Tuesday, September 27, 2016

மஞ்சள் காமாலை

இயற்கை வழியில் காமாலையை

குணப்படுத்துங்கள்.!

மஞ்சள் காமாலை என்பது கல்லீரல்அலர்ஜியால் ஏற்படும்
ஒருநோய்! இதில் பல வகைகள்
இருக்கிறது.! எந்த வகையான கல்லீரல் நோயாக இருந்தாலும் இயற்கையில் முழுதாகக் குணப்படுத்த முடியும்.!  நமது உடலில் உள்ள உள் உறுப்புகளிலேயே வெட்டுப்பட்டோ அழுகியோ போனாலும் கூட மீண்டும் வளரும் ஒரே உள்உறுப்பு கல்லீரல் மட்டும்தான்.!   கல்லீரல் அலர்ஜிக்கு முக்கியக் காரணம் உணவு ஏனெனில் நமது உடலால் சேகரிக்கப் பட்ட அனைத்து உணவின் சாரத்தையும் இரத்தத்திற்கு அனுப்புவது கல்லீரல்தான் அதுபோலவே உடலில் சேகரிக்கப்பட்ட நச்சுக்கழிவுகளை வெளியேற்றுவதில் முக்கிய பங்காற்றுவதும் கல்லீரல் தான்.! கல்லீரலைப் பாதிக்கும் மூன்று முக்கிய விசயம் இரசாயண உணவு,
மது, புகைப்பழக்கம், ஓய்வில்லாத உழைப்பு.! தினமும் பத்து கோக் குடித்தாலோ அல்லது பல வருடங்கள் இரசாயண உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டாலோ, தினமும் ஒரு ஆப் அடித்துவிட்டு ஆட்டம் போட்டாலோ தொடர்ந்து ஒரு வருடம் ஓய்வின்றி உழைத்தாலோ கல்லீரல் கெட்டுவிடும் என்று உறுதியாக கூறமுடியாது.! அதனால் தான் கவிஞர் வைரமுத்து அழகாக கூறினார்.! கல்லீரல் கழுதைப்பாரம் சுமக்கும், இடைவிடாது நடக்கும். ஆனால் படுத்துவிட்ட தென்றால் உன்பாடு திண்டாட்டமாகி விடும் என்று.!
ஒருவருக்கு மஞ்சள் காமாலை வந்தவுடன் யூரின் மஞ்சளாக இருக்கும் அதில் ஒருபிடி சோற்றைப் போட்டுப் பார்த்தால்
சோறு மஞ்சளாகிவிடும்.!
கண் வெள்ளைப்பகுதி மஞ்சளாக ஆகிவிடும், சாப்பிட்ட உடன் வாந்திவரும். உடலை முறுக்கிப் போட்டதுபோல் அசதியாக இருக்கும்!
மஞ்சள் காமாலை வரவேக்கூடாது என்று நிணைப்பவர்கள் மேற்கண்ட அறிகுறிகளில் ஏதேனும் ஒன்று அடிக்கடி தென்பட்டாலே வாழ்க்கை முறையை இயற்கை சார்ந்து அமைத்துக் கொள்ள வேண்டும்.!
மஞ்சள் காமாலை வந்துவிட்டால் இரண்டடிக்கு மேல் வளர்ந்த கீழாநெல்லி இலையை ஒரு கையளவு பறித்து நன்றாக இடித்து ஒருடம்ளர் மோரில்  கலக்கி உணவிற்கு அரைமணி முன் காலை, மாலை குடிக்க வேண்டும்.!
உணவாக அரிசிக்கஞ்சி மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.!
அதோடு ஒரு பாட்டிலில் தேன் அல்லது கருப்பட்டி பாகில்  நெல்லிக்காயை ஊறவைத்துக் கொண்டு தினமும் மூன்று வேளையும் இரண்டு தேக்கரண்டி தேனோடு நெல்லிக்காயையும் உண்டுவர வேண்டும்.!
<உப்பு,புளி, மிளகாய் நீக்கி ஒருவாரம் ஓய்வெடுக்க வேண்டும்>
பிறகு நாற்பத்தெட்டு நாட்கள் வரை  கஞ்சி, இரசஞ்சோறு, தயிர்சாதம், பழ உணவுகளை அதிகம் பின்பற்றிக் கொண்டே தினமும் தேன்நெல்லியையும் தின்றுவந்தால்  மஞ்சள் காமாலைநோய் பறந்துவிடும்.! தினமும் குளிக்கலாம்.! இது நாம் உட்பட பலரும்  பயன்படுத்தி வெற்றிகண்ட இயற்கை முறை நீங்களும் கடைப்பிடித்து வெற்றி அடையுங்கள்.!
நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment