Thursday, September 8, 2016

பேப்பாலில் எப்படி அக்கவுண்ட் தொடங்குவது? (paypal details for tamil).

பேபால் இணையவங்கி 


மிக மிக நம்பிக்கைக்குரிய, நல்ல பெயர்பெற்ற, மிகச்சிறந்த இணையவங்கி நீங்கள் இணையத்தில் சம்பாதித்த பணத்தை உடனடியாகப் பெற விரும்பினால் பேப்பாலில் ஒரு அக்கவுண்ட் வைத்திருங்கள். தேவையான நேரத்தில் நீங்கள் சம்பாதித்த பணத்தை வேலைவாய்ப்பு தளத்தில் இருந்து உங்கள் பேபால் அக்கவுண்டிற்கு மாற்றினால், அதிலிருந்து உடனடியாக உங்கள் பேங்க் அக்கவுண்டிற்கு ரூபாயாகவே வந்துவிடும்.

பேப்பாலில் எப்படி அக்கவுண்ட் தொடங்குவது?

1) முதலில் www.paypal.com என்ற முகவரிக்குச் செல்லவும்.
2) Sign up என்ற பட்டனை அழுத்தவும். பின்பு கீழுள்ள படத்தைப் போல ஒரு படிவம் தோன்றும்.
3) அதில் india என தேர்வு செய்து, An account for individuals என்ற தலைப்பின் கீழுள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும்.
4) பின்பு தோன்றுகிற படிவத்தை சரியாக பூர்த்தி செய்யவும்.
• Email address: உங்கள் ஈமெயில் முகவரி
 Choose a password: பேபால் கணக்கிற்கு உபயோகிக்க விரும்பும் கடவுச்சொல்
• Re-enter password: பேபால் கணக்கிற்கு உபயோகிக்க விரும்பும் கடவுச்சொல்
• First name: உங்கள் பேன்கார்டில் உள்ள முதற்பெயர்
• Middle name: உங்கள் பெயரில் இரண்டாவது சொல் இருந்தால் இதில் தெரிவிக்கவும்.
• Last name: தங்கள் பேன்கார்டில் உள்ள தந்தை / கணவன் பெயர்
• Date of birth: பிறந்த நாள்
• Nationality: இலங்கை
• Address line 1: முகவரி
• Address line 2: முகவரிக்கான முதல் கட்டம் போதாவிட்டால், இக்கட்டத்தை பயன்படுத்தலாம்.
• Town/City: உங்கள் ஊர்
• tate: உங்கள் மாநிலம்
• PIN code: உங்கள் பின் கோடு
• Mobile Number: உங்கள் மொபைல் நம்பர்

எல்லாம் முடிந்த பிறகு, படிவத்தை சமர்ப்பியுங்கள். உங்கள் பேபால் கணக்கு ரெடி. அதன் பின்பு, நீங்கள் விரும்பினால் உங்கள் கிரடிட்/டெபிட் கார்டுகளை இணைக்கலாம் என ஒரு செய்தி வரும். அதெல்லாம் தேவையில்லை, அச்செய்தியின் கீழுள்ள Go to My Account என்ற ஆப்சனைத் தேர்ந்தெடுக்கவும். இப்பொழுது உங்கள் பேப்பால் கணக்கு தோன்றும். அதன் இடப்பக்கத்தில் உள்ள “Confirm Identity” என்ற தொடுப்பைச் சொடுக்கவும். அதில் உங்கள் பேன் கார்டு, பேங்க் அக்கவுண்ட் தகவல்களைச் சமர்பிக்கலாம்.

Wednesday, September 7, 2016

இணையம் மூலம் ஆயிரக்கணக்கில் சம்பாதிப்பது எப்படி ? part 2

இணையத்தின் மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி என்பதை ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான மக்கள் தேடிக்கொண்டிருக்கின்றனர் . அவர்களில் நீங்களும் ஒருவராக இருந்தால் இணையத்தின் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிக்கலாம் என்பதை இந்த வலைப்பூவில் நான் அளித்துள்ள விவரங்களில் இருந்து அறிந்து கொள்ளலாம்.இன்டர்நெட்டில் பணம் சம்பாதிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன அதில் ஒரு வழி தான் PTC (Paid To Click).

உண்மையில் PTC ( Paid to Click) இணையதளம் என்பது என்ன?

 

PTC இணையதளம் என்பவை உறுப்பினர்களுக்கு அவர்கள் பார்வையிடும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் பணம் கொடுக்கும் தளங்கள். ஒவ்வொரு PTC தளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு அளிக்கும் தொகையில் விளம்பரங்களின் நேரத்தை பொருத்து மாறுபடுகிறது.பொதுவாக எல்லா PTC இணையதளங்களும் ஒரு விளம்பரத்திற்கு 0.01 $ முதல் 0.001 $ வரை தங்கள் உறுப்பினர்களுக்கு வழங்குகின்றன.

PTC இணையதளத்தில் பணம் சம்பாதிப்பது எப்படி ?

 

கம்ப்யூட்டர் முன் அமர்ந்து கொண்டு மிக எளிதாக பணம் சம்பாதிக்க PTC இணையதங்கள் எளிதான வழியை காட்டுகின்றன.இந்த தளங்களில் பணம் சம்பாதிக்க எந்த வித திறமையும் பண முதலீடும் தேவையில்லை.மேலும் இவற்றில் உறுப்பினராவது முற்றிலும் இலவசம். ஒரு விளம்பரத்தை கிளிக் செய்து 3 முதல் 30 வினாடிகள் பார்த்தாலே போதும் பணம் உங்களது கணக்கில் வரவு வைக்கப்படும். எல்லா PTC இணையதளங்களும் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 4 முதல் அதிகபட்சம் 100 விளம்பரங்களையாவது வழங்குகின்றன.

PTC இணையதளங்களில் பணம் பெறுவது எப்படி ?

 

PTC தளங்களில் நாம் சம்பாதிக்கும் பணம் குறைந்தபட்ச பணம் எடுக்கும் தொகை வந்தவுடன் ( MINIMUM CASH OUT ) பெற்றுக்கொள்ளலாம். எல்லா PTC இணையதளங்களும் தங்கள் உறுப்பினர்களுக்கு பணம் கொடுக்க கிழ்கண்ட பணப்பரிமாற்ற தளத்தையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றன.

PAYPAL உறுப்பினர் கணக்கு துவங்குவது எப்படி?

இந்த பணப்பரிமாற்ற தளங்களிலும் உறுப்பினராவது சுலபமான ஒன்றுதான். இணைய உலகில் ஆயிரக்கணக்கான PTC தளங்கள் இருந்தபோதிலும் ஒரு சில PTC இணையதளங்கள் மட்டுமே மக்களை ஏமாற்றாமல் பணத்தை கொடுக்கின்றன. நான் இங்கே நிலையான PTC தளங்களை மட்டுமே பட்டியலிட்டுள்ளேன்.

