கள் இதற்கு மேலும் பல சான்றுகளை நாம் பெற்றுக்கொள்ள முடியும்!
இலங்கை யுத்தம், மும்பைத்தாக்குதல் போன்றவற்றின் பின்னனியிலும் இலுமினேட்டி செயற்பட்டிருக்கக்கூடும். எம்மிடையே அதன் விளிப்புணர்வு இல்லாமையால் சான்றுகள் சிக்காமல் கூட இருக்கலாம். முயற்சிப்போம்!
இனி…
2005 ஆம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற திடீர் தீவிரவாதிகளின் குண்டுத்தாக்குதலை அறிந்திருப்பீர்கள். இது நடைபெற்றது 2005 ஆம் ஆண்டு. ஆனால், 2004 ஆம் ஆண்டு BBC தொலைக்காட்சியின் அனுசரனையுடன் எடுக்கப்பட்ட ஒரு கற்பனை விவரணக்காட்சியில் இத்தாக்குதல் தொடர்பான காட்சிகள் கச்சிதமாக காட்டப்பட்டுள்ளன. பாருங்கள்…
எம்மை இலுமினேட்டி மர்மக்குழுமம் ஆள நினைப்பதை தற்போது விளங்கிக்கொண்டிருப்பீர்கள்.

அமெரிக்கா மீது தாக்குதலை நடத்தியது யார்? இலுமினேட்டி புதிய தகவல்! ( பட விளக்கம் )


தவறவிட்டவர்கள் இங்கு பார்க்கலாம் :
  1. இலுமினேட்டி என்றால் என்ன? நோக்கம் என்ன?
  2. இலுமினேட்டி குழுமத்தின் இரகசியக்குறியீடுகள்!
இன்று போன பதிவில் கூறியதுபோன்று, கடந்த 2001 ஆம் ஆண்டு சுமார் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோரின் உயிரைக்காவுகொண்ட அமெரிக்க வரத்தக நிலையம் / பென்டகன் அழிக்கப்பட்டமையின் பின்னால் உள்ள சதித்திட்டத்தைப்பார்ப்போம்!
கடந்த 2001 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட அத்தாக்குதலிற்கு ஒசாமா பில்லேடன் தலைமயிலான அல் குவைதா அமைப்பு காரணமாக அறியப்பட்டது. அதன் பின்னர், ஆஃப்கானிஸ்தான் உள்ளடங்களாக சில நாடுகளில் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக போர்களை ஏற்படுத்தி கடந்த வருடம் அல் குவைதா தலைவர் பில்லேடனை கொன்றதன் மூலம் அந்த ஃபைலிற்கு தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால், அவ் தாக்குதலை திட்டம் தீட்டியது யார்? ஒசாமா தானா? அல்லது இலுமினேட்டி மர்மக்குழுமமா? என்பதை உணர இவ் உலகம்/ நாம் தவறிவிட்டோம்! இன்று அவற்றைப்பார்க்கலாம்!
பென்டகன் கட்டிடம் தாக்கப்பட்டது 2001 ஆம் ஆண்டு, ஆனால்முதலாவது படத்தைப்பாருங்கள் சுமார் 18 வருடங்களுக்கு முன்னர் அதாவது 1983 ஆம் ஆண்டு பிரபல கார்ட்டூன் திரைப்பட நிறுவனமான “மார்வெல்” நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட ” Marvel 2 in 1 ” எனும் புத்தகத்தின் அட்டைப்படம் இது! சரியாக விமானம் மோதிய இடத்தை குறிவைத்து அட்டைப்படம் அமைந்துளது. ( நாசிப்படையின் கொடி இடம்பெற்றிருப்பது தான் புதிர்… எனினும் அதற்கும் காரணம் இருக்கும்! விளங்கியவர்கள் ஊகிப்பவர்கள் கருத்தில் கூறவும்! )
இரண்டாவது படத்தைப்பாருங்கள் 1993 ஆம் ஆண்டு பிரபல விளையாட்டான மாரியோ (Mario Bros ) விளையாட்டின் பின் புறத்தில் இடம்பெற்ற ஒரு காட்ச்சி! அதே பென்டகன் தாக்குதல்!
மூன்றாவது படம் : இதுவும் 1993 ஆம் ஆண்டில் வெளியான ” Mortadelo ” எனும் கார்டூனின் வெளிப்புற அட்டைப்படம் இது! பென்டகன் தாக்குதல் ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான் என்பதற்கு மிகவும் உறுதியான ஒரு சான்றாக இது கருதப்படுகிறது. இப்படத்தில் விமானங்கள் மூலமாக கட்டடம் தகர்க்கப்படுவது தெளிவாக காட்டப்பட்டுள்ளது!
ஏனைய சான்றுகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்! செப்டொம்பர் 11 ஆம் திகதி தாக்கப்பட உள்ளமை கூட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதுதான்! அதையும் அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
அதற்கு முன்னர் சிந்திக்கவேண்டிய ஒரு விடையம் :
பென்டகன் தாக்குதலுக்கு கடத்தப்பட்ட விமானங்கள் பயன்படுத்தப்பட்டன, விமானம் கடத்தப்பட்டது கட்டுப்பாட்டகத்திற்கு தாக்குதல் நடத்த முதலே அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தாக்குதல் நடாத்தப்படும் போது பென்டகனின் தானியிங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் இயங்கவில்லை! அது எப்படி? இலுமினேட்டியின் திட்டமிடலின் ஒரு பகுதியே இது என்பது எனது கருத்து.

