நம்மாழ்வார் ஐயா கூறுவார் நீரை பூமியில் தேடக்கூடாது அதனை வானத்தில் இருந்து பெற வேண்டும் என்று அதற்கான காரணம் மழை பெற மரம் வளர்ப்பு மற்றும் இயற்கையினை நேசிப்பது மேலும் நண்பர்கள் கூறியது போல் மழை நீர் சேகரிப்பு உயிர் நீர் சேகரிப்பு அதனால் அந்த அமைப்பினை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் ஒவ்வொரு விவசாயியும் மழை நீர் அமைப்பு நிலத்தில் ஏற்படுத்தினால் மட்டுமே பயிர் கடன் விவசாய மானியம் வழங்க வேண்டும் வீடுகளில் மழை நீர் சேகரிப்பு இருந்தால் மட்டுமே ரேஷன் பொருள் மானியம் வழங்க வேண்டும் எது எப்படியோ நான் விரைவில் பண்ணைக்குட்டை அமைக்க உள்ளேன் மண்ணில் என்ன தோன்றக்கூடும் மழை இல்லாத போது மனிதனோ மிருகமோ தாயில்லாமல் ஏது? என்று இளங்கோவன் கூறுகிறார்.
நாமக்கல், கார்கூடல்பட்டி அசோக்குமார் அவர்களின் விளக்கம், நீரின்றி அமையாது உலகு என்ற வள்ளுவரின் கூற்றை மறந்து நாம் நமக்கு தெரியாமலே நம்மையும் அடுத்து வரும் நம் சந்ததியினரையும் அழித்து கொண்டு இருப்பதை நாம் உணர தவரிவிட்டோம். ஒன்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். பஞ்சம் என்பது மனிதன் தோன்றிய காலம் கொண்டே இருக்கிறது.முதல் காலமாக நாம் 18ஆம் நூற்றாண்டை எடுத்துக்கொண்டால் மக்கள் தொகை இப்போது இருந்ததை விட 80 சதவிகிதம் குறைவாக இருந்திருக்கும் . வெறும் ஆற்று நீரை கொண்டு விவசாயமும் குடிநீராகவும் பயன்படுத்தி வந்தார்கள்.
மாதம் மும்மாரி மழை பொழிந்தது. மக்கள் மகிழ்ச்சியாக இருந்திருப்பார்கள்.
சில காலம் சென்று இருக்கலாம் உதாரணமாக சுமார் 50 வருடங்கள் என எடுத்துக்கொள்வோம். திடீரென மழை குறைவாக பெய்ததான் காரணமாக ஆற்றில் சில வாரங்கள் தண்ணீர் ஓடாமல் இருந்ததால் மக்கள் குளம் வெட்டி நிலைமையை சமாளித்தார்கள். இப்படி சில காலங்கள் ஓட சுமார் அடுத்த 50 வருடங்கள் என வைத்துக்கொள்வோம்.
நாகரீகம் வளர்ந்தது மக்கள் தொகை பெருக்கம் காரணமாக உணவு தட்டுப்பாடு அவற்றை சமாளிக்க விளை நிலங்களை அதிகப்படுத்த சமவெளிகளில் உள்ள மரங்களை வெட்டி பயிர் செய்தார்கள். மரங்கள் விரகுக்காகவும் விவசாய கருவிகள் செய்யவும் வீடுகள் கட்டவும் தேவை பட்டன இப்படி இயற்கையுடன் ஒன்றி இருந்த மனிதன் இயற்கையுடன் போரிட ஆரம்பித்தான். இப்படி காலங்கள் கடந்து செல்ல 19ஆம் நூற்றாண்டில் அடியெடுத்து வைத்து அது சமயம் மக்கள் தொகை பெருக்க சதவிகிதமும் அதிகமானது.
