Tuesday, July 18, 2017

தீவனப்பயிர்களின் தன்மையும் பதப்படுத்தலும்



தீவனப்பயிர்

தீவனப்பயிர்களை கால்நடைகளுக்கு அளிக்கும் போது அதனுடைய சத்துக்களையும், நச்சுத்தன்மைகளையும் அறிந்து அளிக்க வேண்டும். மேலும் ஆண்டு முழுவதும் கால்நடைகளுக்குத் தேவையான பசுந்தீவனங்கள் கிடைப்பதில்லை. எனவே பருவங்களில் மிகுதியாக கிடைக்கின்ற தீவனப்பயிர்களைப் பக்குவப்படுத்தி சேமித்து வைத்தல் அவசியமாகின்றது.
தீவனப்பயிர் சத்துக்கள்
தீவனப்பயிர்களில் 90 சதம் நீர்ச்சத்து காணப்படுகின்றது. தீவனப்பயிர்களில் காணப்படும் சத்துக்களை புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து, தாதுஉப்புக்கள் என நான்கு முக்கிய வகைகளாகப் பிரிக்கலாம்; கால்நடைகளின் வளர்ச்சிக்கு புரதச்சத்து மிகவும் இன்றியமையாததாகும்.
பயறுவகைத் தீவனப்பயிர்களில் புரதச்சத்து அதிகமாகக் காணப்படுகின்றது. புல்வகை, தானியவகைத் தீவனப் பயிர்களை விட பயறுவகைத் தீவனப்பயிர்களில் கொழுப்புச்சத்து அதிக அளவில் காணப்படுகின்றது.
நார்ச்சத்து அதிகமாக அதிகமாக கால்நடைகளில் சொப்புத்திறன் குறைகின்றது. பயறுவகைத் தீவனப்பயிர்களைக் காட்டிலும் புல்வகை, தானியவகைத் தீவனப்பயிர்களில் நார்ச்சத்து அதிகமாகக் காணப்படுகின்றது.
தாது உப்புக்களான பாஸ்பரஸ், கால்சியம், மக்னீசியம், சிலிக்கா போன்றவை பயறு வகைத் தீவனப்பயிர்களில் அதிகமாகக் காணப்படுகின்றன. இவை கால்நடைகளின் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதவையாகும்.

நச்சுப்பொருள்கள்

எந்த ஒரு தீவனப்பயிரையும் அளவுக்கு அதிகமாக கால்நடைகள் உட்கொள்வதால் அந்தத் தீவனப்பயிரில் உள்ள நச்சுப்பொருட்களின் அளவும் அதிகமாகி கால்நடைகளுக்குத் தீங்கு விளைவிக்கின்றன.
தீவன நச்சுப் பொருள்களின் மேலாண்மை
• தீவனச்சோளத்தில் உள்ள ஹைட்ரஜன் சயனைடு நாற்றுப்பருவத்தில் அதிகமாவும், பயிர் வளர வளர அதன் அளவு குறைந்தும் வரும். எனவே சோளத்தை 45 நாள்களுக்கு மேல்தான் (பூ வந்த பின்பு) அறுவடை செய்து கால்நடைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
• சவுண்டலில் உள்ள மைமோசின் என்ற நச்சைக் குறைக்க, அறுவடை செய்தபின் உலரவைத்து கால்நடைகளுக்கு கொடுக்க வேண்டும். மேலும் கால்நடைகளின் தீவனத்தேவையில் சவுண்டலின் அளவு 25 சதவிகிதத்திற்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
• நைட்ரேட், ஆக்ஸிலிக் அமிலத்தை குறைக்க தழைச்சத்தை அளவாக பயன்படுத்தவேண்டும். புல், தானியப் பயிர்களை 75 சதவிகிதமும், பயறுவகைத் தீவனப்பயிர்களை 25 சதவிகிதமும் கலந்து கொடுப்பதால் நச்சுப் பொருள்களின் அளவைக் குறைப்பதுடன் கால்நடைகளுக்குத் தேவையான சமச்சீரான சத்துக்களின் தேவையையும் பூர்த்தி செய்யலாம்.
தீவனப்பயிர்களை சேமிக்கும் முறைகள் தீவனங்களைச் சேமித்து வைப்பதற்கு உலரவைத்து சேமித்தல், பசுமையாக சேமித்து வைத்தல் என இருவிதமான பக்குவ முறைகள் பழக்கத்தில் உள்ளன.

