Sunday, October 16, 2016

நாட்டுக்கோழி வளர்க்கலாம்..


நாட்டுகோழி வளர்ப்பு
                                 நாட்டுக்கோழி வளர்க்கும் பழக்கமானது நமது கிராமப்புற மக்களால் தொன்று தொட்டு மேற்கொள்ளப்பட்டுவரும் ஒரு சிறந்த தொழிலாகும். நாட்டுக்கோழி வளர்ப்பு முறை ஒரு பொழுது போக்காக மட்டுமில்லாமல், கிராமப்புற மக்களின் அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யவும் பயன்படுகிறது.
                 நாட்டுக்கோழிகளை ஏழைகள், பெண்கள் மற்றும் வயது முதிர்ந்தோர் அனைவரும் எந்த சிரமமும் இன்றி வளர்கலாம். பெரும்பாலும் வீட்டிலுள்ள அரிசிகுருணை, எஞ்சியுள்ள தீவனப்பொருட்கள், வயல் வெளிகளில் உள்ள புழு பூச்சிகள் போன்றவற்றை உண்டு நாட்டுக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன.
புறக்கடையில் வளர்க்கப்படும் கோழிகள் எந்தவித நவீன தொழில் நுட்பங்களையும் பின்பற்றாமல் வளர்க்கப்படுகிறது. அதனால் தேவையான சத்துக்கள் சரியான அளவில் கிடைக்காததால் உற்பத்தி திறன் குறைந்து காணப்படுகிறது. எனவே சரியான முறையில் சரிவிகித தீவனம் கொடுத்து நோய் தடுப்பு முறைகளையும் பின்பற்றி வளர்த்தோமானால் நாட்டுக் கோழி வளர்ப்பு அதிக இலாபமான தொழிலாக வளர்சியடயும்.


நாட்டுக்கோழி வளர்ப்பில் உள்ள நன்மைகள்:
                      வீட்டில் எளிதாக கிடைக்கும் தானியங்களை கொண்டும் தோட்டங்களில் பச்சை புற்களை மேயிந்தும் வளரக்கூடியது. சந்தையில் எப்போதும் நல்ல விற்பனை வாய்ப்புடன் அதிக விலையுள்ள இறைச்சி அதிகமாக தேவைப்படும் ருசியான முட்டைகள் குறைவான செலவில் அதிக லாபம் தரும் தொழில். அவசர பணத்தேவையை பூர்த்தி செய்யும் தொழில். அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. சுய வேலைவாய்ப்புக்கு ஏற்ற தொழில். கிராமப்புற பெண்களுக்கேற்ற நல்ல பகுதி நேர வேலை வாய்ப்பு. நாட்டுக் கோழிகளின் அடை காக்கும் தன்மை. குஞ்சுகளை பாதுகாத்து வளர்க்கும் தன்மை சிறந்த உர மதிப்பு எச்சம்.

நாட்டுக்கோழி இனங்கள்:
            நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன. அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள் உள்ளன.
1.குருவுக்கோழி,
2.பெருவிடைக்கோழி,
3.சண்டைக்கோழி அசில்கோழி,
4.கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,

5.கழுகுக்கோழி அல்லது கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,
6.கொண்டைக்கோழி,
7.குட்டைக்கால் கோழி.
8.உயர்ரக நாட்டுக்கோழி இனம்

                  நந்தனம்கோழி ஆராய்ச்சி நிலையத்தில் நந்தனம் ஒன்று மற்றும் நந்தனம் இரண்டு என்ற இருவகை உயரினக் கோழிகள் உற்பத்தி செய்தனர். ஆந்திர மாநிலத்தில் வனராஜா என்ற உயரினக்கோழியை உற்பத்தி செய்தனர். பெங்களூரு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகத்தில் கிரிராஜா மற்றும் சுவர்ணதாரா என்னும் உயரினக் கோழிகளை உற்பத்தி செய்து புறக்கடை முறையில்கோழி வளர்ப்பதற்காக நமக்கு கொடுத்துள்ளனர்.

கோழிகள் தேர்வு:
                நல்ல ஆரோக்கியமான கோழிகள் மற்றும் சேவல்கள் மிடுக்காகவும் தன்னைச் சுற்றி நடக்கும் காரியங்களில் கவனமுள்ளவையாகவும் இருக்கும் வேகமான நடை, வேகமான ஓட்டம், தேவைக்கேற்ப சில மீட்டர்கள் தூரம் பறத்தல், சில நேரங்களில் கொக்கரித்தல், கூவுதலுமாக இருக்க வேண்டும். பொதுவாகச் சேவல்கள் இனச்சேர்க்கையில் பிரியமுள்ளவைகளாய் இருக்கும். நல்ல அகலமான நெஞ்சம், நீண்ட உடலமைப்பும் நல்ல சேவலுக்கு உதாரணமாகும். கோழியின் சுகத்தை கொண்டைல் பார் என்பார்கள். நல்ல சிவந்த பளிச்சென்ற கொண்டை நல்ல சுக தேகத்தைக் குறிக்கும். கால்கள் மஞ்சள் கலந்த பழுப்பு நிறத்துடன் இருக்க வேண்டும். நம் நாட்டு சூழலுக்கேற்ப வளரக்கூடிய ப்ரம்மா ரகக்கோழிகளை தேர்ந்தெடுப்பது நல்லது. தேவையான அனைத்து உணவுச்சத்துக்களும் அடங்கிய சரிவிகிதத் தீவனத்தையே எப்பொழுதும் உபயோகிக்க வேண்டும். தீவனத் தொட்டியில் போதுமான இடவசதி, கோழிகளுக்குக் கிடைக்கும் வண்ணம் தேவையான எண்ணிக்கையில், தீவனத் தொட்டிகளை வைக்க வேண்டும். தீவனத் தொட்டியின் மேற்புற விளிம்பு, கோழிகளின் முதுகுப்புறத்திற்கு இணையான நேர்கோட்டில் இருக்கும்படி வயதுக்கு ஏற்ப தீவனத்தொட்டியின் உயரத்தை மாற்றி அமைத்துவர வேண்டும். சரிவர அமைக்கப்பட்ட தீவனத் தொட்டிகளை மட்டுமே உபயோகிக்க வேண்டும். அரைக்கப்பட்ட தீவனத்தைத் தொடர்ந்து பல நாட்களுக்குச் சேமித்து வைக்கக்கூடாது. தீவன மூடைகளை ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி உயரம் உள்ள மரச்சட்ட அமைப்புகளின் மீது சுற்றுப்புறச் சுவரிலிருந்து ஒரு அடி தள்ளி இருக்கும்படிதான் அடுக்கி சேமிக்க வேண்டும்

நாட்டுக் கோழி வளர்ப்பு முறைகள்
           மேய்ச்சல் முறை / புறக்கடை வளர்ப்பு
ஒரு சென்ட் பரப்பளவில் 200 கோழிகள் வளர்கலாம். போதுமான நிழல், பசுந்தீவனம், தீவனம், தண்ணீர் கிடைக்கப் பெறுமாறு செய்திடல் வேண்டும்.
 

மித தீவிர முறை
             கொட்டில் கலந்த மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது ஒரு சென்ட் பரப்பளவில் 700 கோழிகள் வளர்க்கலாம். கோழிகள் புழு , பூச்சி , தானியங்கள் , இலை, தழைகளை உண்டு வாழும்.
 

தீவிர முறை
       கோழிகளை தரை கூண்டு அல்லது பரண் மேல் விட்டு வளர்ப்பது.
 

கூண்டு முறை
      கம்பிகள் பின்னப்பட்ட கூண்டுகளில் குஞ்சுகள் முதல் கோழிகள் வரை வளர்ப்பது.

