Friday, July 1, 2016

இயற்கை அழிவுகளுக்கு பின்னால் இலுமினேட்டி மர்மம்! – இலுமினேட்டி 8


இன்று…
ஏறத்தாள சுமார் 10 வருடங்களுக்கு முன்னர், ஆசியாவின் தென் பகுதியை ஆட்டம்காண‌வைத்த ஒரு சம்பவம் “சுனாமி” எனப்படும் ஆழிப்பேரலை இயற்கை சீற்றம்.
நாமும், உலக விஞ்ஞானிகளும் இது இயற்கை சீற்றம் என கூறிக்கொண்டாளும். அந்த பேரலைகளின் பின்னாலும் பல மர்ம முடிச்சுக்கள் உள்ளன.
26.12.2004 அன்று 9.3 ரிச்டர் அளவிலான புவி நடுக்கம் இந்தோனேசியாவின் சுமத்திரா பகுதியில் ஏற்பட்டு, அதன் தாக்கம் இந்து சமுத்திரமூடாக தென் இந்தியாவரை பல உயிர்களை காவுகொண்டிந்தது.
24.12.2004 அன்று இந்து சமுத்திர தீவுகளில் கடமையில் இருந்த தனது நாட்டு காவலர்கள் அனைவரையும் விடுமுறை என்ற பெயரில் ஒட்டு மொத்தமாக தனது நாட்டிற்கு அழைத்திருந்தது அமெரிக்கா. (அதற்கு முன்னரும், பின்னரும் அவ்வாறு ஒட்டு மொத்தமாக விடுமுறை அளிக்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது.)
அமெரிக்காவின் இந்த செய்கையில் இருந்து தான், இந்த புவி நடுக்கம் இயற்கையா செயற்கையா என்ற சந்தேகம் உருவானது.
Anti Illuminati ஆய்வாளர்களின் கருத்துப்படி. சமீபத்தில் சுவிஸில் நிலத்திற்கடியில் செய்யப்பட்ட இலத்திரன் மோதல்களைப்போன்று, ஆனால் அறிவிக்கப்படாமல் செய்யப்பட்ட ஒரு பரிசோதனையின் விளைவு தான் அந்த திடீர் நில நடுக்கத்திற்கு காரணமாக் இருக்கும் என உறுதிகூறுகின்றனர்.
மேலும் சிலர், அமெரிக்காவின் நவீன ரக அணுகுண்டு சோதனையின் விளைவே அது என கருத்து தெரிவிக்கின்றார்கள்.
(2004 இல் ஏற்பட்ட சுனாமி விளைவு, ஹிரோஷிமா மீது போடப்பட்ட அணுகுண்டின் உடனடி விளைவைக்காட்டிலும் சுமார் 700 மில்லியன் பெரிய விளைவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.)
படம் A
படம் A
மேலே நான் சொன்னவை எல்லாம் அமெரிக்காவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களாகவே இருக்கின்றன. இதற்கும் இலுமினேட்டிக்கும் என்ன சம்பந்தம்?
கீழ்வரும் படத்தை (படம் A) பாருங்கள்… 1991 இல் உருவான இலுமினேட்டி விளையாட்டு அட்டைகளில் இடம்பெற்ற ஒரு படம். மிகப்பெரிய அலைகள் செயற்கையாக உருவாக்கப்படும் என்பதை தெளிவாக காட்டியுள்ள படம். இதனடிப்படையில் உறுதியாக அல்லாவிடினும் “2004 ஆசியாவை தாக்கிய சுனாமி” ஒரு திட்டமிட்ட இலுமினேட்டியின் செயலாக இருக்கலாம் என்ற சந்தேகத்தையாவது எமது மனதில் எழுப்பிவிடும் என நம்புகின்றேன். இச் சந்தேகம் “இலுமினேட்டி” என்ற நம்பவும் முடியாத மறுக்கவும் முடியாத சொல்லின் மீது சற்று நம்பிக்கை சார்ந்த சந்தேகத்தை உருவாக்கும்.
படம் B
படம் B
போன பதிவில், இலுமினேட்டி விளையாட்டை உருவாக்கியவர் பற்றி சில தகவல்களை பார்த்திருந்தோம். அதில் நான் அவதானிக்க தவறிய ஒரு அருமையான பகுதியை Mohamed Riyaz என்பவர் தெளிவாக சுட்டிக்காடியிருந்தார்.
நான் பிரசுரித்த ஸ்டீவ் ஜக்ஸனின் புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் உடையில் “முக்கோணம்+கண்” அடையாளம் கொண்ட இலுமினேட்டி சின்னம் இடம்பெற்றுள்ளது! (புகைப்படத்தை (படம் B) தெளிவாக பார்க்கவும்.) மேலும் அப் புகைப்படங்கள் இலுமினேட்டி அட்டை விளையாட்டை உருவாக்கிய பின்னர் எடுக்கப்பட்டவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி இருந்தார். இது தொடர்பாக நான் மேலும் தேடியதில்…
பல இடங்களில் அவருக்கும் இலுமினேட்டிக்கும் எந்த தொடர்பும் அடைப்படையில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே “எதிர்-இலுமினேட்டி” ஆய்வாளர்கள் கூட கூறுகின்றனர். ஆனால், இலுமினேட்டி அட்டையிலேயே இதற்கும் ஒரு பதில் உண்டு…
படம் C
படம் C
படம் C ஐ பாருங்கள்,
“An Offer You Can’t Refuse” என்ற வாசகம் மூலம்; இலுமினேட்டியின் புதிய உலக கட்டளைகளுக்கு எதிராக செயற்படுவோரும், அக் குழுமம் பற்றிய ரகசியத்தை கசிய விடுவோரும் இரண்டு முறைகளில் கையாளப்படுகிறார்கள்.
ஒன்று, அவர்களுக்கு பெருந்தொகை பணம் கொடுக்கப்பட்டு அவர்கள் வாய் மூடப்படுகிறது. அல்லது அவர்கள் உணர்வு பூர்வமாக மிரட்டப்படுகிறார்கள்.
இரண்டு, மரணம். – எதிர்ப்பவர் யார் என்பதை பொறுத்து அவர்களின் அணுகுமுறை இருக்கும் எனலாம்.
படம் D
படம் D
இணைந்திருங்கள், எமது சமூகத்தளங்களூடாக எம்மோடு உங்கள் கருத்துக்களை பகிருங்கள். மேலும் எம்மை சூழ்ந்து நடைபெறும் பல ஆச்சரியமூட்டும் மர்மங்களை அறியலாம்… :)

No comments:

Post a Comment