Monday, November 14, 2016

சீரடி சாய்பாபா




1. சீரடியில் சாய்பாபா தவம் செய்த இடம், தூங்கிய இடம், சமாதியான இடம் எல்லாம் ஒருங்கிணைக்கப்பட்டு மிகச் சிறந்த வழிபாட்டுத் தலமாக மாற்றப்பட்டுள்ளது.
2. சாய்பாபா சமாதி மந்திரில் உள்ள சாய்பாபா சிலை தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளது. நீங்கள் எங்கு நின்றாலும் பாபா உங்களைப் பார்ப்பது போலவே இருக்கும்.
3. சீரடி ஆலயத்தை மிக, மிக சுத்தமாக வைத்திருக்கிறார்கள்.
4. ஆலயத்துக்குள் மினி மருத்துவமனை ஒன்று உள்ளது. அங்கு ரத்ததானம் செய்யலாம்.
5. பக்தர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆலய வளாகத்துக்குள் ஆம்புலன்ஸ் ஒன்றை எப்போதும் தயார் நிலையில் நிறுத்தி இருக்கிறார்கள்.
6. ஆலயத்துக்குள் உண்டியல் தவிர பெரிய அளவில் ரொக்கம், தங்கம், வெள்ளி காணிக்கை செலுத்த தனி கவுண்டர் வசதி உள்ளது.
7. கோவில் உள்பகுதியில் பெண்கள் தங்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
8. பக்தர்கள் உதி அக்னியில் போட தேங்காய் வாங்கி கொடுக்கலாம். அந்த தேங்காயைப் பெற்றுக் கொள்ள ஆலயத்துக்குள் தனி இடம் உள்ளது.
9. மூன்றாம் எண் நுழைவாயில் வழியாக சென்றால் குருஸ்தானுக்கு முன்பு சமாதி மந்திர் ஜன்னல் வழியாக பாபாவை மிக எளிதாக பார்த்து தரிசனம் செய்யலாம்.
10. சீரடி தேவஸ்தானம் சார்பில் அன்னதானத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பக்தர்கள் அந்த திட்டத்துக்கு பணம் கொடுக்கலாம்.
11. கோவில் வளாகத்தின் ஒரு பகுதியில் (லென்டித் தோட்டம் அருகில்) புத்தக விற்பனை நிலையம் உள்ளது. தமிழ் உள்பட எல்லா மொழி புத்தகங்களும் இங்கு கிடைக்கும். வெளியில் வாங்குவதை விட மிக, மிக, குறைந்த விலையில் இங்கு புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது.
12. கோவில் உள்ளே ஒரு இடத்தில் விநாயகர் மற்றும் சிவனுக்கு தனி சன்னதிகள் கட்டப்பட்டுள்ளன.
13. திருப்பதி மாதிரி சீரடியிலும் எப்போதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. திருப்பதியில் ஜருகண்டி, ஜருகண்டி என்பார்கள். சீரடியில் பக்தர்களை சலோ, சலோ... என்று சொல்லி விரைவுபடுத்துகிறார்கள்.
14. கூட்டம் அதிகமாக இருக்கும் நேரங்களில் வேறு வழியின்றி பக்தர்கள் கையை பிடித்தும் இழுத்து விட்டு விடுவார்கள். எனவே பாபாவை கண்டதும் மனம் உருக வேண்டி விடுங்கள்.
15. பாபாவை தரிசனம் செய்து முடித்ததும் மூன்றாம் எண் கேட் வழியாக வெளியே வந்தால் பாபா வசித்த துவாரகமாயியிக்கும், சாவடிக்கும் மிக எளிதாக செல்லலாம்.