திடீரென ஒரு பஞ்சம் அதை சமாளிக்க சுமார் 30 முதல் 50 அடி ஆழ கிணறு தோண்டி மாடுகள் வைத்து நீரை இறைத்து பஞ்சத்தை ஒரு போகத்திற்கு சமாளித்தார்கள். காலம் ஓடின 20 ஆம் நூற்றாண்டு பிறந்தது மக்கள் தொகை பெருக்கத்தை அரசு கஃண்டுகொள்ளவே இல்லை. மனிதனிடம் விழிப்புணர்வும் இல்லை.
அதனால் மீண்டும் உணவு தட்டுப்பாடு. விளைவு மனிதன் சற்று மலை சார்ந்த குறிஞ்சி பகுதிகளை அழிக்க ஆரம்பித்து அதில் வ்8வசாயம் செய்ய முற்பட்டான். மழையின் அளவும் குறைந்துகொண்டே வந்தது, விஞ்ஞான வளர்ச்சி , மின்சாரம் வந்தது. விளைவு மோட்டார் கண்டுபிடித்து மாடுகளுக்கு மாற்றாக பயன்படுத்தினார்கள் கிணறுகளை தண்ணீர் பஞ்சம் ஏற்படும்போதெல்லாம் ஆழ படுத்தினார்கள். நிலத்தடி நீர் 100 அடி எட்டியது.
நிலைமையை சமாளிக்க அரசாங்கம் அணைகள் நிறைய கட்டி நீரை அடிமடையில் தேக்கி பாசன பகுதிகளை அதிகப்படுத்தியது. பாசனம் இன்றி பலநூறு வருடங்களாக உணவுக்கு பெயர்போன பகுதிகள் பாலைவனம் ஆக தொடங்கின. விளைவு இயற்கையில் மாற்றங்கக் ஏற்பட்டு பருவ மழை தவறின. விளைச்சல் பாதிக்கப்பட்டது.மக்கள் தொகை கட்டுக்கடங்கவில்லை உணவு தேவை அதிகரித்தது. தொழிற்சாலைகள் வந்தன நீர் மாசுபட்டது போதாததற்கு குளிர்பான ஆலைகள். வெளி நாட்டவர் தங்கள் நீரை சேமிக்க நம்மை பலிகடா ஆக்கினார்கள். நாம் முன்னேற அரசாங்கம் சில தவறான வழிகாட்டி நம்மை சோம்பேறி ஆக்கினார்கள். 20 நூற்றாண்டில் மக்கள் தொகை 1 கோடியை தாண்டிவிட மனிதனின்
நீரின் தேவை அதிகரிக்க ஆழ்துளை கிணறுகள் தோண்டி நீரை எடுப்பதிலேயே முனைப்புடன் இருந்தார்களே அன்றி எடுக்கும் நீரின் அளவு, நீரை மழை காலங்களில் சேமிக்க வேண்டும் என்ற யோசனை இல்லாமல் தான்தோன்றி தனமாக செயல்பட்டு இன்று இந்த நிலைக்கு நாம் தல்லப்பட்டோம்.
சரி நாமாவது சரியாக நடந்துகொள்கிறோமா ?
இல்லை.
நம்மில் 90 % இன்றளவும் நீரை பற்றி கவலை பட்டது இல்லை. இனி நாம் ஒவ்வொருவரும் நீரை பற்றி சிந்தித்து அடுத்த தலைமுறைக்கு இதை விட கீழே போகாமல் விட்டு செல்லவேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.
1.விவசாயத்தில் நீர் பயன்பாடு மற்றும் பாசன முறைகள்.
விவசாயத்தில் நீரின் பயன்பாடு அதிகமாக தேவைப்பட்ட நிலையில் மக்களை இன்றளவும் காத்து வருவது இந்த பாசன முறைகள்.
