Tuesday, November 8, 2016

VLC மீடியா பிளேயர் பயன்படுத்தி யூட்யூப் வீடியோ டவுன்லோட் செய்வதெப்படி.?

     யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்யும் முறைகள் எப்போதுமே இயங்கும் என்ற வாக்குரியில்லாத பணியாகும். எனினும், இந்த ஒரு எளிய தந்திரத்தை பயன்படுத்தி பாருங்களேன்.

   யூட்யூப் என்ற வீடியோ உலக வலைத்தளம் தான் விடீயோக்களுக்காக நாம் அதிகம் செலவழிக்கும் ஒரு தளம் எனலாம்.அதில் நீங்கள் திரைப்படம், சமீபத்திய டிரெய்லர்கள், பொழுதுபோக்கு செய்தி, நேரடி வீடியோக்கள், சமீபத்திய தொழில்நுட்ப கருவிகள் பற்றிய பல விமர்சனங்கள் உட்பட பல வகையான விடியோக்களின் அணுகலை பெற இயலும். இப்படியாக யூட்யூப் ஆனது சுமார் 11 ஆண்டுகளாக நம்முடன் உள்ளது, ஆனால் கூகுள் தனது பயனர்களுக்கு யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்து அவைகளை ஆஃப்லைனில் அனுபவிக்க அனுமதி மாறுகிறது. எனினும், வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய உதவும் பல கருவிகள் ஆன்லைனில் உள்ளன, ஆனால் நீங்கள் எந்த கூடுதல் மென்பொருளும் இல்லாமல் யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய ஒரு எளிமையான தந்திரம் இருக்கிறது.

    விஎல்சி மீடியா பிளேயர் 
  நம்மில் பெரும்பாலானோர்கள் விஎல்சி மீடியா பிளேயர் என்ற மிக பிரபலமான வீடியோ பிளேரையே பயன்படுத்துகிறோம் ஆனால் அந்த விஎல்சி பிளேயரின் கீழ் சில மறைக்கப்பட்ட தந்திரங்கள் உள்ளன மற்றும் அதன் மூலம் யூட்யூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியும் என்பதையெல்லாம் நீங்கள் அறிவீர்களா..? 

   வழிமுறை #01 
 முதலில், உங்கள் கணினியில் நிறுவப்பட்ட விஎல்சி மீடியா பிளேயர் இல்லையென்றால் நீங்கள் அதை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதன் உத்தியோகபூர்வ தளத்தில் இருந்து அல்லது பிற மூன்றாம் தரப்பு ஆதாரங்களில் இருந்து (filehippo.com) அதை பதிவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். நீங்கள் ஏற்கனவே விஎல்சி மென்பொருள் நிறுவப்பட்ட கணினி கொண்டவர் என்றால் அடுத்த வழிமுறையை தொடரவும்.


      வழிமுறை #02 
  இப்போது, நீங்கள் யூட்யூப்.காம் திறந்து, நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பும் வீடியோ பார்க்க வேண்டும். இப்போது, வெறுமனே அந்த வீடியோ யூஆர்எல்-ஐ நகலெடுத்து அடுத்த வழிமுறையை பின்பற்றவும்.


      வழிமுறை #03 
 இப்போது விஎல்சி பிளேயரை திறந்து அதன் இடது மேல்பக்கத்தில் தோன்றும் 'மீடியா' என்ற டாப்-பை பின்னர் ஓப்பன் நெட்வெர்க் ஸ்ட்ரீம் என்ற ஆப்ஷனை கிளிக் செய்யவும். அங்கு நகலெடுத்த யூஆர்எல் லின்கை பேஸ்ட் செய்து வீடியோ ஸ்ட்ரீம் ஆக வழிவகை செய்யவும் (நீங்கள் இணைய வசதியுடன் இணைப்பில் உள்ளதை உறுதி செய்துகொள்ளுங்கள்)

     வழிமுறை #04 
  ஒருமுறை வீடியோ பிளே ஆக தொடங்கியதும் டூல்ஸ் டாப் சென்று கோடெக் இன்பர்மேஷன் தேர்வு செய்யவும் பதிலாக நீங்கள் கன்ட்ரோல்+ஜே கூட பயன்படுத்தலாம். இப்போது சில தகவல்களுடன் ஒரு பாப்-அப் தோன்றும். அதன் கீழே லோக்கேஷன் என்ற பெயரை கொண்ட டாப் ஒன்றை காண முடியும் அதை காப்பி செய்து கொள்ளுங்கள்.


     வழிமுறை #05 
 இறுதியாக, காப்பி செய்த கோடை உங்கள் பிரவுஸரில் பேஸ்ட் செய்ய குறிப்பிட்ட வீடியோ தானாகவே பதிவிறக்கம் செய்யப்படும்.