உலர் தீவனம்

தீவனப்பயிர்கள் இளமையாக இருக்கும்போதே, அதாவது பூவிடும் போது அதனை அறுத்து சூரிய ஒளியில் காயவைத்து உலர்ந்த புல்லாக மாற்றப்படுகின்றன. இப்படி உலர்த்தப்பட்ட புல் நல்ல மணத்துடன் சத்துப்பொருள்கள் குறையாமலும் உள்ள சிறந்ததொரு தீவனமாகும்.
உலர்த்தி காயவைக்கும்போது ஒரே சீராகப் பரப்பி காயவைத்தல் அவசியம். இப்படி காயவைத்த புல்லை மழையிலோ அல்லது ஈரம் படாமலே பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பக்குவப்படுத்திய புல்லில் ஈரப்பசை 15 முதல் 20 சதவீதத்திற்கு மேல் இருக்ககூடாது. ஏனெனில் இதனைப் போராக்கி குவியல் செய்யும் போது,ஈரம் அதிகம் இருப்பின் சூடேரி கெட்டுவிடும்.
தீவனச்சோளம், தீவன மக்காச்சோளம் பயிர்களை - 50 சதவிகிதம் பூக்கள் வந்த பின் அறுவடை செய்வது சிறந்தது. தீவன ஓட்ஸ் பயிர்களை - பால் பிடிக்கும் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும். குதிரைமசால், பெர்சீம் பயிர்களை - 50 சதவிகிதம் பூக்கள் வந்த பின் அறுவடை செய்வது நல்லது.
உலர் தீவனம் தயாரிக்கும் முறை
முதல் நாள் பனித்துளிகள் உலர்ந்தவுடன் மதியம் ஒரு மணி வரை அறுவடை செய்து வயலிலேயே உலர்த்தவும். பின்பு மாலை நான்கு மணிக்கு தீவனப்பயிரை திருப்பி விடவும் இரண்டாவது நாள் மீண்டும் இரண்டு முறை வயலிலேயே திருப்பி விடவும்.
மூன்றாவது நாள் மீண்டும் திருப்பி விட்டு உலரவைத்து சேமித்து வைத்துக் கொள்ளலாம். பயறுவகைத் தீவனப்பயிர்களில் இருந்து உலர் தீவனம் தயாரிக்கும் போது கவனம் தேவை. காரணம் இலைகள் உதிர்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
பசுமையாக சேமித்து வைத்தல்

