Tuesday, June 21, 2016

பனிச்சரிவும் பாதுகாப்பு முறைகளும் : இயற்கைப் பேரழிவுகளும் பாதுகாப்பும் ‏ 5


11501501-winter-driving-packing-list-infographics-for-safety-tripபனி மலைச்சரிவும்
இயற்கை, கடும் குளிரைக் காட்டி விளைiயாடுகிறது; சுடும் வெப்பத்தையும் வீசி விளாசுகிறது. இவை எல்லாம்; இடையூறுகளும், இழப்புகளும், பேரிழப்புகளும் பயங்கரமானவை. இழப்புகள், பனிப்பொழிவின் தீவிரத்தைப் பொறுத்து அமைக்கின்றன.
இந்தப் பூவுலகில், நமது நிலைமை மிக மோசமானதல்ல. ஜப்பானின் வடபகுதியில் (2006 ஜனவரியில்), வரலாறு காணாத பனிப்பொழிவு உண்டானது. சுவர்களில் எல்லாம் அடுக்கடுக்காய் பனியுறைவு. ரயில் நிலையங்களில் (அகிடா ரயில் நிலையம்), மற்றும் தண்டவாளங்களையெல்லாம் பனி மூடிவிட்டது. இந்நிலையில், இரயில் போக்குவரத்து எப்படி? அதற்குப் போக்கில்லை. அப்படியெனில் மக்களின் நிலைமை?
ஜப்பானின் தலைநகர் டோக்கியோ உட்பட, ஏறத்தாழ ஒருமாதகாலமாகப் பல பகுதிகள் கடும் பனிப்பொழிவின் பிடியில் சிக்கின. இதனால், மாண்டவர்களின் எண்ணிக்கை, இதுவரை 63. (9.1.2006). காய மடைந்தோர் கணக்கற்றோர். வீடகளிலும், சாலைகளிலும் 3 மீட்டர் உயரத்துக்குப் பனி படிந்துள்ளதென்றால், நிலமையின் பயங்கரத்தை உங்களால் உணர முடியும். பலர், பனிப் படிவை நீக்க முயன்றபோது, குளிர் தாங்க முடியாமல் மரித்தப் போயினர். சில வீடுகளில் அதிகமாகப் பனிபடிந்து விட்டதால், தாங்காத கூரைகள் இடிந்துவிட, மக்கள் மடிந்தனர்.
மழை பெய்யும்போது சப்தம் கேட்கும். பெரும் காற்று வீசும்போதும் சப்தம் கேட்கும். பனிபெய்யும் போது? அப்போதும் சப்தம் கேட்குமளவுக்குப் பனிப் பொழிவும் தீவிரமாய் இருந்துள்ளது.
ராணுவமும், தொண்டு நிறுவனங்களும், சாலைகளில் படிந்திருந்த பனிக்கட்டிகளை நீக்குவதில் ஈடுபட்டனர். பொது மக்களின் உதவியையும் அவர்க்ள வேண்டிக் கேட்கும் அளவுக்கு நிலைமை இருந்தது.
காற்று, மழை, அதிகப் பனிப்பொழிவு, பனிப்பாறைகள் அதிக ஈரமடைதல் போன்ற காரணங்களால், பனிச் சரிவுகள் ஏற்படுகின்றன. சுவர்போன்ற காரணங்களால், பனிச் சரிவுகள் ஏற்படுகின்றன. சுவர்போன்று உயரமான, செங்குத்தான பனிப்படர்வுகள், 30-40 விழுக்காடு அளவுக்குச் சரிந்து விழும்.
பனிச்சரிவால் விழுந்த பனிக்கட்டிகள், பக்கத்துப் பகுதிகளுக்குப் பரவும் வேகம், மணிக்கு 300 கிலோ மீட்டர். அப்படியானால், பாதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை எண்ணிப் பாருங்கள்.
அதன் வழியில் மரங்கள் இருந்தாலும், குடிசைகள் இருந்தாலும், தற்காலிகக் கட்டிடங்கள் இருந்தாலும், பனிச் சறுக்குகளில் விளையாடுவோர் என்றாலும், அனைத்துமே துவசம்தான்; அழிவுதான்; நாசம்தான். எனவே, அவைபற்றி கவனமுடன் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கையுடனும் பாதுகாப்பு உணர்வுடனும் நம்மைக் காத்துக் கொள்ள வேண்டும்.
இந்தப் பிரச்சனை எல்லாம் இங்கே எங்கே என்கின்றீர்களா?
