Saturday, June 18, 2016

“MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்…! – சிறப்பு பதிவு


“MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்…! – சிறப்பு பதிவு

“தோற்றுப்போனது Islamic State (ISIS)-ன் இராணுவ பலமா அல்லது…………..” Mount Sinjar மொசூலிற்கான கிழக்கு வாசல். டிசம்பர் மூன்றாம் வாரம் நிகழ்ந்த சண்டைகளில் Peshmerga Combatஅணிகள் பல வெற்றிகளையீட்டியிருந்தன.
சின்ஜாரின் சத்ர் மலையுச்சியில் நின்று குர்திஷ்தான் ரீஜனல் கவர்மென்டின் (KRG) அதிபர் மசூத் பர்ஸானி இப்படிச் சொன்னார்.
Sinjar  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு SinjarSinjar Mountains
“நாங்கள் 48 மணிநேரத்தினுள் சின்ஜாரின் 3000 சதுர கிலோ மீட்டர்களை கைப்பற்றியுள்ளோம். இஸ்லாமிய அரசின் (IS) அழிவு இங்கிருந்தே ஆரம்பமாகின்றது”.
அமெரிக்க கூட்டு படைகளின் வான்தாக்குதல்களின் துணையுடன்  peshmerga படையணிகளும், இவர்களிற்கு உதவுவதற்காக சிரியாவில் இருந்து வந்த குர்திஷ்களான People’s Protection Units (YPG)அணிகளும், சின்ஜாரின் சொந்தக்காரர்களான Yazidi ஆயுதப் போராளிகளும் இணைந்து இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
மிக நீண்ட சண்டைகளின் பின்னர் அந்த நிலங்கள் அவர்கள் வசமாயின. அதிநவீன ஆயுதங்கள், அமெரிக்க சட்டலைட், ராடார் வழிகாட்டல்கள், கூட்டு படைகளின் துல்லியமான வான் தாக்குதல்கள் இந்த சண்டைகளின் வெற்றிகளை குர்திஷ்களிற்கும், யஷீதிகளிற்கும் வழங்கியிருந்தன.
சின்ஜார் சண்டைகளில் இஸ்லாமிய அரசின் இராணுவம் பழைய ஆயுதங்களுடனேயே சண்டையிட்டன. மொசூலில் கைப்பற்றிய ஈராக்கிய இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்த அதிநவீன ஆயுதங்களை ஐ.எஸ். போராளிகள் சின்ஜார் சமர்களில் உபயோகம் செய்யவில்லை. வேகமாக பின்வாங்கியிருந்தனர்.
IRAQ-UNREST  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு isisisisisisisiiiiiiii 1
அதே வேளை பலநூறு போராளிகளையும் இழந்திருந்தனர். peshmerga கைப்பற்றிய 3000 சதுர கிலோ மீட்டர்களில் 2000 சதுர கிலோ மீட்டர்கள் வெறும் பாறைகள். கட்டாந் தரைகள்.
அதையும் தாண்டி எதற்காக இப்படியொரு பெருந்தாக்குதல்?. ஐ.எஸ். எதற்காக இராணுவ அணிகளை இறக்காமல் குலோபல் போராளிகளை மட்டும் குழுக்களாக சின்ஜாரில் வைத்திருந்தது? இ்ந்த கேள்விகளிற்கு பெரிய விடையுள்ளது.
மசூத் பர்ஸானி “குளோபல் வோர் எகைன்ஸ்ட் இஸ்லாமிக் ஸ்டேட் டெரரிஸம்” என்ற வார்த்தைகளின் உள்ளேயுள்ள வரலாற்று அரசியலை புரிந்து கொள்ள முற்படுவோம்.
Yazidi இனம் உலகில் ஒரு மில்லியனுக்கு சற்று கூடவோ குறையவோ உள்ளனர். ஈராக், சிரியா, துருக்கி, ரஷ்யா, ஜோர்ஜியா, உக்ரைன், ஆர்மெனியா, ஜேர்மனி, ஸ்வீடன், ஹொலன்ட் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர்.
மொசப்பதேமிய நாகரீகத்தில் உருவான இனம் இது. ஈராக்கில் மட்டும் 07 இலட்சம் பேர் வாழ்கின்றனர். “சாத்தானை வணங்குபவர்கள்”. டெவில் வேர்சிப்பர்ஸ் என பொதுவாக அழைக்கப்படுபவர்கள். சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் அதன் திசை பார்த்து வணக்கம் செய்பவர்கள்.
இறைவன் ஒருவன் என்றும் அவன் உலகை பரிபாலிக்க 07 தேவதைகளை (இரகசிய படைப்புக்களை) நியமித்துள்ளதாக நம்பும் இவர்கள் பீகொக் ஏன்ஜல் எனும் “Melek Taus” -ஐ தங்கள் பூமிக்கான கடவுளாக நினைக்கின்றனர்.
இந்த சாத்தானின் திருப்திக்காக அவன் விரும்பும் தேவைகளை இவர்கள் நிறைவேற்றுவார்கள். இவர்கள் இரகசிய சமூகமாக வாழ்கின்றனர். தங்கள் வணக்க வழிபாடுகளை கூட மற்றவர்கள் பார்க்காத வண்ணம் இரகசியமாக மேற்கொள்கின்றனர்.
இலுமினாட்டிகள் எனும் சாத்தானை வழங்கும் ஞானிகள் இங்கிருந்தே உருவாகினர். இவர்களது பிளேக் புக் என்ன செய்ய வேண்டும் என்பதை இவர்களிற்கு உபதேசிக்கிறது. அவர்களது வணக்க ஆலையங்களின் தலைமை ஆலயம் “40 மேன் டெம்பிள்” இந்த சின்ஜியாரிலேயே உள்ளது.
இன்று நாம் காணும் ப்றீமேஷன் எனும் இலுமினாட்டி சமூகத்தின் வேர் இதிலிருந்தே ஆரம்பமாகிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மன் என உலகின் வல்லரசுகளையெல்லாம் தம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இலுமினாட்டி சமூகத்தின் உதய பூமி சின்ஜார் என்றால் வியப்பாக உள்ளது அல்லவா !!?
Yazidi - women aarti  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு Yazidi women aartiYazidi – womens
துருக்கிய கிலாபாவில் பல முறை இந்த யஷீதிகள் மீது இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டுள்ளனர். தேசபிரதிஷ்டம் செய்யப்பட்டுள்ளனர். பாதாள சிறைகளில் சாகும் வரை அடைக்கப்பட்டுள்ளனர்.
துருக்கிய கிலாபாவின் வீழ்ச்சிக்கு முதன்மை காரணம் அவர்கள் யஷீதிகள் மீது கைவைத்தது தான் என்பது வரலாற்றில் எழுதப்படாத உண்மை.
துருக்கிய கிலாபாவை வீழ்த்திய போது தப்பியோடியவர்கள் மேற்கைரோப்பா முழுதும் விரவி வாழ்கின்றனர். குறிப்பாக ஜேர்மனியில். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எதற்காக “சின்ஜாரை” மீட்கும் படி அமெரிக்க வான்படைக்கு கட்டளையிட்டார் என்பதன் முடிச்சு இப்போது அவழ்ந்திருக்குமே.
எதற்காக சுமார் 15,000 பேர் கொண்ட மிலி்ட்டரி யுனிட்கள் ஐ.எஸ்.-உடன் இங்கு சண்டையிட்டனர் என்பதன் முடிச்சும் அவிழ்ந்திருக்குமே.
கற்பாறைகளை கொண்ட பிரதேசத்திற்கான சண்டையில் ஐ.எஸ். என்ன செய்தது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
இஸ்லாம் ஏக தெய்வ கொள்கையை வலியுறுத்தும் மார்க்கம். நபி முஹம்மத் அவர்கள் மக்கா வெற்றியின் பின் செய்த முதல் வேலை அங்குள்ள சிலைகளை உடைத்தமை.
இன்றைய இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) தான் கைப்பற்றும் இடங்களில் எல்லாம் முதலில் செய்வது இணைவைத்தலை அழித்ததாகும். தர்காக்கள், ஸியாரங்கள், என்பவை குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.
இஸ்லாமிய அரசின் எல்லைகள் அன்பாரில் ஆரம்பித்து சிரியாவில் முடிகிறது. அது பிரகடனம் செய்த கிலாபாவின் எல்லைகளிற்கு நடுவில் இருந்தது இந்த சின்ஜார்.
al bagdadhi  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு al bagdadhiஅபுபக்கர் அல் பக்தாதி al bagdadhi
இறைவனிற்கு சவால் விடும் சாத்தானை வணங்கும் சமூகம், அதன் ஒரு பிரிவு இலுமினாட்டி சமூகமாக தன்னை ஸ்திரப்படுத்தி உலகில் இரத்தக்களறிகளை உருவாக்கி சாத்தானை அந்த மனித இரத்தங்களினால் அபிஷேகம் செய்து குளிரவைக்கும் அமைப்பு சின்ஜாரில் இருப்பதை எப்படி  அமீருல் முஃமினீன் பக்தாதி  (அபுபக்கர் அல் பக்தாதி) அனுமதிப்பார்.
