Saturday, June 18, 2016

இறந்துகொண்டிருக்கும் சாக்கடல்! Dead Sea) பற்றிய உண்மைகள்!


dead sea tamilசாக் கடல் அல்ல‌து டெட் சீ என்பது இஸ்ரேலிற்கும் ஜோர்தானிற்கும் இடையில் இருக்கும் ஒரு ஏரியாகும். ஆனால் “கடல்” என்ற அடை மொழியுடன் அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 400 மீற்றர் கீழே உள்ளது!
சாதாரன கடல் நீரைவிட சுமார் 8.6 மடங்கு உப்பின் செரிவு அதிகமானது.
அதால் அடர்த்திகூடிய இக் கடலினுள் ஒரு நபர் குதித்தால் அவர் கடலினால் தாழ்க்கப்பட மாட்டார், மாறாக மிதப்பார்.
பிரபலம் ஆனது எப்படி?
  • உண்மையில் சாக்கடல் பிரபலமானது SPA ( ஆரோக்கிய நீரூற்று சிகிச்சை/ நிறுவனங்களின் பொதுப்பெயர்) நிறுவனங்களின் விளம்பரங்களால்தான். இங்கிருக்கும் அதி செரிவான உப்பு நீர் உடலில் உள்ள கிருமித்தொற்றுக்களை நீக்கவல்லது என நம்பப்படுகிறது.
  • தாழ்க்கும் தன்மையற்ற கடல் என்பதால், வினோதத்திற்காக பல சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுகிறார்கள். ( ஏனைய சுற்றுலா தளங்களுடன் இப்பிடுகையில் வருகை மிக்குறைவானது!)
சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது?
பல காரணங்கள் கூறப்படுகின்றன…
  • இங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது. ( எனினும் எந்த சூழலிலும் வாழக்கூடிய பக்டீரியாக்களான halophilis மற்றும் archea வகை பக்டீரியாக்கள் இங்கு வாழ்கின்றன)
  • பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது.
இறந்துகொண்டிருக்கும் சாக்கடல்!
ஆம், வெப்ப நிலை மாற்றம் காரணமாக நாளொன்றிற்கு சுமார் 7 மில்லியன் தொன் நீர் சாக்கடலை விட்டு வெளியேறுகின்றது. அத்தோடு இஸ்ரேல் மற்றும் ஜோதார்ன் நாடுகள் சாக்கடலின் மூல நீர் வருகைக்குப்பொறுப்பான “ஜோர்தான் ஆற்றை” பல கிழைகளாக பிரித்து பயன்படுத்திவருவதால் சாக்கடலுக்குரிய மூல நீர் வருகை குறைவடைந்துள்ளது.
இதனால் சாக்கடலின் பல பகுதிகளில் தரைத்திட்டுக்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது!

செயற்கை மழையும் யாகமும்! மறைந்த உண்மைகள்


செயற்கை மழை!


செயற்கை மழையைப்பற்றி  பார்க்கலாம்…
images18 ஆம் நூற்றாண்டின் பின்னர் அறிவு வளர்ந்து விட்டது என்று கூறிக்கொண்டு அளவில்லாமல் தேவையற்ற விதங்களில் காடுகளை அழித்து நகரங்களையும் தொழிற்சாலைகளையும் உருவாக்கியதன் விளைவாக பூமி அதற்கு முன்னர் அறியாத கால நிலை மாற்றங்களை சந்திக்கத்தொடங்கியது. ENVIRONMENT & POLLUTION 20 ஆம் நூற்றாண்டில் கால நிலை மாற்றம் உக்கிரமடைய அடிப்படை தேவையான இயற்கை விவசாயத்திற்கான மழை பல இடங்களில் பொய்த்துப்போக ஆரம்பித்தது. அதற்கு தீர்வு தேடி வழமைபோலவே அமெரிக்கா ஒரு திட்டத்தை வகுத்தது! அது தான் செயற்கை மழைத்திட்டம். (இத்திட்டத்தில் அமெரிக்காவும் கனடாவும் ஒன்றாக நிற்க‌ சீன தன் பங்கிற்கு தனியாக தனது தேடலை ஆரம்பித்தது.)
cloud seeding tamil1957 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தை எவ்வாறு நிறைவேற்றலாம் என்ற ஒரு உருப்படியான தீர்வு கிடைத்தது. விளைவு 1960களில் சீனா தனது முதல் செயற்கை மழையை பெய்ப்பித்துக்காட்டியது. இன்னும் மேம்பட்ட விதத்தில் அமெரிக்காவும் கனடாவும் 1970 ஆம் ஆண்டு வெற்றிகரமாக தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் மழையை பெய்ப்பிக்கும் ஆற்றலைப்பெற்றன.
செயற்கை மழையைப்பற்றி பேசும் போது நாம் ஒன்றைக்கவணித்தாக வேண்டும், செயற்கை மழை என்பது உண்மையில் முற்று முழுதாக செயற்கை மழை என்று சொல்லிவிட முடியாது!
ஆம், இன்னோர் இடத்தில் பெய்யவேண்டிய மழை மேகங்களை வலுக்கட்டாயமாக தேவைப்படும் இன்னோர் இடத்தில் கூட்டி அவற்றிற்கு ஊக்கிகள் மூலம் மழை மேக கருக்கட்டல்களை உருவாக்கி பெய்விப்பதே இந்த செயற்கை மழை!
  சிம்பிலாக சொல்லவேண்டும் என்றால், மேகங்கள் மீது ஊக்குவிக்கும் இரசாயனங்களை தெளித்து மழையை பெய்விப்பது செயற்கை மழை என்று சொல்லிவிடலாம். ( இந்த பதிவிற்கு அது போதும்.)
சரி, 1970 களில் செயற்கை மழை வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டு விட்டது. அதில் என்ன மர்மம் இருக்கிறது வரலாறு இருக்கிறது என்பதை இனிப்பார்க்கலாம்.
Ritual tamilநாம் எல்லாம் புராண கதைகள் என்ற பெயரில் சிறுவதில் இருந்து பல கதைகளை படித்திருக்கின்றோம். (ஹிந்தியில் எடுக்கப்பட்ட சில நாடக தொடர்களை கூட பார்த்திருக்கின்றோம். )
அதில் எல்லாம்… நாட்டில் மழை பெய்யவில்லை என்றது. உடனே அரசன் வழமை போல தனது மந்திரியின் தலையைப்பிடிக்க அவர் பூசாரிகளில் கையைப்பிடிக்க அதன் விளைவாக “யாகம்” என்ற பெயரில் பெரியதோர் கிடங்கில் பல வகை மரங்கள் திரவியங்களைப்போட்டு எரித்து புகைவரவைப்பார்கள். ( புகைவருவதற்கு மந்திரம் ஏன் என்பது தெரியவில்லை…. ஒரு வேளை நாம் பாட்டு பாடிட்டே வேலைகள் செய்வது போல் அவர்களும் ஏதோ முனுமுனுத்திருக்கலாம். அல்லது “பூசாரிகள்” மந்திரம் ஓதினால் தான் புகைவரும் என்ற ரீதியில் பில்டப் பண்ணி மந்திரம் சொல்லி இருக்கலாம். ( அப்படி செய்யாவிட்டால் அடுத்த கட்டத்தில் மந்திரி தானே இந்த திரவியங்கள் மரங்களை எரித்து புகை வரவைத்திருப்பார். பூசாரிகளின் தேவை இல்லாமல் போய் இருக்கும். பிழைப்பும் போய் இருக்கும்.) )
புகை என்றவுடனேயே பலருக்கு தெரிந்திருக்கும் நான் என்ன சொல்லவெருகிறேன் என்று!
ஆம், நாம் தற்போது செயற்கை இரயானங்களை விமானங்கள் மூலம் மேகங்களுக்கு மேலாக கொண்டு சென்று தெளிப்பதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டுகின்றோம். ஒரு வேளை அவர்கள் அந்த புகையை வானத்தை நோக்கி நகர்த்துவதன் மூலம் மேகங்களை ஒன்றுகூட்டி இருக்கலாம்!
மேகங்களை ஒன்று கூட்டக்கூடிய சக்தியுள்ள புகையை உருவாக்கத்தான் விசேட மரங்களும் திரவியங்களும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்!
இன்று இரசாயன திரவியங்கள் மூலம் கூட்டப்பட்டு பெய்யப்படும் மழை, அன்று “யாகங்கள்” என்ற பெயரில் பெய்விக்கப்பட்டிருக்கும்.
ஆனால், நாம் “யாகம்” என்ற சொல்லையே கிட்டத்தட்ட காமெடி சொல்லாக்கி விட்டோம். நான் மேலே சொல்லி இருப்பவை கூட பலருக்கு காமெடி அல்லது இந்து மதத்தை பரப்புவனின் பதிவாக தெரியலாம். ( புராணங்கள் இந்துக்களுடையதல்ல… தமிழருடைய வரலாறுகளின் திருபு என பல சான்றுகளுடன் “லெமூரியா பதிவுகளில்” கூறிவருகிறேன்.)
Ritualபுராண கதைகளில் யாகங்கள் மழைக்கும் செய்யப்படும். நாட்டில் பஞ்சம் என்றாலும் செய்யப்படும்.
அந்த பஞ்சத்திற்கு செய்யப்படும் யாகம் தொடர்பாக 2011 ஆம் ஆண்டளவில் ஒரு ஆராய்ச்சி முடிவு விளக்கம் கொடுக்கப்பட்டது.
அதாவது, யாகம் செய்யப்பட்ட இடத்தை அன்மித்து விதைக்கப்பட்ட தானியங்கள் சுமார் 2000 மடங்கு அதிவேக ஆரோக்கிய வளர்ச்சியை காண்பித்துள்ளன! சூழலில் தானியங்களை பாதிக்க கூடிய கிருமிகள் அழிக்கப்பட்டிருந்தன!
– இவை நிரூபிக்கப்பட்ட உண்மைகள். ( தேடிப்பார்க்கவும்.)
( இவ்வொரு யாகத்திலும், ஒவ்வொரு விதமான திரவியங்கள் பயன்படுத்தப்படுவதுண்டு!)
ஆனால் இப்போது யாகம் ஏன் செய்யப்படுகிறது என்பதை மறந்து, பூட்டிய கோவிலுக்குள் வாய்க்கு வந்ததை ஐயர் முனுமுனுத்துக்கொண்டு கையில் கிடைத்த வாசனை பொருட்களை எரிக்க அந்த வாசத்தை புனிதமாக கருதி பணத்தை கொடுத்து யாகம் செய்து கலாச்சாரத்தை காப்பாற்றுகிறோம் :)

