இயற்கை முறை சம்பங்கி மலர் சாகுபடி...
சம்பங்கி மலர் அணைத்து விதமான விழாக்கள் மற்றும் விசேஷங்களில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் இந்த மலருக்கு எப்பொழுதும் நல்ல வரவேற்பு உள்ளது. அதிக பணம் மற்றும் தின வருமானம் ஈட்டி தரும் மலர் பயிர்களில் முக்கிய பங்கு வகிப்பது சம்பங்கி மலர். விவசாயின் பொருளாதார நிலையை உயர்த்தும் பயிர்களில் இதுவும் ஒன்று.
மெக்சிகன் சிங்கிள், சிருங்கார், பிரஜ்வால், பியர்ள் டபுள், சுவாசினி, வைபவ் ஆகிய ரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை. பிரஜ்வால் ரகம் அதிக மகசூல் தரவல்லது. பூங்கொத்தில் மொட்டுகள் அதிகமாகவும் பூக்கள் நீளமாகவும் காணப்படும். பக்ககிளைப்புகள் அதிகமாக வருவதால் அதிகமான மகசூல் கிடைக்கும். சம்பங்கி மலர் சாகுபடிக்கு ஏற்ற காலம் ஜூன், ஜூலை மாதங்கள் ஆகும். மேலும், நல்ல வடிகால் வசதியுள்ள வண்டல் மண், 6.5 முதல் 7.5 வரை உள்ள கார அமிலத்தன்மை ஏற்றது.
சம்பங்கி நீண்டகாலப் பயிர், இதற்கு சத்துக்கள் அதிகம் தேவைப்படும். இயற்கை முறையில் பயிரிடும்பொழுது ஏக்கருக்கு பத்து டன் தொழுஉரம், வேப்பம் பிண்ணாக்கு ஐம்பதுகிலோஅடிஉரமாகஇடவேண்டும். மண்புழு உரம் இடுவதன் மூலமாக தேவையான சத்துகள் கணிசமாக மண்ணில் அதிகரிக்கும்.
நடவு செய்யும்பொழுது வரிசைக்கு வரிசை குறைந்தபட்சம் இரண்டு அடி முதல் அதிகபட்சம் இரண்டரை அடி இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். சிலர் இரு வரிசை முறையிலும் நடவு செய்கிறார்கள்.
நன்கு பூத்த மற்றும் குறைந்தது மூன்று வருடம் ஆன தோட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட கிழங்குகளை நடவு செய்ய வேண்டும். இதனால் வளமான செடிகளை பெறலாம். 25 முதல் 30 கிராம் எடையுள்ள கிழங்குகள் நடவுக்கு ஏற்றவை. ஏக்கருக்கு 44,800 கிழங்குகள் தேவைப்படும். 45 செ.மீ. இடைவெளியில் பார் பிடித்து, பாரின் சரிவுகளில் 20 செ.மீ. இடைவெளிகளில் இரண்டரை செ.மீ. ஆழத்தில் ஊன்ற வேண்டும். ஜூன், ஜூலை மாதங்களில் கிழங்கு ஊன்றுதல் நல்லது. கிழங்கு எடுத்து 30 நாள் கழித்து ஊன்ற வேண்டும்.
உயிர் உரங்கள் அதிகமாக பயன்படுத்துவதால் அதிக மகசூல் கிடைக்கும். VAM, ஹூமிக் அமிலம் கண்டிப்பாக பயன் படுத்த வேண்டும் இவை எல்லாம் மாதம் ஒரு முறை பயன்படுத்தினால் போதுமானது.
வாரம் ஒரு முறை மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல், மீன் அமிலம் கலந்து பாசன நீரில் விட வேண்டும். தேங்காய் பால் மோர் கரைசல், மேம்படுத்தப்பட்ட அமிர்தகரைசல் இவற்றை பத்து நாட்களுக்கு ஒரு முறை தெளிக்க வேண்டும் தேவைப்பட்டால் ஜிப்ரலிக் அமிலம் பயன்படுத்தலாம்.
தேவைப்படும்போது கை அல்லது இயந்திரம் மூலம் களை எடுக்க வேண்டும்.
அதிகாலையில் பூக்களை பறிப்பதன் மூலம் ஊட்டமான மலர்கள் பெறலாம். பூத்து முடித்த மலர் காம்புகளை உடனே அறுத்து எடுத்து வரிசைகள் இடையில் மூடாக்காக இடலாம்.
