பேரழிவு:
உலக சுகாதார நிறுவனம் (WHO – World Health Organisation), பேரழிவை விளக்கியிருக்கின்றது. அதன்படி, பொருளாதாரம், வளவாய்ப்புகள், மக்களின் உயிர், மக்களின் ஆரோக்கியம், உடல் நலம்பேண உதவும் சேவைகள் ஆகியவற்றில் ஏற்படும் சேதங்கள் அல்லது அழிவுகள், நாமே சரிசெய்து கொள்ள முடியாதபடி, உடனடி உதவிக்கும் மீண்டும் பழைய நிலைமையை அடைவதற்கும் மற்றவர்களின் (அல்லது வெளிநாட்டவரின்) உதவி பெருமளவில் தேவைப்படும்படி அழிவு அதிகமாய் இருந்தால், அத்தகைய அழிவு பேரழிவாகும்.
அழிவுக்கு, இயற்கையே காரணமாக அமைந்தால், அது இயற்கைப் பேரழிவு ஆகும்.
பேரழிவுகளின் வகைகள்:
பொதுவாக, பேரழிவுகளைக் கீழ்கண்ட மூன்றாக வகைப்படுத்தலாம்.
1. இயற்கைப் பேரழிவுகள் (Natural Disasters)
2. மனிதரால் ஏற்படும் பேரழிவுகள் (Man – Made Disasters).
3. மற்ற காரணங்களால் ஏற்படும் பேரழிவுகள் (Other Disasters).
இவை மூன்றும், பெருமளவுச் சீரழிவுகள் மற்றும் சிறிதளவுச் சீரழிவுகள் என்றும் பிரிக்கப்படும். எப்படிப் பிரித்தாலும், அழிவு அழிவுதானே.
இத்தகைய அழிவுகளை, கீழே முறையாக வரிசைப்படுத்தியிருப்பதைக் காண்க.

1.இயற்கைப் பேரழிவுகள்:
1.1பெரியவை:
1.1.1 நிலநடுக்கம்(Earthquake)
1.1.2 வெள்ளம் (Flood)
1.1.3 வறட்சி (Drought)
1.1.4 புயல் (Cyclone)
1.1.1 நிலநடுக்கம்(Earthquake)
1.1.2 வெள்ளம் (Flood)
1.1.3 வறட்சி (Drought)
1.1.4 புயல் (Cyclone)
1.2. சிறியவை:
1.2.1 வெப்ப அலைகள் – கடும் வெப்பம் (Heat Wave)
1.2.2 குளிர் அலைகள் – கடுங்குளிர் (Cold Wave)
1.2.3 நிலச்சரிவு (Land Slide)
1.2.4 பனிச் சரிவு (Avalanche)
1.2.5 சுறாவளி (Tornadoes)
1.2.6 புயல்காற்றோடு கூடிய ஆலங்கட்டி மழை (Hailstorm)

2.மக்களால் ஏற்படும் பேரழிவுகள்:
2.1 பெரியவை:
2.1.1 ஜாதிக்கலவரங்கள் (Communal riots).
2.1.2 இனக்கலவரங்கள்(Ethnic conflicts).
2.1.3 அகதிகளின் நிலைகளால் (Refugee situations).
2.1.1 ஜாதிக்கலவரங்கள் (Communal riots).
2.1.2 இனக்கலவரங்கள்(Ethnic conflicts).
2.1.3 அகதிகளின் நிலைகளால் (Refugee situations).
3.மற்ற பேரழிவுகள்:
3.1 பெரியவை:
3.1.1 கொள்ளை நோய் மற்றும் தொற்று நோய்களால் (Epidemics)
3.1.2 தொழிற்சாலைகளால் ; (Industrial disasters)
3.1.3 தீயினால்; (Fire)
3.1.4 புதிய கொள்கை முடிவுகளுக்கு எதிர்ப்பால்(Policy induced disasters)

3.2 சிறியவை:
3.2.1 போக்குவரத்துகளால்; (By Transport).
3.2.2 பண்டிகைக் கொண்டாட்டங்கள் மற்றும் யாத்திரைகளை மேற்கொள்வதால்(Festival & Pilgrimage related disasters).
3.2.3 உணவால் (நச்சாவதால்) (Food).
3.2.4 கள்ளச்சாராயம் மற்றும் அதில் விஷத்தால் (Alcohol, Liquor disasters).

