Saturday, June 18, 2016

தைப்பொங்கல் தமிழ் புத்தாண்டா? இல்லையா? [தமிழர் அறியவேண்டியது]


Pongalஇன்று (15/01/2016)நாம் அனைவரும் “பொங்கல் திருநாளை (pongal)” கொண்டாடப்போகின்றோம். உண்மையில் புதுவருடப்பிறப்பும் இது தான் என்பதை சிலர் அறிவார்கள் சிலர் நகைச்சுவையாக எடுத்துக்கொள்வார்கள். ( நகைச்சுவையாக எடுக்கும் வகையிலேயே அரசியல் செய்பவர்கள் நமது நடைமுறையை மாத்தியுள்ளார்கள். 2006-2011 வரை தைப்பொங்கலையே தமிழர் புதுவருடப்பிறப்பாக தமிழக அரசு அறிவித்தது… ஆனால் அடுத்த ஆட்சிமாற்றம் 2011 இல் இருந்து மீண்டும் சித்திரை 1 ஐ புதவருடமாக அறிவித்தது.)
இன்று நாம், தைப்பொங்கலை ஏன் கொண்டாடுகின்றோம்… இது புதுவருடப்பிறப்புத்தானா… சித்திரை ஏன் புதுவருடப்பிறப்பானது என்பது பற்றி சுருக்கமாக பார்க்கவுள்ளோம்.
தைப்பொங்கல் என்றால் என்ன? :
உலக மக்களின் வாழ்விற்கு அடிப்படையாக இருக்கும் சூரியனிற்கு நன்றி தெரிவிக்கும் நாள் என்று சுருக்கமாக சொல்லலாம். ( விரிவாக இணையத்தில் தேடிக்கொல்லலாம்.. பல பதிவுகள் இருக்கின்றன. )
இன்னோர் விதமாக சொல்லப்போனால், தைப்பொங்கல் ஆனது “தை திருநாள்” என்றும் அழைக்கப்படுகிறது.
தை (தையல்) என்றால் பெண்(= பூமி(த்தாய்)) ; திரு (=சூரியன்(ஆண்)) என்ற விளக்கம் இருக்கிறது.
விளக்கம் சரி அதை கொண்டாடுவது ஏன் என்ற கேள்விக்கு பதிலாக…
பூமி கிழக்கு மேற்காக தன்னைத் தானே சுற்றியபடி முதலில் தெற்குப்பக்கமிருந்து வடக்குப் பக்கம் நோக்கித் சூரியனைச் சுற்றத்தொடங்கும் நாள் தான் புத்தாண்டாக “தை திருநாள்” ஆக கொண்டாடப்படுகிறது!
இப்போது நாம் பொதுவான விடையங்களை பார்ப்போம்.
தைப்பொங்கல், சித்திரை வருடப்பிறப்பு… இவை இரண்டில் எது தமிழரின் புதுவருடப்பிறப்பு என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கிறது.
இதற்கு ஓரளவு தெளிவான(??) பதிலை அறிய வேண்டும் என்றால் நமது தமிழர்களின் பண்டைய நாட்காட்டிகள் (calendars) பற்றி அறிந்துகொள்ள வேண்டும்.
தமிழர்கள் பல்வேறு கணிப்புக்களின் விளைவாக 5 நாட்காட்டிகளை பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
அவற்றின் விளைவாக ஆதித்தமிழர்களிடையே பொங்கல், சித்திரை, ஆடிப்பிறப்பு, ஐப்பசி விசு,???? போன்ற 5 ஆண்டுத்தொடக்கங்கள் இருந்திருக்கின்றன. இந்த நாட்காட்டிகள் சூரிய ஆண்டு நாட்காட்டி, சந்திர ஆண்டு நாட்காட்டி என்ற ரீதியில் அமைந்தன. அதில் இன்றைய ஆண்டுமுறை (365 1/4 நாட்கள்) உடன் ஒத்துப்போவது சூரிய சந்திர நாட்காட்டிகளே. அவற்றின் பாதிப்பே இன்று நாம் இரண்டு புத்தாண்டு குழப்பத்தில் இருப்பதற்கான காரணம்!
சூரிய நாட்காட்டி சூரியனின் சுழற்சியையும் புவியின் சுழற்சி+சுற்றுகையையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது. ( சூரியனில் இருக்கும் ஒரு கரும் புள்ளையைக்கொண்டே சூரியனின் சுழற்சியை கணித்திருக்கின்றனர் நமது பண்டைய தமிழர்கள்! )
சந்திர நாட்காட்டி சந்திரனின் பின்னால் உள்ள நட்சத்திரத்தை கவணிப்பதன் மூலம் கணிக்கப்பட்டது. (ஒரு முறை தோன்றிய நட்சத்திரம் மீண்டும் தோன்ற கிட்டத்தட்ட இன்றைய 365 நாட்கள் எடுத்துள்ளன.)
( சூரிய சந்திர நாட்காட்டி குழப்பத்திற்கு காரணம், தமிழரின் அழிந்த கண்டமாக அறியப்படும் குமரிக்கண்டத்தில் ஏற்பட்ட கடல் கோல்களின் விளைவுகளே காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் கருதலாம். இது தொடர்பாக ஆராய்ந்தால் வேறு ஒரு பிரிவுக்குள் சொல்லவேண்டி இருக்கும். அதனால் அதை வேறு ஒரு சந்தர்ப்பத்தில் ஆராயலாம்.)
இதில், சூரியன் தான் மக்கள் வாழ்விற்கு முக்கியமானது என்பதனாலும்… தை மாதம் இளவேனில் காலத்தில் வருவதாலும் “தை 1” புதுவருடப்பிறப்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

thai-Pongalதை புதுவருடப்பிறப்பை நாம் மட்டும்தான் கொண்டாடினோமா?
இதற்கு பதில் இல்லை உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட புதுவருடப்பிறப்பு தை 1 என்பது தான்!
16 ஆம் நூற்றாண்டுவரை தை1 (ஜனவரி 14) ஐயே புதுவருடப்பிறப்பாக உலகம் கொண்டாடியுள்ளது! எகிப்தின் மூலத்தை அடிப்படையாகக்கொண்டு உருவான யூரியன் கலண்டர் முறையை பின்பற்றிவந்த காலம் அது… யூலியன் கலண்டரின் (Julian calendar) மூலமானது நமது சூரிய நாட்காட்டியே!
ஜப்பானியர்களின் சம்பிரதாய புதுவருடப்பிறப்பு தமிழர்களின் புதுவருடப்பிறப்பாக அமைவதுடன், அவர்களின் கொண்டாட்ட முறைகளும் தமிழர் கொண்டாட்ட முறைகளுடன் ஒத்துப்போகின்றன. ( பொங்கல் பொங்கும் போது நாம் “பொங்கலோ பொங்கல்” என்று சொல்வது மரபு அவர்கள் “FONKARA -FONKARA ” என்று சொலிறார்கள்!)
அதே போன்று நாம் போகி, தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று 4 நாட்களை கொண்டாடுவது மரபு, அவர்கள் அதில் மாட்டுப்பொங்கலை தவிர்த்து ஏனைய 3 ஐயும் நாம் கொண்டாடும் அதே வகையில் கொண்டாடுகிறார்கள்! )
எப்படி தை 1 புதுவருடப்பிறப்பு இல்லாமல் போனது…
pope gergorianஆரியர்கள் படையெடுப்பின் போது அவர்கள் மாற்றங்களுக்கு உட்படாது பயன்படுத்திவந்த நமது சந்திர நாட்காட்டியை அடிப்படையாக்கொண்ட சித்திரை வருடப்பிறப்பை நமது புதுவருடப்பிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆரிய அரசன் சாலிவாகனன் ஆணைபிறப்பித்தான். அவனின் ஆட்சியின் பின்னர் சித்திரை 1 அன்றே தமிழ் புதுவருடப்பிறப்பு என்ற நிலை உண்டாகியது. ( இன்றுவரை நாம் மீழவில்லை என்பது வருத்தமே… இது தொடர்பான நுணுக்கமான ஆராய்வுகளை விடுத்துவிட்டு ஆட்சிக்கு ஏற்ப புதுவருடப்பிறப்பை மாற்றி மாற்றி கொண்டாடுகின்றோம்.)
தை 1 (ஜனவரி 14) உலக புதுவருடப்பிறப்பு என்றால் ஏன் ஜனவரி 1 புதுவருடப்பிறப்பாக கொண்டாடப்படுகிறது?
16 ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தவ சபை சார்பாக “13 ஆம் பொப் கிரகெரி( Pope Gregory XIII) ” நாட்காட்டியை மாற்றி அமைட்த்தார் அதன்படி திடீரென ஒரே நாளில் 10 நாட்கள் ஆண்டில் இருந்து கழிக்கப்பட்டன. அடுத்து தவணை முறையில் ஏனைய நாட்கள் கழிக்கப்பாடு தமிழரின் நாட்காட்டியில் இருந்து 14 நாட்கள் பிந்தயை புதிய நாட்காட்டியை அறிமுகம் செய்து “கிரகெரியன் நாட்காட்டி” யை அறிமுகம் செய்தார்.!
இவ் மாற்றத்திற்கு பல காரணம் கூறப்பட்ட போதும்… மதம் அற்ற தமிழர்களின் நாட்காட்டி உலக நாட்காட்டியாக இருப்பதை விரும்பாத காரணத்தினாலேயே இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளதாக ஆழ்ந்த ஆராய்வுகள் கூறுகின்றன.
இவ் ஆக்கத்தை எழுதிவிட்டேன். ஆனால், பல தமிழர்களே இதை நம்பப்போவதும் இல்லை. ஆ ஊனா எல்லாமே தமிழர்களது தான் என்று சொல்கிறோம் என்று கலாய்ப்பார்கள். அப்படியே தமிழரதாக இருந்தாலும் இப்போது ஏன் தமிழர் ஆதிக்கம் செலுத்தவில்லை என்று எதிர்க்கேள்வி கேட்பார்கள்… காரணம், குதர்க்கம் மட்டும் பண்ணுவது தான் காரணம் என்பதை அறியாமல்….

“MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்…! – சிறப்பு பதிவு


“MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்…! – சிறப்பு பதிவு

“தோற்றுப்போனது Islamic State (ISIS)-ன் இராணுவ பலமா அல்லது…………..” Mount Sinjar மொசூலிற்கான கிழக்கு வாசல். டிசம்பர் மூன்றாம் வாரம் நிகழ்ந்த சண்டைகளில் Peshmerga Combatஅணிகள் பல வெற்றிகளையீட்டியிருந்தன.
சின்ஜாரின் சத்ர் மலையுச்சியில் நின்று குர்திஷ்தான் ரீஜனல் கவர்மென்டின் (KRG) அதிபர் மசூத் பர்ஸானி இப்படிச் சொன்னார்.
Sinjar  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு SinjarSinjar Mountains
“நாங்கள் 48 மணிநேரத்தினுள் சின்ஜாரின் 3000 சதுர கிலோ மீட்டர்களை கைப்பற்றியுள்ளோம். இஸ்லாமிய அரசின் (IS) அழிவு இங்கிருந்தே ஆரம்பமாகின்றது”.
அமெரிக்க கூட்டு படைகளின் வான்தாக்குதல்களின் துணையுடன்  peshmerga படையணிகளும், இவர்களிற்கு உதவுவதற்காக சிரியாவில் இருந்து வந்த குர்திஷ்களான People’s Protection Units (YPG)அணிகளும், சின்ஜாரின் சொந்தக்காரர்களான Yazidi ஆயுதப் போராளிகளும் இணைந்து இந்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர்.
மிக நீண்ட சண்டைகளின் பின்னர் அந்த நிலங்கள் அவர்கள் வசமாயின. அதிநவீன ஆயுதங்கள், அமெரிக்க சட்டலைட், ராடார் வழிகாட்டல்கள், கூட்டு படைகளின் துல்லியமான வான் தாக்குதல்கள் இந்த சண்டைகளின் வெற்றிகளை குர்திஷ்களிற்கும், யஷீதிகளிற்கும் வழங்கியிருந்தன.
சின்ஜார் சண்டைகளில் இஸ்லாமிய அரசின் இராணுவம் பழைய ஆயுதங்களுடனேயே சண்டையிட்டன. மொசூலில் கைப்பற்றிய ஈராக்கிய இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்த அதிநவீன ஆயுதங்களை ஐ.எஸ். போராளிகள் சின்ஜார் சமர்களில் உபயோகம் செய்யவில்லை. வேகமாக பின்வாங்கியிருந்தனர்.
IRAQ-UNREST  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு isisisisisisisiiiiiiii 1
அதே வேளை பலநூறு போராளிகளையும் இழந்திருந்தனர். peshmerga கைப்பற்றிய 3000 சதுர கிலோ மீட்டர்களில் 2000 சதுர கிலோ மீட்டர்கள் வெறும் பாறைகள். கட்டாந் தரைகள்.
அதையும் தாண்டி எதற்காக இப்படியொரு பெருந்தாக்குதல்?. ஐ.எஸ். எதற்காக இராணுவ அணிகளை இறக்காமல் குலோபல் போராளிகளை மட்டும் குழுக்களாக சின்ஜாரில் வைத்திருந்தது? இ்ந்த கேள்விகளிற்கு பெரிய விடையுள்ளது.
மசூத் பர்ஸானி “குளோபல் வோர் எகைன்ஸ்ட் இஸ்லாமிக் ஸ்டேட் டெரரிஸம்” என்ற வார்த்தைகளின் உள்ளேயுள்ள வரலாற்று அரசியலை புரிந்து கொள்ள முற்படுவோம்.
Yazidi இனம் உலகில் ஒரு மில்லியனுக்கு சற்று கூடவோ குறையவோ உள்ளனர். ஈராக், சிரியா, துருக்கி, ரஷ்யா, ஜோர்ஜியா, உக்ரைன், ஆர்மெனியா, ஜேர்மனி, ஸ்வீடன், ஹொலன்ட் போன்ற நாடுகளில் வாழ்கின்றனர்.
மொசப்பதேமிய நாகரீகத்தில் உருவான இனம் இது. ஈராக்கில் மட்டும் 07 இலட்சம் பேர் வாழ்கின்றனர். “சாத்தானை வணங்குபவர்கள்”. டெவில் வேர்சிப்பர்ஸ் என பொதுவாக அழைக்கப்படுபவர்கள். சூரியன் உதிக்கும் போதும் மறையும் போதும் அதன் திசை பார்த்து வணக்கம் செய்பவர்கள்.
இறைவன் ஒருவன் என்றும் அவன் உலகை பரிபாலிக்க 07 தேவதைகளை (இரகசிய படைப்புக்களை) நியமித்துள்ளதாக நம்பும் இவர்கள் பீகொக் ஏன்ஜல் எனும் “Melek Taus” -ஐ தங்கள் பூமிக்கான கடவுளாக நினைக்கின்றனர்.
இந்த சாத்தானின் திருப்திக்காக அவன் விரும்பும் தேவைகளை இவர்கள் நிறைவேற்றுவார்கள். இவர்கள் இரகசிய சமூகமாக வாழ்கின்றனர். தங்கள் வணக்க வழிபாடுகளை கூட மற்றவர்கள் பார்க்காத வண்ணம் இரகசியமாக மேற்கொள்கின்றனர்.
இலுமினாட்டிகள் எனும் சாத்தானை வழங்கும் ஞானிகள் இங்கிருந்தே உருவாகினர். இவர்களது பிளேக் புக் என்ன செய்ய வேண்டும் என்பதை இவர்களிற்கு உபதேசிக்கிறது. அவர்களது வணக்க ஆலையங்களின் தலைமை ஆலயம் “40 மேன் டெம்பிள்” இந்த சின்ஜியாரிலேயே உள்ளது.
இன்று நாம் காணும் ப்றீமேஷன் எனும் இலுமினாட்டி சமூகத்தின் வேர் இதிலிருந்தே ஆரம்பமாகிறது. அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜேர்மன் என உலகின் வல்லரசுகளையெல்லாம் தம் கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இலுமினாட்டி சமூகத்தின் உதய பூமி சின்ஜார் என்றால் வியப்பாக உள்ளது அல்லவா !!?
Yazidi - women aarti  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு Yazidi women aartiYazidi – womens
துருக்கிய கிலாபாவில் பல முறை இந்த யஷீதிகள் மீது இராணுவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிரச்சேதம் செய்யப்பட்டுள்ளனர். தேசபிரதிஷ்டம் செய்யப்பட்டுள்ளனர். பாதாள சிறைகளில் சாகும் வரை அடைக்கப்பட்டுள்ளனர்.
துருக்கிய கிலாபாவின் வீழ்ச்சிக்கு முதன்மை காரணம் அவர்கள் யஷீதிகள் மீது கைவைத்தது தான் என்பது வரலாற்றில் எழுதப்படாத உண்மை.
துருக்கிய கிலாபாவை வீழ்த்திய போது தப்பியோடியவர்கள் மேற்கைரோப்பா முழுதும் விரவி வாழ்கின்றனர். குறிப்பாக ஜேர்மனியில். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா எதற்காக “சின்ஜாரை” மீட்கும் படி அமெரிக்க வான்படைக்கு கட்டளையிட்டார் என்பதன் முடிச்சு இப்போது அவழ்ந்திருக்குமே.
எதற்காக சுமார் 15,000 பேர் கொண்ட மிலி்ட்டரி யுனிட்கள் ஐ.எஸ்.-உடன் இங்கு சண்டையிட்டனர் என்பதன் முடிச்சும் அவிழ்ந்திருக்குமே.
கற்பாறைகளை கொண்ட பிரதேசத்திற்கான சண்டையில் ஐ.எஸ். என்ன செய்தது என்பது பற்றி இப்போது பார்ப்போம்.
இஸ்லாம் ஏக தெய்வ கொள்கையை வலியுறுத்தும் மார்க்கம். நபி முஹம்மத் அவர்கள் மக்கா வெற்றியின் பின் செய்த முதல் வேலை அங்குள்ள சிலைகளை உடைத்தமை.
இன்றைய இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) தான் கைப்பற்றும் இடங்களில் எல்லாம் முதலில் செய்வது இணைவைத்தலை அழித்ததாகும். தர்காக்கள், ஸியாரங்கள், என்பவை குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.
இஸ்லாமிய அரசின் எல்லைகள் அன்பாரில் ஆரம்பித்து சிரியாவில் முடிகிறது. அது பிரகடனம் செய்த கிலாபாவின் எல்லைகளிற்கு நடுவில் இருந்தது இந்த சின்ஜார்.
al bagdadhi  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு al bagdadhiஅபுபக்கர் அல் பக்தாதி al bagdadhi
இறைவனிற்கு சவால் விடும் சாத்தானை வணங்கும் சமூகம், அதன் ஒரு பிரிவு இலுமினாட்டி சமூகமாக தன்னை ஸ்திரப்படுத்தி உலகில் இரத்தக்களறிகளை உருவாக்கி சாத்தானை அந்த மனித இரத்தங்களினால் அபிஷேகம் செய்து குளிரவைக்கும் அமைப்பு சின்ஜாரில் இருப்பதை எப்படி  அமீருல் முஃமினீன் பக்தாதி  (அபுபக்கர் அல் பக்தாதி) அனுமதிப்பார்.
ஆணையிட்டார். ஐ.எஸ். ஆயுதக்குழுக்கள் சின்ஜாரை விட்டு வெளியேறுமாரு காலவரையறை விதித்தது. பின்னர் சுற்றி வளைத்தது. பல்லாயிரக்கணக்கானவர்கள் வெளியேறினர். அமெரிக்கா வானில் இருந்து உணவுகளையும், ஆயுதங்களையும் போட்டது.
இறுதியில் சின்ஜாரினுள் நுழைந்த இஸ்லாமிய அரசின் போராளிகள் நரவேட்டையாடினர். கையில் கிடைத்த யஷீதிகளை கொன்று தள்ளனர். இஸ்லாத்திற்கு வந்தவர்களை தவிர. பெண்களை அடிமையிட்டனர். கொத்து கொத்தாக கொல்ல ஆரம்பித்தனர்.
சேர்பியாவின் சவக்கிடங்குகளை விடவும் பெரிய சவக்கிடங்குகளை வரும் நாட்களில் ஊடகங்கள் சின்ஜாரில் கண்டு பிடிக்கும். மனித உரிமை அமைப்புக்கள், ஜனநாயக சக்திகளின் பார்வையில் இது மனித படுகொலை.
மன்னிக்க முடியாத குற்றம். பக்தாதி அன்ட் கோவின் பார்வையில் சாத்தானிய வணங்கிகளிற்கான தண்டனை. மார்க்க கடமை. அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அங்கு பெண்கள் ஐ.எஸ். போராளிகளினால் வன்புணர்விற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அடிமையிடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தியுள்ளது. இது பற்றிய உண்மை தன்மைகளை எம்மால் அறிய முடியாதுள்ளது.
இஸ்லாம் அனுமதிக்காத எதையும் மார்க்கத்தின் பெயரில் செய்தால் அவர்கள் தண்டனைக்குரிய குற்றவாளிகள் என்பதிலும் மாற்றுக் கருத்தில்லை. இது இறைவனின் இராணுவம் சாத்தானின் இராணுவம் எனும் இரண்டு அணிகளின் சண்டை.
அதனால் தான் சின்ஜார் சண்டைகளின் ஆயுத பலப் பிரயோகம் என்பது மிகக் கடுமையாக நடாத்தப்பட்டது. சின்ஜார் விடுவிக்கப்பட்டாலும் பல ஆயிரம் யஷீதிகளை ஐ.எஸ். போராளிகள் ஆடுகளை மேய்ப்பது போல் தங்கள் பகுதிகளிற்கு ஓட்டிச் சென்றுள்ளனர்.
அமெரிக்கா நினைத்திருந்தால் அதன் வான் தாக்குதல் வலுவின் ஊடாக முழு சின்ஜாரையும், அதனோடிணைந்த ஏரியாக்களையும் தரைமட்டமாக்கியிருக்க முடியும்.
அப்படியொரு தாக்குதல் நடந்தால் அதில் பல்லாயிரம் இஸ்லாமிய அரசின் போராளிகள் அழிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் அது இந்த சண்டயில் நிறைவேற்ற முடியாத மிலிட்டரி ஒப்சனாக மாறியுள்ளது.
காரணம் ஐ.எஸ். போராளிகள் தங்களுடன் யஷீதிகளையும் மனித கேடயமாக மாற்றி வைத்துள்ளனர். யஷீதிகள் மீது குண்டு போட்டு அவர்களை அழிக்க முடியாது. ♠அமெரிக்க மற்றும் உலக அரசியலில் இலுமினாட்டிகளின் கரம் வலுவானது”.
அதாவது ஈவில் அல்லது டெவில் வேர்சிப்பர்ஸ் உலகம் முழுதும் அதன் தலைமைத்துவங்களில் சிலீப்பர் செல்கள் போல் மறைந்துள்ளனர். பேஸ்மேக்ரா போராளிகளை வைத்தே சண்டைகளை முடித்துக் கொள்ளப்பார்த்த அமெரிக்கா அதில் ஓரளவு வெற்றியும் கண்டுள்ளது.
மீதி யஷீதிகளை மீட்பதென்பது அடுத்த சவாலாக மாறியுள்ளது. ஐ.எஸ்.- பொருத்தவரை சின்ஜாரை கைப்பற்றி தக்க வைப்பது ஒன்றும் ஸ்டடர்ஜிகல் விக்டரியல்ல.
அவர்கள் நோக்கம் இஸ்லாமிய கிலாபாவினுள் சாத்தானிய வணங்கிகள் இருக்க கூடாது என்பதே. அதை நிறைவேற்றவே அவர்கள் அங்கு சென்றனர். அதன் நடுவில் அவர்கள் அழிக்கப்பட்டு விரட்டப்பட்டுள்ளனர்.
மீண்டும் அங்கு சாத்தானிய ஆராதனைகள் ஆரம்பமாகியுள்ளன. ஸோ மீண்டும் ஐ.எஸ். அதனை அழிக்க முயலும். அமெரிக்காவிற்கு அழுத்தம் கொடுக்க எப்படி ஸியோனிஸம் உள்ளது அப்படியே ப்றீமேஷனும் உள்ளது. மறை கரம் இது.
இது தான் சின்ஜார் யுத்தம். சற்று ஆழமாக வரலாற்றை நோக்கினால் இதன் உண்மைகள் விரிந்து செல்வது உங்களிற்கும் புரியும்…./p>