16. சீரடியில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை துவாரக மாயியில் இருந்து சாவடிக்கு பாபா படம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. நாடெங்கும் உள்ள சாய்பாபா ஆலயங்களில் வியாழந்தோறும் இத்தகைய வழிபாட்டை கடைபிடிக்கிறார்கள்.
17. சீரடியில் பொது மக்கள் கண் எதிரிலேயே தினமும் உண்டியல் பணம் எண்ணப்படுகிறது. உண்டியல் பணத்தை எண்ணி சேவை செய்ய விரும்பும் பொது மக்களும் இதில் கலந்து கொள்ளலாம்.
18. சீரடியில் பாபாவுக்கு நடக்கும் 4 நேர ஆரத்தியில் ஏதாவது ஒரு ஆரத்தியை கண் குளிர பார்க்கும் வாய்ப்பு கிடைத்தாலே அது புண்ணியம் தான்.
19. சீரடிக்கு வரும் பக்தர்களில் 99 சதவீதம் பேர் ``சாய்நாத் மகாராஜ்க்கு ஜே'' என்று சொல்லத் தவறுவது இல்லை.
20. சீரடியில் சாதாரண நாட்களை விட வியாழக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் கூட்டம் இரட்டிப்பு மடங்கு இருக்கும்.
21. சீரடியில் வியாழன், வெள்ளி ஆகிய 2 நாட்கள் மட்டும் சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது உண்டு. வேண்டுதல்கள் வைத்திருப்பவர்கள் இந்த இரு நாட்களில் செல்லலாம்.
22. சீரடியில் ஏராளமான ஆட்டோக்கள் உள்ளன. பெரும்பாலும் யாரும் பக்தர்களை ஏமாற்றுவதில்லை.
23. சீரடி தலத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி இஸ்லாமியர்களும், சீக்கியர்களும் அதிக அளவில் வந்து வழிபாடு நடத்தி செல்கிறார்கள்.
24. முன்பெல்லாம் சீரடிக்கு வட இந்திய மக்கள் தான் அதிகம் வந்து சென்றனர். தற்போது தென் இந்திய மக்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் அதிக அளவில் சீரடிக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.
25. சீரடிக்கு நினைத்தவுடன் போய் விட முடியாது. சாய்நாதா உம்மை சரண் அடைந்தேன் என்று மனம் சொல்லி, சொல்லி பக்குபவப்பட்டவர்களை பாபா உடனே அழைத்து தரிசனம் கொடுத்து விடுவார்.
26. பாபா சன்னிதானத்தில் இருபக்கமும் நாலு வரிசையாகப் பிரித்திருக்கிறார்கள். அவரவர் அதிருஷ்டம் எந்த வரிசையில் அமைகிறது என்பது உள்பக்க வரிசையில் செல்வது நல்லது. கடைசி வரிசையில் அமைத்து முன்னால் போய் விட்டால் பாபாவை பார்ப்பது சிரமமாக இருக்கும்.
27. கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் பூஜை பஜன் ஆரத்தி எல்லாம் ஆகிறது. அது வரை நின்று கொண்டே இருக்கவேண்டியதுதான். க்யூவில் வந்து சந்நிதானத்துக்கு உள்நுழையும் போது, சற்றே முன்பாகவே நின்று கொண்டு விட்டால் நல்ல தரிசனம் கிடைக்கும்.
28. விருப்பம் இருந்தால் வெளியே உண்டியலில் பணம் போடலாம். கோவிலுக்குள் யாரும் பணம் கொடுவென்று கேட்பதில்லை.