மனிதனின் நீண்ட ஆயுளின் சூட்சுமம் !! – ஒரு ஆய்வு


நல்ல நிலையில் உள்ள ஒரு கடிகாரத்திற்கு சாவி கொடுக்கும் அளவை பொருத்து குறைவான நேரமும் அல்லது அதிக நேரமும் ஓடும் என்பது ஒரு இயந்திர சித்தாந்தம்.
brain23
இதே யுக்தியுடன் ஏன் மனித மூளையும் செயல் பட கூடாது என்பதன் அடிப்படையில் ( டிக் டிக் டிக்) மூளை பற்றிய ஆய்வு நடத்தப்பட்டதில் முக்கியமான ஒரு விடயத்தை கண்டுபிடித்துள்ளார்கள். அது தான் ஆயுளுக்கும் மூளைக்கும் உள்ள தொடர்பு.
பாதாம் கொட்டையின் அளவில் இருக்கும் “ஹைபோதாலமஸ்”மூளையின் நடு நாயகனான மூளையின் முக்கிய உறுப்பு. இது தான் நமது செயல் பாடுகளை தீர்மானிக்கிறது… நடத்துகிறது. சுருக்கமாக மூளைக்கும் நம் உடலுக்கும் ஒரு பாலமாக செயல்படுகிறது ஹைபோதாலமஸ்.
நம்மை சுற்றி நடக்கும் நிகழ்வுகளையும், ஹார்மோன் கட்டுப்பாடு, தூக்கம்-விளிப்பு கட்டுப்பாடு, உடல் பாதுகாப்பு (எதிர்ப்பு சக்தி), மறு உருவாக்கம்…இப்படி முக்கிய வேலை இதனுடையது என்று சொல்லலாம்.
நியூயார்க்கிலுள்ள ஆல்பர்ட் ஈன்ஸ்டீன் மருத்துவ பல்கலைகழகத்தில் இது குறித்த ஆய்வு டாக்டர் “டாங் சே கெய் “ [ Dongsheng Cai] தலைமையில் நடத்தப்பட்டது.
ஆய்வின் முக்கிய அடிப்படையில் ஹைபோதாலமஸில் புரோட்டீன் மூலக்கூறில் NF -kB (Neuron Factor kB) எனும் பகுப்பு நோய்தடுப்பு செயல்பாட்டை செய்கிறது.
நடுத்தர வயதுடைய எலிகளை வைத்து (ஜீன் தெரப்பி) இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒரு குழு NF -kB யின் செயல் பாட்டை மட்டுப்படுத்தியது. இன்னொரு குழு NF -kB யின் செயல் பாட்டை அதிக்கப்படுத்தியது, மூன்றாவது குழு சாதாரணமாக கண்காணித்தது.
ஆய்வுக்கு உட்படுத்தப்படாத எலி 600 லிருந்து 1000 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
NF -kB யின் செயல் பாட்டை அதிகபடுத்த பட்ட எலிகள் 900 நாட்களுக்குள் இறந்து விட்டது. NF -kB யின் செயல்பாட்டை மட்டுபடுத்த பட்ட எலிகள் 1100 நாட்கள் உயிர் வாழ்ந்தது.
NF -kB ஹைபோதாலமஸில் GnRH (Gonadotropin Releasing Hormone) (எனும் ஹார்மோனை கட்டுபடுத்தும் வேதியல் காரணி என்பது உறுதி செய்யப்பட்டது. அதுமட்டுமல்ல ஹைபோதாலமஸ்தான் வயதை நிர்ணயிக்கிறது என்பதும் புலணாகிறது.
”வயதாவது என்பது ஒரு சிக்கலான உயிரியல் செயல்பாடு “ – கெய்
”குறைந்தது பத்து படிகள் இந்த வயது கட்டுப்பாட்டில் செயல்படுகிறது“ என்கிறார் ரிச்சர்ட் மில்லர் (மிச்சிகன் பல்கலைகழகத்தை சேர்ந்தவர்).
இந்த ஆய்வு குறித்து “ நெருப்போடு விளையாடும் விளையாட்டு” என்று விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தேனீக்கள் உணவில் காணப்படும் ரப்பாமைசின் எனும் வேதியல் கூறும் ஆயுள் குறித்த ஆய்வில் இருக்கிறது.
இன்னொரு கூடுதல் தகவல் நாம் சமைக்க உபயோகப்படுத்தும் மிளகாய், வெள்ளைபூண்டிற்கு உயிர் செல்களில் எதிர்ப்பு சக்தியை கூட்டும் தன்மையும், மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றலும் உண்டு என்று சொல்கிறார்கள். ( வெளிநாட்டு விஞ்ஞானிகளுக்கு தெரிந்திருக்கிறது நம் உணவின் மகத்துவம் )
திராட்சையில் உள்ள ஒரு என்சைம் புழுக்கள் மற்றும் பழப்பூச்சிகளின் டிஎன் ஏ வில் செயல்பட்டு அதன் ஆயுளை 70 சதவீதம் நீட்டிக்கிறதாம்.
பொதுவில் உணவு கட்டுப்பாடு மனிதனின் ஆயுளை நீட்டிக்கிறது என்பதுதான் மருந்தில்லா மருத்துவம்.