எந்தவித பண முத‌லீடும் இல்லாமல் இணையத்தில் பணம் சம்பாதிக்க உதவும் PTC தளங்களைப் பற்றி பார்ப்போம். எமக்கு கிடைக்கும் சிறு ஓய்வு நேரத்தில் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ விளம்பரங்களைப் பார்வையிடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க உதவுவதே PTC தளங்கள் ஆகும்.

உலகெங்கிலும் பல இணைய பயனாளர்கள், வீட்டிலிருப்போர், மாணவர்கள், இல்லத்தரசிகள் போன்றோர் இத்தளங்களின் உதவியுடன் பணம் சம்பாதிப்பது நிதர்சனம் ஆகும். 

PTC தளங்களில் நாம் பணம் சம்பாதிக்க எந்தவித முதலீடும் தேவையில்லை என்றாலும் சம்பாதிக்கும் தொகை ஆரம்பத்தில் சிறிதாகவே காணப்படுகிறது. எதுவுமே ஒரே இரவில் நடந்தேறி விடுவதில்லை. விடாமுயற்சி ஒன்றே வெற்றிக்கு வழியாகும். சரி இவ் PTC தளங்களில் தொடர்ந்து இணைந்திருப்பதற்கும், அதிகம் சம்பாதிக்கவும் என்னென்ன செய்யலாம் என்னென்ன செய்யக்கூடாது என்பதை விளக்குவதே இப்பதிவின் நோக்கமாகும்.

செய்யக்கூடாதவைகள்: 

01) ஒரு கணனியில் இரு அக்கவுண்ட்

ஒரு கணிணி மற்றும் இணைய இணைப்பில் ஒருவர் மட்டுமே கணக்கு வைத்திருக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டோர் கணக்கு வைத்திருக்கக் கூடாது. அதிகம் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் சிலர் வேறு வேறு பெயர்களில் இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட அக்கவுண்டுகளினை திறப்பார்கள். ஆனால் NeoBux போன்ற தளங்கள் இலகுவாக இக்குற்றத்தை கண்டுபிடித்துவிடுகின்றன. கண்டுபிடிக்கப்பட்டவுடன் உங்கள் சகல அக்கவுண்டும் எந்த வித முன்னறிவித்தலும் இல்லாமல் முடக்கப்பட்டுவிடும். எனவே ஒரு கணனியில் இரண்டு அக்கவுண்டுகள் திறப்பதை தவிருங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்கள் வேறு யாராவது PTCயில் இணைய விரும்பினால் வேறு ஒரு கணனி மற்றும் இணைய இணைப்பில் மட்டுமே இந்த வேலைகளைச் செய்ய வேண்டும்.

02) இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரர் வேண்டாம்.

நீங்கள் PTC லிங்குகளை பார்வையிட இன்ட‌ர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலாவி பாவிப்பதை தவிருங்கள். ஏனெனில் இவை லிங்குகளை புதிய வின்டோவிலே திறக்கின்றன அத்துடன் சில தளங்களில் ஸ்கிரிப்டுகளினை தடை செய்வதன் மூலம் பார்க்க விடாமல் தடை செய்கின்றன. எனவே கூகுள் குரோம், பயர்பாக்ஸ் BROWSER பாவிப்பதே சிறந்தது..

03) NET சென்டர்களில் லொகின் செய்யாதீர்கள்.

பொதுவாக இன்டர்னெட் பிரோசிங் சென்டர்களில் லொகின் செய்து லிங்குகளை பார்வையிடாதீர்கள். இது உங்கள் அக்கவுண்ட் முடக்கப்படுவதற்கு வாய்ப்பாகிவிடும்.

04) 10 நாட்களில் 3 கணிணி

இது நியோபக்ஸ் தளத்தின் ஒரு விதியாகும். நீங்கள் தினமும் வேறு வேறு கணனிகளை பாவிப்பவர் ஆயின் 10 நாட்களில் 3ற்கு உட்பட்ட கணனிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். 3 ற்கு மேற்பட்ட கணனிகளை உபயோகித்தால் உங்கள் கணக்கு முடக்கப்படும் ‍ இது நியோபக்ஸ் தளத்தின் ஒரு விதியாகும்.

செய்ய வேண்டியவை: 

01) தினமும் குறித்த நேரத்தில் லிங்குகளை பர்வையிடுங்கள்.

நாளாந்தம் தவறாமல் லிங்குகளை பார்வையிடுங்கள். இதை தினமும் குறித்த ஒரு நேரத்தில் செய்வதன் மூலம் தவறாமல் லிங்குகளை பார்வை இடுவதனை தினந்தோறும் வழக்கப்படுத்திக்கொள்ளலாம். சிறுதுளி பெருவெள்ளம், விடாமுயற்சி வெற்றியை தரும்.

02) குரோம் சிற‌ந்தது..

PTC தளங்களை பார்வயிட குரோம் பிறவுசரே இலகுவானது. அல்லது பயர்பாக்ஸ் உகந்தது. இவை லிங்குகளினை வேறு ஒரு டேப்களில் திறப்பதால் லிங்குகளை பார்வயிடுவது இலகுவானதாகும்.

இதை தவிர வேறு வேறு தளங்கள் தம‌க்கென வேறுபட்ட விதிமுறைகளை கொண்டுள்ளன. அவற்றினை அத்தளங்களின் Terms& Conditions பகுதியில் படித்து தெரிந்து கொள்ளலாம்.

PTC தளங்களில் புதிதாக வருபவர்கள் பலரும் PTC தளத்தின் நிப‌ந்தனைகளை சரியாக நிறைவேற்றுவதில்லை.இதனால் பல மாதம் உழைத்து கேஷ் அவுட் செய்யும் நிலையில் கணக்கு சஸ்பென்ட் ஆகி விரக்தி அடைந்து விடுவார்கள்.எனவே முதலில் PTC தளங்களில் வேலை செய்யும் முன் முக்கியமான விஷயங்களைக் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் விரக்தி அடையாமல் சம்பாதிக்கலாம். 

1. ஒரு கம்ப்யூட்டருக்கு/IP (INTERNET PROVIDER)க்கு ஒரு கணக்கு‍/ இது PAID TO CLICK (PTC) தளங்களின் முக்கியமான நிபந்தனையாகும்.எனவே ஒரு கம்ப்யூட்டரில் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை உருவாக்காதீர்கள்.இது எல்லா தளங்களுக்கும் பொருந்தும்.  

