பெருங்காற்று அல்லது சூறாவளி வீசும்போது, எது காப்பு ?
சூறாவளி வீசும்போது, நீங்கள் வீட்டில் இருந்தால்,
i) வீட்டின் அடித்தளத்திற்குச் (Basement) சென்று விடுங்கள்,
ii) ஜன்னலில்லாத அறைகளில் அடைக்கலம் பெறுங்கள்,
iii) சிறிய தனியறை, மறைவிடம், ஒதுக்கிடம், அல்லது கழிப்பிடம் மிகவும் பாதுகாப்பானது,
iv) படிக்கட்டுகளின் கீழும் பதுங்கிக் கொள்ளலாம்,
v) ஜன்னல்களைத் திறவாதீர்கள்;, ஜன்னல் ஓரமும் நில்லாதீர்கள்,
vi) கதவுகளருகிலும் நிற்காதீர்கள்,
vii) காற்று நுழையக் கூடிய ஒரு இடத்தையும் நாடாதீர்கள்,
viii) மிக கனமான மேஜைகளின் கீழே பதுங்கிக் கொள்ளலாம்,
ix) தற்காலிக வீடுகளில் இருந்தால், உடனே பாதுகாப்பான இடத்துக்கு வெளிளேறுங்கள்,
x) மிகவும் கனமான, உறுதியான கட்டிடங்களில் மட்டுமே அடைக்கலம்
புகுங்கள்,
புகுங்கள்,
xi) சூறாவளிப் புயலின் வேகம் மற்றும் திறன் அறிந்து (செய்திகளைக் கேட்டு)
அதற்கேற்ப பாதுகாப்தை; தேடிக் கொள்ளுங்கள்.
அதற்கேற்ப பாதுகாப்தை; தேடிக் கொள்ளுங்கள்.
சூறாவளி ஏற்படுவற்கு முன்:
1. கட்டுப்பாட்டு அறையொன்றை அமைத்துச் செயல்பட
வேண்டும். ஆபத்து ஏற்படவிருக்கும்போது, முன்னதாகவே மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
வேண்டும். ஆபத்து ஏற்படவிருக்கும்போது, முன்னதாகவே மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
2. ஆபத்தை அறிந்து கொண்டு, அதற்கேற்ப மக்களை வெளியேற்ற வேண்டும்.
3. பாதுகாப்பான இடத்திற்குப் போக, மக்களை முறைப்படி வழிப்படுத்த
வேண்டும்.
வேண்டும்.
4. தங்கும் இடத்தையும் முதலுதவிப் பெருட்களையும் (பிளிச்சிங் பவுடர்,
உணவு வகைகள், குடிநீர் மற்றும் சுகாதார சாதனங்கள்) தயார்படுத்த வேண்டும்.
உணவு வகைகள், குடிநீர் மற்றும் சுகாதார சாதனங்கள்) தயார்படுத்த வேண்டும்.
சூறாவளியின் போது எப்படி செயல்பட வேண்டும்:
1. இடிபாடுகளுக்கிடையே தத்தளிக்கும் மக்களைக் கண்டு பிடித்து மீட்கவேண்டும்.
2. முகாம்கள் அமைத்து, நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
3. சேதமடைந்த நீர் ஆதாரங்களைச் சரி செய்ய வேண்டும்.
4. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாய் முதலுதவி வழங்க வேண்டும்.
5. தொற்று நோய்கள் வராமலும், பரவாமலும் தடை செய்ய வேண்டும்.
6. காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும்.
7. இறந்து போனவர்களின் உடல்களை எரியூட்ட வேண்டும்.
8. தகவல் தொடர்புக்கான அமைப்புகளைச் சரிசெய்ய வேண்டும்.
9. ஏற்பட்ட சேதங்களை முதலில் தோராயமாகக் கணக்கிட வேண்டும்(பின்னர் சரியாகக் கணக்கெடுக்க வேண்டும்).
10. பாதிக்கப்பட்டவர்களின் உரிமைப் பொருட்களை மீட்டுத்தர முனையவேண்டும்.
சூறாவளிக்குப் பின்:
1. அனைவருக்கும் நிவாரணப் பொருள்களை சமமாகப்பங்கிடுதல் வேண்டும் (அதில் அரசியல் கூடாது)
2. நிவாரணப் பொருட்களை வழங்கிடும் இடங்களை அதிகரித்து, கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும். (ஒருவர் கூடமடியக் கூடாது).
3. குடிநீர்த் தொட்டிகளையும், சுகாதார வசதிகளையும், இடிந்த வீடுகளையும் திரும்பக் கட்டுதல் வேண்டும்.
4 . சேதத்தின் மதிப்பையும், சேதங்களைச் சரிசெய்யத்தேவைப்படும் பணத்தையும் சரியாகக் கணக்கிட்டு, இணக்கமான
உறவோடு மாநில அரசுகள், மைய அரசிடம் கேட்டு வாங்க வேண்டும்.
உறவோடு மாநில அரசுகள், மைய அரசிடம் கேட்டு வாங்க வேண்டும்.
5. சேதம் அடைந்த பொது வசதிகளைச் சரிசெய்யத் தேவையான நிதியை மதிப்பிட்டு, எதிர்காலத்தில் ஏற்படும் பேரிடரைத் தடுக்கவும், நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சூறாவளிக் காற்று வீசும் வேளைகளில் வெளியில் இருக்க நேர்ந்தால்,
i) நான்கு சக்கர வாகனங்களில் இருக்காதீர்கள். அவற்றைத் தொடர்ந்து ஓட்டாதீர்கள். அப்படியே நிறுத்திவிட்டு வெளியேறுகள்.
ii) பள்ளமானதோர் பகுதியைத் தேடி, அது குழியானாலும், அதிலே படுத்து மறைந்து கொள்ளுங்கள்.
iii) சூறாவளிக்காற்று, எந்தக் கடினமான பொருளையாவது, உங்கள் மீது வீசவிட்டுச் செல்லலாம். எனவே, கைகளால் தலையை மூடிக் கொள்ளுங்கள்.
iv) எந்த நேரம் என்ன நடக்கும் என்று ஒன்றும் சொல்லமுடியாது. முழுக்கவனம் மட்டும் வேண்டும். இரண்டு சக்கர வாகனத்தை விட்டு இறங்கி, நீங்கள் பதுங்கிக் கொள்வீர்களால், தலைக் கவசத்தை (Helmet) கழற்றாதீர்கள். அதுவே சிறந்த பாதுகாப்பு – தலைக்கு மட்டும்.