விஞ்ஞான வளர்ச்சி காரணமாக நாம் அதிக ஆழத்தில் இருந்து நீரை உறிஞ்சி எடுத்தாலும் அவற்றை சில பாசன முறைகள் மூலம் பயிர்களுக்கு கொடுப்பதால் இன்னும் இயங்கிக்கொண்டு இருக்கிறோம்.
நேரடி பாசனம் விட்டு நாம் தெளிப்பு நீர், சொட்டு நீர் என மற்ற வழிகளை கடைபிடிப்பதில் முனைப்புடன் இருப்பதால் இவளவு பஞ்சத்திலும் நாம் விவசாயம் செய்ய முடிகிறது.
2.சிக்கன முறைகள்.
மண்ணின் தன்மை, சீதோஷன நிலை, காற்றின் வேகம் இவற்றை எல்லாம் கனக்க்கிட்டு பயிர்களுக்கு தேவையான நீரை மட்டும் கொடுக்கும் அளவுக்கு நமது விஞ்ஞான வளர்ச்சி உதவுகிறது.
மேலும் ஒவ்வொரு பயிருக்கு ஒரு நாளைக்கு எவ்வளவு நீர் தேவை என்பதையும் நாம் துல்லியமாக கணக்கிடுகிறோம்.
பாசனம் அதிகாலையிலோ அல்லது மாலையிலோ செய்யும் போது நீர் சிக்கனம் ஆகிறது.
தெளிப்பு நீர் பாசனம், சொட்டு நீர் பாசனம், மூடாக்கு போன்ற சில யுக்திகளை கையாளும் போது நாம் பாசனத்தில் சிக்கனத்தை கடைபிடிக்கிறோம்.
3.மழை நீர் சேகரிப்பு முறைகள்.
மழை நீரை நாம் பல வழிகளில் சேமிக்கலாம்.
சிறு ஓடைகளில் குறுக்கே தடுப்பனைகள் கட்டி மழை நீரை சேமிக்கலாம்.
மேட்டு பகுதியில் இருந்த வரும் நீரை கிணற்றிற்கு முன்பாகவே ஒரு குழி எடுத்து அதில் தேக்கி வைப்பதன் மூலம் நிலத்தடி நீரை நாம் உயர்த்தலாம்.
பாய்ச்சும் நீர் ஆவியாவதை தடுப்பதன் மூலம் நீரை சேமிக்கலாம்.
தற்சமயம் நிறைய ஆழ்துளை கிணறுகள் நீரின்றி இருப்பதால் நீரை அதனுள் விட்டு நிலத்தடி நீரை உயர்தலாம்.
4.ஏதிர்காலத்தில் நீரின் பயன்பாடு.
எதிர்காலத்தில் நீரின் பயன்பாடு அதிகமாக இருந்தாலும் நாம் இயற்கையுடன் ஒன்றி பொங்கும் போது மழை பொழிவை அதிகரித்தும் விஞ்ஞான வளர்ச்சி மூலம் மிக குறைந்த நீரில் விவசாயம் செய்தும் நாம் நீரின் பயன்பாட்டை கணிசமாக குறைக்கலாம்.
நம்மில் ஒவ்வொருவரும் அக்கறையுடன் செயல்பட்டு மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் பட்சத்தில் நாம் நீரின் பயன்பாட்டை கட்டுக்குள் வைக்கலாம்.
5.நீர் மாசுபடுதலை தவிர்க்கும் முறைகள்.
ஒழுக்கம் உயிரினும் ஓம்பப்படும் என்று 1000 வருடங்களுக்கு முன் சொல்லி சென்று இருந்தாலும் நாம் ஒழுக்கம் தவறி நடப்பதால் 50% நீர் மாசுபடுகிறது.
என்னதான் மாசு கட்டுப்பாடு வாரியம் இருந்தாலும் நாம் ஒவ்வொருவரும் நீரை மாசுபடுத்தும் போது நம்மை போன்ற ஒரு மனிதனையும் பாதிக்கிறது என்ற எண்ணம் தோன்ற வேண்டும்.
