மலர்கள் மற்றும் தாவரத்தின் மற்ற பாகங்கள்
- கோழிக் கொண்டை, மல்லிகை கீரை வகைகள், பாக்கு மற்றும் தென்னை இலைகள், வெட்டப்பட்ட மலர்கள் அனைத்தும் இப்பட்டியலைச் சார்ந்ததாகும், இதனுடன் உலர்ந்த இலைகள் மற்றும் கிளைகள் ஆகியவையும் சேர்க்கப்படுகிறது.
- கடந்த 20 வருடங்களாக இந்தியா இவ்வகையான பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறது.
- பாட்பொரி
- இவ்வகையான மணமூட்டப்பட்ட மலர்கள் பிளாஸ்டிக் பைகளில வைக்கப்படுகிறது.
- பொதுவாக இவை அலமாரி, டிராயர் மற்றும் குளியலறைகளில் வைக்கப்படும்.
- சுமார் 300க்கும் மேலான தாவர வகைகள் இம்முறைக்கு பயன்படுத்தப்படுகிறது.
- இந்தியாவில், பேச்சிலர் பட்டன், கோழிக் கொண்டை, மல்லிகைப் பூ, ரோஜா இதழ்கள், காகிதப் பூ, வேப்ப மர இலைகள் மற்றும் பழக் கொட்டைகள் ஆகியவை பாட்பொரி செய்யப்பயன்படுகிறது.
- இங்கிலாந்து, இவ்வகை தயாரிப்புக்கு, நமது மிக முக்கிய வாடிக்கையாளர்.
- உலர் மலர் தொட்டி
- உலர்ந்த தண்டு மற்றும் சிறு கிளைகள் பயன்படுத்தப்படுகிறது.
- இதற்க்கு கிராக்கி மிகவும் அதிகமில்லை என்றாலும் அதிக விலைக்குப் போகக்கூடியது, மேலும் உயர்தர வர்க்கத்தினரால் மிக அதிகமாக விரும்பப்படக்கூடியது.
- பொதுவாக உலர்ந்த பருத்தியின் கூடு, பைன் மலர்கள், காய்ந்த மிளகாய், மற்றும் சுரைக்காய், புல், மர மல்லிகை, அஸ்பராகஸ் இலைகள், பெரணி இலைகளை, மரப்பட்டைகள் மற்றும் சிறு குச்சிகள் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது.
- உலர்மலர் கைவினைப் பொருட்கள்
- இவ்வகை பொருட்கள், உலர் மலர் வர்த்தகத்தில் தற்சமயம் மிக அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது.
- வாழ்த்து அட்டைகள், கவர்கள், மெழுகு தாங்கி, கண்ணாடி கிண்ணங்கள் ஆகியவை பல வகை நிறமுள்ள உலர் மலர்களைக் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
- Thnxs: தகவல்
முனைவர் ஸி. ஸ்வர்ணபிரியா மற்றும் முனைவர் வி. ஜெயேசேகர், தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையம் (கே.வி.கே), பேச்சிப்பாறை, கன்னியாகுமரி மாவட்டம், தமிழ்நாடு
|
No comments:
Post a Comment