பாதுகாப்பு:
i) வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
ii) தூரத்துப் பயணங்களை மேற்கொள்ளக் கூடாது.
iii) தாழ்வான பகுதிகளில், மணல் வீடுகளில் குடியிருப்போர், உடனடியாக வீடுகளைக் காலி செய்திட வேண்டும்.
iv) வாகனங்களில் செல்வோர், குறிப்பாகப் பாலங்களைக் கடப்போர், பாலங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடும்போது, வெள்ளத்தின் ஆபத்தை உணர்ந்து, பாதுகாப்பாக நின்றிட வேண்டும். பாதுகாப்பான வழியில் மட்டுமே செல்லலாம்.
v) நீச்சல் தெரியாதவர்கள், மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.
vi) மழை நீர் தேங்கியுள்ள பகுதிகளில், ஆழம் குறைவாக இருப்பினும், அறுந்த மின் கம்பிகள் கிடக்கலாம். மின் கசிவு ஏற்படலாம். எனவே நீர்வழியைத் தவிர்க்க வேண்டும்.
vii) சிறுவர்களை வெளியில் விடக்கூடாது.
viii) தாழ்வான பகுதிகளில் குடியேறக் கூடாது.
ix) குடிநீர், உணவு ஆகியவற்றில் உடல் நலப் பாதுகாப்பு கவனம் கொள்ள வேண்டும்.
x) வடிகால் பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
xi) ஆறு, ஏரிகளின் கரைகளை அவ்வப்போது அகலப்படுத்தவும், உயரப்படுத்தவும் வேண்டும். வேலைக்கு உணவுத் திட்டம், உண்மையாக இப்பகுதிகளில் செயல்படுத்தப்பட வேண்டும்.
xii) வளரும் நகரங்களின், விரிவுக்கும் மக்கள் பெருக்கத்துக்கும் ஏற்ப, பாதுகாப்புக்கான திட்டங்களைத் தொடர்;து செயல்படுத்த வேண்டும்.
xiii) நிவாரணம் அளிப்பதற்குப் பதிலாக, அதற்கு வாய்ப்பே இல்லாமல், இழப்பைத் தடுப்பது மதியுடமை ஆகும்.
மின்னல்:
மழைகாலங்களில், மின்னல்களாலும் பேராபத்துக்கள் ஏற்படுகின்றன. 95 விழுக்காடு மின்னல்கள், மேகங்களுக்குள்ளேயும், மேகங்களுக்கிடையேயும் ஏற்படுகின்றன. உலகில், சராசரியாக ஒவ்வொரு நிமிடமும் 100 மின்னல்கள் ஏற்படுவதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கின்றது.
மின்னல்களால், ஆண்டுக்கு 9000 தடவைகள் நெருப்பு பற்றிக் கொள்ளகின்றது. இந்த நெருப்புக்கு இறையாவது, காடுகளும், புல்வெளிகளும் ஆகும்.
மின்னலென்றாலும் இடியென்றாலும், நமக்கு ஏற்படுவது நடுக்கந்தான் என்றாலும், ஒருவர் மின்னலால் பாதிக்கப்படும் வாய்ப்பு 3,50,000க்கு ஒன்றுதான்.
இதனை, 6லட்சத்துக்கு ஒன்றுதான் என்னும் கணிப்பும் உள்ளது. (ஆனாலும் பயம்)
மின்னல்களால், ஆண்டுக்கு 9000 தடவைகள் நெருப்பு பற்றிக் கொள்ளகின்றது. இந்த நெருப்புக்கு இறையாவது, காடுகளும், புல்வெளிகளும் ஆகும்.
மின்னலென்றாலும் இடியென்றாலும், நமக்கு ஏற்படுவது நடுக்கந்தான் என்றாலும், ஒருவர் மின்னலால் பாதிக்கப்படும் வாய்ப்பு 3,50,000க்கு ஒன்றுதான்.
இதனை, 6லட்சத்துக்கு ஒன்றுதான் என்னும் கணிப்பும் உள்ளது. (ஆனாலும் பயம்)
மின்னலில் தாக்கத்திலிருந்து தப்பிக்க…. நீங்கள், வீட்டிலிருக்கும் போது மின்னல்கள் தோன்றினால்…
i) ஜன்னல், கதவு, இரும்புக் கம்பிகள், தொலைபேசி, ரேடியேட்டர்ஸ் ஆகியவற்றிலிருந்து விலகி நில்லுங்கள்.
ii) ரேடியே , டி.வி., கம்ப்யூட்டர், தலையில் மாட்டும் போன்கள் மற்றும் மின் கருவிகள் எவையாயினும், அவற்றின் மின் இணைப்பைத் துண்டித்து விடுங்கள்.
திறந்த வெளிப்பரப்பில் அல்லது வீட்டுக்கு வெளியே இருக்க நேர்ந்தால்…
i) பள்ளமான பகுதிகளில், குனிந்தவாறு படுத்துக் கொள்ளுஙகள்.
ii) கூட்டமாக நிற்காதீர்கள்.
iii) உங்களருகே நிற்பவரிடம் இருந்து, குறைந்தது 15அடி தூரம் தள்ளி நில்லுங்கள். ஏனெனில், கூட்டத்தினிடையே மின்னல் பாயும்; ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கும் தாவும். மின்னலைப் பொறுத்தவரை, தனிமையே பாதுகாப்பு.
iv) தண்ணீர் மரங்கள், கம்பி வேலிகள் மற்றும் தூண்களுக்கும் விலகி நில்லுங்கள்.
v) மின்னலடிக்கும் வேளைகளில், தூண்டில் போடாதீர்கள் குடை பிடிக்காதீர்கள்; உலோகத்தாலான எதையும் வைத்திருக்காதீர்கள்.
vi) விரைவில், வீட்டுக்குள் வந்து விடுங்கள்.
vii) வீட்டிலிருப்போர், இயன்றவரை வெளியில் செல்வதைத் தவிர்க்காலம்.
நீராதார மேலாண்மைக்கு, அடிப்படையாகச் சில காரியங்களைச் செய்யலாம்.
அவை:-
அவை:-
i) எதிர்காலத் தலைமுறையைக் கவனத்தில் கொண்டு, தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதைப் பற்றி, பள்ளிகளில் பாடம் வைக்க வேண்டும்.
ii) தொழிற்சாலைகள் தங்க்ள கழிவுநீரை சுத்திகரிப்பு செய்து, மீண்டும் பயன்படுத்த சட்டம் வகுக்க வேண்டும்.
iii) நட்சத்திர ஓட்டல்கள், பொழுதுபோக்கு மையங்கள், குளிர்பான நிறுவனங்கள் போன்றவை, தங்கள் விருப்பத்துக்கு ஆழ்துளைக் கிணறுகளைப் போடுவது ஒரு குற்றமாக்கப் பட வேண்டும். இப்படி, நீர் வளத்தைப் பாதுகாக்கச் செய்ய வேண்டிய காரியங்கள் குறித்து சிந்திப்பதையும் செயல்படுவதையும் அரசு தன் முதல் கடமையாகக் கொண்டல், இதற்கெல்லாம் விடிவு பிறக்கும்.
iv) வெள்ள நீரைத் தேக்கி வைக்க, பெரிய நீர் நிலைகளை உருவாக்க வேண்டும்.
v) 5,000 கனமீட்டர் கொள்ளவு கொண்ட, 3,39,804 பண்ணைக் குட்டைகளை அமைத்து 600 கோடி கன அடி மழைநீரைத் தேக்க முடியும்.
vi) இவற்றால் பாசனத்தை மேம்படுத்தலாம், மீன் வளத்தை மேம்படுத்தலாம். எண்ணற்ற மக்களுக்கு வேலை வாய்ப்பு தரலாம். புரதப் பஞ்சத்தையும் குறைக்கலாம் ஃ நீக்கலாம்.
vii) இக்குட்டைகளில், ஆண்டொன்றுக்கு 240 கோடி கன அடி நில நீர் வளத்தைப் பெருக்கலாம்.
viii) பண்ணைக் குட்டைகளை அமைக்கத் தேவைப்படும் 1,020 கோடி ரூபாயை, இந்தியாவின் பேரழிவு நிதியில் இருந்து பெற்றுப் பயன்படுத்தலாம்.
‘மூன்றாம் உலகப் போர் தண்ணீருக்காக நடக்கும்!’ என்று எச்சரிக்கிறார்கள் சமூகவியலாளர்கள்!’
அப்படிப்பட்ட மிக முக்கியமான முதல் தேவையான இயற்கை வளத்தைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அதனை, நாம் இழக்கவும் கூடாது; அதனால் நாம் இழப்புக்குள்ளாகவும் கூடாது. தண்ணீரை வாழவைத்தால் தான் நாம் வாழலாம். நமது வாழ்வும் வளமும் மங்காது சிறக்க வேண்டுமானால், நீர் வளம் ஓங்க வேண்டும். அதற்கான பணிகளைத் திருப்பணிகள் போலச் செய்ய வேண்டும்.
வறட்சி:
வாட்டி எடுக்கும் இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றான வறட்சியும் கொடுமையானது. குடிநீருக்குப் பஞ்சம், வேளாண்மை ஓய்தல், மேய்ச்சல் நிலங்கள் காய்தல், கால்நடைகள் உணவின்றியும் நீரின்றியும் சாதல், மக்களுக்கும் உணவு மற்றும் குடிநீர்ப்பஞ்சம், கிராம மக்களுக்கு வேலை இண்மை, அதனால் அவர்கள் ஊரைவிட்டு வெளியேறல், மற்றும் நோய்கள் என, வறட்சியால் ஏற்படும். தொடர் தொல்லைகளுக்கு, எல்லைகள் இருப்பதில்லை.
வாட்டி எடுக்கும் இயற்கைப் பேரழிவுகளில் ஒன்றான வறட்சியும் கொடுமையானது. குடிநீருக்குப் பஞ்சம், வேளாண்மை ஓய்தல், மேய்ச்சல் நிலங்கள் காய்தல், கால்நடைகள் உணவின்றியும் நீரின்றியும் சாதல், மக்களுக்கும் உணவு மற்றும் குடிநீர்ப்பஞ்சம், கிராம மக்களுக்கு வேலை இண்மை, அதனால் அவர்கள் ஊரைவிட்டு வெளியேறல், மற்றும் நோய்கள் என, வறட்சியால் ஏற்படும். தொடர் தொல்லைகளுக்கு, எல்லைகள் இருப்பதில்லை.
வறட்சி, எத்தனை வருடங்களுக்கு ஒரு தடவை?
இந்தியாவின் குறிப்பிட்ட மாநிலங்களில், எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை வறட்சி ஏற்பட்டுள்ளது என்றவிவரம், கீழே பட்டியலிடப்பட்டுள்ளதைக் காண்க.