யேசுவின் அற்புதங்களுக்கு காரணம் இறைத்துவமா ESP யா? – ESP09


miracles-of-jesusஇறுதியாக இந்த பகுதியில் ESP சக்தியுடைய மனிதரான அல்ஹாசர் பற்றி பார்த்திருந்தோம். தொடர்ச்சியாக இயேசு நாதரின் இறைத்தன்மை பற்றி பேசலாம் என கூறியிருந்தேன். இன்று அப்பகுதியை பார்க்கலாம். ( இது எவ் மதத்தையும் இழிவு படுத்துவதற்காக எழுதப்படுவதல்ல. ESP எனும் சக்தியை எமது இறைவர்களாகவும் இறைத்தூதர்களாகவும் கூறப்படுபவர்களின் சக்தியுடன் ஒப்பிட்டு பார்க்கும் ஒரு ஆய்வே. இக் கருத்துக்களை எந்த மதத்தையும் இழிவு படுத்துவதற்கு பயன்படுத்தவேண்டாம்.)
யேசு பற்றி பார்த்தோமானால், இறைவனின் மகனாக / தேவ தூதராக சித்தரிக்கப்படுகிறார். அவரின் வாழ்க்கை குறிப்பை பார்த்தோமானால். அவரின் அற்புதங்கள் / விசேட சக்திகள் 30 வயதிற்கு பிறகு அடுத்த 3 ஆண்டுகளுக்கு விளக்கப்பட்டுள்ளது. அவர் இறைவனின் மகனாக காட்டப்பட்ட போதும், பிறப்பில் இருந்து அவருக்கு விசேட சக்தி இருந்ததாக கட்டப்படவில்லை. ஒரு குறித்த வயதின் பின்னரே அவரின் அற்புத செயல்கள் வெளிப்பட்டுள்ளன. இது நாம் ஏற்கனவே பார்த்த அல்ஹாசர், டொங்லஸ் ஹியூம் போன்ற ESP மனிதர்களைப்போன்ற ஒரு சம்பவமே. அதாவது, அவர்களும் பிறக்கையிலேயே சக்திகளுடன் பிறக்கவில்லை திடீரென ஏற்பட்ட விசேட சக்திகளே அவர்களை ESP மனிதர்களாக அடையாளப்படுத்தின.
இன்னோர் வகையில் சிந்தித்தால், யேசு ஒரு விசேட நாளில் பிறந்ததாக (வால் நட்சத்திர போக்கு) குறிப்பிடப்படுகிறது. அந்த விசேட நாளில் பிறந்தால் இவ்வாறான விசேட சக்திகள் தானாகவே கிடைக்கும் எனும் ஒரு விதி / ஊக்டம் / தீர்க்கம் இருக்கலாம். காரணம், இந்து மற்றும் இஸ்லாமிய(?) வரலாறு(?) சம்பவங்களிலும் விசேட சக்தி வாய்ந்தவர்களின் பிறப்பு ஒரு விசேட தினத்தில் இருந்ததாக காட்டப்படுகின்றது. இவை பற்றி வேறு ஒரு பகுதியில் பின்னர் மேலும் ஆராயலாம்.
இதே போன்றே, சம்பந்தர் உட்பட 64 நாயன்மார்களில் பலரின் வாழ்க்கை / அற்புத சம்பவங்கள் நிகழ்ந்திருக்கின்றன. இவர்கள் அனைவரும் ESP மனிதர்களாக இருந்திருப்பார்கள் என்பதே எனதும் என்போன்றோரதும் கருத்து. “இறைவன் / கடவுள்” என்று குறிக்கப்படும் சக்தி மிகப்பெரிய சக்தி. இப்போதைய நிலை வரை விளக்கம் கூறவேண்டும் என்றால், “பிக்பாங்” எனப்படும் பெரு வெடிப்பிற்கு காரணமும் அதன் நோக்கமும் அதற்கு முட்பட்ட நிலையுமே “இறைவன்” எனலாம். அதாவது நமது படைப்பின் காரணம் அறிந்தவரை இறைவன் எனலாம். அதை விடுத்து, எமது பூமியில் நடைபெற்ற / பெறும் சம்பவங்களை வைத்து இறைத்துவம் அளிப்பது என்பது எமது அறிவினால் மட்டுப்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாகவே இருக்கின்றது. காரணம், பிரபஞ்சத்தில் ஒரு சிறு துளியே பூமியும் மனித வாழ்வும். அத்துளியுடன் சம்பந்த பட்ட சம்பவங்களை வைத்துக்கொண்டு இறைத்துவத்தை தீர்மானிப்பது என்னை பொறுத்தவரை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இறைத்துவம் என்பது மிகப்பெரிய சக்தி அது என்ன? எவ்வாறு செயற்படும் எனும் ஊகத்தை பின் தொடர்களில் பார்க்கலாம்.
இன்னும் ஆழமாக ஆய்வு செய்ய முற்பட்டால் ஒரு விவாதத்திற்கு உரிய பகுதிக்குள் செல்ல வேண்டும். செல்வோம்…
miraclesயேசுவின் வாழ்க்கை சம்பவங்கள் பைபிலை அடிப்படையாக கொண்டே விளக்கப்படுகின்றன. பைபிலில் யேசுவின் 12 தொடக்கம் 30 வயதுக்கு உட்பட்ட சுமார் 18 வருட கால வாழ்க்கை நிகழ்வுகளுக்குரிய குறிப்புக்கள் இல்லை. இக்காலப்பகுதி “தொலைந்து போன ஆண்டுகள் என பொருள் படும்வகையில் “Jesus’ Lost Years” ” என அழைக்கப்படுகிறது.
இக் குறித்த காலப்பகுதியில் யேசு இந்தியாவிற்கு சென்றதாகவும், இமைய மலைப்பகுதியில் தியானமூடாக தனது சக்தியை பெற்றதாகவும் ஒரு கருத்து உண்டு. அப் பகுதியை பார்த்தோமானால்…
யேசுவின் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட இடங்கள் சில பைபிலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது,
யேசு பெதலஹேம் (Bethlehem) இல் பிறந்தார்.(Luke 2:1-20)
ஜெருசலேமிறு பயணித்தார். (Luke 2:22-28)
புனிதர் ஒருவரின் பேரில் யேசு எகிப்து நாட்டில் பாதுகாப்பாக இருந்தார். (Matthew 2:1-12 / Matthew 2:15)
யேசுவின் தாய் மற்றும் வளர்ப்புத்தந்தையாக(?) கருதப்படும் மேரி மற்றும் ஜோசப்பின் சொந்த இடமான நஷரத் இற்கு 12 வயதில் குடிபெயர்ந்தார்.(Matthew 2:19-23)
இவையே பைபில் குறிக்கப்பட்டிருக்கும் முக்கிய இடங்களாக கூறப்படுகிறது.
இதில் எங்கும், யேசு இந்தியாவிற்கு பயணித்ததாக கூறப்படவில்லை. (அப்போது இந்தியா “இந்தியா” என்ற பெயரில் இல்லை என்றபோதும், அப் பகுதிக்கு பயணித்ததாக பைபிலின் எப் பகுதியிலும் குறிப்புக்கள் இல்லை.)
JESUS-HEAL-BOYஆனால், எகிப்துவிற்கு யேசு பயணித்திருப்பது ஒரு ஆர்வமான பகுதி.
காரணம், எகிப்தில் இந்தியா பற்றிய பல குறிப்புக்கள் மற்றும் அழிந்துபோன குமரிக்கண்ட குறிப்புக்கள் பல காக்கப்பட்டதாக அறியப்படுகிறது. இந்திய பகுதியூடாக வந்த குறிப்புக்களைக்கொண்டே எகிப்திய மன்னர் ஒருவரால் அடிப்படை மதம் (யூதமதம்(?)) ஒன்று உருவாக்கப்பட்டதாக குறிப்புக்கள் உள்ளன. இவை பற்றி ஏற்கனவே “லெமூரியா” பதிவுகளில் பார்திருந்தோம்.
மேலும், அக் காலகட்டத்திலும் அதற்கு பின்னர் பல நூறு ஆண்டுகளுக்கும் (இன்றும்) இந்தியா என்பது ஒரு விசேட பகுதியாக அனைவராலும் தேடப்படும் பகுதியாக இருதுவருகிறது. (அமெரிக்காவிற்கு கோலாம்பஸ் சென்றதும் இந்தியாவை தேடியே). காரணம் இந்தியா என்பது மாபெரும் நாகரீகமான குமரிக்கண்ட வாழ்வின் எச்சங்களை உள்ளடக்கிய ஒரு மர்மதேசமாக இருந்துள்ளது. (இப்போதும், ஆனால் ஆராய்வு இன்றி அல்லது ஆய்வுகள் முடக்கப்பட்டு.)
mystic2ஆகவே, யேசு அவ்வாறான ஒரு தேசத்தை நாடிச்சென்றிருக்கலாம் என கூறமுடியும். மேலும், Holger Kersten எனும் ஆய்வாளர் யேசு இந்தியாவிற்கு சென்றார் என்பதற்கு சில பல ஆதாரங்களை தனது புத்தகங்களில் குறிப்பிட்டுள்ளார். ( His Unknown Life Before and After the Crucifixion (1994) , The Jesus Conspiracy)
Nicolas Notovitch எனும் ரஷ்ய ஆய்வாளார் 19 ஆம் நூற்றாண்டில் திபெத்திய பகுதியில் நடாத்திய தேடலில் இஸா(Issa) எனும் புனிதரை பற்றிய குறிப்புக்களை உதாரணம் காட்டி அவரே யேசு என நிறுவ முயன்றுள்ளார். ( Issa நபி எனவே இஸ்லாமியர்கள் யேசுவை குறிக்கிறார்கள்(?))
ஆனால், Nicolas Notovitch திபெத்திய பகுதியில் ஆய்வு செய்யவே இல்லை என J. Archibald Douglas எனும் ஆய்வாளர் ஆதாரங்கள் சிலவற்றை குறிப்பிட்டுள்ளார்.
இன்னோர் தகவலாக, யேவின் பிறப்பின் போது வந்த ஞானி (the Magi) கிழக்கு பகுதியில் இருந்து வந்தவராக குறிப்புக்கள் உள்ளன. அவர் ஒரு இந்திய இமையமலை பகுதியில் வாழ்ந்த ஞானி என இந்து மத பரமஹம்ச யோகானந்தா குறிப்பிட்டுள்ளார். அதாவது, விசேட தினத்தில் பிறந்த யேசுவிற்கு சக்திக்கான வளிகாட்டியாக அவர் இருந்தார் என வாதிட்டுள்ளார்.
இன்னோர் சாராரின் கருத்துப்படி யேசு 108 வயதுவரை வாழ்ந்ததாகவும். 33 வயதிற்குப்பின்னர் மீண்டும் அவர் இமையமலை பிரதேசத்தில் வாழ்ந்ததாகவும் ஒரு கதை உள்ளது.
எது எப்படியானாலும், எயேசுவிடம் எம்மை போன்ற சாதாரண மனிதர்களிடம் இல்லாத சில விசேட சக்திகள் இருந்துள்ளன. அச் சக்திகள் ESP எனும் பதத்திற்குள் உள்ளடங்கக்கூடிய சக்திகளே அன்றி, தனி இறைத்துவம் என குறிக்கும் சக்திகளாக கருதமுடியாது என்பதே எனது கருத்து.
இச் சிக்கலான ஒரு சம்பவத்தை அடுத்து, ESP ஐ எவ்வாறு அதிகரிக்கலாம்… “மந்திரம்” என குறிக்கப்படும் இந்துமத சொல் எவ்வாறானது என்பதை எதிர்வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