சம்பங்கியை அதிகமாக இரண்டு வகையான பூச்சிகள் தாக்கும். மொட்டு துளைப்பான் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள். இவற்றை கற்பூரகரைசல் தெளிப்பதன் மூலம் முழுமையாக கட்டுப்படுத்தலாம். ஐந்து நாள் இடைவெளியில் கற்பூரகரைசல் தொடர்ந்து அளித்து கொண்டே இருக்க வேண்டும் இதனால் பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை முற்றிலும் காக்கலாம்.
சம்பங்கியை அதிகமாக இரண்டு வகையான பூச்சிகள் தாக்கும். மொட்டு துளைப்பான் மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகள். இவற்றை கற்பூரகரைசல் தெளிப்பதன் மூலம் முழுமையாக கட்டுப்படுத்தலாம். ஐந்து நாள் இடைவெளியில் கற்பூரகரைசல் தொடர்ந்து அளித்து கொண்டே இருக்க வேண்டும் இதனால் பூச்சி தாக்குதலில் இருந்து பயிரை முற்றிலும் காக்கலாம்.
வரிசைகள் இடையில் சணப்பு விதைத்து, சிறிது உயரம் வளர்ந்த உடனே அறுத்து மூடாக்கு இட்டால் களைகள் கட்டுப்படும் மண் புழுக்கள் எண்ணிகையில் கணிசமாக உயரும் ஆனால் இது சற்று கடினமான வேலை. இவ்வாறு செய்வதால் மகசூல் கணிசமாக அதிகரிக்கும்.
சம்பங்கியில் பின்வரும் பூச்சித் தாக்குதல்கள் இருக்கும் என்று வேளாண் பல்கலை பட்டியலிடுகிறது.
- மொட்டு துளைப்பான், ஹெலிகோவெர்பா ஆர்மிஜெரா
- அசுவினி, ஏபிஸ் கிராசி் பிவோரா
- வெட்டுக்கிளி, அட்ரேக்டோமார்பா ரெனுலேட்டா
- சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே
- எலிகள்
- கூன்வண்டுகள், மில்லோசெரஸ் வகை
இவற்றைத் தடுப்பதற்கான வழிமுறைகள் பின்வருமாறு.
மொட்டு துளைப்பான், ஹெலிகோவெர்பா ஆர்மிஜெரா
சேதத்தின் அறிகுறி:
- இந்தப் பூச்சி மெதுவாக பூக்களைத் தாக்கும்.
- புழுக்கள் மொட்டுகள் மற்றும் பூக்களை துளைத்து செல்லும்.
- மொட்டுக்களில் உள்ளிருப்பவைகளை உண்ணும்.
கட்டுப்படுத்தும் முறை:
- தாக்கப்பட்ட மொட்டுகளை சேகரித்து அழித்துவிடவும்.
- விளக்குப்பொறி வைத்து அந்துப்பூச்சியை அழித்துவிடலாம்.
- மிதைல் பாரத்தியான் 0.05 சதவிதம் மருந்தினை முட்டைகள் தழைகளிலும், மொட்டுகளிலும் காணப்படும்பொழுது தெளிக்கவும்.
- வேப்பம் எண்ணெய் 0.5 சதவிதம் தெளித்தால் பூச்சிகளை விரட்டும்.
அசுவினி, ஏபிஸ் கிராசிவோரா
சேதத்தின் அறிகுறி:
- குஞ்சுகளும் பூச்சிகளும் மொட்டுகளிலும், இலைகளிலும் தாக்கும்
பூச்சியின் விபரம்:
- பூச்சி சிறியதாகவும், மென்மையான உடலைக் கொண்டும், கருப்பு நிறத்தில் தோன்றும்
கட்டுப்படுத்தும் முறை:
- மாலத்தியான் 0.1 சதவிதம் தாக்கப்பட்ட இலைகளில் தெளிக்கவும்
வெட்டுக்கிளி, அட்ரேக்டோமார்பா ரெனுலேட்டா
சேதத்தின் அறிகுறி:
- இளம் இலைகளையும் மொட்டுகளையும் உண்ணும்
- தாக்கப்பட்ட தாவரங்கள் அதன் நளினத்தை இழந்து காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- கார்பரில் 5 சதவிதம் போட்டால் தாக்கம் ஏற்படுத்துவதை தடுக்கலாம்
- முட்டைக்குவியல்களை வெளியேத் தெரியும்படி சுரண்டி இயற்கை எதிரிகள் உண்ணுவதற்கு வழிவகுக்கலாம்
- நாற்றங்காளில் வலை போட்டால் இதன் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம்
- குயினால்பாஸ் 0.05 சதவிதம் (அ) மாலத்தியான் 0.1 சதவிதம் (அ) கார்பரில் 0.2 சதவிதம் தெளித்தால் தாவரங்களை பாதுகாக்கலாம்
சிவப்பு சிலந்தி, டெட்ரானைக்கஸ் உர்டிகே
சேதத்தின் அறிகுறி:
- இலைகளின் அடிப்பகுதியில் சிலந்தியில் தோன்றும்
- இலைகளை கொத்துகளாக்கும் சிலந்திகள் சாறு உறிஞ்சுவதால் மஞ்சள் கோடுகள் இலைகளில் தோன்றும்
- தாக்கப்பட்ட இலைகள் மஞ்சளாகிவிடும்
பூச்சியின் விபரம்:
- சிவப்பு (அ) பழுப்பு நிறத்தில் சிலந்திகள் காணப்படும்
கட்டுப்படுத்தும் முறை:
- டைக்கோபால் 2மி.லி / லிட்டர் தெளித்தால் கட்டுப்படுத்தலாம்
எலிகள்
சேதத்தின் அறிகுறி:
- எலிகள் சம்பங்கி வயலில் குழிகள் தோண்டி சேதத்தை ஏற்படுத்தும்
கட்டுப்படுத்தும் முறை:
- வயலில் நச்சுப்பொறி வைத்தால் எலித் தொல்லையைக் கட்டுப்படுத்தலாம்
- வெளிச் சந்தையில் ரோபான் என்ற பெயரில் கிடைக்கும்
கூன்வண்டுகள், மில்லோசெரஸ் வகை
சேதத்தின் அறிகுறி:
- புழுக்கள் வேர்களை உண்ணும், கிழங்குகளில் துளையிட்டு சேதப்படுத்தும்
- வண்டுகள் இரவில் உண்பவை அவை இலைகளையும், தண்டுகளையும் உண்டு அழிக்கும்
- வண்டுகள் இலைகளின் ஓரத்தில் உண்ணும்
கட்டுப்படுத்தும் முறை:
- கார்பரில் 10 சதவிதம் மண்ணில் போட்டால் கட்டுப்படுத்தலாம்.
[சம்பங்கி பதிவுகள்] சம்பங்கி + விரிச்சிப் பூ…
பெரும்பாலான இயற்கை விவசாயிகள், தங்கள் விளைநிலங்களையே ஆராய்ச்சிக் களங்கள் என மாற்றி, பல்வேறு சோதனை முயற்சிகளை மேற்கொண்டு.. தங்களுக்கான தொழில்நுட்பங்களையும், புதிய யுக்திகளையும் கண்டுபிடிப்பது வழக்கம். திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ், அத்தகையோரில் ஒருவர்.
இவர், விரிச்சிப் பூ செடிகளுக்கிடையே, சோதனை முயற்சியாக சம்பங்கியை ஊடுபயிராக சாகுபடி செய்து, வெற்றிகரமாக மகசூல் எடுத்திருக்கிறார். சுந்தர்ராஜை சந்தித்தபோது.. மொத்தம் இரண்டரை ஏக்கர் நிலம் இருக்கு. செம்மண்ணும் மணலும் கலந்த பூமி. ஒன்றரை ஏக்கரில் சம்பங்கி, 40 சென்ட்டில் செண்டுமல்லி என்று சாகுபடி செய்கிறேன். மீதி இருக்கும் 60 சென்ட்டில்தான் விரிச்சியும் அதில் ஊடுபயிராக சம்பங்கியும் போட்டிருக்கிறேன்.