இலுமினாட்டிகள்  என்பவர்கள் யார்?  அவர்களை பற்றி  அறிந்துள்ளீர்களா?

இலுமினாட்டி பற்றி தெரியாதவர்கள் முதல் முறையாக தெரிந்து கொள்ளும் நாளில் தூக்கத்தைத் தொலைப்பது நிச்சயம். தெரியாதவர்களுக்காக  இலுமினாட்டி பற்றி ஒரு சிறு அறிமுக கட்டுரை.
உலகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சர்வதேச நாட்டாமைகள்தான் இலுமினாட்டிகள். உலக அரசியல் அமைப்புகள், மதங்கள், வங்கிகள், ஹாலிவுட், மீடியாக்கள், நுகர்பொருட்கள் எல்லாம் எல்லாம் இவர்களது கையில். எதெல்லாம் இவர்களுடையது என்று ஆராய்வதைவிட எதெல்லாம் இன்னும் இவர்களுக்கு சொந்தமாகவில்லை என்பதை வேண்டுமானால் எளிதாக எண்ணிவிடலாம். இன்றைய உலகைப் பொறுத்தவரை இயற்றலும் ஈட்டலும் காத்தலும் அழித்தலும் இவர்கள் கையில்.
எகிப்திய பார்வோனின் இரத்தவழி வம்சங்களாகிய 13 முதல் 20 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்தான் இந்த இலுமினாட்டிகள். சில உலக அரசியல் தலைவர்களும், மிகப்பெரிய பணமுதலைகளும், கலைத்துறையினரும், விஞ்ஞானிகளும் இதில் அடக்கம். இவர்கள் வரலாறு பல நூற்றாண்டுகளைக் கடந்தது. உலகில் இதுவரை நடைபெற்ற அத்தனை புரட்சிகளையும், இரு உலகப்போர்கள் உட்பட அத்தனை யுத்தங்களையும் தங்கள் சொந்த ஆதாயத்துக்காக நடத்தியவர்கள் இவர்கள்தான்.
இதை ஏன் அவர்கள் செய்ய வேண்டும்?
New World Order என்ற பெயரில் உலகம் முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்டு வந்து அதை ஆளவேண்டும் என்பதே இவர்கள் நோக்கம், அதில் கிட்டத்தட்ட வெற்றியும் பெற்றுவிட்டார்கள் என்றே சொல்லலாம்.
இலுமினாட்டிகளின் சிறப்பியல்புகளில் ஒன்றை நீங்கள் தெரிந்துகொள்வது இக்கட்டுரையைப் புரிந்துகொள்ள உதவும். இவர்கள் சொல்லி அடிப்பதில் கில்லாடிகள்.
பில்லி சூனியம், நரபலிகள், மாந்திரீகம், அஸ்ட்ராலஜி, நியூமராலஜி, occultism போன்றவற்றில் இவர்களை மிஞ்ச உலகத்தில் ஆளில்லை.
3,6,7,9, 11, 22, 33, 333, 66, 666 போன்றவை இவர்களது முக்கிய எண்கள். சைத்தானுக்கு செய்யும் சடங்குகளாக இவர்கள் குறிப்பிட்ட நாளில் சில குறிப்பிட்ட செயல்களை செய்வார்கள்.
அது முழுக்க முழுக்க எண்களின், வானசாஸ்திரத்தின் முக்கியத்துவத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இவர்கள் தாங்கள் செய்யப்போவதை ஏதேனும் ஒரு மீடியம் வழியாக ஏற்கனவே வெளியே சொல்லியும் விடுவார்கள், ஆனால் அதை கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல.
பெரும்பாலும் சம்பவங்கள் நடந்த பின்னரே அதை உலகம் புரிந்து கொள்ளும். அப்படி முன்னரே கண்டுபிடித்தாலும் எந்தக் கொம்பனாலும் அதைத் தடுத்து நிறுத்தவும் முடியாது.
உதாரணத்துக்கு இரட்டை கோபுர இடிப்பு நடத்தப் போவது பற்றி (அதை செய்ததும் இந்தப் புண்ணியவான்கள்தானாம்) சம்பவம் நடப்பதற்கு சிலமாதங்கள் முன்னர் வெளியிட்ட 20$ அமெரிக்க நோட்டில் மறைமுகமாக சொல்லிவிட்டார்களாம், மட்டுமன்றி சம்பவத்துக்கு பல ஆண்டுகளுக்கு முன் வெளியான புகழ்பெற்ற காமிக்ஸ் புத்தகங்களின் அட்டைகளிலும் ஆங்காங்கே இந்த இரகசியம் வெளியிடப்பட்டிருக்கிறது, ஆனால் அது அப்போது யாருக்கும் தெரியவில்லை.
20dollar  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு 20dollar
iluminedikal  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு iluminedikal
யார் இவர்கள்? ஏன் இதைச் செய்கிறார்கள்? இவர்கள் ஏன் வெளிச்சத்துக்கு வருவதில்லை? தாங்கள் செய்யப்போவதை யாருக்கு, ஏன் முன்கூட்டியே சொல்லுகிறார்கள்? அது யார் மூலம், எப்படி வெளிவுலகத்துக்கு கசிகிறது?
இலுமினாட்டிகள் யாரும் தன்னை இலுமினாட்டி என்று அறிவித்துக் கொள்ளமாட்டார்கள். இது ஒரு இரகசியக் குழு, இரகசியம்தான் இவர்கள் பலம். இதை ஏன் வெளியே சொல்லுகிறார்கள் என்றால் மக்களுக்காக அதை சொல்லுவதில்லை.
உலகம் முழுவதிலுமுள்ள இலுமினாட்டிகள் தங்களுக்குள் போன் மூலமாகவோ கடிதத்திலோ பேசிக்கொள்ள மாட்டார்கள், இதுபோன்ற சமிஞ்கைகள் மூலமே தங்கள் சக இலுமினாட்டிகளிடம் தகவல்களைப் பரிமாறுகிறார்கள்.
அவற்றை decode செய்து கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபம் அல்ல. இலுமினாட்டிகளின் நடவடிக்கைகளை ஆராய்ந்து, அவர்கள் தகவல்களை decode செய்து மக்களுக்கு வெளியிடும் conspiracy theorists பலர் இருக்கிறார்கள்.
அவர்களது கட்டுரைகள் புத்தகங்கள் மூலம் இணையதளங்கள் வழியே பல நூற்றாண்டுகளாக திரைமறைவில் உலகை ஆட்டிவைத்துக் கொண்டிருந்த இலுமினாட்டி இயக்கம் பற்றிய இரகசியங்கள் இப்போது ஓரளவுக்குக் கசியத்துவங்கி இருக்கிறது.
இணையத்தில் இன்றைய ஹாட் டாபிக் இதுதான். ஆனால் இது கொஞ்சம் ஓவராகவே ஆகிவிட்டது எனவும் சொல்லலாம், கொசு கடித்தால்கூட அதையும் இல்லுமினாட்டி சதி என்று அலறும் பைத்தியங்களும் இன்று பெருகிவிட்டார்கள்.
மலேசிய விமானம் MH370 தொலைந்த அதேநேரத்தில் ரஷ்யா உக்ரேன் பிரச்சனை இன்னொரு பக்கம் நடந்து கொண்டிருந்தது. இரண்டையுமே இலுமினாட்டி சதி என்று பலரும் கூறிவந்தனர்.
ஆனால் அதற்கான ஆதாரம் அப்போது ஒன்றும் சிக்கவில்லை. இலுமினாட்டிகள்தான் சொல்லி அடிப்பவர்களாயிற்றே இதுபற்றி ஏதாவது முன்கூட்டியே சொல்லி வைத்திருக்கிறார்களா என்று ஆராய்ந்து சில conspiracy theorist-கள் சில திடுக்கிடும் தகவல்களை இணையத்தில் வெளியிட்டிருந்தார்கள். அந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டுதான் இந்தக் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது.

trident  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு trident
இலுமினாட்டிகளின் மதத்தில் Poseidon என்ற ஒரு நெப்ட்டியூன் கடவுளுண்டு, இது கடலுக்குரிய கிரெக்கக் கடவுளாகும். இதன் கையில் ஒரு மும்முனை குத்தீட்டி வைத்திருக்கும். அந்த மும்முனை குத்தீட்டி(Trident) அதிகாரத்தின் அடையாளமாகும்.
உலகத்தின் அதிகாரம் கடவுளிடமிருந்து சைத்தானுக்கு கைமாறுவதை கொண்டாடும் விதமாக கடல் தெய்வமான நெப்ட்டியூனுக்கு கடலில் நடத்தும் ஒரு சடங்காகவும் 2014-ஆம் ஆண்டில் இந்த மும்முனை குத்தீட்டி சின்னத்தை(Trident) எல்லோருடைய ஆழ்மனதிலும் பதிக்கும் விதமாகவும் அதை உலகம் முழுவதிலும் பிரபலப்படுத்துவது இவர்கள் நோக்கம்.
மக்களது ஆழ்மனதில் இதை ஏன் பதிய வைக்க வேண்டும் என்று conspiracy theorist-களைக் கேட்டால் அவர்கள் இலுமினாட்டிகளை mind manipulators என்று அழைக்கிறார்கள். இவர்கள் இன்று உலகத்தை ஆண்டு கொண்டிருப்பதே மக்களை உளவியல் ரீதியில் மூலம் mind control செய்துதானாம்.
2014-ஆம் ஆண்டில் தங்கள் மும்முனை குத்தீட்டி செய்யப்போகும் காரியத்தை மசெராட்டி என்ற புகழ்பெற்ற இத்தாலிய கார் விளம்பரத்தில் ஏற்கனவே சொல்லிவிட்டார்கள்.
We have prepared, now we strike என்று தெளிவாகவே சொல்லுகிறார்கள். உடனே மும்முனை குத்தீட்டி சின்னம் பொறித்த கார் நம்மை நோக்கி சீறிப்பாய்ந்து வருகிறது. 