பரிஸ் தாக்குதலும் இலுமினாட்டி பின்னனி சந்தேகங்களும்.


நடைபெற்ற இந்த தாக்குதலுக்கு இஸ்லாமிய தேசம் என்ற பெயரின் கீழ் இயங்கும் அமைப்பு காரணமென ஊகிக்கப்பட்டு அதை அவ் அமைப்பும் உறுதி செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. (ஃப்ரான்சில் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் அதிக உயிர்களை பலிகொண்ட தாக்குதலாகும்.)
தாக்குதல் நடத்தப்பட்ட நாள்.
சரியாக 13.11.2015 இல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே இலுமினேட்டி தொடர்பாக நாம் பார்க்கையில் அவர்களின் விருப்ப இலக்கங்களாக 13 ,33, 11, (9) குறிப்பிட்டிருந்தேன்.
அதையே இத்தாக்குதலும் உறுதி செய்துள்ளது. தாக்குதல் நேரம் கூட இரவு 9 மணியை அண்டிய நேரத்தில் நடைபெற்றுள்ளதோடு அதிக உயிரிழப்பை ஏற்படுத்திய‌ bataclan அரங்கத்தாக்குதல் பரிஸ் 11 பகுதியில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இது எதேர்ச்சையாக நடைபெற்றதா அல்லது திட்டமா என்ற கேள்வி சிந்தனையாளர் மனதில் நிற்கிறது. சில பல வாரங்களில் ஆதாரங்கள் சிக்கலாம்.
பெரும்பாலும் இவ்வாறான தாக்குதல்கள் வார பிற்பகுதியில் நடைபெறுவதையும் அவதானிக்க முடிகிறது. (ஒரு வேளை சர்வதேச வியாபாரத்தை பாதிக்காதவாறு திட்டம் தீட்டி இருக்கலாம்.)
இலுமினாட்டி அட்டைகளில் இருந்து சில குறிப்புகளை பார்க்கலாம்.
இவ் இரண்டு அட்டைகளும் இவ் வருடத்தில் ஃப்ரான்சில் நடைபெற்ற தாக்குதல்களுடன் சற்று ஒத்துப்போவதாகவுள்ளது.
Image : 01
Image : 01
முதல் படம், ஒரு அரங்கத்திற்கு விழும் அடியாக உள்ளது. அவ் அரங்கள் நேற்று தாக்குதலுக்குள்ளான bataclan அரங்கமாக இருக்கலாம்.
Image : 02
Image : 02
படம் 2:
வருட ஆரம்பத்தில் நடைபெற்ற (7-9.2015) charlie hebdo attak உடன் சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். குறித்த நபர் charlie hebdo வாக இருக்கலாம். (இத்தாக்குதலின் பின்னர் அப்பத்திரிகையின் வியாபாரம் பல மடங்கு அதிகரித்தது. அப் பத்திரிகையின் உரிமையாளர் ஒரு யூதர்.)
————————-
அதே நேரம், தாக்குதல் பகுதிகளில் இருந்து தப்பிய சிலரின் வாக்குமூலங்கள் ;
“அல்லாஷ் அக்பர்”(?) என தீவிரவாதி கூச்சலிட்டார்.
“சிரியாவில் நீங்கள் செய்ததற்கான பலன்” என கூச்சலிட்டார். (சிரியா யுத்தத்தில் ஃப்ரான்சின் பங்கு அதிகம்.)
“உங்கள் ஜனாதிபதி விட்ட தவறு” என கூச்சலிட்டார்.
– என வாக்குமூலங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இது தாக்குதல் நடத்தியவர்கள் இஸ்லாமியர்கள் என்பதை குறிப்பதாகவுள்ளது. இது இஸ்லாமியருக்கு எதிராக நடைபெறும் தாக்குதலுக்கு ஐரோப்பிய மக்களிடையே ஆதரவை தேடித்தரும் நோக்கு என ஒரு சாரார் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த இஸ்லாமிய அமைப்பை நீண்ட நாட்களாக முயன்றும் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகள் ஒடுக்கமுடியாமல் இருப்பது ஒரு வேடிக்கை. இத்தீவிரவாதிகளுக்கும் அவர்களே ஆயுதவினியோகம் செய்வதாக ஒரு கருத்துள்ளது. அது உண்மையாக இருப்பதற்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாக உள்ளன. இது ஒரு வியாபாரம்!
அதில் ரஷ்யா குறுக்கிட்டு கடந்த சில மாதங்களாக மேற்கத்தைய சிந்தனைகளுக்குள் முரண்பாட்டை ஏற்படுத்தியுள்ளது.
அதற்காக சொந்த நாட்டு மக்களை ஒரு நாடு கொல்லுமா என்ற கேள்வியுள்ளது.
அதற்கு ஆம் என்ற பதிலை தாராளமாக சொல்லலாம்,
Operation Gladio என்று இத்தாலியில் நடைபெற்ற ஒரு திட்டமிட்ட தொடரூந்து நிலைய தாக்குதலின் பின்னனியில் CIA மற்றும் இத்தாலிய உளவுத்துறை செயற்பட்டமை தனியார் உளவு நிறுவனங்கள் மூலம் சாட்சியங்களுடன் நிரூபிக்கப்பட்டது. பின்னர் அவ் நிறுவனங்கள் இல்லாமல் போனது!
————————-
அதேவேளை மேலும் ஒரு குறிப்பாக, நொஸ்ராடமஸின் எதிர்வு கூறல்களிலும் பரிஸில் இவ்வாறான ஒரு தாக்குதல் இடம்பெறும் என்ற குறிப்புக்கள் உள்ளன. அதுவும் இஸ்லாமிய தேசத்தாரால் என குறிக்கப்பட்டுள்ளது.