2. நிலையான ஐபி அட்ரஸினைக் கொண்ட இணைப்பை வைத்துக் கொள்ளுங்கள்.மொபைல் அல்லது அலுவலக,ப்ரௌசிங் சென்டர்களில் உங்கள் கணக்கினைத் திறந்து வேலை செய்யாதீர்கள்.(சர்வே,கேப்ட்சா சைட்டுகளுக்கு அவசியமில்லை)3ஜி மோடங்களில் சிம்கார்ட் இணைப்புள்ள மோடத்தினைப் பயன்படுத்தக் கூடாது.இதுவும் நிலையான ஐபி அட்ரஸினைக் காட்டாது. தினம் இரண்டு மூன்று ஐபி அட்ரஸினை மாற்றி மாற்றிக் காட்டும்.ப்ராட் பேன்ட் கனெக்சன் அல்லது டாட்டா போட்டான் போன்ற சிம் அல்லாத 3ஜி மோடங்களைப் பயன்படுத்துங்கள்.உங்கள் ஐபி அட்ரசினை whatismyipaddress.com ல் சென்று சரி பார்த்துக் கொள்ளுங்கள்.Modem வாங்கிய புதிதில் ஒரே நாளில் இரண்டு மூன்று முறை சரி பாருங்கள். ஒரே ஐபியினைக் காட்டினால் சரி.ஐபி அட்ரஸில் முதல் 2 ட்ஜிட் மாறாது நிலையாக இருக்க வேண்டும். அடுத்த இரண்டு டிஜிட் அடிக்கடி மாறும்.அதைப் பெரிதாக எடுக்க வேண்டாம்.

Example:

Static IP : 96.04.174.234,  96.04.233.343,  96.04.767.433

Changing IP :  96.04.174.234,  133.233.344.322,  22.33.211.99 


3. முதலில் உங்கள் வங்கிக் கணக்குடன் ஒரு பேபால் கணக்கினை உருவாக்கிக் கொள்ளுங்கள். நீங்கள் பிடிசி தளத்தில் பதிவு செய்யும் போது பேபால் அட்ரஸினைக் கேட்பார்கள்.எனவே பேபால் முக்கியம்.அப்போதுதான் நீங்கள் பணத்தினைப் பெற முடியும். 

பேபால் விவரங்கள் அறிய...www.how2openpaypal.blogspot.com 

 
4.  பிடிசி தளங்களில் பதிவு செய்யும் போது உங்கள் உண்மை பெயர்,முகவரி,போன் நம்பர் கொடுத்து பதிவு செய்வது நல்லது.சில தளங்கள் பே அவுட்டின் போது மொபைல் பின் வெரிஃபிகெஷன் செய்யலாம்.யூசர் நேம் தங்கள் விருப்பப்படி அமைத்துக் கொள்ளலாம்.ஒவ்வொரு தளத்திற்கும் வித்தியாசமான யூசர்நேம் பாஸ்வேர்டு பயன்படுத்துவது நல்லது.பாஸ்வேர்டு எண்,எழுத்து என பலமாக இருத்தல் நல்லது.

Ex :  Prsge@2014

5. PTC தளங்களில் பதிவு செய்தவுடன் உங்கள் மெயிலுக்கு உடனடியாக ஒரு கன்ஃபிர்மெஷன் மெயில் அனுப்பப்படும். உங்கள் இன்பாக்ஸில் சென்று அதில் உள்ள லிங்கினைக் க்ளிக் செய்து பிறகு வரும் தளத்தில் லாக் இன் ஆனால்தான் உங்கள் பிடிசி கணக்கு உறுதி செய்யப்படும்.

6. பல தளங்களில் ஃபிக்ஸ்ட் ஆட்ஸ் எனப்படும் ஆரஞ்சு நிற விளம்பரங்கள் 4 இருக்கும்.நீங்கள் ரென்டல் ரெஃப்ரல்கள் எடுத்திருந்தால் இதனைத்(அல்லது வேறு 4 ஆட்ஸ்)தினமும் 24 மணி நேரத்திற்குள்ளாகக் கண்டிப்பாகக் க்ளிக் செய்துப் பார்க்க வேண்டும்.ஒரு நாள் தவறினாலும் உங்கள் ரென்டல் க்ளிக்ஸ் மறுநாள் க்ரெடிட் ஆகாது. இதனால் பெரும் நஷ்டம் ஏற்படும்.

7.   கம்ப்யூட்டர் அல்லது நெட் கனெக்செனை மாற்றினால் பழையதிலிருந்து Ads பார்த்த 24 நான்கு மணி நேரங்கள் கழித்தே மீண்டும் தளங்களை ஓபன் செய்து விளம்பரங்களைப் பார்க்கலாம்.  புதிய கம்ப்யூட்டருக்கு மாற்றினால் 24 மணி நேரம்/ப‌ழைய கம்ப்யூட்டர் (இதே போல் வேறொருவர் அந்த கம்ப்யூட்டரில் பிடிசி தளங்களில் வேலை செய்திருப்பதாக சந்தேகம் இருந்தால்) 72 மணி நேரம் கழித்தே அதில் லாக் இன் ஆகுங்கள்.(குறிப்பாக ப்ரோபக்ஸ் தளம்)

8. FORUM போன்றவைகளில் அந்த தளங்களைத் தாக்கியோ, தாறுமாறகவோ எழுதினால் உங்கள் கணக்கு முடக்கப்ப்ட்டுவிடும்.சந்தேகங்கள்,பிரச்சினைகளை எழுதாலாம் அல்லது சப்போர்ட் பகுதிக்கு மெயில் அனுப்புங்கள்.

9. இந்தியர்கள் PAYZA,PERFECT MONEY,SKRILL NETTELLER போன்ற பேமென்ட் ப்ராசெஸ்ஸர்களைப் பயன்படுத்த வேண்டாம்.அதிலிருந்து இந்திய வங்கிகளுக்கு பணத்தினை மாற்றுவது கடினம்.அதிக ஃபீஸ் வசூலிக்கப்படும்.எனவே பேபாலே சிறந்தது.முடிந்த வரை பேபால் உள்ள தளங்களிலேயே வேலை செய்யுங்கள்.அரிதாக ஓரிரு தளங்களில் பேய்சாவினைப் பயன்படுத்த வேண்டி வந்தால் அதில் 5$ வந்ததும் ரென்டல் ரெஃப்ரல்கள் எடுக்க ADD FUNDSல்(NEOBUX,PROBUX) பயன்படுத்திக் கொள்ளலாம்.

10. சர்வேக்களை செய்யும் போது ஆரம்பம்,நடுவில்,கடைசியில் என நான்கைந்து ஸ்கீரீன் ஷாட் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது.குரோம் ப்ரௌசரில் இந்த ஆப்ஷன் உண்டு.பணம் க்ரெடிட் ஆகவில்லையெனில் இவற்றினை அட்டாச் செய்து SUPPORT பகுதிக்கு அனுப்ப வேண்டி வரும்.

11. ஒரு தளத்தில் முடித்த ஆஃப்ரகள் சர்வேக்களை அடுத்த தளத்தில் முடிக்கும் வாய்ப்புகள் கிடைத்தால் ப்ரௌசரில் உள்ள COOKIES,HISTORY போன்றவற்றை DELETE செய்து விடுங்கள்.பிறகு லாக் இன் ஆகி அதே ஆஃபர்களைச் செய்யுங்கள்.இந்த குக்கீஸ்கள் ஏற்கனவே நாம் செய்திருப்பது பற்றி ஆஃபர் தளங்களுக்கு காட்டிக் கொடுக்கும் என்பதால் திரும்பச் செய்தால் பணம் க்ரெடிட் ஆகாது அல்லது ஆஃபர்வால்ஸ் முடக்கப்பட்டுவிடும். வாரம் ஒருமுறை குக்கீஸ் டெலிட் செய்வது நல்லது.

12. மொத்தத்தில் புதிய தளங்களில் முதலீடு செய்ய வேண்டாம்.பழைய தளங்களில் கூட‌ அப்கிரேடு ஆகும் முன் உங்கள் இலாப நஷ்டங்களைக் கணக்கிட்டு அப்கிரேடு ஆகுங்கள்.ரென்டல் ரெஃப்ரலகளில் உள்ள இலாப நஷ்டத்தினைப் புரிந்து செயல்படுங்கள்.முடிந்த அளவு உங்கள் ஆரம்ப கட்ட முதலீட்டினை வெளிக் கொண்டு வந்த பிறகு அதில் வரும் இலாபத்திலேயே ரொட்டேட் செய்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை

Friday, September 2, 2016

விவசாயிகளுக்கு மத்திய அரசு மானிய திட்டங்கள்


மத்திய திட்டங்கள்
தமிழ்நாடு:
I. நிறுவனங்களின் கடன் வசதிகள்:
தரமான விதை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு உதவி செய்தல்
நலத் திட்டக் கூறுகள் மற்றும் அதன் நன்மைகள்நன்மையை பயன்படுத்திக் கொள்வதற்கான தகுதி மற்றும் வரையறைகள்தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்கள்
விவசாயிகளை ஊக்குவிப்பதற்காகவும், தங்களால் எடுக்கப்பட்ட சிறந்த முயற்சிகளை நிலை நிறுத்துவதற்காகவும், விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட அனைத்து விதைகளுக்கும் செயல் ஊக்கம் அளிக்கப்படுகின்றன.ஒப்பந்த முறையில், விதைகளை உற்பத்தி செய்து, வேளாண்மைத் துறைக்கு வழங்கும் அனைத்து விவசாயிகளும், இந்த திட்டத்தின் கீழ் தங்களின் விதைப் பண்ணைகளை பதிவு செய்து கொள்ள தகுதியானவர்கள்.கிராம நிலை- உதவி வேளாண்மை அலுவலர்
நெல்: சான்று விதைகளை உற்பத்தி செய்வதற்கு, ஒரு கிலோ விதைக்கு ரூ.2/- மதிப்பு அளிக்கப்படுகிறது.பண்ணை மகளிர்குழுக்கள், மற்றும் ஆர்வமான விவசாயிகள் பிரிவுகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது.உதவிவிதை அலுவலர்/துணை வேளாண் அலுவலர்/ வட்டார நிலை வேளாண் அலுவலர்.
வேளாண்மை விரிவாக்க மையங்கள், மூலமாக குறிப்பிட்ட தேவையான விதைப் பொருட்களை பணம் செலுத்திப் பெறுவதற்கு வேளாண்மை துறை வழங்குகின்றது.வட்டநிலை வேளாண்மைஉதவிஇயக்குநர்.
வயல்நிலை செயலிகள்/விதைச் சான்று அலுவலர்களால் வழங்கப்பட்ட தரம் பாதுகாத்தல் பற்றிய வழிகாட்டுச் செய்திகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும்.மாவட்டநிலை வேளாண்மை இணை இயக்குநர்.



II. பண்ணை இயந்திரமயமாக்குதல் திட்டம்:
1. வேளாண்மை இயந்திரமாக்குதல் திட்டம்: 
திட்டத்தின் பெயர்:வேளாண்மை இயந்திரமயமாக்குதல் திட்டம்
திட்டம் செயல்படும் இடம்:அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)
வேலைகளின் விவரம்:வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகளான டிராக்டர், பவர் டில்லர்கள், தானியங்கி நெல் நடும் இயந்திரங்கள், தானியங்கி நெல் அறுவடை இயந்திரங்கள், சுழல் கலப்பை, கொத்துக்கலப்பை உளிக்கலப்பை, சட்டிக்கலப்பை ஆகியவற்றை கொள்முதல் செய்வதற்காக விவசாயிகளுக்கு மானிய உதவி வழங்கப்படுகிறது.
அளிக்கும் நன்மைகள்:
(மானியம்)
இயந்திரம்/கருவிகளின் மொத்த விலையில்  25 சதவிகிதம்வழங்குதல்/ஒவ்வொரு இயந்திரம்/கருவிகளுக்கான, இந்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டஉச்சவரம்புவிலையில் 25 சதம் வழங்குதல்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்:வருவாய்ப் பிரிவிலுள்ளஉதவி வேளாண்மை செயற்பொறியாளர், மாவட்டத்திலுள்ள செயற்பொறியாளர், மண்டல நிலை கண்காணிப்புப்பொறியாளர்,தலைமைபொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை -35, போன்:2435-2686, 2435-2622


2. செயல்முறைப் பரப்பின் நில மேம்பாட்டுத் திட்டம்:
திட்டத்தின் பெயர்:நில மேம்பாட்டுத் திட்டம்- செயல்முறைப் பரப்பு
செயல்முறைப் பரப்பு:அனைத்து மாவட்டங்கள்
வேலைகளின் விவரம்:நில வடிவமைத்தல், நில சமப்படுத்துதல், நில சீர்திருத்தம், உழவு, சேற்றுழவு, கூட்டு அறுவடை இயந்திரத்தால் நெல் அறுவடை.
அளிக்கப்படும் நன்மைகள்:
(மானியம்)
அரசால் நிர்ணயிக்கப்பட்ட வாடகைக் கட்டணத்தில் வேளாண்மை பொறியியல் துறையானது மேற்கூறிய செயல்முறைகளை மேற்கொள்வதற்காக இயந்திரங்களை வாடகைக்கு விவசாயிகளுக்கு அளிக்கின்றன.
(வாடகை விலை பின்வருமாறு)
தகுதி:அனைத்து வகை விவசாயிகளும்.
செயல்படுத்துவதற்கான கால அளவு:முன்னுரிமை அடிப்படையில் இயந்திரங்கள் ஒதுக்கப்படும்.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்:உதவி செயற் பொறியாளர், வருவாய் பிரிவு.  செயற் பொறியாளர், மாவட்ட நிலை. கண்காணிப்புபொறியாளர்,மண்டலநிலை, தலைமைபொறியாளர்,வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை-35, போன்:2435- 2686: 2435- 2622