தொழிற்சாலைகள் சரியான கட்டுப்பாடு முறைகளை பின்பற்ற வேண்டும்.
விவசாயிகள் பூச்சிக்கொல்லி, களை கொல்லி, ரசாயன உரங்களை தவிர்க்கவேண்டும். ஒவ்வொருவரும் தமது குடியிருப்புகளில் மாசு கட்டுப்பாடு விதிகளை கடைபிடிக்கவேண்டும்.
6.நிலத்தடி நீர் மட்டம் உயர்த்தும் முறைகள்.
மேலே சொன்ன மழை நீர் சேகரிப்பு முறைகளை சரிவர கடைபிடித்து வந்தால் நமது நிலத்தடி நீர் தானாக உயரும். மேலும் நாம் நீரை சிக்கனமாக பயன்படுத்த நிலத்தடி நீர் உயரும்.
7.நதிநீர் இணைப்பு சாத்தியமா?
சாத்தியமானால் அதன் நன்மை தீமைகளை பற்றி.
நாம் கடவுளோ விஞ்ஞானியோ அல்ல ஆனால் எமது உள்ளத்தில் தோன்றும் சில கருத்துக்கள்.
நதிநீர் இணைப்பு சாத்தியமே. அப்படி நடந்தால் நீரின் பகிறந்தளிப்பு சுலபமாக இருக்கும். ஆனால் இவர்க்கையை மீறி நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் எதிர்வினையை உண்டாக்கும். பருவநிலையில் ஒரு அபரிவித்தமான மாற்றங்கள் ஏற்பட்டால் என்ன செய்வது. என்ன நடக்கும் என்பது நமக்கு தெரிவதில்லை அதனால் சில செயல்கள் தவறாக முடிகிறது. அப்படி நடந்துவிட்டால் மழை பெய்யும் இடத்தில பெய்யாமல் போய்விட்டால் பிறகு என்ன செய்வது? பூகாம்பம் ஏற்படலாம். இப்படி எது வேண்டுமானாலும் நடக்கலாம் அதனால் அவரவர் பகுதிகளை செழுமையாக இருக்க அங்குள்ள நீரை சேமித்து மரங்கள் வளர்த்து மழை பொழிவை அதிகரிக்க செய்வதே நிரந்தர தீரவாக இருக்கும் என்பது எமது கருத்து. காற்றாலை நிறுவியதால் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் பருவ மழை இல்லாமல் பருவம் தவறி பேய்கிறது என்பது போல இதற்க்கு நிரூபிக்க நம்மிடம் ஏதும் ஆதாரம் இல்லை. ஆனால் காரணம் இதுவாக இருக்கக்கூடாதா என்பதுதான்.
8.மழை பொலிவு குறைந்ததற்கு காரணமும் அதை நிவர்த்தி செய்யும் வழிகளும்.
மழை பொலிவு குறைவுக்கு முக்கிய காரணம் பூமி வெப்பமையம் அடைவது.
மீண்டும் இதில் பாதகமாக தோன்றுவது விஞ்ஞான வளர்ச்சியே.
பூமி வெப்பமடைவதை நாம் தடுக்க தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
பூமி வெப்பம் அடைவதற்கு தகுந்த போதிய மரங்கள் நம்மிடம் இல்லை. அதனால் இப்போது உள்ளது போல் 3 மடங்கு மரங்க்ள் வளர்க்க வேண்டும். நீர் ஆதரங்களை கண்டறிந்து அவற்றிற்கு நீர் வரும் வழிகளை சரிசெய்யவேண்டும். மரங்களும் நீர் ஆதாரங்களும் நிறைய இருக்கும்போது காற்றில் ஈர பதம் அதிகரிக்கும். ஈரப்பதம் அதிகமானால் மேகங்கள் கவரப்பட்டு மழை பொழியும். வரப்பு ஓரங்களில் வெட்டி வேர் பயிரிடலாம். தண்ணீரை சுத்தப்படுத்துவதோடு, மண் அரிப்பை தடுக்கும், நிலத்தில் தண்ணீரை அதிகளவில் தேக்கிவைக்கும். மேலும் ஒராண்டுக்கும் மேல் அறுவடை செய்யும்போது வருமானம் கிடைக்கும். வரப்பு ஓரங்களில் களை முளைக்காதல் தடுக்கப்படுகிறது. சுத்தமான தண்ணீர் கிடைக்கின்றது.