எனக்கு தெரிந்த வரைக்கும் விரிச்சியில், யாரும் சம்பங்கியை ஊடுபயிராக போட்டதில்லை. மூன்று வருடத்திற்கு முன் சோதனை முயற்சியாக… 20 சென்ட்டில் மட்டும் இரண்டையும் பயிர் செய்தேன். அதில் இரண்டரை வருடம் வரைக்கும் சம்பங்கியில் நல்ல மகசூல் கிடைத்தது. கிட்டத்தட்ட ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் சம்பங்கியிலேயே வருமானம். இப்போது விரிச்சியில் தினமும் பத்து கிலோ அளவிற்கு பூ கிடைக்கிறது. அது மூலமாக தினமும் 750 ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த இரண்டு பயிரும் ஒன்றுக்கொன்று துணையாக அமைந்து நல்ல மகசூல் கிடைப்பதால்…. அடுத்த 40 சென்ட்டிலும் இந்த இரண்டையுமே போட்டிருக்கிறேன்.
களைகளைக் கட்டுப்படுத்த பாலிதீன்!
சாகுபடி நிலத்தில்
சாகுபடி நிலத்தில்
- 4 சால் உழவு ஓட்டி,
- 40 சென்ட் நிலத்திற்கு 10 டன் மாட்டு எரு என்ற கணக்கில் போட்டு,
- மீண்டும் 2 சால் உழவு ஓட்ட வேண்டும்.
- இரண்டே முக்கால் அடி அகலம், முக்கால் அடி உயரம் என முக்கால் அடி இடைவெளியில், பார்களை அமைக்க வேண்டும்.
- பாரின் மீது 3 அடி அகலம் கொண்ட பாலிதீன் விரிப்புகளை விரித்து… அதன் மேல் 20 அடி இடைவெளிக்கு ஒரு சுழலும் திறப்பான் உள்ளவாறு தெளிப்பு நிர்ப் பாசனம் அமைக்க வேண்டும்.
- நடவு மற்றும் விதைப்பு செய்ய வேண்டிய இடங்களில் மட்டும் 3 இஞ்ச் குழாய் ஒன்றைப் பயன்படுத்தி பாலிதீன் விரிப்பில் துளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதனால், களைகள் வளர்வதேயில்லை.
விரிச்சி நடவுமுறை
பாரின் நடுவில் 8 அடி இடைவெளியில் விரிச்சி நாற்றுகளை நடவு செய்ய வேண்டும். பாரின் இரு ஓரங்களிலும் ஒன்றரையடி இடைவெளியில் சம்பங்கிக் கிழங்கை நடவு செய்ய வேண்டும். மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப பாசனம் செய்தால் போதுமானது. விதைத்த 15-ம் நாளிலிருந்து மாதம் ஒரு முறை 200 லிட்டர் அமுதக்கரைசலை வடிகட்டி தெளிப்பு நீர் வழியாகத் தர வேண்டும்.
வளர்ச்சி ஊக்கி மற்றும் பூச்சி தடுப்பு
30-ம் நாள் தலா ஒரு கிலோ அசோஸ்பைரில்லம், பாஸ்போ – பாக்டீரியா, சூடோமோனஸ் ஆகியவற்றை 50 லிட்டர் தண்ணீரில் கலந்துத் தெளிக்க வேண்டும்.
40 –ம் நாள் ஒரு கிலோ ட்ரைக்கோ டெர்மாவிரிடியை 50 கிலோ மாட்டு எருவில் கலந்து, செடிகளைச் சுற்றிலும் தூவ வேண்டும்.
50-ம் நாள் அரை லிட்டர் தேங்காய் பாலில் 3 லிட்டர் மோர், ஒரு கிலோ வெல்லம் கலந்து இரண்டு நாட்கள் வைத்திருந்து… அதோடு ஒரு கிலோ சூடோமோனஸ், 50 லிட்டர் தண்ணீர் கலந்து தெளிக்க வேண்டும். இதனால், செடியின் வளர்ச்சி வேகமெடுப்பதோடு, பூஞ்சணத் தாக்குதலும் கட்டுப்படும்.
65-ம் நாளில் இருந்து இரண்டரை லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டியை, 50 லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒரு முறை தெளித்து வர வேண்டும். சம்பங்கியில் 65-ம் நாளில் பூ பூக்கத் தொடங்கும்.
100 –ம் நாள், 200 கிலோ மண்புழு உரத்தை செடிகளின் தூரில் தூவ வேண்டும்.
120-ம் நாள் 100 கிலோ ஆமணக்குப் பிண்ணாக்கு, 30 கிலோ வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைக் கலந்து தூவ வேண்டும்.
130-ம் நாளில் இருந்து மாதம் ஒரு முறை ஒரு லிட்டர் பஞ்சகவ்யாவை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும்.
10 வருடம் வரை விரிச்சி!
ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு கால் கிலோ அளவிற்க்குத்தான் சம்பங்கி பூ கிடைக்கும். மகசூல் படிப்படியாக அதிகரித்து 90-ம் நாளுக்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு கிலோ வரைக்கும் பூ கிடைக்க ஆரம்பிக்கும். இரண்டரை வருடம் வரைக்கும் சம்பங்கியில் மகசூல் பார்க்கலாம்.
ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு கால் கிலோ அளவிற்க்குத்தான் சம்பங்கி பூ கிடைக்கும். மகசூல் படிப்படியாக அதிகரித்து 90-ம் நாளுக்கு மேல் ஒரு நாளைக்கு ஒரு கிலோ வரைக்கும் பூ கிடைக்க ஆரம்பிக்கும். இரண்டரை வருடம் வரைக்கும் சம்பங்கியில் மகசூல் பார்க்கலாம்.
அதற்குப் பிறகு விரிச்சிச் செடிகள் நாலரையடி உயரத்திற்கு வளர்ந்து படர ஆரம்பிக்கும். அப்போது நிழல் கட்டிடுவதால் சம்பங்கியில் மகசூல் நின்றுவிடும். அப்போது சம்பங்கிச் செடியை அடிக்கிழங்கோடு பிடுங்கி, இலை, குச்சிகளை வெட்டிவிட்டு விதைக்கிழங்காக விற்றுவிடலாம். விரிச்சி மூலமாக 10 வருடம் வரைக்கும் வருமானம் கிடைக்கும் என்றார்.
தொடர்புக்கு
சுந்தர்ராஜ், செல்போன்: 98432-47106
சுந்தர்ராஜ், செல்போன்: 98432-47106
விவசாயிகளின் வாழ்க்கையை மாற்றும் தெளிப்பு நீர் பாசனம்!
விவசாயத்தை விட்டு வெளியேறிவருபவர்களை மீண்டும் விவசாயத்துக்கு அழைத்துவரும் வகையில் தெளிப்புநீர் பாசனம் இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாலாறு, செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் ஒருகாலத்தில் வற்றாத ஜீவநதியாக திகழ்ந்தன. இதில் செய்யாறு, வேகவதி உள்ளிட்ட ஆறுகள் பாலாற்றில் கலந்து மாவட்டம் முழுவதும் பாசனத்தை பலப்படுத்தியது. ஒரு காலத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு அடுத்த இடத்தில் நெல் உற்பத்தியில் காஞ்சிபுரம் மாவட்டம் சிறந்து விளங்கியது.
- காலப்போக்கில் காஞ்சிபுரம் மாவட்டம் அந்த பெருமையை படிப்படியாக இழந்து வருகிறது. கடந்த 20 ஆண்டுகளாக பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் பெயர் அளவுக்குக்கூட தண்ணீரை பார்த்ததில்லை என்று விவசாயிகள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். இதனால் ஆற்றுப்பாசனம் முற்றிலுமாகத் தடைப்பட்டது.
- ஆற்றில் நீர்போக்கு தடைபட்டதால், நிலத்தடி நீரும் அதலபாதாளத்துக்குச் சென்றது. இதனால் கிணற்று பாசனமும் கேள்விக்குறியானது. இதில் மின்வெட்டு பிரச்னையும் விவசாயிகளை மிகுந்த கவலையில் ஆழ்த்தியது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் விவசாயத்தை விட்டு, விளைநிலங்களையும் விற்பனை செய்துவிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாள்தோறும் புதிதுபுதிதாக முளைத்துவரும் பன்னாட்டு நிறுனவங்களுக்கு அடிமையாகி வருகின்றனர்.
நுண்ணீர் பாசனம்: இந்த நிலைமை நாடு முழுவதும் இருப்பதாக நபார்டு உள்ளிட்ட வேளாண் சார்ந்த நிறுவனங்கள் மத்திய அரசுக்கு ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்தன. இதைத் தொடர்ந்து முழு மானியத்தில் நுண்ணீர் பாசனங்களான சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசனத்திட்டத்தை அறிமுகம் செய்தது.
இதை அந்தந்த மாநில அரசுகள் நிறைவேற்றும் என்று அறிவித்தது. இதைத் தொடர்ந்து கடந்த ஓராண்டுக்கு மேலாக இந்த நுண்ணீர் பாசனம் இருந்தாலும் அது பெரிய அளவில் விவசாயிகளைச் சென்றடையவில்லை. இப்போது நூண்ணீர் பாசனத் திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியப் பகுதியான புரிசை கிராமத்தில் நூண்ணீர் பாசனமான தெளிப்புநீர் பாசனத்தில் ஈடுபட்டு விவசாயி தனஞ்செயன், மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
இவர் தெளிப்பு நீர் பாசனம் மூலம் சம்பங்கி, ரோஜா, மல்லிகை, கத்தரி, வெண்டை உள்ளிட்ட தோட்டப்பயிர்களை கடந்த ஓராண்டுக்கும் மேலாக பயிரிட்டு வருகிறார். இதில் தண்ணீர் மிச்சப்படுத்தப்படுவதுடன், நல்ல மகசூல் கிடைப்பதாகவும், நல்ல விலை கிடைப்பதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியது: விவசாயத்துக்கு போதிய அளவு தண்ணீர் இல்லாததால், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயத்தை விட்டுவிட்டு, ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பன்னாட்டு நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிடலாம் என்று வேலை தேடிவந்தேன்.
அப்போது நுண்ணீர் பாசனம் குறித்து தகவல் அறிந்தேன். விவசாயத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டு தகவல்களைப் பெற்றேன். அதிகாரிகளும் எனக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனர். பூக்கள் மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட தோட்டப் பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.
அதன்படி எனது விளைநிலத்தைப் பார்த்த அதிகாரிகளின் முழு மானியத்தில் தெளிப்பு நீர் பாசன வசதியை ஏற்படுத்திக் கொடுத்தனர். வாய்கால் பாசனத்தின் மூலம் 1 ஏக்கருக்கு பாய்ச்சப்படும் நீரைக் கொண்டு, தெளிப்பு நீர் பாசனத்தின் மூலம் 6 ஏக்கர் வரை பாய்ச்ச முடிகிறது. இதனால் தண்ணீர் சேமிப்பு, மின்சாரம் சேமிப்பு, பணம் சேமிப்பு ஆகியன சாத்தியமாகின்றன.
பயிரிடும் காய்கறிளைப் சென்னை மாம்பலம் காய்கறிச்சந்தையில் இருந்து நேரடியாக வந்து பெற்றுச் செல்கின்றனர். நல்ல விலையும் கிடைக்கிறது. மேலும் காஞ்சிபுரம் மலர்கள் சந்தையில் இருந்து சம்பங்கி, மல்லி ஆகிய பூக்களை பெற்றுச் செல்கின்றனர்.
இதன்மூலம் தெளிப்புநீர் பாசனம் என் வாழ்க்கை பயணத்தையே மாற்றிவிட்டது என்றார். இவரைப் போலவே அதே கிராமத்தைச் சேர்ந்த முருகவேல், சிறுவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மகேஷ் ஆகியோர் தெளிப்புநீர் பாசனத்தில் பயனடைந்துள்ளனர்.
குண்டுமல்லியில் பூச்சித் தாக்குதலா? கட்டுப்படுத்த வேளாண் அதிகாரி யோசனை
தமிழகத்தின் தெற்கு மாவட்டங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டு வந்த குண்டுமல்லி தற்போது வடக்கு மாவட்டங்களிலும் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. குறிப்பாக சென்னையை ஒட்டியுள்ள காஞ்சிபுரம், திருவள்ளுர், வேலூர், திருவண்ணாமலை மாவட்டப் பகுதிகளில் அதிக அளவு பயிரிடப்படுகிறது.
இந்நிலையில் தற்போது குண்டுமல்லி செடிகளில் பூச்சித் தாக்குதல் அதிகம் உள்ளது. குறிப்பாக மொட்டுப் புழு, மலர் ஈ, இலைப்பிணைக்கும் புழு, சிலந்திப்பேன், இருபுள்ளி சிலந்திப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் உள்ளது.