ஊறுகாய்ப்புல்

காற்றுப்புகாத இடத்தில் பசுந்தீவனத்தை பல வேதியியல் மாற்றங்களுக்கு உட்படுத்திய பின் கிடைக்கும் தீவனமாகும். இதை தயாரிக்க துளையில்லாத தண்டைக் கொண்ட தீவனப்பயிர்கள் மிகவும் சிறந்தவை. ஊறுகாய்ப்புல் தயாரிக்க தீவனப்பயிர்களின் ஈரத்தன்மை அதிகமாகவே. மிகக்குறைந்த அளவே இருக்கு கூடாது. அதாவது ஈரத்தன்மை 70-75 சதவீதம் இருக்கும்போது அறுவடை செய்ய வேண்டும்.
பசுந்தீவனத்தை சைலேஜ் ஆக தயாரிக்க தரை மட்டத்திற்கு மேல் டவர் சைலோ மூலமாகவோ, தரைக்கும் கீழ் குழி வெட்டி அதன் மூலமாகவோ தயார் செய்யலாம்.
குழிகளில் சேமித்தல் தேவைக்கு அதிகமாக கிடைக்கின்ற பசுந்தீவனத்தைப் பதமாக பக்குவம் செய்து அதிலுள்ள சத்துப் பொருள்கள் வீணாகாமல் சேமித்து வைக்கின்ற முறைகளில் சைலேஜ் தயாரிப்பதும் ஒரு முறையாகும். இம்முறையினை பசுந்தீவனம் கிடைக்காத கோடைக்காலங்களில் பயன்படுத்தலாம். இம்முறையினால் பசுந்தீவனத்தில் மிகுதியான உணவுச்சத்துக்கள் நிலைத் திருக்கின்றன. இவ்வாறு பதப்படுத்தப்பட்ட தீவனம் ருசியாகவும் நன்கு சொர்க்கப் படுவதாகவும் அமைந்திருக்கும். நம் நாட்டில் பசுந்தீவனங்களைச் சேமித்து வைக்கும் இம்முறை அரசுப்பண்ணைகளில் கையாளப் படுகின்றது
மண்ணின் தன்மையைப் பொருத்து சுமார் 1.8 – 2 மீ ஆழத்திற்கும், 3 - 4.5 மீ அகலத்திற்கும் குழி தோண்ட வேண்டும், குழியின் நீளம் கிடைக்கும் பசுந்தீவனத்தின் அளவுக்கு ஏற்றவாறு ஒரு கன மீட்டர் பாகத்தில் சுமார் 500 - 600 கிலோ கிராம் பசுந்தீவனம் கொள்ளும் என்ற அடிப்படையில் அமைத்துக் கொள்ளலாம். இப்படி அமைக்கப்படுகின்ற குழி தண்ணீர் தேங்காத மேட்டுப்பாங்கான இடத்தில் இருக்க வேண்டும்.  குழியின் அடித்தளமும் பக்கங்களும் மண்ணின் தன்மையைப் பொருத்து சுமார் 1.8 – 2 மீ ஆழத்திற்கும், 3 - 4.5 மீ அகலத்திற்கும் குழி தோண்ட வேண்டும், குழியின் நீளம் கிடைக்கும் பசுந்தீவனத்தின் அளவுக்கு ஏற்றவாறு ஒரு கன மீட்டர் பாகத்தில் சுமார் 500 - 600 கிலோ கிராம் பசுந்தீவனம் கொள்ளும் என்ற அடிப்படையில் அமைத்துக் கொள்ளலாம். இப்படி அமைக்கப்படுகின்ற குழி தண்ணீர் தேங்காத மேட்டுப்பாங்கான இடத்தில் இருக்க வேண்டும். குழியின் அடித்தளமும் பக்கங்களும் இருக்க வேண்டும்.
பெரும்பாலும் எல்லா பசுந்தீவனங் களையும் சைலேஜ; ஆக தயாரிக்க முடியும். எனினும் தீவன மக்காச்சோளமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. சைலேஜ் தயாரிக்கப் பயன்படும் பசுந்தீவனம் அதிகமான சர்க்கரைப் பொருளையும், 25-30 சதவிகிதம் காய்ந்த பொருளையும் பெற்றிருத்தல் அவசியம்
அப்பொழுது தான் நல்ல தரமான சைலேஜ் தயாரிக்க முடியும். பசுந்தீவனத்தை சிறுசிறுதுண்டுகளாக நறுக்கிப் போடுவது நல்லது. இப்படி நறுக்கிப் போடுவதால், குழியினுள் காற்றிடங்கள் அடைக்கப்படுவதால் சத்துப் பொருள் வீணாவதை குறைக்கலாம். ஒவ்வொரு நறுக்கிய துண்டுகளையும் பரப்பிய பின்பு மனிதர்களைக் கொண்டோ கால்நடைகளைக் கொண்டோ நன்கு மிதித்து அமுக்க வேண்டும். சர்க்கரைச்சத்து பசுந்தீவனத்தில் குறைவாக இருக்குமானால் சுமார் 2-3 சதவிகிதம் வெல்லப்பாகினை நீரில் கரைத்து தெளிக்கலாம். இதனால் ஏற்படும் சில இரசாயனமாற்றத்தால் சில அமிலங்கள் தோன்றி தரமான ருசியுள்ள சைலேஜ் கிடைக்கிறது. தரை மட்டம் வரை நிரப்பி மாடுகளை விட்டு நன்கு மிதிக்க வேண்டும். பிறகு தரை மட்டத்திற்கு மேல் 1 - 1.5 மீ உயரம் சாய்வாக அடுக்கி மேல் பாகத்தை நான்கு பக்கமும் சாய்வுள்ளபடி செய்தல் வேண்டும். பின் உலர்ந்த தீவனம், வைக்கோல் முதலியவைகளை மேலே பரப்பி