ஆணையிட்டார். ஐ.எஸ். ஆயுதக்குழுக்கள் சின்ஜாரை விட்டு வெளியேறுமாரு காலவரையறை விதித்தது. பின்னர் சுற்றி வளைத்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள் வெளியேறினர். அமெரிக்கா வானில் இருந்து உணவுகளையும், ஆயுதங்களையும் போட்டது.
இறுதியில் சின்ஜாரினுள் நுழைந்த இஸ்லாமிய அரசின் போராளிகள் நரவேட்டையாடினர். கையில் கிடைத்த யஷீதிகளை கொன்று தள்ளனர். இஸ்லாத்திற்கு வந்தவர்களை தவிர. பெண்களை அடிமையிட்டனர். கொத்து கொத்தாக கொல்ல ஆரம்பித்தனர்.
சேர்பியாவின் சவக்கிடங்குகளை விடவும் பெரிய சவக்கிடங்குகளை வரும் நாட்களில் ஊடகங்கள் சின்ஜாரில் கண்டு பிடிக்கும். மனித உரிமை அமைப்புக்கள், ஜனநாயக சக்திகளின் பார்வையில் இது மனித படுகொலை.
மன்னிக்க முடியாத குற்றம். பக்தாதி அன்ட் கோவின் பார்வையில் சாத்தானிய வணங்கிகளிற்கான தண்டனை. மார்க்க கடமை. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அங்கு பெண்கள் ஐ.எஸ். போராளிகளினால் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அடிமையிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது. இது பற்றிய உண்மை தன்மைகளை எம்மால் அறிய முடியாதுள்ளது.
இஸ்லாம் அனுமதிக்காத எதையும் மார்க்கத்தின் பெயரில் செய்தால் அவர்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. இது இறைவனின் இராணுவம் சாத்தானின் இராணுவம் எனும் இரண்டு அணிகளின் சண்டை.
அதனால் தான் சின்ஜார் சண்டைகளின் ஆயுத பலப் பிரயோகம் என்பது மிகக் கடுமையாக நடாத்தப்பட்டது. சின்ஜார் விடுவிக்கப்பட்டாலும் பல ஆயிரம் யஷீதிகளை ஐ.எஸ். போராளிகள் ஆடுகளை மேய்ப்பது போல் தங்கள் பகுதிகளிற்கு ஓட்டிச் சென்றுள்ளனர்.
அமெரிக்கா நினைத்திருந்தால் அதன் வான் தாக்குதல் வலுவின் ஊடாக முழு சின்ஜாரையும், அதனோடிணைந்த ஏரியாக்களையும் தரைமட்டமாக்கியிருக்க முடியும்.
அப்படியொரு தாக்குதல் நடந்தால் அதில் பல்லாயிரம் இஸ்லாமிய அரசின் போராளிகள் அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அது இந்த சண்டயில் நிறைவேற்ற முடியாத மிலிட்டரி ஒப்சனாக மாறியுள்ளது.
காரணம் ஐ.எஸ். போராளிகள் தங்களுடன் யஷீதிகளையும் மனித கேடயமாக மாற்றி வைத்துள்ளனர். யஷீதிகள் மீது குண்டு போட்டு அவர்களை அழிக்க முடியாது. ♠அமெரிக்க மற்றும் உலக அரசியலில் இலுமினாட்டிகளின் கரம் வலுவானது”.
அதாவது ஈவில் அல்லது டெவில் வேர்சிப்பர்ஸ் உலகம் முழுதும் அதன் தலைமைத்துவங்களில் சிலீப்பர் செல்கள் போல் மறைந்துள்ளனர். பேஸ்மேக்ரா போராளிகளை வைத்தே சண்டைகளை முடித்துக் கொள்ளப்பார்த்த அமெரிக்கா அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது.