1. கிழக்கு ராஜஸ்தான், 2.5 ஆண்டுகளுக்கு
மேற்கு உத்திரப் பிரதேசம் , ஒருதடவை
தமிழ்நாடு, காஷ்மீர், ஆந்திரா .
மேற்கு உத்திரப் பிரதேசம் , ஒருதடவை
தமிழ்நாடு, காஷ்மீர், ஆந்திரா .
2. கிழக்கு உத்திரப்பிரதேசம் 3 வருடங்களுக்
ஒரு முறை.
ஒரு முறை.
3. பீஹா, ஒரிஸ்ஸா, 4 வருடங்களுக்கு வட கர்நாடகா ஒருமுறை.
4. மேற்கு வங்கம், 5வருடங்களுக்கு மத்திய பிரதேசம் ஒருமுறை.
5. அஸ்ஸாம் 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை.
குறைந்தபட்ச தேவைக்குக்கூட நீர்வளம் இல்லாமல், நிலம் காய்ந்து, பயிர் வாடி, கால்நடைகளுக்கு மேய்ச்சலுக்கான புல்வெளியும் இல்லாமல், விவசாயிகள் நலிந்து, குடி நீருக்கும் தட்டுப்பாடு ஏற்படடு மக்கள் அவதியுறும் நிலை வறட்சி ஆகும். நீரின்- நீர்வளத்தின் இன்றியமையாமையை, மிகத் துல்லிபமாக உணர்த்தவது வறட்சி.
வறட்சி, சில இடங்களில் தொடர்ந்து ஏற்படலாம்.
வறட்சி, சில இடங்களில் தொடர்ந்து ஏற்படலாம்.
பல இடங்களுக்கு, அது ஒரு தற்காலிகப் பாதிப்பு. எனினும், அதனால் உண்டாகும் இடையூறு அதிகம்.
வழக்கமாகக் குறிப்பிட்ட பருவகாலத்தில் பெய்யும் மழை, தொடர்ந்து சில ஆண்டுகள், பருவகாலங்களில் பெய்யாமல் பொய்த்துவிட்டால், நிலத்தடி நீர்வளமும் குன்றிவிடும். இதனைத் தொடர்ந்து, நிலத்தடி நீரும் கிடைக்காது. இதுவே வறட்சியின் மிரட்சி எல்லை.
வழக்கமாகக் குறிப்பிட்ட பருவகாலத்தில் பெய்யும் மழை, தொடர்ந்து சில ஆண்டுகள், பருவகாலங்களில் பெய்யாமல் பொய்த்துவிட்டால், நிலத்தடி நீர்வளமும் குன்றிவிடும். இதனைத் தொடர்ந்து, நிலத்தடி நீரும் கிடைக்காது. இதுவே வறட்சியின் மிரட்சி எல்லை.
பஞ்சம். ஒரு குறிப்பிட்ட வருடத்தில், வேளாண்மை சிறப்பாக உள்ளபோது, நெற்பயிர்களும் பூத்து, பால்பிடித்து நெல்விளைய வேண்டிய வேளையில், பாய்ச்சுவதற்கு நீரில்லாமல், குளங்களும், ஏரிகளும், ஆறுகளும் வரண்டுபோவதுண்டு. அப்போது, விளையும் பயிர், நமது கண்முன்னே வாடி, வரண்டு, காய்ந்துபோகும். இதனால், வீணாவது எவ்வளவு விளைச்சல்? இழப்புக்குகளாவது எவ்வளது விளைச்சல்? என்னால் இயன்றது இவ்வளவுதான் என்று, தன்இயலாமையை வாய்திறந்து நிலம் சொல்வதுபோல, வயலின் நிலமது வெடித்துக் கிடக்கும். வறட்சியின் உச்சகட்டமிது, இன்னும் சில வாரங்களில் விளைந்து, விளைச்சலைத் தரவேண்டிய பயிர், விளையாமலே ஆட்டுக்கும் மாட்டுக்கும் தீனியாய்ப போகும். அதைத் தொடர்ந்து வரும் சில வாரங்களில், கால் நடைகளுக்கு அந்தத் தீனியும் இல்லாமல்போகும். இறுதியாக, ஆடுமாறுகளும் மடியும். மக்கள், தம் இருப்பிடங்களைக் காலி செய்துவிட்டு நீர்வளமுள்ள இடங்களுக்கு பிழைப்பபைத் தேடி குடும்பத்தோடு பரிதாபமாகப் செல்வர்.
சராசரி அளவுக்கும் மேல் வருடந்தோறும் மழைபெய்யும் பகுதிகளில், வறட்சி உண்டாக வழியில்லை. சராசரியளவில் மழைபெய்யும் பகுதிகளிலும், வறட்சி ஏற்படுவதில்லை. மழை நிறைந்த பகுதிகளுக்கும், வறட்சிக்கும் தொடர்பில்லை. எதிர் பார்த்த, அல்லது தேவையான, குறைந்த அளவு மழைகூட, எப்போது பொழிவதில்லையோ, அப்போது, வறட்சி என்னும் பயங்கரம், தலைவிரித்து ஆடுகிறது.
சராசரி அளவுக்கும் மேல் வருடந்தோறும் மழைபெய்யும் பகுதிகளில், வறட்சி உண்டாக வழியில்லை. சராசரியளவில் மழைபெய்யும் பகுதிகளிலும், வறட்சி ஏற்படுவதில்லை. மழை நிறைந்த பகுதிகளுக்கும், வறட்சிக்கும் தொடர்பில்லை. எதிர் பார்த்த, அல்லது தேவையான, குறைந்த அளவு மழைகூட, எப்போது பொழிவதில்லையோ, அப்போது, வறட்சி என்னும் பயங்கரம், தலைவிரித்து ஆடுகிறது.