நீங்கள் எங்கெங்கோ செல்வீர்கள் இன்று, உலகமே சுறுங்கி விட்டதே. வேலைக்காக வடநாடு செல்வதும், வெளிநாடு செல்வம் சாதாரணமாயிற்றே! அங்கெல்லாம் பனிப்பொழிவு உண்டு. எனவே, தற்காப்புக்காகவும், பிறரைப் பாதுகாக்கவும், அனைத்தையும் அறிந்து கொள்ளுங்கள்.
பேரிடர்களிலிருந்து மீண்டிட..
அவசரகாலத் திட்டம்:
குடும்பத் தலைவர்களே, குடும்ப அளவிலான பேரிடர் திட்டத்தை உருவாக்கி, எதையும் எதிர்கொள்ள, உங்கள் குடும்பத்தை தயாராக்குங்கள். உங்களுக்கு கிடைத்த தகவல்கள் அனைததையும் குடும்ப உறுப்பினர்களுடன் பகிர்ந்து விவாதியுங்கள். உங்கள் குடும்பத் திட்டத்தில், பின்வருவன இடம்பெற ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.
1. தப்பிப்பதற்கான அகன்ற வழிகள்.
2. குடும்பத் தகவல் தொடர்பு.
3. பயன்பாட்டு பொருட்கள்.
4. காப்பீடு மற்றும் முக்கிய ஆவணங்கள்.
5. சில சிறப்புத் தேவைகள்.
6. விலங்குகள் மீதான கவனம்.
7. பாதுகாக்கும் திறமைகள்.
avalancheஉங்கள் வீட்டின் ஒவ்வொரு அறையில் இருந்தும், தப்பிப்பதற்குகான இரண்டு பாதைகள் தெளிவாய் இருக்கட்டும். இந்த வழிகளின் வரை படங்களை, குழந்தைகள் புரிந்து கொள்வதை உறுதிப்படுத்துங்கள். ஒவ்வொரு வரைபடத்தின் நகலையும் குழந்தைகளின் கண்ணில் படும்படி அறையில் ஒட்டி வைக்கவும்.
தீ விபத்துபோன்ற அவசர காலங்களில், சந்திப்பதற்கு ஓர் இடத்தை உருவாக்குங்கள். பேரிடர்கள் நிகழும்போது, உங்கள் குடும்பத்தினர் ஒரே இடத்தில் இல்லாவிட்டால், ஒருவரோடு ஒருவர் எவ்வாறு தொடர்பு கொள்வது என்று திட்டமிடுங்கள். மாறுபட்ட சூழ்நிலைகளில் எவ்வாறு தொடர்பு கொள்வது என்றும் சிந்தியுங்கள்.
குடும்பத்தின் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும், விபரங்கள் அடங்கிய தொடர்பு அட்டையை கொடுக்கவும். ஒவ்வொருவரும் எப்போதும் இதை கையில் வைத்திருக்க வேண்டும். பள்ளிக்கு அனுப்பும் ஒவ்வொரு குழந்தை பற்றிய விபரத்தையும் வைத்திருங்கள்.
தொலைதூரத்தில் உள்ள நணபர்களிடமும் உறவிரிடம் நீங்கள் அனைவரும் அவர்களைப் பற்றியும் விசாரியுங்கள். பாதுகாப்பாக இருப்பதை தெரிவியுங்கள்.
பேரிடர்களைத் தொடர்ந்து, சமையல் எரிவாயு கசியவும் வெடிக்கவும் வாய்ப்பு உள்ளதால் அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அவற்றை நிறுத்தத் தெரிந்திருப்பது அவசியம்.
பேரிடர்களின் பின்னர், பொரும்பாலும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும். எனவே குடிநீர் குழாய் இணைப்பை நிறுத்தவும் அனைவரும் தெரிந்திருப்பது அவசியம். மின்பொறி கசிவும் சமையல் எரிவாயுவை தீப்பற்ற செய்வதால் மின்சாரத்தைத் துண்டிப்பது எப்படி என்றும், அனைருக்கும் சொல்லிக் கொடுங்கள்.
அன்றாட வாழ்வில் பயன்படும் அனைத்தையும் பற்றிய விவரங்களை அனைவரும் அறிந்து வைத்திருப்பது அவசியம் என்பதை, உணர்ந்து செயல்படுங்கள்.
காப்பீட்டு சான்றிதழ்கள், ஒப்பந்தங்கள், சொத்து ஆவணங்கள் மற்றும் பிற முக்கிய ஆவணங்களை, உங்கள் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பான இடத்தில் வைக்கவும். முக்கிய ஆவணங்களின் நகல்கலை, அவசரகால உதவிப் பொருட்களுடன் வைத்திருக்கவும்.