"மெய்ச்சல்ல வளர்ந்தாதான் அது நாட்டுக் கோழி "
 

         தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக்கழகத்தின் திண்டுக்கல் பயிற்சி மைய தலைவர் மற்றும் துணைப் பேராசிரியர் பீர் முகமதுவிடம், நாட்டுக் கோழி வளர்ப்பு பற்றி கேட்டபோது, "பிராய்லர் கோழிகளைத் தவிர்த்துவிட்டு நாட்டுக் கோழிகளை வளர்க்குற விஷயம் கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. ஆனா, லேயர், பிராய்லர் தீவனத்தைக் கொடுத்து நாட்டுக் கோழிகளை மொத்தமா அடைச்சு வெச்சு வளர்த்தால் பிராய்லருக்கும் நாட்டுக் கோழிக்கும் வித்தியாசமே இல்லாமல் போயிடும். கம்பெனித் தீவனங்களில் வளர்ச்சி ஹார்மோன்களைத் தூண்டி விடுறதுக்காக சில வேதிப்பொருட்கள கலக்குறாங்க. அதனால பல பிரச்னைகள் வருகின்றது எல்லோருக்குமே தெரியும். கம்பெனித் தீவனத்தைச் சாப்பிடுற எந்தக் கோழியா இருந்தாலும், அதுங்களுக்கு ரசாயன பாதிப்பு இருக்கத்தான் செய்யும். அந்தக் கோழி கறியைச் சாப்பிடற மனிதர்களுக்கும் பாதிப்புகள் வரத்தான் செய்யும். அதில்லாம நாட்டுக் கோழிகளுக்கு நோய்த் தாக்குதல் இருக்காதுங்கிறது சரிதான். ஆனா, மேய்ஞ்சு, திரிஞ்சு இரையெடுக்குற கோழிகளுக்குத்தான் நோய் வராது. மொத்தமா அடைச்சு வெச்சா, கண்டிப்பா நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகும். அப்புறம் அதுக்கான மருந்து, ஊசினு போடறப்ப... பழையபடி பிராய்லர் கோழி கணக்காத்தான் இருக்கும். இயற்கைச் சூழல்ல மேயவிட்டு வளர்த்தாதான் அது முழுமையான நாட்டுக் கோழி. மண்ணைக் கிளறி, கரையான், புழு பூச்சிகளைப் பிடிச்சு சாப்பிட்டு வளர்ற கோழிகளுக்குத்தான் இயற்கையான சுவை இருக்கும். தோட்டங்கள்ல விவசாயத்தோட உபத் தொழிலா நாட்டுக் கோழி வளர்ப்பையும் விவசாயிகள் செய்தா... போதுமான அளவுக்கு நாட்டுக் கோழிங்க கிடைக்க ஆரம்பிச்சுடும். கிராமங்கள்ல வீட்டுக்கு வீடு வளர்க்கலாம். புறக்கடை முறையில வீட்டுக்குவீடு நாட்டுக் கோழிங்க வளர்க்குறதை எங்க துறை மூலமா ஊக்கப்படுத்திக்கிட்டிருக்கோம். கொஞ்சம் பெரிய அளவுல வளர்க்கணும்னு நினைக்கறவங்க, தனித்தனியா 75 சதுரடி இருக்குற கொட்டகைகள்ல, 10 பெட்டைக்கு 2 சேவல்ங்கிற விகிதத்துல வெச்சு நாமளே தீவனத்தைத் தயார் பண்ணிக் கொடுத்து வளக்கலாம். அந்தக் கோழிகள் மேயுறதுக்காக வலை அடிச்சு கொஞ்ச இடத்தை ஒதுக்கிக் கொடுக்கலாம். அப்பதான் தரமான நாட்டுக் கோழிகளை உருவாக்க முடியும். இந்த முறையில அடை வெச்சே வருஷத்துக்கு எண்ணூறு குஞ்சுகளை உற்பத்தி பண்ண முடியும். இதுபத்தின தொழில்நுட்பம் தேவைப்படுறவங்க எங்க ஆராய்ச்சி மையத்துக்கு வந்து தெரிஞ்சுக்கலாம்" என்று அழைப்பு வைத்தார்.

        ஆடு, பிராய்லர் கோழி, மீன் என பல்வேறு இறைச்சி வகைகள் இருந்தாலும், அசைவ பிரியர்கள் அதிகம் விரும்புவது நாட்டுக் கோழியை தான். அதன் சுவையே தனி. பண்ணை அமைத்து இக்கோழிகளை கவனத்துடன் வளர்த்தால், நல்ல லாபம் குவிக்கலாம்’ என்கிறார் ஈரோடு நஞ்சை ஊத்துக்குளி ரூஸ்டர்ஸ் கேட்சர்ஸ் நிர்வாக இயக்குனர் பாலு. அவர் கூறியதாவது: நாட்டுக்கோழிகளின் முட்டை, இறைச்சிக்கு மக்களிடம் மவுசு உள்ளது. ஆனால் தேவைக்கேற்ற உற்பத்திதான் இல்லை. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தரக்கூடிய இத்தொழிலை முறையாக மேற்கொண்டால் நிரந்தர வருமானம் பெற முடியும். பொதுவாக கிராமங்களில் வீடுகளில் நாட்டுக்கோழி வளர்ப்பது வழக்கம். விற்பதற்காக வளர்க்காமல், தங்கள் தேவைக்கு பயன்படுத்துவார்கள். இதையே தொழிலாக செய்தால் நல்ல பார்க்கலாம்.
 

        கிராமப்புற விவசாயிகள் விவசாய நிலம் மற்றும் வீட்டை ஒட்டியே ஷெட் அமைத்து பண்ணை முறையில் நாட்டுக்கோழி வளர்க்கலாம். தினசரி காலை 2 மணி நேரம், மாலை 2 மணி நேரம் பராமரிப்புக்கு செலவிட்டால் போதும். நாட்டுக்கோழி குஞ்சுகளை பொரிப்பகங்களில் இருந்து வாங்கி வந்து வளர்க்கலாம். முட்டையாக வாங்கி, கருவிகள் மூலம் நாமே பொரிக்க செய்து குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம். முட்டைகளை அடைகாக்க இன்குபேட்டர் மெஷின், அடை காத்த முட்டைகளை பொரிக்க வைக்க கேட்சர் மெஷின் தேவைப்படும். பராமரிப்பு முறைகள் பண்ணை வைக்கும் இடத்தில் வெளியிலிருந்து வரும் மற்ற பறவைகளை அண்ட விடக்கூடாது. அந்நிய பறவைகள் மூலம்தான் கோழிகளுக்கு பறவை காய்ச்சல் தாக்கும் அபாயம் உள்ளது. பண்ணைக்குள் மரம் வளர்க்கக் கூடாது. செடி, கொடிகள் இல்லாமல் இருப்பது கோழிகளுக்கு நல்லது. பண்ணைகளுக்கு அருகில் அதிக சத்தம் வரும் வெடிகளை வெடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கோழிப்பண்ணையில் எப்போதும் பாடல்களை ஒலிக்கும்படி செய்தால், மற்ற சத்தங்கள் கோழிகளை பாதிக்காது.
 

            முதல் 48 நாட்களுக்கு புரோட்டீன் அதிகமுள்ள தீவனங்களை மட்டுமே குஞ்சுகளுக்கு தர வேண்டும். 48 நாட்களுக்கு பிறகு தீவனத்துடன் கீரை மற்றும் கரையான்களை கலந்து கொடுக்கலாம். எடை அதிகரிக்க குஞ்சுகளின் வளர்ச்சிக்கு ஏற்றபடி பனங்கருப்பட்டியை தண்ணீரில் கலந்து கொடுக்கலாம். கேரட், பெரியவெங்காயம் போன்றவற்றை பொடியாக நறுக்கி தீவனத்துடன் கொடுக்கலாம். 45 நாட்களுக்கு மேல் கடைசி வரை ஏதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கி மதியத்துக்கு மேல் கோழிகளுக்கு கொடுக்கலாம். இதனால் தீவனச்செலவு குறையும். கறியின் ருசியும் அதிகரிக்கும்.