வறட்சி, தற்காலிகமானதாக இருக்கலாம். ஆனாலும், அதன் பாதிப்பு பாதிப்புதான். குடிநீருக்குக் கூட வழியில்லாமல் போய்விடுவதால், வறட்சி மிகவும் கொடுமையானது; தாங்க முடியாதது. சில ஆண்டுகளுக்கு முன்னர், சரக்கு ரெயில்களில், குடிநீர் சென்னைக்குக் கொண்டு வரப்பட்டதெல்லாம். உச்சகட்ட வறட்சியின் வெளிபாடே!
வரும் காலங்களில், மீண்டுமெரு உலகப்போர் ஏற்படுமானால், அது குடிநீருக்காக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. நமது நாட்டிலும், அண்டை மாநிலங்களுக் கிடையேயான உறவு அறுந்து கிடப்பதும், நதி நீர்ப்பங்கீட்டால் தானே! நீர் வளத்தில்,
இந்தியா இன்னும் சிறப்புக்கவனம் செலுத்தி, பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணவில்லை யானால், மாநிலங்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரியும அபாயம் ஏற்படும், இதனை, அனைவரும் எச்சரிக்கையாய்க் கொள்ள வேண்டும்.
வறட்சியும் இயற்கையின் இடர்பாடுதான். அது, மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர், பேசாமலே தரும் தண்டனை போன்றது. மழை, பெய்யாம் (பேசாமல்) தரும் தண்டனை இது, சிலர், யாகங்கள் எழுப்பி மழையைப் பெற்றுவிடலாம் எ ன எண்ணுகின்றனர். இன்னும் சிலர், இடுப்பளவு தண்ணீரில் நின்று வீணையை மீட்டினாலும் பாடினாலும், வானம் பொத்துக்கொண்டு ஊற்றிவிடும் என்று நம்புகின்றன. இன்னும் சிலர் இது ‘தெய்வகுற்றம்’ என்று, பொதுவாக ஒரு காரணத்தைப் போட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். இவை, அவர்களால் இயன்றவை.
வறட்சியும் இயற்கையின் இடர்பாடுதான். அது, மிகவும் வேண்டிய நண்பர் ஒருவர், பேசாமலே தரும் தண்டனை போன்றது. மழை, பெய்யாம் (பேசாமல்) தரும் தண்டனை இது, சிலர், யாகங்கள் எழுப்பி மழையைப் பெற்றுவிடலாம் எ ன எண்ணுகின்றனர். இன்னும் சிலர், இடுப்பளவு தண்ணீரில் நின்று வீணையை மீட்டினாலும் பாடினாலும், வானம் பொத்துக்கொண்டு ஊற்றிவிடும் என்று நம்புகின்றன. இன்னும் சிலர் இது ‘தெய்வகுற்றம்’ என்று, பொதுவாக ஒரு காரணத்தைப் போட்டு விட்டுச் சென்று விடுகின்றனர். இவை, அவர்களால் இயன்றவை.
மழை என்றால் என்ன? மேகம் எப்படி உருவாகிறது? நீராவியாதல் என்றால் என்ன, நீர்ச்சக்கரம் என்பது எப்படி முழுமையாகிறது? இவற்றுக்கு அடிப்படையான அறிவியல் காரணங்கள் என்னென்ன,
தேவைகள் யாவை என்றறிருந்து, இயற்கையினைப் பாதுகாத்தால், மழை நம்மைக் கைவிடாது. மழையையும், மழை நீரையும் மதிக்காமல், மேலாண்மை தெரியாத (செய்யாத) முழுமையான முட்டாள்களாய், மழை நீரை இன்னும் வீணடித்தால், நிலைமை பரிதபம்தான்.
சில இழப்புகளை, அல்லது ஏமாற்றங்களை எதிர்பார்த்து, நாமும் சேமிப்பில் கவனம் கொள்ள வேண்டும். நீர்ச் சேமிப்பில் மிகுந்த கவனம் கொள்ள வேண்டும். இல்லையேல், அள்ளிப்பருகிய நீரைத் தொட்டுப்பார்க்கக்கூட நீரிருக்காது.
நிலத்தடி நீர் வளமும் மேம்பட, இயன்றவை எல்லாவற்றையும் செய்திட வேண்டும். வளவாய்ப்புகளைப் பயன்படுத்துவது அறிவு. வளவாய்ப்புகளைச் சேமிப்பது ஞானம். அந்த ஞானம் நமக்கு வேண்டும்.
காற்றும் மழையும் பொதுவானவை; பொதுச் சொத்து. அவற்றுக்கு எவரும் தனியுரிமை கொண்டாட முடியாது. கொண்டாடக் கூடாது. இந்தியா என்பது ஒருநாடு. எனவே, மாநிலங்கள் தமது எண்ணப்படித் தடுப்புச் சுவர்கள் எழுப்பி அல்லது குறுக்கே அணைகளைக் கட்டிக் கொண்டு, எனக்குப்போக மீதி உனக்கு என்ற எண்ணத்தில், செயல்படக் கூடாது. அத்தகைய நிலையை முதலில் மாற்றியாக வேண்டும்.
வலிமையான ஒரு மைய அரசு இல்லாமையால், இதுபோன்ற காரியங்களில் ‘சமநீதி’ கிடைப்பது இல்லை.
இந்தத் தொல்லை, என்று மறையும்?
பெருமழை பெய்யும் காலங்களில், அழிவுக்கு அளவில்லை, வீணாகக் கடலில் கலக்கும் நீரும் கணக்கில்லை. (கடலிலும் நீர் ஓரளவு கலக்க வேண்டும். இல்லையேல், கடல் வளவாய்ப்புகள் குறைந்து, கடல் ‘கலங்கி’விடும்) வீணாகிப் போகும் நீரைக் சேர்த்து வைக்கவும், பயன்படுத்தவும், பெருந்திட்டங்களைத் தீட்ட வேண்டும்; செயல்படுத்தவும் வேண்டும்.
