இன்றைக்கு மதியம் கொஞ்சம் நேரம் கட்டிலில் படுத்துக்கொண்டே பத்திரிகை களை படித்துக் கொண்டிருந்தேன், அப்ப டியே கையிலிருந்த தினமலர் பேப்பர் நழுவியதை மட்டுமே உணர்ந்தேன், பிறகு சுமார் இரண்டு மணி நேரம் எந்த சலனமும் எனக்கு தென்படவில்லை. சட்டென்று ஏதோ ஒரு ஒளி உடலெல்லாம் பரவுவது போல் உணர்ந்தேன். (பயப்படாதீர்கள்! நான் அமானுஷ்ய கதை ஒன்றும் கூறப்போவதில்லை)
அது நாம் சாந்தியாசனம் பயிலும் போது செய்யும் கற்பனை. அது இந்த நேரத்தில் அதுவாகவே வந்தது, அதோடு விழிப்பும் வந்துவிட்டது. சில விநாடி நேரத்தில் சார்ஜரில் போட்டிருந்த கைபேசி ஒலிக்கவே எழுந்து விட்டேன்.
பஞ்சமூலி மாத்திரை உருட்ட வேண்டும் என்று நினைத்திருந்ததை, மா-நித்திரை தடுத்து விட்டதால் அந்தப் பணி இன்று தடைப்பட்டுள்ளது. அதனால் என்ன? இன்றைய தூக்கம் என் நாடி நரம்புகளை யெல்லாம் மீட்டி என் உடலில் புதிய உற்சாக இசையை ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதிகாலையில் எழும்போது கூட இத்தகைய உற்சாகம் பற்றிக் கொள்வதில்லை.! உண்மையில் யோகாவைப் போலவே தூக்கமும் ஒரு ஒப்பற்ற உடல் உற்சாக ஊக்கி, பிணிநீக்கும் பொக்கிசம் நல்லுணர்வு தரும் கவிதை.!
சிலர் எப்பொழுதும் பாதிபோதையில் இருப்பார்கள். அதுபோலவே சிலர் பகலில் யோகா செய்யும் பொழுது பாதி தூக்கத்திலேயே யோகா செய்வார்கள், சிலநேரம் நான் உடனே அவர்களை சாந்தியாசனம் பயில சொல்லி தூங்கவிட்டு விடுவோன். பிறகு அவர்களாகவே எழுந்து உற்சாகமாக யோகா செய்வார்கள்.! பொதுவாக அதிகாலை துயிலெலும் பழக்க முள்ள பலருக்கு மதிய நேரம் சற்று தூக்கம் எட்டிப்பார்க்கும் அவசிய பணிகள் இருந்தால் பிறகு சரியாகிவிடும். அதற்கும் சேர்த்து இரவில் அடர்த்தியான தூக்கம் வரும். அதுவும் இரவில் படுக்கும் முன் தாரணை தியானமும் 4,7,8 பிராணாயாமமும் செய்து படுத்து விட்டால் அதிகாலை வரை காலனே வந்தாலும் எனது கண்திறக்காது. உண்மையில் தூக்கமே நம் உடலில் உள்ள அத்தனை நரம்புகளுக்கும் ஓய்வையும் ஆக்ஸிஜனையும் வழங்குகிறது இதுவே பிணியை நீக்கவும் வாழ்நாளை அதிகரிக்கவும் பேருதவியாக இருக்கிறது.!
அதிகாலையில் பள்ளியில் பாங்கு சொல்லும் போது தூக்கத்தை விட தொழுகை மேலானது என்று கூறுவார்கள், அதை அதிகாலை தூக்கத்தை விட தொழுகை மேலானது என்று எடுத்துக் கொண்டாலும் கூட இரவு 9 அல்லது பத்து மணிக்குள் தூங்குபவர்களுக்கே அது பொருந்தும் பனிரெண்டு ஒரு மணிக்கு படுத்துவிட்டு காலையில் ஐந்து மணிக்கு பாங்கு, தேவாலயப் பாடல், கோயில் மணிகளை கேட்டோ அல்லது அலாரம் வைத்தோ எழுபருக்கு அது மிகப்பெரிய பாதிப்பையே உடலில் ஏற்படுத்தும் எழுவது யோகா செய்வதற்காக என்றாலும் இதே நிலமைதான். மாலை ஆறுமணிக்கு மேல் வானம், சூரியன், நீர்நிலை, பறவைகள், செடிகள் எல்லாமே தூங்கிவிடுகிறது. இவைகளே இயற்கையோடு இயைந்து வாழ்கின்றன அதிகாலையில் எழுந்தும் விடுகின்றன ஆனால், மனிதன் நடு இரவில் உறங்கி அதிகாலையில் எழுந்து ஓடுவது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். அதைவிட பத்து மணிக்கு மேல் முழித்து வெறுமனே இணையத்தையோ தொலைக் காட்சியையோ பார்த்துக் கொண்டிருப்பவர்கள் பகலில் பனிரெண்டு மணிவரை தூங்கினாலும் இழந்த உடல் உற்சாகத்தை பெறமுடியாது.!
இதனால் பல நோய்களின் தாக்கம் 50 சதவீதம் கூடுதலாகும் என்று ஆஸ்திரேலியாவில் நடந்த ஓர் ஆய்வு கூறுகிறது.! ஆதலால் ஜகத்தோரே பின் தூங்கி முன் எழுவது பத்தினிக்கு வேண்டுமானால் நல்லதாய் இருக்கலாம் அனைவருக்கு கேடுதான்.! அது சரி, தாரணை தியானம் என்றால் என்னவென்று தானே கேட்கிறீர்கள்?
1. படுக்கையில் அமர்ந்து கொள்ளவும்.
2. காலை எழுந்தது முதல் இரவுவரை நடந்ததை நினைத்து பார்த்து எல்லாம் இறைவனுக்கு அர்ப்பணம் என்று கூறிவிட்டவும்.
3. நாண்கு எண்ணிக்கை நேரம், இரண்டு நாசியிலும் மூச்சை இழுத்து, ஏழு எண்ணிக்கை நேரம் உள் நிறுத்தி, எட்டு எண்ணிக்கை நேரம் இரண்டு மூக்கிலும் வெளிவிட வேண்டும்.
4.இப்படி மொத்தம் மூன்று சுற்றுகள் செய்து படுத்தால் ஆழமான தூக்கம் வரும்.!

No comments:
Post a Comment