Saturday, June 18, 2016

இறந்துகொண்டிருக்கும் சாக்கடல்! Dead Sea) பற்றிய உண்மைகள்!


dead sea tamilசாக் கடல் அல்ல‌து டெட் சீ என்பது இஸ்ரேலிற்கும் ஜோர்தானிற்கும் இடையில் இருக்கும் ஒரு ஏரியாகும். ஆனால் “கடல்” என்ற அடை மொழியுடன் அழைக்கப்படுகிறது. இது கடல் மட்டத்தில் இருந்து சுமார் 400 மீற்றர் கீழே உள்ளது!
சாதாரன கடல் நீரைவிட சுமார் 8.6 மடங்கு உப்பின் செரிவு அதிகமானது.
அதால் அடர்த்திகூடிய இக் கடலினுள் ஒரு நபர் குதித்தால் அவர் கடலினால் தாழ்க்கப்பட மாட்டார், மாறாக மிதப்பார்.
பிரபலம் ஆனது எப்படி?
  • உண்மையில் சாக்கடல் பிரபலமானது SPA ( ஆரோக்கிய நீரூற்று சிகிச்சை/ நிறுவனங்களின் பொதுப்பெயர்) நிறுவனங்களின் விளம்பரங்களால்தான். இங்கிருக்கும் அதி செரிவான உப்பு நீர் உடலில் உள்ள கிருமித்தொற்றுக்களை நீக்கவல்லது என நம்பப்படுகிறது.
  • தாழ்க்கும் தன்மையற்ற கடல் என்பதால், வினோதத்திற்காக பல சுற்றுலாப்பயணிகள் பார்வையிடுகிறார்கள். ( ஏனைய சுற்றுலா தளங்களுடன் இப்பிடுகையில் வருகை மிக்குறைவானது!)
சாக்கடல் (Dead Sea) என்று ஏன் அழைக்கப்படுகிறது?
பல காரணங்கள் கூறப்படுகின்றன…
  • இங்கு 8.6 மடங்கு உப்புச்செரிவு அதிகமானதால் உயிரினங்களின் குடி நீராகவோ வாழ்விடமாகவோ இது இருப்பதில்லை. அதனால் சாக்கடல் எனப்படுகிறது. ( எனினும் எந்த சூழலிலும் வாழக்கூடிய பக்டீரியாக்களான halophilis மற்றும் archea வகை பக்டீரியாக்கள் இங்கு வாழ்கின்றன)
  • பல ஆறுகளில் இருந்து வரும் நீர் இங்கு தேங்கி நிற்கின்றது. ஆனால், இங்கிருந்து வேறு எங்கும் நீர் விரையமாவதில்லை. ஆறுகளின் நீர் இறுதியாக வந்தடையும் இடம் என்பதால் டெட் சீ/ சாக்கடல் எனப்படுகிறது.
இறந்துகொண்டிருக்கும் சாக்கடல்!
ஆம், வெப்ப நிலை மாற்றம் காரணமாக நாளொன்றிற்கு சுமார் 7 மில்லியன் தொன் நீர் சாக்கடலை விட்டு வெளியேறுகின்றது. அத்தோடு இஸ்ரேல் மற்றும் ஜோதார்ன் நாடுகள் சாக்கடலின் மூல நீர் வருகைக்குப்பொறுப்பான “ஜோர்தான் ஆற்றை” பல கிழைகளாக பிரித்து பயன்படுத்திவருவதால் சாக்கடலுக்குரிய மூல நீர் வருகை குறைவடைந்துள்ளது.
இதனால் சாக்கடலின் பல பகுதிகளில் தரைத்திட்டுக்கள் தோன்ற ஆரம்பித்துள்ளது!

No comments:

Post a Comment