மீதி யஷீதிகளை மீட்பதென்பது அடுத்த சவாலாக மாறியுள்ளது. ஐ.எஸ்.- பொருத்தவரை சின்ஜாரை கைப்பற்றி தக்க வைப்பது ஒன்றும் ஸ்டடர்ஜிகல் விக்டரியல்ல.
அவர்கள் நோக்கம் இஸ்லாமிய கிலாபாவினுள் சாத்தானிய வணங்கிகள் இருக்க கூடாது என்பதே. அதை நிறைவேற்றவே அவர்கள் அங்கு சென்றனர். அதன் நடுவில் அவர்கள் அழிக்கப்பட்டு விரட்டப்பட்டுள்ளனர்.
மீண்டும் அங்கு சாத்தானிய ஆராதனைகள் ஆரம்பமாகியுள்ளன. ஸோ மீண்டும் ஐ.எஸ். அதனை அழிக்க முயலும். அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க எப்படி ஸியோனிஸம் உள்ளது அப்படியே ப்றீமேஷனும் உள்ளது. மறை கரம் இது.
இது தான் சின்ஜார் யுத்தம். சற்று ஆழமாக வரலாற்றை நோக்கினால் இதன் உண்மைகள் விரிந்து செல்வது உங்களிற்கும் புரியும்…./p>

இலுமினாட்டிகள்  என்பவர்கள் யார்?  அவர்களை பற்றி  அறிந்துள்ளீர்களா?

இலுமினாட்டி பற்றி தெரியாதவர்கள் முதல் முறையாக தெரிந்து கொள்ளும் நாளில் தூக்கத்தைத் தொலைப்பது நிச்சயம். தெரியாதவர்களுக்காக  இலுமினாட்டி பற்றி ஒரு சிறு அறிமுக கட்டுரை.
உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள்தான் இலுமினாட்டிகள். உலக அரசியல் அமைப்புகள், மதங்கள், வங்கிகள், ஹாலிவுட், மீடியாக்கள், நுகர்பொருட்கள் எல்லாம் எல்லாம் இவர்களது கையில். எதெல்லாம் இவர்களுடையது என்று ஆராய்வதைவிட எதெல்லாம் இன்னும் இவர்களுக்கு சொந்தமாகவில்லை என்பதை வேண்டுமானால் எளிதாக எண்ணிவிடலாம். இன்றைய உலகைப் பொறுத்தவரை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் அழித்தலும் இவர்கள் கையில்.
எகிப்திய பார்வோனின் இரத்தவழி வம்சங்களாகிய 13 முதல் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த இலுமினாட்டிகள். சில உலக அரசியல் தலைவர்களும், மிகப்பெரிய பணமுதலைகளும், கலைத்துறையினரும், விஞ்ஞானிகளும் இதில் அடக்கம். இவர்கள் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்தது. உலகில் இதுவரை நடைபெற்ற அத்தனை புரட்சிகளையும், இரு உலகப்போர்கள் உட்பட அத்தனை யுத்தங்களையும் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக நடத்தியவர்கள் இவர்கள்தான்.
இதை ஏன் அவர்கள் செய்ய வேண்டும்?
New World Order என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து அதை ஆளவேண்டும் என்பதே இவர்கள் நோக்கம், அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
இலுமினாட்டிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்வது இக்கட்டுரையைப் புரிந்துகொள்ள உதவும். இவர்கள் சொல்லி அடிப்பதில் கில்லாடிகள்.
பில்லி சூனியம், நரபலிகள், மாந்திரீகம், அஸ்ட்ராலஜி, நியூமராலஜி, occultism போன்றவற்றில் இவர்களை மிஞ்ச உலகத்தில் ஆளில்லை.
3,6,7,9, 11, 22, 33, 333, 66, 666 போன்றவை இவர்களது முக்கிய எண்கள். சைத்தானுக்கு செய்யும் சடங்குகளாக இவர்கள் குறிப்பிட்ட நாளில் சில குறிப்பிட்ட செயல்களை செய்வார்கள்.
அது முழுக்க முழுக்க எண்களின், வானசாஸ்திரத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இவர்கள் தாங்கள் செய்யப்போவதை ஏதேனும் ஒரு மீடியம் வழியாக ஏற்கனவே வெளியே சொல்லியும் விடுவார்கள், ஆனால் அதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
பெரும்பாலும் சம்பவங்கள் நடந்த பின்னரே அதை உலகம் புரிந்து கொள்ளும். அப்படி முன்னரே கண்டுபிடித்தாலும் எந்தக் கொம்பனாலும் அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.