அதிசய கை அல்ஹாசரும் திருஞான‌சம்பந்தரும் – ESP 8


இறுதியாக இந்த ESP பகுதியில் “பொதுமனம்” என்றால் என்ன என்பதை பார்த்திருந்தோம். அடுத்து ESP சக்தியை வெளிப்படுத்திய நவீன கால மனிதர்கள் பற்றியும், அவர்களுடன் தொடர்புடைய புராண, மத ரீதியான சம்பவங்களையும் பார்க்கலாம். (எந்த மதத்தையும் இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை. வெறும் அறிவியல் ரீதியான பார்வை மட்டுமே.)
ESP இல் இருக்கும் சில பிரிவுகள் பற்றி முதலாம் பதிவில் பார்த்திருந்தோம். இப்போது அப் பகுதிகளில் “பெளதீக விதிகளை மீறும் சக்திகள்” எனும் பிரிவில் உள்ள சில மனிதர்களை பற்றி பார்க்கலாம். (ஏற்கனவே அனுமாருடன் ஒப்பிடுகையில் பார்த்த மனிதர்கள் இப்பிரிவிலேயே அடங்குவார்கள்.)
அதிசய கரங்கள்!
esp_tamilஇஸ்ரேலின் தலை நகரில் 1975 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாழ்ந்தவர் ஜோசப் அல்ஹாசர் (joseph alhaser) தலை நகரில் மருத்துவராக பணி புரிந்த இவரின் வீட்டில் மாலை நேரங்களில் இவரைக்காணுவதற்கென ஏழைகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரையில் வரிசையில் காத்திருப்பார்கள். காரணம் அவரது கைகள்!
மருத்துவ மனையில் பணி முடிந்ததும், தனது வீட்டில் நோயாளிகளை பார்வையிடுவது இவரது வழக்கம். இவருது வீட்டு பிரத்தியேக மருந்தக அறையில் மருத்துவத்திற்குரிய எந்த பொருட்களும் இருக்காது. ஒருவர் படுக்க கூடிய அளவில் ஒரு கட்டில் மட்டுமே இருக்கும்! வரும் நோயாளிகள் அனைவரையும் தனது கைகளால் மெதுவாக வருடுவதன் மூலம் குணப்படுத்தும் அதிசய ESP தன்மை கொண்டவர் இவர்.
உதாரணத்திற்கு பதிவு செய்யப்பட்ட சம்பவங்களில் இருந்து ஒன்று,
ஜெருசலேமில் வசித்துவந்த இயாஸ் என்ற பெண்ணிற்கு முதுகுப்புறம் தொடங்கி கால்,கைகள் உட்பட உடலின் அனைத்து பாகங்களிலும் திடீர் திடீரென ஊசி குற்றுவது போல் தீராத வலி ஏற்பட்டு பல நாட்களுக்கு நீடிக்கும். இதனால் தற்கொலைக்கு கூட அந்த பெண் முயற்சித்துள்ளாள்.
இந்த நேரத்தில், அல்ஹாசர் பற்றிய தகவல் அறிந்து அவரிடம் சிகிச்சை பெற வந்திருந்தாள் அந்தப்பெண். பெண்ணின் நோயை கேட்டு அறிந்துகொண்ட அல்ஹாசர் ஒரு கணம் கண்ணை மூடி தியானித்த பின்னர்; தனது கைகள் இரண்டையும் உரசிவிட்டு அந்த பெண்ணின் முதுகுப்புறத்தை இலேசாக தடவினார். சற்று நேரத்தில் அந்த பெண்ணிடம் நிலைகொண்டிருந்த வலிகள் அனைத்தும் காணாமல் போயின!
அல்ஹாசரின் கைகள் பட்ட போது தனது உடலில் சிறிய மின்சாரம் பாய்ச்சப்பட்டது போன்று தான் உணர்ந்ததாக அந்தப்பெண் கூறியுள்ளார்.
அல்ஹாசரின் புகழ் பரவவே சில விஞ்ஞானிகள் அல்ஹாசரை சோதனைக்கு உட்படுத்த முடிவெடுத்தார்கள். அல்ஹாசர் கண்களை மூடி கைகளை உரசி உடலை தொடும் போது, உண்மையிலேயே அல்ஹாசரின் கைகளில் சிறிய மின்னோட்டம் உருவாவதை ஆராச்சிகருவிகள் காட்டின. அவரிடம் உருவான அந்த மின் திறன் 3728.5 Watts மின் சாதனத்தை இயக்கவல்லதாக இருந்தது!
ஒரு சாதாரண மனிதனிடம் இவ்வாறான மின் சக்தி உருவாக வாய்ப்பேயில்லை. மேலும் இன்னோர் ஆச்சரியமாக, திடகாத்திரமான மனிதர்கள் மீது அவரின் மின்னோட்டம் பாயவில்லை! அது ஏன் என்பது இன்றுவரை இடைவெளியுள்ள கேள்விக்குறியாகவே இருக்கின்றது.
அல்ஹாசர் தனது சக்தி பற்றி குறிப்பிடுகையில், தான் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முதல் என் மனதை ஒரு நிலைப்படுத்துகின்றேன். அப்போது எனது கைகளில் மின்னோட்டம் ஓடுவதை உணர்கின்றேன். என்றார். மேலும், சாதாரண நேரங்களில் அவ் மின்னோட்டம் இருப்பதில்லை எனவும், இந்த சக்தி தனக்கு சிறுவயது முதல் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, தான் யாரிடமும் கட்டணம் கேக்காமல் இருப்பதும், வாரத்தில் இரு நாட்கள் தாங்களாக முன்வந்து நோயாளிகள் கொடுக்கும் கட்டணத்தை கூட வாங்காமல் இலவசமாக சிகிச்சை கொடுப்பதால் இந்த திறன் தனக்கு அதிகரிப்பதாக உணர்வதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
பிற்காலத்தில் அவரிடம் அந்த சக்தி இல்லாமல் போனதாக அறியமுடிகிறது.
pandiyan_and_espஇந்து புராண கதைகளில், 64 நாயன்மார்களின் அற்புதங்கள் என்று ஒரு பகுதி இருக்கிறது. அந்த பகுதியில் இடம் பெறும் சம்பவங்கள் பெரும்பாலும் மேலே குறிப்பிட்ட அல்ஹாசரின் சம்பவங்களுடன் ஒத்துப்போகும். இந்த நாயன்மார்கள் சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத பல அற்புத செயல்களை செய்திருப்பதாக கதைகளில் குறிப்பிடப்படுகிறது.
நோய்களை போக்குவது, சுண்ணாம்பு அறையை குளிர்மைப்படுத்துவது, நிறைகளை இல்லாமல் செய்வது என பல அற்புதங்கள் கூறப்படுகின்றன. அவை அனைத்துமே இந்த ESP என்ற அறிவியல் பகுதிக்குள் வைத்து பார்க்க கூடியவைகளே. நான் அறிந்த வரையில், நாயன் மார்கள் தமது விசேட சக்திகளை தவம் இருந்து பெற்றதாக பெரும்பாலும் எங்கும் குறிப்புக்கள் இல்லை. (அதேனேரம் அனைவரும் கடவுள் பக்தியுள்ளவர்களாக இருந்ததாக குறிப்புக்கள் உண்டு. (அல்ஹாசர் தனது மனதை ஒரு நிலைப்படுத்த கண்மூடி தியானம் செய்ததும் நாயன் மார்களின் சம்பவங்களில் வரும் கடவுள் வளிபாடும் ஒன்றாகவும் இருக்கலாம்.)
சற்று விரிவாக ஒரு உதாரணத்தை பார்த்தால்,
பாண்டிய மன்னன் நோய் வாய்ப்பட்டிருக்கும் போது திருநீறு மற்றும் கைகளால் அதை திருஞானசம்பந்தர் நீக்கியதாக குறிப்பிடப்படுகிறது. அல்ஹாசர் செய்த சிகிச்சைக்கும் இச் சம்பவத்திற்கும் பெரும் வித்தியாசங்கள் இல்லை. (திருநீறு என குறிப்பிடப்பட்டது மூலிகையாகவும் இருக்கலாம். அல்லது, அந்த கால கட்டத்தில் நடைபெற்ற சமண, சைவ மோதல்களில் சைவத்தை மேம்படுத்திக்காட்ட பயண்பட்ட யுக்தியாகவும் இருக்கலாம்.)
ஒரு சம்பவத்தை விரிவாக பார்க்கும் போதே பதிவு நீண்டு விட்டது, அடுத்த பதிவில் சுருக்கமாக அல்ஹாசரை மிஞ்சும் அளவிற்கு சக்தி வாய்ந்த சில மனிதர்கள் பற்றியும், ஜேசு நாதரின் இறைத்தன்மை பற்றியும் ஒப்பீட்டு பார்வையில் பார்க்கலாம்.