அடுத்து MH370-க்கு நேரப்போவதை முன்கூட்டியே 2013 இல் வெளியான Man of Steel என்ற ஹாலிவுட் படத்தில் அறிவித்துவிட்டார்கள்.
ஒரு எரிந்து கொண்டிருக்கும் மும்முனை குத்தீட்டி போன்ற விண்கலம் இந்தியப் பெருங்கடலில் விழப்போவதை அந்தப் படம் முன்னறிவிக்கிறது.
மேலும் எண் 370-ஐத் தூக்கப்போகிறோம் என்பதையும் அதே படத்தில் தெளிவாகக் காட்டிவிட்டார்கள். Man of Steel படத்தை ஆராய்ந்து conspiracy theorists வெளியுட்டுள்ள வீடியோக்கள் உங்கள் பார்வைக்கு:
அதற்குப் பின்பு ஒரு ஜுலை 17-அன்று MH-17 இன்னொரு மலேசிய விமானம் உக்ரேனில் சுட்டி வீழ்த்தப்பட்டதை யாவரும் அறிவோம். இதில் ஒரு ஒற்றுமை என்னவென்றால் மசெராட்டி, உக்ரேன், மலேசிய விமானம் அனைத்துக்கும் ஒரு பொதுவான ஒற்றுமை உண்டு அதுதான் மும்முனை ஈட்டி லோகோ.
logos  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு logos
இன்னொரு கூடுதல் தகவல், உலகத்தின் ஆளுகை இறைவனிடமுருந்து சைத்தானுக்கு கைமாறியதன் அடையாளமாக இரு மும்முனை ஈட்டிகள் இன்னொரு முக்கியமான இடத்திலும் இப்போது வைக்கப்பட்டுள்ளது, அதுதான் நியூயார்க் இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் எழுப்பப்பட்டிருக்கும் நினைவகம்.
மலேசியன் ஏர்லைன்சில் உள்ள இரட்டை மும்முனை குத்தீட்டிக்கும், இரட்டைக் கோபுரம் இடிக்கப்பட்டதன் நினைவாக நியூஜெர்ஸியில் வைக்கப்பட்டிருக்கும் இரட்டை மும்முனை ஈட்டிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு அது சைத்தானுக்குரிய எண்ணாகிய 33-ஐயும் குறிக்கிறது.
911  “MOUNT SINJAR” சண்டைகளும் அதன் பின்னால் உள்ள இரகசியங்களும்...! - சிறப்பு பதிவு 911
இன்னும் வரும் நாட்களில் நீங்கள் திரும்புமிடமெல்லாம் மும்முனை குத்தீட்டியை உலகம் முழுக்க பார்க்கலாம். மும்முனை குத்தீட்டியை மக்கள் ஆழ்மனதில் பதிக்கும் விதத்தில் இனி திரையுலக  நாயகர்கள்கூட படத்தில்  அதைத் தூக்கிக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுப்பார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்..
வெறும் இந்த ஆதாரங்களை வைத்து இதுதான் நடந்திருக்கும் என்று எப்படி நம்புவது என்று கேட்டால், இதில் எழுதியிருப்பது எதுவுமே எனது சொந்தக் கற்பனையோ கருதுக்களோ அல்ல, conspiracy theory என்பது வெவ்வேறு புள்ளிகளை இணைத்து ஒரு புரிந்துகொள்ளுதலுக்கு வருவதாகும்.
conspiracy theorists இணையத்தில் ஆங்கிலத்தில் சொல்லுவதை தமிழில் உங்கள் பார்வைக்கு கொண்டு வந்திருக்கிறேன்.அவ்வளவே! அவர்களால்கூட இதற்கு ஒருபோதும் சட்டம் ஏற்றுக்கொள்ளும்படியான ஆதாரங்களைக் காட்ட இயலாது. இது எப்போதும் கோட்பாட்டளவிலேயேதான் நிற்கும். நம்புவதும் நம்பாததும் அவரவர் விருப்பம்.
கட்டுரை எழுதப்பட்டதற்கு ஆதார வீடியோக்கள்:
https://www.youtube.com/watch?v=oI2UcmpcdQA

திபெத்திய மர்ம குகைகள் – Part 1


திபெத் / நேபால் சில குறிப்புகள்  :
திபெத் 16000 அடி உயரத்தில் உள்ள தன்னாட்சி பகுதி என்று சொல்லப்பட்டாலும் பல பகுதிகள் சீன மக்கள் குடியரசுப் பகுதி என்ற வரையரை சீனாவால் குறிப்பிடப்படுகிறது. சீன ஆளுகையின் கீழ் உள்ள பிரச்சினைக்குறிய பகுதிகளும் அடக்கம்.
திபெத் இனம் தவிரவும் 10க்கு மேற்பட்ட இன மக்கள் இப்பகுதியில் வசிக்கிறார்கள்.
இந்த குகைகளில் எப்போதும் 8 டிகிரி செல்ஸியஸ் வெப்பம் நிலவுகிறதாம்.
பல ஆசிய ஆறுகளின் பிறப்பிடம் இதுதான். இந்நிலப்பரப்பை இந்த ஆறுகள் அறுத்தெடுத்துள்ளன வெள்ள அபாயம் கருதியும் அக்காலத்தில் உயரமான குகைகளில் வசித்திருக்கலாம். மணற் பாங்கு வடிவ குகைகள் என்று சொல்கிறார்கள்.
புவியின் இளமையான பீட பூமி இது எனவும் “உலகத்தின் கூரை” என்றும் குறிப்படப்படுகிறது.
உலகின் மூன்றாம் துருவப்பகுதி என்றும் புவியியலாளர்களால் வர்ணிக்ப்படுகிறது.
அக்சாய் சின் (Aksai Chin) என்பது காஷ்மீரின் வடமேற்கு நிலப்பகுதியாகும். இப்பகுதி யாருக்கு சொந்தம் என்பதில் பல ஆண்டுகளாக சர்ச்சை உள்ளது. இந்தியாவினால் உரிமை கோரப்படும் இதனை இப்பகுதி தற்சமயம் சீனக் கட்டுப்பாட்டில் உள்ளது. மிகக் குறைவான மக்களே வசிக்கும் இந்தப் பகுதி இந்தியாவுடன் சம்மு காசுமீர் 1947ல் இணைந்த போது, அதிகாரப்பூர்வமாக இந்தியவுடன் இணைந்தது. ஆனால் இந்திய-சீன எல்லைக் கோடான மக்மோகன் கோட்டினை சீனா ஏற்றுக் கொள்ளவில்லை. அக்சாய் சின்னை தனக்கு சொந்தமான பகுதியாகவே கருதியது. எல்லைத் தகராறு பெரிதாகி 1962ல் இந்திய சீனப் போராக வெடித்தது. இதில் சீனா வெற்றி பெற்ற பின்னர் இப்பகுதி முழுவதும் சீன அரசின் கட்டுப்பாட்டில் வந்து விட்டது. தற்போது இதன் வழியாக சீனாவின் சின்சியாங் மாகாணத்தையும் திபெத்தையும் இணைக்கும் சாலையைச் சீன அரசு அமைத்துள்ளது.
.
மனிதர்களால் கட்டப்பட்ட வித்தியாசமான குகைகள் முஷ்டங் பகுதியில் நிறைய உள்ளன.
மத்திய நேபாளத்தின் வடக்கு பகுதியில் இருக்கும் முஷ்டங் [Mustang ]மலைபாங்கான பகுதி (காளி கந்தகி ஆற்று பள்ளத்தாக்கு) தொல்பொருள் ஆய்வாளர்களுக்கு பல ஆச்சர்யங்களும் மர்மங்களும் நிறைந்த பகுதியாக இருக்கிறது.
ஆராய்சிக்கு உட்படுத்தப்பட்ட குகைகளினுள் நுழைவது எப்படி ? என்பது புலப்படவில்லை. உள்ளே செல்வதற்கு பாதைகள் கிடையாது. ” ஒரு கிளிப் ஹாங்கர்” போலத்தான் இந்த குகைகளை ஆய்வு செய்யவேண்டும்.
தரைப்பகுதியில் இருந்து சுமார் 155 அடி உயரத்தில் இந்த குகைகள் தென்படுகின்றன. ( சுமார் 8 முதல் 9 மாடி உயரம்). பெரும்பான்மையானவை 3000 ஆண்டுகள் பழமையானவை ( பெளத்தமதம் பரவுவதற்கு முன்பிருந்தவை)
சுக்ர சாகர் ஸ்ரேஷ்தா (Nepal’s archaeologist) எனும் அகழ்வாராய்சியாளர் ஏறக்குறைய 10000 குகைகள் இருப்பதாக மதிப்பிடுகிறார். இவற்றில் பெரும்பான்மையானவை ஆராய்சிக்கு உட்படுத்தப் பாடாதவை மட்டுமல்ல இன்னும் பல குகை இருக்குமிடமே கண்டறியப்படாமல் இருக்கிறது.
இவ்வளவு உயரத்தில் இந்த குகைகளை எப்படி உருவாக்கினார்கள் ?
எதற்காக யார் இதை உருவாக்கியது ? இப்படி பல கேள்விகள் முதலில் இந்த ஆய்வு மேற்கொண்ட குழுவிற்கு ஏற்பட்டது.
இந்த குகைகளை பீட் எதென்ஸ் (தொல்பொருள் ஆய்வாளர்) என்பவரின் தலைமையில் ஒரு குழு ஆய்வு செய்தது, இவர் முதலில் 1981 ல் இப்பகுதியில் டிரெக்கிங் மேற்கொண்டார். 2011 ல் எட்டாவது முறையாக இப்பகுதியில் ஆய்வு செய்தார்.
மார்க் அலெண்டெர்ஃபெர் (கலிபோர்னிய பல்கலைக்கழகம்). இவர்களோடு ஜாக்குலின் இங் என்ற பெண் ஆராய்சியாளரும் (வெஸ்டர்ன் மெக்சிகன் யுனிவர்சிட்டி), மோகன் சிங் லாமா என்ற நோபாளிய தொல்பொருள் ஆய்வாளரும் உடனிருந்தனர்.
சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு வரை முஷ்டாங் சுருசுருப்பான ஒரு பகுதியாக இருந்திருக்கிறது. பல அரசர்கள் ஆண்ட பகுதி. முஸ்டாங் மாகாணம் பண்டைய திபெத்திய பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. புத்தமத வழிபாட்டிற்கும், கலைக்கும் பெயர் பெற்ற இடமாக இருந்தது. இங்கிருந்து அண்டை நாடுகளுக்கு உப்பு வணிகம் நடைபெற்றது. இந்த வணிகத்திற்கு உப்பு ஏற்றி சென்ற வண்டி தடங்களே சாட்சி. 17 ஆம் நூற்றாண்டிற்கு பிறகு இப்பகுதி பொருளாதாரத்தில் பின் தங்கியது காரணம் குறைந்த விலையுள்ள உப்பு இந்தியாவில் கிடைக்க ஆரம்பித்ததே என்று சொல்கிறார்கள்.
சாம்ட்ஜோங்க் எனும் பகுதியிலும் நிறைய குகைகள் காணப்படுகின்றன.
நேபால் (நே என்றால் புனித , பால் என்றால் குகைகள்)
ஒரு காலத்தில் செழிப்பான பகுதியாயிருந்த இந்த பகுதியில்;
அறிய சிலைகளும், ஓவியங்களும் நிறைந்த கோவில்கள் சிதைவுக்குள்ளாகின. ஒரு கட்டத்தில் எவ்வித தொடர்பும் அற்றுப்போன பகுதியாகிப் போனது.
சில குடும்பங்கள் இன்னும் இந்த குகைகளில் வசிக்கிறார்கள். குளிர் காலங்களில் வெதுவெதுப்பாக (மிதமான வெப்பம்) இருப்பதாகவும் ; குடி நீர் கிடைப்பது இப்பகுதியில் கடினமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
மர்ம நிகழ்வுகள் :
ஆய்வுக் குழுவினரில் இருவருக்கு குகைகளில் அடுத்தடுத்த ஆய்வின் போது , அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டு ஆய்வு தடை பட்டது (2010)
லிங்கன் எல்ஸ் ( விடியோ கிராஃபர்) தலை ஹெல்மெட் எடுத்த சமயத்தில் கற்கள் பொறிந்து தலையில் விழுந்து மண்டை எழும்பு உடைந்து ஆபத்தான கட்டத்தில் காத்மாண்டுவில் சிகிச்சை பெற்று பின் நலமடைந்தார்.
இன்னொருவர், ரிச்சர்ட் (மலை ஏறி மற்றும் போட்டோகிராஃபர்) விழுந்து அடிபட்டதில் முதுகு எலும்பு முறிவு ஏற்பட்டு ஹெலிஹாப்டரில் மீட்கப்பட்டார்.