மாயமான மலேசிய விமானமும் வெளிச்சத்திற்குவரும் மர்ம இலுமினேட்டியும்! – 09


MH-370பங்குனி(மார்ச்) மாதம் 8ஆம் திகதி அன்று மலேசியாவின் MH370 என்ற விமானம் 239(?) பயணிகளுடன் காணாமல் போய் இருந்தது. அது தொடர்பான ஏற்கனவே பல இடங்களில் படித்திருப்பீர்கள், இங்கு “இலுமினேட்டி குழுமத்தின் கடத்தலாக இருக்குமா?” என்ற கோணத்தில் பார்க்கலாம்.
ஐ.நா திட்டத்திற்கு அமைய கடற்பகுதிகளிலும், வான் பகுதிகளிலும் இடம்பெறும் இயற்கை / செயற்கை மாற்றங்களை அறிந்துகொள்வதற்காக உலகம் முழுவதும் பல இடங்களில் விசேட கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த எந்த கருவிகளிலும் விமானம் வெடித்ததற்கான சான்றுகளோ வீழ்ந்ததுக்கான சான்றுகளோ பதிவாகவில்லை!
எனினும், இன்றுவரை இந்து சமுத்திரப்பகுதிகளில் பாரிய அளவு தேடல்கள் நடைபெற்றுவருகின்றன.
( இக் கருவிகல் விமானம் இந்து சமுத்திரப்பகுதியில் பறந்ததற்கான பதிவுகளை கொண்டுள்ளன… இதுவே இந்து சமுத்திரத்தில் தேடல் மும்முரமடைய காரணமாக அமைந்தது.)
இலுமினேட்டி குழுமம் என்பது, இஸ்ரேலில் திட்டம் தீட்டப்பட்டு; உலக காவலனாக காட்டிக்கொள்ளும் அமெரிக்காவினூடாக செயற்படும் ஒரு குழுமம் என பல anti-illuminati குழுமங்கள் ஆதாரங்களுடன் கூறிவருகின்றார்கள். (அமெரிக்காவின் டொலர் நாணயத்தாளை கவணியுங்கள், ஃபேஸ்புக்கின் மர்ம பின்னனி என்ற தலைப்பில் பதிவிடப்பட்ட பதிவை பார்க்கலாம்.)
ஏற்கனவே, இலுமினேட்டி தொடரில் 8 ஆவது பதிவில், 2004 சுனாமி தாக்க சம்பவத்திற்குசில தினங்களுக்கு முன்னர் இந்து சமுத்திரத்தில் இருந்த தீவில் இருந்து தனது இராணுவங்களை அமெரிக்கா நாட்டிற்கு அழைத்திருந்ததை பார்த்திருந்தோம். இன்று அந்த தீவு தான் மர்ம முடிச்சாக மாறியுள்ளது.
illuminati-smsசில தினங்களுக்கு முன்னர், the guardian தளம் அடங்களாக பல தளங்களூடாக, மாயமான விமானத்தில் இருந்த ஒரு அமெரிக்க பிரஜை அதனது பத்திரிகையாள நண்பருக்கு தாம் ஒரு தீவில் (Diego Garcia ) கடத்திவைக்கப்பட்டுள்ளதாகவும், அனைவரது கைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தான் கைபேசியை மறைத்து வைத்திருந்ததாகவும், தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறுஞ்செய்தி அனுப்பியிருந்தார். அவர் குறிப்பிட்ட அந்த தீவு இந்து சமுத்திரத்தில் அமெரிக்க கட்டுப்பாட்டில் இருக்கும் தீவு! இக் குறுஞ்செய்தியின் பின்னர் விமானக்கடத்தல் அமெரிக்காவின் திட்டமிட்ட செயலாக இருக்கும் என்ற சந்தேகம் உலகம் முழுவதும் எழுப்பப்பட்டுள்ளது. (இப்போது பல பிரபல தளங்கள் இச் செய்தியை இருட்டடிப்பு செய்துள்ளன.)
இதை மேலும் பார்க்க முதல்,