சுற்றுச்சூழலியலாலர்களின் கருத்துப்படி மூன் றாம் உலகப்போர் தண்ணீருக்காகத்தான். இதைக்கருத்தில் கொண்டே வளர்ந்த நாடுகள் யாவும் தங்கள் நீர்ஆதாரங்களை பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டு தங்கள் தேவைகள் அனைத்தையும் இறக்குமதி செய்து கொள்கின்றன.
இதையறியாத மூன்றாம் தர நாடுகள் “”அன்னியச்செலாவணி” மோகத்தில் தங்கள் சொந்த நாட்டு மக்களைப் பாராமல் ஏற்றுமதி செய்து பற்றாக்குறையில் பரிதவிக்கிறது.
இயற்கை என்றும் இயற்கையாகவே இருக்க வேண்டும். அது இயல்பாக இருக்க வேண்டுமெனில் மண்ணும் மணலும் தேவை. ஆறு, ஓடை இந்த இரண்டையும் தயாரிக்கும் தொழிற்சாலையாக உள்ளது. தண்ணீர் பற்றாக்குறை அதிகமாக இருப்பதால் இந்த நூற்றாண்டிலேயே உற்பத்தி நின்று விடுமோ என்ற அச்சம் ஆராய்ச்சியாளர்களிடம் ஏற்பட்டதால், உலகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இன்றைய நாள் உலக மண் தினமாக அறிவிக்கப்பட்டது. பூமியின் மேற்பரப்பில் உள்ள பாறைகள் சிதைவு அடைந்து மணல், மண்ணாகவும் உருமாறுகிறது. மேற்பரப்பில் அமைந்துள்ள 4.8 சதவீத மலை,குன்று, ஆறுகளும் பூமியில் வாழும் உயிர்களுக்கு உணவையும், நீரையும் தருகின்றன. மொத்த பரப்பளவில் 5 சதவீத்த்திற்கும் குறைவான நிலப்பரப்பு நீர் சேமிப்பு கலனாகும். இவற்றிலிருந்து ஆழ்குழாய் & கிணறு மூலம் தண்ணீர் பெறும் நாம் எதிர்கால சந்ததியினர்களை கருத்தில் கொண்டு மேற்கண்ட 5% பரப்பளவை பாதுகாக்க வேண்டும். மண்ணில் உயிர் இருப்பதால் விதைத்த விதையை உயிர்ப்பிக்கிறது. பூமியில் 29% நிலமும், 71% பகுதியில் கடல் உள்ளதாலும் நிலமும், நீரும் அவசியம். அதில் உயிருள்ள மண்ணை காக்க இரசாயண உரத்தை தவிர்த்து, இயற்கை விவசாயத்தை ஊக்குவித்து நீர் மேலாண்மை மற்றும் மண்வளத்தை காக்க அனைவரும் கவனம் செலுத்த வேண்டும். மண்ணை உருவாக்குவதில் நீரின் பங்கு அதிகம். மண்ணில் 7000 வகை உள்ளதாக கண்டறியப்பட்டது. மண்ணின் தன்மையை தரத்திற்கேற்ப பாதுகாப்பது நாம் ஒவ்வொருவரின் கடமையாகும். நிலத்தையும் மண்ணையும் பாதுகாத்து நமது வாழ்வை மேம்படுத்துவோம்
மதுரையை சார்ந்த சாகுல் என்ற விவசாயி மேற் பார்வையில் இருக்கும் தோட்டத்தில் உள்ள அமைப்பை இப்போது பார்க்கலாம்,