வளர்ப்பது எப்படி?
           அதிகம் காற்று புகாத நான்கு பக்க சுவர் உள்ள அறையில், 30 அடி நீளம், 2 அடி உயரம் உள்ள கெட்டியான தகடால் வட்ட வடிவில் வளையம் அமைக்க வேண்டும். குஞ்சுகள் இரவு நேரங்களில் குளிரை தாங்குவதற்காக, வளையத்துக்குள் ஒரு அடி உயரத்தில் 100 வாட் பல்புகள் 4 பொருத்த வேண்டும். வெயில் காலங்களில் 300 குஞ்சுகளுக்கு 100 வாட் பல்பு மூன்றும், குளிர்காலத்தில் நான்கும் பொருத்தினால் தேவையான அளவு வெப்பம் இருக்கும். வட்டத்துக்குள் 2 இஞ்ச் உயரத்துக்கு நிலக்கடலைதோல் போட்டு சீராக பரப்பி, அதன்மேல் பேப்பர் விரிக்க வேண்டும். அதனுள் தீவனத்தொட்டி மற்றும் தண்ணீர் தொட்டி வைக்க வேண்டும். அதற்குள் 300 குஞ்சுகளை வளர்க்கலாம். தினசரி பேப்பரை மாற்ற வேண்டியது அவசியம். அறையில் 20 நாட்கள் வளர்த்த பின்னர், நல்ல காற்றோட்டம் உள்ள பண்ணைக்கு மாற்ற வேண்டும். அங்கு தரையில் நிலக்கடலைதோல் அல்லது தேங்காய் நார்க்கழிவு அல்லது மரத்தூள் சுமார் ஒன்றரை முதல் 2 இஞ்ச் அளவுக்கு பரப்பி கொள்ள வேண்டும். இவை கெட்டியாகி விடாமல் இருக்க அடிக்கடி கிளறி விட வேண்டும்.
                    கோழிகள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டு கொத்துவதை தவிர்ப்பதற்காக, 20 முதல் 30 நாட்களுக்குள்ளாக குஞ்சுகளின் மூக்கு நுனியை வெட்ட வேண்டும். இங்கு 60 நாட்கள் வளர்க்க வேண்டும். மொத்தமாக 80 நாட்கள் பூர்த்தியானதும், சேவல்களை உடனடியாக விற்பனைக்கு அனுப்பலாம். கோழிகளை கூடுதலாக 10 முதல் 20 நாட்கள் வரை வளர்த்த பின்னர் விற்பனைக்கு அனுப்ப வேண்டும்.
                 குஞ்சு பொரிப்பு பண்ணையில் வளர்க்கப்படும் தாய்க்கோழி இடும் முதல் 2 முட்டைகள் குஞ்சு வளர்ப்புக்கு தகுதியற்றது. இதர முட்டைகளில் எடை குறைவு, ஒழுங்கற்ற அமைப்புள்ள முட்டைகளை தவிர்க்க வேண்டும். மற்ற முட்டைகளை இன்குபேட்டர் மெஷினில் 18 நாட்கள் 99.6 டிகிரி சென்டிகிரேடு வெப்பம், 70 டிகிரி சென்டிகிரேடு ஈரப்பதம் உள்ளவாறு வைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 10 ஆயிரம் முட்டைகளை வைக்கலாம். பின்னர் கேட்சர் மெஷினில் 3 நாள் வைத்தால் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் வெளிவரும்.


நாட்டுக்கோழி பராமரிப்பு
            இளம் நாட்டுகோழி குஞ்சுகள் பராமரிப்பு ( 1 - 7 வாரம்)
குஞ்சுகளை பெறுவதற்கு முன் கொட்டகைகளில் அடைப்பான்களை அமைக்க வேண்டும். ஒரு அடைகாப்பானில் அதிகபட்சமாக 250 – 300 குஞ்சுகளை வைத்து வளர்க்கலாம். முதல் வாரத்தில் 95 பாரன்கீட் என்றளவில் வெப்பம், பிறகு ஒவ்வொரு வாரமும் 5 பாரன்கீட் என்றளவில் வெப்பத்தை குறைத்து கொடுக்க வேண்டும். குஞ்சு பருவ தீவனத்தை கொடுத்து வளர்க்க வேண்டும். சுடவைத்து ஆற வைத்த தண்ணீரை குஞ்சுகளுக்கு கொடுக்க வேண்டும். நியோ மைசின், டாக்சி சைக்லின், செபலேக்சின் போன்ற கோழி குஞ்சுகளுக்கு நோய் பாதிப்பை தடுக்க கொடுக்கப்பட வேண்டும்.
 

வளர் நாட்டுகோழி பராமரிப்பு (8 - 18 வாரம்)
             இப்பருவத்தில் கோழிகளுக்கு கொடுக்கப்படும் தீவனத்தில் புரதசத்தின் அளவு சதவீதம் இருக்க வேண்டும். எரிசக்தியின் அளவு 2700 கிலோ கலோரியாகவும் , நார் சத்தின் அளவு 8 சதவீதத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். 17 வது வார துவக்கத்தில் பேன், செல் போன்ற வெளிப்புற ஒட்டுண்ணிகள் காணப்பட்டால் அதை ஒழிப்பதற்கு
1-2 மி.லி டெல்டா மெத்திரின் என்ற மருந்தை (பியுட்டாக்ஸ்) லிட்டர் தண்ணீர் கலந்து கோழிகளின் தலைப்பகுதி தவிர முக்கி எடுத்தல் வேண்டும். மேலும் கொட்டகைகளிலும் தெளித்து விட வேண்டும். இந்த மருந்து கோழிகளை வெயில் அடிக்கும் மதிய வேளையில் மேற்கொள்ள வேண்டும். பருவநிலை மாற்றத்தின் போது கோழிகளின் சுவாச கோளாறு ஏற்ப்பட்டால் என்ரோ பிலாக்சசின் மில்லி /கோழி என்ற அளவு தண்ணீரில் கொடுக்க வேண்டும்.
முட்டையிடும் நாட்டுக்கோழி பராமரிப்பு ( 18 வாரம் முதல் )
ஒரு கோழி ஒரு வருடத்தில் சுமார் 60 முதல் 80 முட்டைகள் வரை இடும். ஒரு பருவத்தில் 12 – 18 முட்டைகள் இடும். கலப்பின நாட்டுக் கோழியான நாமக்கள் கோழி 1 240 - 280 முட்டைகள் வரை இடும். இப்பருவத்தில் 18 சதவீத புரதமும், 2700 கிலோ கலோரி எரிசக்தி தீவனம் அளித்தல் வேண்டும். ஒரு முட்டை கோழி தினமும் 240 – 300 மி.லிட்டர் தண்ணீர் குடிக்கும்.


கோடைகால பராமரிப்பு
                கோழிகள் தீவனம் இல்லாமல் பல நாட்களுக்கு உயிர்வாழும். ஆனால் தண்ணீர் இல்லாமல் அவற்றால் உயிர்வாழ முடியாது. கோழிகளைப் பொறுத்தமட்டில் தண்ணீர் இன்றியமையாப் பொருளாகும். கோடை காலங்களில் சுற்றுப்புற வெப்பத்தை குறைப்பதில் தண்ணீர் பெரும்பங்காற்றுகிறது. வணிக அளவில் வளர்க்கப் படும் இறைச்சிக்கோழிகளுக்கு அவை உண்ணும் தீவனத்தைப் போல இரு மடங்கு தண்ணீர் தேவை. கோடையில் கோழிகளின் உடலிலிருந்து கூடுதலாக வெப்பம், அவை விடும் மூச்சுக் காற்றின் மூலமே வெளியேறுகிறது. பறவைகளைப் பொறுத்தமட்டில் வியர்வைச் சுரப்பிகள் இல்லாத காரணத்தால் கூடுதலாக உண்டாகும் உடல்வெப்பத்தை வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது. எனவே கோழிகளால் சுவாசக் காற்று மூலம்தான் உடல் சூட்டினை தணித்துக் கொள்ள முடியும். இதற்காக கோழிகளுக்கு பெருமளவு தண்ணீர் தேவைப் படுகிறது. கோடையில் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப அயர்ச்சியைக் குறைக்க தகுந்த தண்ணீர் கொடுப்பதன் மூலம் குறைக்கலாம். இத்துடன் தாது உப்புக்களையும் போதிய அளவு சேர்த்துக் கொடுத்தால் வெப்ப அயர்ச்சி குறைபாட்டை நீக்குவதுடன் கோழிகளுக்கு தண்ணீர் குடிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தூண்டுகின்றன. தண்ணீரில் நோய் உண்டாக்கும் கிருமிகளின் அளவைக் குறைக்க குளோரின் பவுடர், அயோடின் கலவைகள், ஹைட்ரஜன் பெர் ஆக்சைடு போன்றவற்றை பயன் படுத்தலாம். இதில் குறைந்த செல வில் குளோரின் வாயுவைப்பெற 1000 லிட்டர் தண்ணீருக்கு 5 கிராம் வரை பிளீச்சிங் பவுடரைப் பயன்படுத்தலாம். அயோடின் தயாரிப்புகளை 10 லிட்டருக்கு 1 மிலி வீதம் பயன்படுத்தலாம். தரமற்ற குடிநீர் கோழிக்கு ரத்தக்கழிச்சல், சால்மோனல்லோசிஸ், கோலி பேசில்லோசிஸ் போன்ற நோய் பாதிப்புகளை உண்டாக்குவதுடன் அவற்றின் உற்பத்தி திறனையும் குறையச் செய்கின்றன. முட்டையிடும் கோழிகள் முட்டையிட்டவுடன் அதிக அளவு தண்ணீரைக் குடிக்கும். இரவு நேரங்களில் வெளிச்சத்துக்காகப் போடப்படும் விளக்குகளை அணைப்பதற்கு முன்னும், அதிக தண்ணீர் அருந்தும். இறைச்சிக் கோழிகளைப் பொறுத்தமட்டில் சூரிய ஒளி பட்டவுடன் அல்லது செயற்கையாக வெளிச்சம் அளித்தவுடன் அதிக அளவு தண்ணீர் குடிக்கும். எனவே கோடையின் வெப்பத் தாக்குதலை உணர்ந்து, தகுந்த அளவில், தரமுள்ள தண்ணீர் கோழிகளுக்கு வழங்க வேண்டும்.

