Tuesday, March 21, 2017

கனவு இல்லம் / தோட்டம்


எனது தோட்டம்

இது எனது கனவு இல்லம் / தோட்டம் :
                         எனது சொந்த உழைப்பில் மிகுந்த போராட்டத்திற்கு மத்தியில்  வாங்கிய நிலத்தில் எனது தோட்டம் . இதில் எனக்கென்ற சில கனவுகள் உண்டு அவைகளை நிச்சயம் நிறைவேற்றுவதற்கு தீராத முயற்சிகள் நடந்து  கொண்டு உள்ளது. இன்னும் சில படிகள் தாண்டவேண்டும் . எனது திட்டங்களை/கனவுகளை  இங்கு பகிர்த்து கொண்டு உள்ளேன்  .மேலும் இதில் உள்ளது போலவே அனைத்தும் அமைக்கவேண்டும் ஆனால் களத்தில் செய்யும் பொழுது மாற்றங்கள் நிறைய இருக்கும் .
குறிப்பு: இதில் பயன்படுத்தி உள்ள அனைத்து படங்களும் வலைத்தளத்தில்  இருந்து  திரட்டியது . இதுபோன்றஅமைப்பை நான் செயல்படுத்தவேண்டும் என்று தேடியபொழுது கிடைத்தவை .நிச்சயம் நாமும் பயன்படுத்த முடியும் சிறிது மாற்றங்களுடன்அல்லது நமது ஊரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு நமக்கு தகுந்தற்போல சில மாற்றங்களுடன் செயல் முறைபடுத்த முடியும் .
நிலத்தில் அமைப்பு :
வடக்கு தெற்கில் நீளமாகவும் ( 410 அடி )  , கிழக்கு மேற்கில் அகலம் குறைந்த ( 45அடி ) நிலம்.மொத்தம் நிலத்தில் அளவு 18500 சதுர அடி ( கூட குறைய இருக்கும் )
அளவீடு மற்றும் வேலி :
அரசாங்க பதிவேட்டின் படி அரசாங்க அதிகாரிகள் மூலம் அளவீடு செய்து நிலத்தை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும் . இது சிறிது செலவு பிடிக்கும் வேலை . ஆனாலும் மிகவும் அவசியமானது .நிலத்தின் ஒரு ஒரு திருப்பத்திலும் நமது பட்டா /சிட்டா / FNB  உள்ளது போல் குறைந்தது 5 அடி உயர கல்கால் ( 3 அடி வெளியில் தெரிய வேண்டும் )  நடுவது சிறந்தது .மேலும்  சிமெண்ட் பயன்படுத்தி நிலத்திற்குள் 2 அடி ஆழம்  வரை  நட்டு   வெள்ளை அடித்து வைக்கவும் .
  1.  அரசாங்க பதிவேட்டின் படி அளவீடுகள் – முடிந்தது
  2. நிலத்தில் திருப்பத்தில் கல்கால் நடுதல்
  3. பட்டா /FNB வரைபடம்
நிலம் சமன் செய்தல் :
தெற்கு பகுதியை உயரமாகவும் வடக்கு பக்கம் உயரம் குறைவாகவும் ( இந்த நிலத்தை குறைந்த செலவில் சமன்படுத்த ) நிலத்தை  3 அல்லது 4 பகுதிகளாக பிரித்து கொள்ளவேண்டும் .இங்கு நான் நிலத்தை பகுதிகளாக பிரித்து உள்ளேன் .   1.வீடு  2. தோட்டம்  3. கால்நடை வளர்ப்பு  4. வயல்வெளி
  1. நிலத்தின் மேடு பள்ளங்கள் சமன் செய்யும் வேலை – முடிந்தது
  2. சேற்று வரப்பு நடுவில் கல் வைத்து கட்டுதல்
தண்ணீர் வசதி & தண்ணீர் சேமிப்பு
தண்ணீர் வசதி வருடத்தில் பத்து மாதங்கள் கிடைக்கும் . சுற்றுப்புறமும் நன்கு  பசுமை கட்டிய இடம்.மேலும்  மழை நீர் சேகரிப்பு ( உதவிக்கு ‘மழை நீர் பொறியாளர்’ கி.வரதராஜன் – திருவாரூர் ) அமைப்பை ஏற்படுத்தி பாதுகாப்பாக வீட்டின் போர்டிகோ   கீழ் நிலத்தடி தொட்டியில் சேமிப்பது ( 3,000 லிட்டர் முதல்  10,000 லிட்டர் வரை  )  நீரையும்  இடத்தையும் சேமிக்கலாம்.இந்த நிலத்தடி தொட்டியில் சிறிய அளவில் தாமிரம உலோகம்  இருக்கும் படி அமைக்கவேண்டும் . (  வருங்காலத்தில் அதிகம் தண்ணிர்  தட்டுப்பாடும், தேவையும்  வரலாம் என்பதால் வரும்முன் காப்போம் என்ற நோக்கத்தில்  )
 வீடு + போர்டிகோ + சிறிது பல பயன்பாடு கொண்ட  இடம் : ( 3000 சதுர அடி )
வீட்டின் அளவு 1000  முதல் 1200 சதுர அடி போதுமானது . கட்டுமானம் செய்ய Compressed earth block (CEB) or pressed earth block  முறையில்  பயன்படுத்தும் எண்ணம் உள்ளது .  இரண்டு குதிர்கள்  வைக்க இடமோ அல்லது தனியான ஒரு அறையோ தேவை . இரண்டு படுக்கை அறை கொண்ட வடக்கு நோக்கிய வாசல் வைத்த வீடு .
வீட்டை சுற்றி  6 முதல் 10 அடி  இடம் இருக்க வேண்டும் நன்கு காற்றோட்டவசதிக்கும்   + மரங்கள் +  பூ செடிகள் வைக்கலாம்  ( மனையாளின் விருப்பம் –  ரோஜா வகை , மல்லிகை வகை  ,மருதாணி ,கனகாம்பரம் வகைகள் , கோழி கொண்டை, வாடாமல்லி , சம்பங்கி ,மனோ ரஞ்சிதம் ,செம்பருத்தி ,சாமந்தி, அரளி, சூரியகாந்தி,பிச்சிபூ ,தெற்றிப்பூ ,நந்தியார் வட்டம்,மற்றும் பல  )  .
  1. 3000 சதுர அடி இடம் ஒதுக்கப்பட்டு நிலத்தைவிட உயரமாக இருக்கும்படி மண் கொட்டும் வேலை – முடிந்தது
மொட்டைமாடியில் … ?
தலைவாயில் : ( போர்டிகோ ) 
இதன் அளவு அதிகம் இருக்குமாறு அமைக்க எண்ணம் . குறைந்த அளவு 400 சதுர அடிகள்.கிழக்கு ,வடக்கு பகுதிகளில் 2 அல்லது 3 அடி உயர சுற்றில் கைப்பிடி சுவர் போல கட்டுமானம் செய்து அதன் உள் பகுதியில்  வசதியான முறையில் திண்ணை அமைப்பும் ( கிழக்கு ,வடக்கு ” L ” வடிவில்  ) இருத்தல் அவசியம் . இங்கு அமர்ந்து பார்த்தல் தோட்டமும் , சிறு அருவியும்  குளமும் தெரியும் .இதன் மேற்கூரை வளைவாக இருக்குமாறு அமைத்தால் வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க முடியும் .
கிழக்கு பக்கம் கைப்பிடி சுவருக்கு வெளிப்பக்கம் vertical Garden அல்லது சிறிது வாய்க்கள் போன்ற அமைப்பில  அழகு  பூ செடிகள் இருக்கும், வடக்கு  பகுதியில் வீட்டின் வாசலுக்கு நேராக ஒரு சிறிய வாசல் வைத்து தோட்டத்திற்கு செல்ல வழி அமைக்க வேண்டும் .
flowertower
நாய் வீடு – 30 சதுரஅடி
சிறிய வீடு போன்ற அமைப்பை இரண்டு அல்லது நான்கு அறைகளும் கதவுகளும் ஏற்படுத்த வேண்டும் . தனியான வேலி மூன்று அடி உயரம் கொண்டதாகவும் ஒரு கதவு  இருத்தல் அவசியம் . தேவையான தண்ணிர் மற்றும் உணவு தட்டுகளும் இருக்கவேண்டும் . அகன்ற மேல்பகுதி கொண்ட மரம் வைத்து பராமரிக்கலாம். நிழல் கிடைக்கும் .
சமையல் அறை :
பாத்திரம் கழுவும் தண்ணீர் வெளியேறும் இடத்தில கற்றாளை,சேப்பங்கிழக்கு,வாழை மரங்கள்  நடலாம் வீட்டுக்காய்கறி கழிவுகள் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம் .
புகை போக்கி  , விறகு அடுப்பு ஒன்று , புகை வெளியேற்றும் காத்தாடி ( Exhaust Fan ), அம்மி,குழவி , செக்கு  வைக்க இடம்
குளியல் அறை தண்ணிர் :
குளியலறை நீரில் வெளியேறும் இடத்தில கற்றாளை , வாழைமரம் , கல்வாழை , செடிகள் , வெட்டிவேர்  போன்றவைகளை நட்டு இயற்கையான முறையில் நீர் சுத்திகரிப்பு செய்யலாம் .குளியலுக்கு பயன்படுத்தும் பொருட்களும் இயற்கையானதாக இருக்கலாம் .
மின்சாரம்:
சூரிய ஒளி தகடுகள் ( இதில் இரண்டு விஷயங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் முதலில் அமைக்கும் செலவும் , பராமரிப்பும் அதிகம் ) வழியாக வீட்டிற்கு தேவையான  மின்சாரம் உற்பத்தி செய்து   மின்கலன்களில் சேமித்து குறைந்த அளவு மின்சாரம் தேவைப்படும் மின் விளக்குகள்  ( LED )  அமைத்து பயன்படுத்தல் வேண்டும்.அரசாங்க மின் பகிர்வு அமைப்பும் பெற்றுக்கொள்ள வேண்டும்.மேலும் சமையல் எரிவாயுவை கொண்டும் மின்சாரம் தயாரிக்கும் வாய்ப்புகளையும் பயன்படுத்தலாம் .
வாய்ப்பு கிடைத்தால் சிறிய காற்றாலை அமைப்பும் ஏற்படுத்தலாம் .
சமையல் எரிவாயு : ( 250 சதுர அடி )
சாண எரிவாயு கலன் அமைப்பின் வழியாக பெறுதல் .அரசு கொடுக்கும் எரிகலன் அவசியம் தேவை  .இந்த அமைப்பு பசு தொழுவத்திருக்கு அருகில் அமைந்தால் மேலும் சிறப்பாக அமையும் .இதில் இருந்து வெளியேறும் சானகரைசலை அமிர்த கரைசல் தயாரிக்க பயன்படுத்தலாம்.
நிலம் தயார் படுத்தல் :
தேவையான பொருட்கள் :
  • கரும்பு சோகை
  • நாட்டு பசு சாணம்
  • நாட்டு பசுவின் கோ மூத்திரம்
  • தென்னை நார் கழிவு
  • காய்ந்த இலைகள்
  • பசுந்தாள் உர பயிர்கள்
வீட்டுத்தோட்டம் : ( 250  சதுர அடி  )
செடி வகை  காய்கறிகள் :   கத்தரி   வகைகள் ,வெண்டைவகைகள் , மிளகாய் வகைகள்  ,தக்காளி வகைகள் .இதில் இருப்பது போல சாதாரண சணல் சாக்கில் செய்து கொள்ள முடியும் .இந்த அமைப்பு பயன்படுத்தினால் குறைந்த இடத்தில்  நிறைய செடிகள் வைக்க முடியும்  .கிழே காட்டப்பட்டு உள்ளது போல 5 அல்லது 6 அமைப்புகளை வைக்க முடியும் .
barrelgarden
கொடி வகை பந்தல்  காய்கறிகள்( 400 சதுரஅடி ) : அவரை வகைகள்,பாகல் வகைகள்  ,புடலை வகைகள்  ,சுரைக்காய் வகைகள்   ( 20 X 20 )
இந்த இடத்தின் ஒரு பக்கத்தில் ஒன்று அல்லது இரண்டு  தேனீ பெட்டிஇருக்கும் . அதனை மிகவும் பாதுகப்பான முறையில்  நிழலில் வைக்க வேண்டும் .
honeybee
நிழலில் வளரும் உணவு தாவரங்கள் :மிளகு ,வெற்றிலை ,ஜாதிக்காய் ,கிராம்பு ,சக்கரை வள்ளி ,ஏலக்காய்,மிளகு ,பீட்ரூட் ,காரட். இவை அனைத்தும் கொடி வகை பந்தலின் நிழலில் பயிரிடபடவேண்டும் .
நீர் மேலாண்மை : பழங்காலத்தில் நமது முன்னோர்கள்  பயன்படுத்திய பானையை நிலத்தில் குழி அமைத்து அதன் வாய் பகுதியை  மூடி , அதில் தண்ணிர் உற்றிி வைப்பதன் மூலம் நிறைய தண்ணீரை சேமிக்க முடியும் .
claypot
இது பலவகையில் பயன் படுத்த முடியும்  .  பானையை சுற்றிலும் , இரண்டு வரிசை என்று அமைக்கலாம் அல்லது வட்டம்போல் செடிகள் நடலாம் .இதற்கான பானை அடிபாகம் பெரிதாகவும் , வாய் பகுதி குறுகி நீளமாகவும் இருக்க வேண்டும் .இதன் மூலம் அதிகமான நீர் ஆவியாகாமல் தடுக்க முடியும் .மூடியும் இருந்த மிகவும் நல்லது . இதில்  துளை இட வேண்டிய அவசியம் இல்லை .
“Micro sprinkler ” இரண்டு அல்லது மூன்று சொட்டுநீர் பாசனம் அமைப்பதன் மூலம் இடத்தின் தட்பவெப்ப வெப்பநிலை கட்டுபடுத்தி வைக்க முடியும்  . தண்ணிர் அதிகம் கிடைக்கும் காலத்தில் பாம்பு போன்ற நெளிந்து செல்லும் வகையில் சிறு வாய்கால் அமைப்பு .
கொடி வகை தரை காய்கறிகள் : வெள்ளரிகொடி, நாட்டுபூசணி , தர்பூசணி ,வெள்ளை பூசணி, கோவக்காய்,பெரிய பாகல், நீள புடலை,சிறுபுடலை,பீக்கன்காய் ,மிதி பாகல் , சாம்பல் பூசணி ( 500 சதுரஅடி ) . இதன் உயரம் அதிக அளவு  6 அடி இருக்க வேண்டும்
23456

கிழங்கு வகை :  கருணை கிழங்கு ,குச்சிக்கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு , உருளை   கிழங்கு , முள்ளங்கி , சேனை கிழங்கு ,ராஜவல்லி கிழங்கு , பீட்ருட் ,காரட் , வெங்காயம் , பூண்டு , இஞ்சி போன்றவை ( 800 சதுரஅடி ) பயிரிலாம்.இடம் இருக்கும் பகுதிகளில்   தட்டை பயறு, பச்சை பயறு ,துவரை, அவரை  வகைகள்  போன்ற தானிய செடிகளை முடாக்கு போன்று பயன்படுத்தி கொள்ளலாம் .இதன் மூலம் நமக்கு தேவையான தானியங்கள் கிடைக்கும் .
இதில் சில வகை கிழங்கு பயிர்களை வளர்க்க மண் மிகவும் பொது பொதுப்பான ( உதிரி தன்மை )  வகையில் இருக்கவேண்டும் .அதற்கு கிழே உள்ளது போல பயன் படுத்தலாம் .இந்த அமைப்பு காரட் , உருளை ,சக்கரைவள்ளி கிழங்கு வகைகளுக்கு மிகவும் ஏற்றது .மேலும் இதன் பக்க பகுதிகளில் தக்காளி போன்ற காய்கறிகளையும் பயிர் செயயலாம் .குறைந்த இடத்தில அதிகமான பயன்பாடு கொண்டதாக இருக்கும் .
123456
மூலிகை செடிகள் :  தூதுவளை ,சிறியாநங்கை, பெரியாநங்கை,கறிவேப்பிலை , துளசி,சக்கரை கொல்லி ,கற்பூரவல்லி, மருதாணி ,பிரண்டை, வெற்றிலை ,சதகுப்பைனு செடி ,கருணொச்சி மேலும்  பல  மூலிகைகள் . வட்டவடிவ அமைப்பு கொண்ட அமைப்பு அதிகமான இடம் சேமிப்பை கொடுக்கும் . ( 250 சதுரஅடி )
Spirel
கீரை வகைகள் :சிறு கீரை , முளைக்கீரை ,தண்டு கீரை ,வெந்தய கீரை,பசலை கீரை,புளிச்ச கீரை,கொத்தமல்லி,புதினா,சிவப்பு தண்டுகீரை,வல்லாரை ,பொன்னக்கண்ணி , கரிசலாங்கண்ணி ,தவசிக் கீரை , புளிச்ச கீரை   ,முடக்கத்தான் போன்றவைகளை மேட்டு பாத்தி முறையில் பயிரிட வேண்டும் . ( 400 சதுரஅடி ).
super oneஇந்த பகுதிகளை பிரிக்கும் வகையில் உயிர் வேலிகள் அமைக்க வேண்டும் . மேலும் கீழே உள்ளது போல கயிறுகளை இணைத்து கொடி ( கோவக்காய் ,பிரண்டை ) வகைகளை படர விட்டு மேலும் பயன் பெற முடியும் .இந்த அமைப்பு கிழக்கு மேற்கில் இருக்கும் படி அமைக்க வேண்டும் . இதற்கு 5 அடி அகலம் தேவை .
10559964_674473329313957_4173334900148136406_n10505432_674285249332765_1221200914621244568_n
அழகு/சிறு அருவி  மீன் குளம் : ( 300  சதுர அடி )
இந்தக்குளத்தில் அழகு மீன்கள் வளர்க்கலாம் , சிறு அருவிபோன்ற அமைப்புக்கு அருகில்  நிழல் தருவதற்கு முள்ளில்லா மூங்கில் + வேம்பு + புங்கன் மரங்களை  நட்டு வைக்கலாம். இந்த மரங்கள் மிக அதிகமான அளவு பிராணவாயுவை உற்பத்தி செய்யும் .சுற்றுபுறத்தை குளிர்ச்சியாக வைத்து இருக்கும் . இந்த இடத்தில இருக்கும் மரங்களை சரியான முறையில் தேவையான அகல,உயரத்தில் இருக்குமாறு  பராமரித்து வர வேண்டும் .
KONICA MINOLTA DIGITAL CAMERA
இங்கு சிட்டுக்குருவிகள் தங்கும் வகையில் 5 முதல் 10 மர பெட்டிகள் வைக்க வேண்டும் .மரங்களிலோ அல்லது தனியாக வைக்கலாம் . சிட்டு குருவிகளை கவர அதற்கு  தேவையான உணவும் ,தண்ணீரும் வைக்கலாம் .சில இடங்களில் திணை , கம்பு போன்ற தனிய பயிர்களை வைத்து விடலாம் .இது நிறைய பறவைகளை ஈர்க்கும் . சிட்டுக்குருவிகள் மனதிற்கு இதமான இயற்கையான சூழலையும் கொடுக்கும் , பூச்சிகளையும் கட்டுபடுத்தும் .
feerderஇந்த குளம் சிறிதும் பெரிதுமாக  வட்ட வடிவில்  முதல் வட்டம் 5 அடி ,இரண்டாவது வட்டம் 3 அடியும்  ( எட்டு  வடிவில் ) இருக்கும் 3 முதல் 5  அடி அழம் வரை இருக்கும் .இந்த குளம் அழகு மீன்அல்லது உணவிற்கான மீன்களை  வளர்த்து அதனை இனபெருக்கம் செய்யவும் பயன்படுத்தலாம்  ,இரண்டு அடி உயரத்தில் இருந்து சிறுஅருவி இருக்குமாறு அமைக்க வேண்டும் . இந்த அருவி அமைப்புக்கு சிறிய மோட்டார் தேவை படும் .அதற்கு தேவையான மின்சாரம் அமைப்பும் இருக்க வேண்டும் .சிறு அருவியில் நீர் விழும் ஓசை சுற்றுபுறத்தை ஒரு இயற்கையான சுழலை கொடுக்கும் .குளத்தின் ஒரு வட்ட பகுதியில் நீருக்கு oxygenation கொடுக்கும் புல்வகைகளை   நடவேண்டும் .
pondfinal
இந்தகுளம் போர்டிகோ  பகுதிக்கு வடகிழக்கில் அமைந்து இருக்கும்.போர்டிகோவில்இருந்து நேரடி பார்வையில் படும் படி அமைந்து இருக்கும் .இதன் ஓரத்தில் தோற்றாங்கோட்டை மரம் , சரக்கொன்றை மரம்,முள்ளிலாமூங்கில் மரம் .மாலை நேரத்தில் அமர்ந்து கொள்ள 5  பேர் வரை அமரும் வகையில் வசதியான இருக்கை வசதியும்  , வெளியில் வைத்து சமைக்கும் அமைப்பு ( BBQ Pit )  . மின்விளக்குகளும் இருக்க வேண்டும் .
சிறிய வேலி போன்ற அமைப்பை ஏற்படுத்தி ஆடுகள் , பசுக்கள் தோட்டத்திற்குள் வராமல் பாதுகாப்பான அமைப்பை கொடுக்க வேண்டும் .ஆனால் கோழிகள் , வாத்துகள் வருவதற்கு வழி ( தேவைக்கு பயன்படுத்த )  இருக்க  வேண்டும் .