29. சிறப்பு தரிசனமும் கிடையாது. ஐ.எ.எஸ். ஐபிஎஸ் போன்ற முக்கிய அதிகாரிகளின் கடிதம் இருந்தால் ஏதோ ஒரு வழியாக அனுமதிக்கிறார்கள். அப்பிடி இருந்தாலும் கடைசியில் சன்னிதானத்துக்குள் போகும் போது எல்லாம் ஒன்றாகத்தான் போக வேண்டும்.
30. சன்னிதானத்துக்குள் ஒரே நேரத்தில் ஏறத்தாழ 300 பேர் வரை நின்று தரிசிக்கலாம்.
31. உண்மையில் பாபா கோவிலுக்குள் பக்தர்கள் கொண்டு வந்து தரும் எதையுமே ஏற்பதில்லை. நம்மிடமே திருப்பித் தந்து விடுகிறார்கள். ஆகவே பக்த ஜனங்களே வெறும் கையோடும் மனம் நிறைய பிரார்த்தனைகளை சாய்பாபா சந்நிதானத்தில் மனமுருக வேண்டிக்கொண்டால் போதும்.
32. வெளியே வந்ததும் பாபா அமர்ந்திருந்த மரத்துக்கு எதிரே ஊதுவத்தி ஏற்றி வைக்கும் படி அறிக்கை பலகை கேட்டுக் கொள்கிறது. இதுவும் அவரவர் விருப்பம் தான். கட்டாயமில்லை. ஊதுவத்தி புகையில் படிந்த கரியை எல்லாரும் நெற்றியில் இட்டுக் கொள்கிறார்.
33. வாமன் தாத்யா என்ற சாயி பக்தர் தினமும் இரண்டு சூளையிலிடப்படாத பானைகளைக் கொடுப்பார். பாபா தம்முடைய கைகளாலேயே செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றுவார்.
34. `சாய்' என்ற சொல்லுக்கு, `சாட்சாத் கடவுள்.' என்ற அர்த்தமாம்.
35. பாபா பார்க்கிறதுக்கு ரொம்ப எளிமையாக வாழ்ந்தவர்.
36. சாய் பாபா கோயிலை இப்ப திருப்பணியெல்லாம் செஞ்சு ரொம்ப விரிவாக்கி இருக்காங்க. முதல்ல கேட்டெல்லாம் கிடையாது. இப்ப மொத்தம் நாலு நுழைவாசல்கள் இருக்குது.
37. கேமரா, செல்போன்களுக்கு கோயிலில் அனுமதி கிடையாது. அங்கியே ஒரு சின்னக்கவுண்டர் வெச்சு எல்லாத்தையும் கலெக்ட் செஞ்சுக்கறாங்க. அளவுகளுக்கு தகுந்தாற்போல ஒன்னு ரெண்டா ஒரு சுருக்குப்பையில் போட்டு, நீளமான சட்டத்துல அடிச்சிருக்கிற ஆணியில் தொங்கவிட்டுட்டு, நம்ம கிட்ட டோக்கன் தராங்க
38. மேடையில் சமாதியின் பின்புறம், இட்டாலியன் மார்பிளாலான பாபாவின் சிலை அழகான வெள்ளிக்குடையின் நிழலில் இருக்குது. ஒரு கல்லில் அமர்ந்தபடி அருள்பாலிக்கும் தோற்றத்தில் பாபாவின் அழகான திருவுருவம். இந்த சிலை பாலாஜிவசந்த் என்பவரால் செய்யப்பட்டது. தூண்கள் அதுல இருக்கற எக்கச்சக்கமான வேலைப்பாடுகளை இன்னிக்கெல்லாம் பாத்துட்டே இருக்கலாம். பொதுவா பாபா இருக்கற அந்த இடம் முழுக்கவே வெள்ளி தகதகன்னுது.
39. பக்தர்கள் கொண்டு செல்லும் மாலைகளை பாபாவுக்கு போட்டுவிட்டு, ஏற்கனவே சாத்தி இருக்கிற மாலைகளில் ஒன்றை உருவி பிரசாதமாகக தருகிறார்கள்.
40. கோயிலுக்குள்ள சாயிபஜன் நடந்து கொண்டே இருக்கும். அது கோயில் முழுக்க ஒலிக்கிற மாதிரி ஆங்காங்கே ஒலி பெருக்கிகள் வைத்து இருக்கிறார்கள்.