அவசரகால உதவிப் பொருட்களை வைப்பதற்கென்று, சில வசதிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். தேவைப்பட்டவுடன், ஆளுக்கு ஒன்றென. அந்த முக்கியமான அனைத்தையும் எடுத்துச் செல்ல, அவை ஏற்றவையாயும், எளிதாயும் இருக்கிட்டும்.
அவசரகாலங்களில், பணம் மிக அவசியம். வீட்டில் எளிதில் எடுக்கும்படியான இடத்தில் ஓரளவு பணத்தை வைத்திருக்கவும். உங்கள் குடும்பத்தினரோ அல்லது நெருக்கமானவரோ யாராவது உடல் ஊனமுற்றவராக, சிறப்புக் கவனம் தேவைப்படுவராக இருந்தால், அவர்களைப் பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்தவும்.
முதலுதவிப் பொருட்களில் இருக்க வேண்டியவை:
1. பல்வேறு அளவுகளில் உள்ள ஒட்டும் பேண்டேஸ்கள் (Band Aids).
2. தூய்மைப்படுத்தப்பட்ட காயகட்டு துணி (Sterilised Bandage roll).
3. நுண்ணுயிர் அழிப்பு மற்றும் எதிர்ப்பு மருந்துகள் (Anti biotics).
4. மருத்துவத் தரத்திலான கையுறைகள் (Surgical gloves).
5. இரண்டு அங்குல அகலமடைய ஒட்டும் டேப்கள்.
6. நாக்கை சுத்தப்படுத்தும் பிளேடுகள் (Tongu cleaners).
7. குளிர் மருந்து பெட்டி (Cold Boxes).
8. சிறிய மற்றும் பெரிய கத்திரிகள் (Scissors).
9. இடுக்கிகள் (Forceps).
10. பல்வேறு அளவில் ஊக்குகள் (Hooks).
11. பஞ்சுப் பொதிகள் (Cotton balls and Cotton rols).
12. வெப்பமானி (Thermometer).
13. பெட்ரோலிய ஜெல்லி (Petroleum Jelly).
14. முகமூடி (Mask).
15. முதலுதவிக் கையேடு (First Aid guide).
16. வலி நிவாரணிகள் (Analgesics) மற்றும் வயிற்றுப்போக்கு தடுப்பு மருந்துகள் (Antidiarrho ealis) பேதி மருந்துகள் (haxatives) போன்ற பரிந்துரைக்க கூடிய மருந்துகள் அடங்கியப் பெட்டி.
மேற்கண்ட அனைத்துப் பொருட்களையும், குறிப்பாக எந்த இடத்தில் வைப்பது என்று சரியாக முடிவு செய்யுங்கள். எளிதில் எடுக்கக்கூடிய, ஆனால் பாதுகாப்பான இடத்தில் அவற்றை வைக்கவும். அந்த இடத்தை, குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிவியுங்கள். அவற்றை பராமரிக்கும் பொறுப்புகளை, பலருக்கும் பிரித்து கொடுங்கள்.
பேரிடரிலிருந்து மீளுதல்
பேரிடரிலிருந்து மீண்டு வருவது, எளிதானதுமல்ல விரை வானதுமல்ல. மீண்டு வருவதென்பது, மெதுவாகத்தான் நடக்கும்.
பேரிடர்களில், பாதுகாப்பு எப்படி முக்கிய பிரச்சினையோ அதுபோலவே மனநலமும் உடல்நலனும் உடல்நலனும் முக்கியம். உதவிகள் கிடைக்கும்போது, அவற்றை எப்படி விரைவாகவும் சிரமப்படாமலும் பெறுவது என்பதை அறிந்திருங்கள்.
நிவாரணங்களை வழங்குவோரும், எந்தவகை இழப்பும் இல்லாமல் எப்படி வழங்க வேண்டும் என்பதை அறிந்திட வேண்டும். அதற்கான எளிய முறைகளை வகுத்து, அப்படியே பின்பற்ற வேண்டும்.
அதற்கான எளிய முறைகளை வகுத்து, அப்படியே பின்பற்ற வேண்டும். அப்படியானால் அப்பாவி மக்கள் மடிய மாட்டார்கள். அதிகாரிகளும், பாவத்தை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டியதில்லை.
எந்த பேரிடருக்கும் முன்னர், குடும்பத்தின் உடல் நலத்திற்கும் பாதுகாப்பிற்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். போதுமான பாதுகாப்புத் தகவல்களைப் பெறுவதோடு, குடும்பத்தினரின் உடல்நலத்தையும், நல்வாழ்வையும் கவனிக்க வேண்டும்.
பேரிடருக்குப் பின்னர், வீட்டிற்குத் திரும்புவது, உடல் அளவிலும் உள்ளத்தின் நிலையிலும் சாவல்தான். எனவே, எச்சரிக்கையுடன் இருக்கவும்.