குளிர்கால பராமரிப்பு
        சிமெண்ட் தரை கொண்ட கோழி வீட்டில் மரத்தூள், மரஇழைப்பு சுருள், நெல் உமி, நிலக்கடலைத் தோல், கரும்பு சக்கை, துண்டிக்கப்பட்ட மக்காச் சோளத் தக்கை ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை உபயோகித்து கோழிகளை வளர்க்கலாம். ஆழ்கூளமாக உபயோகப்படுத்தும் பொருட்கள் நன்றாக ஈரத்தை உறிஞ்சக்கூடியதாக இருக்க வேண்டும். மலிவு விலையில் உள்ளூரிலேயே கிடைக்கக் கூடியதாக இருக்க வேண்டும். மற்றும் ஆழ்கூளத்தை கிளறிவிடும் போது காற்றில் எளிதில் உலரக் கூடியதாக இருக்க வேண்டும். கோழி வளர்ப்பில் ஆழ்கூளப் பராமரிப்பு மிகவும் முக்கியமான தாகும். கூளத்தை தினமும் நன்கு கிளறிவிட வேண்டும். கோழி வீட்டின் காற்றோட்டம், கோழிகளின் வயது, எண்ணிக்கை, எடை மற்றும் தட்பவெப்ப நிலை ஆகியவற்றினை பொருத்து ஆழ் கூளத்தில் ஈரப்பதம் அதிகமாகி கெட்டியாகிவிடும். மேலும் அமோனியா வாயு உற்பத்தி ஆகி கோழிகளுக்கு கண் எரிச்சல், சுவாச நோய்கள் பாதிப்பு ஆகியவை ஏற்படுவதோடு அல்லாமல் ரத்த கழிச்சல் நோயும் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. இதன் விளை வாக கோழிகளின் இறப்பு விகிதம் அதிகமாவதோடு பாதிக்கப்பட்ட கோழிகள் சரியாக தீவனம் தண்ணீர் சாப்பிடாமல், வளர்ச்சி குன்றி, எடையும் குறைந்து காணப் படும். ஆழ்கூளத்தில் ஈரப்பதம் 25 விழுக்காட்டிற்கு மிகாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஈரம் அதிகமானால் 100 சதுர அடிக்கு 8 முதல் 10 கிலோ சுண்ணாம்புத் தூள் கலந்து தூவிவிட்டு கிளறிவிடுவது நல்லது. முதல் மூன்று வாரம் வரை ஆழ்கூளப் பொருளை 5 செ.மீ. உயரத்திற்கும் மூன்று வாரத்திற்குப் பிறகு 10 செ.மீ. உயரத்திற்கும் கோழி வீட்டில் நிரப்ப வேண்டும். ஆழ்கூளத்தை ஒரு நாளைக்கு இரண்டு தடவை கிளறிவிட வேண்டும்.
100 கோழிகளுக்கு சுமார் 25 லிட்டர் குடிநீர் தேவைப் படும். இளம் கோழிக் குஞ்சு களுக்கு முக்கிய மான எதிரி அசுத்த மான தண்ணீர் ஆகும். இளம் குஞ்சுகளின் ஆரம்பகால இறப்பு நல்ல குடிநீரை உபயோகப் படுத்தாததினால் ஏற்படுகிறது. ஆகவே சுத்தமான குடிநீர் அளிக்க வேண்டும். எந்த இடத்திலிருந்து குடிநீரை எடுக்கிறோமோ அந்த இடத்தில் எந்தவித கலப்படமும் இல்லாமல் இருக்க வேண்டும். குறிப்பாக சாக்கடை கலப்படம் அல்லது தொழிற்சாலை கழிவு கலக்க வாய்ப்பு உள்ளதா என்பதை கவனிக்க வேண்டும். ஆழ்கிணறு நீராக இருந்தால் கொதிக்க வைக்காமல் அப்படியே நன்கு உபயோகிக்கலாம். அதே சமயம் கிணற்று நீராக இருந்தால் அதனை நன்கு கொதிக்க வைத்து ஆறவைத்து கொடுப்பது நல்லது. தரமான பிளீச்சிங் பவுடரை ஆயிரம் லிட்டருக்கு 4 முதல் 7 கிராம் என்ற அளவில் தண்ணீர் அளிப்பதற்கு 8 முதல் 10 மணி நேரத்திற்கு முன்பு கலந்து அவ்வித நீரை கோழிகளுக்கு அளிக்கலாம். கிணறுகளில் பிளீச்சிங் தூள் போடவேண்டுமென்றால் ஒரு கன அடி நீருக்கு 2 கிராம் என்ற விகிதத்தில் சேர்க்க வேண்டும். குடிநீரை செம்பு, பித்தளை மற்றும் எவர்சில்வர் பாத்திரங்களில வைத்திருந்து பின்னர் உபயோகப் படுத்தினால் குடிநீர் குளிர்ந்த நிலையில் இருக்காது. இளம் வயது குஞ்சுகளுக்கு, சிறிதளவு தண்ணீர் வெதுவெதுப் பான நிலையில் அளிக்க வேண் டும். குறிப்பாக இரவு நேரங்களில் அதிக குளிர் காரணமாக குடிநீர் குளிர்ந்து விடுவதால் அதை மாற்றி வெதுவெதுப்பான குடிநீர் அளித்திட வேண்டும். அதேபோல் காலையில் குடிநீர் மாற்றும் பொழுதும் புதிதாய்க் கொதித்து ஆறிய வெது வெதுப்பான குடிநீரையே அளிக்க வேண்டும். காலையில் சில நேரங்களில் எட்டு மணி வரையிலும் குளிர் இருப்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குஞ்சுகள் அதிக அளவில் இறக்க நேரிடும். இளம் குஞ்சுகளுக்கு கொடுக்கப்படும் செயற்கை வெப்பத்தின் கால அளவை குளிர்காலங்களில் மேலும் இரட்டிப்பாக்கி 2 வாரங்கள் கொடுக்க வேண்டும். அதே போல அடைகாப்பானின் மேல் உள்ள மின்சார பல்பின் வாட் அளவை குஞ்சுகளின் தேவைக் கேற்ப அதிகப்படுத்த வேண்டும். மின்சார பல்பின் உயரத்தையும் குஞ்சுகளின் நிலையை அறிந்து கூட்டவோ, குறைக்கவோ செய்ய வேண்டும். வீட்டின் இரு பக்கங்களிலும் கோணிப்பைகளை திரையாக்கி சாரல் மற்றும் பனி உள்ளே வராமல் இரவு முழுவதும் தொங்க விட வேண்டும். அதிக சக்தி வாய்ந்த மின் விளக்குகளை இரவு முழுவதும் எரியவிட வேண்டும். மேற்கூறிய முறை களை முறை யாக பின்பற்றினால் குளிர்காலத் தில் கோழிப்பண்ணை களில் எவ்வித பாதிப்பும் இல்லா மல் பண்ணையை மேம்படுத் தலாம்

  தீவன கலவைக்கு (100 கிலோ கிராம்) 
            தேவையான மூலப்பொருட்களும் அளவுகளும்
1 மக்காச்சோளம் 40 கிலோ
2 சோளம் 7 கிலோ
3 அறிசிகுருணை 15 கிலோ
4 சோயா புண்ணாக்கு 8 கிலோ
5 மீன் தூள் 8 கிலோ
6 கோதுமை 5 கிலோ
7 அரிசித் தவிடு 12.5 கிலோ
8 தாது உப்புக் கலவை 2.5 கிலோ
9 கிளிஞ்சல் 2 கிலோ
மொத்தம் 100 கிலோ
              புறக்கடையில் வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகளுக்கு புரத சத்து மிகக் குறைவாகவே கிடைக்கிறது. இதனை ஈடு செய்வதற்கு புரதச்சத்து நிறைந்த பானைக் கரையானும், அசோலாவும் கொடுத்து வளர்க்கும் பொழுது தீவன செலவு வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. சிறு வெங்காயம் மற்றும் கீரைகளை நறுக்கி நாட்டுக் கோழிகளுக்கு உணவாக கொடுக்கலாம்.