உதாரணத்துக்கு இரட்டை கோபுர இடிப்பு நடத்தப் போவது பற்றி (அதை செய்ததும் இந்தப் புண்ணியவான்கள்தானாம்) சம்பவம் நடப்பதற்கு சிலமாதங்கள் முன்னர் வெளியிட்ட 20$ அமெரிக்க நோட்டில் மறைமுகமாக சொல்லிவிட்டார்களாம், மட்டுமன்றி சம்பவத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் வெளியான புகழ்பெற்ற காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகளிலும் ஆங்காங்கே இந்த இரகசியம் வெளியிடப்பட்டிருக்கிறது, ஆனால் அது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
20dollar  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு 20dollar
iluminedikal  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு iluminedikal
யார் இவர்கள்? ஏன் இதைச் செய்கிறார்கள்? இவர்கள் ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை? தாங்கள் செய்யப்போவதை யாருக்கு, ஏன் முன்கூட்டியே சொல்லுகிறார்கள்? அது யார் மூலம், எப்படி வெளிவுலகத்துக்கு கசிகிறது?
இலுமினாட்டிகள் யாரும் தன்னை இலுமினாட்டி என்று அறிவித்துக் கொள்ளமாட்டார்கள். இது ஒரு இரகசியக் குழு, இரகசியம்தான் இவர்கள் பலம். இதை ஏன் வெளியே சொல்லுகிறார்கள் என்றால் மக்களுக்காக அதை சொல்லுவதில்லை.
உலகம் முழுவதிலுமுள்ள இலுமினாட்டிகள் தங்களுக்குள் போன் மூலமாகவோ கடிதத்திலோ பேசிக்கொள்ள மாட்டார்கள், இதுபோன்ற சமிஞ்கைகள் மூலமே தங்கள் சக இலுமினாட்டிகளிடம் தகவல்களைப் பரிமாறுகிறார்கள்.
அவற்றை decode செய்து கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இலுமினாட்டிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவர்கள் தகவல்களை decode செய்து மக்களுக்கு வெளியிடும் conspiracy theorists பலர் இருக்கிறார்கள்.
அவர்களது கட்டுரைகள் புத்தகங்கள் மூலம் இணையதளங்கள் வழியே பல நூற்றாண்டுகளாக திரைமறைவில் உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருந்த இலுமினாட்டி இயக்கம் பற்றிய இரகசியங்கள் இப்போது ஓரளவுக்குக் கசியத்துவங்கி இருக்கிறது.
இணையத்தில் இன்றைய ஹாட் டாபிக் இதுதான். ஆனால் இது கொஞ்சம் ஓவராகவே ஆகிவிட்டது எனவும் சொல்லலாம், கொசு கடித்தால்கூட அதையும் இல்லுமினாட்டி சதி என்று அலறும் பைத்தியங்களும் இன்று பெருகிவிட்டார்கள்.
மலேசிய விமானம் MH370 தொலைந்த அதேநேரத்தில் ரஷ்யா உக்ரேன் பிரச்சனை இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. இரண்டையுமே இலுமினாட்டி சதி என்று பலரும் கூறிவந்தனர்.
ஆனால் அதற்கான ஆதாரம் அப்போது ஒன்றும் சிக்கவில்லை. இலுமினாட்டிகள்தான் சொல்லி அடிப்பவர்களாயிற்றே இதுபற்றி ஏதாவது முன்கூட்டியே சொல்லி வைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து சில conspiracy theorist-கள் சில திடுக்கிடும் தகவல்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

trident  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு trident
இலுமினாட்டிகளின் மதத்தில் Poseidon என்ற ஒரு நெப்ட்டியூன் கடவுளுண்டு, இது கடலுக்குரிய கிரெக்கக் கடவுளாகும். இதன் கையில் ஒரு மும்முனை குத்தீட்டி வைத்திருக்கும். அந்த மும்முனை குத்தீட்டி(Trident) அதிகாரத்தின் அடையாளமாகும்.
உலகத்தின் அதிகாரம் கடவுளிடமிருந்து சைத்தானுக்கு கைமாறுவதை கொண்டாடும் விதமாக கடல் தெய்வமான நெப்ட்டியூனுக்கு கடலில் நடத்தும் ஒரு சடங்காகவும் 2014-ஆம் ஆண்டில் இந்த மும்முனை குத்தீட்டி சின்னத்தை(Trident) எல்லோருடைய ஆழ்மனதிலும் பதிக்கும் விதமாகவும் அதை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்துவது இவர்கள் நோக்கம்.