1.பேட்டரியில் இயங்கும் வானொலியை வைத்திருந்து, அவசரகால அறிவிப்புகளைக் கேளுங்கள்.
2. சேதடைந்த வீட்டை, டார்ச் லைட் உதவியால் மட்டுமே பரிசோதியுங்கள்.
3. ஆபத்தான விலங்குகளை குறிப்பாக பாம்புகளைப் பற்றி எச்சரிக்கையுடன் இருங்கள்.
4.குப்பைக் கூளங்களை, கம்புகளால் மட்டுமே அகற்றுங்கள்.
5.உயிருக்கு ஆபத்தான, அவசரநிலை பற்றிய தகவல்களைத்தெரிவிக்க மட்டுமே தொலைபேசியைப் பயன்படுத்துங்கள்.
6. சாலைக்குச் செல்லாதீர்கள். கட்டாயம் போக நேர்ந்தால், கீழே விழும் பொருட்கள், துண்டிக்கப்பட்ட மின் கம்பிகள்,
வலுவிழந்த சுவர்கள், பாலங்கள், சாலைகள் மற்றும் சுற்றுச்சுவர்கள் பற்றி எச்சரிக்கையுடன் இருங்கள்.
உங்கள் வீட்டிற்குள் நுழையும் முன்பு, கவனமாக வீட்டைச்வாசமோ அல்லது வாயு கசியும் ஒலியோ அல்லது வெடிக்கும் சத்தமோ கேட்டால், ஜன்னல்களைத் திறந்து வைத்துவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்.
அண்டை வீட்டிலிந்து எரிவாயு நிறுவனத்திற்கு தகவல் தெரிவியுங்கள். வீட்டினுள் எரிவாயுத் கசிவோ பிற எரியும் பொருட்களோ இல்லை என்று உறுதியான பின்னரே, வாயு விளக்குகள், மெழுகு வாதுகுதிகள் போன்றவற்றை வீட்டினுள் பயன்படுத்தலாம்.
நீங்கள் நனைந்தருக்கும்போதோ அல்லது நீரில் நின்று கொண்டோ மின் இணைப்புகளை சோதிக்காதீர்கள். முடிந்தால் வீட்டின் மின் இணைப்பை துண்டித்துவிடுங்கள். நிலைமை பாதுகாப்பற்றதாக இருந்தால், கட்டிடத்தை விட்டு வெளியேறி, உதவிக் கோருங்கள்.
ஆபத்து இல்லையென்று உறுதியாகும்வரை விளக்குகளைப் போடாதீர்கள். மின் பொறியாளரை கொண்டு வீட்டின் மின் இணைப்புகளை பரிசோதனை செய்யுங்கள்.
வீட்டில் கீரல்கள் ஏற்பட்டு, கட்டிடம் மோசமான நிலைமையில் இருந்தால், உடனடியாக வெளியேறுங்கள். வீட்டு உபயோகப் பொருட்கள் ஈரமாக இருந்தால், வீட்டு மின் இணைபபை துண்டித்து விட்டு, அப்பொருட்களை எடுத்து காய விடுங்கள். மீண்டும் அதைப் பயன்படுத்தும் முன்பு, தேர்ந்த நிபுணர்களை கொண்டு சோதியுங்கள்.
தண்ணீரைப் பயன்படுத்தும் முன்பும், அது தரமானதா என்று சோதிக்கவும். மாசு அடைந்திருக்கலாம் அல்லது வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்டால், அத்தகைய உணவுப் பொருட்களை, உண்ணாதிர்கள், சாக்கடைநீர், பாக்டீரியா அல்லது வேதிப் பொருட்களால் வீடு மாசடைந்திருந்தால், தூய்மை செய்யவும்.
வீடு சேதமடைந்திருந்தால் உங்களது காப்பீட்டு முகவரை அழைத்து, புகைப்படம் எடுக்கச் செய்யவும். சேதம் மற்றும தூய்மைப் படுத்துவதற்கான சரியான செலவை மதிப்பிடவும், இது உதவும்.
சில வேளைகளில், பேரிடரின்போது ஏற்படுகின்ற நிதி சிக்கல், வீடு இழப்பு நெருக்டியைவிட, உணர்வுப்பூர்வமாக ஏற்படும் இழப்பு பெரிய அளவில் அழிவை ஏற்படுத்தும். பேரிடர் நிகழ்வுகளைப் புரிந்து கொள்ளுங்கள், எதிர் கொள்ளுங்கள் , சமாளியுங்கள்…

No comments:

Post a Comment