Thursday, September 22, 2016

இனி ஸ்விட்ச்டு ஆஃப் தேவையில்லை : வீட்டிலேயே மொபைல் ஜாமர் செய்வது எப்படி..?

மொபைல் போன்கள் நம் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த கருவியாக மாறிவிட்டது. நாம் எங்கு சென்றாலும் அதை எல்லா இடங்களிலும் கொண்டு செல்ல வேண்டிய, செயல்படுத்த வேண்டியபடி நமது தேவைகளுக்கான ஒரு எல்லைக்குள் நிர்ப்பந்தபட்டிருக்கிறோம். ஆனால், சில நேரங்களில் உங்கள் தொலைபேசி உங்களை எரிச்சலூட்ட தவறுவதில்லை குறிப்பாக நெனெகல் எங்கு அமைதியை கடைபிடிக்கிறீர்களோ, எதிர்பார்க்கிறீர்களோ அந்த இடங்களில் மொபைல் சத்தம் உங்கள் பொறுமையை சற்றே சோதித்து பார்க்கும். அதை தடுப்பதறகான ஒரு வழியாய் சமிக்ஞைகளை தடுக்கும் மொபைல் போன் ஜாமர் பயன்படுத்தலாம் என்பது ஒரு நல்ல யோசனை தான் இருப்பினும் அது சட்டவிரோத என்பதால் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மொபைல் போன் ஜாமர் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கிறோம் உடன் உங்கள் வீட்டில் உள்ள எளிய உபகரணங்கள் பயன்படுத்தி ஒரு மொபைல் ஜாமர் உருவாக்குவது எப்படி என்ற வழிமுறைகளையும் உங்களுக்கு வழங்குகிறோம்.

எப்படி வேலை செய்யும்..? 

ஒரு மொபைல் ஜாமரை கட்டமைக்கும் முன்பு அது எப்படி வேலை செய்யும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான கையடக்க தொலைபேசிகள் ஜிஎஸ்எம் 800 என்ற பெயர் கொண்ட தகவல் தொடர்பு 800மெகாஹெர்ட்ஸ் பேண்ட்டை தான் தொடர்பு கொள்ள பயன்படுத்திக் கொள்ளும் . எனவே, அடிப்படையில் உங்கள் மொபைல் போன் ஜாமர் கொண்டு அதிர்வெண் வரம்பில் (ஜிஎஸ்எம் 800 ) சுற்றிய சிக்னல்களை தடுக்க வேண்டும்.

என்ன உபகரணங்கள் தேவை.?

 45 மெகாஹெர்ட்ஸ் ப்ரிக்குவன்சி ரேன்ஜ் கொண்ட ஒரு க்ளாக் ஆக்சிலரேட்டர் ஆப்ரேட்டிங் (clock oscillator operating). இது மினி சரக் க்யூட் மிக்ஸரில் (mini-circuit mixer) அமைந்துள்ள லோக்கல் ஆக்சிலரேட்டர் போர்ட்-ல் (Local Oscillator port) நாய்ஸ் சோர்ஸ் (noise source) ஆக செயல்படும். மேலும் : உடன் ஒரு நல்ல ஆர்எப் டெஸ்டிங் சாதனம் (RF-testing equipment), ஒரு அலுமினியம் பாக்ஸ், பழைய போன்களில் காணப்படும் அல்ட்ரா-ஹை ப்ரிக்குவன்சி கனெக்டர்கள் (ultra-high frequency connectors), ஒரு 9-வோல்ட் பேட்டரி, மற்றும் ஒரு வோல்டேஜ் ரெகுலேட்டர் (voltage regulator) உருவாக்குவது எப்படி.? மேலே குறிப்பிடப்ட்டுள்ள அனைத்து உபகரணங்களையும் சேர்த்தவுடன், மொபைல் ஜமார் செய்வதை கீழ் அளிக்கப்பட்டுள்ள 7 எளிய வழிமுறைகளை பயன்படுத்தி செய்ய தொடங்கலாம்.

 வழிமுறை #01 

செய்யபப்டும் உபகரணங்களை பாதுக்கும் வெளி சட்டமாக அலுமினிய பெட்டியை பயன்படுத்தவும். 

வழிமுறை #02 

உள்ளீடு (இன்புட்) மற்றும் வெளியீடு (அவுட்புட்) மூலங்களாக தீவிர உயர் அதிர்வெண் இணைப்பிகளை (ultra-high frequency connectors) பயன்படுத்தவும். 

வழிமுறை #03 

இப்போது மினி சரக் க்யூட் மிக்ஸர் உடன் ஆர்எப் கனெக்ட்டர்களை இணைக்கவும். 

வழிமுறை #04

 இப்பொது 9 வோல்ட் பேட்டரி மற்றும் மின்னழுத்த சீராக்கி (வோல்டேஜ் ரெகுலேட்டர்) பயன்படுத்தி அனைத்து கூறுகளுக்கும் சக்தி வழங்க வேண்டும்.

 வழிமுறை #05

 அலுமினிய பாக்ஸ் உடல் மேல் ஒரு பவர் ஆன் /ஆஃப் பொத்தானை வைக்கவும்.

 வழிமுறை #06

 இறுதியாக, உள்ளீடு மற்றும் வெளியீடு ஆண்டெனாக்களை தீவிர உயர் அதிர்வெண் இணைப்பிகளில் இணைக்கவும்.

வழிமுறை #07 

இப்போது சிக்னல்களை ஜாம் செய்ய ஆன் பொத்தானை அழுத்தி சோதிக்கவும். கவனத்திற்கு: பயனர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் இதை நடைமுறைப்பபடுத்தி பார்க்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment