Friday, July 8, 2016

வாட்ஸ் அப் ஃபேஸ்புக்கிற்கு சவால் விடும் கூகுளின் புதிய ஆப்ஸ்!


புதிய ஆப்ஸ்
ன்று ஒவ்வொரு இளைஞனின் நேரத்தையும் விரல்களையும் ஆண்டு கொண்டிருப்பவை இரண்டே இரண்டு தான். ஒன்று ஃபேஸ்புக் மற்றொன்று வாட்ஸ் அப். ஸ்மார்ட் போன்களில் சிம்கார்டு கூட இல்லாமல் இருக்கும். ஆனால் அந்த இரு ஆப்களும் இல்லாமல் ஒரு போனைக் கூடப் பார்த்திடமுடியாது. பல காதல்கள் ஃபேஸ்புக்கில் தொடங்கி வாட்ஸ் அப் வழியே வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அவ்விரு ஆப்களுக்கும் போட்டியாக ‘ஆலோ’, ‘டுவோ’ என இரு ஆப்களை அறிமுகப்படுத்தியுள்ளது கூகுள் நிறுவனம்.
இன்றைய காலகட்டத்தில் ஃபேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ் அப் தான் அதிகம் பயன்பாட்டிலுள்ளது. போதாக்குறைக்கு மல்டிமீடியாவிலிருந்து பி.டி.எஃப் பைல்கள் வரை அனைத்தையும் அதிலேயே ஷேர் செய்யுமளவிற்கு அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் கூடிய விரைவில் ஜி-மெயிலே தேவையில்லாமல் போகும் நிலை ஏற்படும் என்று பேசப்பட்டது. அதேசமயம் ஃபேஸ்புக்கின் சிறப்புகளையும் நாம் ஒதுக்கிவிடமுடியாதே. உலகின் ஏதோ ஒரு மூலையில் உள்ளவரோடு நட்பு பாராட்ட உதவும் ஃபேஸ்புக்கில் இன்று சிறுவண்டுகள் கூட லைக்ஸ் தட்டிக்கொண்டிருக்கின்றன. இரண்டே ஆப்கள் –ஃபேஸ்புக், வாட்ஸ் அப் என வைத்துக்கொண்டு மொத்த டெக்னாலஜி உலகையும் ஆண்டுகொண்டிருக்கிறார் சூக்கர்பெர்க். ஒரு காலத்தில் உலகையே வியக்கவைத்துக் கொண்டிருந்த கூகுளால் சும்மா இருக்க முடியுமா?


 
அவர்களும் கூகுள் பிளஸ், ஹேங் அவுட், மெசெஞ்சர் என எத்தனையோ ஆப்களை அறிமுகப்படுத்தியும் அவ்விரண்டு ஆப்களையும் ஓவர்டேக் செய்ய முடியவில்லை. எனவே எப்படியேனும் ஆப் உலகத்தை ஆள வேண்டும் என்ற எண்ணத்தோடு தான் இப்போது இந்த இரு புது ஆப்கள். மெசேஜிங் ஆப்பான ‘ஆலோ’வில் ,தற்போது வாட்ஸ் அப்பில் அப்டேட் ஆகியிருக்கும் மெசேஜ்களை பாதுகாக்கும் ‘என்கிரிப்ஷன்’ வசதியோடு, நமக்கு வரும் மெசேஜ்களுக்கு தானாக ரிப்ளை செய்யும் ஆல்ஷன்களும் உள்ளன. இதன்மூலம் நாம் ரிப்ளை செய்ய டைப் செய்ய வேண்டிய அவசியம் கூட இருக்காதாம். யாரேனும் ‘ எப்படி இருக்கிறாய்?’ என்று கேட்டால், ‘நன்றாக இருக்கிறேன்’ என்ற பதில் ஒரு ஸ்மைலியோடு ஸ்கிரீனில் சஜெஷனாகக் காட்டும்.
மிக மோசமான சூழ்நிலையில் கூட துல்லியமான வீடியோ காலிங் செய்ய உதவுவதே டுவோ ஆப்பின் மிகப்பெரிய பலம். பிற ஆப்களைப் போல் கால் செய்து சில நேரம் கழித்து லோட் ஆகாமல், உடனுக்குடனேயே கால்கள் இணைக்கப்படுகின்றன. இதனால் வீடியோ காலிங் ஆப்களில் டுவோ ஒரு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு ஆப்களும் ஆன்டிராய்டு மற்றும் ஐ-ஓஸ் மொபைல் தளங்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக் அளவிற்கு வெற்றி பெரும் அளவிற்குப் பெரிதாக இந்த ஆப்களில் ஏதுமில்லை என்கிறார்கள் கேட்ஜெட் கில்லாடிகள். சூக்கர்பெர்க்கின் ஐடியாவைத் தாண்டி கூகுளால் ஏதேனும் சாதிக்க முடியுமா? ஏன் முடியாது? ஆளும் நாற்காலியில் அமர்ந்திருப்பது ஒரு தமிழனல்லவா. சின்னஞ்சிறு கிராமத்தில் பிறந்து சிலிகான் வேலியை ஆண்டு வரும் சுந்தரால் சாதிக்க முடியாமல் போய் விடுமா என்ன? கமான் சுந்தர் கமான்!

க்ளவ்ட் கம்ப்யூட்டிங் ~ சில தகவல்கள்

க்ளவ்ட் கம்ப்யூட்டிங்
கம்ப்யூட்டர் மற்றும் இணையப் பயன்பாட்டில் இப்போது மிக எளிதாகப் பேசப்பட்டு பயன்படுத்தப்படும் ஒரு பொருள் “க்ளவ்ட் கம்ப்யூட்டிங்” (Cloud Computing) என்பதாகும். ஆனால், ஒரு சிலரோ, இதனைத் தெரிந்து என்ன ஆகப் போகிறது? இது எதற்கு? நம் கட்டுப்பாட்டில் இல்லாத டேட்டா நமக்கு எப்போதும் கிடைக்குமா? என்றெல்லாம் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். மேலும், இதன் தொடர்பாக hybrid cloud மற்றும் SaaS என்றெல்லாம் சொல்லப்படுகிறதே? அவை எவற்றைக் குறிக்கின்றன? என்ற கேள்விகளும் எழுகின்றன. அவை குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
க்ளவ்ட் அறிமுகம்: Cloud computing என்பது 21 ஆம் நூற்றாண்டின் பிரபலமான தகவல் தொழில் நுட்ப சொற்றொடராக இருந்தாலும், 1950 ஆம் ஆண்டிலேயே, இதன் வேர்கள் தென்பட்டன. மெயின் பிரேம் கம்ப்யூட்டர்களும், அதனுடன் இணைக்கப்பட்ட டெர்மினல்களையும் சற்று எண்ணிப் பார்த்தால், அன்றே க்ளவ்ட் கம்ப்யூட்டிங் தொடங்கிவிட்டதனை அறியலாம். மெயின்பிரேம் சர்வருக்கும், அதன் டெர்மினல்களுக்குமான இன்றைய தொலைவு தான் மிக அதிகமாகி உள்ளது.
க்ளவ்ட் என்பது பல்வேறு கம்ப்யூட்டர்கள், மொத்தமாக இணைக்கப்பட்டு ஒரே ஒரு சிஸ்டத்தால் இயக்கப்படுவதாகும். க்ளவ்ட் என்பது எப்போதும் ஒன்றுக்கு மேற்பட்ட சேவைகளை (data storage, content delivery, or applications) வழங்கும் சாதனமாகும். இவற்றை ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் கம்ப்யூட்டிங் தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம். அதாவது, பயனாளர்கள் இந்த சேவைகளைப் பயன்படுத்துகையில், எந்தவிதமான செட் அப் பணிகளையோ அல்லது க்ளவ்ட் சாதனத்தினை பராமரிக்கும் பணியினையோ மேற்கொள்ள வேண்டியதில்லை.


சரி, க்ளவ்ட் என்று ஏன் இதற்குப் பெயரிட்டனர்? யாருக்கும் இதன் காரணம் உறுதியாகத் தெரியவில்லை. பல கம்ப்யூட்டர்கள் இணைப்பினை தூரத்திலிருந்து பார்க்கும் போது, அவை அனைத்தும் சேர்ந்து ஒரு மேகக் கூட்டமாகத் தானே தெரியும். கூட்டமாகப் பறக்கும் வெட்டுக் கிளிகள் அல்லது வெளவால்களை எண்ணிப் பார்த்தால், இது புரியும். அதே கற்பனையைக் கம்ப்யூட்டர்களுக்கும் செலுத்திப் பார்த்தால், நாம் ஏன் இதனை க்ளவ்ட் என அழைக்கிறோம் என்பதுவும் புரியும்.
க்ளவ்ட் சாதனங்களின் அமைப்பினை இரு பெரும்பிரிவுகளாகப் பிரிக்கலாம். 1. ஆயத்தப்படுத்தல் (Deployment) 2. சேவை தருதல் (service).
முதல் வகையில் இயங்கும் க்ளவ்ட் அமைப்பினை இன்னும் சில பிரிவுகளில் வகைப்படுத்தலாம். அவை, 1. தன் பணிக்கான க்ளவ்ட் (Private cloud) இது ஒரு தனி நபர் அல்லது நிறுவனத்திற்கு மட்டும் பயன்படும் வகையில் அமைக்கப்படுவதாகும். இதனை இவர்கள் இருக்கும் இடத்தில் தான் அமைக்கப்பட வேண்டும் என்பதில்லை. தூர இடங்களிலும் வைத்து இயக்கலாம். இந்த க்ளவ்ட் சேவையை, பயன்படுத்துபவர் அல்லது நிறுவனமே இயக்கலாம்; அல்லது இவர் சாராத ஒருவர் அல்லது நிறுவனம், இவர்களுக்காக அமைத்து இயக்கலாம்.
பொதுவான க்ளவ்ட்: பொது க்ளவ்ட் சேவை பொதுவான எவரும் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படுகின்றன. முதலில் சொல்லப்பட்ட தனி நபர் க்ளவ்ட் அமைப்பிற்கும், இதற்கும் பெரிய அளவில் வேறுபாடு இல்லை. பயனாளர்கள் யார் என்பதில் மட்டுமே வேறுபாடு உண்டு.
கலப்பான க்ளவ்ட் இயக்கம் (Hybrid Cloud): ஒரு க்ளவ்ட் தனிநபர் மற்றும் பொதுவான எவருக்கும் என இரண்டு வகையினருக்கும் தன் சேவையினை வழங்குகையில் அது Hybrid Cloud என அழைக்கப்படுகிறது. இரண்டு க்ளவ்ட் சர்வர்கள் இணைந்து சேவைகளை, இரண்டு வகையினருக்கும் வழங்க முன்வரும்போதும், இதே பெயரில் அது அழைக்கப்படுகிறது. ஒருவர் தனக்கென ஒரு க்ளவ்ட் சர்வரை அமைத்துப் பயன்படுத்திக் கொண்டு, மற்றவர்களையும் பயன்படுத்த அனுமதித்தால், அது Hybrid Cloud என அழைக்கப்படும்.
சமுதாய க்ளவ்ட் (Community Cloud): தனிப்பட்ட க்ளவ்ட் சர்வர் ஒன்று, பல நிறுவனங்களால், பல தரப்பட்டவர்களால் பயன்படுத்தப்படும்போது, அது Community Cloud என அழைக்கப்படுகிறது. வேறு கோணத்தில் பார்க்கையில், ப்ரைவேட் க்ளவ்ட் பொதுவான ஒன்றாகவும் சேவை தரும் ஒரு அமைப்பாகக் கருதப்படும்.
சேவைகள் என்ற வகையில் இவை மூன்று வகையாகப் பிரிக்கப்படுகின்றன. தற்போது க்ளவ்ட் சேவைப் பணிகள் பலவாறாக மேற்கொள்ளப்படுவதால், இந்த பிரிவுகளும் பல வகைகளாகக் காட்டப்படுகின்றன. அவை, அடிப்படைக் கட்டமைப்பு சேவை (Infrastructure- as -a -Service (IaaS) ஒரு க்ளவ்ட் சேவையில் சர்வர் ஹார்ட்வேர், நெட்வொர்க்கிங் அலைவரிசை அல்லது லோட் பேலன்சிங் போன்ற சேவைகள் வழங்கப்படுகையில், அது அடிப்படைக் கட்டமைப்பு சேவை என அழைக்கப்படுகிறது. அமேஸான் நிறுவனம் வழங்கும் இணைய தள சேவை இதற்கான ஓர் எடுத்துக் காட்டு.
சாப்ட்வேர் கட்டமைப்பு சேவை (PaaS -= Platform- as -a -Service): ஒரு க்ளவ்ட் சர்வர், அதன் பயனாளர்களுக்கு சாப்ட்வேர் தொகுப்புகளை உருவாக்குவதற்குத் தேவையான சூழ்நிலையை, தேவையான மென்பொருட்களைத் தந்தால், அது ஓர் மேடைக் கட்டமைப்பினைத் தருவதற்கு ஒப்பாகும். இதனால், மென்பொருட்களைத் தயார் செய்பவர், அதற்குத் தேவையான ஹார்ட்வேர் மற்றும் சாப்ட்வேர் அமைப்புகளை வாங்கி, தங்களது கம்ப்யூட்டர்களில் அமைத்துப் பயன்படுத்த வேண்டியதில்லை. இதற்கான ஓர் எடுத்துக் காட்டு Force.com
சாப்ட்வேர் சேவை (Software-as-a-Service (SaaS)) அப்ளிகேஷன்கள் மற்றும் புரோகிராம்களைத் தன்னகத்தே கொண்டு, அவற்றைத் தேவைப்படும் பயனாளர்கள் அணுகிப் பெற்றுப் பயன்படுத்தும் சேவையை வழங்கும் க்ளவ்ட் சேவை இந்தப் பிரிவில் வரும். Gmail, Basecamp, and Netflix ஆகியவை இதற்கான எடுத்துக் காட்டுகளாகும்.
க்ளவ்ட் கம்ப்யூட்டிங் பணிகளின் எதிர்காலம்: மேலே சொல்லப்பட்ட க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வசதிகள் மற்றும் எடுத்துக் காட்டுக்களையும் பார்க்கையில், வரும் எதிர்காலத்தில் இவை இல்லாமல் இயங்க முடியாது என்பது உறுதி. மொபைல் அப்ளிகேஷன்கள், தங்கள் பேக் அப் பைல்களை, க்ளவ்ட் ஸ்டோரேஜில் தான் வைத்துப் பாதுகாக்கின்றன. ட்ராப் பாக்ஸ், கூகுள் ட்ரைவ் மற்றும் இது போன்ற க்ளவ்ட் சர்வர்கள் இதற்கு எடுத்துக் காட்டுகளாகும். அமேஸான், யு ட்யூப் போன்றவை க்ளவ்ட் கட்டமைப்பு சேவைக்கு அடையாளங்களாகும். க்ளவ்ட் இல்லை என்றால், இன்றைக்கு நாம் அனைவரும் பயன்படுத்தும் பாதிக்கு மேற்பட்ட இணைய அப்ளிகேஷன்களை இழக்க வேண்டியதிருக்கும். அப்படியானால், இவற்றின் எதிர்காலப் பணிகளும், அவற்றிற்கான இடங்களும் எப்படி இருக்கும்?
இதில் உள்ள அபாயம் என்ன? க்ளவ்ட் ஸ்டோரேஜ் பயனாளர் அனைவருக்கும், அதில் அவர்கள் சேவ் செய்துள்ள டேட்டாவிற்கு அணுக்கத்தினைத் தருகிறது. பயனாளர்களின் கம்ப்யூட்டர்களின் இயக்கம் முடங்கிப் போனாலும், வேறு கம்ப்யூட்டர்கள் அல்லது பொதுவான கம்ப்யூட்டர் மையங்களில் இருந்து கூட இவற்றை இயக்கலாம். ஆனால், நாம் க்ளவ்ட் ஸ்டோரேஜ் சேவையைத் தரும் நிறுவனத்தை நம்பி, அனைத்து டேட்டாக்களையும் தருகிறோம். இது என்றைக்கும் அபாயம் தான் என்று பலரும் கருதுகின்றனர். இந்த அச்சத்தைப் போக்கும் வகையில், க்ளவ்ட் சர்வர்கள் புதிய தொழில் நுட்பத்தினை உருவாக்க வேண்டும். அப்போதுதான், வாடிக்கையாளர்கள் நம்பிக்கையுடன் க்ளவ்ட் கம்ப்யூட்டிங் முறையைப் பின்பற்றுவார்கள்.
அனைத்துமே இணையமாய்: இனி வருங்காலம், நமக்கு அனைத்துமே இணையம் தான் என்ற சூழ்நிலையை உருவாக்கும். நாம் பயன்படுத்தும் அனைத்து சாதனங்களும், கம்ப்யூட்டர் மட்டுமின்றி, டி.வி., மியூசிக் பாக்ஸ், மைக்ரோ ஓவன் அடுப்பு, ஏ.சி. மின் சாதனங்கள் என அனைத்தும் க்ளவ்ட் சர்வர்களுடன் இணைக்கப்பட்டு, நாம் எங்கு சென்றாலும், அவற்றை இயக்கும் வகையிலான ஒரு சூழ்நிலை கிடைத்தால் எப்படி இருக்கும்? எதிர்காலம் இப்படித்தான் இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. க்ளவ்ட் சர்வர்கள் நம்மைச் சுற்றி அமைக்கப்பட்டு, அவற்றிலிருந்து நாம் சேவைகளை மேற்கொள்வோம். இன்றைய தொலைபேசி இணைப்பகங்களைப் போல, நம் அருகிலேயே அவை அமைக்கப்படலாம். அதன் மூலம் நம் செயல்பாடுகள் அனைத்தும் டிஜிட்டல் மயமாகலாம். வாழ்க்கை தரம் உயரலாம்.