குடிதண்ணீர் கொண்டுவர ஒரு புதிய டெக்னாலஜி


நல்ல குடிநீர் இல்லாமல் உலகமுழுக்க பல மில்லியன் மக்கள் தவித்துக் கொண்டு இருக்கிறார்கள். குடிதண்ணீர் இல்லாமல் தவிக்கும் ஆப்பிரிக்க மக்களுக்கு குறிப்பாக கெனோரி தீவிற்கு கீரீன்லாந்திலிருந்து தண்ணீர் கொண்டுவரும் ஒரு மெகா திட்டம் பிரெஞ்சு பொறியாளர் ஒருவருக்கு உதித்தது. அவர் பெயர் ஜியோர்ஸ் மெளஜின்.
பெரிய ஐஸ் பாளங்களை போலார் (ஆர்டிக்) பகுதியில் இருந்து சக்திவாய்ந்த இழுவைப்படகு மூலம் இழுத்து கொண்டு வருவது தான் திட்டம். அதாவது பெரிய ஐஸ் பாளங்களை (Iceberge) க்ரீன்லேன்டிலிருந்து ஆப்பிரிக்க வடமேற்கு கடற்பகுதியில் உள்ள கெனேரி தீவிற்கு 140 நாட்களுக்குள் கொண்டுவருவது. இதனால் இப்பகுதியின் 35,000 மக்கள் பயன் பெருவார்கள்.
சரி திட்டத்தை செயற்படுத்துவது எப்படி ?. கம்யூட்டர் சிமுலேசன் மூலமாக 7 மிலியன் டன் எடையுள்ள பெரிய ஐஸ் பாளங்களை கொண்டுவர முடியும் என கணக்கிட்டார்.
இந்த புராஜக்டிலுள்ள சிரமங்கள் :
கட்டி இழுத்து வரும் போது ஐஸ்பாளங்கள் உருகி பல துண்டுகளாக சிதறலாம், புயல் மற்றும் 200 அடி உயர அலைகள் வரலாம். அடுத்து செலவு.
40 அடி உயர இன்சுலேட்டின் உறையால் ஐஸ்பாளத்தை சுற்றி போர்த்தி கடலுனுள்ளாக கொண்டுவருவது இதனால் வேக மாக உருகுவது தடுக்கப்படும். இதற்காண செலவு 11.5 மிலியன் டாலர்கள் 35000 பேர் ஒருவருடம் குடிநீர் உபயோகிக்கலாம் என்கிறார் மெளஜின்.

திட்டம் இன்னும் செயல் படுத்தப்படவில்லை.