“பொது மனம்” என்றால் என்ன? – ESP சக்தியின் அடிப்படை – 07


universal-mindபோன பதிவில், ESP சக்தியை; தவம் மற்றும் தியானம் மூலம் அதிகரிக்கலாமா என்பதை பார்த்திருந்தோம்…
அதே வேளை, பொது மனம் (universal mind) பற்றி பேசி இருந்தோம். இன்று பொதுமனம் என்றால் என்ன என்பதை முதலில் பார்க்கலாம்…
பொதுமனம்,
பொதுமனம் என்பது பலரால் நம்ப முடியாத ஒரு தேற்றமாகத்தான் இருக்கிறது. நம்புவோருக்காக…
பொதுமனத்தை அறிய முன்னர், பிரபஞ்ச உருவாக்கத்தை சிம்பிளாக பார்த்தாக வேண்டும்…
பிரபஞ்சம் என்பது, பெரு வெடிப்பு மூலம் தோற்றுவிக்கப்பட்ட ஒன்று என விஞ்ஞானம் அறிந்துள்ளது. அணுவொன்றின் அல்லது சிறிய பொருள் ஒன்றின் வெடிப்பின் மூலம் பிறப்பிக்கப்பட்ட அதீத சக்தியினால் வாயுக்கள் உருவாகியதாகவும், பின்னர் அவை தமக்குள் ஈர்ப்படைந்து இறுக்கமடைந்து திண்மங்களாகவும், திண்மத்தை அண்டி இருந்த வாயு குளிர்வடைந்து திரவமாகவும் மாறியதாக கூறப்படுகிறது.
அப்படி திண்மம், திரவம், வாயு , வாயுக்களின் சேர்க்கையால் உருவான அதீத வெப்பத்தாலான நட்சத்திரங்கள் என்பன தமது ஈர்ப்பின் சக்திக்கு ஏற்ப தனித்தனி கூட்டங்களாக உருவாகின. அப்படி உருவான ஒரு கூட்டம் தான் பூமி அடங்களான சூரிய குடும்பம்!
திண்ம, திரவம், வாயுவின் சேர்க்கையால் கலங்கள் உருவாகின, கலங்களின் சேர்க்கையால் தாவரங்கள், விலங்குகள், பறவைகள் என்பன படிப்படியாக உருவாகின. ( இவற்றை விளக்கமாக இன்னொரு பதிவில் பார்க்கலாம்.)
பூச்சி, நாய், மனிதன், காகம் என அனைத்துமே அடிப்படையாக கலங்களில் இருந்தே உருவாகியுள்ளன. இன்னும் கொஞ்சம் ஆழமாகப்போனால்; பூச்சியும், பிரபஞ்சமும் திண்மம், திரவம், வாயுவின் சேர்க்கையாலேயே உருவாகின என்றும் சொல்லலாம்.
————————————————————————————————————-
Quantum-Mind-Power-The-Universal-Mind-Powerஎமது வீட்களில் செல்லப்பிராணிகள் இருக்கின்றன. உண்ணிப்பாக கவணித்துப்பாருங்கள், நாம் வீட்டிற்கு அதீத கோபமாகவோ டென்ஷனாகவோ வரும் போது அவை அதை உணர்ந்துகொண்டு எம்மை தொந்தரவு செய்யாமல் சென்றுவிடும்.
பாடசாலையில் இருந்து அல்லது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு நாம் வரும் போதே, வீட்டில் இருக்கும் செல்லப்பிராணிகள் அதற்கு ஏற்ப விளைவுகளை வீட்டில் காட்டத்தொடங்கிவிடும்!
நேரத்தை உணர்ந்துகொள்ள முடியாத அவை, நாம் நேர தாமதமால் வீட்டில் சற்று பதட்டத்தை காண்பிக்கும்.
எம்மிடையே பார்த்தால்,
நாம் பலர் இருந்து பேசிக்கொண்டிருப்போம், திடீரென நாம் சொல்ல நினைத்ததை அருகில் இங்கிருக்கும் ஒருவர் சொல்லிவிடுவார்.
எங்கோ தொலைவில் வேறு நாடுகளில் இருக்கும் நமது உறவினர் அல்லது நண்பரைப்பற்றி யோசித்துக்கொண்டிருப்போம். அவருடன் பேசினால் நன்றாக இருக்கும் என நினைப்போம், அவர் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவார்!
எமது நெருங்கிய உறவினர் ஒருவர் எங்கேயோ இறந்தாலும், எமக்கு இறந்த தகவல் தெரிய முன்னரே, குறிப்பிட்ட நபர் இறந்த அந்த நேரத்தில் பதட்டம், பயம், சோக உணர்வு என்பன உருவாகும். இதை பலர் உணர்ந்திருப்பீர்கள் அல்லது கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இன்னொரு பக்கம் பார்த்தால்,
இயற்கை சீற்றங்கள் வருவதை விலங்குகள் முன்னோக்கியே உணர்ந்துகொண்டு தமது பதட்டத்தை வெளிக்காட்டுவதுடன் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகரவும் ஆரம்பிக்கும். சுனாமி நேரத்தில் இதை பலர் உணர்ந்துள்ளார்கள்.
அதே போல்; பாரிய விமான விபத்துக்கள், சாலைவிபத்துக்கள் எதிர் பாராது நிகழ்ந்த நாட்களில், ஏனைய நாட்களில் பிரயாணிக்கும் மக்களை விட குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பயணித்துள்ளார்கள்! ( உலகம் முழுவதும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கையின் தரவிது.) இதை எச்சரிக்கை உணர்வு எனவும் சொல்லலாம்.
————————————————————————————————————-
என்னடா பிரபஞ்சத்தை பற்றி பேசிக்கொண்டிருந்துவிட்டு திடீரென சம்பந்தமில்லாத தகவல்களை பேசிக்கொண்டிருக்கிறேன் என நினைக்க வேண்டாம். நான் மேலே சொன்ன மூன்று தொகுதி உதாரணங்களும் ஏற்படுவதற்கு காரணம் பொது மனம் தான்.
ebrain1
இரண்டாம் தொகுப்பை பார்த்தால்,
நாம் பேசிக்கொண்டிருக்கும் போதும் சிந்தித்திக்கொண்டிருக்கும் போதும், எமது உடலை விட்டு கண்ணிற்கு புலப்படாத எண்ண அலைகள் விரிந்து பரவிச்செல்கின்றன. அந்த எண்ண அலைகள் எம்மோடு தொடர்புடையவர்களின் எண்ண அலைகளுடன் ஒத்திசைவடையும் போது, அந்த செய்தியை உணர்ந்துகொள்ளும் திறன் எமது மனதிற்கு உண்டு! அதன் விளைவே நாம் நினைப்பதை சொல்வதற்கும், நாம் நினைக்கும் போது தொலைபேசி அழைப்பை ஏற்படுத்துவதற்கும், இறப்புக்களை உணர்ந்துகொள்வதற்கும் இது தான் காரணம். இது தான் பொது மனம்!
முதலாம் தொகுப்பை இப்போது பார்ப்போம்,
மனித எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு விலங்குகளின் எண்ணங்களுடன் மனித எண்ணங்கள் ஒத்திசைவைடைவதால் ஏற்படும் விளைவுகளுக்கான உதாரணங்களே மேற்சொன்னவை. இதில் ஒரு துரதிஷ்டமான விடையம் விலங்குகளின் எண்ணங்களை நமது மனம் உள்வாங்கிக்கொள்ளும் திறனை இழந்துவிட்டது! அதற்கான தேவை குறைந்ததும், மனித மனதிற்குள் வேறு பல சிந்தனைகள் குடிகொண்டதும் காரணாம இருக்கலாம்.
இதைப்பற்றிய முழுமையான விளக்கம் கொடுக்காமலே, ஜென் கதைகளில் சிங்கத்தை கட்டுப்படுத்தும் மனிதர்களை பற்றி கூறப்பட்டுள்ளது. அவை, நமது எண்ண அலைகள் பொது மனதில் சஞ்சரித்து விலங்குகளின் எண்ணங்களுடன் ஒத்திசைந்து விலங்குகளின் மனதினால் உணரப்பட்டு ஏற்படுத்தப்படும் நடத்தை விளைவுகளையே காட்டுகின்றன.
இறுதியாக மூன்றாவது தொகுப்பை பார்ப்போம்,
இது விளக்குவதற்கு சற்று கடினமானது, இது இயற்கை விதிகளுக்கும் மனித எண்ண அலைகளுக்கும் இடையிலான ஒத்திசைவினால் ஏற்படும் விளைவுகளாகும். இயற்கை விதிகள் என நான் சொல்வது “கோயஸ் – வண்ணத்திப்பூச்சி விளைவு” இனால் ஏற்படும் விளைவுகளை குறிக்கும்.
உதாரணமாக், கோயஸ் தேற்றப்படி; நாளை ஏற்படப்போகும் விபத்து, நேற்றோ பல நாட்களுக்கு முன்னரோ ஏற்பட்ட ஒரு விளைவினால் ஏற்படுவது என்பதை குறிக்கிறது. எனவே, நாளை ஏற்படப்போகும் விபத்து பற்றிய தகவல் அடங்கில அலைகள் எம்மை சூழவும் பிரபஞ்சத்தை சூழவும் வியாபித்திருக்கும்! அவற்றுடன் எமது மன அலைகள் ஒத்திசைவடையும் போது எமக்கு எச்சரிக்கை உணர்வு ஏற்படுகிறது.
ஆகவே, உயிரினங்களின் எண்ணங்கள் அனைத்துமே பொது உலகில் வியாபித்திருக்கின்றன. உயிரினங்கள் மட்டும் அல்லாது உலக, பிரபஞ்ச தகவல்கள் கூட பொது மன உலகில் இருக்கலாம்.
அதனால்த்தான், நொஸ்ராடாமஸ் போன்றவர்கள் எதிர்வுகூற முடிந்தது!
இங்கு இன்னோர் தகவலையும் குறிப்பிடலாம், ஐன்ஸ்டைனின் தேற்றத்தை அடிப்படையாக்கக்கொண்ட காலப்பயணத்தைப்பற்றி பேசும் போதே, சில விஞ்ஞானிகள் பண்டைய உலகை அறிந்துகொள்ள பொது மன அலைகளை உணர்ந்துகொள்ளும் ஒரு கருவியை கண்டறிந்தால் போதுமானது எனக்கூறுகிறார்கள். அவர்களின் எண்ணப்படி, அக்கருவி மூலம் அக்காலத்தில் வாழ்ந்தவர்களின் எண்ணங்களை ஒன்றினைத்து, அவற்றை அறிவதன் மூலம் அக்கால கட்டத்தை அறிந்துகொள்ள முடியும்!
நீண்ட பதிவு ஒன்றின் மூலம், ஓரளவிற்கு பொது மனம் என்பதை ஓரளவிற்கு சொல்லியுள்ளேன். பொதுமனம் பற்றி மேலும் விளக்க கூடியவர்கள் கருத்திடவும்.
ESP செயற்பாட்டின் அடிப்படையான பொது மனத்தைப் பற்றி பேசியுள்ளோம். இனி, ESP சக்தியை வெளிப்படுத்திய வினோத மனிதர்கள் பற்றியும், வினோத ESP சந்தர்ப்பங்களையும் இடையிடையே அது தொடர்பாக உள்ள தேற்றங்கள், மற்றும் புராண சம்பவங்களையும் பார்ப்போம்!