அந்த விமானத்தை செலுத்திய ஜஹாரி அகமது ஷாவைப்பற்றி பார்க்கலாம், 53 வயதான அவர் சுமார் 30 வருடங்களாக விமான ஓட்டி அனுபவமுள்ள ஒரு மூத்த விமானி. மலேசியாவின் பிரதான எதிர்கட்சியான(?) மக்கள் நீதிக்கட்சியின் ஆதரவாளராக இருந்துள்ளார். அக் கட்சி தலைவருக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு அடுத்த நாளே விமானம் மாயமானது/பட்டது. இக் கோபத்தை காட்டவே விமானி விமானத்தை கடத்தி இருக்க வேண்டும் எனம் கருதப்படுகிறது.
ஆனால், தீர்வுக்கு சில வாரங்களுக்கு முன்பே, தென் இந்திய மற்றும் மாலைதீவு குறுகல் விமான ஓடுதளங்களில் விமானத்தை எப்படி தரை இறக்குவது என பார்த்துள்ளார்! (சிமுலேட்டர் கருவியில் சிக்கிய தகவல்).
விமானி விமானத்தை சுமார் 45 000 அடி உயரத்திற்கு திடீரென மேல் எழுப்பியுள்ளார் அதற்கான பதிவுகள் பதியப்பட்டுள்ளன. பின்னர், விமானத்தில் இருந்து வெளியிடப்படக்கூடிய பல சமிக்ஞைகள் துண்டிக்கப்பட்டுவிட்டன.
ஆகவே, விமானிகளின் உதவியுடன் தான் விமானம் மாயமானது என்பதை உறுதிப்படுத்தமுடிகிறது. விமானி விமானத்தை அதி உயரத்திற்கு உயர்த்தி விமான சமிக்ஞைகளை துண்டித்ததால், விமானத்தை விபத்துக்கு உட்பட வைப்பது அவர் நோக்கம் அல்ல என்பது தெளிவாகிறது. விமானியின் வீட்டில் இருந்த simulator இல் விமானி குறுகிய விமான ஓடுதளங்களில் விமானத்தை தரையிறக்குவதை பார்வையிட்டமை, விமானம் தரையிறக்கப்படும் நோக்கில் இருந்ததை உறுதிப்படுத்துகிறது. மேலும், தென் இந்திய – மாலைதீவு பகுதிகளில் விமான தரையிறக்கத்தை பார்வையிட்ட்டதும், தற்போது கூறப்படும் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்படும் தீவு, மாலைதீவுகளை ஒத்த அமைப்புடன் இருப்பதனால் மேலும் இது ஒரு திட்டமிட்ட செயல் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
இன்னோர் வினோதமாக, குறித்த நாளில் இரவு நேரத்தில் அந்தமான், நிக்கோபர் தீவுகளில் ரேடர்கருவிகளின் செயற்பாடு நிறுத்திவைக்கப்பட்டிருந்திருக்கிறது!
மேலே பார்த்த தகவல்களின் அடிப்படையில் எதுவும் நிச்சயமாக உறுதிப்படுத்தப்படாவிடினும், இது கடத்தலாக இருக்கலாம் என்ற சந்தேகம் உங்கள் மனதிலும் தோன்றி இருக்கும் என நம்புகின்றேன்…
நம்புபவர்களுக்காக இது எப்படி இலுமினேட்டியுடன் தொடர்புபடும் என்பதை பார்க்கலாம்…
படம் trident 01
படம் trident 01
இலுமினேட்டி குழுமத்தின் உப சின்னங்களின் ஒன்றாக சூழமும் கருதப்படுகிறது. காணாமல் போன மலேசிய விமானத்தின் சின்னம் சூழத்தை அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது!
ஏற்கனவே, அமெரிக்காவின் செப்டொம்பர் 11 தாக்குதல் ஒரு திட்டமிடப்பட்ட இலுமினேட்டி செயல் என பார்த்திருந்தோம். இடிந்துபோன அந்த இரண்டு கட்டடங்களின் நினைவுச்சின்னங்களாக இடம்பெற்றிருக்கும் அமைப்பை பார்க்கவும்… இரண்டு சூழங்கள்… (படம் trident 01), அமெரிக்காவுடன் எந்த விததிலும் சம்பந்தப்படாத இந்த சின்னங்கள் ஏன்?