மொட்டுப் புழு:
இது மொட்டைத் தாக்கக்கூடியது. இவை அல்லி இதழ்களைத் தாக்கி சேதம் விளைவிக்கும். தாக்கப்பட்ட மொட்டின் மேல் புழுவின் கழிவுகள் காணப்படும். மேலும் பூவின் நிறம் கத்தரிப்பூ போன்ற ஊதா நிறமாக மாறி நிறமிழந்து காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த பூக்காத பருவத்தில் செடி வளையத்தைச் சுற்றி இருக்கும் மண்ணை கிளறிவிட்டு கார்பரில் 10 சதவீத மருந்தை மண்ணில் தூவ வேண்டும். இதனால் மண்ணில் இருக்கும் கூட்டுப்புழுவை கட்டுபடுத்தலாம்.
இரவில் வரும் தாய் அந்துப்பூச்சியை கவர்வதற்காக ஒரு ஹெக்டேருக்கு 15 விளக்குப்பொறி வைக்க வேண்டும். ஆரம்ப நிலையில் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசலைத் தெளித்தும் கட்டுப்படுத்தலாம். புரோபிளோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. கலந்து மாலை நேரத்தில் தெளிக்க வேண்டும். அல்லது ஸ்பைனோசட் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.35 மி.லி. கலந்து தெளிக்க வேண்டும்.
மலர் ஈ:
மலர் ஈ மொட்டுகளின் காம்புப் பகுதியில் முட்டைகளை இடும். புழுவானது காம்புப் பகுதியின் உள்ளே நுழைந்து வீக்கத்தை ஏற்படுத்தும். இதனால் மலரின் வளர்ச்சி குன்றி காய்ந்து இளம் மொட்டுகளிலேயே உதிர்ந்து விடும்.
இதைக் கட்டுப்படுத்த நொவலூரான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 3 மி.லி. என்ற அளவில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும். ஆசிட்டாமிபீரிட் அல்லது இண்டக்சாகாளாப் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் 1.5 மி.லி. வீதம் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும்.
இலைபிணைக்கும் புழு:
இலைபிணைக்கும் புழுவின் தாய் அந்துப்பூச்சிகள் இளம் தளிர்களில் முட்டையிடும். வெளிவரும் இளம்புழுக்கள் இலையின் பச்சையத்தை சுரண்டி உண்ணும். இவை மழைக்காலத்தில் இலையின் அடிப் பாகத்தையும், வெயில் காலத்தில் குருத்துப் பகுதியையும் சேதப்படுத்தும்.
இதைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டம்பாஸ் அல்லது குயினால்பாஸ் அல்லது ஹோஸ்டேர்தியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும்.
இதைக் கட்டுப்படுத்த மோனோகுரோட்டம்பாஸ் அல்லது குயினால்பாஸ் அல்லது ஹோஸ்டேர்தியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. என்ற அளவில் கலந்து மாலையில் தெளிக்க வேண்டும்.
சிலந்திப்பேன்:
தாய் சிலந்திப்பேன் தாக்குதலால் இலை, குருத்து, பூமொட்டு போன்ற பாகங்களில் மெல்லிய கம்பளம் போன்ற வெண்ணிற (திட்டுக்கள்) ரோம வளர்ச்சித் தோன்றும். இதனால் ஒளிச்சேர்க்கை தடைபட்டு செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்படுவதோடு, பூக்களின் எண்ணிக்கை குறையும்.
இதைக் கட்டுப்படுத்த வெர்டிமெக் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். புரப்பார்ஹைட் அல்லது பெனாசாஃகுயின் மருந்தை 2 மி.லி. வீதம் மாலையில் தெளிக்க வேண்டும்.
இதைக் கட்டுப்படுத்த வெர்டிமெக் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மி.லி. என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். புரப்பார்ஹைட் அல்லது பெனாசாஃகுயின் மருந்தை 2 மி.லி. வீதம் மாலையில் தெளிக்க வேண்டும்.
இருபுள்ளி சிலந்திப் பூச்சி:
தாய் சிலந்திப்பூச்சிகள் வெண்மை மற்றும் மஞ்சள் நிறத்திட்டுக்களாக இலைப் பகுதிகளில் காணப்படும். தாக்கப்பட்ட இலைகள் மற்றும் பூ மொட்டுகள் நிறமிழந்து காணப்படும்.
இதைக் கட்டுப்படுத்த உரிய நேரத்தில் நீர்ப் பாய்ச்சுதல் வேண்டும். செடிகளுக்கு இடையே நல்ல காற்றோட்டம் இருக்க வேண்டும். அதிகம் பாதிக்கப்பட்ட இலைப் பகுதிகளை கவாத்து செய்து அப்புறப்படுத்த வேண்டும்.