நாம் சிவனாகலாமா? : மூளையும் மர்மங்களும் – Tamil ESP 6


இறுதியாக ESP பற்றி சுமார் 6 மாதங்களுக்கு முன்னர் பதிவிட்டிருந்தேன், இப்போது மேலும் பல தகவல்களை அறிந்துகொண்டு தொடரும் நோக்கத்தில் இந்தப்பதிவு…
இறுதியாக சிவனின் ESP சக்தி பற்றி பேசும் போது, அந்த சக்தியை அதிகரிக்க தியானம், தவம் உதவுமா என்ற எனது சந்தேகத்தை வெளிப்படுத்தியிருந்தேன். இப்போது தேடியதில் அந்த சந்தேகத்திற்கு ஓரளவிற்கு விடை கிடைத்துள்ளது, அதை பார்க்கலாம்…
mindநமது புராணக்கதைகளில் தவம் செய்பவர்கள் “ஓம்” என்று தொடர்ச்சியாக உச்சரித்துக்கொண்டிருப்பவர்களாக காட்டப்படுகிறார்கள். ( புராணங்களை தொலைக்காட்சி தொடராக எடுக்கும் போது, அந்த உச்சரிப்பு போக போக அதிகமாவதாக காட்டுவார்கள், அதனால் வானம் அதிர்வது போலெல்லாம் காட்டுவார்கள்.)
இது தொடர்பாக பார்த்தோமானால்; அ,ஆ,A,B போன்ற அனைத்து எழுத்துக்களையும் உச்சரிக்க எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் விட “ஓம்” என்ற சொல்லை உச்சரிக்க குறைவான நேரம் எடுத்துக்கொள்கிறது (அரை மாத்திரை அளவு என்பார்கள்.)
[ விஞ்ஞான உலகும் பிரபஞ்சத்திம் பெருவெடிப்பு (Bigbang) நிகழ முன்னர் வெறுமை சூழ்ந்த பிரதேசத்தில் வெறும் “ம்ம்ம்/ஓம்” என்ற சத்தம் மட்டுமே இருந்திருக்க கூடும் என கருதுகிறார்கள். (இந்து மதமும் அதைத்தான் சொல்கிறது.) ]
எந்தவித வெளி நினைவுகளும் இல்லாது இந்த “ஓம்” என்ற ஒலியை உச்சரிக்கும் போது ஆரம்பத்தில் மந்தமாக வினாடிக்கு ஒன்று என ஆரம்பித்து படிப்படியாக வினாடிக்கு பல எண்ணிக்கையில் மாறும். (இதை தியானத்தினூடாக அனுபவித்து பார்க்கமுடியும்.)
ஒவ்வொரு சத்தமும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்பது நாம் அனைவரும் பாடசாலைகளில் கற்ற ஒன்று. அதே போல் “ஓம்” சத்தமும் அதிர்வலைகளை ஏற்படுத்தும். ஆனால், ஓம் ஒலியினூடாக உருவாக்கும் அதிர்வலைகளிற்கான சக்தி சற்று அதிகமானது. காரணம், அதன் ஒலிப்பு நேரம் மிகக்குறைவானது (அரை மாத்திரை).
images
இந்த அதிர்வலைகள் என்பது சாதாரணமானவை அல்ல! நமது காதுகள் 20-20000 Hz வரையான அதிர்வுகளையே கேட்கும். அதற்கு மேல் வரும் அதிர்வொலிகளை எம்மால் கேட்கமுடியாது. மேலும், இந்த அதிர்வுகள் ஒரு சந்தத்திற்கு (ஒழுங்கில்) ஏற்ப ஏற்படுத்தப்படும் போது பொருட்களுடன் பரிவு நிகழும். அதாவது, ஒவ்வொரு பொருட்களுக்கும் இயற்கையாகவே ஒரு அதிர்வெண் உண்டு, அந்த அதிர்வெண்ணுடன் உராயக்கூடியதாக அதிர்வலைகள் ஏற்படுத்தப்படும் போது பரிவு நிகழும். பரிவின் போது குறிப்பிட்ட பொருள் தனது நிலையை தகர்க்கும்.
உதாரணமாக,
பிர்த்தானியாவில் பாரிய வாகனங்கள் செல்லக்கூடிய ஒரு பாலத்தில், குறிப்பிட்ட நாளில் இராணுவ ஊர்வலம் ஒன்று March-past செய்து செல்லும் போது, அப்பாலம் திடீரெனெ உடைந்து நொருக்கியது.
கணரக வாகனங்கள் செல்லக்கூடிய அந்தப்பாலம், சிறிய இராணுவக்குழு செல்லும் போது உடைந்து நொருங்கியதன் காரணம், March-past இன் போது உருவான அதிர்வலைகளால் ஏற்பட்ட பரிவினாலேயே ஆகும்.
இதே போன்று, ரஷ்ய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட அதி அதிர்வலைகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு சிறிய பெட்டி ஒன்று, ஒரு கட்டிடத்தின் மேல் வைக்கப்பட்டு அதிர்வெண்கள் கூட்டப்பட்ட போது, திடீரென சில வினாடிகளில் அக் கட்டிடம் தரைமட்டமானது!
loardஇவ் இரு உதாரணங்களே அதிர்வெண்களின் சக்தியை எடுத்துக்காட்ட போதுமானவை.
அதே போல், ஓம் என்ற ஒலி ஏன் நமது universal mind – பொது மனதில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை சிந்திக்கவேண்டும்! universal mind நமது கட்டுப்பாட்டிற்குள் வரும் போது நமது ESP சக்தி அதிகமாகும். (7 ஆம் 8ஆம் அறிவுகளில் உச்சக்கட்ட அறிவாக முழுமையான பிரபஞ்ச கட்டுப்பாடு கொள்ளப்படுகிறது. இது இறைத்துவம் எனப்படுகிறது!)
எனினும், என் எண்ணப்படி இந்த universal mind ஐ கட்டுப்படுத்தும் சக்திக்குரிய அதிர்வெண்களை தவம்/ தியானம் செய்யும் அனைவராலும் பெற்றுவிட முடியாது. ஆகவே, அவரவர் முயற்சிக்கும் வலிமைக்கும் ஏற்ப அதற்கு முன்னருள்ள சில சக்திப்படிகளை அடையமுடியும். அதுவே சிவன் மற்றும் அவருடன் இருந்தவர்களின் தவம், தியானம் போன்றவைக்கு காரணமாக அமைந்திருக்க கூடும்! சிவன் மட்டுமன்றி, ஜேசு, புத்தர் கூட இதே முறையில் புனிதர்களாகி இருக்க கூடும், இதில் ஜேசுவிற்கு இயற்கையிலேயே ESP சக்தி இருந்திருக்க கூடும்; புத்தர் தியானத்தினூடாக அடைந்திருக்க கூடும்.
இது பற்றி மேலும் பேசலாம், அதற்கு முன்னர் universal mind என்றால் என்ன என்பதை சொல்லியாகவேண்டும். பதிவின் நீளம் கருதி அதை எதிர் வரும் பதிவுகளில் பார்க்கலாம். ESP சக்தி என்பது ஒரு மர்மானதும் சுவாரஷ்யமானதுமான பகுதி, பல சம்பவங்கள் இருக்கின்றன, தொடர்ந்திருங்கள் அறியலாம்… முயற்சிக்கலாம்…
இவை ESP ஆக்கத்தின் போக்கிலான  சிந்தனைகளே! எந்த மதத்தையும் இழிவுபடுத்துவது நோக்கமல்ல!

சிவன் கடவுளா? மனிதனா? : மூளையும் மர்மங்களும் (ESP 05)


brain and esp tamilஹனுமான்/ அனுமான் ஒரு ESP மனிதரே என்பதை பல உதாரணங்களுடன் போன பதிவுகளில்பார்த்திருந்தோம். இன்று சிவன்/ சிவபெருமான் எப்படி ESP உடன் தொடர்பு பட்டிருப்பார் என்பதை ஆராயவுள்ளோம்.
நவீன விஞ்ஞானிகளிடம் மூளை தொடர்பாகவும் அதன் இயக்கம் தொடர்பாகவும் இன்றுவரை பல கேள்விகள் விடை இல்லாமல் இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்றை பார்ப்போம்.
மனித மூளையை வலது மூளை, இடது மூளை என்று இரண்டாக பிரித்து மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் கையால்வார்கள். வலது மூளைக்கும் இடது மூளைக்கும் இடையில் ஒரு பகுதியுண்டு இதுவரை அதன் செயற்பாடு என்ன என்பதை மருத்துவ விஞ்ஞானிகளால் உறுதிப்படுத்தி கூறமுடியவில்லை. ( இப்பகுதியிலேயே எலிகளுக்கு மின்னதிர்வை கொடுத்து பரிசோதித்தார்கள். இது பற்றி ஏற்கனவே முதலாவது பதிவில் பார்த்திருந்தோம். )
ESP சக்தியை குறிப்பிட்ட மனிதர்களிடம் தூண்டுவது இந்த பகுதியாக இருக்கலாம் என்றே ESP ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஆனால் ஏன் அந்த பகுதி அனைவருக்கும் தூண்டப்படுவதில்லை என்பது இன்றுவரை அறியப்படவில்லை. அந்த பகுதியை செயற்கையாக தூண்டும் போது மனிதர்களிடையே இறப்பு ஏற்படலாம் என்பதால் அவ் ஆராய்விற்கு இன்றுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை.
இந்த குறிப்பிட்ட பகுதியானது நெற்றிப்பொட்டிற்கு நேராக அமைந்திருக்கிறது!
சிவன் தொடர்பாக பேசும் போது, சிவனின் உருவத்தை காட்டும் போதே நெற்றியில் 3 ஆவது கண் இருப்பது போன்று காட்டப்படுகிறது. மேலும் அந்த 3 ஆவது கண்ணைக்கொண்டு சிவன் பல சாகாசங்களை நிகழ்த்தியுள்ளதாக புராணங்களில் காட்டப்பட்டுள்ளது. ( நெற்றிக்கண் பொறி மூலம் முருகன் பிறந்ததும் இவற்றில் ஒன்று. )
yoga shivaபுராணங்கள் என்பது திருபுபடுத்தப்பட்ட நம் பண்டைய வரலாறுகள் என்ற ரீதியிலேயே ( ஆதாரங்களுடன்) நான் பதிவுகளை எழுதுவதுண்டு. அந்த வகையில் பார்த்தால், சிவன் என்பவர் ஒரு ESP மனிதராக இருக்ககூடும். அவரின் ESP சக்தியை குறிப்பிடுவதற்காகவே நெற்றியில் கண் இருப்பது போன்று காட்டப்பட்டிருக்கலாம். ( அறிவுக்கண் என்ற சொல்லிற்கு ஏற்றாற்போல்.)
சாதாரன‌ மனிதர்களில் அபார ESP சக்தியுடன் வித்தியாசமாக இருந்த சிவன் காலப்போக்கில் கடவுள் புகழை எய்தி இருக்க வாய்ப்புண்டு. ( ESP மற்றும் ஏனைய பல அறிவியல் சார்ந்து முன்னேறிய சமுதாயமே எமது சமுதாயம் என நான் பல இடங்களில் ஆதாரங்களுடன் குறிப்பிட்டு எழுதும் போது… ஒரு மேம்பட்ட சமுதாய மக்கள் ஒரு ESP மனிதரை எப்படி கடவுளாக கருதினார்கள் என்ற லொஜிக்கான கேள்வி உங்களுக்கு எழலாம். அது எப்படி சாத்தியமானது என்பதை “லெமூரியா அழிவு” தொடர்பாக வர இருக்கும் பதிவுகளில் எதிர் பாருங்கள். )
மேலும் சிவன் பற்றி பேசினோம் ஆனால்,
சிவன் தொடர்பாக கூறப்படும் கதைகள், புராணங்களை பார்த்தோமானால் சிவனுடன் இணைந்திருக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில் மனிதர்களிடம் இருந்து வித்தியாசமானவர்களாகவே காட்டப்பட்டுகிறார்கள். மற்றும் அனைவரும் தியானம் செய்பவர்களாகவும் காட்டப்படுகிறார்கள். இதில் இருந்து ஒரு சந்தேகம் எழுகிறது… அதேவேளை ஒரு தீர்மானமும் எழுகிறது.
அதாவது சிவன் மட்டும் இன்றி அவருடன் அவரைப்போன்று (ஆனால் சற்று குறைவான) சக்தியுடைய மனிதர்கள் பலர் இருந்திருக்கிறார்கள் என்பதை தீர்மானிக்க முடிகிறது. [ இவர்கள் அனைவருமே கடவுள்கள் என்ற வாதம் முற்றாக தவிர்க்கப்பட வேண்டியது! காரணம், சிவன் தொடர்பான வரலாறுகள் அனைத்தும் இந்து மதத்துடன் (சைவம்) சம்பந்தப்பட்டது; ஆனால் இந்து மதத்தின் அடிப்படை கொள்கையே கடவுள் என்பவர் ஒரு ஒளி சக்தியாகவே காட்டப்படுகிறார். ( நமது பிக்பாங் கொள்கைக்கு கூட இது பொருந்தும்! ) ஆகவே இவர்கள் கடவுள்கள் என்ற வாதம் முரனானது. ]
God_brainஎனது சந்தேகம் என்னவென்றால், தற்போதைய உலகில் ESP என்பது சில மனிதர்களிடம் தானாக வரும் ஒரு வித விசேட மர்ம சக்தியாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், சிவன் மற்றும் அவர் தொடர்பானவர்களுடன் பார்த்தோமானால் பயிற்சி (தியானம்) மூலம் சக்தியைப்பெற முடியும், என்ற வகையிலேயே அமைந்துள்ளது. அப்படியானால் தியானத்தின் மூலம் நாம் நமது மூளையின் நடுவில் இருக்கும் அந்த மர்ம பகுதியை இயக்க முடியுமா? இதன் மூலம் விசேட சக்திகளை இப்போதும் பெற முடியுமா என்ற கேள்விகள் எனக்கு எழுகின்றன.