பெர்முடா முக்கோணம் ஒரு தொடரும் மர்மம்







அட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி(வடபுளோரிடா),ப்யூர்ட்டோரிகோ தீவு,பெர்முடா இவற்றின் மும் முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [” சாத்தானின் முக்கோணம்” ]என அழைக்கப்படுகிறது.அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி.
இப்பகுதிக்குள் சென்ற அனேக கப்பல்கள், விமானங்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின.
எதிர் பாராத நிகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டதாகவும் திசைகாட்டி முட்கள் தாறுமாறாக சுழன்றதால் இப்பகுதிக்குள் நுழையாமல் வேறு வழியாக திரும்பி விட்டதாக மாலுமி கிறிஷ்டோபர் கொலம்பஸ் தம் அனுபவத்தில் தெரிவித்துள்ளார். மேலும் “நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்” உள்ள பகுதி என்றும், தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள் என இப்பகுதியை வர்ணித்துள்ளார்.
அனேக பத்திரிக்கையாளர்கள் கடல் ஆராய்ச்சியாளர்கள் பெர்முடா முக்கோணம் 500 ஆண்டுகளாக இதன் மர்மம் பற்றி கதை கதையாக எழுதியுள்ளார்கள். புத்தகங்கள் எழுதப்படுட்டுள்ளன. 1950 முதல் 1975 குள்ளாக மட்டும் சிறிதும் பெரிதுமாய் 428 கப்பல்கள் மாயமாய் மறைந்துள்ளன.
பல்வேறுவிதமான அனுமானங்களும் ஆராய்சிகளும் விடை தெரியாமல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவற்றில் சில ;
கடலினுள் மூழ்கிப்போன அட்லாண்டிஸ் :
ஆர்கியாலஜிஸ்ட் (Edgar Cayce 1968 )எட்கர் கெயிஸ் கடலில் மூழ்கி அழிந்துபோன அட்லாண்டிஸ் நிலப்பரப்பின் மலை முகடு பெரிய சுவர் போல பைமினிக்கு அருகில் அதாவது பெர்முடா முக்கோணப் பகுதிக்குள் இருப்பதாக கண்டுபிடித்தார். பாகாமாஸில் மேலும் பல தடயங்கள் அழிந்து போன அட்லாண்டிஸ் நகரத்தை பற்றி கூறுகிறது. அட்லாண்டிஸ் நகரத்தில் இருந்தவர்கள் மேலான அறிவு மிக்கவர்கள் அவர்களிடம் சக்தி மிக்க கிரிஸ்டல் இருந்ததாகவும், இன்னும் இவை தான் சக்தி அலைகளை பரப்பிக்கொண்டிருப்பதாகவும் இதன் காரணமாகவே ஏரியா 51 எனும் இபபகுதிக்குள் நுழையும் எவையும் (விமானம், கப்பல்கள்) எவ்வித சுவடும் இன்றி மறைந்து விடுவதாக நம்பப்பட்டது.
இப்பகுதி ஏலியன்ஸ் வந்து போகும் தள மாக செயல்படுவதாகவும் இங்கு எப்போதும் கண்ணுக்கு தெரியாத அதிக டிராபிக் இருப்பதாகவும் இப்பகுதியில் கடந்த நூற்றாண்டில் மட்டும் 50 கப்பல்களும் 20 விமானங்களும் காணாமல் போன தாகவும் 1000 பேர் கடந்த 500 ஆண்டுகளில் தொலைந்து போனதாகவும் U.S. நேவி மற்றும் கடலொர பாதுகாப்பாளர்கள் கூறுகிறார்கள். இந்த பகுதியில் ஒரு நீல நிற பெருஞ் சுழற்குழிகள் சுற்றிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்தனர்.
தற்போதைய ஆராய்ச்சியாளர்கள் ராப்மெக்கெரிகர், புரூஸ்கெனான் இதையே எலக்ட்ரானிக் சுழற்மேகங்கள் (electronic Fog)என சொல்கின்றனர்.
1945ல ஃப்லைட் 19 எனும் போர்விமானம் வழக்கமான பயிற்சியில் இருக்கும் போது இப்பகுதியில் காணாமல் போய்விட்டது அதில் 19 பேர்கள் இருந்ததாகவும் இதை தேடி சென்ற 14 பேர் அடங்கிய குழு 5 டார்பிடோக்களும் அதே பாணியில் மறைந்து விட்டதாகவும் ஒரு ரிக்கார்டு இருக்கிறது. மேலும் இந்த விமானங்கள் செவ்வாய் கிரகத்திற்கு வேற்று கிரக வாசிகளால் கடத்தப்பட்டிருக்கும் என்ற கற்பனையும் உலவுகிறது.
இப்பெரிய பரப்பில் நீர்மேல் பகுதிகளிலும் வானப்பகுதிகளிலும் மீத்தேன் வாயுக்கள் அடர்த்தி அதிகமா இருப்பதால் நீர் பரப்பை மிக லேசாக்கி இதனுள் செல்லும் கப்பல்களை மூழ்கடித்திருக்கும் எனவும் சொல்லப்படுகிறது இதற்கான ஆதாரமும் இன்றி இக்கூற்றும் மறுக்கப்படுகிறது.
இப்பகுதியில் திசைமானிகள் ஒழுங்காண திசை காட்டுவதில்லை. சில இடங்களில் கர கரவென சுழழுவதாக கூறுகிறார்கள். பலவிதமான ஆராய்ச்சிகள் செய்து பார்க்கப்ட்டதில், காந்த புல மாறுதல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன. பூமியில் இரண்டு இடங்களில் மட்டுமே காந்த புல மாற்றம் உள்ளது ஒன்று சரியான பூமியின் வடக்கு பகுதி மற்றொன்று காந்தபுல வடக்கு நேர் கோட்டுப்பகுதி. இந்த இடங்களில் மட்டுமே திசைகாட்டி [காம்பஸ்] தவறுகிறது. சக்திவாய்ந்த எலக்ட்ரானிக் சுழற்மேகங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
கடலினுள் மெக்சிகோவில் தொடங்கும் கல்ப்நீரோட்டம் புளோரிடா கணவாயினூடாக வட அட்லாண்டிக் வரை செல்கிறது. இதன் அகலம் 40 முதல் 50 மைல் தொலைவு பரந்துபட்டது. மேலும் இதன் வேகம் மிக அதிகம். தட்ப வெப்பநிலை மாற்றம் நிகழ்த்துவது இந்த வெப்ப நீரோட்டம்.
பெர்முடா முக்கோணப்பகுதியில் 28000 அடி ஆழம் கொண்ட பெரிய நீர் சுழல், 80 அடி உயரே எழும்பும் பிரம்மாண்ட அலைகள் இப்பகுதியினுள் நடப்பவகைகளை மறைக்கின்றன. சாட்டிலைட் புகைப்படங்கள் இதை உறுதிப்படுத்துகிறது.
இப்பகுதியில் நிலையற்ற காலநிலைமாற்றம் நிலவுகிறது. கரீபியன் அட்லாண்டிக் கூம்பு புயல் எப்போது வேண்டுமானலும் சுற்றி சுழன்று வரும்.
மனித தவறுகள் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
