Monday, September 12, 2016

வாட்ஸ்ஆப் அப்டேட் : இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா.??

வாட்ஸ்ஆப் அப்டேட் : இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா.??

வாட்ஸ்ஆப் இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை, இதோடு பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் மட்டும் பயன்படுத்த மட்டுமே ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். 2009 ஆம் ஆண்டு வெளியான குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் உலகம் முழுக்க அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாகவும் இருக்கின்றது. இந்த ஆண்டின் துவக்கம் முதலே வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு அம்சங்களை வழங்கி வருகின்றது. இதோடு வாரம் ஒரு அப்டேட் என வாட்ஸ்ஆப் மிக வேகமாக புதிய அம்சங்களை வழங்கி வருகின்றது. அதிகம் பேர் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியில் புதுப் புது அப்டேட்களின் மூலம் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சீரான இடைவெளியில் செயலியினை அப்டேட் செய்யும் போது புதிய அம்சங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றை பயன்படுத்த முடியும்.

குரல் 
மிகப்பெரிய குறுந்தகவல்களை டைப் செய்வதைத் தவிர்த்து மைக் பட்டன் அழுத்தி உங்களது தகவலை குரல் மூலம் அனுப்ப முடியும்

குறுந்தகவல் 
க்ரூப் சாட் செய்யும் போது நீங்கள் அனுப்பிய குறுந்தகவலினை யார் யார் படித்தது என்பதை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்திப் பிடித்து இன்ஃபோ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் குறுந்தகவல் அனுப்பப்பட்ட நேரம் முதல் அனைத்துத் தகவல்களையும் பார்க்க முடியும்.



பதில் 
ஒரே நேரத்தில் அதிகப்படியான குறுந்தகவல்கள் வரும் போது குறிப்பிட்ட குறுந்தகவலுக்கு மட்டும் பதில் அளிக்க முடியும். இதற்குக் குறிப்பிட்ட குறுந்தகவலை அழுத்திப் பிடித்து 'reply' ஆப்ஷனை தேர்வு செய்து பதில் அளிக்கலாம்.



ஷார்கட் 
குறிப்பிட்டவரின் சாட்களை மட்டும் ஹோம் ஸ்கிரீனில் ஷார்ட்கட் போன்று செட் செய்ய முடியும். இதற்குக் குறிப்பிட்ட காண்டாக்ட் சாட் விண்டோ சென்று செட்டிங்ஸ் -- மோர் -- ஆட் ஷார்ட்கட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.



ஸ்டைலைஸ் 
உங்களது குறுந்தகவல்களுக்கு முன்பும் பின்னும் * பயன்படுத்தினால் குறிப்பிட்ட வார்த்தை போல்ட் செய்யப்படும், இதே போல் _ பயன்படுத்தினால் இட்டாலிக் ஆப்ஷனும் ~ பயன்படுத்தும் போது ஸ்ட்ரைக் கிடைக்கும்.



மியூட் 
அதிகப்படியான குறுந்தகவல்களால் தொந்தரவு ஏற்படும் போது குறிப்பிட்ட க்ரூப் சாட்களை மியூட் செய்ய முடியும். இதற்கு க்ரூப் பெயரை தேர்வு செய்து Mute ஆப்ஷனை கிளிக் செய்து எவ்வளவு நேரம் இந்த ஆப்ஷன் செயல்பட வேண்டும் என்பதை கிளிக் செய்யலாம்.



பிராட்காஸ்ட் 
ஒரே நேரத்தில் பலருக்கும் குறுந்தகவல் அனுப்ப பிராட்காஸ்ட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். இதற்கு சாட் ஸ்கிரீன் சென்று மெனு -- நியூ பிராட்காஸ்ட் ஆப்ஷன் கிளிக் செய்து காண்டாக்ட்களை தேர்வு செய்து ஒரே நேரத்தில் பலருக்கும் குறுந்தகவல் அனுப்ப முடியும்.



வழி 
உங்களது நண்பர்களுக்கு நீங்கள் இருக்கும் இடத்தை வாட்ஸஆப் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இதற்கு ஷேர் ஆப்ஷனை கிளிக் செய்து, விலாசத்தை அனுப்ப கோரு்ம ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் பயன்படுத்த உங்களது ஜிபிஎஸ் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.



வால்பேப்பர்
 உங்களது வாட்ஸ்ஆப் வால்பேப்பரை மாற்ற முடியும். இதற்கான ஆப்ஷன் செட்டிங்ஸ் சென்று செட் செய்ய வேண்டும்.


சாட் வரலாறு
 சில நாட்களுக்கு முன் நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை தேட முடியும். இதற்கு காண்டாக்ட் திரை சென்று ஆப்ஷன் -- சர்ச் -- நீங்கள் தேட விரும்பும் தகவலை டைப் செய்தால் போதும்

No comments:

Post a Comment