மீன் வளர்ப்பு குளம் : ( 500 சதுர அடி ) + கோழி ( 70 No.s ) + வாத்து ( 10 No.s )  + காடைகள்  ( 10 No.s ) 
மீன் குளம்  2௦அடி நீளம்  15அடி அகலம்  6 அடி அழம் கொண்ட குளம் . .இதற்குள் நமக்கு உணவுக்கு தேவையான மீன்களை வளர்க்கலாம்.. இதன் அடிபகுதியில் கரம்பை மண் , ஓரங்களில் செங்கல் அல்லது Hallow Block  கொண்டு ( மண்ணின்  இயல்பை பொருத்து ) கட்டுமானம் செய்ய வேண்டும் .ஒரு ஓரத்தில்  படிகள் போன்று கட்டவேண்டும் .இந்த படி அமைப்பில்  oxygenation கொடுக்கும் புல்வகைகளை   நடவேண்டும்  .குளத்தின் ஓரங்களில் வாழை பயிர்செய்து நிழலான அமைப்பை ஏற்படுத்தலாம் .
இந்த குளத்தில் இருந்து வெளியேறும் அல்லது வெளியேற்றும் தண்ணிர் தோட்டத்தில் இருக்கும் பயிர்களுக்கும் செல்லும் வகையில் அமைப்பு இருக்கவேண்டும் .
தேவைக்கு வளர்க்கும் குளத்தில் வளரும்  மீன்கள் :
குளத்தின் அடிபகுதியில் :விரால் ,வாளை
நடுகண்டத்தில் :ரோகு,மிர்கால்
மேல் தட்டு வகை :கெண்டை ,கட்லா
Pond
இந்த குளத்தில் மேல் பகுதில் 10 அடி X 10 அடிX 1௦ அடி  அளவில்கோழிகள் அடைக்கும் கொட்டகை. இதன் கூரை தென்னை கீற்றுகள் கொண்டு அமைத்து கொள்ளலாம் . மேலும் வெப்பம் அதிகம் தாக்காத வகையில் இருக்க வேண்டும் .
Permaculture Chicken Coop and fish pond 2011
கோழி கொட்டகையின் உள்பகுதியில் இதில் கீழே உள்ள படத்தில் காட்டி உள்ளதுபோல அமைப்பை கிடைக்கும் மரக்குச்சிகளை கொண்டு ஏற்படுத்தினால் குறைந்த இடத்தில நிறைய கோழிகளை இரவில் தங்க வைக்க முடியும் .கோழி கழிவுகள் கீழ்வரிசையில்  இருக்கும் கோழி மேல் விழாமல்  இருக்குமாறு  சரிவை சரியான அளவில்  அமைக்கவேண்டும் .ஒரு மின்சார விளக்கு பொருத்தவேண்டும் .
insidecoop
கோழிகள் முட்டையிட/அடைகாக்க  பாதுகாப்பான  தனியாக ஒரு பகுதியும்  வாயிலும் இருக்க வேண்டும் .இங்கு இயற்கையில் கிடைக்கும் பொருட்கள் அல்லது உடைந்த  மண் பானைகளை பயன்படுத்தலாம் .கீழே இருக்கும் படம்  புரிதலுக்கு மட்டுமே .
கோழி வகைகள்:சுத்தமான நாட்டுக்கோழி , கடக்நாத் கோழி ,வான்கோழி, கினி கோழி
breeding box
வாத்து கொட்டகை 10 அடி X 10அடிX 10 அடி  அளவில் குளத்தின் மேல் பகுதியில்          கூரை அமைக்க வேண்டும் . கூரை அமைப்பில் மேல் பகுதியில் இருக்கும்  காடை கழிவுகள் வாத்து கொட்டகையில் விழாமல் இருக்க வேண்டும் .ஓரங்களில் சுற்றிலும் கம்பி வலை அடித்து அதில்  100% Shade net கொண்டு கட்டி விடலாம்  .
வாத்து வகைகள் : பங்களா வாத்து,மாஸ்கோவி வாத்து ,காக்கி காம்பெல்
காடை வளர்ப்பு : காடைகளுக்கான இரும்பில் செய்த பெட்டிகளும் அதற்கு நிழல் தரும் வகையிலும் , ஈரம் படாமலும் , நல்ல வெளிச்சமும் காற்றோட்டமும்  இருக்கும் வகையில்  அமைக்கவேண்டும்.கடைகளுக்கு வெப்பம் தேவை எனவே மின்சார விளக்கு பொருத்தும் அமைப்புகள் தேவை . .கழிவுகளை எளிதாக சுத்தம் செய்யும் படி இருக்க வேண்டும் .
கோழி + வாத்து  மேய்ச்சல் பகுதி  + பட்டி முறையில் ஆடு வளர்ப்பு ( 5 )   +  2 பசுகளுக்கான தொழுவம்  : (1500  சதுர அடி )
கோழிகளுக்கு மண் குளியல் ( 3 அடி X 3 அடி X 1அடி )  தொட்டியை ஈரம் படாதவாறு பந்தல்அமைப்பு 5 அடி X 5 அடி  X 3 அடி அளவில் அமைக்கவேண்டும் .
chickenBath_ pannaiyar
பந்தலில் தண்ணிர் முனை அமைப்பு , சிறிது தீவனம் வைக்க வேண்டும் .
IM000653.JPG
கோழிகளின் மேய்ச்சல் நிலத்தில் ஒன்று அல்லது இரண்டு இடங்களில் புழு /பூச்சிகள் உற்பத்தி செய்யும் வகையில் தோட்ட கழிவுகள் , சமையலறை கழிவுகள் கொட்டி சிறிது பசுவின் சாணமும் ( சமையல் எரிவாயு கலனில் இருந்து வெளியேறும் கழிவு சாணம் இந்த பகுதில் வெளியேறுமாறு  வைத்து விட்டால் இன்னும் சிறப்பு ) கலந்து விட்டால் கோழிகளுக்கு அருமையான இயற்கையான உணவு உற்பத்தியாகும் .இதிலிருந்து நமக்கு தேவையான இயற்கை உரமும் கிடைக்க பெறலாம் .கோழி மண் குளியல் தொட்டி அமைப்பை வெட்ட வெளியிலும் அமைக்க வேண்டும் .
feeder
100 சதுர அடியில் கோழி குஞ்சுகளுக்கான 75% shade net + கம்பி வலை  அமைப்பு  மர நிழலில் அமைப்பது சிறந்தது .
12
ஆடுகளுக்கு தேவையான  பட்டி முறையை  சிறிது மேடான ( ஆடுகளுக்கு ஈரம் இல்லாத தரை பகுதி  எல்லா காலங்களிலும் இருக்க வேண்டும் ) பகுதியில்/பகுதியை  அமைத்து , தென்னை நார் கழிவுகள் பரப்பி வைக்கலாம் . ஆடுகள் மழை அல்லது பனியில்இருந்து பாதுகாப்பாக  இருக்க இதன் ஒரு பகுதியில் சிறிய கூரை ( 10அடி  X 5 அடி ) போன்ற அமைப்பை ஏற்படுத்தல் வேண்டும் .இந்த பட்டி அளவு  10 அடி  X 10 அடி  இருக்கலாம் .இவை அனைத்தும் தேவையான இடதிருக்கும் மற்றும் வகையில் இருக்கவேண்டும் .
1280px-செம்மறி_ஆட்டுப்_பட்டிஆடு வகை :மோலை ஆடு ,கன்னி , கொடி வகை ( எங்கள் பகுதிக்கு உரித்தான நாட்டு வகைகள் )
பசுக்கள் சிறு பந்தல் : 10 அடி X 20 அடி
மேடான பகுதியாக இருக்க வேண்டும் அதற்கு .தரை செம்மண் + சட்டு மண் அல்லது சிமெண்ட் கலந்து இரும்பு போல 1 இன்ச் அளவு சரிவாக அமைக்க வேண்டும் . சிறு பந்தல் அமைப்பை  சுற்றிலும், தடுப்புக்கு  கிடைப்பதை  கொண்டு அமைக்கவேண்டும் .அருகில்  அகன்று வளர்த்து நிழல்தரும் மரம் வைத்து பராமரிக்கலாம் ( வேம்பு , புங்கன் )   . தீவனம் இடும் தொட்டியை தண்ணிர் படாத இடத்திலும் ,தண்ணிர் தொட்டியில் Flush Valvu அமைத்து  எப்பொழுதும் புதிய தண்ணிர் கிடைக்கும் வகையில் மேல்நிலை தொட்டியுடன் இணைப்பு இருக்கும் வகையில் அமைக்கவேண்டும் .  கோ-மூத்திரம் சேமிப்பு தொட்டியில் குறைந்த அளவு 500 லிட்டர் வரை சேமிக்கும் அளவு இருக்க வேண்டும் .
இந்த பசு கொட்டகை சமையல் எரிவாயு கலனுக்கு அருகில் இருந்தால் நலம் .எரிவாயு கலனுக்கு அருகில் அமிர்தகரைசல் தயாரிக்கும் உர தொழிற்சாலை அமைப்பது சால சிறந்தது.
பழ/ல மரங்கள் : ( 1000 சதுர அடி ) .குறைந்தது இரண்டு வருடங்களுக்கு முன் வைத்து பாதுகாக்கவேண்டும் .
நிலத்தின் ஓர  பகுதியில் +  கோழி + வாத்து  மேய்ச்சல் பகுதி ஒட்டிய படி 1000 சதுரஅடி அளவில் பழ/ல மரங்கள் இருக்க வேண்டும் .இதன் மூலம் அதிகமான அளவு கோழிகளுக்கு மேச்சல் நிலம் கிடைக்கும் .இதில் பல/ழ மரங்களான கொய்யா , எலுமிச்சை ,சபோட்டா ,மாதுளை ,விளாம்பழம்,கொடுக்காபுளி மரம் , சீத்தா பழம்,முருங்கை,பப்பாளி, சிறு /பெரு நெல்லி , முள்ளு சீத்தா பழம்,நுணா ,வில்வம், வேம்பு ,குமிழ் , புங்கன்  ,தேக்கு ,கொடாம்புளி, மலைவேம்பு , நவகொஞ்சி , ,அழிஞ்சி,நாவல்,நெட்டிலிங்க மரம் ,மகாகோணிமரம் , நெய்கொட்டான் மரம்,மகிழம்,பலா ,வேர் பலா ,மஞ்சள் ,