எது எப்படியோ உலகத்தின் விடை தெரியாத மர்ம பகுதி இது. காலம் தான் பதிலளிக்க வேண்டும்.
இப்பகுதியில் மாயமானவைகளின் லிஸ்ட்
{பெரிய பட்டியலில் இருந்து சிலவற்றை மட்டுமே குறிப்பிடுகிறேன் அடைப்புகுறிக்குள் காணாமற்போன ஆண்டு }
282 டன் எடைகொண்ட மேரிசெலஸ்டி எனும் கப்பல் [1872]
USS சைக்ளோப்ஸ் 309 பயணிகளுடன் மாயமானது [ 1918 மார்ச் 4]
ராய் ஃப்கு மரு ஜப்பானியக்கப்பல் [1921]
டக்ளஸ் PC 3 மியாமி நோக்கி சென்றது இதில் 32 பேர் இருந்தனர். [1948 டிசம்பர் 28 ]
அமெரிக்க பிரிடிஸ் ஏற்வேஸ் க்கு சொந்தமான பயணிகள் விமானம்[1948], மற்றும் ஜமைக்காவிலிருந்து கிங்ஸ்டன் நோக்கி சென்ற விமானம் [1949]
SS மரைன் சல்பர் குயின் எண்ணெய் கப்பல் புளோரிடா வழியாக சென்றது இதில் 39 பேர் இருந்தனர் [1963 பிப்ரவரி 4]

இலுமினேட்டி மர்மக்குழுவின் ரகசியங்கள்! illuminati and secret codes


இலுமினேட்டி (illuminati)! இந்த மர்மக்குழுமச் சொல்லில் புதைந்துள்ள மர்மத்தின் அடிப்படையை போன பதிவில் பார்த்திருந்தோம்.
( தவறவிட்டவர்கள் இதைசொடுகிப்பார்க்கவும்!)
இன்று இந்த மர்மக்குழு பற்றிய மேலும் சில விளக்கங்களையும், திட்டமிடல்களையும் பார்ப்போம். பின்னர், எதிர்வரும் சில மாதங்களில் நடாத்தப்பட இருக்கும் பாரிய சதித்திட்டத்தை ஆராயலாம்!
இலுமினேட்டி, உலகம் பூராவும் பல மூளைகளில் சில மர்ம நபர்களை அடிப்படையாக வைத்து இயங்கும் இவ் அமைப்பு, தமக்குள் தகவல்களை பரிமாற்றிக்கொள்ளவும் தமது தனித்துவத்தை காட்டவும், பல குறியீடுகளை பயண்படுத்துகிறார்கள். இக் குழுவின் செயற்பாடுகளை முடக்கும் எண்ணத்துடன் உலகின் பல சாதாரண அறிவுஜீவிகள் இணைந்து உருவாக்கி செயற்பட்டுவரும் அன்டி இலுமினேட்டி (anti illuminati ) இக் குறியீடுகளை வெளிக்கொண்டுவருவதில் மிகுந்த பிராயச்சித்தம் மேற்கொண்டுவருகின்றது. சில குறியீடுகளை வெளிக்கொண்டுவந்தும் உள்ளனர். அதில் முதன்மை பெறுவது “ஒற்றைக்கண்” ஆகும்!
ஒற்றைக்கண்!
இலுமினேட்டி என்ற சொல்லை தெரிந்த அனைவருக்கும் இவ் குறியீடு தற்போது தெரிந்திருக்கும்.
இங்கு படத்தில் காட்டப்படுவது தான் ஒற்றைக்கண் குறியீடு!
இவ் மர்ம குழுமம் உலகில் பரந்து வாழும் தம் அங்கத்தவர்களிடையே தொடர்புகளைப்பேணும் போது தொலைபேசியூடாகவோ இணையமூடாகவோ நேரடித்தொடர்புகளைப்பேணுவதில்லை. இவ்வாறான சில குறியீடுகளை பல வளிமுறைகளில் வெளிக்காட்டி தமது அங்கத்தவர்களுக்கு சேரவேண்டிய தகவல்களை எச்சரிக்கையோடு அனுப்புகிறார்கள். ஏன் இந்த எச்சரிக்கை? அதை பின்னர் பார்க்கலாம்!
இங்கு நாம் இன்னொரு விடையத்தை உறுதியாக அறிந்துகொள்ளவேண்டும், இலுமினேட்டி குழுமம் தமது திட்டத்தை நிறைவேற்ற முன்னர் அது தொடர்பான ஒரு சமிக்ஞை செய்தியை உலகம் பூராவும் அனுப்புகிறது. அதை அறிந்து செயற்படுபவர்கள் அழிவுத்திட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும். அறியாத அப்பாவி பொதுமக்கள் அவர்களின் பார்வையில் மந்தைகள்!
13 ,33, 11, (9)
இவ் எண்கள் இலுமினேட்டி குழுமத்தின் இஷ்ட எண்கள் என அன்டி இலுமினேட்டி ஆராய்வாலர்கள் உறுதியாக கூறுகின்றனர். அவர்கள் ஏன் அதைக்கூறுகின்றனர் என்பதை எதிர் வரும் பதிவுகளில் உதாரணங்களை பார்க்கும் போது விளங்கிக்கொள்வீர்கள்.
இவர்களின் தலைமைப்பீடம் எங்கு உள்ளது?
இக் கேள்விக்கு சரியான தீர்க்கமான முடிவு இதுவரை கிடைக்கப்பெறவில்லை என்றே கூறவேண்டும். ஆனால், வத்திக்கானை அடிப்படையாகக்கொண்டே இக் குழுமம் இயங்குவதாக பல அன்டி இலுமினேட்டி உறுப்பினர்கள் அடித்துக்கூறுகின்றனர்.
இது உண்மையாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன!
காரணம், சில நூறு வருடங்களுக்கு முன்னர்… சுயமான சிந்தனையுடன் ” கத்தோலிக்க திருச்சபை” க்கு எதிரான விஞ்ஞான கருத்துக்களை பரப்பியவர்களை வத்திக்கான் அதிகாரம் நேரடியாகத்தண்டித்தது. ( இப்படியான கருத்துக்களைப்பரப்புபவர்கள் ” இது இப்படித்தான் என்ற வத்திக்கானின் ( இலுமினேட்டியின்) கொள்கையை மீறி ; உலக மக்களிடையே உண்மையை உறைக்கச்செய்து வத்திக்கானால் ஏற்படுத்தப்பட்டிருந்த மயையை உடைக்கச்செய்கின்றனர்.! )
அதேவேளை திரைப்படங்களூடாக “சில விஞ்ஞானிகளின் திட்டமிடல் தான் இந்த இலுமினேட்டி” என்ற மாயையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி ” இலுமினேட்டி என்றால் விஞ்ஞானிகளின் சதி தான் ” என்று மக்களை நம்பவைத்து, விஞ்ஞானிகளின் கூற்றுக்களை அவ நம்பிக்கையடைய செய்கின்றனர்.
அடுத்து…
நடைபெறவுள்ள பாரிய அனர்த்தத்தைப்பார்க்க முன்…
2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தகர்க்கப்பட்ட உலக வர்த்தகமையத்தாக்குதல் எதிர்பாராத ஒன்றல்ல… அது இலுமினேட்டி குழுமத்தின் கட்டளையின் படி நிறைவேற்றப்பட்டதே… என்பதை சான்றுகளுடனும்… அத்திட்டமிடல் தொடர்பாக அவர்கள் தம்மிடையே பரிமாறிக்கொண்ட குறியீடுகளையும் படங்களுடன் பார்ப்போம்!
தொடர்ந்து இணைந்திருங்கள்… எம்மை ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கும் மர்மக்குழுமத்தின் திட்டங்களை இயன்றவரை அறிவோம்…
இவ் ஆக்கத்தை பகிர்ந்து இலுமினேட்டி பற்றிய விளிப்புணர்வை ஏற்படுத்துங்கள், அறியுங்கள், ஊக்குவியுங்கள்.