ஊறுகாய் புல்லின் குணங்கள்

இளம்பழுப்பு நிறமாக இருக்கும். விரும்பத்தக்கப் பழ வாசனையுடன் 3-4 சதவிகிதம் கூடுதல் சுவையுடன் இருக்கும். பொலபொலவென்று ஒன்றோடு ஒன்று ஒட்டாத நிலையில் இருக்கும்.
கறவை மாடுகளுக்கு அன்றாடப் பசும்புல் தேவையின் நான்கில் ஒரு பங்கினை பதன புல்லாக அளித்தல் போதுமானது. தினமும் ஒரு மாடு ஐந்து லிட்டர் வரை கறப்பதற்கு உழவரின் வளரும் வேளாண்மை 45 டிசம்பர் 2014 பசுந்தீவனம் 25 கிலோவும், ஊறுகாய்புல் ஆறு கிலோவும் தேவைப்படுகின்றது. அதே போல் ஐந்து லிட்டரில் இருந்து எட்டு லிட்டர் வரை கறப்பதற்கு 30 கிலோ பசுந்தீவனமும், ஏழரைக் கிலோ ஊறுகாய்புல்லும் தேவை.
எட்டு லிட்டருக்கு மேல் கறப்பதற்கு 35 கிலோ பசுந்தீவனமும், 9 கிலோ ஊறுகாய்புல்லும் தேவைப்படும்.

டி.என்.ஏ.யு. சைலோ குதிர்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சைலோகுதிர் என்பது பாலிதின் பையை சணல்பைக்குள் இறுக்கமாக இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கும். அதன் மேற்பகுதி காற்று, நீர் புகாதவாறு அடைக்கப்பட்டிருக்கும். டி.என்.ஏ.யு. சைலோ குதிரின் திருத்தியமைக்கப்பட்ட வடிவமாக கிஸான் சைலோ (அதாவது சணல்பைக்கு பதிலாக பாலிதீன் பையை வைத்து) உருவாக்கப்பட்டிருக்கும்.

டி.என்.ஏ.யு. முறையில் ஊறுகாய்ப்புல் தயாரிக்கும் முறைகள்

முதலில் பசுந்தீவனத்தை வயலில அறுவடை செய்து 25-30 சதம் ஈரப்பதம் இருக்கும் அளவு உலர விட வேண்டும். பின்பு மிகச்சிறிய அளவுள்ள (1-3 செ.மீ) துண்டுகளாக வெட்ட வேண்டும். வெட்டிய தீவனத்தின் மீது உப்பு (ஒரு சதவிகிதம்), வெல்லம் (அ) கரும்பாலை கழிவு (ஒருசதவிகிதம்) பசுந்தீவன அளவில் ஒரு சதவிகிதம் கரைசலாக தயார் செய்து பசுந்தீவனத்தின் மீது தெளித்து நன்றாக கலக்க வேண்டும்.
இவ்வாறு தயார் செய்த பசுந்தீவனத்தை, அடுக்கடுக்காக (15-20 செ.மீ) நன்றாக அழுத்தி டி.என்.ஏ.யு. சைலோ குதிரில் போட வேண்டும். பின்பு கடைசியாக காற்று புகாவண்ணம் நன்றாக சீல் செய்து மூடி விட வேண்டும். 30- 35 நாள்களுக்குள் உறுகாய்ப்புல் தயாராகி விடும். இந்த உறுகாய்ப்புல்லை மூன்று, ஆறு மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.

No comments:

Post a Comment