திருவண்ணாமலை கிரிவலம் தரும் பலன்கள்





சூரியனும், சந்திரனும், முப்பத்து முக்கோடி தேவர்களும் வலம் வந்து வழிபட்ட அஷ்டலிங்க சன்னதிகளுக்கு நடுவே, கிரி உருவான கருணைக்கடலாக காட்சி தரும் ஜோதிமலை, வலம்வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வழங்கும் அருள்மலை.
சித்தர்களும்,ரிஷிகளும்,யோகிகளும்,மகான்களும் தவமிருந்து வழிபட்ட இன்றைக்கும் அருவமாக வலம் வந்து வழிபடுகிற அண்ணாமலையை கிரிவலம் செல்லும் பக்தர்கள், மூலிகை, சந்தனம், ஜவ்வாது, சாம்பிராணி, விபூதி, வாசமலர்களின் நறுமணங்களை உணரமுடியும். உற்சவ மூர்த்தியாகிய அண்ணாமலையார் உமையாளுடன் கார்த்திகை தீபத்தின் அடுத்த நாளும், திருவூடல் விழாவின்போதும் வலம் வரும் தனிப்பெரும் பேறு பெற்றது திருவண்ணாமலை எனும் கிரிவலமலை. அஷ்ட திக்கு பாலகர்களும் வலம் வந்து வழிபட்ட புனித மலை.
ஆயுட் காலத்தை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது திருக்கடையூர். சனித் தொல்லையை காக்க கூடியது திருநள்ளாறு. பிணிகளை போக்குவது வைதீஸ்வரன் கோயில். ஆனால் ஊழ்வினை நீங்கி பெருவாழ்வு பெற அண்ணாமலையார் குடிகொண்டுள்ள திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதாலேயே அடைய முடியும். பிறவிப்பிணி நீங்கச் செய்யும் வல்லமை கிரிவலத்துக்கு மட்டுமே உண்டு.
மலை வலம் செல்ல ஒரடி எடுத்து வைத்தாலே ஓரு யாகம் செய்த பலனை பெருவோம், ஈரடி எடுத்து வைத்தால் ராஜசூய யாக பலனை பெருவோம். மூன்றடி எடுத்து வைத்தால் அசுவமேத யாகம் செய்த பலனை பெறுவோம். நான்கடி எடுத்து வைத்தால் எல்லா யாகங்களையும் நிறைவேற்றிய பலன் பெறுவோம் என்பது சித்தர்களின் வாக்கு.
உள்ளீடற்ற உன்னதமான மலையில் இருந்து சிவந்த ஜோதி கதிர்கள் எப்போதும் வெளிபடுவதை உணர்ந்து உலகுக்கு உணர்த்தியவர் மகான் ரமணர். பவுர்ணமி நாட்களில் அது பன்மடங்காக வெளிப்படுகிறது. மலைவலம் வருவோர் அதன் பயனை உணர்கின்றனர்.
மலைச்சுற்றும்போது உள்ளமெல்லாம் இறை சிந்தனை மட்டுமே நிறைந்திருக்க வேண்டும் என்கின்றனர் சிவனடியார்கள். மலைவலம் தொடங்கும் முன்பு உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்னீராட வேண்டும். திருநீறு ஆணிந்து, ஒம் நமச்சிவாய எனும் மந்திரத்தை உச்சரித்தபடியே செல்லவேண்டும். வெயிலுக்கோ, மழைக்கோ அஞ்சி குடை பிடித்து செல்வது பாவம். மலையை இடமிருந்து வலமாக மட்டுமே சுற்றவேண்டும். ராஜகோபுரத்தில் இருந்து மலை வலம் தொடங்குவது சிறப்பு. இயலாதோர் தொடங்கிய இடத்தில் கிரிவலத்தை நிறைவு செய்யலாம். கோபம் பாவம் போன்ற எதிர்வினை உணர்ச்சிகள் இல்லாமல் உள்ளம் சம நிலையில் இருக்கும்படியாக ஓருமித்த சிந்தையோடு கிரிவலம் செல்ல வேண்டும்.
