காற்றாலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் வழி மிகவும் சுற்று சூழலுக்கு உகந்தது என்றாலும் அதிகப்படியான காற்றோ ( சூறாவளி / புயல் ) அல்லது குறைந்த காற்றோ இருக்கும் போது அவைகளின் இயக்கம் நிறுத்தப்படுகிறது . இந்த சூழ்நிலையில் தான் அதிநவீன காற்றாலை ஒன்றை ஆஸ்திரேலியாவை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர் .
70 அடி உயரமுள்ள இந்த காற்றாலைகள் 21 அடி விட்டமுள்ள நவீன வட்ட வடிவ இறக்கையை தாங்கி நிற்கிறது . அதி வேக காற்று வீசும் போது இந்த வடிவமைப்பு தானாகவே செங்குத்தான நிலையில் இருந்து காற்றின் போக்கில் மாறி விடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது . மணிக்கு 118 மைல் வேகத்தில் காற்று வீசினாலும் இந்த காற்றாலைகள் தாங்கும் சக்தி கொண்டது
குறைந்த பட்சமாக மணிக்கு 9 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் காற்றிலும் இது இயங்கும் . வருடத்திற்கு கிட்டத்தட்ட 18000 கிலோ வாட் ( 18 மெகா வாட் ) லிருந்து 30000 கிலோ வாட் ( 30 மெகா வாட் ) வரைக்கும் மின்சாரம் தயாரிக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது
No comments:
Post a Comment