Tuesday, September 27, 2016

எச்சரிக்கை -- மூலிகை ஆபத்துகள்


மூலிகை ஆபத்துகள்
---------------------------

சமீப காலத்தில் இயற்கை மீதும் மூலிகை மருந்துகளின் மீதும்
மக்களுக்கு அப்படியே  அக்கறையும் அன்பும் பொத்துக்
கொண்டு வந்துவிட்டது.!
இதன் விளைவால் பல திடீர் மூலிகை கம்பெனிகளும்  மூலிகை மருத்துவர்களும் வெளிநாட்டு மூலிகைகளை விற்பவர்களும் பெருகி வருகிறார்கள்.! இது உண்மையில் வரவேற்க தக்க விசயம்.!

ஆனால் ஒவ்வெரு மூலிகைகளுக்கும் சுத்திகரிப்பு முறை பயன்படுத்தும் முறை ஒத்த குணமுள்ள மூலிகை  ஆற்றலை முறிக்கும் குணமுள்ள மூலிகை என்றும் எடுக்க வேண்டிய அளவு, காலம், சேர்த்து பயன்படுத்த வேண்டிய பொருட்கள் என்றும்  பல பட்டியலே இருக்கிறது.! இவற்றை கடைப் பிடிக்காமல் சும்மா

கடுக்காய் கொடுத்தால் பேதிபோகும் என்று தெரிந்து வைத்துக் கொண்டு அதை நமது மடத்தில் உள்ள நாய்களுக்கு கூட கொடுக்க வேண்டும்.! என்று நித்யானந்தா போன்ற அறிவாளிகளே உளறி வருவது கவலை அளிக்கும் விசயமாய்  இருக்கிறது.!

சமீபத்தில் கர்பப்பையில் ஒருகிலோ அளவில் ஒரு கட்டியோடு ஒரு அம்மா நமது மையத்திற்கு வந்திருந்தார்.!  இரண்டு வருடத்திற்கு முன்பு சிறுசிறு கட்டிகளாகத்தான் இருந்தது. பிறகு அதைக் கரைக்க ஆறுமாதமாக DXN என்ற வெளிநாட்டு மூலிகை மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டேன். பிறகு விட்டுவிட்டேன் சமீபத்தில் வலி வந்ததால் ஸ்கேன் செய்து பார்த்தபோது தான் கட்டி இப்படி பெருத்திருப்பது தெரிந்தது என்றார்.

பொதுவாக வெளிநாட்டு மூலிகை என்று டப்பா ஆறாயிரம் பத்தாயிரம் என்று விற்பவை எல்லாம் போலியானவை அவற்றில் நிறைய செயற்கை விட்டமினும் புரோட்டினுமே கலந்துள்ளது.! அதனால், அவை உடலுக்கு உடனடி தெம்பை கொடுக்கும்  புரோட்டின் எப்படி உடலை வளர்க்குமோ அப்படியே உடலில் உள்ள கட்டியையும் வளர்க்கவே செய்யும்.!


இது தெரியாமல் மல்டிலெவல் மார்க்கெட்டின் மூலம் இதை விற்பவர்கள் அனைவரும் இது கேன்சர் செல்லை அழிக்கும், சிறுநீரக செயலிழப்பை சீராக்கும் என்றெல்லாம் கூறி தங்கள் லாபத்திற்காக வெளிநாட்டு மோகம் கொண்ட முட்டாள் நோயாளிகளிடம் விற்றுவருகிறார்கள்.!


நோயில்லாமல் கடுக்காயை தொடர்ந்து தினமும் தின்றுவந்தால் ஆண்மைக்குறைவு ஏற்படும், பெருங்குடல் பலவீனம் ஏற்படும், கல்லீரல் வீக்கம் உருவாகும், உடல் சோம்பல், உடல்வலி உருவாகும்.! கடினமான மலச்சிக்கல் உள்ள வயதான நோயாளிகள் மட்டும் தினமும் இரவில் அரைத்தேக்கரண்டி கடுக்காய்பொடியை சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.! தினமும் வளமையாக பயன்படுத்த வேண்டும் என்ற நிலையில் உள்ளவர்கள் கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் சேர்ந்த திரிபலாவையோ அல்லது இவற்றுடன் ஆடாதோடை , சுக்கு சேர்ந்த பஞ்சமூலி சூரணத்தையோ குறிப்பிட்ட மாதங்கள் வரை தொடர்ந்து எடுக்கலாம்.!

திரிபலாவும் பஞ்சமூலி சூரணமும் இரத்தத்தை சுத்திகரிக்கும், உடல் எடையை குறைக்கும், சக்கரையை கட்டுக்குள் வைக்கும், உடல் எடையை கூட்டும், உடலில் உள்ள உப்புச்சத்தை குறைக்கும், வாத, பித்த, கப நோய்கள் அனைத்தையும் கட்டுப்படுத்தும், வாய்ப்புண்ணை குணமாக்கும் எல்லாம்  உண்மைதான் ஆனால், அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

வெளிநாட்டு மூலிகைகள் முழுவதும் நஞ்சு.!


அதுபோலவே ஒரு மாத மருந்திற்கு 6000, 7000 என்று கட்டணம் வசூலிக்கும் அனைத்து மருத்துவர்களும் அதில் ஸ்டீராய்டு மருந்துகளை கலந்தே கொடுக்கிறார்கள். முன்னோர்கள் விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு என்றார்கள் சித்தர்களோ எல்லா வியாதிக்கும் 48 நாட்கள் போதும் என்றார்கள் ஆனால் இந்த நவீன வியாபாரிகளோ குறைந்தது ஆறுமாதம் முதல் இரண்டு வருடம் வரை அவர்களிடம் இரசாயணம் கலந்த மூலிகைகளை  வாங்கி உண்ணுங்கள் என்கிறார்கள்.! ஆறு மாதத்தில் நோயை கட்டுப்படுத்த எந்த மருத்துவ சிகாமணியும் வேண்டாம், சில வழிமுறைகளை கடைப்பிடித்தால் போதும் எந்த மூலிகை மருந்தும் இல்லாமல் உடம்பு தன்னைத் தானே குணமாக்கிக் கொள்ளும்.!

நலம் பெருகட்டும் …

amyogatrust.blogspot.com
MObiLe:9629368389

No comments:

Post a Comment