மக்களது ஆழ்மனதில் இதை ஏன் பதிய வைக்க வேண்டும் என்று conspiracy theorist-களைக் கேட்டால் அவர்கள் இலுமினாட்டிகளை mind manipulators என்று அழைக்கிறார்கள். இவர்கள் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருப்பதே மக்களை உளவியல் ரீதியில் மூலம் mind control செய்துதானாம்.
2014-ஆம் ஆண்டில் தங்கள் மும்முனை குத்தீட்டி செய்யப்போகும் காரியத்தை மசெராட்டி என்ற புகழ்பெற்ற இத்தாலிய கார் விளம்பரத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.
We have prepared, now we strike என்று தெளிவாகவே சொல்லுகிறார்கள். உடனே மும்முனை குத்தீட்டி சின்னம் பொறித்த கார் நம்மை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. 

அடுத்து MH370-க்கு நேரப்போவதை முன்கூட்டியே 2013 இல் வெளியான Man of Steel என்ற ஹாலிவுட் படத்தில் அறிவித்துவிட்டார்கள்.
ஒரு எரிந்து கொண்டிருக்கும் மும்முனை குத்தீட்டி போன்ற விண்கலம் இந்தியப் பெருங்கடலில் விழப்போவதை அந்தப் படம் முன்னறிவிக்கிறது.
மேலும் எண் 370-ஐத் தூக்கப்போகிறோம் என்பதையும் அதே படத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார்கள். Man of Steel படத்தை ஆராய்ந்து conspiracy theorists வெளியுட்டுள்ள வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு:
அதற்குப் பின்பு ஒரு ஜுலை 17-அன்று MH-17 இன்னொரு மலேசிய விமானம் உக்ரேனில் சுட்டி வீழ்த்தப்பட்டதை யாவரும் அறிவோம். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் மசெராட்டி, உக்ரேன், மலேசிய விமானம் அனைத்துக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு அதுதான் மும்முனை ஈட்டி லோகோ.
logos  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு logos
இன்னொரு கூடுதல் தகவல், உலகத்தின் ஆளுகை இறைவனிடமுருந்து சைத்தானுக்கு கைமாறியதன் அடையாளமாக இரு மும்முனை ஈட்டிகள் இன்னொரு முக்கியமான இடத்திலும் இப்போது வைக்கப்பட்டுள்ளது, அதுதான் நியூயார்க் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் எழுப்பப்பட்டிருக்கும் நினைவகம்.
மலேசியன் ஏர்லைன்சில் உள்ள இரட்டை மும்முனை குத்தீட்டிக்கும், இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் வைக்கப்பட்டிருக்கும் இரட்டை மும்முனை ஈட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அது சைத்தானுக்குரிய எண்ணாகிய 33-ஐயும் குறிக்கிறது.
911  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு 911
இன்னும் வரும் நாட்களில் நீங்கள் திரும்புமிடமெல்லாம் மும்முனை குத்தீட்டியை உலகம் முழுக்க பார்க்கலாம். மும்முனை குத்தீட்டியை மக்கள் ஆழ்மனதில் பதிக்கும் விதத்தில் இனி திரையுலக  நாயகர்கள்கூட படத்தில்  அதைத் தூக்கிக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்..
வெறும் இந்த ஆதாரங்களை வைத்து இதுதான் நடந்திருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால், இதில் எழுதியிருப்பது எதுவுமே எனது சொந்தக் கற்பனையோ கருதுக்களோ அல்ல, conspiracy theory என்பது வெவ்வேறு புள்ளிகளை இணைத்து ஒரு புரிந்துகொள்ளுதலுக்கு வருவதாகும்.
conspiracy theorists இணையத்தில் ஆங்கிலத்தில் சொல்லுவதை தமிழில் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன்.அவ்வளவே! அவர்களால்கூட இதற்கு ஒருபோதும் சட்டம் ஏற்றுக்கொள்ளும்படியான ஆதாரங்களைக் காட்ட இயலாது. இது எப்போதும் கோட்பாட்டளவிலேயேதான் நிற்கும். நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.
கட்டுரை எழுதப்பட்டதற்கு ஆதார வீடியோக்கள்:
https://www.youtube.com/watch?v=oI2UcmpcdQA

No comments:

Post a Comment