ஹனுமாருக்கு நிகரான நவீன மனிதர்! (ESP 04)


போன பதிவில் குறிப்பிட்ட படி ஹனுமார் ஒரு ESP மனிதர் பெரிய மலையை தூக்கினார் என்றால் அவரால் எப்படி அவ்வள‌வு பெரிய உருவத்தை எப்படி எடுக்க முடிந்தது? என்ற அறிவு பூர்வமான கேள்வி எழும்.
இந்த கேள்வியிற்கு விடை கொடுப்பதற்கு முன்னர்… விஞ்ஞான உலகினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு அமானுட ESP மனிதரை பற்றி பார்ப்பது பொருத்தமானது…

டானியல் டொங்லஸ் ஹியூம் (daniel douglas hume)
1833 ஆம் ஆண்டில் பிறந்த ஒரு மனிதர், அப்பா இல்லாத இந்த சிறுவனின் தாயும் சிறுவயதில் இறந்து போக அத்தையுடன் வளர ஆரம்பித்தான்.
சிறு வயதிலேயே வித்தியாசமான குணங்களுடன் வளர்ந்த இந்த சிறுவனுக்கு ஒரு சிறந்த நண்பனும் இருந்தான்… கால ஓட்டத்தில் நண்பன் வேறு இடத்திற்கு குடிபெயர்ந்திருந்தான்.
ஒரு நாள் திடீரென 13 வயதேயான ஹியூம் தனது அத்தையிடம் “எனது நண்பன் “எட்வின்” இறந்து விட்டான் என தோன்றுகிறது” எனக்கூறினான்… இதை நம்ப அத்தை நம்பவில்லை.
அடுத்த நாள் காலையில், எட்வின் ஒரு கார் விபத்தில் இறந்த தகவல் கிடைக்கிறது. அப்போது தான் முதல் முதலாக அபூர்வ ஆற்றல் இருப்பது தெரியவந்தது.
அதன் பின்னர் 4 வருடங்களில் பல ஆற்றல்கள் அவரிடம் வந்து சேர்ந்தன.
( இவரின் முளு விபரத்தை பார்க்கும் போது பல வியப்புக்கள் காத்திருக்கும்… நான் இங்கு அவை அனைத்தையும் குறிப்பிடவில்லை… ஆர்வமுள்ளவர்கள் வாசித்துக்கொள்ளவும். )
ஒரு முறை பல ஆள்மன சக்கிதி ஆராய்ச்சியாளர்களின் முண்ணிலையில் தனது சக்திகளை நிரூபித்துக்கொண்டிருந்தார்.
அவர் மேசையை அந்தரத்தில் பறக்க செய்த போது, உடனே அனைவரும் ஓடிப்போய் ஏதும் கேபிள் இருக்கிறதா என பரிசோதித்தார்கள்… இப்படி அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் சந்தேகக் கணோடு பார்வையிட ; கடுப்பாகிப்போன ஹியூம்… ஒரு சுவரின் ஓரமாகப் போய் நின்று கொண்டு… தனது உயரத்தை அளவிடுமாறு கூறினார்.. சையாக 5 அடி 10 அங்குளம் அளவிடப்பட்டது.
பின்னர், கண்ணை மூடி மூச்சை உள்ளெடுத்துக்கொண்ட ஹியூம் சில நிமிடங்களில் வளர ஆரம்பித்தார்!!! பின்னர் அளந்து பார்க்கையில் 6 அடி 6 அங்குளமாக உயர்ந்திருந்தார்!!!
இதை கண்கூடாக கண்ட அனைத்து விஞ்ஞானிகளும் விளக்கம் கூற முடியாமல் திகைப்புக்குள்ளாகி அவரின் சக்தியை ஒப்புக்கொண்டிருந்தார்கள்.
இது நிவீன உலகில் நேரடியாக நிரூபனமான ஒரு உதாரணம்.
இதே போன்ற ESP சக்தியை பயண்படுத்தி ஹனுமாரும் தனது உடலை பெருப்பித்திருக்க சந்தர்ப்பங்கள் உள்ளன.
ஹியூமை விட அதிகபடியான ESP தன்மையை கொண்டிருப்பின் உடலை இன்னும் பெருப்பிப்பது சாத்தியமே. :)
பறக்கும் சக்தியையும் ஹியூம் நிரூபித்துக்காட்டி இருந்தமை குறிப்பிட வேண்டிய விடையம்.
மேலும், தனக்கு ESP தவிர்ந்த சில ஆவிகள்(?) உம் தனக்கு துணை புரிவதாக கூறி இருந்தாராம் ஹியூம்.
வாணில் இருந்து சில(9) சக்திகள் தன்னை இயக்குவதாக குறிப்பிட்டு இருந்துள்ளார். ( இப்படியான பல சக்கிதகளைக்கொண்ட மனிதர்கள் குறிப்பிட்ட வாண் சக்திகள் பற்றி சொல்லி இருக்கிறார்கள்… அவற்றை தெளிவாக இனிவரும் பதிவுகளில் பார்க்கலாம் :) )
அதேவேளை, ஹனுமாரும் இவ்வொரு முறை பெளதீக விதி முறைகளை மீறும் போதும் ( ESP ஐ வெளிக்கொணரும் போதும்) வாணத்தை நோக்கி கண் மூடி தியானித்ததாகவே இதிகாசங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே ஹனுமார் ஒரு ESP மனிதராக இருந்து பின்னர் வரலாற்றாலர்களால் கால ஓட்டத்தில் இறைப்புகழ் எய்தி இருக்க கூடும்.

