Tuesday, September 27, 2016

இயற்கை வழியில் கைகால் வீக்கத்தை சரி செய்யுங்கள்.!

அரை லிட்டர்  வேப்பெண்ணையை சூடாக்கி அதில் பத்து நொச்சி இலை களை பிச்சுப்போட்டு இலை வதங்கி யதும் இறக்கி வைத்து விட்டு கொஞ்சம் எண்ணையையை எடுத்து வீக்கம் உள்ள பகுதியில் போட்டு மேலிருந்து கீழாக தடவிவிட்டு,  அரைமணி நேரம் இளம் வெயிலில் அமர்ந்திருந்தால் கைகால் வீக்கம் குணமாகும்!

அடிக்கடி கால் வீங்குபவர்கள் உட்காரும் போது காலை தொங்கப் போடாமல் காலை  இடுப்பளவு உயரத்தில் வைத்து உட்கார வேண்டும். அதோடு படுக்கும் போது காலிற்கும் ஒரு தலையணை வைத்துக் கொள்ளலாம்!

அதிக வீக்கமும் வலியும் இருப்பவர்கள் நொச்சி எண்ணைய் சிகிச்சைக்குப் பின, கொஞ்சம் சுடுநீரில் உப்புப் போட்டு ஒத் தடம் கொடுக்கலாம்! அதுபோலவே எண்ணைய் போட்டபிறகு அதன் மேல் வெற்றிலையை வாட்டி வரிசையாக  வைத்து வீக்கம் உள்ள இடத்தை சுற்றி கட்டி இரவில் தூங்கி விட்டால் ஒரிரு நாட்களில் வீக்கம் முற்றிலும் மாறி விடும்!

நலம் பெருகட்டும் …

No comments:

Post a Comment