WHATSAPP வீடியோ கால் செய்வது எப்படி? - முழுவிவரம்.

சென்ற 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் WhatsApp Voice கால் வசதியை அறிமுகம் செய்தது. இன்று உலகம் முழுவதும் இலவசமாக வாய்ஸ் கால் பேசப்படுகிறது. இன்றைய பதிவில் WhatsApp மூலம் எப்படி வீடியோ கால் பேசலாம் என்பதை பார்ப்போம்.

இந்த வீடியோ கால் பேசும் வசதி இப்போது புதிய WhatsApp உள்ளிணைக்கப்பட்ட பதிப்புகள் வெளிவர தொடங்கினாலும் WhatsApp இன்னும் டெஸ்ட்டில்தான் வைத்து உள்ளது. ஆனால் ஒரு மிக சிறிய ஆப் மூலம் உங்கள் WhatsApp ஆப்ல உள்ள நண்பர்களுடன் HD வீடியோ தரத்தில் வீடியோ கால் பேச முடியும். இதற்கு இந்த ஆப் இருவரிடமும் இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
 Booyah Video Chat for WhatsApp V.1.0.11 என்ற சிறிய ஆப் டவுன்லோட் செய்துக்கொள்ளுங்கள்.


Enlarge this image


டவுன்லோட் ஆனதும் Booyah ஆப் திறந்து Start Now பட்டனை அழுத்துங்கள். அடுத்து வரும் பக்கத்தில் Add Friend This Chat என்பதில் கிளிக் செய்து உங்கள் நெருங்கிய நண்பர்களை தேந்தெடுங்கள். உங்கள் நண்பர் இந்த Booyah பயன்படுத்தினால் மட்டுமே இதில் இணைக்க முடியும் என்பதை மறக்காதீர்கள். எனவே இந்த பதிவை உங்கள் WhatsApp நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.

இதில் முக்கிய வசதிகள்.

1. நண்பர் ஒருவருடன் கால் செய்ய முடியும்.

2. நண்பர்கள் குழுவாக ஒரே நேரத்தில் WhatsApp வீடியோ கால் செய்ய முடியும். ஒரே நேரத்தில் 12 நண்பர்களுடன் முகத்தை பார்த்து உரையாட முடியும்.

3. இதில் செக்யூரிட்டி அதிகம் எனவே பாதுகாப்பாக பேச முடியும்.

அப்ளிகேஷன் டவுன்லோட் செய்யும் முன் 
ஒரு முறை ஷேர் செய்து விடுங்கள்.

ஆண்ட்ராய்டு மொபலில் உள்ள இரகசிய குறியீடுகள்

இந்த பதிவு நான், பார்த்த, படித்த ,தெரிந்த விஷயங்கள் பகிர்ந்து கொள்ளவே.இதனால் ஏற்படும் இழப்பிற்கு நானே,இத்தளமொ எந்தவகையிலும் பொறுப்பாகாது. தங்கள் சொந்த அறிவின் பயனால் முயர்ச்சிக்கவும் .இது சாம்சங் கேலக்ஸி i7500 மாடலை அடிப்படையாக கொண்டு வடிவமைக்க பட்டது. பிற ஆண்ராய்டு போனிலும் முயற்சித்து பார்க்கவும்.





 *#*#4636#*#* 

 இந்த குறியீட்டை உங்கள் தொலைபேசி மற்றும் பேட்டரி பற்றி சில சுவாரசியமான தகவல்களை பெற பயன்படுத்தலாம். 


மொபலின் தகவல் நிலை

பேட்டரியின் தகவல் & வரலாறு

பயன்பாடு தகவல்கள்


*#*#7780#*#*


இந்த கோடிங் மொபைலை ரீசெட் செய்ய பயன்படுகிறது.இதன் மூலம் நீங்கள் கூகிள் கணக்கில் செய்ய பட்ட தரவுகளை நீக்கும்.

இதன் செயல்பாடு மொபைல் சாப்ட் வேரையோ , மெம்மரி கார்டில் சேகரிக்க பட்ட தகவல்களை நீக்காது.

பி.கு;

இந்த கோடிங்கை உபயோகிக்கும் ” மொபைலை ரீசெட்” செய்யவா என்று மெனுவரும்,தேவையில்லை என்று நீங்கள் கருதினால் கேன்சல் செய்து திரும்பலாம்.


*2767*3855#


இது தொழிற்சாலை மொபைல் அமைப்புக்கு கொண்டுவர கொடுக்க பட்ட கோடிங் ஆகும்.இதனால் தகவல்கள் அனைத்தும் அழிக்க பட்டு புதிதாக மொபைல் வாங்கும்போது உள்ளதுமாறி கொண்டு வரும்.


பி.கு;


நீங்கள் இந்த குறியீட்டை கொடுக்க ஒருமுறை யோசிக்கவும், நீங்கள் தொலைபேசியில் இருந்து பேட்டரி நீக்கும் வரை நடவடிக்கையை ரத்து செய்ய எந்த வழியும் இல்லை. So think twice before giving this code. எனவே இந்த குறியீடு கொடுக்கும் முன் இருமுறை யோசிக்கவும்.



*#*#34971539#*#*


இந்த குறியீடு போன் கேமரா பற்றி தகவல்களை பெற பயன்படுத்த படுகிறது.

Update camera firmware (இந்த தேர்வை முயர்ச்சிக வேண்டாம்.

Update camera firmware in SD card

Get camera firmware version

Get firmware update count


*#*#273283*255*663282*#*#*


இந்த குறியீடு நமது போனில் உள்ள பாட்டு,புகைபடங்கள்,கேம்கள்,வீடியோ போன்றவை பேக்கப் எடுத்து வைக்க பயன் படுகிறது.


*#*#197328640#*#*


இதன் மூலம் போன் சர்வீஸ் மோடில் நுழைய பயன் படுகிறது.

இது ஏதேனும் மாற்றம் செய்து சோதனை செய்ய உபயோகிக்க பயன்  படுகிறது.


* # * # 1472365 # * # *


இது GPS  டெஸ்ட் செய்ய பயன் படுகிறது.


*#*#232331#*#*    இது ப்ளுதூத் (bluetooth test)டெஸ்ட்


*#*#232338#*#* இது வை-பை wi-fi அட்ரஸ் தெரிந்து கொள்ள


*#*#232337#*#  இது ப்ளு தூத் அட்ரஸ்(bluetooth address) தெரிந்து கொள்ள


*#*#1575#*#* இது மேலும் மற்றொரு GPS  சோதனை


*#*#0*#*#* இது LCD ஸ்கிரின் டெஸ்ட்


*#*#2664#*#* இது டச்  ஸ்கிரின் டெஸ்ட்


*#*#3264#*#* இது ராம் (RAM) வகையை அறிய


*#*#0842#*#* இது போனின் வைபரசன்,சவுண்டு போன்றவற்றை செக் செய்ய .


*#*#4636#*#*   இது போன் செட்டிங் பார்க்க.

மஞ்சள் காமாலை--இய‌ற்கை வைத்தியம்



பொதுவாக மஞ்சள் காமாலை நோய்த் தொற்றானது பித்த அதிகரிப்பால் வருகிறது. பித்தமானது பல காரணங்களால் மிகுதியாகி ரத்தத்தில் கலந்து விடுவதால் மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தாலும், இரவில் கண்விழித்து வேலை பார்ப்பதாலும் தூக்கமின்மையாலும் வயிற்றில் புளிப்புத்தன்மை ஏற்பட்டு சளி பிடித்து, ரத்தம் சூடேறி, காமாலைக் கிருமிகள் உண்டாகி, மஞ்சள் காமாலை நோயைத் தோற்றுவிக்கிறது.