மூலிகை மருத்துவம்
சின்ன சீரகம் 10 கிராம்
கீழாநெல்லி 50 கிராம்
மிளகு 5 கிராம்
மஞ்சள் தூள் 10 கிராம்
வெங்காயம் 5 பல்
பூண்டு 5 பல்
சிகிச்சை முறை (வாய் வழியாக)
சீரகம் மற்றும் மிளகினை இடித்த பின்பு மற்ற பொருள்களோடு கலந்து அரைத்து இக்கலவையை தீவனம் அல்லது அரிசி குருணையில் கலந்து கொடுக்கவும். மிகவும் பாதிக்கப்பட்ட கோழிகளுக்கு சிறு சிறு உருண்டைகளாக உட் செலுத்தவேண்டும்.


கோழிகளுக்கு சிறந்த தீவனம் அசோலா
                அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் அசோலாவைத் தங்கள் தோட்டங்களிலேயே வளர்த்து கால்நடை மற்றும் கோழிகளுக்கு தீவனமாக வழங்குவதன் மூலம் நல்ல உற்பத்தி பெறலாம். இதுகுறித்து விருத்தாசலம் வேளாண்மை அறிவியல் நிலைய தலைவர் க. சுப்பிரமணியன் மற்றும் உதவிப் பேராசிரியர் வெ. தனுஷ்கோடி கூறியது: "அசோலா தண்ணீரில் மிதக்கக்கூடிய பெரணி வகையைச் சேர்ந்த தாவரமாகும். இதை விவசாயிகள் உயிர் உரமாக நெல் வயலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சமீபகாலமாக அசோலா ஓர் உன்னத கால்நடை மற்றும் கோழித்தீவனமாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 25 முதல் 30 விழுக்காடு வரை புரதச்சத்து உள்ளது. கால்நடைகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள், தாது உப்புகள், வைட்டமின்கள் மற்றும் பீட்டாகரோடின் ஆகிய சத்துகள் இதில் உள்ளன. பீட்டாகரோடின் நிறமியானது வைட்டமின் ஏ உருவாவதற்கு மூலப்பொருளாக உள்ளது. இச்சத்து உள்ளமையால் கோழிகளுக்கு நோய் எதிர்ப்புச் சத்து அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் அசோலா சாப்பிட்ட கோழியின் முட்டைகளை நாம் உண்பது கண்பார்வைக்கு நல்லது. அசோலா உற்பத்தி முறைகள்: நிழல்பாங்கான இடத்தில் 10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம் கொண்ட பாத்தி அமைத்து, பாத்தியின் அடித்தளத்தில் சில்பாலின் காகிதத்தை சீராக விரிக்கவும். பாலீத்தீன் காகிதத்தின் மேல் 2 செ.மீ. அளவுக்கு மண் இட்டு சமப்படுத்தவும். இதன்மேல் 2 செ.மீ. அளவுக்கு தண்ணீர் ஊற்றவும். பின் பாத்தி ஒன்றுக்கு 100 கிராம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 5 கிலோ அசோலா தாய் வித்து இடவேண்டும். நாள்தோறும் காலை அல்லது மாலை வேளையில் பாத்தியில் உள்ள மண்ணை நன்கு கலக்குவதால் மண்ணில் உள்ள சத்துகள் தண்ணீரில் கரைத்து அசோலாவிற்கு எளிதாக கிடைக்கும். 15 நாள்களில் ஒரு பாத்தியில் (10 அடி நீளம், 2 அடி அகலம், 1 அடி ஆழம்) 30 முதல் 50 கிலோ அசோலா தாயாராகி விடும். மூன்றில் ஒரு பங்கு அசோலாவை பாத்தியிலேயே விட்டு எஞ்சிய 2 பகுதியை அறுவடை செய்யலாம். 10 நாள்களுக்கு 1 முறை பசுஞ்சாணம் கரைப்பது நல்லது. பூச்சித்தொல்லை வந்தால் 5 மில்லி வேப்பெண்ணையை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து பாத்தியில் தெளிக்கவும். அசோலாவின் உற்பத்தி கோடை காலங்களில் சிறிது குறைந்தும், மழைக்காலங்களில் அதிகரித்தும் காணப்படும். மூன்று அல்லது நான்கு பாத்திகள் அமைத்து தினமும் அசோலாவை அறுவடை செய்து கால்நடை மற்றும் கோழிகளுக்குச் சத்து நிறைந்த சுவைமிகுந்த உணவாகப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சையாகவோ அல்லது உலர் தீவனமாகவோ கோழிகளுக்குப் பயன்படுத்தலாம். அசோலாவை பச்சைத் தீவனமாக முதன் முதலாகப் பயன்படுத்தும் பொழுது அவற்றை உண்பதற்கு தயக்கம் காட்டலாம். ஆகையால் ஆரம்பகட்டத்தில் அசோலாவைத் பிற அடர் தீவனத்துடன் கலந்து கோழிகளுக்குப் தீவனமாகப் பழக்கப்படுத்த வேண்டும். அசோலாவின் பயன்கள்: அசோலாவை உண்ணும் கோழி முட்டையின் எடை, அல்புமின், குளோபுலின் மற்றும் கரோடின் அளவு, அடர் தீவனம் மட்டும் இடப்பட்ட கோழி முட்டையின் சத்தைவிட அதிகமாக உள்ளது. இந்தியாவில் வேளாண்மையும் கால்நடை வளர்ப்பும் ஒருங்கிணைந்து பின்பற்றப்படுகிறது. அசோலா குறைந்த செலவுள்ள இடுபொருளாக கால்நடை வளர்ப்பில் பயன்படுகிறது. மேலும், நெல் விளைச்சலில் இயற்கை உரமாக செயல்பட்டு மண்ணின் தரத்தை மேம்படுத்துகிறது. எனவே, அசோலா ஒருங்கிணைந்த பண்ணையத்தில் மிக முக்கியமான இடு பொருளாகும். பெரணி தாவரமான அசோலாவின் வளர்ச்சிக்கு மிதமான வெப்பநிலையான 35-36 டிகிரி செல்சியஸ் வெப்பம் தேவைப்படுகிறது. ஆகையால் உயர்ந்த வெப்பநிலையில் அசோலாவின் வளர்ச்சி தடைபடுவதால் உற்பத்தி குறைகிறது. ஆகவே, மிகவும் வறண்ட பகுதியில் இந்த தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது கடினமாகும்.


நாட்டுக் கோழிகளுக்கு கரையான் தீவனம்
                      கரையானின் தீமைகள் குறித்தே அறிந்த பலருக்கு கரையான் தீவனமாகப் பயன்படும் என்றால் ஆச்சரியமாகத்தானே இருக்கும். நாட்டுக் கோழி வளர்ப்பவர்களுக்கு கரையான் சிறந்த உணவாக பயன்படுகிறது. கரையான் உற்பத்தி செய்து கோழிக் குஞ்சுகளுக்குத் தீனியாகக் கொடுத்தால், கரையான் சாப்பிட்ட குஞ்சுகள் மற்ற குஞ்சுகளைவிட இருமடங்காக வளர்ச்சியடையும். தேவையான பொருட்கள் 1. ஒரு பழைய பானை 2. கிழிந்த கோணி/சாக்கு 3. காய்ந்த சாணம் 4. கந்தல் துணி, இற்றுப்போன கட்டை, மட்டை, காய்ந்த இலை, ஓலை போன்ற நார்ப்பொருட்கள் கரையான் உற்பத்தி செய்முறை மேற்கண்டவற்றை பழைய பானையினுள் திணித்து சிறிது நீர் தெளித்து வீட்டிற்கு வெளியே தரையில் கவிழ்த்து வைத்துவிட வேண்டும். முதல் நாள் மாலை கவிழ்த்து வைத்தால் மறுநாள் காலை திறந்து பார்த்தால் தேவையான கரையான் சேர்ந்திருக்கும். தாய்க்கோழி உதவியுடன் குஞ்சுகள் உடனடியாக எல்லா கரையானையும் தின்று விடும். கரையான் தின்று அரை மணி நேரத்திற்கு தண்ணீர் கொடுக்கக்கூடாது. ஒரு பானையில் சேரும் கரையான் 10-15 குஞ்சுகளுக்கு போதுமானது. கிடைக்கும் கரையானின் அளவு இடத்திற்கு இடம் மாறுபடும். செம்மண் பகுதியில் அதிகம் கிடைக்கும். அதிகம் தேவை என்றால் ஒன்றுக்கு மேல் எத்தனை பானைகள் வேண்டுமானாலும் கவிழ்த்து வைக்கலாம்.