பாம்பு கொல்லி ,கொக்கு மந்தாரை,  அந்தி மந்தாரை, சர்வ சுகந்தி மரம் ,செஞ்சந்தனம் ,மாஞ்சியம் மரம் ,கடுக்காய் மரம் , நெற்பவளச் செடி,ஈர பலா,கருங்காலி(எ) வைஜயந்தி,அசோகமரம்,செண்பகமரம்,கடம்பமரம் ,வைக்கவேண்டும் .
நடுவில் அங்கே அங்கே வெட்டிவேர்  பயிரிட வேண்டும் . ( வெட்டிவேர் அதிக அளவு நீரை வேரில் சேமித்து வைக்கும் இயல்பு உடையது. இதன் மூலம் மரத்திருக்கு மிகவும் குறைவான தண்ணிர் கொடுத்தால் போதும் )
உயிர் வேலி மரங்கள் : ( 4100  சதுர அடி )
நமது நிலத்தின் வேலியில் இருக்கும் கல்கால் அமைப்பில் இருந்து 8 அடி நமது நிலத்தில் உள்பக்கமாக  கீழ்க்கண்ட தீவன /புல் வகைகளை வைக்கலாம் . 6 அடி முடிவில் பயன் தரும் மரங்களை வைக்கலாம் . 1அடி இடம் விட்டு மலைவேம்பு போன்று நேராக வளரும் மரங்களையும் வைக்கலாம்.
as
மேலும் ஆந்தை , பறவைகள் அமர ” T ” வடிவ குச்சிகள் இரண்டு அல்லது மூன்று இடத்தில நட்டு வைக்கவேண்டும்.காரணம் நமது இடத்தில இருக்கும் எலிகளை கட்டுபடுத்த முடியும் . இவை தங்க சரியான இட அமைப்பை பல/ழ மரங்களில் அவை நன்கு வளர்ந்த பின்பு மரங்களின் கிளைகளில் அமைக்கவேண்டும் .
T
தீவன மரங்கள்/புல்வகைகள்  : சுபாபுல் ,  மல்பெர்ரி , அகத்தி ,சூப்பர் நேப்பியர் , செங்கரும்பு, கரும்பு ,செம்மங்குச்சி, மக்கா சோளம் ,குதிரை மசால், கிளரிசீடியா , கிளுவை,கொழுக்கட்டைபுல்,முருங்கை. கரும்பு ,செங்கரும்பு ,
பயன் தரும் மரங்கள் :பனை மரம் ( 30 No.s )  8 அடிக்கு ஒன்றும் ( யாழ்ப்பாண பனை வகை தேடுகிறேன் ) ,  தென்னை மரம் ( 15 No.s )   வைக்க வேண்டும் . கிழக்கு மேற்காக இருக்கும் வரப்பில் வைத்தால் எண்ணிக்கை குறையும் .
தானிய பயிர் சாகுபடி  ( மீதி இருக்கும் நிலத்தில் )
பாரம்பரிய நெல் வகைகள் :(திரு. ஜெயராமன் திருவாரூர் மாவட்டம்)
சிறுதானிய பயிர்கள்:
****************கனவுகள் தொடரும் ***************
நான் இது வரை எதிர் கொண்ட கேள்விகள் :
  1. எதற்கு மரம் வைத்து 1000  சதுர அடி வீணாக போக வேண்டும் ?இதன் முலம் நமக்கு தேவையான பழங்கள் ,சுவாசிக்க காற்று நம்மால் முடிந்த சிறு அளவு சுற்றுப்புற சுழலை காப்பாற்றவும் .மேலும் கோழிகள் தான திரிந்து வர இந்த அமைப்பை பயன் படுத்த உள்ளேன் .இரட்டை பயன்பாடு .
  2. ஏன் சிட்டுகுருவிக்கு இதனை முக்கியத்துவம் ?  பூச்சிகளை  கட்டுபடுத்தவும்  .இந்த இனத்தை  பாதுகாக்கவேண்டும்  என்ற எண்ணத்திலும் .
  3. ஏன் இரண்டு மீன் குளம் தேவை ? ஒன்று உணவு தேவைக்கும் ,மற்றது  மன நிம்மதிக்கும் .சில வகை மீன்களை இனபெருக்கம் செய்து ஒரு சிறிய வருமானமும் பெற வேண்டும்  என்ற நோக்கத்தில் .
  4. பாம்பு வரும் என்ன செய்வது ? பாம்பு வருவதால் எலிகளில் தொல்லை குறையும் .பாம்புகள் நமக்கு தொல்லை தருவது இல்லை .மேலும் பூண்டும் புதினாவும் பாம்புகளுக்கு பிடிக்காத வாசனை .இதனை தெளித்தும் விடலாம் .இது போல ஒரு இயற்கையுடன் இயைந்த வாழ்கையில் பாம்பின் பங்கும் தேவையே . 
  5. கொசு தொல்லை அதிகம் இருக்கும் போல உள்ளது ? எப்படி சமாளிப்பது ? . கொசு தொல்லை வருவதற்கு வாய்ப்புகள் நிச்சயம் மிக மிக குறைவே. மேலும் சில வகை செடிகள் வளர்ப்பதால் கட்டு படுத்த முடியும்.
  6. எதற்கு தேவை இல்லாமல் மழை நீர் சேகரிப்பு தொட்டி செலவு செய்யவேண்டும் ? வருங்காலத்தில் தண்ணிர் தட்டுப்பாடு ஏற்படலாம் அப்பொழுது இந்த அமைப்பின் தேவை இருக்கலாம் .மேலும் முடிந்த அளவு நீர் சேகரிப்பு  முறை இருப்பதும்  நல்லது தானே.
  7. இந்த நிலத்திற்கு  தண்ணிர் எங்கயிருந்து எப்படி கிடைகிறது ?கிணறு அல்லது ஆழ்துளை கிணறு உள்ளதா ? .இதற்கு நிலத்திருக்கு ஆற்று  பாசனவசதி உள்ளது . தேவை ஏற்பட்டால் சிறிய கிணறு எடுக்கும்  எண்ணமும் உள்ளது .
  8. ஏன் கிணறு எடுக்க வேண்டும் .ஆழ்துளை கிணறு இடம் சேமிப்பு இருக்குமே ? ஆழ்துளை கிணறு அமைக்க எண்ணம் இப்பொழுது இல்லை.அனுபவத்தில் கிணறு எடுப்பதால் நீர் கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் 500 அடி வரை ஆழ்துளை அமைத்து நீர் கிடைக்க வில்லை .அங்கு 50 அடி ஆழம் கிணறு எடுத்ததில் நல்ல வெயில் காலத்திலேயே நீர் கிடைத்தது.
  9. நீர் பாசன முறை திட்டங்கள் உள்ளதா?  .இந்த அமைப்பில் இயன்றவரை ஆட்களில் தேவையை குறைக்க எண்ணம் உள்ளது. ஆரம்ப கட்டத்தில் வெளி ஆட்களின் தேவை இருக்கும் .முடிந்தவரை சொட்டு நீர் அல்லது தெளிப்பு நீர் பாசன அமைக்கும் எண்ணம் .தேவை எனில் பல பயன்பாடு கொண்ட சிறு இயந்திரங்கள் வாங்கலாம் .
  10. எதற்கு வீடு ” mud Block ” வைத்து கட்ட வேண்டும் ? மேற்கூரை எதை வைத்து பண்ணுவதாக உத்தேசம் ?  Vernacular Architecture முறையில் கட்டலாம் என்ற முடிவில் உள்ளேன் . இப்போதைக்கு ஒன்றும் முடிவுகள் இல்லை இன்னும் தேடலில்தான் உள்ளது. மேலும் சமுதாயத்தில் இருக்கும் பழக்கத்தில் இருந்து மாற்றமான ஒரு முறையில் பயணிக்கும் பொழுது இருக்கும் அணைத்தும் எனக்கும் உண்டு . 🙂 
  11. வீட்டின் பிளான் எதாவது உள்ளதா ? வீடுகட்ட என்ன செலவு ஆகும் ?இரண்டு படுக்கை அறை  கொண்டதாக இருக்க வேண்டும், ஒரு படுக்கை அறையில் குளியல்/கழிவு அறை அமைப்பு தேவை. வீட்டின் அனைத்து பகுதிகளையும் சிறப்பாக பயன்படுத்தும் அமைப்பில் இருக்க வேண்டும் .செலவு தொகை முடிந்த அளவு குறைவாகவே இருக்கவேண்டும் என்பதால் மட்டுமே இன்னும் தேடுதல் உள்ளது .சில நல்ல நண்பர்கள் எனக்கு தெளிவான வழிகாட்டுதல்கள் சொல்லி உள்ளனர் .
  12. மழை காலத்தில் மின்சாரம் சூரிய ஒளி மூலம் கிடைக்குமா ?தமிழகத்தில் அதிகமான நாட்கள்  சூரியஒளி கிடைக்கும் .மேலும் அரசாங்க மின் இணைப்பும் உள்ளது .
  13. தானியம் சேமிக்க குதிர் தேவையா ? நிறைய இடத்தை அடைக்கும் . விளையும் பயிர்களை நமது நீண்டகால தேவைக்கு சேமித்து வைக்க தேவை .இதற்கு  பயன்படுத்தப்படும் இடம் நிச்சயம் தேவையான ஒன்று தான்
  14.  புறா வளர்க்கும் என்ன உண்டா ?  இப்போதைக்கு அந்த எண்ணம் இல்லை .அது பற்றி யோசிக்க வேண்டும் .