உள்ஜுரம் ஜுரத்தா லெழும்பி
உதித் தெழும் பித்த தோஷம்

என்று அகத்தியர் பெருமான் அகத்திய வர்ம காண்டத்தில் கூறியுள்ளார்.

இந்த பித்தமானது நஞ்சுபோல் உடலில் எங்கும் வியாபிக்கக்கூடிய தன்மையுள்ளது.

அதோடு மட்டுமல்லாமல், நவீன உலகத்தில் உணவுப் பழக்கங்களாலும், மிதமிஞ்சிய உணவுகளாலும், பாமாயில் கலக்கப்பட்ட எண்ணெய்களாலும் ஒருதடவை சமைத்த உணவை குளிர்சாதன பெட்டியில் வைத்து தேவைப்படும்போது மாறி மாறி சூடுபண்ணி பல நாட்கள் சாப்பிடுவதாலும், உண்ட உணவானது உடலில் புளிப்புத் தன்மையை உண்டாக்கி செரியாமை ஏற்பட்டு குடலின் பித்தமானது சளியோடு கலந்து ரத்தத்தில் சேர்ந்துவிடுகிறது. இப்படிப்பட்ட உணவுப் பழக்கங்களால், மஞ்சள்காமாலை நோய்த்தொற்று ஏற்படுகிறது.

மேலும், தலையில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் பழக்கத்தை மறந்ததாலும் நரம்புகள் சூடாகி பித்தம் அதிகரித்து மஞ்சள் காமாலை நோய் உண்டாகிறது.

பித்தமானது அலர்ஜியாகும்போது காமாலை நோய்க் கிருமி தோன்றி, முதலில் கல்லீரலைப் பாதித்து, கண்களில் மஞ்சள் நிறம் தோற்று விக்கிறது. சிறுநீர் மஞ்சளாக வெளியேறுகிறது.

பொதுவாக மஞ்சள்காமாலைக்கு பித்தம் அதிகரிப்புதான் முக்கிய காரணமாகிறது.

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சிறுநீர், மலம் கழித்த இடத்தை மற்றவர்கள் பயன்படுத்தினால் அவர்களையும் நோய்த் தொற்ற வாய்ப்புண்டு. ஆகையால், பாடசாலை முதல், கல்லூரி வரை ஏதேனும் ஒரு மாணவருக்கு மஞ்சள்காமாலை நோய் இருந்தால் அது மற்றவர்களுக்கு எளிதில் பரவி விடுகிறது.

பொதுவாக இப்படிப்பட்ட பித்த அலர்ஜியால் உண்டாகும் மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருத்துவத்தில் கீழாநெல்லி என்ற மூலிகையை அதிகம் பயன்படுத்துவார்கள்.

கீழாநெல்லி - ஒரு கைப்பிடி

சீரகம் - 1 ஸ்பூன்

இரண்டையும் நீர்விட்டு அரைத்து கஷாயம் செய்து காலை, மாலை இருவேளையும் கொடுத்து வந்தால் பித்தம் தணிந்து, காமாலை நோய்த்தொற்று கிருமிகள் அழியும்.

கீழாநெல்லி, சுக்கு, மிளகு, சீரகம், சோம்பு, மஞ்சள் இவற்றை சம அளவு எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து, சர்க்கரை கலந்து 4 மணி நேரத்திற்கு ஒரு முறை அருந்தி வந்தால் மெல்ல மெல்ல முழுமையாக குணமடையலாம்.

கீழாநெல்லி, சீரகம், பூவரச பழுத்த இலை, கரிசலாங்கண்ணி (வயல் வெளியில் வெள்ளைப்பூக்கள் நிறைந்து காதில் அணியும் கம்மல் போன்று இருக்கும்) இவை அனைத்தும் 3 கிராம் அளவிற்கு எடுத்துக் கசாயம் செய்து காலை, மாலை வேளைகளில் சாப்பிடும் முன் அருந்தினால் காமாலை நோய் குணமாகும்.

· காய்ச்சல், குளிர்சுரம் வந்தால், பித்தத்தை அதிகப்படுத்தும் உணவுகளை தவிர்ப்பது நல்லது.

· பித்தத்தைத் தணிக்க, காய்கள், கீரைகள், பழவகைகளை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

· வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.

· எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்.

· நாள்பட்ட உணவுகளை சூடாக்கி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

· மழைக்காலங்களில் நீரை கொதிக்க வைத்து ஆறியபின் அருந்தவேண்டும்.

· புளி, உப்பு, காரம் குறைத்து சாப்பிட வேண்டும். எண்ணெய்ப் பலகாரங்களையும், அதிக எண்ணெய் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.
 நன்கு ஓய்வு எடுக்க வேண்டும்.

தேள் கடி விஷம் நீங்க அரும் மருந்து.-- இய‌ற்கை வைத்தியம்


















1) தேள் கடிவாயில் வெங்காயத்தை இரண்டாக அரிந்து அதில் ஒரு பகுதியை கடிவாயில் வைத்து அழுத்தித் தேய்க்க வேண்டும். வலி நிற்க வில்லை என்றால் அடுத்த பகுதியையும் தேய்க்க வேண்டும்.

2) எலுமிச்சம்பழ விதையுடன் சிறிது உப்பையும் வைத்து அரைத்து தண்ணீரில் கலந்து குடிக்க தேள் கடி விஷம் இறங்கும்.

3) நவச்சாரத்தில் சிறிது சுண்ணாம்பை சேர்த்தால் அது நீராகக் கரைந்து விடும். அந்த நீரை தேள் கொட்டிய இடத்தில் வைத்தால் விஷம் இறங்கி விடும். கடுப்பும் குறையும்.

வாய்ப்புண் குணமாகும், வயிற்றுப் பூச்சி,நீரிழிவை கட்டுப்படுத்தும் கோவைக்காய்! --மூலிகைகள் கீரைகள்.

    புதர்களிலும் வீணாக கிடக்கும் இடங்களிலும் தானாக வளரும் கோவைக்கொடியின் முழுத்தாவரமும் மருத்துவகுணம் கொண்டது. காய், கனிகள், இலைகள், தண்டு, வேர் போன்றவை மருத்துவ பயன் உடையவை. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இந்த எளிமையான காய்கறி கொடியினத்தை சேர்ந்தது இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.
கனிகள் செந்நிறமுடையவை. இவற்றை மென்றால் நாக்கில் உள்ள புண்கள் ஆறும். இலைகள், தண்டு, வேர் ஆகிய பாகங்களில் இருந்து பிழிந்து எடுக்கப்பட்ட சாறு உலோகப் பொருட்களோடு கலந்து நீரிழிவு நோய், வீங்கிய சுரப்பிகள், தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்த உதவும்.

நீரிழிவை கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை.
பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் என்று பெங்களூரில் நடத்திய ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 35 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.

வாய்ப்புண் குணமாகும்
கோவைக்காய் பச்சடி சிறந்த மருத்துவ குணமுள்ள உணவு. சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய கோவைக்காயுடன் மோர், மிளகுப்பொடி, சீரகப்பொடி, இஞ்சி சிறிது சேர்த்து தேவையான அளவு உப்பு கலந்து விட்டால் அவ்வளவுதான் கோவைக்காய் பச்சடி தயார். இதனை வாரம் இரண்டு நாள் பகல் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். வயிற்றுப்புண் இருப்பவர்கள் வாரம் இரண்டு நாள் கோவைக்காயை சேர்த்துக்கலாம். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.

தோல்நோய்களை குணமாக்கும்
இலை மற்றும் தண்டு - கபத்தை வெளியேற்றும். வலி குறைக்கும். இலை, தண்டு, கஷாயம் மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெயுடன் கலந்து புண்கள், பிற தோல்நோய்களை குணப்படுத்த உதவும்.
கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது. ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும். கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.

வயிற்றுப் பூச்சிகளை கட்டுப்படுத்தும்
கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும். கோவை இலைச் சாறு, பித்தம், ஷயம், மூல நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகப் பயன்படும். கரம் மசாலா அல்லது உஷ்ணத்தைத் தரும் மருந்துகள் கோவைக்காயால் ஏற்படும் தீமைகளுக்கு நல்ல மாற்றாகும்

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள்!


சளி, இருமல், தொண்டை வலிக்கு நம்ம பாட்டியோட கை வைத்தியந்தான் இருக்கவே இருக்கே. பித்த வெடிப்புக்கும் நம்ம பாட்டியோட சூப்பரான க்ராக் க்ரீம் இதோ.....



பித்தவெடிப்பு மறைய

காலில் பித்தவெடிப்பா? கவலையை விடுங்கள். தேனையும், சுண்ணாம்பையும் ஒன்றாய்க் குழைத்து பித்தவெடிப்பில் தடவி வந்தால் பித்தவெடிப்பு இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தொண்டை வலிக்கு

பால் இல்லாத டீயுடன் கொஞ்சம் எலுமிச்சை சாறு விட்டு குடித்து பாருங்கள் தொண்டை வலி நீங்கும்.

இருமல் தொல்லைக்கு

தூங்க போகும் முன் 1 கப் சூடான தண்ணீ­ரில் 1 ஸ்பூன் உப்பு போட்டு வாய் கொப்பளிக்கவும். இது இருமல் தொல்லையையும் நீக்கும்.

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால்

கண்ணாடி துண்டினால் காயம் ஏற்பட்டால் வாழைபழத்தோலை அந்த காயத்தின் மீது வைத்து காட்டுங்கள். ரத்த போக்கு நின்று காயம் விரைவில் ஆறும். அதற்கு முன் காயத்தை நன்றாக வெதுவெதுப்பான நீரால் கழுவவேண்டும்.

இருமல் சளிக்கு

தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்­ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.

கட்டிகள் உடைய

மஞ்சள், சுண்ணாம்பு, விளக்கெண்ணெய் மூன்றையும் நன்றாக குலைத்து கட்டிகள் உள்ள இடத்தில் பற்று போட்டால் கட்டிகள் சீக்கிரம் பழுத்து உடைந்து விடும்.

பேன் தொல்லை நீங்க

வசம்பு, வேப்பிலை இரண்டையும் அரைத்து தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து குளித்து வந்தால் தலையில் உள்ள பேன் நீங்கும்.

மேனி பளபளப்பு பெற

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மேனி பளபளப்பு பெறும்.

தும்மல் வராமல் இருக்க

தூதுவளை பொடியில் மிளகு பொடி கலந்து தேனில் (அ) பாலில் சாப்பிட்டால் தும்மல் வராது.

கரும்புள்ளி மறைய

எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவிவர, அவை நாளடைவில் மறைந்து விடும்.

தொண்டை கரகரப்பு நீங்க

அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்து விடும்.

கருத்தரிக்க உதவும்

அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50 - 100 கிராம் எடுத்து தண்ணீ­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2-3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

இருமல் சளி குணமாக

சித்தரைத்தையும் பனங்கற்கண்டு இரண்டையும் சம அளவு எடுது கஷாயம் வைத்து மூன்று வேளைக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் வரட்டு இருமல் சளி குணமாகும்.

ஜீரண பிரச்சினைகளுக்கு சிறந்த 10 வீட்டு வைத்தியங்கள்

           அனைவரும் வாழ்க்கையில் ஏதோ ஒரு சமயத்தில் கண்டிப்பாக அசிடிட்டி பிரச்சினை யால் அவதியுற் றிருப்போம் என்பது 100% உண்மை. வயிற்றில் அமிலம் சுரக்கும் செயல்பாட்டிற்கும், அதிகளவில் அமிலம் சுரப்பதை தடுக்கும் செயல்பாட்டிற்கும் இடையேயான ஏற்றத்தாழ்வால் ஏற்படும் அறிகுறிகள் தான் அசிடிட்டி ஆகும்.
நாம் உண் ணும் உணவு செரி மானம் அடைவ தற்கு வயிற்றில் அமிலம் சுரக்கிறது. வயிற்றில் இரைப்பை சுரப்பிகள் மூலம் அளவுக்கதிகமாக அமிலம் சுரக்கும் போது, இது வயிற் றில் அமிலத்தன்மையை ஏற்படுத்துகிறது. மோசமான உணவுப்பழக்கம், மனஅழுத்தம், பதற்றம் ஆகியவை அசிடிட்டிக்கான முக்கிய காரணங்களாகும்.
குடும்ப விருந்தின்போது கொஞ்சம் அதிகமாக குலாப் ஜாமுன் சாப்பிட்ட காரணத்தாலோ அல்லது டீ பிரேக்கில் காரமான சமோசா சாப்பிட்ட காரணத்தாலோ நமக்கு அசிடிட்டி ஏற்பட்டிருக்கலாம். காரணம் என்னவாக இருந் தாலும், அசிடிட்டி ஒரு சங்கடமான அனுபவமாகும். இந்த சந்தர்ப்பங்களில் நாம் சாதாரணமாக ஆன்டாஸிட் எடுத்துக் கொள்வது வழக்கம்.
ஆனால் இதைத் தடுக்க வேறு இயற்கை முறைகள் உண்டு என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆகவே இதிலிருந்து மீள்வதற்கான 10 இயற்கை வைத்திய முறைகளை இங்கு பார்க்கலாம்.
1.வாழைப்பழம் :
வாழைப்பழத்தில் அதிகளவு பொட்டாசியம் இருப்பதால், இதில் அமிலகார சமனிலையை உருவாக்கும் கனிமங்கள் அதிகளவில் உள்ளது. அதி களவு, குறைவான அமிலத் தன்மை ஆகிய காரணங்களால் வாழைப்பழம் அசிடிட்டிக்கு ஒரு வலிமையான மாற்று மருந்தாகும்.
மேலும் இரைப்பையின் அக உறையில் சீதத்தன்மையை ஏற்படுத்தும் கூறுகளும் இதில் அடங்கி யுள்ளன. இந்த சீதத்தன்மை, வயிற்றில் அசிடிட்டி மூலம் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கிறது.
இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், செரிமானத்தை விரைவுப்படுத்தி அசிடிட்டியைக் குறைக்க உதவும். அசிடிட்டி ஏற்படும் சமயத்தில், அதிகளவு பழுத்த வாழைப் பழத்தை சாப்பிட்டால், விரைவான தீர்வைப் பெறலாம். மேலும் இதில் அதிகளவு பொட்டாசியம் அடங்கிருப்பதால், அசிடிட்டிக்கு நல்ல பயன் கிடைக்கும்.
2.துளசி :
துளசியில் இருக்கும் கூறுகள் செரிமானத்திற்கு பயனுள்ள வையாகும். இது வயிற்றினுள் சீதத்தன்மையை ஊக்குவிப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இது வயிற்று அமிலங்களின் சக்தியைக் குறைத்து அசிடிட்டியைத் தடுக்க உதவுகிறது. இவை வாயு உருவாக்கத்தையும் குறைக்கும். உடனடி நிவாரணத்திற்கு, உணவு சாப்பிட்ட பின்னர் ஐந்து அல்லது ஆறு துளசி இலைகளை உண்ணுங்கள்.
3.குளிர்ச்சியான பால் :
பாலில் அதிகளவு கால்சியம் அடங்கியிருப்பதால், அமிலத்தைக் கட்டுப்படுத்தும் தன்மை வாய்ந்தது. ஒரு டம்ளர் குளிர்ச்சியான பால், அசிடிட்டி அறிகுறிகளைக் குறைக்கிறது. எப்படியெனில், இதில் உள்ள குளிர்ந்த தன்மை, அசிடிட்டியின் போது ஏற்படும் எரிச்சலைக் கட்டுப்படுத்துகிறது. அதிலும் குளிர்ந்த பாலை, சர்க்கரை சேர்க்காமல் குடிக்க வேண்டும். குறிப்பாக அதில் ஒரு கரண்டி நெய் சேர்த்து குடித்தால் சிறந்த நிவாரணம் பெறலாம்.
4.சோம்பு :
இது பெருஞ்சீரகம் எனவும் அழைக்கப்படும். இது வாய் ப்ரஷ்னராக பயன்படுத்தப்பட்டாலும், இதில் பல மருத்துவ குணங்கள் உண்டு. மலச்சிக்கலைக் நீக்கி, செரி மானத்திற்கு உதவுதல் இதன் ஒரு பண்பாகும். இதில் ப்ளேவோனாய்டுகள், பிளாமிடிக் அமிலம் மற்றும் வேறுபல கூறுகள் இருப்பதால், புண்கள் ஏற்படாமல் தடுக்கும் சக்தி வாய்ந்தது.
இதைத் தவிர, இது வயிற்றின் உட்பகுதியை குளிராக்குவதால், விரைவாக குணமடைய உதவுகிறது. ஆகவே தான் ரெஸ்ட்ராண்ட்டுகளில் சாப்பிட்ட பிறகு சோம்பு வழங்கப்படுகிறது. ஒரு வேளை உங்களுக்கு திடீரென அசிடிட்டி ஏற்பட்டால், கொஞ்சம் சோம்பை தண்ணிரில் கொதிக்க வைத்து, அதை இரவு முழுவதும் ஊறவிட்டு, அந்த நீரைக் குடித்தால் அசிடிட்டியிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.
5.சீரகம் :
சீரகத்தில் அதிகப்படியான எச்சிலை உற்பத்தி செய்யும் தன்மை உள்ளது. இது செரிமானத்தை சீராக நடை பெற வைத்து, அதனால் ஏற்படும் பல்வேறு வயிற்று பிரச்சினைகளை சரிசெய்யும். அது மட்டுமின்றி இது வயிற்று நரம்புகளை அமைதிப்படுத்தி, அமிலம் சுரப்பதால் ஏற்படும் புண்களைக் குணப்படுத்த உதவும் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது.
அதற்கு இதை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். அதை விட, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடிப்பது சிறந்த முறையாகும்.
6.கிராம்பு :
இது ஒரு இயற்கை யான இரைப்பைக் குடல் வலி நீக்கியாகும். இது குடல் தசை இயக் கத்தை துரித்தப்படுத் துகிறது மற்றும் உமிழ் நீர் சுரப்பதையும் அதிகப்ப டுத்துகிறது.
இதன் ஒரு வகையான கசப்புக் கலந்த காரமான சுவை, அதிகளவு உமிழ்நீர் சுரப்பதைத் தூண்டுவதால், செரிமானத்திற்கு உதவுகிறது. ஆகவே அசிடிட்டியால் அவதியுறும் போது, ஒரு கிராம்பை கடித்து வாயில் வைத்துக் கொள்ளுங்கள், இதிலிருந்து வெளியாகும் திரவம் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி நிவாரணம் அளிக்கும்.
7.ஏலக்காய் :
சளி, பித்தம், வாதம் ஆகிய மூன்று தோஷங் களையும் சரிசெய்யக் கூடிய ஒரே உணவு ஏலக்காய் என ஆயுர்வேத முறையில் கூறப்படுகிறது. இது செரிமானத்தை துரிதப்படுத்தி, வயிற்று வலியைக் குறைக்கும்.
இது இரைப்பையின் உட்பரப்பில் சீத தன்மையை சமப்படுத்தி, வயிற்றில் அதிகளவு அமிலம் சுரப்பத்தால் ஏற்படும் தாக்கத்தை தணிக்கிறது. இதன் இனிப்புச்சுவை மற்றும் குளிராக்கும் தன்மை, அசி டிட்டியின் மூலம் ஏற்படும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கொடுக்கும். குறிப்பாக அசிடிட்டியிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, கொஞ்சம் ஏலக்காயை பவுடராக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர் அந்த நீரைக் குடித்தால், உடனடி நிவாரணம் கிடைக்கும்.
8.புதினா :
புதினா இலைகள் வாய் நறுமணத்திற்கும் மற்றும் பல்வேறு உணவுகளை நறுமண சுவைïட்டுவதற்கும் பாரம்பரியமாக பயன்படுத்தப்படுகிறது. இந்த இலை அசிடிட்டிக்கு நிவாரணம் தரும் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.
இது வயிற்றில் அமிலத் தைக்குறைத்து, செரி மானத்திற்கு உதவுகிறது. அதுமட்டுமின்றி, இதன் குளிர்விக்கும் தன்மை அசிடிட்டியால் ஏற்படும் எரிச்சலுக்கும் நிவாரணம் தருகிறது. அசிடிட்டி பிரச்சினை ஏற்பட்டால், சில புதினா இலைகளைக் கசக்கி, நீரில் கொதிக்க வைத்து, ஆறிய பின்னர், இந்த நீரை பருகினால் நிவாரணம் கிடைக்கும்.
9.இஞ்சி :
இந்தியாவில் பெரும்பாலான வீடுகளில் வழக்கமாக பயன்படுத்தப்படும் ஒரு பொருள் இஞ்சி. இது உணவை உறிஞ்சும் தன்மையை அதிகரித்து, விரைவாக செரிமானம் அடைவதற்கு வழிவகுக் கிறது. உணவிலுள்ள புரதச் சத்துக்களை உடைத்து, அவை உடலில் சேர்வதற்கு உதவுகிறது. இஞ்சி, வயிற்றில் சீதம் சுரக்கும் அளவை அதிகப்படுத்துவதால், அமிலத் தாக்கத்தைக் குறைக்கிறது.
வேண்டுமெனில் சிறிய இஞ்சித் துண்டை மென்று சாப்பிடலாம். இது தடினமாக இருந்தால், நீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை குடிக்கலாம். அதேப்போல், இஞ்சியை அரைத்து, கொஞ்சம் வெல்லம் சேர்த்து, வாயில் வைத்து உறிஞ்சுவதால், இது மெதுவாக வயிற்றுப் பகுதிக்குச் சென்று அசிடிட்டிக்கு நிவாணம் அளிக்கும்.
10.நெல்லிக்காய் :
இதில் அதிகளவு வைட்டமின் `சி’ உள்ளது. இதைத் தவிர சளி மற்றும் பித்ததிற்கு சிறந்த மருந்தாகும். இதன் நோய் நீக்கும் சக்தி உணவுக் குழாயுடன் இணைந்த இரைப்பை புண்களைக் குணமாக்க உதவுகிறது. ஒரு தேக்கரண்டி நெல்லிக்காய் பவுடரை, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், அசிடிட்டி பிரச்சனை உருவாகாது.
எனவே உங்களுக்கு அசிடிட்டி தொல்லை ஏற்படும் போது, ஆன்டாஸிட் மாத்திரையை பயன்படுத்துவதற்கு பதிலாக, நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரும், மேலே குறிப்பிட்ட வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி நல்ல நிவாரணம் பெறுங்கள்.

கசாயப்பொடி

அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில் இதுவே சிறந்த மருந்து
   சுக்கு, மிளகு, திப்பிலி, தாளிச்ச பத்திரி, சித்தரத்தை, பேரரத்தை, அதிமதுரம் முதலியவற்றை சரிவிகித எடையில் கலந்து பொடியாக தயாரித்து பொடியாக வைத்துக்கொள்ளவும்.

இந்தப்பொடியில் ஒரு கிராம் (கால் தேக்கரண்டி) அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிடலாம். தண்ணீரில் கலந்தும் சாப்பிடலாம். அல்லது கொதிக்கும் தண்ணீரில் போட்டு வெல்லம் சேர்த்து வடிகட்டி காபி குடிப்பது போல குடிக்கலாம்.

மூக்கு ஒழுகும் உள்ள நேரத்திலும் சளி, இருமல், காய்ச்சல் சமயத்திலும் தினசரி ஐந்து தடவை காபி மாதிரி சாப்பிட வேண்டும். சாப்பிட சுவையாக இருக்கும்படி தயாரித்து குடிக்கவும்.

காரம் அதிகமாக இருந்தால் தண்ணீர் கலந்து சுவையாகத்தான் சாப்பிட வேண்டும். காரமாக சாப்பிடக்கூடாது.

அலர்ஜி, ஆஸ்த்துமா, இருமல், ஈஸிணோபிலியா, சைனஸ், மண்டைவலி, காய்ச்சல், குணமடைய இந்த உலகில் இதுவே சிறந்த மருந்தாக வேலை செய்யும் என்பதில் சந்தேகமே இல்லை.

பொடுகுத் தொல்லை !! ஹெல்த் ஸ்பெஷல்!!

  தலையில் அடிக்கடி அரிப்பு சொறிந்தால் தவிடுபோல், பொடித்த உப்பு போல் பொடி உதிருகிறது. உண்மையிலேயே டி.வி. யில் காட்டும் பொடுகு மருந்து விளம்பரங்களில், பொடுகை காண்பிக்க பொடி உப்பை தான் பயன்படுத்துகிறார்கள். பொடுகு அரிப்பு தலையில் பரவிக் கொண்டே போகும். 
 
அரிப்புள்ள இடங்களில் முடி உதிரலாம். பொடுகு புருவங்களில் பரவி, அங்கும் அரிப்பெடுத்து, முடி உதிரலாம். முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் பொடுகு தான். அடிக்கடி தலையை சொறிய வைத்து சமூகத்தில், பொது இடங்களில் நம்மை தலை குனிய வைப்பதும் பொடுகுதான். பொடுகு நாளாக நாளாக, தீவிரமாகி பல தோல் கோளாறுகளை ஏற்படுத்தும்.

நமது தோல் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும். இறந்த செல்களை தள்ளி, புதிய செல்களை உருவாக்கும். இந்த வேலை பொடுகினால் வேகமாக செய்யும்படி ஆகிறது. அதிக அளவு செல்கள் உருவாகி, ஒன்றோடொன்று ஒட்டிக்கொண்டு செதில் போல் ஆகின்றன. மண்டைத் தோலின் மேற்புர செல்கள் அதிகமாக இறந்து வெளியேறுவது தான் பொடுகு.

எந்த வயதிலும் பொடுகு வரலாம், ஆனால் பொதுவாக 12 லிருந்து 80 வயதுள்ளவர்களில் ஏற்படலாம். தீவிர அறிகுறிகள் 30-60 வயதுள்ளவர்களுக்கு காணப்படும். பொடுகுத் தொல்லையின் அபாயம் என்னவென்றால், இன்னொரு தீவிர சர்ம வியாதியான சோரியாசிஸ்ஸின் ஆரம்ப அறிகுறிகளும், பொடுகு போல் தோன்றும்.

பொடுகு வர காரணங்கள்

ஆயுர்வேதத்தின் படி கப, பித்த தோஷங்களால் பொடுகு உண்டாகும்.

எண்ணையை சுரக்கும் செபாசியஸ் சுரப்பிகள் தேவைக்கு அதிகமான எண்ணையை சுரந்தாலும் பொடுகு, குறைவாக சுரந்தாலும் பொடுகு உண்டாகும்.

பார்கின்ஸன்ஸ் வியாதி பொடுகை உண்டாக்கும். இதர நரம்பு மண்டல கோளாறுகளும் காரணமாகலாம்.

பலவித கோளாறுகளுக்கு காரணமான அதிக உடல் பருமன், பொடுகுக்கும் காரணமாகலாம்.

ஆயுர்வேதத்தின் படி, தவறான உணவு முறை, மலச்சிக்கல், பலவீனம் இவைகளால் பொடுகு ஏற்படும். ஊட்டச்சத்து குறைவும் காரணமாகலாம்.
ரசாயன பொருட்கள் நிறைந்த ஷாம்பூ, முடி உலர உபயோகிக்கும் மெஷின், குளிர் தாக்குதல்.

டென்ஷன், ஸ்ட்ரெஸ், பரபரப்பு. கூந்தல், சர்மம் இவற்றை சரிவர பாதுகாக்காமல் இருப்பது, சுகாதார குறைவு.

ஓவ்வாமை.

அதிகமாக, இனிப்பு, கொழுப்பு, மாவுச் சத்து பொருட்களை உண்பது.
பரம்பரை.

பூஞ்சனம் தொற்றாலும் பொடுகு ஏற்படும். மலாஸ்ஸெசியா பழைய பெயர் பைட்ரோஸ்பர்ம் என்ற ஃபங்கஸ் பொடுகை உண்டாக்கும். இந்த பூஞ்சனங்கள் உடலில் நோய் தடுப்பு சக்தியின் குறைவால் தாக்குகின்றன. கூந்தலை சரிவர பராமரிக்காவிட்டால் இந்த பூஞ்சனங்கள் தாக்கும்.

பொடுகின் வகைகள்

முதல் வகை உலர்ந்த, எண்ணைப் பசையில்லாத வறண்ட மண்டை ஓட்டில் ஏற்படும். எண்ணைப் பசையை சுரக்கும் செபாசியஸ் சுரப்பியின் குறைபாட்டால் ஏற்படும். இந்த வறண்ட பொடுகின் தன்மைகள்
தலையில் அரிப்பு ஏற்படும். சொறிந்தால் தவிடு போல் பொடி உதிரும்.

தலையை தட்டினாலே, பொடுகு உதிரும் அரிப்பு தலை முழுவதும் பரவும். அரிப்புள்ள இடங்களில் வெள்ளையாகி, முடி உதிரலாம்.
சொறிய, சொறிய ரணமாக, சிரங்காக மாறும்.

சிறுகட்டிகள் தோள்பட்டை, கழுத்து பகுதிகளில் உண்டாகலாம்.
உலர்ந்த பொடுகை குணப்படுத்துவது சுலபம்.

ஆனால் இது தொற்றும் குணம் உடையது. சுலபமாக மற்றவர்க்கு பரவும். இரண்டாம் வகை எண்ணை சுரப்பு அதிகமானதால் வருவது. இதன் தன்மைகள். முகப்பருக்கள் தோன்றும்.

வியர்த்தாலே அழுக்கு சேரும்.
பெரிய கட்டிகள் கொப்பளங்கள் ஏற்படலாம்.

எண்ணை பொடுகை குணப்படுத்துவது கடினம்.
தலையை லேசாக கீறினாலும் அழுக்கு ஊறும்.
தலையில் துர்நாற்றம் அடிக்கும்.

மலாஸ்ஸெசியா உயிரற்ற மக்கிய பொருட்களை உட்கொள்ளும் பூசனம். பல சர்ம நோய்களுக்கு காரணம். லூயி சார்லஸ் மலாசெஸ் என்ற ஃப்ரான்ஸ் விஞ்ஞானி 19ம் நூற்றாண்டில் இதை கண்டுபிடித்தார். ரேமண்ட் சபூராட் என்பவர், 1904ல், இது தான் பொடுகை உண்டாக்கும் காரணி என்று கண்டுபிடித்து, பைட்ரோஸ்பர்ம் மலாஸ்ஸெசியா என்று பெயரிட்டார். இந்த மலாஸ்ஸெசியாவின் இனத்தில் ஒன்றான மலாஸ்ஸெசியா க்ளோபாஸா தான் பொடுகை உண்டாக்குகிறது. இது வளர கொழுப்பு தேவை எனவே தலையின் செபாஸியஸ் சுரப்பிகளில் குடி கொண்டு வேகமாக வளரும். தலையில் பொடுகையும் அரிப்பையும் உண்டாக்கும்.

பொடுகை போக்க வழிகள்

500 மி.லிட்டர் நல்லெண்ணையில் 50 கிராம் வேப்பம் பூ, 25 கிராம் வெல்லத்தை சேர்த்து முறியும் வரை காய்ச்சவும். வடிகட்டித் தலையில் தேய்த்து முழுகவும். பொடுகு போகும்.

வேப்பம் பட்டை கொஞ்சம் எடுத்து, இடித்து, நீரில் கலந்து கஷயமாக தயாரித்துக் கொள்ளவும். ஆறியபின் சிலுப்பினால் நுரை வரும். இந்த நுரையை அரிப்புள்ள இடங்களில் தேய்க்கலாம்.

ஏலரிசி, குங்கிலியம், மட்டிப்பால், சந்தனம், கிச்சிலிக் கிழங்கு பூலாங் கிழங்கு, குக்குலு, சாம்பிராணி, இவைகளில் கிடைக்கும் பொருளை எண்ணையில் காய்ச்சி உபயோகித்தால் பொடுகு நீங்கும்.

உடல் காங்கையை குறைத்தால் பொடுகு கட்டுப்படும். இதற்கான வழி முறைகளை அறிய ஆயுர்வேத டாக்டரை அணுகவும். தலைக்கு குளிக்க, மசாஜ் செய்ய உபயோகிக்கும் எண்ணையில் கொம்பரக்கு கலந்து காய்ச்சினால், உடற்காங்கை குறையும்.

ஒரு பாகம் சந்தன எண்ணையுடன் 3 பாகம் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும். இதை தடவி சிறிது நேரம் கழித்து அலசவும். தேங்காய் எண்ணையையும் சந்தன எண்ணைக்கு பதிலாக பயன்படுத்தலாம்.

இரவில் இரண்டு மேஜைக் கரண்டி வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலையில் அப்படியே கூழாக அரைத்து, தலையில் தடவிக் கொள்ளவும். அரைமணி கழித்து சீயக்காய் தேய்த்து கழுவி விடவும். பொடுகு மட்டுமன்றி வெந்தயம் புழுவெட்டையும் தடுக்கும். 
 
பெரிய நெல்லிக்காய், வெந்தயம், கறிவேப்பிலை இவற்றை காயவைக்கவும். உலர்ந்த பின், பொடித்து ஒரு துணி மூட்டையில் கட்டி, நீங்கள் உபயோகிக்கும் எண்ணையில் போட்டு வைக்கவும். இதே எண்ணையை தலைக்கு தேய்த்து வந்தால் தலைச்சூடு குறையும்.

எச்சரிக்கை

வெந்தயத்தை கால் மணிக்கு மேல் தலையில் வைக்க வேண்டாம். அதிக குளிர்ச்சி ஏற்பட்டு ஜன்னி வரும்.

பொடுதலை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இதன் இலை, காய் இவற்றிலிருந்து சாறு எடுத்து, அதன் சமஅளவில் நல்லெண்ணையில் கலந்து காய்ச்சி, சாறு வற்றியதும் வடிகட்டி வைத்துக் கொள்ளவும். இதை தலைக்கு தடவி வர பொடுகு போகும். இதனாலேயே இதற்கு பொடுதலை என்ற பெயர் வந்தது.