12 ஏக்கர் தோப்பு அதில் இரண்டு போர்வெல். ஒரு 200 மீட்டர் தூரத்தில் 2 ஏக்கர் தோப்பு அதில் கிணறு. கிணற்றுக்கு ஒரு 500 அடி தூரத்தில் ஒரு பத்து ஏக்கர் பரப்பளவுக்கு மணல் மாபியாக்கள் தோண்டி வைத்திருக்கும் குளம். இதன் மூலம் தேங்கும் தண்ணீர் கிணற்றை வற்றாமல் பார்த்துக் கொள்கிறது, இந்த 12 ஏக்கர் தோப்பில் வெளி நிலங்களிலிருந்து வரும் மழைத் தண்ணீர் .நம் நிலத்தை விட்டு கடந்து போகாமலிருக்க தோப்பைச் சுற்றிலும் மண்ணை உயரப்படுத்தி வைத்துள்ளோம். மேலும் ஆள் இறங்கி குளிக்கும் அளவுக்கு ஒன்றரை ஆள் மட்டத்திற்கு ஒரு பக்க தடுப்புடன் கூடிய கரை ஏற்படுத்தி உள்ளோம். மழைக்காலங்களில் அது சிறு குளம் போல காட்சியளிக்கும். மா,வாழை,தென்னை,கொய்யா,பலா,மாதுளை,நெல்லி என தோப்பை விரிவுபடுத்தி வருகிறோம். தற்பொழுது ஊடு பயிறாக மிளகாய் மல்லி. உளுந்து, கானப்பயிறு,.தண்ணீர் பழம் போட்டுள்ளோம். 2016 டிசம்பர் மழை தாமதத்தால் உளுந்து கருகி ஓரளவு தான் முளைத்துள்ளது. மிளகாய் நாற்று நட்டது இந்த மழையின் காரணமாக…நம்பிக்கை கொடுக்கிறது. கடந்த வாரம் ஊண்றிய வாழைக் கட்டைகள்.மழையின் வருகையால் துளிர் விடுகின்றன. தண்ணீர் பற்றாக்குறை சற்று தணிந்துள்ளது மழையின் வருகையால். இன்னொரு மழை பெய்தால் எங்கள் குளம் நிரம்பி விடும். கிணறு மற்றும் போர் தண்ணீர் உதவி இறைவன் கருணை கொண்டு விவசாயம் வெற்றி பெறும் எனும் நம்பிக்கை உள்ளது
கேள்வி பதில்
1.எனக்கு ஒர் சந்தேகம் , பொதுவாக இன்றைய காலகட்டத்தில் மரம் வளர்த்தால் மழை பெய்யும் என்கிறார்கள்! ஆனால் , அதே நேரத்தில் கடலில் புயல் உண்டானால் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கிறது அப்படியானால் எதை அடிப்படையாக கொண்டு மழை பெய்கிறது குழப்பமாக இருக்கிறது.
பதில் : மரம் வளர்தல் எப்படி மழை வரும்? புவி வெப்பமையமதால் என்பது co2 மற்றும் வேறு சில gases அளவு அதிகரித்தல். மரங்களை அதிக படுத்துவதன் மூலம் புவி வெப்பம் குறையும். மரங்கள் co2 வை எடுத்து கொண்டு o2 வை கொடுக்கிறது. இதனால் வளிமண்டலத்தில் குளிர் காற்று சென்று மழை நமக்கு கிடைக்கிறது.