                 மக்கள் கரையான் உற்பத்தியை காலங்காலமாக கோழிக்குஞ்சுத் தீவனத்திற்காக செய்தார்கள். இத் தொழில் நுட்பத்தை அறிவியல் நோக்கில் பார்க்கலாம். கரையான் செயலாற்றும் முறை இங்கு குறிப்பிடும் கரையான் ஈர மரக்கரையானாகும். மேலும் கரையான் ஆடு,மாடுகளைப் போல் நார்ப் பொருளை உண்டு வாழும் பூச்சியினமாகும். கரையானின் குடலிலும் நார்ப் பொருள்களைச் செரிக்க நுண்ணுயிரிகள் உண்டு. கரையான் சக்திக்கு நார்ப்பொருளையும், புரதத் தேவைக்கு மரக்கட்டையிலுள்ள பூஞ்சக்காளானையும் பயன்படுத்திக்கொள்கிறது. பானையிலுள்ள பொருட்களில் நீர் தெளிப்பது கரையான் எளிதில் தாக்க ஏதுவாக அமையும். கரையான்கள் பொதுவாக இரவில் அதிகமாக செயல்படும் என்பதால் மாலையில் பானை கவிழ்க்கப்படுகிறது. காலையில் சூரிய உதயத்திற்கு முன்பாக கரையானை எடுத்து விடுவது சிறந்தது. எறும்புகள் தாக்குதல் உள்ள பகுதியில் பகலில் அலைந்து திரியும் எறும்புகள் கரையானைத் தின்று விடும். கரையான் சத்து மிக்கது. அதில் புரதம் 36%, கொழுப்பு 44.4%, மொத்த எரிசக்தி 560கலோரி/ 100கிராம் போன்றவை உள்ளன. சில வகை கரையானில் வளர்ச்சி ஊக்கி 20% உள்ளது. இதன் காரணமாகவே கோழிக் குஞ்சுகள் விரைந்து வளர்ந்து எடை கூடுகிறது. கோழிக் குஞ்சுகளுக்கு சிறந்த புரதம் செரிந்த தீவனமாக கரையான் அமைந்ததால், காலம் காலமாக தென் தமிழ்நாட்டு மக்களால் கரையான் உற்பத்தி செய்யப்பட்டது. இச்செயல்பாடுகளை ஆய்விட்டபோது பல கூடுதல் நன்மைகள் ஏற்படுவது தெரியவந்தது. நன்மைகள் கரையான் உற்பத்திக்கு என்று பானை கவிழ்த்தும் போது கரையான்கள் வீடுகள், வீட்டுப் பொருட்கள் மற்றும் மரங்களைத் தாக்குவதில்லை. பானையிலிருந்து எழும் ஒரு வகை வாசனை கரையான்களை கவர்ந்து ஈர்க்கும். ஆகவே மற்ற இடங்களைத் தாக்குவதில்லை. பானையில் வைக்கும் நனைந்த பொருட்கள் மற்றும் சாணம் கரையான்களுக்கு மிக பிடித்துள்ளன. கரையானைப் பிடித்து அழிப்பதற்குப் பதில் கோழிக் குஞ்சுக்கு தீவனமாகக் கொடுத்து விடுகிறோம். அடுத்து கரையானை ஒழிக்க கடுமையான பூச்சிக் கொல்லிகளைப் பயன்படுத்தும்போது சுற்றுச் சூழலும் பாதிக்கப்படுகிறது அல்லவா? முடிவாக கரையான் உற்பத்தி என்ற எளிய செலவற்ற ஒரு தொழில் நுட்பத்தால் மூன்று பயன்கள் விளைகின்றன.
1. செலவற்ற கோழிக்குஞ்சு தீவனம்.
2. வீட்டுப் பொருட்கள், மரங்களுக்குப் பாதுகாப்பு.
3. பூச்சிக் கொல்லிக்கு என்று செலவு கிடையாது.
பூச்சிக் கொல்லி மருந்து தேவையில்லாததால் நமது சுற்றுப் புறச் சூழலும் பாதுகாக்கப்படுகிறது. இன்றே செயல்படுங்கள், மாலை செயல்பட்டால் மறுநாள் காலை உங்கள் கோழிக் குஞ்சுகளுக்குத் தேவையான கரையான் கிடைத்துவிடும்.


செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம்
                  குஞ்சு பொரிப்பகம் உபயோகித்தும் நாட்டு முட்டைகளைப் பொரிக்கலாம். கோழியில் அடை வைப்பதைவிட இது இலகுவானது. கோழிகள் வருடத்திற்கு 4 முறை குஞ்சுகள் பொரிக்கும். ஆனால் செயற்கை முறை குஞ்சு பொரிப்பகம் அதை உபயோகிப்பவரின் திறமையைப் பொறுத்து 12 முறை குஞ்சுகள் பொரிக்கலாம். இவற்றின் மூலம் அதிகமாகக் குஞ்சு பொரிக்க முடியும். குஞ்சுப் பொரிப்பகமானது, செயற்கை முறையில் தேவையான வெப்பம் மற்றும் ஈரப்பதம் முட்டைகளுக்கு கொடுத்து குஞ்சு பொரிக்க உதவும் ஒரு இயந்திரமாகும். இதில் இரண்டு பிரிவுகள் உள்ளன. ஒன்று அடை காப்பான் (Setter) மற்றொன்று பொரிப்பன் (Hatcher) ஆகும்.
முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகரிக்க கோழி முட்டைஇட்டவுடன் அதை கீழ் கண்டவாறு பாதுகாக்க வேண்டும்.
அதாவது ஒரு இரும்பு சட்டியில் மணல் பரப்பி தண்ணீர் தெளித்து அதன் மேல் கோணிப்பை போட்டு முட வேண்டும் .முட்டைகளை இதன் மேல் வைத்து பருத்தி துணி கொண்டு முட வேண்டும்.இவ்வாறு பாதுகாத்து வைக்கப்படும் முட்டைகளின் குஞ்சு பொரிக்கும் திறன் 97 சதவிகிதம் வரை இருக்கும் .எனவே மேற்கூரிய முறையில் முட்டைகளை சேகரித்தால் அதிக குஞ்சுகள் கிடைக்கும் . சரியான காற்றோட்டம், தட்பவெட்பநிலை, ஈரப்பதம் முறையாக முட்டைகளை திருப்புதல் மட்டும் இல்லாமல் சுத்தமாக முட்டைகளையும் மட்டும் பொரிபகத்தையும் பராமரிப்பதன் மூலம் குஞ்சு பொரிக்கும் திறனை அதிகபடுத்த முடியும் .


நாட்டுகோழிகளின் நல மேலாண்மை
       நாட்டு கோழிகளை தாக்கும் பொதுவான நோய்கள்
1) இராணிகெட் நோய் (வெள்ளை கழிச்சல்)
2) அம்மை நோய்
3) கோழி காலரா
4) சளி நோய்
5) ரத்த கழிச்சல் மற்றும் மஞ்சள் - ஈரல் நோய்
6) தலை வீக்க நோய்
7) ஒட்டுண்ணி பாதிப்புக்கள்
               கோழிகளை தாக்கும் நோய்களில் வெள்ளை கழிச்சல் நோய் மிகவும் முக்கியமானது.இந்த நோய் கோழிகளை கோடை கால மற்றும் குளிர்கால பருவ மாற்றத்தின்போது அதிகமாக பாதிக்கும் இதை கொக்கு நோய் என்றும் கூறலாம். இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகளின் குடலும் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படும்.இந்த நோய் தாக்கப்பட்ட கோழிகள் தீவனம் எடுக்காது தண்ணீர் குடிக்காது வெள்ளையாகவும் பச்சையாகவும் கழியும் எச்சம் இடும் பொது ஒரு காலை தூக்கிகொல்லும் ஒரு இறக்கை மட்டும் செயல் இழந்து தொங்கும் தலையை முறுக்கி கொள்ளும் இறந்த கோழிகளை பரிசோதனை செய்து பார்த்தால் இரைப்பையில் ரத்த கசிவு இருக்கும். வெள்ளை கழிச்சல் நோய் வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம் போட வேண்டும்
கோழி அம்மை நோய் இந்த நோய் பாதித்த கோழிகளில் முதலில் சிறு சிறு அம்மை கொப்புளங்கள் கண் கொண்டை நாசிபகுதி செவி மடல் போன்ற இடங்களில் காணபடுகிறது .பின்பு கொப்புளங்கள் ஏற்பட்ட இடங்களில் வடுக்கள் தென்படும். வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் புண்கள் ஏற்படுவதால் தீவனம் உற்கொள்ள முடியாமல் கோழி இறப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.இந்நோயை ஆறு வார வயதில் கோழி அம்மை தடுப்பு ஊசி போட்டு கட்டுபடுத்தலாம்.