மேலும் அமெரிக்க மற்றும் இஸ்ரேலின் திட்டங்களுக்கு பெரிம் பின்னடைவை ஏற்படுத்தும் ஒரு நாடு சீனா, மாயமான விமானத்தில் இருந்தவர்களில் 153 பேர் சீனர்கள், அதில் நால்வர் முக்கிய அரசியல் பின்னனியுடையவர்கள் என சொல்லப்படுகிறது. (இன்று, இந்துசமுத்திரப்பகுதியில் காணாமல் போன விமானம் இருப்பதற்கான சமிக்ஞைகள் தமது செய்மதிகளில் உள்வாங்கப்பட்டுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. அடுத்த கட்டமாக சீனா தனது பங்கிற்கு தேடுதலில் இறங்கலாம்… இறங்கினால், பல திருப்பங்கள் இடம்பெற வாய்ப்புண்டு… ஆனால், இவை நடைபெற முதல் தடையங்களை அறவே அழித்திட முடியும்!)
இது வேறு நிகழ்ச்சி… ஆனாலும் இதே நோக்கத்தில் பார்க்க முடியும்…
சமீப காலமாக உக்ரைனிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் பகை அதிகரித்துவருகின்றது. உக்ரைனின் சின்னத்தில் சூழம் இருப்பதை அறிந்திருப்பீர்கள்.
இலங்கை போன்ற நாடுகளில் உத்தம்/இன அழிப்புக்கள் நடைபெற்ற போது கண்டுகொள்ளாத அமெரிக்கா உட்பட்ட நாடுகள் இப்போது உக்ரைனின் பக்கம் நிப்பதை காணலாம். (ரஷ்யா எப்போதும் அமெரிக்காவிற்கு எதிரான ஓர் பலம் பொருந்திய நாடாகவே இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதுவும், 2009இன் பின்னர் ஏற்பட்ட உலகபொருளாதார பின்னடைவின் பின்னர், மேலும் பலமடைந்த நாடுகளாக உருவெடத்த இரண்டு நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று… இன்னொன்று சீனா… )
மாயமான விமானம் தொடர்பான மேலும் சில தகவல்கள்…
“Two passports, three cities, two countries, one day.” இது பிட்புல் மற்றும் ஷகிரா பாடிய பாடலில் இடம்பெற்ற வரிகள். இவை மலேசிய விமான கடத்தலை குறிப்பதாக கூறுகின்றார்கள்.
மலேசிய விமான தேடலில் பங்கேற்ற ஆனால், சூழ அடையாளத்தை கொண்ட நிறுவனக்களில்/பாடசாலைகளில் கல்விகற்ற அதிகாரிகள் மூவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்கள்.
Sochi 01
படம் Sochi 01
இதே பகுதியில், 2012 லண்டன் ஒலிம்பிக்கில் தாக்குதல் நடைபெறலாம் என இலுமினேட்டி அட்டைகளை அடையாளம் காட்டி கூறப்பட்ட தகவல்களை பகிர்ந்திருந்தேன். ஆனால், அது நடைபெறவில்லை. “இலுமினேட்டி” என்ற சொல்லின் மீதே சந்தேகத்தையும் அப்படி ஒன்றும் இல்லை என்ற நிலையையும் இச் சம்பவம் வெகுவாக பலரிடையே ஏற்படுத்தி விட்டது. ஆனால், 2014 இல் குளிர்காலப்பகுதியில் ரஷ்யாவில் பராலிம்பிக் நடைபெறவுள்ளது. இடம்பெறும் நகரம் Sochi, அவ் நகரத்தில் இருக்கும் பிரபல மணிக்கூட்டு கோபுரம் தான் இது. (படம் Sochi 01)
குறிப்பிட்ட இலுமினேட்டி அட்டை தான் படம் illuminati 01 இல் உள்ளது. கோபுர உச்சிகளை நீங்களே கவணியுங்கள்…
illuminati 01
நீண்ட நாட்களிற்கு பிறகு இடப்பட்ட பதிவு, நீண்ட பதிவாக அமைந்துவிட்டது… அடுத்த பதிவில், மேலும் பல எதிர்கால திட்டங்களை பார்க்கலாம்… உங்கள் கருத்துக்களையும், நீங்கள் அறிந்த தகவல்களையும் கருத்திடுங்கள்…

ஃபேஸ்புக்கின் மர்ம பின்னனி! – Illuminati & facebook tamil (+pix proofs)


   நாம் அனைவரும் பயன்படுத்தும் சமூகத்தளமான ஃபேஸ்புக் தொடர்பான இலுமினேட்டி தன்மையை ஆராய்வோம்.
பிரபல சமூகத்தளமான ஃபேஸ்புக் 2004 ஆம் ஆண்டில் தொடக்கப்பட்டு, இப்போது சுமார் 1,15 பில்லியனுக்கு மேற்பட்ட பாவணையாளர்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இதன் நிறுவனரான Mark Zuckerberg பற்றியே இன்று பார்க்கப்போகின்றோம். மார்க் ஒரு யூதர் என்பதை இங்கு நீங்கள் கருதில் கொள்ளுங்கள். காரணம், யூதர்களுக்கும் இலுமினேட்டிக்கும் தொடர்பிருப்பதாக பரவலாக பேசப்படுகிறது. அது தொடர்பாக பின்னர் பார்க்கலாம். இப்போது மார்க் தொடர்பாக பார்ப்போம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர், மார்க் ஃபேஸ்புக் தளத்தின் பாவணையாளார்கள் பற்றிய தகவல்கள் அனைத்தையும் அமெரிக்க புலனாய்வுத்துறையுடன் உத்தியோக பூர்வமாக பகிர்ந்துகொண்டமையை அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
D8 எஅ அழைக்கப்படும் பிரபல தொழில்நுட்ப நேர்காண‌ல் நிகழ்ச்சியொன்றில் ஃபேஸ்புக் தளம் தொடர்பான கேள்விகளுக்கு மார்க் நேரடியாக பதில் அளித்துக்கொண்டிருந்தார்.
அப்போது தனிதகவல் பாதுகாப்புத்தொடர்பான பேச்சு எழுந்த போது, பேட்டிகளின் போது மார்க் அணிந்துவரும் மேலங்கிய பார்வைக்கு காட்டுமாறு எதேச்சையாக நேர்காணலை நடாத்தியவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அந்த கேள்வி கேட்ட அடுத்த கணமே மார்க்கின் முகம் மாறியது. எனினும் அவர்கள் தொடர்ச்சியாக கேட்டுக்கொண்டதன் பின்னர் தனது மேலங்கியை கழற்றினார். கழற்றும் போதே… தமது ஃபேஸ்புக் திட்டம் அந்த அங்கியில் பொறிக்கப்பட்டுள்ளதாக கூறினார். எனினும், அந்த அங்கியை உற்று நோக்கும் போது அது இலுமினாட்டியின் சின்னத்தையும், பகுதி திட்டத்தையும் குறிப்பதாக அமைந்திருந்தது!
யூதர்களின் நாடான இஸ்ரேலின் கொடியிலுள்ள மைய நட்சத்திரத்தை மையமாகக்கொண்டு அந்த வடிவமைப்பு அமைக்கப்பட்டிருந்தது. கீழ் வரும் புகைப்படங்களில் அவற்றை உண்ணிப்பாக அவதானியுங்கள்…
“மேலங்கி” தொடர்பான கேள்வியின் பின்னர் மார்க்கின் சஞ்சல முகம் :
Illuminati_facebook_tamil
மேலங்கியில் பொறிக்கப்பட்ட அடையாளம் :
Illuminati_facebook_tamil2

Illuminati_facebook_tamil3
மேலங்கி அடையாளத்திற்கும் இஸ்ரேலிய கொடிக்கும் இடையிலான ஒற்றுமை :
Illuminati_facebook_tamil4
இலுமினேட்டியை குறிக்கும் அடையாள வடிவமைப்புக்கள் :
Illuminati_facebook_tamil5

Illuminati_facebook_tamil6

Illuminati_facebook_tamil7
மேலும், ஃபேஸ்புக் உடன் இணைந்து இயங்கும் அமைப்புக்களை ஆராயும் போது அதில், அமெரிக்க புலனாய்வு அமைப்பு இருப்பதுடன்; ஃபேஸ்புக்கின் அடிப்படை இணை அமைப்பான information awareness office இல் இலுமினேட்டி சின்னம் இருப்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இலுமினேட்டியின் இஸ்ட இலக்கம் 13 என இத்தொடரில் நாம் ஏற்கனவே பார்த்திருந்தோம். ஃபேஸ்புக் உள் நுழைவு முகப்பை அவதானியுங்கள். 13 நபர்கள் காட்டப்படுவார்கள். அவர்கள் நாம் தொடரின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட அதே 13 குடும்பங்களை குறிப்பதாக இருக்கலாம்!
facebook-650