நில மேம்பாடு-இயந்திரங்களுக்கான வாடகை மதிப்பு விவரங்கள்:
வ.
எண்
இயந்திரத்தின் பெயர்
வாடகை மதிப்புகள் (ரூ/ஒரு மணி நேரத்திற்கு, டீசலுடன் சேர்த்து)
1.
டிராக்டர்
265
2.
அதிவிசை மண் தள்ளும் இயந்திரம்
670
3.
டிராக்டரில் இணைக்கப்பட்ட கூட்டு அறுவடை இயந்திரம்
780
4.
ரப்பர் டிராக் வகையான கூட்டு இயந்திரங்கள்
1130
3. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம்
திட்டத்தின் பெயர்:   தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் (NADP)
திட்டசெயலாக்க இடம்:    அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)
வேலைகளின் விவரம்: பின்வருமாறு:
வ.எண்கூறுகள்வேலைகளின் வகை
1.வேளாண்மை எந்திரமயமாக்குதல்(அ) புதிதாக உருவாக்கியுள்ள வேளாண்மை இயந்திரங்கள்/கருவிகளைப் புதுப்பித்தல்
(ஆ)வழக்கத்திலுள்ள இயந்திரம்/கருவிகளை பிரபலப்படுத்துதல்.
2.மானாவாரி நில மேம்பாடு(அ)எடுத்துச் செல்லக் கூடிய தெளிப்பான் தொகுதியுடைய பிளாஸ்டிக்கால் கோடிடப்பட்ட பண்ணைக் குட்டை
(ஆ)கோடிடப்படாத பண்ணை குட்டை அமைத்தல்.
(இ)கட்டுப்பாத்தி அமைத்தல்.
3.நில வளங்கள் ஆராய்ச்சி மற்றும் GIS செய்திக் குறிப்புகளை நிறுவுதல்  நன்கு பயிர் விளையும் கிராமங்களின் வரைபடங்களை  மின்படமாகஅமைத்தல்.
அளிக்கப்படும் நன்மைகள் (மானியம்):புதிதாக உருவாக்கியுள்ள வேளாண்மைக் கருவிகள் சிறு கூட்டு அறுவடை இயந்திரம், பல்வகை பயிர் கதிர் அடிக்குங்கருவி, நெல் நடவு இயந்திரம், ஆகியவற்றைப் பெறுவதற்கு 50 சதவிகிதம் மானிய உதவி அளிக்கப்படுகிறது.  மேலும் வழக்கத்திலுள்ள கருவிகளான பவர் டில்லர், கொத்துக் கலப்பை, சுழல் கலப்பை, சட்டிப்பலுகு, சட்டிக்கலப்பை ஆகியவற்றைப் பெறுவதற்காக விவசாயிகளுக்கு 25 சதவிகிதம் மானிய உதவி அளிக்கப்படுகிறது.



மழைநீர் அறுவடை மற்றும் நீர்வெளியோடல் மேலாண்மைத் திட்டம் மற்றும் நபார்ட் உதவியுடன் மழைநீர் அறுவடைத் திட்டம்:

மழைநீர் அறுவடை மற்றும் நீர் வெளியோடல் மேலாண்மைத் திட்டம்:

திட்டம் செயல்படும் இடம்: அனைத்து மாவட்டங்களும் (சென்னை மற்றும் நீலகிரி தவிர)
நபார்ட் உதவியுடன் மழைநீர் அறுவடைத் திட்டங்கள்:
திட்டம் செயல்படும் இடம்: காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம். கடலுார், வேலுார், சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, பெரம்பலுார், கரூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவங்கை, துாத்துக்குடி, கோயமுத்துார் மற்றும் நீலகிரி.
வேலைகளின் விவரம்கசிவுநீர்க் குட்டைகள், பெரிய, நடுத்தர மற்றும் சிறிய தடுப்பணைகள். பண்ணை குட்டைகள்
பயன்படுத்தப்படாத கிணறுகளை புத்துயிர்ப்பு பெறச் செய்தல். கிராம தொட்டிகள்/ஊறணிகள்
வழங்கப்படும் நன்மைகள்: (மானியம்)Êசமுதாய நிலங்களில் செய்யப்படும் அனைத்து வேலைகளுக்கும் 100 சதவிகிதம் மானியம் வழங்கப்படுகிறது.  இருப்பினும், நன்மையடையும் விவசாயிகள் வேலையின் மொத்த மதிப்பில் 10 சதவிகிதம் (தாழ்த்தப்பட்டோர்/பிற்படுத்தப்பட்ட பழங்குடியினர் 5 சதவிகிதம்) தொகையை கிராம வளர்ச்சிக் குழுமம் (அ) நீர் பங்கீட்டு குழுமத்திற்கு அளிக்க வேண்டும்.  இதனால் உருவாக்கப்பட்ட இருப்புகளை வருங்காலத்தில் பாதுகாக்க இத்தொகை உதவுகிறது.  பட்டா நிலங்களில் வேலைக்காக 90 சதவிகிதம் மானியத் தொகை வழங்கப்படுவதுடன் மீதமுள்ள 10 சதவிகிதம் நலன் அடைவோரின் பங்காகப் பெறப்படுகிறது.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்:உதவி செயற் பொறியாளர், வருவாய் பிரிவு.  செயற் பொறியாளர், மாவட்ட நிலை. கண்காணிப்புபொறியாளர்,மண்டலநிலை, தலைமைபொறியாளர்,வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை-35, போன்:2435- 2686: 2435- 2622 .


