Friday, July 1, 2016

கால நிலை மாற்றமும் இலுமினேட்டியும் – INWO பற்றிய பின்னனித்தகவல்!

இலுமினேட்டி அட்டைகள் பற்றி பார்ப்போம்!

1990 ஆம் ஆண்டளவில் ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் INWO என்ற ஒரு காட்ஸ் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. INWO என்பது “Illuminati – New World Order” (இலுமினேட்டி – புதிய உலக கட்டளைகள்) என்பதன் சுருக்கமாகும்.
jackson_2ஸ்டீவ் ஜக்ஸன் என்பவர் இந்த விளையாட்டை வடிவமைத்திருந்தார். இந்த விளையாட்டில் இடம் பெற்ற 3 அட்டைகள் தெளிவாக செப்டொம்பர் 11 தாக்குதல் பற்றி விவரித்திருந்தது! லண்டன் தாக்குதல் மற்றும் எதிர்காலத்திட்டங்களை இந்த அட்டைகள் வெளிப்படுத்தியிருந்தது.
ஸ்டீவ் ஜக்ஸனுக்கும் இலுமினேட்டிக்கும் என்ன தொடர்பு?
ஸ்டீவ் ஜக்ஸன் பிரபல கார்ட், போர்ட், விளையாட்டுக்களை உருவாக்கும் நிறுவனத்திற்கு சொந்தக்காரர். பல இடங்களில் வாசித்து அறிந்ததன் படி ஜக்ஸனுக்கும் இலுமினேட்டிக்கும் நேரடித்தொடர்பு ஏதும் இருந்ததாக சான்றுகள் இல்லை.
தற்செயலாக, இலுமினேட்டி இரகசியக்குழுவின் தகவல்களை அறிய நேர்ந்த பின்னர்; உருவாக்கப்பட்ட விளையாட்டாகவே இந்த இலுமினேட்டி அட்டைகள் கருதப்படுகின்றன.
ஸ்டீவ் ஜக்ஸன் இவ் விளையாட்டை உருவாக்கியதும், அவருக்கு அனுசரனை வழங்கிய நிறுவனத்தில் 1990 ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி திடீரென எந்த வித முன்னறிவிப்புமில்லாமல் சோதனையிடப்பட்டது. 4 முக்கிய கணனிகள் கைப்பற்றப்பட்டதுடன். நிறுவனத்தின் மூது பொய் வழக்குகள் போடப்பட்டது.
இலுமினேட்டி அட்டைகளின் உருவாக்க பின்னனியைப்பார்த்தோம். இனி…
illuminati cards collection tamil2
illuminati cards collection tamilஇங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் படங்களைப்பாருங்கள்… இவரை இலுமினேட்டி விளையாட்டு அட்டைகளில் இடம் பெற்றா இரு அட்டைகள்.
காலனிலையை கட்டுப்படுத்துவது தொடர்பாக இவ் இரு அட்டைகளும் கூறுகின்றன.
முதலாவது அட்டையான “International Weather…” அட்டையைப்பார்த்தோமானால்,
“All Places you control” என்ற சொல் மூலம் இலுமினேட்டி உலகம் முழுவதுமான கால நிலைகளை கட்டுப்படுத்தும் என்பது கூறப்பட்டுள்ளது.
கால நிலையை எப்படி கட்டுப்படுத்துவது? அது இயற்கையான ஒன்று என நினைத்தால், அது அதவறு!
ஆம், Cloud Seeding என அழைக்கப்படும் நவீன தொழில் நுட்ப முறை மூலம் இப்போது தேவைப்படும் இடங்களில் தேவையான அளவிற்கு மழையை பெய்விக்க முடிகிறது.
இத்தொழில் நுட்பம் இன்னமும் முழுமையாகவில்லை. அத்துடன் ஒரு இடத்தில் செயற்கையாக மழையை பெய்விக்க வேண்டும் எனும் போது, இயற்கையாக இன்னோர் இடத்தில் பெய்யவேண்டிய மழை பொய்ப்பிக்கப்படும்! (இது தொடர்பான மேலதிக தகவல்களை இங்கு பார்க்கலாம்.)
இவ்வாறு கால நிலைகளை மாற்றுவதன் மூலமாக, இன்றைய தொழில் நுட்பப்படி இன்னோர் இடத்தில் வறட்சியை ஏற்படுத்த முடியும். மேலும் சில காலங்களில் வெள்ளப்பெருக்குகளையும் ஏற்படுத்த சாத்தியமுண்டு.
இவ்வாறு எதிர் பாராத கால நிலை மாற்றங்களை ஏற்படுத்துவதன் மூலமாக, இலுமினேட்டியின் புதிய உலக கட்டளைகளுக்கு எதிராக நகரும் நாடுகளை இலகுவாக அடிபணியச்செய்யலாம்!
illuminati_tamil_Hurricane
இப்போது, இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளில் பருவமழை பொய்ப்பதற்கும், திடீர் மழைகளுக்கும் இலுமினேட்டியின் திட்டம் காரணமாக இருக்க கூடும்… ஆராய வேண்டியதும் சிந்திக்க வேண்டியதும் எமது கடமைகள்…
இரண்டாம் புகைப்படத்தில் உள்ள “”Real weather satellites don’t just report the weather, they change it” என்ற வார்த்தை; காலனிலையை கணிக்க உதவும் செய்மதிகள் காலனிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் சமிக்ஞைகளை ஏற்படுத்தும் சக்தி வாய்ந்ததாக கூறப்படுகிறது. (இதன் சாத்தியக்கூறுபற்றி சரிவர ஆராயமுடியவில்லை. செய்மதி மூலம் முகில் கூட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்வி எனக்கு உண்டு, பதில் தெரிந்தவர்கள் கூறவும்.)
அதனுடன் சம்பந்தமான ஒரு படமே இந்த 3 ஆவது புகைப்படம்.
இது காலனிலை மாற்றத்தால் ஏற்படுத்தத்தக்க புயல்கள் பற்றி குறிப்பதாக கருதப்படுகிறது.
the day after tomorrow திரைப்படம் அனைவருக்கும் நினைவிருக்கலாம்… அதே நபர் தான் “2012” எனும் திரைப்படத்தையும் எடுத்தார்… அதில் குறித்த நபர்கள் மட்டும் தப்புவது போன்றும் காட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்போது, White House Down திரைப்படத்தை இயக்கியுள்ளார்…

No comments:

Post a Comment