7 வது நாள் முட்டைக் கோழிகள் ஆர் டி வி எப் 1 என்னும் இராணிகெட் நோய் தடுப்பு மருந்தினை கண்ணில் மற்றும் மூக்கில் 2 சொட்டுகள் கொடுக்க வேண்டும்
14 வது நாள் ஐ பி டி தடுப்பு மருந்தை கண் சொட்டு மருந்தாக கொடுக்க வேண்டும்
3- வது வாரம் லசோட்டா என்னும் இராணிகெட் நோய் நோய் தடுப்பு மருந்தினை கண் சொட்டு மருந்தாக உபயோகிக்க வேண்டும்
5- வது வாரம் மீண்டும் லசோட்டா மருந்தினை கொடுக்க வேண்டும் 6- வது வாரம் கோழி அம்மை தடுப்பூசி இறக்கையில் தோலுக்கு அடியில்(0.5 மில்லி) செலுத்த வேண்டும்
8- வது வாரம் ஆர் டி வி கே / ஆர் பி என்னும் நோய் இராணிகெட் நோய் தடுப்பூசியை இறக்கையில் தோலுக்கு அடியில் மில்லி செலுத்த வேண்டும்
18- வது வாரம் இராணிகெட் நோய் (ஆர் டி வி கே) நோய்க்கான தடுப்பூசியை மீண்டும் செலுத்த வேண்டும்
மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடி தண்ணிரில் லசோட்டா மருந்தினை கலந்து வைக்க வேண்டும். லசோட்டா கொடுப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன் குடற்புழு நீக்கம் செய்தல் வேண்டும் .
 

குறிப்பு:
        தீவனம் அல்லது தண்ணீரில் வைட்டமின் கலவை மருந்துடன் சிறிது சுண்ணாம்புத் தூள் கலந்து கொடுப்பதன் மூலம், முட்டைகளின் எண்ணிக்கைகளை அதிகரிப்பதுடன், தோல் முட்டை இடுவதையும் தடுக்கலாம்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ 
  நண்பர் ஒருவரின் வளர்ப்பு அனுபவத்தையும் படியுங்க.
                 ஒரு பெட்டைக்கோழி வருஷத்துக்கு மூணு பருவங்கள்ல முட்டை போடும். ஒவ்வொரு முறையும் தொடர்ச்சியா பதினைஞ்சு முட்டை வரை போடும். அதை தேதி வாரியா எழுதி வைக்கணும். கடைசியா போட்ட ஒன்பது முட்டைகளை அடை காக்க வைக்கறதுதான் லாபமானது. நல்லா வளர்ச்சி அடைஞ்ச ஒரு பெட்டைக்கோழியால ஒன்பது முட்டைகளை மட்டும்தான் அடை காக்க முடியும். அதுக்கு மேல வெச்சா, ஒழுங்கா குஞ்சு பொரியாது. அடுப்புச் சாம்பலும் மணலும் நிரப்பின கூடையிலதான் அடைகாக்க வைக்கணும். கூடையில மூணு மிளகாயையும் போட்டுட்டா பூச்சி, பொட்டு அண்டாது. ஈரப்பதத்தை உறிஞ்சி கதகதப்பா வைக்கறதுக்காக கரித்துண்டு… இடியைத் தாங்கிக்கறதுக்காக இரும்புத் துண்டு… இதையெல்லாம் கூடையில போட்டு வைக்கணும். இந்த மாதிரி வெச்சா… ஒன்பதும் பொரிச்சிடும். முதல் வாரம், தினமும் தண்ணியில் மஞ்சதூள் கலந்து குஞ்சுகளுக்குக் கொடுக்கணும். அப்புறம் முணு வாரத்துக்கு ஏதாவது வைட்டமின் டானிக்குகளை சில சொட்டுகள் கலந்து கொடுத்தா போதும். சனிக்கிழமை தோறும் அரசு கால்நடை மருந்தகங்கள்ல கோழிக்கு இலவசமா தடுப்பு ஊசி போடுவாங்க. இதையெல்லாம் தவறாம செய்தா… எந்த இழப்பும் இல்லாம கோழிகளை வளர்த்தெடுத்துடலாம். புதுசா வேற எந்த டெக்னிக்கும் தேவையில்ல
கோழி குஞ்சு வளர்ப்பு.
முழுக்க நாட்டுப்புறத்துல வளர்க்கற மாதிரியேதான் வளர்க்கணும். 450 சதுர அடி இருந்தா போதும். பத்து கோழிகளை வளர்த்து மாதம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வரை சம்பாதிக்கலாம். அந்த இடத்தைச் சுத்தி நாலடி உயரத்துக்கு கோழி வலை அடிச்சு வேலி போட்டுக்கணும். வேலியோரம் கீழ் மண்ணைக் குவிச்சி சிமென்ட் பாலை ஊத்தி கொஞ்சம் கெட்டியாக்கிட்டா, மத்த உயிரினங்களால கோழிக்கு தொந்தரவு இருக்காது. வலை போட்ட இடத்துக்குள்ள மூணுக்கு மூணு அடி சதுரத்துல மூணு அடி உயரத்தில் மூணு குடிசைகளை சின்னச்சின்னதா போட்டுக்கணும். கோழிகள் ராத்திரியில தங்கறதுக்கு ஒரு குடிசை. நாலு பக்கமும் தரையிலிருந்து அரை அடி உயரத்தில் சுவர் எழுப்பி, வலை அடிச்சு, கீழே கடலைத் தோலை பரப்பி வைக்கணும். இன்னொரு குடிசை தூசிக் குளியலுக்கு. நாட்டுக்கோழிங்க குப்பையில புரண்டு றெக்கைகளை உதறுறதைப் பார்த்திருக் கலாம். உடம்புல இருக்கிற சின்னச்சின்ன உயிரினங்களை (செல்) துரத்துறதுக்காக இப்படி அந்தக் கோழிங்க செய்யும். பண்ணையில குப்பைக் குழி இருக்காது. அதனால, தரையில சாம்பலையும் மணலையும் கலந்து இந்த குடிசையில வைக்கணும். மூணாவது தீவனக் குடிசை. இதுல தீவனத் தொட்டியையும், தண்ணீர் குவளையையும் வெச்சுரணும். கோழிகளை பூட்டி வைக்கற வேலையே இங்க கிடையாது.
நல்ல வெடக்கோழிகளா பத்தும் சேவல் ஒண்ணும் வாங்கி வந்து வளர்க்க வேண்டியதுதான். கோழிங்க சமயத்துல பறந்து வெளியில போயிரும். அதனால பறக்கற கோழியை மட்டும் பிடிச்சி, ஒரு பக்க றெக்கையை நாலு விரக்கடை அளவு வெட்டி விட்டுட்டா பறக்காது. அப்பறம் முட்டைகளை சேகரிச்சு பொரிக்க வைக்க வேண்டியதுதான்.
பத்துக் கோழிகளை வளர்க்கறது ஒரு யூனிட். அப்படியே யூனிட் யூனிட்டா பெருக்கிக்கிட்டே போகலாம். குஞ்சுகள் தாயிடம் இருந்து பிரிஞ்சதும், அதை வெச்சே இன்னொரு யூனிட் அமைக்கறது நல்லது.
நாட்டுக்கோழிகளை நாட்டுக் கோழியா நினைச்சு மேய விட்டுதான் வளக்கணும். மனிதனுக்கான தீவனத்தை வாங்கிப்போட்டு எந்த உயிரினத்தை வளர்த்தாலும் பெரிசா லாபம் பார்க்க முடியாது. நாமளே கரையான் உற்பத்தி பண்ணி கொடுக்கலாம். அடுப்படிக்கழிவு, காய்கறிக்கழிவுகள், இலை தழைகள் கொடுத்து வளர்த்தாலே போதும் ஐந்தே மாசத்துல ஒன்றரை கிலோ அளவுக்கு வளர்ந்துடும். வீணாகிற தானியங்களை வேணும்னா கொடுக்கலாம். நாட்டுக் கோழியை விக்கறதுக்கும் பெரிசா அலைய வேண்டியதில்லை. ஒரு முறை விஷயத்தைத் தெரியப்படுத்திட்டா… வீடு தேடி வந்து வாங்கிக்குவாங்க.
நாட்டுக்கோழி வளர்ப்பில் இரண்டு வருடங்களாக ஈடுபட்டு வருபவர் நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டியை சேர்ந்த ரகுநாதன் (அலைபேசி: 94426-25504). ‘பண்ணை முறையிலான நாட்டுக்கோழி வளர்ப்பு’ பற்றி அவர் இங்கே விவரிக்கிறார்.
“வீட்டில் இருந்தே பாக்குற மாதிரி ஏதாவது பண்ணைத் தொழில் செய்யலாம்னு நாமக்கல்ல இருக்கற கே.வி.கே. மையத்துல போய் கேட்டேன். ஆடு, கோழி வளர்க்கலாமேனு சொன்னாங்க. கோழி வளர்ப்பு பயிற்சி வகுப்புல சேர்ந்து விஷயங்களைத் தெரிஞ்சிகிட்டேன். பிறகு, சென்னை – நந்தனத்துல இருக்கற கோழியின ஆராய்ச்சி நிலையத்தில் இருந்து நாட்டுக்கோழி, கின்னிக் கோழினு வாங்கிட்டு வந்து தொழிலை ஆரம்பிச்சேன். மத்த இனங்களுக்கு அவ்வளவா விற்பனை வாய்ப்பு இல்லாததால, நாட்டுக்கோழிங் களை மட்டும் தொடர்ந்து வளர்க்கிறேன். படிப்படியா வளர்ந்து, இப்பப் பெரிய பண்ணையா மாத்திட்டேன். வாரத்துக்கு 50 கோழிங்க விற்பனை ஆகுது. எப்பவுமே 500 கோழிங்க தயாரா இருக்கும். ஆரம்பத்துல, பாரம்பரிய முறைப்படி அடைகாக்க வெச்சேன். விற்பனையும் தேவைகளும் அதிகமாயிட் டதால இப்ப இங்குபேட்டர் பயன்படுத்துறேன்.
‘மேய்ச்சலுடன் கூடிய கொட்டில் முறை’யிலதான் நான் வளர்க்கிறேன். மதியத்திலிருந்து இருட்டுற வரை வெளியில மேயவிட்டு, பிறகு கூண்டுங்கள்ல அடைச்சிடுவேன். அப்ப அடர் தீவனம் கொடுப்பேன். விலைக்கு வாங்காம நானே தயாரிக்கிறதால தீவன செலவு ரொம்பவும் குறைச்சல்தான். வெளிய வாங்கினா ஒரு கிலோ 13 ரூபாய். நாமே தயார் செய்தா 8 ரூபாய்தான்.
தவறாம தடுப்பூசி போடணும், மருந்துகளையும் கொடுக்கணும். தடுப்பூசி போட்டாதான் கோடைக்காலத்துல வர்ற வெள்ளைக்கழிசல் நோய் வராம பாதுகாக்கலாம்”