எம்மை இயக்கும் மர்ம குழுமம் (Illuminati!) :அறிமுகம்


எம்மை சுற்றி நடக்கும் சூழ்ச்சிகளையும், தந்திரங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும்… அல்லது அடிமைகளாக வேண்டிய நிலை ஏற்படலாம்.
எம்மில் பலருக்கு ஏற்கனவே தெரியும்… பல வகையில் சிந்திக்க விடாமல் அடிமைகளாக்கப்பட்டுவிட்டோம் என…
எம்மை சூழ நடக்கும் சில செயற்பாடுகளை சுயமாக சிந்திங்கும் பொருட்டு இந்த பதிவை எழுதுகிறேன்…
முதலில் அறியப்படாத ஒரு மிகப்பெரும் சக்தி வாய்ந்த குழுமத்தைப்பற்றி பார்ப்போம்…
——————————————————————————————
இலுமினேடி (Illuminati)…
பலரால் அறியப்படாததும்.. ஆனால், சுய சிந்தனைவாதிகளால் அறியப்பட எத்தனிக்கும் ஒரு குழுமத்தின் அடையாளம் என்றே இந்த illuminati ஐக்கூற வேண்டும்.
“உலகின் புதிய கட்டளை (New world order)” எனவும் இந்த குழுவின் செயற்பாடுகள் அறியப்படுகிறது. எனினும் இவை புதிய கட்டளைகள் அல்ல… மிக நீண்ட காலமாகவே நடைமுறைப்படுத்த திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் ஒரு தந்திரமாகும். 20 ஆம், நூற்றாண்டுகளில் இதன் வளர்ச்சி தொழில் நுட்ப வளர்ச்சியுடன் அதிகரித்திருக்கின்றது.
தற்சமையம் நடந்து கொண்டிருக்கும் யுத்தங்கள், கலவரங்கள், அரசியல் மாற்றங்கள் எல்லாமே குறிப்பிட்ட ஒரு சில மனிதர்களால்த்தான் நடாத்தப்படுகின்றது. அவர்கள் தான் உலகின் “கிங் மேக்கர்”களாக இருகிறார்கள். ( நம்புவதற்கு கடினமாக இருக்கலாம்… லொஜிக் இல்லாதது போன்று தோன்றும்… ஆனால், உண்மையாக இருப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் உள்ளன… பின்னரான பதிவுகளில் பார்க்கலாம்…)
யார் இவர்கள்…
நான் அறிந்து கொண்டதன் படி உலகில் 13 குடும்பங்களை சேர்ந்த நபர்களாலேயே இந்த திட்ட மிடல்கள் நடாத்தப்படுகின்றன. 13 குடும்பங்கள் என்பது… ஆயிரம் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டது… இப்போது அதன் அங்கத்தவர்கள் கணிசமாக உலகெங்கும் வாழ்கிறார்கள். இவர்கள் வேற்று குடும்பங்களுடன் உறவுகளைப்பேணுவதில்லை… காரணம், தமது Illuminati தன்மைக்குரிய மரபணுக்களைப்பேணுவதற்காகத்தான்.
மேலும் இவர்கள் தங்களை வெளிப்படுத்துவதும் இல்லை.
இவர்களின் நோக்கம்தான் என்ன…
சிம்பிளாக சொல்ல வேண்டும் என்றால்…
“ஒரு உலகம்.. ஒரு அரசு” என்பது தான் இவர்களின் நீண்டகாலத்திட்டம். இந்த திட்டம் நடை பெற வேண்டுமானால்… சுய சிந்தனைவாதிகள் ஒதுக்கப்பட வேண்டும். இவர்களுக்கு எதிரானவர்கள்… அல்லது நோக்கத்துக்கு இடையூறாக இருப்பவர்கள் இல்லாமல் போக வேண்டும்…
இதைத்தான் பல்வேறு முறைகளில் நடைமுறப்படுத்திவருகின்றனர்… அதில் பலதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
உதரணமாக…
சில வகை “இசை” வெளியீடுகளை ஊக்குவித்து இளம் சமுதாயத்தை அதனுள் கட்டுப்படுத்த வைப்பது இவர்களின் ஒரு திட்டம்…. அது கணிசமான அளவு வெற்றியளித்துள்ளது.
மேலும், பல வகை சினிமாக்களின் மாய உலகத்தினுள் அடக்கி வைப்பதும் வெற்றியளித்துள்ளது.
(என்ன என்ன முறைகளில் இது நடை முறைப்படுத்தப்படுகிறது என்பது வரும் பதிவுகளில் தெளிவாக பார்க்கலாம்… )
முடிவில்… இவர்கள் நினைத்தால், எங்கோ இருக்கும் ஒருவரின் நடவடிக்கைகளை ஒரு நிமிடத்தில் கட்டுப்படுத்த வைக்க வேண்டும் என்பதே இறுதி இலக்கு. அதாவது… அடிமைப்படுத்த வேண்டும் என்பது.. எனினும் அவர்களுக்கு உரிய தேவைகள் நிறைவேற்றிக்கொடுக்கப்படும்… மேலதிகமாக சிந்திக்கவோ.. கிளர்ச்சி ஏற்படுத்தவோ முனைபவர்கள் உலகிற்குத்தேவை இல்லாதவர்களாக கணிக்கப்பட்டு… நீக்கப்படுவார்கள்-ஒழிக்கப்படுவார்கள்.
ஒரு குறிப்பிட்ட கட்டுப்பாட்டுக்கு அடங்கி வாழ்பவர்கள் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
இவர்களின் மிகப்பெரிய தலையிடி…
ஏஸியாப்பகுதியை சேர்ந்தவர்களும்…. இப்படியான பதிவுகளை வாசிப்பவர்களும் தான்… இவர்களின் மிகப்பெரிய தலையிடியாக இருக்கிறார்கள். அது ஏன் என்பதை வரும் பதிவுகளில் பார்ப்போம்.
அடுத்த பதிவில் மிகவும் அதிர்ச்சிகரமான இவ்வருடம் திட்டமிட்டு நடைபெறவுள்ள ஒரு சம்பவத்தை பார்க்க ஆரம்பிப்போம்! இணைந்திருங்கள்!
பதிவை பகிர்ந்து ஊக்குவியுங்கள்! பல உண்மைகள் மண்டிக்கிடக்கின்றன