  15. மொத்தம் என்ன செலவு , எத்தனை நாள் ஆகும் ஆகும் ? .முடிந்தவரை குறைந்த செலவில் செய்ய வேண்டும் . இந்த அமைப்புகள் அனைத்தும்  +  வீடும்  சேர்த்து முடிக்க  மூன்று முதல் நான்கு வருடம் ஆகலாம்  . ஒன்றன் பின் ஒன்றாக செயல் படுத்த வேண்டும் .களத்தில் செயல்படுத்தும் பொழுது நிறைய மாற்றங்களும் இருக்கும் .செலவுகள் என்ன என்பதை பற்றிய சரியான மதிப்பேடு இல்லை . ஒன்றன் பின் ஒன்றாக செய்வதாக உள்ளேன் .முடிந்த அளவு சுயமா கிடைக்கும் பொருளை வைத்து செயல்படுத்துவது .
  16. பாரம்பரிய விதைகள் எங்கு கிடைக்கும் ? இப்பொழுது நிறைய நண்பர்கள் மற்றும் அமைப்புகள் பாரம்பரிய விதைகள் வைத்தும் ,வளர்த்தும்,பகிர்ந்தும்  வருகின்றனர் . ஆரம்பத்தில்  சிறிது முயற்சியுடன் தேடினால் கிடைக்கும்   .கிடைத்த பின்பு நாமே விதைகளை உற்பத்தியும் செய்து கொள்ளலாம் .நானும் பாரம்பரிய விதைகள் வைத்து இருக்கும் சில தொடர்புகளைதொகுத்து உள்ளேன் .
  17. தேவையான தானிய பயிர்களை பயிரிடும் எண்ணம்  உண்டா ? உண்டு ,பாரம்பரிய நெல் வகைகள்  , கோதுமை , சிறுதானிய பயிர்களை பட்டம் பார்த்து  பயிர் சுழற்சி முறையில் விதைக்க வேண்டும் .விளையும் பொருளை நமது குதிர்க்களில் சேமித்து பயன் படுத்த வேண்டும் என்பதேயாகும்
  18. வருடம் இதில் என்ன வருமானம் வரும் ? எதற்கு இந்த வீண் வேலை பேசாமல் பணம் கொடுத்து கடையில் வாங்குவது எளிமையானது .இதில் நமது சொந்த தேவைகளை 85 % பெறமுடியும் . சுத்தமான  விஷமில்லா உணவு கிடைக்கும் .இதில் குறைந்த அளவு ( பணமாக ) வருமானமும்  பெற வழிகள் உண்டு .நன்கு பரிசிலித்து பார்த்தல் புரியும் .இதனை நான் வீண் வேலை என்று பார்ப்பது இல்லை .காலம் எல்லாம் சம்பாதித்து அதனை மருத்துவமனைகளுக்கு கொடுப்பதை விட , இது sசிறந்தது  என்றே எண்ணுகிறேன் .உடல் உழைப்பும் இருக்கும் .ஆரோகியமான உணவும் கிடைக்கும்.
  19. இப்படி வாழ்ந்தால் சமுதாயத்தில் மரியாதை இருக்குமா ?சொந்தங்கள்  என்ன பேசும் ? சமுதாயத்தை பற்றி கவலையில் இருந்தால் நமக்காக நாம் எப்பொழுது வாழ்வது. நண்பர் சொன்னது போல வாழ்ந்தாலும் , வீழ்ந்தாலும் பேசும் .மேலும் தனித்து வாழ்வது என்பது அல்ல .இதில் நிறைய மக்களுடன் பழகும் வாய்ப்பும் சமுதாயத்தை புரிந்து கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.நாமும் புரியவைக்க முடியும்.இந்தனை பார்த்து நிச்சயம் ஒருவர் வந்தது இது போல வாழ வேண்டும் என்று நினைத்தால் போதும் .
  20. திடீர் செலவு வந்தால் என்ன செய்வது ? . இப்படி அனைத்தையும் யோசித்து கொண்டே இருந்தால் நிச்சயம் எதையுமே செயல் படுத்த முடியாது .எனக்கு எனது பெற்றோர் வாழ்க்கை/சமுதாய  பாடத்தை கற்றுகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்தார்கள் .எல்லோரும் சொல்லும் பணத்தை  கொடுக்கவில்லை .நாமும் நமது எதிர்கால சந்ததிகளுக்கு வாழ்க்கை பாடத்தை சொல்லி கொடுத்துவிட்டால் போதும்  என்பது எனது  பொதுவானஎண்ணம்.—இரண்டு தலைமுறைக்கு முன்னால் ஒரு குடும்பதிருக்கு குறைந்தது 3 முதல் 6   குழந்தைகள் வரை பெற்றுக்கொண்டனர் .அப்பொழுதும் வாழ்கை சந்தோசமாக தானே சென்றது. அவர்கள் அவசர தேவை பார்த்து எதுவும் செய்ததாக எனக்கு தெரிய வில்லை .
  21. இந்த குறைந்த இடத்தில இதை செய்வதற்கு பதில் இருக்கும் இடத்தை மாற்றிவிட்டு இன்னும்  பெரிய இடத்தை  பார்த்து 3 முதல்  5 ஏக்கர் நிலத்தில் செய்யலாமே ? தேடினால் கிடைக்குமே? நிச்சயம் எனக்கும் ஆசை  தான்  . ஆனால் தண்ணிர்  என்பது மிகவும் அவசியமான ஒன்று . மேலும்  , நான் பிறந்து வளர்ந்த  ஊரையும் , தெரிந்த முகங்களையும் விட்டு வர மனது இல்லை .மேலும் பல வருடங்கள் ஊரையும் உறவுகளையும் விட்டே இருந்து வருகிறேன் . சந்தர்ப்பம் கிடைத்தால் நிச்சயம் முயற்சி செய்ய உள்ளேன் . பார்ப்போம் இதற்கு நான் பட்ட வேதனை சொல்லி மாளாது அதுபோல இன்னொரும் முறையும் வேதனையும்  சோதனையும் வேண்டாம் என்ற எண்ணமும் எழுகிறது .காலம் கைகொடுத்தால் நிச்சயம்  பெரிய அளவில் செய்யும் திட்டமும் உள்ளது .  
  22. உங்கள் மொத்த திட்ட வரைவுகளை கொடுங்கள் ,நாங்கள் சரியான முறையில்  திட்டமிட்டு கொடுக்கிறோம் ?  நாங்கள் இது போல நிறையவே செய்து  நல்ல அனுபவம் உள்ளது .  சொல்ல போனால் என்னிடம் எந்த திட்ட வரைபடமும் இல்லை . நான் சில பண்ணைகளில் வேலை பார்த்த  படித்த , சிறுவயது முதல் தோட்ட வேலைகள் செய்த அனுபவங்களையும் வைத்து எனது நிலத்திற்கு தகுந்தற்போல இங்கு வடிவம் கொடுத்து செயல்படுத்த எண்ணம். அதில் வரும் அத்துனை  நல்லது கெட்டதுகளை  புரிந்து தெளிவு பெற எண்ணம் .நிச்சயம் எனக்கு ஏதும் தேவை எனில் கேட்டு தெரிந்து கொள்ளுகிறேன் .தவறாக எண்ண வேண்டாம் .அனுபவம் மட்டுமே சிறந்த ஆசான்.மேலும் சில உண்மையான பரந்த மனப்பான்மை உள்ள நண்பர்களின் அனுபவங்களும் உதவுகின்றன .
  23. ஆந்தை அல்லது கோட்டான் வருவது /கத்துவது எல்லாம் அபச குணம் .எதற்கு இந்த கோட்டான, ஆந்தை வருவதற்கு வசதி செய்ய வேண்டும் ?  கோட்டான், மற்றும் ஆந்தைகள் கடவுளின் அம்சம் என்று யாரோ ஒரு நண்பர் கூறியதாக நினைவு . சரியான விளக்கம் கிடத்தல் பகிர்த்து விடுகிறேன்
  24. அசாலா வளரக்க வில்லையா ? நிச்சயம் அசோலா வளர்க்கவேண்டும்  .களத்தில் அமைப்புகளை ஏற்படுத்தும் பொழுது இந்த அமைப்பு ஏற்படுத்தும் எண்ணம்  உள்ளது.
  25. உங்கள் கனவு தோட்டத்தில் நீங்கள் இருந்தால் சமுதாயத்தில் இருந்து தனிமை படுத்த படலாம் . நீங்கள் சமுதாயத்தில் இப்படி ஒரு தனிமையான வாழ்கை வாழ முடியுமா ?சமுதாயத்தில் தனிமை படுத்தலாம் என்பது தவறு .நாமும் நமது சமுதாயத்தில் நடக்கும் விழாக்கள் , திருமணம்,போன்ற நிகழ்வுகளில்  பங்குபெறலாம் . இதில் தனிமை என்பது கிடையாது . 
  26. இதில் வருமானம் என்பது மிகவும் குறைவுதான், இதனை ஏன் ஒரு தொழில்ரீதியாக  கொண்டு செல்ல கூடாது ? பள்ளிகளில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த இடம் மிகவும் பயனுள்ளதாக இருக்குமே ? இயற்கையோட ஒரு வாழ்கை அல்லது இப்படியும் வாழ்கை  வாழ முடியும் என்று தெரியபடுத்தலாம் .எதிர்காலத்தில் ஒரு நல்ல மாற்றம் வரலாம் .அன்புக்கு நன்றி , நிச்சயம் நல்ல யோசனை தான் . முயற்சிக்கலாம் .அதற்க்கு முன் நிறையவே வேலைகளை முடிக்க வேண்டும் . குழந்தைகளுக்கு நிச்சயம் இந்த முறைகளை சொல்லி கொடுக்கலாம் .தனக்கான உணவை தானே தயாரித்து கொள்ளுவது மிகவும் நன்று 