நிலநடுக்கம்:
புவியின் அடிப்பகுதியில் உண்டாகும் அழுத்த வேறுபாடுகளின் காரணமாக, ஏற்படும் அதிர்வுகள் (நடுக்கங்கள்), நிலநடுக்கம் ஆகும்.
எவ்வளவு நேரம் நிலம் நடுங்கும்:
எவ்வளவு நேரம் நிலம் நடுங்கும்:
பொதுவாக, பெருமளவு நில நடுக்கங்கள், சில செக்கண்டுகள் ? நேரம் மட்டுமே நடைபெறும். மிகப் பெரிய நிலநடுக்கமென்றால், 7 நிமிடங்கள் வரை நடுக்கம் ஏற்படும்: நடுங்கச் செய்யும், இத்தகைய பெரிய நிலநடுக்கம் நடந்து முடிந்ததும், மழை விட்டாலும் தூரல் விடவில்லை என்பதுபோல, அதன் தாக்கமாக, சின்னஞ்சிறிய நடுக்கங்கள் தொடரும்.
இந்துப்பெருங்கடலில் அடியில், 26.12.2004 இல் ஏற்பட்ட மிக பயங்கர (9 ரிக்டர்) நில நடுக்கத்தைத் தொடர்ந்து, அதன் பிரதிபலிப்பாக, அந்தமான் தீவுகளில் ஒரு மாதத்திற்குள் ஏறத்தாழ 100 தடவைகள் நிலம் நடுங்கியது கவனிக்கத் தக்கது.
நில நடுக்கத்தின் தீவிரம்:
நில நடுக்கத்தில் தீவிரம், பூமித்தட்டுகளின் கீழிருந்து தாக்கும் அழுத்தத்தைப் பொருத்தது; பூமித் தட்டுக்கள் ஒன்றோடொன்று மோதும் மோதலைப் பொறுத்தது; தட்டுகளின் அடர்வையும் பொறுத்தது. நிலநடுக்கம், சிறியதா, பெரியதா, மென்மையானதா அல்லது தீவிரமானதா என்பதை, நில நடுக்கத்தின்போது ஏற்படும் அலைகளை அடிப்படையாகக் கொண்டு அறிகின்றனர். இதற்கான அறிவியல் நுட்பம், 1935 ஆம் ஆண்டு, சார்ல்ஸ் எஃப் ரிக்டர் (Charles F.Richter) மற்றும் பீனோ குட்டன்பெர்க் (Beno Gutenberg) ஆகிய விஞ்ஞானிகளால் அறியப்பட்டது.
நில அதிர்வில் அளவு திறன், ரிக்டர் என்ற விஞ்ஞானியின் நினைவாக ரிக்டர் என்னும் அளவில் (Richter Scale) மதிப்பிடப்படுகிறது.
அதன்படி,
நில நடுக்கத்தின் தன்மைகள், கீழ்க்கண்டவாறு அறியப்படுகின்றன.
அதன்படி,
நில நடுக்கத்தின் தன்மைகள், கீழ்க்கண்டவாறு அறியப்படுகின்றன.
1. 0-1.90 மிக மிக மென்மையானது நாளொன்றுக்கு 8,000 தடவைகள் (Extremely minor).
2.0-2.90 மிக மென்மையானது(Very minor) நாளொன்றுக்கு 1000 தடவைகள்.
3.0-3.9 மென்மையானது (minor) ஆண்டுக்கு 49,000 தடவைகள்.
4.0-4.9 எளிதானது (Light) ஆண்டுக்கு 6200 தடவைகள்.
5.0-5.9 நடுத்தரமானது(Moderate) ஆண்டுக்கு 800 தடவைகள்.
6.0-6.9 திடமானது(Strong) ஆண்டுக்கு 120 தடவைகள்.
7.0-7.9 பெரிதானது (Major) ஆண்டுக்கு 18தடவைகள்.
8.0ம் அதற்கு மேலும் மிகப்பெரியது (Great)ஆண்டுக்கு ஒரு தடவைகள்.

நில நடுக்கத்துக்கு உட்படாமல் தப்பிக்க:
நில நடுக்கம் ஏற்படக்கூடிய பகுதிகள் என, உலகின் பல பகுதிகள் குறிக்கப்பட்டுள்ளன.
