Sunday, October 16, 2016

வாத வைத்தியம்

வாத வைத்தியம்

         சித்தர்கள் வாதத்தை வகார வித்தை என்று குறிப்பிடுவர். என்னும் எழுத்து ஆகாயத்தைக் குறிக்கும். ஆகாயம் என்பது தலையின் உச்சியையும், ஞானத்தின் முத்தி நிலையையும் குறிக்கும். 
      ஞானத்தின் முத்தி நிலையை அடைய முனைவோர் வாத முறையில் தயாரித்த மருந்தை உண்டால் உடல் சுத்தியாகும். அதன்பின் ஞானத்தை மேற்கொண்டால் சித்தியாகும் என்பதால், வகார வித்தை என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டது.
        வாதத்தை உலோக மாற்றுக் கலை யென்றும் குறிப்பிடுவர். இதனை இரச வாதம் என்பர். பாதரசத்தை ஆதாரமாகக்கொண்டு தயாரிக்கப்படுகின்ற மருந்தினால், குற்றமுடைய செம்பு, வெள்ளி, இரும்பு, பித்தளை, நாகம் போன்ற உலோகங்களைக் குற்றமில்லாப் பசும் பொன் னாக மாற்றலாம் என்பர். 
       உலோகங்களைத் தங்கமாக மாற்றுவது மருத்துவத்தின் பணி அல்ல. 
      ஆனால், வாத முறையில் தயாரிக்கப்படும் மருந்து, உலோகங்களைக் கொண்டு சோதிக்கப் படுகிறது. அச்சோதனையில், உலோகம் தங்கமாக மாற்றுக் கொண்டால், மனிதனுக்குப் பயன்படும் என்று அறியப்படுகிறது. குற்றமுடைய உலோகங்களைப் பசும்பொன்னாக மாற்றுகின்ற மருந்து, மனித உடம்பிலுள்ள நோய் என்னும் குற்றங்களையும் தீர்த்து உடலைப் பொன் போலாக்கும் என்பதே வாத வைத்தியத்தின் மூலக் கருத்தாகும்.
          சித்தர் நூல்கள் பெரும்பாலும் வைத்தியம், வாதம், யோகம், ஞானம் என்னும் நான்கையும் இணைத்தும் விரவியும் கூறக் காணலாம். வாத முறைகள் மிகவும் கவனமாகச் செய்ய வேண்டியிருப்பதனால் இம்முறையைச் செய்த பலர் தோல்வி கண்டுள்ளனர் போலும். அவர்கள், வகார வித்தை பொய் என்று சொல்லியிருக்கின்றனர். அதற்கு,

        வகார வித்தை என்னும் வாதக்கலை பொய்யென்று சொன்னால் ஞானமும் பொய்தான். ஞானத்தை அடைய வாதமே படிக்கல்லாக அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இரசவாதம் பொய்யென்று சொல்லிவிட்டால் சித்தர் பரம்பரை என்பதும் பொய்தான். அறிவற்றவர் போலப் பேசாதீர்கள் என்று யூகி முனிவர் கண்டிக்கிறார்.  
       ‘வாதமுறை யில் தயாரிக்கப்படுகின்ற தங்க மெழுகு என்னும் மருந்தை, காலை மாலை இருவேளைஉண்டுவந்தால், உடல் உறுதியாவது மட்டுமல்ல, நரையும் திரையும் மாறிப் போகும் என்று வாத மருந்தின் பயன் கூறப்படுகிறது. 
          செம்பு மெழுகு என்னும் மருந்து நரைதிரையைப் போக்கி, நரம்புகளைப் பச்சையாக்கும்278 என்பர். நரம்பே மனிதனின் ஆயுளைக் கூட்டுவதும் குறைப்பதுமாக இருக்கிறது. அதனையே, நரம்பு பச்சையாகும் என்பர். நரம்புகள் இளையதாக ஆகி உடலைக்காக்கும் என்று பொருள் கொள்ளலாம்.
         செம்பு மெழுகு என்னும் வாத மருந்து, வாத நோய் என்னும் 84 வகை நோய்களைத் தீர்க்கும் என்பர். 
          குறிப்பாக நரம்பின் தொடர்பாக உண்டாகும் நோய்களான வாதவலி, மகோதரம், இசிவு, அண்டவாதம், நரித்தலை வாதம் போன்றவை தீரும் என்பர். 
              பஞ்சலோகச் செந்தூரம் என்னும் மருந்து நானூற்றுக்கும் மேற்பட்ட நோய்களைத் தீர்க்கும் என்று கூறப்படுகிறது. இதன் செய்முறைகள் பெரும்பகுதி மறைபொருளாக அமைந்துள்ளன. 
        முறையான பயிற்சியும் முறையான கல்வியும் இல்லாதவர்கள், இதனுடைய உண்மையான செய்முறைகளை அறியாமல் பொருள்களை வீணடித்திருக்கிறார்கள். உண்மைப் பொருளை உணரும் திறனில்லாதவர்கள் வாதம் பொய்யென் பார்கள் என்று வாத மருந்தின் நேர்மையை எடுத்துரைக்கக் காண்கிறோம்.
       ‘வாத முறைகள் ஞான நெறிக்குள் செல்லப் பயன்படும் கருவிகளில் ஒன்றெனக் கூறுவர். ஞானம் கண் என்றால் வாதம் அதன் இமை என்று வாதத்துக்கும் ஞானத்துக்கும் உரிய தொடர்பைக் கூறுவர். வாத முறையினால் ஞானத்தை அடைந்து, அதன் பயனைத் தானும் நுகர்ந்து மக்களுக்கும் நுகர்ந்தளிக்கச் செய்யாமல், வாதத்தைக் கருவியாகக் கொண்டு, பெண்களை மயக்கிச் சிற்றின்பத்தில் சிக்கிச் சிதைந்து போகிறார்கள் என்பதனால், வாதமுறைகள் தெளிவாக உரைக்கப்படாமல், சில மரபு வழி நுட்பங்களைக் கொண்டு உரைக்கப் பட்டிருப்பதன் உண்மை விளங்குகிறது.
         ‘பொருள் தேடல் என்னும் கொள்கையை மட்டுமே கொண்டு வாத முறையில் மருந்துகளைத் தயாரிக்க எண்ணுகின்றவர்களே மிகுதியாகக் காணப்படுகின்றனர். ஆனால், சித்தர்கள் இதற்கு உடன்பட்டவர் களாகத் தெரியவில்லை. 
            பொருள் என்பது சித்தர்களுக்குப் பொருட் டாகவே தோன்றவில்லை என்பதுடன், ஞானம் என்னும் அறிவு வழிப் பயணமே சித்தர்கள் மேற்கொண்ட பயணத்தின் பாதை என்பது உய்த்துணரத்தக்கது.

No comments:

Post a Comment