Tuesday, March 14, 2017

என்ன பண்ணாலும் உங்க தலையில இருக்க பொடுகு போகமாட்டீங்குதா?


இங்கு ஆண்களின் தலையில் இருக்கும் பொடுகைப் போக்க சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.



பெரும்பாலான ஆண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் பொடுகு. இந்த பொடுகை ஆரம்பத்திலேயே கவனித்து போக்க முயற்சிக்காவிட்டால், பின் அதுவே தலைமுடியை அதிகம் உதிரச் செய்து, தலைமுடியை மெலியச் செய்யும்.

Simple Ways To Get Rid Of Dandruff In Men
பல ஆண்கள் தங்களுக்கு இருக்கும் பொடுகைப் போக்க எத்தனையோ ஷாம்புக்களை மாற்றியிருப்பார்கள். இருப்பினும் எந்த ஒரு மாற்றமும் தெரிந்திருக்காது. ஆனால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள சில சிகிச்சைகளைப் பின்பற்றினால், பொடுகுத் தொல்லையில் இருந்து விரைவில் விடுபடலாம்.
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

இஞ்சி

இஞ்சி

இஞ்சியை அரைத்து சாறு எடுத்து, அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி காட்டன் பயன்படுத்தி தடவி, 1 மணிநேரம் கழித்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை என 2 வாரம் தொடர்ந்து பின்பற்றினால், பொடுகு முற்றிலும் போய்விடும்.

கற்றாழை மற்றும் எலுமிச்சை சாறு

கற்றாழை ஜெல்லுடன், பாதி எலுமிச்சையைப் பிழிந்து சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து 30 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பொடுகு விரைவில் நீங்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் நீரை சரிசம அளவில் எடுத்துக் கொண்டு, தலைக்கு ஷாம்பு பயன்படுத்தி அலசிய பின், ஆப்பிள் சீடர் கலவையால் தலைமுடியை அலசி, 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி ஒரு நாள் விட்டு ஒரு நாள் செய்து வந்தால், சீக்கிரம் பொடுகு போய்விடும்.

புதினா மற்றும் வேப்பிலை

20 வேப்பிலையுடன், 10 புதினா இலைகளை எடுத்து, 4 கப் நீரில் போட்டு, பாதியாக நீர் குறையும் வரை கொதிக்க வைத்து இறக்கி, அந்த இலைகளை அரைத்து, ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து, நீரில் அலச வேண்டும்.

பேக்கிங் சோடா

2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 3-5 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இந்த சிகிச்சையை வாரத்திற்கு 1 முறை மட்டும் தான் செய்ய வேண்டும்.

பூண்டு

5-6 பூண்டு பற்களை எடுத்து அரைத்து சாறு எடுத்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி 15-20 நிமிடம் கழித்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், பொடுகுத் தொல்லையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

புளித்த தயிர்

3-4 ஸ்பூன் புளித்த தயிரை ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து, நன்கு 30-60 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை பின்பற்றினால், பொடுகு வேகமாய் போய்விடும்.

வழுக்கைத் தலையில் முடி வளர வேண்டுமா?

வழுக்கை மற்றும் முடி உதிர்வால் ஆண்கள் மட்டுமின்றி, பெண்களும் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். இப்பிரச்சனைகளுக்கு மூலிகை எண்ணெய் என்ற பெயரில் பல எண்ணெய்கள் விற்கப்படுகின்றன. இருப்பினும் அந்த எண்ணெய்களில் முடியின் வளர்ச்சியைத் தூண்டுவதற்கு நிச்சயம் சில கெமிக்கல்கள் கலக்கப்பட்டிருக்கும். கெமிக்கல்களின் உதவியுடன் கிடைக்கும் எந்த ஒரு நிவாரணமும் நிரந்தர பலனை அளிக்காது. ஆகவே நமக்குள்ள தலைமுடி பிரச்சனைகளுக்கு நம் முன்னோர்கள் மேற்கொண்ட இயற்கை மூலிகை எண்ணெய்கள் நல்ல தீர்வைத் தரும். இங்கு வழுக்கை மற்றும் முடி உதிர்வு பிரச்சனைகளுக்கான ஓர் அற்புதமான மூலிகை எண்ணெயின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்: 
விளக்கெண்ணெய் - 50 மிலி 
தேங்காய் எண்ணெய்- 20 மிலி 
ரோஸ்மேரி எண்ணெய் - 10 மிலி 
லாவெண்டர் எண்ணெய் - 5 மிலி 

செய்முறை: 
முதலில் ஒரு சிறு டப்பாவில் விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் ரோஸ்மேரி மற்றும் லாவெண்டர் எண்ணெய்களை சேர்த்து டப்பாவை மூடி நன்கு குலுக்கிக் கொள்ள வேண்டும். இப்போது எண்ணெய் தயார்.

பயன்படுத்தும் முறை: 
இந்த எண்ணெய் கலவையை தினமும் 2-3 முறை ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், 2 வாரங்களில் ஒரு நல்ல மாற்றத்தைக் காண்பீர்கள். மூலிகை எண்ணெயின் சிறப்பு இந்த மூலிகை எண்ணெய் மயிர்கால்களின் வளர்ச்சியைத் தூண்டுவதோடு, முடி உதிர்ந்த இடத்தில் புதிய முடி வளர ஊக்குவிக்கும். இதனால் தலைமுடியின் அடர்த்தியும் அதிகரிக்கும். குறிப்பு இந்த எண்ணெயை தலைக்கு தடவுவதால் தினமும் தலைக்கு குளிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. தினமும் தலைக்கு குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள இயற்கை எண்ணெய் முற்றிலும் வெளியேறி, ஸ்கால்ப்பின் ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். மேலும் இந்த எண்ணெயை ஸ்கால்ப்பில் மட்டும் பயன்படுத்தினால் போதுமானது.

ஒரே மாதத்தில் உடலில் உள்ள அதிக கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் அற்புத மருந்து!

இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.