நாட்டின் குறிப்பிட்ட நதிகளை இணைத்து, வெள்ளப் பெருக்குக் காலங்களில் அந்நீரைத் தேவைப்பகுதிகளுக்குத் திசை தருப்பிவிட்டால், இந்திய நாட்டின் முழு மண்ணும் நனையும். வறட்சி, தானாய் மறையும்.
ஒரு வேளாண் நாட்டுக்கு, இதைவிட முன்னுரிமையான திட்டம், வேறு ஒன்றுமே தேவையில்லை. நாட்டுப் பாதுகாப்புக்கான திட்டத்துக்கு இணையான சிறப்பு முக்கியத்துவம் தந்து, எப்படியேனும் நீர்வள ஆதாரத் திட்டங்களை நிறைவேற்றியாக வேண்டும்.
ஒட்டுமொத்தமாக இல்லை என்றாலும், பலவேறு கட்டங்களாக, ஆனால், ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் முனைப்பான நோக்குடன், இத்திட்டம் நிறை வேற்றப்பட்டாக வேண்டும். நிறைவேற்றினால்,
i) வறட்சி வறண்டு போகும்,
ii) வேளாண்மையின் கீழ்வரும் புதிய நிலப்பரப்புகள் பெருகும்,
iii) முப்போகம் பயிர் செய்தல் சாத்தியமாகும்,
iv) மீனவளர்ப்பு, கொடி கட்டிப் பறக்கும்,
v) நிலத்தடி நீர் மட்டம், நாடு முழுவதும் சிறக்கும்.
vi) கடல்வளமும் மேம்படும்.
vii) எப்போதாவது வானம் பொய்த்தாலும், பாதிப்பு பெரிதாய் இருக்காது. எனவே, வறட்சி என்னும் பேரிடரினின்று மக்களைப் பாதுகாப்பது முக்கிய மென்பதை, மாநில அரசுகளும் மைய அரசம் உணர்ந்து. அதற்கு முன்னுரிமை தந்து செயல்பட வேண்டும்.
அசோக மன்னன், ஒரு அரசனாகச் செய்ததை ஒரு அரசு செய்யக் கூடாதா? செய்ய முடியாதா? முடியாட்சியைவிடக் குடியாட்சி குறுகியதா?
அக்காலக் குறுநில மன்னர்கள், நீர்வள வாய்ப்பைக் காத்திட மேற்கொண்ட நடவடிக்கைகளை, இக்கால அரசுகள் செய்திடக் கூடாதா? அதைக் கடமை என்று கொள்ள வேண்டும். வீடுகள் தோறும் மழை சேமிப்பு முறையைப் பின்பற்ற வேண்டும் என்று ‘மிரட்டிய அரசு’ (விழிப்புணர்வு மூலம் உணர்தியிருக்க வேண்டும்) அரசாக, ஒரு முன்னுதாரணமாக, மழைநீரைச் சேமிக்கப் பொது இடங்களில் என்ன செய்தது? என்று மக்கள் எழுப்பும் நியாயமான குரலுக்கு, யார் பதிலுறைப்பது?
ஆழ்ந்து, தொலை நோக்குப் பார்வையுடன், அவசிய காரணங்களுக்கெல்லாம் உரிய முக்கியத்துவம் தந்து, வல்லுனர்களின் ஆலோசனைகளையும், வழிகாட்டு தலையும் பெற்று செயல்பட்டால்
வறுமையும் இருக்காது – ஒரு
எருமையும் சாகாது.
எருமையும் சாகாது.
இன்றுள்ள நிலையில், நிலையில், கழிவு நீரையும் சுத்திகரித்துப் பயன் படுத்த வேண்டும். நீர்மாசுபடுவதை, முற்றிலும் தவிர்க்க வேண்டும். பாதுகாப்பான குடிநீரை, மக்களனைவருக்கும் வழங்க வேண்டும்.
ஒன்றரை ரூபாய்க்குமேல் ஆகாத ஒரு லிட்டர் குடிநீரை, மக்களனைவருக்கும் வழங்க வேண்டும். ஒன்றரை ரூபாய்க்குமேல் விற்று, பெருங்கொள்ளை அடிப்பதைத் தடுக்க வேண்டும்.
பாலின் விலைக்கு நிகராகத் தண்ணரை விற்கவிட்டால், அத்தகைய அனுமதிக்கு என்ன பெயர்?
மக்களுக்குத் செய்ய வேண்டிய கடமைகளிலிருந்து, பொறுப்பில் உள்ளவர்கள் விலகுவதில் என்ன நியாயம் இருக்க முடியும்? கல்வி வழங்குவதும், அதற்கான வசதிகளைப் பெருக்குவதும் முக்கியமான கடமை இல்லையா?
நீர் வளத்துக்குப் பொறுப்பேற்பதும், அதனைப் பெருக்க வேண்டியதும் மக்களாட்சியின் பொறுப்பில் இல்லையா? தான் செய்ய வேண்டிய தலையாய பணிகளை விட்டுவிட்டு, தானே சாராயக் கடைகளை – அதுவும் தண்ணீர் தானே என்று நடத்த முற்படுவதில் என்ன தர்மம் இருக்கிறது?
தண்ணீர் துலிகள்:-
• மார்ச் மாதம் 22ஆம் தேதி, உலக தண்ணீர் தினம்.
• 1993-ஆம் ஆண்டிலிருந்து தண்ணீர் தினம் அனுசரிக்கப் படுகின்றது.
• காற்றை, இன்று விலையில்லாமல் பெறுகிறோம்.
• தண்ணீரையோ விலைக்கு வாங்குகிறோம்.
