Saturday, June 11, 2016

பாரம்பரிய உடலியல்-அறிமுகம்

பாரம்பரிய உடலியல்-அறிமுகம்


சுமார் முன்னூறு அல்லது நானூறு வருடங்களுக்கு முன் இங்கு ஒவ்வொரு வீட்டிலும் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறைகளை அறிந்தவர்கள் (மருத்துவர்கள்) இருந்தார்கள்., அந்த அளவிற்கு மருத்துவம் என்பது எளிமையான ஒன்றாக இருந்தது., ஆனால், இன்று மருத்துவம் என்பது ஒரு சிக்கலான கட்டமைப்பு என்றும் அது நம்மை போன்றவர்களுக்கு புரியாது என்றும் நாம் நம்பவைக்கபட்டுக் கொண்டிருக்கிறோம்.,



மருத்துவம் கடந்த காலங்களில் எளிமையானதாக இருந்ததற்கு காரணம் அந்த மக்களின் உடல் பற்றிய எளிய புரிதல், அந்த புரிதலையே நான் பாரம்பரிய உடலியல் என்று சொல்வேன்.,

நம் முன்னோர்கள் ஆறு விசயங்களைக் கொண்டு உடலை அறிந்து புரிந்தனர்.,

அவை:
1. பனிரெண்டு உறுப்பு.,
2. ஆறு சுவை.,
3. ஐந்து பூதம்.,
4. மூன்று சுழற்சி.,
5. இரண்டு தன்மை.,
6. ஒரு உயிர்.,

இந்த ஆறை சார்ந்தே உடலும், உடலின் செய்களும் அமைந்திருக்கிறது என்பதால் இந்த ஆறையோ அல்லது இதில் ஏதாவது ஒன்றையோ பற்றிய தெளிவான புரிதல் இருக்கும் ஒருவர் உடல் பிணிகளை தீர்க்கும் வழிமுறைகளை அறிந்திருப்பதில் ஆச்சரியமில்லையே.,

1. பனிரெண்டு உறுப்புகள்.,:
இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல், உடலில் பனிரெண்டு உறுப்புகள் இருப்பதாக வகை செய்கிறது.,

அவை:
i) நுரையீரல்(Lung)
ii) பெருங்குடல்(Large Intestine)
iii) இரைப்பையை(Stomach)
iv) மண்ணீரல்(Spleen)
v) இருதயம்(Heart)
vi) சிறு குடல்(Small Intestine)
vii) சிறுநீரகப் பை(Urinary Bladder)
viii) சிறுநீரகம்(Kidney)
ix) இருதய மேலுறை(Pericardium)
x) மூவெப்ப மண்டலம்(Tripple Warmer)
xii) பித்தப்பை(Gall Bladder)
xii) கல்லீரல்(Liver)

இந்த பனிரெண்டும் உடலின் உள்உறுப்புகள் என்று வகை செய்யப்படுகிறது., மேலும் இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியலின் அடிப்படையில் மூளை(Brain) என்பது ஒரு உறுப்பாக வகை செய்யப்படவில்லை., அது எலும்பு மஜ்சைகளின் தொகுப்பாகவே அறியப்படுகிறது.,

மூளை வெறும் கடத்தும் பணியை மட்டுமே செய்வதாகவும், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்வுகளை உண்டாக்கி அவற்றை கையாள்வது உறுப்புகள் தான் என்றும் இந்திய பாரம்பரிய உளவியல் சொல்கிறது.,

2. ஆறு சுவை.,:
இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியலின் அடிப்படையில், உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பும் தங்களுக்கு தேவையானதை சுவையில்(உணவில்) இருந்தே பெற்றுக் கொள்கின்றன., மேலும் உடலில் உள்ள ஏழு தாதுக்களும் இந்த சுவைகளாலே உறுவாக்கப்படுகின்றன.,
இந்த சுவைகள் ஆறாக வகை படுத்தபடுவது நாம் அறிந்த ஒன்றே.,

அவை:
i) இனிப்பு.,
ii) புளிப்பு.,
iii) உப்பு.,
iv) காரம்.,
v) துவர்ப்பு.,
vi) கசப்பு.,

5. ஐந்து பூதம்.,:
இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவவியலின் அடிப்படையில், உடல் மட்டும் அல்ல இந்த ஒட்டு மொத்த பிரபஞ்சமும் பஞ்சபூதங்களை அடிப்படையாக கொண்டே இயங்கிக் கொண்டிருக்கிறது.,

அவை:
i) நிலம்.,
ii) நீர்.,
iii) நெருப்பு.,
iv) காற்று.,
v) ஆகாயம்.,

4. மூன்று சுழற்சி.,:
இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் உடலியல், உடலின் சீரான செயல்பாட்டிற்கு காரணமான மூன்று சுழற்சிகளைப் பற்றி நமக்கு சொல்கிறது., இந்த மூன்று சுழற்சிகளே உடலில் ஏற்படும் நோய்களுக்கு காரணமாகவும், அதே நேரத்தில் அந்த நோய்களை குணமாக்குவதற்கான வழியாகவும் இருக்கிறது.,

அவை:
i) ஆக்கச் சுழற்சி(வாதச் சுழற்சி)
ii) அழிவுச் சுழற்சி(பித்தச் சுழற்சி)
iii) காக்கும் சுழற்சி(கபச் சுழற்சி)

இந்த மூன்று சுழற்சிகளும் பஞ்சபூதத்தை அடிப்படையாக கொண்டு உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது.,

5. இரண்டு தன்மை.,:
இந்திய பாரம்பரிய மருத்துவம் மற்றும் தத்துவவியல் மற்றும் உடலியலின் அடிப்படையில், உடல் உறுப்புகள், அவற்றின் செயல்கள், இன்னு உடல் சார்ந்த அனைத்தும் இரண்டு தன்மைகளாக வகை படுத்தப்படுகிறது.,

அவை:
i) இயக்கம்(வலது).,
ii) இருப்பு(இடது).,

No comments:

Post a Comment