ஐப்பசி, கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்கள் மலைச் சுற்ற ஏற்றதாகும். மாதப்பிறப்பு நாட்களில் மலை வலம் வருவது நல்லது. மலைச் சுற்றும் பாதையில் அருள்பாலிக்கும் அஷ்ட லிங்கங்களையும் தவறாமல் தரிசிக்க வேண்டும். தங்களின் ராசிக்கேற்ற லிங்கங்களுக்கு சிறப்பு பூஜை செய்வது பயன்தரும். கிரிவலப் பாதையில் எம லிங்கத்தை கடந்து சென்றால் நந்திகேஸ்வரர் சன்னதி அமைந்திருக்கும். மலைச்சுற்றுவோர் தவறாமல் தரிசிக்க வேண்டி சன்னதி. அதுதான் மலைச்சுற்றுவோருக்கு இறைவன் அனுப்பிய அதிகார நந்தி. மலையை ஓட்டி வலப்புறமாக கிரிவலம் செல்வது சிறப்பு. மலைச்சுற்றி நிறைவு செய்யும்போது ஈசான்ய லிங்கத்தை தரிசித்து செல்வதே முழுப் பயனைத் தரும். மலைவலம் தொடங்கும் போதும், நிறைவு செய்யும்போதும் தீபம் ஏற்றி மலையை வணங்குவது சிறப்பு. கிரிவலம் முடித்ததும் குளிப்பதையும் உறங்குவதையும் தவிர்த்தால் கிரிவலப் பயனை அடையலாம்.
★திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள அதிர்ஷ்டம் அள்ளி தரும் அஷ்டலிங்க தலங்கள்★
★இந்திரலிங்கம்★
★கிரிவல பாதையில் உள்ள முதல் லிங்கம் இந்திர லிங்கம். கிழக்கு திசையில் இக்கோவில் அமைந்து உள்ளது. கிழக்கு திசைக்கு கிரக அதிபதி சூரியன், சுக்கிரன். இங்கு வழிபாடு செய்தால் லட்சுமி கடாட்சமும், வருமானமும், நீண்ட ஆயுள் மற்றும் புகழ் கிடைக்கும் என்பது ஐதீகம்.
★அக்னி லிங்கம்★
★இது செங்கம் ரோட்டில் தாமரை குளத்திற்கு அருகே அமைந்துள்ளது. தென் கிழக்கு திசைக்கு அதிபதி சந்திரன். இங்கு வழிபாடு செய்தால் நோய், பிணி, பயம் முதலியவை விலகும். எதிரிகள், தொல்லை, மனபயம் நீங்கும்.
★எமலிங்கம்★
★கிரிவலப் பாதையில் 3-வது லிங்கம். ராஜ கோபுரத்தில் இருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம். கோவிலின் பக்கத்திலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. தெற்கு திசையின் அதிபதி செவ்வாய். இங்கு இறைவனை மனமுருக வேண்டி பிரார்த்தனை செய்தால் பொருளாதார கஷ்டங்கள் நிவர்த்தி ஆகும்.
★நிருதி லிங்கம்★
★மலை சுற்றும் பாதை யில் 4-வது லிங்கமாகும். நிருதி லிங்கத் தின் முன்னால் உள்ள நந்தி அருகில் இருந்து மலையை பார்த்தால் மலையில் சுயம்புவாக (இயற்கையாக) அமைந்த நந்தி தெரியும். இத்திசைக்கு அதிபதி ராகு. இங்கு வழிபாடு செய்தால் குழந்தை பாக்கியம், சுகவாழ்வு, புகழ் ஆகியவையும் சங்கடமான நிலைமைகளில் இருந்து விடுதலை கிடைக்கும்.
★வருண லிங்கம்★
★ ராஜகோபுரத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. கோவிலின் அருகிலேயே வருண தீர்த்தம் அமைந்துள்ளது. மேற்கு திசையின் அதிபதி சனி. இங்கு வழிபட்டால் கொடிய நோயி லிருந்து விடுதலையும், புகழும் கிடைக்கும்.
★வாயு லிங்கம்★
★இக்கோவிலை அடையும் போது இயற்கையாகவே ஒரு அமைதி கிடைக்கும். காற்று தென்றலாக வீசும். திசை அதிபதி கேது. இங்கு பிரார்த்தனை செய்தால் எதிரிகள் தொல்லையில் இருந்து விடுதலை, பொறுமை, கண் திருஷ்டி, பெண்களுக்கு நல்வழி கிடைக்கும்.
★குபேரலிங்கம்★
★7-வது லிங்கமாக அமைந்துள்ளது குபேர லிங்கம். இத்திசையின் அதிபதி குரு. இங்கு இறைவனை வேண்டினால் பொருளாதாரம் உயரும். மனம் அமைதி அடையும்.
★ஈசான்ய லிங்கம்★


★கிரிவலப் பாதை யில் கடைசி லிங்கம். ஈசனே இங்கு இருப்பதால் இது ஈசான்ய லிங்கம். எல்லா நிலைகளையும் கடந்து அமைதி தேடும் இடம். இக்கோவில் நிலப்பரப்பில் இருந்து சற்று கீழ் இறங்கி இருக்கும். இத்திசையின் அதிபதி புதன். இங்கு இறைவனை வேண்டிக் கொண்டால் மனம் ஒருநிலை அடையும். இறைநிலை பெறுவதற்கு வழிகாட்டும்.

வாட்ஸ்ஆப் மெசேஜை 'அன்சென்ட்' செய்ய 2 வெவ்வேறு தந்திரம் இருக்கின்றன.!

   உங்கள் நண்பருக்கு தற்செயலாக நீங்கள் அனுப்பிய வாட்ஸ்ஆப் செய்தியை நிறுத்த 2 தந்திரங்கள் உள்ளது

    நாம் ஒருபோதும் தவறான நபருக்கு வாட்ஸ்ஆப் செய்தியை அனுப்பியதே இல்லை என்று கூறினால் நிச்சயமாக நாம் பொய் சொல்கிறோம் என்று அர்த்தம். சில நேரங்களில், உங்கள் நண்பர் அனுப்பப்படும் செய்தி தவறானதாகப் போகக்கூடும் அல்லது சில நேரங்களில் அனுப்பும் நண்பரே தவறான நபராக இருக்க கூடும். ஆனால், அப்படியாக தற்செயலாக அனுப்பிய வாட்ஸ்ஆப் மெசேஜை தடுக்க முடியும் என்றால் நீங்கள் கண்டிப்பாக ஆச்சரியப்படுவீர்கள். அதை நிகழ்த்த இரண்டு வெவ்வேறு தந்திரம் இருக்கின்றன.!


   முயற்சி சரியாகச் சொன்னால், நீங்கள் துல்லியமாக 100 சதவிகிதம் சென்ட் செய்த வாட்ஸ்ஆப் செய்தியை அன்சென்ட் செய்து விட முடியாது. ஆனால்,அன்சென்ட் செய்வதற்கு சமமான ஒரு விடயம் உள்ளது அதை முயற்சி செய்து பார்க்கலாம்.

தந்திரம் #01 
  ஏற்கனவே ஒரு தொடர்புக்கு அனுப்பட்ட வாட்ஸ்ஆப் மெசேஜ் சென்ட் ஆவதற்குள் நீங்கள் உடனடியாக உங்களின் வைஃபை அல்லது மொபைல் டேட்டாவை ஆப் செய்து விடலாம்.


மிக வேகமாக இப்படி செய்வதின் மூலம் நீங்கள் வாட்ஸ்ஆப் செய்தியின் கீழே ஒரு டிக் (சென்ட் செய்யப்பட்ட அடையாளம்) ஏற்படுவதை தடுத்து நிறுத்த முடியும். இதை செய்ய நீங்கள் மிக வேகமாக செயல்பட வேண்டும்.


சர்வர் இதை நீங்கள் நிகழ்த்த ஒரு மோசமான இணைய இணைப்பில் இருக்க வேண்டும் ஏனெனில் பொதுவாகவே வாட்ஸ்ஆப் வழக்கமாக மிக விரைவான மற்றும் ஒரு ஃபிளாஷில் செய்திகளை அனுப்பி விடும் சர்வர்களை கொண்டது.

தந்திரம் #02 
  சரி கவலை வேண்டாம், இன்னொரு வலி இருக்கிறது.அதாவது நீங்கள் தவறாக மெசேஜ் அனுப்பிய நபரை டபுள் டிக் வருவதற்குள் உங்கள் வாட்ஸ் ஆப் அக்கவுண்டில் இருந்து பிளாக் செய்து விட்டால் அந்த குறிப்பிட்ட மெசேஜ் அவரை சென்றடையாது.

உடனேயே அன்பிளாக் எப்படி பார்த்தாலும் பிளாக் செய்த நபரை வெறுமனே மீண்டும் உடனேயே அன்பிளாக் செய்து விடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.