அபாமெக்டின் அல்லது எஜ்úஸôடஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.5 மி.லி. என்ற அளவில் மாலையில் தெளிக்க வேண்டும். ஆஸôராக்டின் 50,000 பிபிஎம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஒரு மி.லி. வீதம் கலந்து தெளிக்கலாம்.
பெனாசாக்குபின் அல்லது ஹோஸ்டாதியான் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மி.லி. வீதம் கலந்து தெளிக்கலாம்.
தினமணி தகவல் : ஐ.ஜெபக்குமாரிஆனி, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர், அரக்கோணம்
மலர் சாகுபடிக்கு மானியம்
கடையநல்லூர் வட்டாரத்தில் மலர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுவதாக தோட்டக்கலை உதவி இயக்குநர் லி. அழகிரிசாமி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடையநல்லூர் வட்டாரத்தில் கேந்தி, பிச்சி, மல்லி, செவ்வந்தி, சம்பங்கி, அரளி போன்ற மலர்கள் விவசாயிகளால் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இம் மலர் சாகுபடியைச் செய்யும் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் மானியமாக ஒரு ஹெக்டேருக்கு ரூ.12,000 வரை வழங்கப்படுகிறது. இதர விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு ரூ.7,920 அளிக்கப்படும்.
எனவே, மானியத்தைப் பெற விரும்பும் விவசாயிகள்
- 10-1 சிட்டா நகல்,
- அடங்கல் படிவம்,
- குடும்ப அட்டை நகல்,
- 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
ஆகியவற்றுடன் தோட்டக்கலை உதவி இயக்குநரை அணுகலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
குண்டுமல்லி – இயற்கைமுறை சாகுபடி
இயற்கைமுறையில் சாகுபடிசெய்து ஏக்கருக்கு ரூ.2 லட்சம் வரை லாபம் பார்க்கிறார் சத்தியமங்கலம் (ஈரோடு மாவட்டம்) அடுத்துள்ள சிக்கிரசம் பாளையத்தைச் சேர்ந்த விவசாயி ஓதிச்சாமி.
ஆடி முதல் மார்கழி வரை குண்டுமல்லி நடவுக்கு ஏற்ற பட்டம். கோடை உழவு செய்து 15 டன் தொழு உரத்தை பரவலாக இறைத்துவிட்டு, மறுபடியும் 2 முறை ஏர் உழவு செய்து, 4 அடி இடைவெளியில் பார் முறை பாத்திஅமைத்து, அரை அடி அகலம், ஒரு அடி ஆழம் கொண்ட குழிகளை 4 அடி இடைவெளியில் எடுத்து (ஏக்கருக்கு 2500 குழிகள்) 5 மாத வயதான நாற்றுக்களை குழிக்கு இரண்டாக பதியம் போட்டு மூடி உடனே நீர்பாய்ச்ச வேண்டும். ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியிலிருந்துதான் தமிழகம் முழுவதும் மல்லி நாற்றுக்களை விவசாயிகள் வாங்கி வந்து நடுகிறார்கள் என்கிறார் விவசாயி. நாற்றின் விலை ஒரு ரூபாய்.
நடவு முடிந்ததும் வாரம் ஒரு முறை தண்ணீர் விடவேண்டும். சொட்டுநீர் பாசனம் அமைக்கலாம். முதல் 5 மாதத்திற்கு மாதம் ஒரு களை எடுக்க வேண்டும். 2 வது மற்றும் 5வது களைக்குப்பின் செடிக்கு 2 கிலோ வீதம் மண்புழு உரம் வைத்து பாசனம் செய்ய வேண்டும். தொடர்ந்து 2 மாதத்திற்கு ஒரு முறை 500 லிட்டர் கோ மூத்திரத்துடன் 50 கிலோ சாணத்தைக் கரைத்து பாசனத்தண்ணீரோடு கொடுக்கலாம். பூச்சி கட்டுப்பாட்டிற்கு மூலிகை பூச்சிவிரட்டி தெளிக்கலாம். நடவு செய்த 150ம் நாளில் பூ மொட்டுக்களை அறுவடை செய்யலாம்.
மேலும் விபரங்களுக்கு: ப.ஓதிச்சாமி, 97894 15898.