Saturday, June 18, 2016

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) :அறிமுகம்


எம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்… அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்… பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம் என…
எம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு இந்த பதிவை எழுதுகிறேன்…
முதலில் அறியப்படாத ஒரு மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுமத்தைப்பற்றி பார்ப்போம்…
——————————————————————————————
இலுமினேடி (Illuminati)…
பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati ஐக்கூற வேண்டும்.
“உலகின் புதிய கட்டளை (New world order)” எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல… மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும். 20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.
தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் “கிங் மேக்கர்”களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்… லொஜிக் இல்லாதது போன்று தோன்றும்… ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன… பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்…)
யார் இவர்கள்…
நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன. 13 குடும்பங்கள் என்பது… ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது… இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள். இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப்பேணுவதில்லை… காரணம், தமது Illuminati தன்மைக்குரிய மரபணுக்களைப்பேணுவதற்காகத்தான்.
மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.
இவர்களின் நோக்கம்தான் என்ன…
சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்…
“ஒரு உலகம்.. ஒரு அரசு” என்பது தான் இவர்களின் நீண்டகாலத்திட்டம். இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்… சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரானவர்கள்… அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்…
இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்திவருகின்றனர்… அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
உதரணமாக…
சில வகை “இசை” வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்…. அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது.
மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.
(என்ன என்ன முறைகளில் இது நடை முறைப்படுத்தப்படுகிறது என்பது வரும் பதிவுகளில் தெளிவாக பார்க்கலாம்… )
முடிவில்… இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு. அதாவது… அடிமைப்படுத்த வேண்டும் என்பது.. எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும்… மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத்தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு… நீக்கப்படுவார்கள்-ஒழிக்கப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
இவர்களின் மிகப்பெரிய தலையிடி…
ஏஸியாப்பகுதியை சேர்ந்தவர்களும்…. இப்படியான பதிவுகளை வாசிப்பவர்களும் தான்… இவர்களின் மிகப்பெரிய தலையிடியாக இருக்கிறார்கள். அது ஏன் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
அடுத்த பதிவில் மிகவும் அதிர்ச்சிகரமான இவ்வருடம் திட்டமிட்டு நடைபெறவுள்ள ஒரு சம்பவத்தை பார்க்க ஆரம்பிப்போம்! இணைந்திருங்கள்!
பதிவை பகிர்ந்து ஊக்குவியுங்கள்! பல உண்மைகள் மண்டிக்கிடக்கின்றன

No comments:

Post a Comment