Sunday, October 16, 2016

உணவு உண்ணும் பாத்திரங்களும் அவற்றின் விளைவுகளும்.


நாம் உண்ணும் பாத்திரங்களை வைத்தே உடல் நலமும் காக்கப்படுகிறது.அதுபற்றி அறிந்துகொள்வோம்.
உண்கலமும் உடல்நலமும்
       உணவு உண்ணும் போது, ஒவ்வொரு வகையான உண்கலங்கள் பயன்படுகின்றன. உண்கலங்கள் அவரவர் நிலைக்கும், வசதிக்கும் ஏற்றவாறு மாறுபடும்.
பெரும்பாலான விருந்துகளில் வாழையிலை பயன்படுத்தப் படுகிறது. அரசு, அரச விருந்துகளில் உலோக உண்கலங்கள் பயன் படுத்தப்படுகின்றன. ஆனால், அவற்றால் என்னென்ன விளைவுகள் ஏற்படுகின்றன என்றறிந்து செய்யப்படுவதில்லை. மதிப்பிற்காகவும், செல்வச் செழிப்பைக் காட்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.
 
இலை
       உணவு உண்பதற்கு இலை சிறந்த உண்கலமாகக் கருதப்படுகிறது. இலைகளில் வாழை இலையும், வேங்கை இலையும் உடலுக்குச் சுகமான பலனைத் தருபவை. வாழையிலையில் உணவு உண்பதால், அக்கினி மாந்தம், அபலம், வாய்வு, இளைப்பு, பித்த நோய் ஆகியவை போவதுடன், உடல் அழகடையும், சுகபோகம் உண்டாக்கும்  என்று உரைக்கப்பட்டுள்ளது.
 
உலோகம்
       “உலோகவகை உண்கலங்களில் 
தங்கம், 
     பித்தம், சோபப் பிணியை நீக்கித் தாது, பசி, வலிமை, பூரிப்பை உண்டாக்கும். 
 
வெள்ளி,  
      கபம், பித்தம் போக்கும்; காந்தி, களிப்பு, வாதம் உண்டாக்கும். 
செம்பு,
     இரத்த தோஷத்தைப் போக்கும்; உடல் ஆரோக்கியம், காந்தி, கண்ணொளி உண்டாக்கும். 
வெண்கலம், 
      சோபம், இரத்தப் பித்தம் போக்கும்.’’ என்கிறது.
       
          உலோக உண்கலங்களிலேயே தங்கம் சிறந்த உலோக உண்கலமாகக் கருதப்படுகிறது.

No comments:

Post a Comment