இயற்கை அழிவுகளுக்கு பின்னால் இலுமினேட்டி மர்மம்! – இலுமினேட்டி 8


இன்று…
ஏறத்தாள சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், ஆசியாவின் தென் பகுதியை ஆட்டம்காண‌வைத்த ஒரு சம்பவம் “சுனாமி” எனப்படும் ஆழிப்பேரலை இயற்கை சீற்றம்.
நாமும், உலக விஞ்ஞானிகளும் இது இயற்கை சீற்றம் என கூறிக்கொண்டாளும். அந்த பேரலைகளின் பின்னாலும் பல மர்ம முடிச்சுக்கள் உள்ளன.
26.12.2004 அன்று 9.3 ரிச்டர் அளவிலான புவி நடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்டு, அதன் தாக்கம் இந்து சமுத்திரமூடாக தென் இந்தியாவரை பல உயிர்களை காவுகொண்டிந்தது.
24.12.2004 அன்று இந்து சமுத்திர தீவுகளில் கடமையில் இருந்த தனது நாட்டு காவலர்கள் அனைவரையும் விடுமுறை என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக தனது நாட்டிற்கு அழைத்திருந்தது அமெரிக்கா. (அதற்கு முன்னரும், பின்னரும் அவ்வாறு ஒட்டு மொத்தமாக விடுமுறை அளிக்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது.)
அமெரிக்காவின் இந்த செய்கையில் இருந்து தான், இந்த புவி நடுக்கம் இயற்கையா செயற்கையா என்ற சந்தேகம் உருவானது.
Anti Illuminati ஆய்வாளர்களின் கருத்துப்படி. சமீபத்தில் சுவிஸில் நிலத்திற்கடியில் செய்யப்பட்ட இலத்திரன் மோதல்களைப்போன்று, ஆனால் அறிவிக்கப்படாமல் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையின் விளைவு தான் அந்த திடீர் நில நடுக்கத்திற்கு காரணமாக் இருக்கும் என உறுதிகூறுகின்றனர்.
மேலும் சிலர், அமெரிக்காவின் நவீன ரக அணுகுண்டு சோதனையின் விளைவே அது என கருத்து தெரிவிக்கின்றார்கள்.
(2004 இல் ஏற்பட்ட சுனாமி விளைவு, ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டின் உடனடி விளைவைக்காட்டிலும் சுமார் 700 மில்லியன் பெரிய விளைவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.)
படம் A
படம் A
மேலே நான் சொன்னவை எல்லாம் அமெரிக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகவே இருக்கின்றன. இதற்கும் இலுமினேட்டிக்கும் என்ன சம்பந்தம்?
கீழ்வரும் படத்தை (படம் A) பாருங்கள்… 1991 இல் உருவான இலுமினேட்டி விளையாட்டு அட்டைகளில் இடம்பெற்ற ஒரு படம். மிகப்பெரிய அலைகள் செயற்கையாக உருவாக்கப்படும் என்பதை தெளிவாக காட்டியுள்ள படம். இதனடிப்படையில் உறுதியாக அல்லாவிடினும் “2004 ஆசியாவை தாக்கிய சுனாமி” ஒரு திட்டமிட்ட இலுமினேட்டியின் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையாவது எமது மனதில் எழுப்பிவிடும் என நம்புகின்றேன். இச் சந்தேகம் “இலுமினேட்டி” என்ற நம்பவும் முடியாத மறுக்கவும் முடியாத சொல்லின் மீது சற்று நம்பிக்கை சார்ந்த சந்தேகத்தை உருவாக்கும்.
படம் B
படம் B
போன பதிவில், இலுமினேட்டி விளையாட்டை உருவாக்கியவர் பற்றி சில தகவல்களை பார்த்திருந்தோம். அதில் நான் அவதானிக்க தவறிய ஒரு அருமையான பகுதியை Mohamed Riyaz என்பவர் தெளிவாக சுட்டிக்காடியிருந்தார்.
நான் பிரசுரித்த ஸ்டீவ் ஜக்ஸனின் புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் உடையில் “முக்கோணம்+கண்” அடையாளம் கொண்ட இலுமினேட்டி சின்னம் இடம்பெற்றுள்ளது! (புகைப்படத்தை (படம் B) தெளிவாக பார்க்கவும்.) மேலும் அப் புகைப்படங்கள் இலுமினேட்டி அட்டை விளையாட்டை உருவாக்கிய பின்னர் எடுக்கப்பட்டவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இது தொடர்பாக நான் மேலும் தேடியதில்…
பல இடங்களில் அவருக்கும் இலுமினேட்டிக்கும் எந்த தொடர்பும் அடைப்படையில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே “எதிர்-இலுமினேட்டி” ஆய்வாளர்கள் கூட கூறுகின்றனர். ஆனால், இலுமினேட்டி அட்டையிலேயே இதற்கும் ஒரு பதில் உண்டு…
படம் C
படம் C
படம் C ஐ பாருங்கள்,
“An Offer You Can’t Refuse” என்ற வாசகம் மூலம்; இலுமினேட்டியின் புதிய உலக கட்டளைகளுக்கு எதிராக செயற்படுவோரும், அக் குழுமம் பற்றிய ரகசியத்தை கசிய விடுவோரும் இரண்டு முறைகளில் கையாளப்படுகிறார்கள்.
ஒன்று, அவர்களுக்கு பெருந்தொகை பணம் கொடுக்கப்பட்டு அவர்கள் வாய் மூடப்படுகிறது. அல்லது அவர்கள் உணர்வு பூர்வமாக மிரட்டப்படுகிறார்கள்.
இரண்டு, மரணம். – எதிர்ப்பவர் யார் என்பதை பொறுத்து அவர்களின் அணுகுமுறை இருக்கும் எனலாம்.
படம் D
படம் D
இணைந்திருங்கள், எமது சமூகத்தளங்களூடாக எம்மோடு உங்கள் கருத்துக்களை பகிருங்கள். மேலும் எம்மை சூழ்ந்து நடைபெறும் பல ஆச்சரியமூட்டும் மர்மங்களை அறியலாம்… :)

கால நிலை மாற்றமும் இலுமினேட்டியும் – INWO பற்றிய பின்னனித்தகவல்!

இலுமினேட்டி அட்டைகள் பற்றி பார்ப்போம்!

