Tuesday, September 27, 2016

மண்ணை மலடாக்கிய கதை


நீளவாக்கில் வரும் பெங்களூர் தக்காளி யை கீழே வீசினால், உடையாமல் குதித்துமேலெ ழும்புகிறது. புளிப்பும் இன்றிஇனிப்பும் இன்றி சப்பென்று இருக்கிறது.‘கும்’மென்று பருத்திருக்கும் கத்தரியில் கசப்பைத் தவிர வேறெந்த சுவையும் இல்லை.புடலை, வெண்டை, பாகை என இன்று சந்தைக்கு வரும் 95 சதவீத காய்கறி ரகங்கள் ஹைபிரிடுகள்.
ரசாயன உரங்களையும்பூச்சிக் கொல்லி களையும்கொண்டு வந்து கொட்டிவிவசா யியை கடன்காரனாக நிறுத்தியநிறு வனங்கள், அடுத்து விதைகளின் மீது கண்வைத்து விட்டன.பாரம் பரியமாக விதைகளைச் சேமித்து வைத்துப் பழக்கப்பட்ட விவசாயிகள் இப்போது ஹைபிரிட்விதைகளுக்கு கையேந்தி நிற்கிறார்கள்.

இந்த ஹைபிரிடு விதைகளில் விளையும் காய்கறிகளிலிருந்து விதைகள் எடுக்க முடியாது.
ஒவ்வொரு முறையும் விவசாயி விதையைப் பணம் கொடுத்தே வாங்க வேண்டும். அதுவும், கொள்ளை விலை.
‘‘நம்ம உணவுச்சந்தையை குறிவச்சு பல
வருடங்களாவே ஒரு சர்வதேச அரசியல்
நடந்துக்கிட்டிருக்கு.இன்னைக்கு உலகம் முழுவதுமே நிறுவனங்களின்
ஆட்சிதான் நடக்குது. அரசாங்கம்
நிறுவனங்களுக்குத் துணை போகுது.நிலங்களை
மலடாக்கி, உரம் - பூச்சிக்கொல்லிக்கு
அடிமையாக்கினாங்க.விதை யையும் அபகரிச்சுட்டா ஒட்டுமொத்த உணவுச்சந்தையும் வசமாகிடும். அதுக்கான வேலைகள் முழுமை அடைஞ்சிடுச்சு.

எங்க அப்பா காலத்துல, எந்தச்
செடியில காய் சுரப்பா இருக்கோ, அதை
நல்லா முத்த விட்டு விதையை எடுத்து, சாணியில புதைச்சோ, வைக்கோல்ல முடிஞ்சோ கோட்டை கட்டிவச்சுக்கு வோம். தகுந்த சீசன்ல எடுத்து
விளைவிச்சா காய்ச்சுத் தள்ளும்.
குப்பையும் சாணியும்தான் உரம். அதிகம் பூச்சிதீண்டுனா, வேப்பங்கொட்டையை அரைச்சுஊத்துவோம். மருந்துக்கு மருந்தாவும் ஆயிடும்.பூச்சியை யையும் விரட்டிரும்.நல்லா சாகுபடி பண்ணிக்கிட்டிருந்தவிவசாயி களை சந்திச்சு ‘இன்னும் நீங்க நிறைய
சம்பாதிக்கலாம்ன்னு ஆசை காட்டி இந்த
ஹைபிரிடு விதைகளை இலவசமா
கொடுத்து பரப்பி விட்டாங்க.
வேளாண்மை அதிகாரிகளும் அதுக்கு
உடந்தையா இருந்தாங்க. ஹைபிரிடு ரகங்கள் நல்லாக் காய்ச்சவுடனே விவசாயிங்க அதுக்கு அடிமையாகிட்டாங்க. ஆனா, விதை
எடுக்க முடியலே. முதல்ல இலவசமாக விதையைக் கொடுத்த நிறுவனங்கள்
அதுக்கப்புறம் கொள்ளை விலை
வச்சாங்க. உரம், பூச்சிமருந்தை விடவும்
இன்னைக்கு விதை பெரிய விலையா
மாறிடுச்சு.

தன் நிலத்துல என்ன விதைக்கணும் என
விவசாயிதான் தீர்மானிக்கணும். ஆனா
நம்ம நாட்டுல கம்பெனிக்காரன்
தீர்மானிக்கிறான்.அவங்க என்ன கொடுக்கிறாங்களோ,
அதைத்தான் போட வேண்டியிருக்கு. எந்த விஷத்தையெல்லாம் கொட்டச்
சொல்றாங்களோ,அதையெல்லாம் கொட்ட வேண்டியிருக்கு.
அதைத்தான்நாமதிங்குறோம்.வரக்கூடாதநோயெல்லாம் வருது. அதிக விளைச்சலுக்குஆசைப்பட்டு விவசாயிகளும் கம்பெனிகளோட
சூழ்ச்சியில சிக்கிட்டாங்க.
இந்திய விவசாயத்தை அழிக்கிற ஆயுதமா விதை மாறிடுச்சு. கம்பெனிக்காரங்க விதையை தர மறுத்தா நாம விவசாயமேசெய்ய முடியாது. அந்த நிலையிலதான்
இப்போ நிக்குறோம்...’’

No comments:

Post a Comment