வாழ்விடங்களாக, அத்தகைய பகுதிகளைத் தேர்வு செய்யாமல், அவற்றைத் தவிர்த்து, வேறு இடங்களில் வாழலாம், வேறு வழி இல்லையெனில், நில நடுக்கத்தைத் தாக்குப் பிடிக்கும் முறையில் வீடுகளை அமைத்துக்கொள்ளலாம். அதற்கேற்ப, வீடு அல்லது கட்டடம் கட்டும் இடம், கட்டுமானப் பொருள் மற்றும் அஸ்திவாரம் ஆகியவற்றில், சிறப்புக்கவனம் செலுத்த வேண்டும்.

நிலநடுக்கத்தை முன்னறிதல்:
நில நடுக்கம் ஏற்படப் போவதை முன்னுணரும் விலங்கினங்கள், பாதிக்கப்படவிருக்கும் இடத்தை விட்டு வெளியேறி விடுகின்றன.வேகமுடன் வேறு இடத்துக்குச் சென்றுவிடுகின்றன. அப்படிச் செல்ல முடியாதவை, வரும் ஆபத்தை உணர்ந்து, தவிக்கின்றன. இத்தகைய விலங்கினங்களைக் கூர்ந்து கவனித்து, நில நடுக்கம் ஏற்படப்போவதை நாம் அறிந்து கொள்வது, நல்லதெனத் தோன்றுகின்றது.
இந்தியாவும் நில நடுக்கமும்:
இந்தியாவில், கீழ்க்காணும் மாநிலங்கள் நிலநடுக்கங்களால் பாதிக்கப்படும் மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
1. ஆந்திரப்பிரதேசம்
2. அருணாச்சல பிரதேசம்
3. அஸ்ஸாம்
4. பீஹார்
5. டெல்லி
6. கோவா
7. குஜராத்
8. ஹரியானா
9. ஹிமாச்சலப் பிரதேசம்
10. ஜம்மு – காஷ்மீர்
11. ஜார்கண்ட
12. கர்நாடகா
13. கேரளா
14. மத்திய பிரதேசம்
15.மகராஷ்ட்ரா
16. மணிப்பூர்
17. மேகாலயா
18. மிசோரம்
19. நாகாலந்து
20. ஒரிஸ்ஸா
21. பஞ்சாப்
22. ராஜஸ்தான்
23. சிக்கிம்
24. தமிழ்நாடு
25. உத்திர பிரதேசம்
26. உத்திராஞ்சல்
27. மேற்கு வங்கம்
இந்தியாவில், பெரும்பாலான பகுதிகள் (65 விழுக்காடு) நிலநடுக்கதால்
பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின்போது தப்பிக்க-பாதுகாப்பாய் இருக்க:
நிலநடுக்கத்தை உணர்ந்ததும், அதன் பாதிப்பினின்று தப்பிக்க, செய்திட வேண்டியவை என்னென்ன என்பவை மிகவும் முக்கியம். ஆவற்றைக் கீழ்க்காண்க.
நிலநடுக்கத்தை உணர்ந்ததும், அதன் பாதிப்பினின்று தப்பிக்க, செய்திட வேண்டியவை என்னென்ன என்பவை மிகவும் முக்கியம். ஆவற்றைக் கீழ்க்காண்க.
1) காலம் கடத்தாமல் உடனடியாக, வீடு அல்லது அலுவலகத்தைவிட்டு வெளியேறி, திறந்த வெளிப் பரப்பில் வந்து நின்றுவிட வேண்டும்.
2) அவசரமாக வெளியேற முடியாத சூழ்நிலையில் உள்ளோர் மட்டும், (குறிப்பாக முதியோர், தாய்மார், குழந்தைகள், கற்பவதிகள்), வீட்டின் ஒரு மூலையில், வீட்டிலுள்ளவை ஒன்றும் தம்மீது விழுந்து விடாதபடி, பாதுகாப்பாய் ஒதுங்கி நின்று கொள்ள வேண்டும்.
3) அத்தகையோர், இரும்புக் கட்டிலின்கீழ் படுத்துக்கொள்ளலாம்: அல்லது மறைந்து கொள்ளலாம்.திடமான பெரிய மேஜையிருந்தால், அதனடியிலும் பதுங்கிக் கொள்ளலாம்.
4) பெரிய அலுவலகங்களில் பணி செய்வோரும், இம்முறையில் பாதுகாப்பாய் இருந்து கொள்ள வேண்டும்.