1990 ஆம் ஆண்டளவில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் INWO என்ற ஒரு காட்ஸ் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. INWO என்பது “Illuminati – New World Order” (இலுமினேட்டி – புதிய உலக கட்டளைகள்) என்பதன் சுருக்கமாகும்.
jackson_2ஸ்டீவ் ஜக்ஸன் என்பவர் இந்த விளையாட்டை வடிவமைத்திருந்தார். இந்த விளையாட்டில் இடம் பெற்ற 3 அட்டைகள் தெளிவாக செப்டொம்பர் 11 தாக்குதல் பற்றி விவரித்திருந்தது! லண்டன் தாக்குதல் மற்றும் எதிர்காலத்திட்டங்களை இந்த அட்டைகள் வெளிப்படுத்தியிருந்தது.
ஸ்டீவ் ஜக்ஸனுக்கும் இலுமினேட்டிக்கும் என்ன தொடர்பு?
ஸ்டீவ் ஜக்ஸன் பிரபல கார்ட், போர்ட், விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனத்திற்கு சொந்தக்காரர். பல இடங்களில் வாசித்து அறிந்ததன் படி ஜக்ஸனுக்கும் இலுமினேட்டிக்கும் நேரடித்தொடர்பு ஏதும் இருந்ததாக சான்றுகள் இல்லை.
தற்செயலாக, இலுமினேட்டி இரகசியக்குழுவின் தகவல்களை அறிய நேர்ந்த பின்னர்; உருவாக்கப்பட்ட விளையாட்டாகவே இந்த இலுமினேட்டி அட்டைகள் கருதப்படுகின்றன.
ஸ்டீவ் ஜக்ஸன் இவ் விளையாட்டை உருவாக்கியதும், அவருக்கு அனுசரனை வழங்கிய நிறுவனத்தில் 1990 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி திடீரென எந்த வித முன்னறிவிப்புமில்லாமல் சோதனையிடப்பட்டது. 4 முக்கிய கணனிகள் கைப்பற்றப்பட்டதுடன். நிறுவனத்தின் மூது பொய் வழக்குகள் போடப்பட்டது.
இலுமினேட்டி அட்டைகளின் உருவாக்க பின்னனியைப்பார்த்தோம். இனி…
illuminati cards collection tamil2
illuminati cards collection tamilஇங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் படங்களைப்பாருங்கள்… இவரை இலுமினேட்டி விளையாட்டு அட்டைகளில் இடம் பெற்றா இரு அட்டைகள்.
காலனிலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக இவ் இரு அட்டைகளும் கூறுகின்றன.
முதலாவது அட்டையான “International Weather…” அட்டையைப்பார்த்தோமானால்,
“All Places you control” என்ற சொல் மூலம் இலுமினேட்டி உலகம் முழுவதுமான கால நிலைகளை கட்டுப்படுத்தும் என்பது கூறப்பட்டுள்ளது.
கால நிலையை எப்படி கட்டுப்படுத்துவது? அது இயற்கையான ஒன்று என நினைத்தால், அது அதவறு!
ஆம், Cloud Seeding என அழைக்கப்படும் நவீன தொழில் நுட்ப முறை மூலம் இப்போது தேவைப்படும் இடங்களில் தேவையான அளவிற்கு மழையை பெய்விக்க முடிகிறது.
இத்தொழில் நுட்பம் இன்னமும் முழுமையாகவில்லை. அத்துடன் ஒரு இடத்தில் செயற்கையாக மழையை பெய்விக்க வேண்டும் எனும் போது, இயற்கையாக இன்னோர் இடத்தில் பெய்யவேண்டிய மழை பொய்ப்பிக்கப்படும்! (இது தொடர்பான மேலதிக தகவல்களை இங்கு பார்க்கலாம்.)
இவ்வாறு கால நிலைகளை மாற்றுவதன் மூலமாக, இன்றைய தொழில் நுட்பப்படி இன்னோர் இடத்தில் வறட்சியை ஏற்படுத்த முடியும். மேலும் சில காலங்களில் வெள்ளப்பெருக்குகளையும் ஏற்படுத்த சாத்தியமுண்டு.
இவ்வாறு எதிர் பாராத கால நிலை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக, இலுமினேட்டியின் புதிய உலக கட்டளைகளுக்கு எதிராக நகரும் நாடுகளை இலகுவாக அடிபணியச்செய்யலாம்!
illuminati_tamil_Hurricane
இப்போது, இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பருவமழை பொய்ப்பதற்கும், திடீர் மழைகளுக்கும் இலுமினேட்டியின் திட்டம் காரணமாக இருக்க கூடும்… ஆராய வேண்டியதும் சிந்திக்க வேண்டியதும் எமது கடமைகள்…
இரண்டாம் புகைப்படத்தில் உள்ள “”Real weather satellites don’t just report the weather, they change it” என்ற வார்த்தை; காலனிலையை கணிக்க உதவும் செய்மதிகள் காலனிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமிக்ஞைகளை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. (இதன் சாத்தியக்கூறுபற்றி சரிவர ஆராயமுடியவில்லை. செய்மதி மூலம் முகில் கூட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி எனக்கு உண்டு, பதில் தெரிந்தவர்கள் கூறவும்.)
அதனுடன் சம்பந்தமான ஒரு படமே இந்த 3 ஆவது புகைப்படம்.
இது காலனிலை மாற்றத்தால் ஏற்படுத்தத்தக்க புயல்கள் பற்றி குறிப்பதாக கருதப்படுகிறது.
the day after tomorrow திரைப்படம் அனைவருக்கும் நினைவிருக்கலாம்… அதே நபர் தான் “2012” எனும் திரைப்படத்தையும் எடுத்தார்… அதில் குறித்த நபர்கள் மட்டும் தப்புவது போன்றும் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது, White House Down திரைப்படத்தை இயக்கியுள்ளார்…