நீர் சுழற்சியின் காரணத்தினால் தான் மழை வருகிறது. நீர்வெப்பத்தினால் ஆவியாகி மேலே செல்லுகிறது. அதைக் குளிர்விக்க காற்று தேவை. அந்த வேலையைத்தான் மரங்கள் செய்கிறது. மேலும் மரங்கள் மண் அரிப்பையும் தடுக்கிறது. அடர்ந்த மரம் உள்ள இடங்களில் பூமியி ன் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது
2.பிரபுவின் பண்ணைக் குட்டையில், கடந்த வருடம் சித்திரையில் பெய்ந்த மழைக்கு முழுவதும் நிறம்பி பிறகு மழைக்காலங்களில் பெய்ந்த சிறு மழைகளை தக்க வைத்துக் கொண்டு தை மாதம் (8 மாதம்) வரை மானாவாரியாக பயிர்காளுக்கும் பழவகை மரங்களுக்கும் நீர் ஆதாரமாக உதவியதாம், இப்போது தண்ணீர் ஆவியாவதை சிறுது அளவு தடுக்க பசுமைக்குடில் வாங்கயுள்ளேன், இந்த மழைக்காலம் முடியும் முன் மழை வரும் என்ற நம்பிக்கையில். அதேப்போல வருகின்ற கோடைக்காலத்தல் பண்ணையை சுற்றி சிறு கால்வாய் போல வெட்டி, சிறு சிறு தடுப்புகள் அமைத்து அதில் மீதி ஆகும் அனைத்து தண்ணிரும் இந்த பண்ணைக்குட்டைக்கு வருமாரு செய்ய உள்ளோம்
பதில் : பசுமைக்குடில்க்கு பதில் 120GSMல தார்பாலின் சீட் பயன்படுத்தினால் நீர் ஆவியாவதை முழுவதுமாகவே தடுக்கலாம் என்றார் சேலத்தை சார்ந்த உழவன் பெரியசாமி.
அதற்க்கு பிரபு, நானும் தார்பாலின் சீட் முதலில் நினைத்தேன் ஆனால் இரவில் எப்போதாவது மழை வந்தால் பசுமைக்குடில் ஆக இந்தால் மழை நீர் குட்டைக்குல் விழும் தார்பாலின் சீட் நீரை தடுக்கும் என்று. ஆனால் இப்போது உங்களுக்கு பதில் எழுதும் போதே ஒரு சின்ன யோசனை தார்பாலின் சீட் போட்டு அனைத்து தண்ணீரும் ஒரு பக்கமாக செல்லுமாறு செய்து குட்டைக்குள் விழுமாறு செய்தால் மழை நீரும் சேரும் சேறும் ஆவியாவதையும் முழுவதுமாக தவிர்களாம் என்று தார்பாலின் சீட் யோசனைக்கு பெரியசாமிக்கு நன்றியை தெரிவித்து கொண்டார்
3.ஐயா உழவர்களே சில இடங்களில் நீர் இனிப்பாகவும், சில இடங்களில் உப்பாகவும், சில இடங்களில் எந்த சுவையும் இன்றி இருப்பதன் காரணம் என்ன? மேலும் நீரில் PH அளவு என்றால் என்ன? இதனால் விவசாயத்துக்கும் மனிதனுக்கும் ஏற்படும் நன்மை தீமைகள் குறித்தும் பதிவிடவும்.
பதில் : pH என்பது நீரில் உள்ள ஷைட்ரஜன் அயனியின் செறிவின் அளவீடு 1முதல் 6.5 வரை அமிலத்தன்மையும் 6.5 முதல் 7.5 வரை நல்ல நீராகவும் 7.5 முதல் 14 வரை காரத்தன்மையுடனும் இருக்கும் 2வதாக உள்ள நீரின் தன்மை விவசாத்திற்க்கும் குடிப்பதற்க்கும் ஏற்றதாகும் நீரின் சுவை மாறி இருப்பதற்க்கும் மண்ணில் உள்ள உப்பின் (கால்சியம்,மக்னீசியம்…) விகித வேறுபாடுகளே காரணம்
No comments:
Post a Comment