Saturday, October 15, 2016

ஒரே நாளில் குடலை சுத்தம் செய்ய வேண்டுமா? இந்த ஜூஸை ஒரு டம்ளர் குடிங்க...

உடலில் குடல் முக்கிய செயல்பாடான டாக்ஸின்களை வெளியேற்றும் பணியை செய்தால், குடலில் நச்சுக்கள் தேங்கும் வாய்ப்புள்ளது. எனவே குடலை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவும் ஜூஸை அடிக்கடி பருக வேண்டும்.

The 3 Juice Colon Cleanse: How Apple, Ginger and Lemon Can Flush Toxins From Your Body


சரி, குடலை சுத்தம் செய்வது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். குடலை உணவுகள் மற்றும் பானங்களின் மூலம் தான் சுத்தம் செய்ய முடியும். எனவே தமிழ் போல்ட் ஸ்கை குடலை ஒரே நாளில் சுத்தம் செய்ய உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுத்துள்ளது. அதைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்

தேவையான பொருட்கள்: 
எலுமிச்சை சாறு - 2டேபிள் ஸ்பூன் 
கல் உப்பு - 1/2 டீஸ்பூன் 
இஞ்சி சாறு - 1 டீஸ்பூன் 
ஆப்பிள் சாறு - 1/2 கப் 
வெதுவெதுப்பான நீர் - 1/2 கப்

தயாரிக்கும் முறை: 
வெதுவெதுப்பான நீரில் இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, ஆப்பிள் சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து, அத்துடன் கல் உப்பு சேர்த்து மீண்டும் நன்கு கலக்க வேண்டும்.

உட்கொள்ளும் முறை  
ஆரம்பத்தில் இந்த பானத்தை ஒரு நாளில் மூன்று வேளை பருக வேண்டும். அதுவும் காலையில் உணவு உண்பதற்கு முன், மதியம் உணவு உண்பதற்கு முன் மற்றும் மாலையில் 6-7 மணியளவில் என மூன்று வேளை பருக வேண்டும்.

தண்ணீர் முக்கியமாக இந்த சிகிச்சையை மேற்கொள்ளும் போது, குறைந்தது 8 டம்ளர் நீரை தினமும் குடிக்க வேண்டும். அதுவும் காலை மற்றும் மதிய வேளையில் நீரைப் பருகுங்கள். இதனால் இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைத் தடுக்கலாம்.

பருகக்கூடாதவர்கள் 
சர்க்கரை நோயாளிகள் இந்த பானத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் ஆப்பிள் சாறில் சர்க்கரை அதிகம் இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் இந்த சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும்.

எவ்வளவு காலம்? 
குடலை சுத்தம் செய்யும் இந்த பானத்தை ஒரு நாள் அல்லது அதிகப்படியாக ஒரு வாரம் வரை பின்பற்றலாம். ஆனால் அதற்கு மேல் பின்பற்ற வேண்டாம்.

நன்மைகள் 
இந்த பானத்தைக் குடிப்பதால், உடலின் மெட்டபாலிசம் தூண்டப்படும், குடலியக்கம் மேம்பட்டு செரிமானம் ஊக்குவிக்கப்படும் மற்றும் உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேற்றப்பட்டு உடல் சுத்தமாகும். முக்கியமாக உடல் எடை குறையும்.

No comments:

Post a Comment