உங்களுக்கு ஹோட்டல் உணவு அதிகம் பிடிக்குமா? உடற்பயிற்சி செய்யும் பழக்கமே இல்லையா? சிகரெட் பிடிக்கும் பழக்கம் உள்ளதா? அப்படியெனில் உங்கள் உடலில் கெட்ட கொழுப்புக்கள் அதிக அளவில் தேங்கியிருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக ஹோட்டல் உணவுகளில் கெட்ட கொழுப்புக்கள் மற்றும் சர்க்கரை அதிகமாக இருக்கும். இந்த உணவுகளை தொடர்ச்சியாக உட்கொண்டு வரும் போது, உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்து, உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனையை சந்திக்கக்கூடும். என்ன தான் கொலஸ்ட்ரால் உடலில் சில முக்கிய பணிகளை செய்து வந்தாலும், அதன் அளவு அதிகமாகும் போது, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் பல நோய்களுக்கு உள்ளாக்கும். 

இங்கு கொலஸ்ட்ராலைக் குறைக்க மருத்துவர்களே பரிந்துரைக்கும் ஓர் அற்புத நாட்டு மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தயாரித்து, அவற்றை உட்கொண்டு வர, விரைவில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கலாம்
.
தேவையான பொருட்கள்: 
விதை இல்லாத பேரிச்சம் பழம் - 3-4 
இஞ்சி சாறு- 2 டீஸ்பூன் 

பேரிச்சம் பழம் பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இரத்த குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தும் கொழுப்புக்களை கரைத்துவிடும். இஞ்சி இஞ்சியில் உள்ள மருத்துவ குணத்தால், கொலஸ்ட்ரால் அளவு வேகமாக குறையும். ஏனெனில் இதில் உள்ள குறிப்பிட்ட அமிலம் உடலில் தேங்கும் அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைத்துவிடும். 

செய்முறை: 
முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும். 

உட்கொள்ளும் முறை: 
தயாரித்து வைத்துள்ள கலவையை தினமும் இரவில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி 2 மாதத்திற்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் முழுமையாக கரைந்துவிடும்.
(குறிப்பு இந்த இயற்கை மருந்தை தொடர்ந்து உட்கொண்டு, அதோடு சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை செய்து வந்தால், அதிகப்படியான கொஸ்ட்ரால் குறையும். முக்கியமாக இந்த மருந்தை உட்கொண்டு வரும் போது, உணவுகளில் எண்ணெய் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.)

ஒரே செல்போனில் 2 சிம்களிலும் வாட்ஸ்ஆப் வசதி. .! !

அலுவலக எண், தனிப்பட்ட உபயோகம் என இன்று ஒருவரே பல எண்களை வைத்துக் கொண்டிருப்பது சாதாரணமான சங்கதி. இதனால் இரண்டு சிம்கள் பொருத்தக் கூடிய டூயல் சிம் மொபைல்களை பயன்படுத்துவோரும் இன்று அதிகம்.


ஆனால், இந்த போன்களில் இருக்கும் பிரச்சினை, இருக்கும் இரண்டு எண்களில் ஒரு எண்ணிலிருந்து மட்டும்தான் வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும். மற்றொரு எண்ணைக் கொண்டு, அதே மொபைலில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த முடியாது. இதனால், வாட்ஸ்ஆப் பயன்பாட்டுக்காக மட்டும் வேறொரு புது மொபைலை நாடும் நிலை உள்ளது.


ஆனால் தற்போது, ஒரு மொபைலில் இரண்டு நம்பர்களுக்கும் தனித் தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் விதமாக புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


நீங்கள் டூயல் சிம் மொபைல் பயன்படுத்துபவர் என்றால், திசா (Disa) என்ற இந்த செயலியின் மூலம், உங்கள் மொபைலில் உள்ள இரண்டு எண்களுக்கும், தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்திக் கொள்ளலாம்.


இதற்கான வழிமுறைகள் மிக எளியவை. திசா செயலியை https://goo.gl/bW2ELo என்ற இணைப்பின் மூலம் உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.


அதில் ‘+’ என்ற தேர்வை அழுத்தி, உங்கள் மற்றொரு எண்ணை (அதாவது வாட்ஸ்ஆப் பயன்படுத்தாத எண்) '+91' என குறியீட்டோடு தரவும். (உதாரணம்: +91 98765*****) அடுத்து வெரிஃபை செய்வதற்கான கட்டம் வரும். இதைத் தாண்டினால் ஒரே நேரத்தில் இரண்டு எண்களுக்கு தனித்தனியாக வாட்ஸ்ஆப் பயன்படுத்த உங்கள் மொபைல் தயாராகிவிடும். நீங்கள் ஏற்கெனவே வைத்துள்ள வாட்ஸ்ஆப் இல்லாமல், திசா செயலிக்குள் இன்னொரு வாட்ஸ்ஆப் பக்கம் உருவாகிவிடும்.


ஆனால் தற்போது திசா செயலியில் உள்ள வாட்ஸ்ஆப் மூலம் செய்திகளை அனுப்ப மட்டுமே முடியும். வாட்ஸ்ஆப் கால்கள் (Whatsapp call) செய்ய முடியாது. அதே போல ஆண்ட்ராய்ட் ஃபோன்களில் மட்டுமே தற்போது இந்த செயலி வேலை செய்யும்.

3 பச்சை எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றலை வெளியேற்றுவது எப்படி?

இங்கு எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றுவது எப்படி என்று கொடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரது வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் அதிகம் இருந்தால், அதனால் அடிக்கடி உடல்நல குறைபாடு ஏற்படுவதோடு, உறவுகளுக்குள் பிரச்சனைகள் மற்றும் பணப்பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். 

இப்போது இந்த கட்டுரையில் எலுமிச்சையைக் கொண்டு வீட்டிலிருக்கும் கெட்ட சக்தியை எப்படி வெளியேற்றுவது என்று பார்க்கப் போகிறோம். 

பொதுவாக எலுமிச்சை பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளது. அது உடல் ஆரோக்கியம், அழகு போன்றவற்றில் மட்டுமின்றி, கெட்ட சக்தியை வெளியேற்றவும் உதவும். சரி, இப்போது பச்சை எலுமிச்சையைக் கொண்டு வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றுவது எப்படி என்று காண்போம்.

வழி #1 
இது மிகவும் எளிய வழி. இந்த வழியில் 3 பச்சை எலுமிச்சையை எடுத்துக் கொண்டு, வீட்டின் பல்வேறு பகுதியில் வைக்க வேண்டும். அப்படி வைத்த பச்சை எலுமிச்சை எப்போது மஞ்சளாகவோ அல்லது கருப்பாகவோ மாறுகிறதோ, அப்போது அதை தூக்கி எறிந்துவிட்டு, அப்பகுதியில் மீண்டும் புதிய பச்சை எலுமிச்சையை வைக்க வேண்டும். 

வழி #2 
மழை நீரில் எலுமிச்சையின் தோலைப் போட்டு கொதிக்க வைத்து, வீட்டில் தெளிக்க வேண்டும். இதனால் கெட்ட சக்திகள் அனைத்தும் அகலும். 

வழி #3 ஒரு பீங்கான் கூடையில் 9 எலுமிச்சையை வைத்து, ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். அப்படி கூடையில் வைக்கும் போது 8 எலுமிச்சையை வைத்து, நடுவே ஒரு எலுமிச்சையை வைக்கவும். இதனால் வீட்டில் செல்வ வளம் பெருகும். 

வழி #4 
வேலை செய்யும் இடம் அல்லது மேஜையில் 3 எலுமிச்சையை வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. 

வழி #5 
ஒரு கண்ணாடி பௌலில் 3 எலுமிச்சையை வைத்து, வீட்டில் உள்ள மேஜையில் வைத்தால், உறவுகள் பலப்படும். 

வழி #6 
வெளியே செல்லும் போது 1 பச்சை அல்லது மஞ்சள் நிற எலுமிச்சையை பாக்கெட் அல்லது பையில் வைத்துக் கொண்டு சென்று, வீடு திரும்பியதும், இரவில் அந்த எலுமிச்சையை வெளியே எடுத்துப் பாருங்கள். அந்த எலுமிச்சை நன்கு காய்ந்திருந்தால், உங்களை நோக்கி வந்த எதிர்மறை ஆற்றலை எலுமிச்சை ஈர்த்துள்ளது என்று அர்த்தம். 

வழி #7 
வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகளை வெளியேற்ற, ஒரு எலுமிச்சையை 4 பகுதிகளாக அறுத்து, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்து தூங்குங்கள். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையைக் கையால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி எறிந்துவிடுங்கள். இப்படி தொடர்ந்து 3 நாட்கள் செய்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

எந்த ஊரில் என்ன வாங்கலாம் ?


எந்த ஊரில் என்ன வாங்கலாம் ?

வாங்கலாம்… வாங்க!
ஊருக்கு ஊர் மால் கல்ச்சர் பரவி வரும் இக்காலகட்டத்தில், எல்லா ஊரிலும் எல்லா வகையான பொருட் களும் கிடைக்கும் என்றாலும், ஒவ்வொரு பொருளும் தரம் குறையாமல் தயாராகி விற்பனைக்கு வருவது சில குறிப்பிட்ட ஊர்களில்தான். அப்படிப்பட்ட சில ஊர்களும் அதற்குரிய சிறப்புப் பொருட்களும்…

குமாரபாளையம் லுங்கி
இடம்: குமாரபாளையம் (நாமக்கல்)
பொருள்: லுங்கி.