5. புதியமோட்டார்பம்புசெட்டுகளைக் கொண்டு பழைய பம்பு செட்டுகளை மாற்றி அமைத்தல்:
திட்டத்தின் பெயர்    :   புதிய மோட்டார்பம்ப்செட்களைக்கொண்டு பழைய மோட்டார்பம்ப்செட்களை மாற்றி அமைத்தல்.
செயல்படும் இடம் :       அனைத்து மாவட்டங்களும் (சென்னை தவிர)
வேலைகளின் விவரம்:    பழைய, தரமற்ற மோட்டார்பம்ப்செட்களை புதிய BIS மோட்டார்பம்ப்செட்கள்கொண்டு மாற்றி அமைத்தல் மற்றும் மின் துணைக்கருவிகளை புதுப்பித்தல்.
வழங்கப்படும் நன்மைகள்: (மானியம்)
விபரம்தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியின விவசாயிகளுக்கு மற்ற விவசாயிகளுக்கு
5 குதிரைத் திறனுக்குக் குறைவான மோட்டார்பம்ப்செட்கள்.பம்ப்செட்மதிப்பில்50 சதவிகிதம் (அ) ரூ.3500/- மானியத் தொகை-இதில் எது குறைவோ அது.பம்ப்செட்மதிப்பில் 25 சதவிகிதம் (அ) ரூ.2500/- மானியத் தொகை- இதில் எது குறைவோ அது.
5 குதிரைத் திறன் மற்றும் அதற்கு அதிகதிறன் கொண்ட மோட்டார்பம்ப்செட்கள் .மோட்டார்பம்ப்செட்கள்மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது ரூபாய்.6000/-மானியத் தொகையாக வழங்குதல். இதில் எது குறைவோ அது.மோட்டார்பம்ப்செட் மதிப்பில்25சதவிகிதம் அல்லது ரூ.5000/- மானியத் தொகையாக வழங்குதல்- இதில் எது குறைவோ அது.
மேல்மூடி மற்றும் அதன் மற்ற துணைப் பாகங்களை மாற்றி அமைக்கும் செலவுமேல்பாகம் மதிப்பில் 50 சதவிகிதம் அல்லது  ரூ.1500/- மானியமாகவழங்குதல். இதில் எது குறைவோ அது. மேல்பாகம் மதிப்பில்50 சதவிகிதம் அல்லது  ரூ.1500/- மானியமாகவழங்குதல். இதில் எது குறைவோ அது.
தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர்:உதவி செயற் பொறியாளர், வருவாய் பிரிவு.  செயற் பொறியாளர், மாவட்ட நிலை. கண்காணிப்புபொறியாளர்,மண்டலநிலை, தலைமைபொறியாளர்,வேளாண்மை பொறியியல் துறை, நந்தனம், சென்னை-35, போன்:2435- 2686: 2435- 2622


செயல் முறை விளக்கங்கள் மூலமாக 40000 எக்டர் பரப்புகளில் திருந்திய நெல் சாகுபடியை செயல்படுத்துதல்:
a.  விதைகள் மற்றும் இதர இடுபொருள்களை எக்டருக்கு  ரூ.800/- என்ற அளவில் வழங்குதல்.
b.  உருளைக் களையெடுக்கும் கருவி மற்றும் குறியிடும் கருவியை @ ரூ.2200/- எக்டர் வழங்குதல்.
    • சென்னை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களின், திருந்திய நெல் சாகுபடி முறையை செயல்படுத்துகின்ற விவசாயிகள் பயனடையலாம்.
    3000 சுய உதவிக்குழு பெண்களுக்கு உருளைக்களைப்பான் (நெல் களையெடுக்குங்கருவி) மற்றும் குறியிடும் கருவியை வழங்குதல். 
    • இயந்திரங்களை/கருவிகளை எளிதாக பெறுவதை உறுதி செய்வதற்கு, ஒவ்வொரு குழுவிற்கும் ரூ.7400/- மதிப்புள்ள 5 உருளைக் களைப்பான்கள் மற்றும் /குறியிடும் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றது.
    • சென்னை மற்றும் நீலகிரி மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலுள்ள 3000 சுய உதவிக்குழு/பண்ணை மகளிர் குழு பெண்களுக்கு வழங்கப்படுகிறது.




மத்திய திட்டங்கள்
1. நிறுவனங்களின் கடன் வசதிகள்:
  • வேளாண்மை வளர்ச்சியில் நிறுவனங்களின் கடன் வசதி என்பது ஒரு முக்கிய கூறாகும்.
  • தேசிய வேளாண் கொள்கை 10 வது திட்ட காலத்தில் 4 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதம் இலக்காக கொண்டிருந்தது.
  • விவசாய கடன் சிறப்பு பணிப்பிரிவு, குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாய நடைமுறைகளை பின்பற்ற போதுமான மற்றும் சரியான நேரத்தில் கடன் உதவிகளை வழங்குவதே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது.
  • நிறுவனக் கடன் என்பது, கூட்டுறவு, வணிக வங்கிகள் மற்றும் மண்டல கிராம வங்கிகள் ஆகியவற்றின் மூலமாக கடனை வழங்குவது ஆகும்.
  • வேளாண்மைக்கான நிறுவனக்கடன் வசதிகள், குறுகிய காலம், மத்திய காலம் மற்றும் நீண்ட கால கடன் வசதிகள் என மூன்று வடிவங்களில் வழங்கப்படுகின்றன.
குறுகிய காலம் மற்றும் மத்திய கால கடன்கள்:
வ.
எண்
திட்டத்தின் பெயர்
தகுதி
நோக்கங்கள்/வசதிகள்
1.பயிர் கடன்அனைத்து வகை விவசாயிகளுக்கும்குறுகிய கால கடனாக பல்வேறு பயிர்களுக்கான சாகுபடி செலவிற்காக வழங்குதல்.
விவசாயிகளுக்கு கடனை நேரடி நிதியாக வழங்கப்பட்டு, அதன் திருப்பி செலுத்தும் காலத்தை 18 மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறது.
2.உற்பத்திபொருள் விற்பனைக் கடன்அனைத்து வகை விவசாயிகளுக்கும்விற்பனை இடர் பாட்டினைத் தவிர்த்து விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை தாமே சேமித்து வைப்பதற்காக கடன் வழங்குகிறது.
அடுத்த பயிருக்கானப் பயிர்க்கடனை உடனே புதுப்பித்தலுக்கான வசதிகளையும் இந்த கடன் வழங்குகிறது.
கடனை 6 மாதத்திற்குள் திருப்பி செலுத்த வேண்டும்.
3.கிசான் கடன் அட்டைத் திட்டம் (KCCS)கடைசி இரு ஆண்டுகளில் அனைத்து விவசாய வாடிக்கையாளர்களும் கடன் திருப்பிசெலுத்துதலை  முறையாக கொண்டிருக்க வேண்டும்.இந்த அட்டை விவசாயிகளுக்கு தங்களின் உற்பத்திக் கடன் மற்றும் சில்லறைத் தேவைகளை சந்திப்பதற்காக தொடர்ச்சியான வரவு செலவு கணக்குகளை அளிக்கிறது.
நிலம் இருப்பு, பயிர் முறைப்பாங்கு மற்றும் கடன் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் குறைந்த பட்ச கடன் அளவு ரூ 3000/- அளிக்கப்படும்.
வருட மறு ஆய்வு கொண்டு, இந்த கிசான் கடன் அட்டை 3 வருடங்களுக்கு செல்லுபடியாகும்.
இறப்பு அல்லது இயலாமைக்கான தனிநபர் நிலையான காப்புறுதி அதிகபட்ச தொகையாக ரூ.50,000/- மற்றும் ரூ.25,000/- முறையே, அளிக்கிறது.
நீண்ட கால கடன் :  
திட்டத்தின் பெயர்தகுதிநோக்கங்கள்/வசதிகள்
வேளாண்மை பருவக் கடன்அனைத்து வகை இன விவசாயிகளும் தகுதியானவர்கள் (சிறிய/நடுத்தர விவசாயிகள் மற்றும் வேளாண்மை வேலையாட்கள்) அவர்களுக்கு தேவையான இடத்தில் செயல்களில் போதுமான அனுபவம் இருக்க வேண்டும்.பயிர் உற்பத்தி/வருமான உற்பத்திக்கான இருப்புகளை விவசாயிகள் உருவாக்குவதற்காக இந்த கடன் வழங்கப்படுகின்றது.
நிலம் வளர்ச்சி, சிறு பாசன வசதிகள், பண்ணை இயந்திரவியல், தோட்டப்பயிர் மற்றும் தோட்டவியல், பால் பண்ணை கோழி இன வளர்ப்பு, பட்டுப்பூச்சியியல் புன்செய் நிலம்/பயன்படா நில மேம்பாட்டுத் திட்டங்கள் ஆகிய அனைத்து செயல்களும் இந்த திட்டத்தின் கீழ் வரும்.
விவசாயிகளுக்கு இந்தக் கடன் நேரடி நிதியாக வழங்கப்படுகிறது.  இதன் திருப்பி செலுத்தும் காலம் 3 வருடங்களுக்குக் குறையாமலும், 15 வருடங்களுக்கு மிகாமலும் இருக்கிறது.



