Tuesday, June 21, 2016

சிறிய பனியுகத்தை நோக்கி நகரும் உலகம். Vs புவி வெப்பமடைதல்


பூமி வெப்பமடைந்து வருவது நாம் அனைவரும் அறிந்ததே. அதை தடுப்பதற்கு உலக மட்டத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இயற்கை உலக வெப்பத்தை தானாகவே குறைத்துக்கொள்ளும் என ஒரு சாரார் கருத்து தெரிவிக்கின்றனர்.
சுமார் 300 ஆண்டுகளுக்கு ஒரு முறை “சிறிய பனிகாலம்(யுகம்:?)” ஒன்று பூமியில் ஏற்படும். சூரிய இருப்பிடம் மற்றும் சுழற்சியின் காரணமாக ஏற்படும் வெப்ப வீழ்ச்சி இது.
19 ஆம் நூற்றாண்டு விண் ஆய்வாளர்களின் ஆய்வின்படி  1645-1715 காலப்பகுதியில் இச் சிறு பனிக்காலம் ஏற்பட்டது. இக் காலத்தில் தேம்ஸ் நதி உறைந்திருந்ததாக கூறப்படுகிறது.
அடுத்த பனிக்காலம் இவ் நூற்றாண்டு இறுதிக்குள் ஏற்படும் என கணிக்கப்படுகிறது. அவ்வாறு ஏற்படும் போது புவி வெப்பமாதல் தடைப்பட்டு பனி உருகல் கடல் மட்ட உயர்வு போன்ற இயற்கை அச்சுறுத்தல்கள் இல்லாமல் போகும் என கருதப்படுகிறது.
ஆனால், CO2 (காபனீரொட்சைட்) வாயு காரணமாக ஏற்பட்ட இவ் வெப்ப மாற்றத்திற்கு இவ் பனிகாலம் தீர்வாக அமையாது என சமூக ஆர்வலர்கள் மற்றும் சமூகவியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment