நோய் என்றால் என்ன? மருத்துவம் என்றால் என்ன?
பணிகிறேன் என் அன்பு சகோதரர்களே, சகோதரிகளே.,
நோய் என்றால் என்ன?
மருத்துவம் என்றால் என்ன?
மருத்துவத்தின் அடிப்படை எவ்வாறு இருக்க வேண்டும்? என்ற கேள்விகளே ஆராக்கிய தேடலின் முதல் படி என்று நான் நம்புகிறேன்.,
நோய் என்றால் என்ன?
"மிகையினும், குறையினும் நோய் செய்யும்"
-வள்ளுவர்
உடலில் உள்ள ஏதோ ஒன்று (என்னவெல்லாம் இருக்கிறது என்பதை பற்றி அடுத்தடுத்த பதிவுகளில் விரிவாக பார்க்கலாம்) தேவைக்கு அதிகமாய் இருப்பது அல்லது தேவைப்படும் அளவை விட குறைவாக இருப்பது, இது தான் நோய் என்று அரை வரியில் விளக்கம் அளிக்கிறார் வள்ளுவர்.,
மருத்துவம் என்றால் என்ன?
" நோய்நாடி நோய்முத னாடி யதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்."
-வள்ளுவர்
உடலின் சமநிலையற்ற நிலை தான் நேய், சமநிலையற்ற உடலை சமநிலை படுத்தும் செயலே அந்த நோயிற்கான மருத்துவமாகும்.,
இந்த மருத்துவத்தின் அடிப்படையை வள்ளுவர் மிக அழகாக வரையறை செய்கிறார்.,
முதலில் நோயின் தன்மையை கண்டறிய வேண்டும், பின் நோயிற்கான காரணம், அதாவது, குறிப்பிட்ட எந்த ஒன்றின் மிகை அல்லது குறையினால் நோய் ஏற்பட்டது என்பதை கண்டறிய வேண்டும், பின் அந்த மிகை அல்லது குறையினை சமநிலை படுத்தும் வழிமுறையை கண்டறிந்து அதை சரியான முறையில் செயல்படுத்த வேண்டும்.,
மேலும் மருத்துவம் என்பது நோயின் காரியத்திற்குகாக(அறிகுறி) அல்லாமல் நோயின் காரணத்திற்காக இருக்க வேண்டும்.,
மருத்துவம் என்பது நிச்சயம் இத்தகைய அடிப்படையை கொண்டிருக்க வேண்டியது கட்டாயம்., அப்போதுதான் அது சரியான மருத்துவமாக இருக்கும்.,

No comments:
Post a Comment