5) வீட்டைவிட்டு அல்லது அலுவலகத்தைவிட்டு வெளியில் வந்தோர், இங்கும் அங்குமாக அலைந்து, அல்லது ஓடித் திரியக் கூடாது.
6) மிக முக்கியமாக, ஒருபோதும் பதட்டப்படக்கூடாது: பயப்படக்கூடாது மற்றவர்களையும் பயப்படுத்தக்கூடாது.இதுபோன்ற வேளைகளில வேண்டியதுஇ தைரியமும் தெளிவுமே!
7) நிலநடுக்கத்தின்போது, வாகனங்களை ஒட்டிச்சென்றால், முதலில் வாகனத்தை நிறுத்துங்கள். அதனை நிலைப்படுத்திவிட்டு, வெட்ட வெளியில் நில்லுங்கள்.
8) எக்காரணம் கொண்டும், மின்கம்பங்களின் அருகே செல்லாதீர்கள். மரங்களின் கீழும் நில்லாதீர்கள். அவை சாயலாம். நீங்கள் சாய்ந்து விடக் கூடாது.
9) நிலநடுக்கத்தின்போது, வீட்டையோ, அலுவலகத்தையோ, நட்சத்திர விடுதிகளையே விட்டு வெளியேறி வர, லிஃட்டுகளைப் பயன்படுத்தாதீர்கள். முண்டியடித்தக் கொண்டும் ஓடாதீர்கள். (கட்டிடங்களும் வீடுகளுடம், ஒரு அவசரம் என்றால் உடனே பாதுகாப்பாய் வெளிவருவதற்கான வசதிகளைப் பெற்றிருக்க வேண்டும். கும்பகோணம் பள்ளியைப் பேன்ற நிலை இருக்கக் கூடாது).
10) எக்காரணம் கொண்டும், பழைய அல்லது பலமற்ற கட்டிடங்களில் இருக்காதீர்கள். ஆவற்றில் அடைக்கலமும் தேடாதீர்.
11) வீட்டில் இருக்க நேர்ந்தால், அமைதியாய் இருங்கள். நிலநடுக்கம் பற்றிச் சொல்லும் அறிவுரைகளையும், எச்சரிக்கை களையும் கேட்டு, அவற்றின் படியே செயல்படுங்கள்.
12) கடற்கரையை நோக்கிச் செல்லாதீர்கள். அவ்வேளையில் நீங்கள் கடற்கரையில் இருந்தால், நிலநக்கத்தைத் தொடர்ந்து சுனாமி வரும் வாய்ப்பு உள்ளதால், கடலோரத்தை விட்டு வெளியேறி, பாதுகாப்பான இடத்துக்கு வந்து விடுங்கள்.
13) தண்ணீர் மற்றும் சமையல் வாயு இணைப்புகளைத் துண்டித்து விடுங்கள். (மின்இணைப்பையும் கூடத்துண்டித்துவிடலாம்).
14) இரவு நேரமானால், பேட்டரி விளக்குகளைப் (Torch Light) பயன்படுத்துங்கள்.
15) திறந்தவெளியிலுள்ள நீரைப் பயன்படுத்தாதிருங்கள்.
16) அவ்வப்போது, ஏதாவது சாப்பிட்டுக் கொள்ளுங்கள். அதனால் உங்களைக் காக்கவும் முடியும். மற்றவர்களைக் காப்பாற்றவும் முடியும்.
17) எக்காரணம் கொண்டும், இடிபாடான வீட்டுக்குள் அல்லது கட்டங்களுக்குள், உடனே நுழையாதீர்கள். ஏனெனில், தொடர் நடுக்கம் ஏற்படலாம்.
நிலநடுக்கத்திற்கு பின்:
நிலநடுக்கம் ஏற்பட்ட பின்னரும், தொடர் நடுக்கங்கள் உண்டாகும். அவற்றை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும். தொடர் நடுக்கங்கள் ஏற்பட்டால், எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்று, திட்டமிடுங்கள்.
நிலநடுக்கத்தால் காயமடைந்தோருக்கு முதலுதவியும், தேவைப்படுவோருக்கு உதவிகளும் செய்யுங்கள்.
நிலநடுக்கத்தால் காயமடைந்தோருக்கு முதலுதவியும், தேவைப்படுவோருக்கு உதவிகளும் செய்யுங்கள்.
No comments:
Post a Comment