• தண்ணீர் வியாபாரம் கொழிக்கிறது.
• கனடா நாடு, தண்ணீரை ஏற்றுமதி செய்கிறது.
• வறட்சியில் வாடும் நாடுகள், தாகத்தால் துடிக்கின்றன.
• உலகின் நல்ல தண்ணீரில், 70 விழுக்காட்டை விவசாயம் குடிக்கின்றது.
• தேவையான தண்ணீரை, ஒவ்வொருக்கும் தருவது அரசின் கடமை.
• தோண்டத் தோண்ட சுரக்கும் பொருள் தண்ணீர் இல்லை.
• உலகில், மூன்றிலொரு பங்கு மக்களுக்கு, இன்று தண்ணீர்ப் பற்றாக்குறை.
• இந்த அவலநிலை, 2025ல் மூன்றில் இரண்டு பேருக்கு என்று மாறும்.
• மனிதனின் தினசரி சராசரி நீர்த்தேவையை (குறைந்தது 50 லிட்டர்) நிறைவு செய்ய வேண்டும்.
• உலகம் முழுவதும் இத்தேவையை நிறைவு செய்ய, இன்றைய நிலையில், ரூ4 லட்சம் கோடி ரூபாய் தேவை.
• குடிநீரில்லாமல் துன்பப்படுவோர், 100 கோடி மக்கள்.
• பாதுகாப்பற்ற தண்ணீரால் பரவும் நோய்களால், ஆண்டுக்கு 50 இலட்சம் மக்கள் பலியாகின்றன.
• கடந்த 50 ஆண்டு காலப் போர்களுக்குக் காரணம், என்ணெய் வளம்.
• இனிவரும் போர்களுக்கு, தண்ணீரே காரணமாகும்.
• எண்ணெயின் மதிப்பைவிட, தண்ணீரின் மதிப்பு உயரும்.
• உலக அளவில் தண்ணீரின் இன்றைய நிலையை அறிய, 1500 நிபுணர்கள் கொண்ட குழுவை, ஐக்கிய நாட்டு சபை அமைத்தது. அந்தக் குழுவின் தலைவர், கோத்திலஃப் ஹெம்பெல் (ஜெர்மனியின் கீல் பல்கலைக் கழக நிபுணர்), அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்.
• ‘ எண்ணெய் வளம் தீர்ந்து விட்டால் மாற்று வழி காணலாம். அவர்.
தண்ணீர் இல்லையென்றால் கண்ணீர்தான்.
ஆப்பிரிக்க நாடுகள், தண்ணீர் இல்லாமல், வறட்சியில் இன்று தத்தளிக்கின்றன. கோடி மக்கள் மாண்டு விடுவரோ என்ற அச்சம், பலரை எச்சிலையும் விழுங்க முடியாமல் செய்து கொண்டிருக்கிறது.
வறட்சியை விரட்ட நீராதாரங்களைப் பேணுங்கள்.
வறட்சியை விரட்ட நீராதாரங்களைப் பேணுங்கள்.
கடும் வெப்பம்
கடும் வெயில் – மரணங்கள்:-
கடும் வெயில் – மரணங்கள்:-
கடுமையான வெயிலால், வெப்பம் அதிகரிக்கின்றது. கோடை காலத்தில் இந்தக் கொடுமை நிகழ்கிறது. குறிப்பாக, ஒரிஸ்ஸா, ஆந்திரா, ராஜஸ்தன், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ஆகிய மாநிலங்களில், வெயில் கொடுமையாய்ச் சுடுகிறது; மக்களைச் சாடுகிறது. இம்மாவட்டங்களில், அதிகபட்சமாக, 45டிகிரி செ.கி. முதல் (மத்திய பிரதேசம்) 49.3டிகிரி செ.கி.வரை (ராஜஸ்தானில்) வெப்பநிலை இருந்துள்ளது. கடந்த 50 ஆண்டுகளில், கடுமையான வெப்பம், 1998ஆம் ஆண்டு இந்தியாவில் நிலவியது. இந்த வெப்பத்தைத் தாங்கமுடியாமல், ஜுன் மாதம் முதல் வாரத்தில் மடிந்து போன மக்கள், குறைந்தது 2000 என்பது, மனதைக் கனக்கச் செய்கிறது. இக்காலத்தில், ஒரிஸ்ஸாவில் மட்டும் மாண்டவர், 954 பேர், அந்திராவில் 441பேரும். ராஜஸ்தானில் 220பேரும், உயிரிழந்தனர்.
கடும் வெப்பத்திற்கு முன்பு:-
1. வெப்பத் தடுப்புக் கதவுகளை அமைக்கலாம் அறையில் வெப்பநிலை, குளிர்ச்சியாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம்.
2. காலையில் அல்லது மாலையில், சுரிய வெளிச்சம் நேரடியாகப்படுவதைக் தடுக்க, ஜன்னல்களிலும், வாசலிலும் திரைச் சீலைகளை தொங்கவிடலாம்.
3. வீட்டைச் சுற்றி, நிழல்தரும் மரங்களை வளர்க்கலாம்.
4. வெளியில், வெப்பத்தாக்குதல் ஏற்படும் நிலையிருந்தால், வீட்டினுள்ளேயே இருங்கள். வெயில் தாக்காமலும், தாக்த்துக்கும், உள்ளாகாமல், கவனித்துக்கொள்ளுங்கள்.
5. வெளியே வேலை செய்யும் பொழுது, அதிகம் தண்ணீர் குடியுங்கள், அவ்வப்போது நிழலில் ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்.
6. வழக்கமான சத்தான, எளிமையான, உணவுகளை மட்டும் உண்ணுங்கள்.
7. மது வகைகளை, மெதுவாக ஒதுக்கித் தள்ளுஙகள்.