கடவுள்களும் ESP யும் – ஹனுமார் (ESP 03)


போனபதிவில்…
அந்தரத்தில் பறந்த மனிதர் பற்றியும்… பாரிய நிறையை நகர்த்திக்காட்டியதுடன் மட்டுமல்லாது தனது நிறையை கூட்டிக்காட்டிய மனிதர் பற்றியும் பார்த்திருந்தோம். அப்போது.. முடிவில் கூறியிருந்தேன்… இப்படி நிகழ்த்தப்படுவது இதுவல்ல முதல் முறை என்று…
அப்படியானால்… முன்னர் யார் இப்படியான பெளதீக மீறல்களை செய்தார்கள் என்பதை இன்று எழுதுகிறேன். ( இவை எனது ஊகங்கள் தான் ESP யாக இருக்கும் என்று… பிழைகளைச்சுட்டிக்காட்டவும்.. :) )
PART 01    —   PART 02
——————————————————————————————
இராமாயணம் பலருக்குத்தெரிந்திருக்கும் ( தெரியாதவர்கள் நண்பர்களிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள்..)..
அதில் குறிப்பிடப்படும் ஒரு கதாப்பாத்திரம் “ஹனுமார்”…
ஹனுமார்… பறக்கக்கூடிய சக்தி கொண்டவாரகவே காட்டப்படுகின்றார்… எனினும் அவர் அந்த சக்தியை முன்னர் உணர்ந்திருக்கவில்லை… ஒருமுறை குறிப்பிட்ட ஒருவரால் ( பெயர் மறந்துவிட்டது ) அந்த சக்தி இருப்பது உணர்த்தப்படுகிறது. அதன் பின்னரே அவர்… இலங்காபுரிக்கு பறந்து செல்வதாக காட்டப்படுகிறது.
இன்னொரு சம்பவத்தில்… இராமரின் தம்பி லக்ஷ்மனனைக்காப்பாற்ற “சஞ்சீவி” மலையில் போய் குறிப்பிட்ட ஒரு மூலிகையை கொண்டுவருமாறு ஹனுமார் பணிக்கப்படுகிறார். உடனே பறந்து சென்ற ஹனுமார்… அங்கு அந்த குறிப்பிட்ட மூலிகையை கண்டு பிடிக்க முடியாமையால்… அந்த மலையை அப்படியே தூக்கிவருவதாக காட்டப்பட்டுள்ளது.
எனவே இந்த கதாப்பாத்திரத்தில் குறிப்பிடப்படும்… ஹனுமார், உண்மையிலேயே ஒரு ESP சக்தி கொண்ட மனிதராக அல்லது தனது மூளையிம் பல செல்களை பயண்படுத்தி அபூர்வ ஆற்றல்களை வெளிப்படுத்தத்தக்க மனிதராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. ( எல்லாத்தையும் புணைவுகளுடன் மிகைப்படுத்தி எழுதியமையால் வரலாறுகள் கூட பொய்யாகிப்போவதுண்டு. )
இங்கு நாம் இன்னொன்றையும் கவணிக்க கூடியதாக இருக்கிறது… என்னதான் மலையை தூக்கிகொண்டு பறக்கும் ஆற்றல் மிக்கவராக இருந்தாலும்… அவரால், அந்த குறிப்பிட்ட மூலிகையை கண்டு பிடிக்க முடியவில்லை.
நவீன உலகத்தில் இனங்காண‌ப்பட்ட ESP மனிதர்களும் அப்படித்தான்… குறிப்பிட்ட ஒரு ஆற்றலையே அவர்களால் திறம்பட வெளிப்படுத்த முடிகிறது. (மூளையின் குறிப்பிட்ட பகுதி செல்களின் ஆற்றலை மட்டுமே இவர்களால் தூண்ட முடிகிறது.)
இராமயாண உதாரணத்தை மட்டும் அவைத்துக்கொணு இந்த ESP மனிதர்கள் முன்னர் இருந்தார்கள் என்பதை சிலருக்கு ஏற்க முடியாதிருக்கும்.
எனினும்… எகிப்திய கதைகளில் வரும் தெய்வங்கள், தேவதைகளும் பறக்கும் ஆற்றலைப்பெற்றிருந்ததாக காட்டப்படுகிறது. ( இறக்கை இருந்ததாக சொல்லப்படுவது பின்னர், சாதாரண மனிதர்கள் நம்புவதற்காகவும் லொஜிக்கிற்காகவும் ஏற்படுத்தப்பட்ட‌ புணைவுகளாகவும் இருக்கலாம். )
எகிப்திய தெய்வங்களில்… ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு ஆற்றல் இருப்பது போன்று காட்டப்படிருக்கிறது. அனைத்தும் கொண்டவர் இல்லை என்பதை இதிலிருந்தும் ஊகிக்கலாம்…
இவை இன்று அறியப்பட்டுள்ள ESP சக்திகளுடன் திறம்பட ஒத்துப்போகின்றது.

உயரத்தையும் நிறையையும் மாற்றும் ESP திறன்! – (ESP 02)


போன பகுதியில் என்றால் என்ன, அது மூளையின் எப்பகுதியில் தொழிற்படக்கூடும், நாம் பயண்படுத்த முனையும் சந்தர்ப்பங்கள் என்பவற்றை உதாரணங்களூடாக பார்த்திருந்தோம்.( PART 01 )
இன்று…
அமெரிக்காவில்…
மன்ஹட்டன் நகரத்தில் ஒரு ESP தொடர்பான ஆய்வுகூடம்…
பல விஞ்ஞானிகள் கூடி இருந்தார்கள்… டொக்டர். ஷார்ல்ஸ் பேர்ட் அவர்கள் முன்னிலையில் சிறிது நேரம், ஆழ்மனதின் ஆற்றல்கள் பற்றியும்… மூளையின் விளங்க முடியாத தன்மைகள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தார். அவர்தான் அந்த கழகத்தின் தலைவர். சிறிது நேர உரையின் பின்னர்… ஒரு தளமான கட்டிலில் நேராகப் படுத்திருந்து கண்களை மூடினார்…
சிறிது நேரத்தில் எல்லாம் உடல் தானாக மேல் எழுந்தது… சுமார் 12 உயரம் வரை சென்ற உடல், அப்படியே யன்னல் ஊடாக வெளியேறியது… அனைவருக்குமே திகில் கலந்த ஆச்சரியம்… ஆம், உடல் வெளியேறியது 16 ம் மாடிக்கட்டிடத்தில் இருந்து… எந்த வித பாதுக்காப்பு ஏற்பாடும் செய்யப்பட்டிருக்கவில்லை.
ஒரு ஜன்னல் வழியாக வெளியேறிய உடல் அப்படியே இன்னொரு ஜன்னலூடாக உள் நுழைந்து அடுத்த அறைக்குள் சென்று தரையில் இறங்கியது!!!
கண் விழித்த ஹார்ல்ஸ் பேர்ட்… மற்றைய அறையில் இருந்தவர்களிடம்… இடைஞ்சலுக்கு மன்னிக்கவும்… மற்ற அறையில் நாங்கள் ஆழ்மன ஆராச்சியில் ஈடுபட்டிருக்கிறோம் என்று சாதாரண்மாக சொல்லிவிட்டு தனது கூட்டத்துக்கு சென்றார்.
இந்த சம்பவம்…. ESP துறையில் ஒரு முக்கிய மயிற்கல்லாக அமைந்தது.
இப்படி ஒரு மனிதன் பறபதென்பது இதுவா முதல் முறை? என்ற கேள்விக்கு பதில், இல்லை என்று சொல்லலாம்… அப்போ ஆர் என்பதை பின்னர் பார்ப்போம்.
——————————————————————————————
அடுத்த சம்பவம்…
உண்மையிலேயே ஆச்சரியமானதுதான்… இதுவும் இந்த துறையில் ஒரு மிகப்பெரிய பெளதீக மீறல்தான்…
( சம்பவ இடம்… மற்றும் பெயர்கள் நினைவில்லை… வரும் பதிவுகளில் தேடி உறுதிப்படுத்துகிறேன்… தெரிந்தவர்கள் பின்குறிப்பில் சொல்லுங்கள். )
நீண்டகாலமாக இந்த ESP துறையில் ஆராச்சியில் ஈடுபட்டிருந்த ஒரு பிரபல ஆய்வாளர்…. பல விஞ்ஞானிகளையும், அறிஞர்களையும் ஒரு நிகழ்ச்சிக்காக கூப்பிட்டிருந்தார்.
மேடையின் நடுவே இரண்டு தராசும்… மிகப்பெரிய ஒரு பலகை அலுமாரியும் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், ஆய்வாளர் மேடைக்கு ஒரு இளைஞனையும் அழைத்துவந்தார்.
முதலில், அலுமாரியின் நிறை அளக்கப்பட்டது… கிட்டத்தட்ட 200 kg (?) நிறையைக்காட்டியது தராசு.
அடுத்து அந்த குறிப்பிட்ட இளைஞனை தராசில் ஏற்றினார்கள்… 65 Kg (?) நிறையைக்காட்டியது தராசு.
இதில் ஒன்றும் அதிசயம் இல்லை…. அடுத்து நடந்ததுதான் எல்லோரையுமே உறையவைத்தது.
அந்த இளைஞன் ஒருதராசில் அமர்ந்து, கண்களை மூடிக்கொண்டான் (கிட்டத்தட்ட தியானிம் செய்வது போன்று.) சிறிது நேரத்தில்… அடுத்த தராசின் நிறைகாட்டி குறையத்தொடங்கியது. அதேவேளை… இந்த இளைஞன் இருந்த தராசின் நிறை காட்டி உயர்வடையத்தொடங்கியது…
மேலும் குறுகிய நேரத்தில்… அந்த அலுமாரி, அந்தரத்தில் மிதந்தது… அதே வேளை இளைஞனின் நிறை 200 kg ஐத்தாண்டியது… அனைவருமே அப்படியே சாக் ஆகிப்போனார்கள் .. :P
இப்படி, ஒரு மனிதனால்.. திடீரென தன் நிறையைக்கூட்ட முடியுமா? அதுவும் மிகக்குறுகிய நேரத்தில்… அனைவருமே வியந்தார்கள்… பெளதீகத்தால் விளக்கம் கொடுக்க முடியவில்லை… ஆனால், எமக்குள் பல சக்திகள் பொதிந்துள்ளது என்று மட்டும்… அனைவருமே ஒப்புக்கொண்டார்கள்.
——————————————————————————————
அது இருக்கட்டும்… இப்படி, பாரமான பொருளைத்தூக்குவது , நிறையை அதிகரிப்பது என்பது இதுவா முதல் முறை?
என்றால்… அதற்கு பதிலும் இல்லைத்தான்… அப்படியானால், இதற்கு முதல் எங்கே நடந்தது?… அது எவ்வாறு? போன்ற பல வியப்பான சம்பவங்களுடனும்… ஒப்பீடுகளுடனும்… அடுத்த ESP பதிவில் சந்திக்கிறேன்…