Tuesday, September 27, 2016

குழந்தைகளுக்கான சத்துமாவு


செய்முறை

வரகு 1கிலோ
கைகுத்தல் அரிசி 300 கிராம்
உளுந்து 150 கிராம்
சிறுபயறு 100 கிராம்
பொரிகடலை 100 கிராம்
பார்லி அரிசி 50 கிராம்
எள் 25 கிராம்
பிஸ்தா பருப்பு 10 கிராம்
பாதாம் பருப்பு 10 கிராம்
முந்திரி பருப்பு 10 கிராம்
வேர்க்கடலை  10 கிராம்
ஏலக்காய் 10 கிராம்

இவற்றில் வரகு , பார்லியை தவிர எல்லாவற்றையும் தனித்தனியாக லேசாக வறுத்து வைத்துக்கொண்டு வரகு பார்லியுடன் அனைத்தையும் சேர்த்து  இயந்திரத்தில் பொடித்து வைத்துக்கொண்டு இரண்டு தேக்கரண்டி மாவுடன் தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு காய்ச்சி குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு ஆற்றல் அதிகரிக்கும்
ஊட்டச்சத்து குறைபாடு நீங்கும்
வயிறு உப்புசம்,  மலச்சிக்கல் போன்ற உபாதைகள் சீராவதுடன். நெஞ்சுச்சளியும் அகலும்.! இந்த மாவை 6 மாதம் முதல் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் இரண்டு வேளை கொடுக்கலாம்.!

ஓர் அனுபவம்.!

இந்தக்குறிப்பை இலங்கையை சேர்ந்த நமது  முகநூல் நட்பாளர் Magesh Rahini Sivakumar அவர்கள் கூறி இருந்தார். இலங்கையில் உள்ள ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் இந்தக் குறிப்பை கற்றுகொண்டதாகவும் தனது பேரனுக்கு இந்த சத்துமாவை தொடர்ந்து குடுத்து வருவதால் மிக ஆரோக்கியமாக இருப்பதுடன், எந்த பருவகால நோய்களும் அவனை தாக்குவதில்லை. அதோடு அவன் இந்தமாவை மிகவும் விரும்பி சாப்பிடவும் செய்கிறான். சமீபத்தில் எங்கள் பகுதியில் உள்ள அனைத்து குழந்தைகளும் சளியால் அவஸ்தை பட்டபோது கூட இவன் மிக ஆரோக்கியமாக இருந்தான். இது குறித்து எங்கள் பகுதி மருத்துவர்கள் கூட ஆச்சரியம் தெரிவிக்கின்றனர். நன்றி ஆயுர்வேதா என்று கூறி இருந்தார்.! 

இந்தத் தகவலை அறிந்த நாம்  சளியால் அவஸ்தைபட்டு வந்த நமது மாணவர் ஒருவரின் ஒரு வயது குழந்தைக்கு மேற்கண்ட முறைப்படியானப் பொருளோடு கால்கிலோ சுத்தமான பனங்கற்கண்டும் சிறிது அமுக்ரா சூரணமும் சேர்த்துப் பொடித்து இரண்டு நாட்களாக கொடுத்து வந்தோம்.! சளியால் எப்பொழுதும் முசுமுசுவென  மூச்சுவிட சிரமப்பட்ட நண்பரின் பெண் குழந்தை இப்பொழுது நன்றாக மூச்சுவிடுகிறது. சளியும் துண்டுத்துண்டாக வெளியேறுவதாக கூறி மிக நன்றி ஆசானே என்றதுடன் இன்னும் எவ்வளவு மாவு இருக்கிறது, அவ்வளவும் எனக்கு வேண்டும் என்று வாங்கிசென்றுவிட்டார்.!

அடடா.! இருக்கிற மூலிகைகளையே நம்மால் தட்டுப்பாடில்லாமல் தயாரிக்க முடியவில்லை. இதில் புதிதாக இதுவும் சேர்ந்து விட்டதா, என்று முனகியபடியே இன்று நமது சத்துமாவோடு மீண்டும் இந்த மாவை ஒரு நான்கு கிலோ மட்டும் இன்று தயாரிக்கப் போகிறேன்.! 

நீங்களும் இதை தயாரித்து கொடுத்து உங்கள் குழந்தைகளின் ஆரோக் கியத்தை மேம்படுத்துங்கள் செர்லாக், ஹார்லிக்ஸ் , இருமல் டானிக் போன்ற இரசாயண அரக்கர்களிடம்  இருந்து குழந்தை செல்வங்களின் ஆரோக்கி யத்தை  மீட்டெடுங்கள்.!

No comments:

Post a Comment