சிறப்பு: கேரளத்து சேட்டன்கள் முதல் இந்தியா முழுவதும் விரும்பி அணிவது இங்கு தயாராகும், லுங்கி எனப்படும் கைலிகள்தான்.
விலை: 120 ரூபாய்.


நெய்க்காரப்பட்டி வெல்லம்
இடம்: நெய்க்காரப்பட்டி (திண்டுக்கல்)
பொருள்: வெல்லம்.

சிறப்பு: தமிழகம் முழுக்க அச்சுவெல்லம் மற்றும் உருண்டை வெல்லம் இங்கிருந்து அனுப்பப் படுகிறது. நல்ல வெளிர் மஞ்சள் நிறம் கொண்ட வெல்லம் முதல் தரமானது.
விலை: தரத்தையும் நிறத்தையும் பொறுத்து ஒரு கிலோ ரூபாய் 25-ல் இருந்து தொடங்குகிறது.

கும்பகோணம் வெற்றிலை
இடம்: கும்பகோணம் (தஞ்சாவூர்)
பொருள்: வெற்றிலை.

சிறப்பு: கறுப்பு நிறத்தில் அதிக காரமாக இருக்கும் கம்மாறு வெற்றிலை, கற்பூர வாசனை மிகுந்த கற்பூர வெற்றிலை. வெளிர் நிறத்தில் காரம் இல்லாத ஓரளவு சாதாரண வெற்றிலை என பல ரகங்கள் கிடைக்கும்.
விலை: ஒரு கவுளி ரூபாய் 60-ல் இருந்து ஆரம்பம்.

நத்தம் ரெடிமேட் சட்டைகள்
இடம்: நத்தம் சென்ட்ரல் சினிமா வீதி (திண்டுக்கல்)
பொருள்: சட்டை.

சிறப்பு: சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற பாம்பே காட்டன், நெப்சி கதர், மெஜுராகோட்ஸ் என பலவகை சட்டைகள் தயார் செய்வதுதான் நத்தம் சிறப்பு. தமிழ்நாடு முழுக்க இங்கிருந்தே விநியோகம்.
விலை: 65 ரூபாயில் தொடங்கி பையில் இருக்கும் பணத்துக்கு ஏற்ப சட்டைகள் கிடைக்கும்.

சீர்காழி பிரம்பு நாற்காலிகள்
இடம்: சீர்காழி (நாகப்பட்டினம்)
பொருள்: பிரம்பு ஊஞ்சல், சோபா போன்றவை.

சிறப்பு: தரமான பிரம்புப் பொருட்களைக் குறைந்த விலையில் மட்டுமில்லாமல், பல டிசைன்களில் வாங்க தமிழகத்திலேயே சிறந்த இடம்.
விலை: ஊஞ்சல், சேர் 2,000 ரூபாய் முதல் 5,000 வரை. சோபாசெட் 18,000 ரூபாய் முதல் 25,000 வரை.

கரூர் வீட்டு உபயோகத் துணி வகைகள்
இடம்: கரூர் (கரூர் பஸ் நிலையத்துக்குப் பின்புறமுள்ள 80 அடி சாலை)
பொருள்: வீட்டு உபயோக துணி வகைகள்

சிறப்பு: திரைச்சீலைகள் மேஜை விரிப்புகள் முதல் ஏப்ரான், கிளவுஸ் என பல ரகங்கள் கிடைக்கும். இவற்றில் உங்கள் விருப்பத்தின் பேரில் எம்ப்ராய்டரியும் செய்து தரப்படுவது கூடுதல் சிறப்பு.
விலை: இங்கு 200 ரூபாய்க்கு விற்கப்படும் திரைச்சீலை மற்ற ஊர்களில் 2,000 ரூபாய்க்கு விற்கப் படுகிறது.

பத்தமடை பாய் 
இடம்: பத்தமடை (திருநெல்வேலி)
பொருள்: பாய்.

சிறப்பு: உலகப் புகழ்பெற்ற பத்தமடை பாயை இந்திய குடியரசுத்தலைவரிலிருந்து விக்டோரியா மகாராணி வரை பலரும் பாராட்டி இருக்கின்றனர். கம்பளிப் படுக்கை, கோரைப் பாய், பிரம்புப் பாய், ஈச்சம் பாய் என்று பல வகை பாய்கள் தயாரிக்கப்படுகின்றன.
விலை: இங்கு 150 ரூபாய்க்கு விற்கப்படும் பாய் வெளியூர்களில் 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.


திண்டுக்கல் பூட்டு
இடம்: திண்டுக்கல்.
பொருள்: பூட்டு

சிறப்பு: மாங்காய் பூட்டு, கதவுக்கான சதுரப் பூட்டு, அலமாரிப் பூட்டு, இழுப்பான் பூட்டு முதல் கோயில்களுக்காக 20 கிலோவுக்கும் அதிக எடை கொண்ட பூட்டுக்களும் இங்கு தான் உருவாக்கப்படுகிறது. 8 அங்குல மணிப்பூட்டுகள் சிறப்பு வாய்ந்தவை… இதில் சாவியைப் போட்டு சுழற்றும்போதெல்லாம் மணிச்சத்தம் வரும்.
விலை: 50 ரூபாய் முதல் 30,000 ரூபாய் வரை.

சென்னிமலை போர்வை
இடம்: சென்னிமலை (ஈரோடு)
பொருள்: போர்வை
.
சிறப்பு: சென்னிமலை போர்வை…15 ஆண்டுகளுக்கு நிறமும் தரமும் நின்று பேசுமாம்.
விலை: 150 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை ரகத்துக்கு ஏற்ப போர்வைகள் கிடைக்கின்றன.

மார்த்தாண்டம் தேன்                                                      இடம்: மார்த்தாண்டம் (கன்னியாகுமரி)
பொருள்: தேன்.

சிறப்பு: இங்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தேனீ வளர்ப்பில் ஈடுபட்டு, அக்மார்க் தேனை உற்பத்தி செய்து, விவசாய கூட்டுறவு சங்கம் மூலம் குறைந்த விலையில் விற்பனையாகிறது.
விலை: அரை கிலோ தேன் 100 – 150 ரூபாய். மற்ற ஊர்களில் இதைவிட 2 அல்லது 3 மடங்கு விலை.

தமிழ்நாட்டில் எந்த ஊரில் என்ன வாங்கலாம்...!

திருநெல்வேலி - அல்வா

ஸ்ரீவில்லிபுத்தூர் - பால்கோவா

கோவில்பட்டி - கடலைமிட்டாய்

பண்ருட்டி - பலாப்பழம்

மார்த்தாண்டம் - தேன்

பவானி - ஜமுக்காளம்

உசிலம்பட்டி - ரொட்டி

நாச்சியார் கோவில் - விளக்கு, வெண்கலப் பொருட்கள்

பொள்ளாச்சி - தேங்காய்

வேதாரண்யம் - உப்பு

சேலம் - எவர்சில்வர், மாம்பழம், அலுமினியம், சேமியா

சாத்தூர் - காராசேவு, மிளகாய்

மதுரை - மல்லிகை, மரிக்கொழுந்து

மாயவரம் - கருவாடு

திருப்பூர் - பனியன், ஜட்டி

உறையூர் - சுருட்டு,கைத்தறி புடவை

கும்பகோணம் - வெற்றிலை, சீவல்

தர்மபுரி - புளி, தர்பூசணி

ராஜபாளையம் - நாய்

தூத்துக்குடி - உப்பு

ஈரோடு - மஞ்சள், துணி

தஞ்சாவூர் - கதம்பம், தட்டு, தலையாட்டி பொம்மை

நீலகிரி - தைலம்

ஊட்டி - உருளைக்கிழங்கு, தேயிலை, வர்க்கி

கல்லிடைக்குறிச்சி - அப்பளம்

காரைக்குடி - ஓலைக்கூடை

செட்டிநாடு - பலகாரம்

திருபுவனம் - பட்டு

குடியாத்தம் - நுங்கு

கொள்ளிடம் - பிரம்பு பொருட்கள்

ஆலங்குடி - நிலக்கடலை

கரூர் - கொசுவலை

திருப்பாச்சி - அரிவாள்

காஞ்சிபுரம் - பட்டு, இட்லி

நாகப்பட்டினம் - கோலா மீன்

திண்டுக்கல் - பூட்டு, மலைப்பழம்

பத்தமடை - பாய்

பழனி - பஞ்சாமிர்தம், விபூதி

மணப்பாறை - முறுக்கு, மாடு

உடன்குடி - கருப்பட்டி

கவுந்தாம்பட்டி - வெல்லம்

ஊத்துக்குளி - வெண்ணெய்

கொடைக்கானல் - பேரிக்காய்

குற்றாலம் - நெல்லிக்காய்

செங்கோட்டை பிரானூர் - புரோட்டா, கோழி குருமா

சங்கரன் கோவில் - பிரியாணி

அரியலூர் - கொத்தமல்லி

சிவகாசி - வெடி, தீப்பெட்டி, வாழ்த்து அட்டை

கன்னியாகுமரி - முத்து, பாசி, சங்குப் பொருட்கள்

திருச்செந்தூர் - கருப்பட்டி

குளித்தலை - வாழைப்பழம்

ஆம்பூர் - பிரியாணி, தோல் உற்பத்தி பொருள்கள்..

ஒட்டன்சத்திரம் - முருங்கைக்காய்,தக்காளி

ஓசூர் - ரோஜா

நாமக்கல் - முட்டை

பல்லடம் - கோழி

குன்னூர் - கேரட்
.
விருதுநகர் - பரோட்டா

திருச்சி - லால்கடை பூந்தி

வாணியம்பாடி - பிரியாணி , தோல் உற்பத்தி பொருள்கள்..