ஒரு ஸ்பூன் கற்பூரத்தை 1/2 கப் தேங்காய் எண்ணை அல்லது வேப்பம் எண்ணையுடன் கலந்து வைக்கவும். இந்த எண்ணையை தலைக்கு தடவி குளிக்கலாம்.

தேங்காய் எண்ணை, ஆலிவ் எண்ணை, பாதாம் எண்ணை, இவை மூன்றில் ஏதாவது ஒன்றை சூடுபடுத்தி, கூந்தல் வேரில் நன்கு படுமாறு தேய்த்து, சூடான நீரில் நனைத்த டவலை தலையில் கட்டிக் கொண்டு 1 மணி நேரம் ஊறவும். பிறகு ஷாம்பூ போட்டு அலசவும்.

செம்பருத்தி பூவை அரைத்து தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு நீங்கும்.

தயிர், முட்டையின் வெள்ளைக்கரு, எலுமிச்சை சாறு ஆகிய மூன்றையும் தலையில் தேய்த்துக் குளித்தால் பொடுகு போகும். வாரம் இருமுறை, 4 வாரங்கள் இதை செய்ய, பொடுகிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

வெள்ளை மிளகைப் பால் விட்டு அரைத்துத் தலையில் தேய்த்து, அரை மணி நேரம் ஊறிக் குளிக்கவும்.

வால் மிளகைப் பால் விட்டு, அரைத்துத் தலையில் தடவி, சிறிது நேரம் ஊறிக் கழுவினால் பொடுகு மறையும்.

வில்வக்காயைப் பொடியாக்கி, அத்துடன் சம அளவு சீயக்காய் பொடி கலந்து, தினம் தலையில் தேய்த்துக் குளித்து வரலாம்.

நல்லெண்ணெயில் சிறிதளவு வேப்பம் பூவும், துளசியும் சேர்த்துக் காய்ச்சித் தலையில் தடவிக் குளித்து வரலாம்.

தேங்காய்ப் பால் அரை கப் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு நான்கு டேபிள் ஸ்பூன் இரண்டையும் கலந்து தலையில் தேய்த்துக் குளித்து வரலாம்.

250 மி.லி. தேங்காய் எண்ணெயுடன், 50 மி.லி. அருகம் புல் சாறு மற்றும் 50 மி.லி. கரிசலாங்கண்ணிச் சாறு கலந்து காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும், அத்துடன் 250 மி.லி. தேங்காய்ப் பாலைக் கலந்து காய்ச்ச வேண்டும். நீர் வற்றி எண்ணெய் பிரியும் சமயம், 15 கிராம் அதி மதுரத்தைப் பொடி செய்து போட்டு சிவந்ததும் இறக்கி, வடிகட்டி தலையில், தேய்த்து வரலாம். இதே எண்ணெயைத் தலையில் தடவி, ஊறிக் குளிக்கவும் பயன்படுத்தலாம்.

தலைக்கு குளிக்கும் போது கடைசியில் எலுமிச்சம் பழ சாற்றால் தலையை அலசவும். இதனால் கூந்தலின் அழகுக்கும் பிசுபிசுப்பும் நீங்கி, முடி பளபளக்கும்.

பொடுகுக்காக தயாரிக்கப்பட்ட ஷாம்பூக்களை, மருத்துவரின் ஆலோசனையுடன் உபயோகிக்கலாம். பலவகை ஷாம்பூக்கள் – ஃபங்கஸ்ஸை எதிர்க்கும் சாலிசிலிக் அமிலம், செலினியம் ஸல்ப்பைட் ஷாம்பூக்கள் கிடைக்கின்றன.

முடிக்கால்களில் அரிப்பு, பொடுகு உள்ளவர்கள். தூர்வாதி தைலம், தினேச வல்யாதி தைலம், சதுக்ஷீரிகேர தைலம் போன்ற தைலங்களில் ஏதாவது ஒன்றை, வைத்தியரின் ஆலோசனையுடன் பயன்படுத்தலாம்.

வேப்பெண்ணையும், கற்பூரத்தையும் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து அலசவும்.

இஞ்சி சேர்த்த ஆலிவ் எண்ணையை தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவும் பிறகு அலசவும்.

வெள்ளை முள்ளங்கியைத் துருவி சாறெடுத்துத் தலை முழுவதும் தடவி, சிறிது நேரம் ஊறிக் குளித்தாலும் பொடுகு வராது.

முட்டையின் வெள்ளைக்கருவுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தலையில் தடவிக் குளித்து வந்தாலும் குணம் தெரியும்.

பொடுகை ஆரம்பத்திலேயே கவனிக்காவிட்டால், தலை முழுவதும் பரவி கூந்தலை நாசப்படுத்துவதோடு, சருமத்தையும் பாதிக்கத் தொடங்கும்.

நாட்டு மருந்துக்கடைகளில் கோஷ்டம் என்ற வேர் கிடைக்கும். இதை வாங்கிப் பொடி செய்து வெண்ணெயில் குழைத்துத் தலையில் தடவிக் குளிக்கலாம்.

பசலைக்கீரையை அரைத்துத் தலை முழுக்கத் தடவிக் குளிக்கலாம். இதைத் தொடர்ந்து மூன்று நாட்களுக்குச் செய்து வந்தால் பலன் தெரியும்.

பொடுகு உள்ளவர்கள் பயன்படுத்திய டவல், சீப்பு, தலையணை, உறை போன்றவைகளை அடுத்தவர்கள் பயன்படுத்தவே கூடாது.

பொடுகை அலட்சியப்படுத்த வேண்டாம். குணப்படுத்த முடியவில்லை
யென்றால் அது எக்ஸிமா அல்லது சோரியாசிஸ் ஆக இருக்கலாம்.

பொடுகு பிரச்சனைக்கு முழுமையான தீர்வு உண்டா

பொதுவாக அழகு நிலையங்களில் முடி, பொடுகுக்கான சிகிச்சைகள், மசாஜ் போன்றவைகளை மட்டுமே தருவார்கள். ஆனால் ஆயுர்வேதத்தில்
பொடுகுக்கான காரணம் ஆராயப்பட்டு அதற்கான மருந்துகள் தரப்படுகின்றன. தவிர முடிக்கான சிகிச்சைகள் ஆயுர்வேத வைத்தியத்தில் தரப்படும் என்பதால் மீண்டும் தொடராத முழுமையான தீர்வு கிடைக்கும்.

உணவு முறைகள்

அதிக உப்பு, அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவுகளை சாப்பிடுகிற போது இப்பிரச்சனை உருவாகிறது. அதிகப்படியான எண்ணெய் பிசுக்கான கூந்தலிலும் பொடுகு வரும். சொரியாஸிஸ் நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம். பொடுகு நீக்குவதாக பரிந்துரைக்கப்படும் ஷாம்பூக்களை தினம் உபயோகிக்காதீர்கள். அவை பொடுகைக் குறைத்தாலும், கூந்தலை பிசுக்காக, பொலிவின்றி வைக்கும். உங்களுக்குத் தேவை கூந்தலின் வேரில் சுரக்கும் அதிகப்படியான எண்ணெயைக் கட்டுப்படுத்துவது.

பொடுகுப் பிரச்சனை உள்ளவர்கள் சர்க்கரை மற்றும் மாவுப் பொருட்கள் அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

சாப்பாட்டிற்குக் கூடிய வரையில் சுத்தமான, நல்லெண்ணெயை உபயோகிப்பது சிறந்தது.

பச்சை வெங்காயத்தைத் தினமும் சாலட்டாகவோ, தயிரில் ஊர வைத்தோ சாப்பிடலாம். வெங்காயம் கூந்தல் ஆரோக்கியத்திற்குப் பல வழிகளில் உதவும்.

நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முழுத் தானியங்களை அதிகம் சாப்பிட வேண்டும். நெய், எண்ணெய், தேங்காய் கலந்த எள் சட்னி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தலைக்குக் குளிக்கும் போதெல்லாம் கூந்தலை கண்டிஷன் செய்ய வேண்டியது அவசியம். மண்டையோட்டுக்கு ஊட்டம் தரக்கூடியது. அழுத்தமான மசாஜ் மிக முக்கியம். அது எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி கூந்தலின் வறட்சியைப் போக்கும். இது எதுவுமே பலன் தராமல், கூடவே உங்களுக்கு அளவுக்கதிக களைப்பு, மலச்சிக்கல், வறண்ட சருமம் போன்றவையும் இருந்தால் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்வது நல்லது.