2.ஒருங்கிணைந்த தானியப் பயிர் வளர்ச்சித் திட்டம் (ICDP) - நெல்


         நிதி அமைப்பு: 100 சதவிகிதம் மத்திய அரசால் வழங்கப்பட்டது.
விரிவாக்கம்: 
         ICDP க்கு கீழ் நடத்தப்படும் முக்கிய நிகழ்ச்சிக் கூறுகள் பின்வருமாறு: (i) வயல்வெளி செயல் முறை விளக்கம் (ii) விவசாயிகளுக்கான வயல்வெளி வகுப்பு (iii) ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல் முறை விளக்கம் (iv) விதை வழங்குதல் (v) விவசாயிகளுக்கான பயிற்சி (vi) தெளிப்பான் பி.பி.கருவி (vii) கைக்கருவி (viii) பண்ணை இயந்திரங்கள்/கருவிகள் (ix) பவர் டில்லர்
தகுதி வரம்பு: அனைத்து வகை இன விவசாயிகள்.
நன்மை பெறுபவர்கள்: தனிநபர், குடும்பம், சமுதாயம், பெண்கள் மற்றும் பலர்.
விரிவாக்கம்: 
வேளாண்மை கருவிகளான பயிர்ப்பாதுகாப்பு கருவிகள் போன்ற பலவகை பொருட்களுக்கான மானியத்தை இத்திட்டத்தின் கீழ் வழங்குகின்றனர்.  சான்று பெற்ற தரமான விதைகள் மற்றும் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை செயல்முறைகளுக்கான மானியமும் வழங்கப்படுகிறது.  ஒரு விவசாயிக்கு, ஒரு செயலுக்கான மானியம் 25 சதவிகிதத்திற்கு மேலும் அல்லது திட்டத்தின் கீழ் உள்ள தற்போதைய மானிய அளவை விடவும் மிகாமல் பார்த்துக்கொள்ளப்படுகிறது.
எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது?
மாவட்ட வேளாண்மை அலுவலர்யின் பரிந்துரையின் மூலமாக நன்மையடைபவர்கள் தேர்ந்தெடுக்கபடுகின்றார்கள்.

3. நெற்பயிருக்கான இடுபொருள் பை வழங்கும் திட்டம்: வேளாண்மை அமைச்சகம்

நிதி அமைப்பு: இந்த திட்டம் 100 சதவிகிதம் மத்திய அரசால் வழங்கப்படுகிறது.
   அமைச்சகம்/துறை: வேளாண்மை மற்றும் துறை, கூட்டுறவுத்துறை.
   விரிவுரை: புதிதாக வெளியிடப்பட்ட கலப்பினம்/அதிக மகசூல் அளிக்கும் இரகங்களைப் பயன்படுத்தி உற்பத்தித் திறனை அதிகப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். குறிப்பிட்ட இடத்தில் அதிக மகசூல் அளிக்கும் இரகங்கள்/கலப்பின வகைகளுக்கான பரப்பளவை பரப்புவதும் இதன் செயலாகும்.
தகுதி: அனைத்து மாநிலங்களும் இத்திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தகுதியானவர்கள்.
எவ்வாறு பயன்படுத்துவது?
மாநில வேளாண்மைத் துறை மூலமாக இத்திட்டத்தின் நன்மைகள் விவசாயிகளுக்குச் சென்றடைகின்றன.
4.குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டம்:
  • குறைந்தபட்ச ஆதார விலைத் திட்டம்:
வணிகச் சரக்கு
இரகம்
குறைந்த ஆதரவு விலை (2010-11)
நெல்
பொது இரகம்
1000

தரநிலை, ‘'A'
1030

5. தேசிய வேளாண்மைக் காப்பீட்டுத் திட்டம் (NAIS) 
நன்மையடைபவர்கள்: 
    • விவசாயிகளின்  நில இருப்பு அளவை கணக்கில் கருதாமல், கடன் பெற்ற மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் இத்திட்டம் உதவுகின்றது.