8. மிகத் தளர்வான. மெல்லிய, இள வண்ணங்களாலான, உடைகளை முழு உடலையும் மறைக்கும்படி அணியுங்கள். வெள்ளாடைகளுக்கு அதிக அங்கீகாரம் தாருங்கள்.
9. அகன்ற தொப்பியணிந்து, தலைமையும், முகத்தையும் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
10. குழந்தைகளை வாகனங்களில் இருக்க விட்டு, ஒருபோதும் கதவையும் மூடிவிட்டுச் செல்லாதீர்கள். காற்றோட்டம் ஃ வேண்டுமென்பதை மறவாதீர்
முதலுதவி:-
1. அதிக வெப்பத்தால், உடல் தோல் சிவக்கும். சிவந்து கொப்பளிக்கும்;; காய்ச்சல் உண்டாகும்;; தலைவலியும் ஏற்படும். இதற்கு, உடலின் எண்ணெய் பிசுபிசுப்புகள் நீங்கிட நல்ல சோப்பு போட்டு, ஒரு முறைக்கு இருமுறை குளித்து, உடலை குளிர்ச்சி அடையச் செய்யலாம்.
2. அதிக வியர்வை மற்றும் தலைவலியால் பாதிக்கபடுவோரை, பாதிக்கப்பட்ட தசைகளை மெல்ல நீவி விடலாம்.
3. கால்மணி நேரத்துக்கு ஒருமுறை, பருகிட அரை குவளை குளிர்ந்த நீர் கொடுக்கலாம்.
4. உடல் வெப்பம் அதிகரித்து, நாடித்துடிப் வீழ்ந்தாலும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மயக்கமடைந்திருந்தாலும், பாதிக்கப் பட்டவரைக் குளிர்ச்சியான இடத்திற்குக் கொண்டு சென்று, உடைகளைக் களைந்துவிட்டு ஈரத்துணிகளால் உடலைத் துடைத்து விட்டு, விரைவாக மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லவும்.
தீ விபத்து:
பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பணியாற்றும் அனைவரும் தீ விபத்துப் பாதுகாப்பு பற்றி அறிந்திருக்க வேண்டும். தீ விபத்து ஏற்படாமலிருக்கத் தேவையான நடவடிக்கைகள் அனைத்தையும் மேற்கொள்ளவும் வேண்டும். அதற்கு,
1. புகைப் பிடிப்பதைத் தடை செய்யலாம்.
2. தீ விபத்து ஒத்திகை தரலாம். ஊழியர்களுக்கு, அதற்கான பயிற்சி வேண்டும். தீயணைப்பு வசதிகளை சரியாகவும், நிறைவாகவும் செய்து வைத்திருக்க வேண்டும்.
3. உயிர் பாதுகாப்பு முறைகளை முழுமையாய் நடைமுறைப் படுத்த வேண்டும்.
தீயைத் தடுப்பதற்கான வழிமுறைகள்:-
1. சமைக்கும்போது மிகத் தளர்வான ஆடைகளை அணிவதைத் தவிர்க்கலாம்.
2. அடுப்பு எரியும்போது, அடுப்பையும், நெருப்பையும் எப்போதும் கவனித்தவாறு இருங்கள்.
3. திரிவிளக்குகள் அல்லது மெழுகுவர்த்திக்கு பதிலாக, டார்ச் லைட்டுகளைப் பயன்படுத்துங்கள்.
4. எரியும் விளக்குகளை, கவனமாகக் கண்காணியுங்கள்.
5. தீப்பெட்டிகளையும், லைட்டர்களையும், சிறார்களுக்கு எட்டாதபடி வைக்கவும்.
6. பட்டாசுகளை கவனமின்றிப் பயன்படுத்தாதீர்கள்.
7. மின்சாதனங்களில் அதிக மின் பளுவை ஏற்றாதீர்கள்.
8. மின் வயர்களை அவற்றின் ஆயட்காலம் வரை மட்டுமே பயன்படுத்துங்கள்.
9. மின் வயர்களை அவ்வப்போது சோதித்துப் பார்த்து, சேதமடைந்தவற்றை உடனே மாற்றி விடுங்கள்.
கல்வி நிலையங்களிலும்,அலுவலகங்களிலும் தீ தடுப்பு நடவடிக்கைகள்:-
1. அனைத்து தீ விபத்துகளைக் குறித்தும் நிர்வாகத்திற்கும் தீயணைப்புத் துறைக்கும் தெரிவியுங்கள்.
2. கட்டிடத்தில் எங்கெங்கு தீயணைப்பு கருவிகள் உள்ளன என்பதை, தெரிந்து வைத்திருங்கள். அவற்றைப் பயன் படுத்தவும் அறிந்து கொள்ளுங்கள். இக்காரியத்தில் மாணவர்கள் அனைவர்களுக்கும், ஊழியர்களுக்கும் பயிற்சியளிக்க வேண்டும்.
3. சமையல் எரிவாயு சிலிண்டரை பாதுகாப்பாக வைக்கவும்.
4. சோதனைக் கூடங்களிலும், பிற இடங்களிலும் ஆக்ஸிஜன் மற்றும் எரியக்கூடிய பொருட்களை கவனமாக கையாளவும்.
5. புத்தகங்கள், தாள்கள், வேதிப்பொருட்கள் போன்றவற்றை சூடாகும் பொருட்களிடமிருந்து விலக்கி வைக்கவும்.
6. பொருட்களை சேர்த்து வைக்கும் அறைகளில், மரத்தூள்கள். மரச்சீவல்கள், எண்ணெய் பொருட்கள் போன்ற ஆபத்தான பொருட்கள் இடம்பெற வேண்டாம்.
7. வெளியேறும் வாயில்களில், ‘வெளியே’ எனும் விளக்கு பலகைகளும் அவசரக் கால விளக்குகளும் வேலை செய்வதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.
No comments:
Post a Comment