    நோக்கங்கள்/வசதிகள்:
      • இயற்கை சீற்றங்கள், பூச்சிகள் மற்றும் நோய் தாக்குதல் ஆகியவற்றால் ஏதேனும் குறிப்பிட்ட பயிர் தோல்வி ஏற்படும் தருணத்தில், விவசாயிகளுக்கு காப்புறுதி மற்றும் நிதியுதவியை இத்திட்டம் வழங்குகின்றது.
      • முன்னேற்றமுள்ள விவசாய செயல்முறைகளைப் புதுப்பிக்கவும், அதிக மதிப்புள்ள இடுபொருள்கள், மற்றும் வேளாண்மையில் அதிக தொழிற்நுட்பங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தவும் விவசாயிகளை உற்சாகப்படுத்துகின்றன.
      • குறிப்பாக அழிவு (ஆபத்து) வருடங்களில் பண்ணை வருமானத்தை நிலையாகப் பெறுவதற்கு உதவுகின்றன. 
      • இந்திய அரசு பொதுக்காப்பீட்டுக் கழகம் (GIC) இதை செயல்படுத்துகிறது.
      • காப்புறுதி செய்யப்பட்ட தொகை அந்தந்த பகுதியின் மகசூலை பொருத்து அமைகிறது.
      • சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பிரீமியம் தொகையில் 50 சதவீதம் வரை மானியம் அளிக்கப்படுகிறது.

சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதற் காக விண்ணப்பிப்பது எப்படி?

சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதற் காக விண்ணப்பிப்பது எப்படி?


சொட்டுநீர் பாசனம் அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதற் காக விண்ணப்பிப்பது எப்படி? என்று வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக சேரன்மாதேவி தோட்டக்கலை உதவி இயக்குனர் தி.சு.பாலசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகளுக்கு மானியம்
உலகமெங்கும் நாளுக்கு நாள் தண்ணீர் தேவை அதிகரித்து வரும் நிலையில் சிக்கனமாக நீரை பயன்படுத்தி, வருங் கால தலைமுறைக்கு வளமான நீர்வளத்தை விட்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். மேலும் அபரிமிதமாக நீரை பயன்படுத்துவதை விட, அளவாக நீரை பயன்படுத்தும் போதுதான் நிறைவான மகசூல் பெற முடிகிறது என்பது அறிவியல் பூர்வமாகவும், அனுபவ பூர்வமாகவும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே தான் நீர் சிக்கனத்துக்கும், நிறைமகசூலுக்கும் ஒருசேர வழிவகுக்கும் சொட்டுநீர் பாசன முறையை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு அவற்றை அமைக்க சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியம் வழங்க உதவுகிறது. இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மானியம் வழங்குகிறது.
பயன்கள்
சொட்டுநீர் பாசனத்தினால் நீரும், சத்துக்களும் வேரினில் கிடைக்கின்றன. நீரை சிக்கனப்படுத்தலாம். பாசனத்துக்கு தனியே ஆள் விட தேவையில்லை. அதனால் பாசன ஆள் செலவு முற்றிலும் குறைகிறது. சத்துக்குள் நேரடியாக வேருக்கு கிடைப்பதால், அவை வீணாகாமல் பயிருக்கு கிடைக்கின்றன. ஒரு ஆய்வின்படி தழைச்சத்தை நேரடியாக மண்ணில் இடும்போது உரத்தில் 30 முதல் 50 சதம் வரை மட்டுமே பயிருக்கு கிடைக்கிறது. அதையே கரையும் உரப்பாசனமாக சொட்டுநீர் பாசனத்தின் மூலம் கொடுக்கும் போது 95 சதம் தழைச்சத்து பயிருக்கு கிடைக்கிறது. அதேபோல் மண்ணில் நேரடியாக இடும் போது 50 சதம் மட்டுமே கிடைக்கும் சாம்பல் சத்து, கரையும் உரப்பாசனமாக சொட்டு நீர் பாசனத்தின் மூலம் கொடுக்கும் போது 80 சதம் கிடைக்கிறது.
வேரை நீர் நேரடியாக சென்றடைவதால், இடையே களைகள் முளைப்பது குறைகிறது. களையெடுக்கும் செலவு பெருமளவு மிச்சமாகிறது. குறிப்பாக களையெடுத்து மீள முடியாத வாழையில் சொட்டு நீர் பாசனம் ஒரு வரப்பிரசாதம். களைகளின் போட்டியின்றி பயிர்கள வளர்வதால் மகசூல் அதிகமாக கிடைக்கிறது. மொத்தத்தில் 30 சதம் முதல் 60 சதம் வரை மகசூல் கிடைக்கிறது. முன்னதாகவே முதிர்ச்சிக்கு வருவதால், முன்கூட்டியே கையில் காசு பார்த்து விடலாம். அடுத்த பயிர் சாகுபடியை முன்னதாகவே மேற்கொள்ளலாம். விளைபொருளின் தரமும், எடையும், பொலிவும் அதிகரிப்பதால் நல்ல விலை கிடைக்கிறது.
யாருக்கு மானியம்?
சொட்டுநீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகளுக்கு நீர் இறைக்கும் மோட்டாருடன் கூடிய கிணறோ, ஆழ்துளை கிணறோ போதிய நீராதாரத்துடன் இருக்க வேண்டும். பொதுவாக நீராதாரம் கொண்ட சின்னச் சிறு விவசாயிகள் இரண்டு, மூன்று பேர் சேர்ந்தும் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்.
வருவாய்த்துறை நில வகைபாட்டின்படி நன்செய் நிலமென்றால் 2½ ஏக்கருக்குள்ளும், புன்செய் நிலமென்றால் 5 ஏக்கருக்குள்ளும் சொந்த நிலமுள்ளவர்கள் சிறு, குறு விவசாயி. பயன் பெற விரும்புவோர் சிறு, குறு விவசாயிகளுக்குரிய சான்றிதழை வருவாய் தாசில்தாரிடம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
ஆவணங்கள்
நிலத்தின் கணினி பட்டா, சாகுபடி செய்துள்ள அல்லது செய்யவுள்ள பயிர் பரப்பை சர்வே எண்கள் வாரியாக குறிப்பிட்டு கிராம நிர்வாக அலுவலர் வழங்கிய அடங்கல், வயல் வரைபட நகல், இருப்பிட முகவரியை தெளிவாக குறிப்பிடும் ரேஷன் கார்டு நகல் அல்லது வாக்காளர் அடையாள அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் மூன்று ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். சிறு, குறு விவசாயிகள் அதற்கான வருவாய் தாசில்தாரிடம் சான்றிதழையும் சமர்ப்பிக்க வேண்டும்.
எனவே வாழை, காய்கறிகள், மிளகாய், மலர்ப்பயிர்கள், பழ மரப்பயிர்கள் போன்ற தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் சேரன்மாதேவி, அம்பை வட்டார சிறு, குறு மற்றும் இதர விவசாயிகள் சேரன்மாதேவி, அம்பை பஞ்சாயத்து யூனியன் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள உதவி தோட்டக்கலை அலுவலர் அலுவலகத்தை அணுகி பயன் பெறலாம். இதர வட்டார சிறு, குறு விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலை அலுவலர்களை அணுகி பயன்பெறலாம்.