ஆழ்மனதின் அற்புத சக்திகள்

ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 1



நம்மில் ஒவ்வொருவரும் ஒருசில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது அவரிடமிருந்து போன் கால் வந்திருக்கலாம். ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். போன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால் இந்த விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றை நாம் பெரிதாக நினைப்பதில்லை.
அதுவே மிகவும் அசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த சக்தியின் தன்மை நம்மால் உணர முடிகிறது.உதாரணத்திற்கு வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு நாள் தன் காரை நோக்கிச் செல்ல, டிரைவர் வழக்கமாக அவர் அமரும் இடத்தின் கார்க்கதவை திறந்து நின்றார். வின்ஸ்டன் சர்ச்சில் அந்த இடத்தில் அமர முற்படாமல் சுற்றிச் சென்று மறுபக்கக் கதவைத் திறந்து அந்தப்பக்கமே உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது “ஏதோ ஒரு உள்ளுணர்வு வழக்கமான இடத்தில் என்னை உட்கார விடாமல் தடுத்தது” என்று சர்ச்சில் சொன்னார்.

அது உயிரைக் காப்பாற்றிய சம்பவமானதால் அது இன்றும் பேசப்படுகிறது. அதுவே உப்பு சப்பில்லாத ஒரு நிகழ்வைப் பற்றியதாக இருந்தால் யாரும் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் ஒருவரைப் பற்றி நினைத்த சிறிது நேரத்தில் அவர் நம் எதிரில் வந்து நிற்பதும், சர்ச்சிலின் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவமும் ஆழ்மன சக்தியின் சில வெளிப்பாடுகள் தான்.

ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை :–

1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

2. Extra Sensory Perception (ESP) எனப்படும், நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்திற்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.

3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனதிற்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய்-குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.

4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.
5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.

6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி.உதாரணத்திற்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.

7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.

8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.

9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.


ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - 2

துவக்கத்தில் சில மருத்துவர்களும், சில ஆராய்ச்சியாளர்களும் ஆழ்மன சக்திகளில் காட்டியஆர்வத்தையும், ஆராய்ச்சிகளையும் பெரும்பாலான விஞ்ஞானிகள் சந்தேகக் கண்ணுடனேயே பார்த்தார்கள். பின் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் சிலர் காட்டிய அக்கறை அவர்களையும் சிந்திக்க வைததது.உதாரணத்துக்கு 1912-ல் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி டாக்டர் அலெக்சிஸ் காரல் ஆணித்தரமாகத் தன் கருத்தை இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் சொன்னார். "கண்களின் உதவியில்லாமல் காண முடிவது, காதுகளின் உதவியில்லாமல் கேட்க முடிவது, ஐம்புலன்களின் உதவியில்லாமல் எண்ணங்களை பரிமாறிக் கொள்வது போன்றவை உண்மையானவையே. உண்மையாக சிந்திக்க முடிந்த எந்த மனிதனும் இது குறித்த தகவல்களை முழுவதும் ஆராயாமல் இந்த உண்மைகளை ஒதுக்கி விட முடியாது".
அவர் கூறியபடி அந்த உண்மைகளை ஒதுக்க முடியாமல் மேலும் ஆராய முற்பட்டவர் ஜோசப் பேங்க்ஸ் ரைன் (1895-1980). அவர் அறிவு தாகம் மிக்கவர். கல்லூரிப்படிப்பு முடிந்ததும் கடற்படையில் சேர்ந்து துப்பாக்கி சுடுவதில் சிறந்து விளங்கியவர். பின் தாவரவியலில் சிகாகோ பல்கலைகழக்த்தில் 1923ல் பிஎச்டி பட்டம் பெற்றவர். பின்பு ஹார்வர்டு பல்கலைகழகத்தில் மனோதத்துவத்திலும் பட்டம் பெற்றவர்.
ஒருமுறை அவரும் அவர் மனைவியும் புகழ்பெற்ற நாவலாசிரியர் ஆர்தர் கானன் டாயில்இறந்தவர்களுடன் கூட தொடர்பு கொள்ள முடியும் என்பதற்கு பல ஆதாரங்கள் விஞ்ஞான பூர்வமாக இருக்கின்றன என்று உதாரணங்களுடன் ஆற்றிய உரையைக் கேட்க நேரிட்டது. இப்படியெல்லாம் நடக்க முடியும் என்கிற எண்ணமே அறிவு தாகம் உள்ள அவர் ஆர்வத்தைக் கிளறி விடவே ஆழ்மன சக்திகள் குறித்து முழுவதுமாக ஆராய்வது என்று அவர் தீர்மானித்தார். அது குறித்து பல நூல்கள் பற்றியும், பரிசோதனைகள் பற்றியும் படித்த அவர் 1930ல் ட்யூக் பல்கலைகழகத்தில் ஆழ்மன சக்திகள் குறித்த விரிவான ஆராய்ச்சிகளைத் தொடங்கினார்.
1931ல் லின்ஸ்மேயர் என்ற பொருளாதார மாணவரை வைத்து அவர் முதலில் தொடங்கிய ஆராய்ச்சி ஜெனர் கார்டுகளை (zener-cards) உபயோகப்படுத்தியதாக இருந்தன. அதில் கிடைத்த முடிவுகள் யூகத்தில் சொல்வதால் வரக்கூடிய விளைவுகளை விட அதிகமானதாக இருந்தன. ஆரம்ப ஆராய்ச்சிகளில் மிகவும் வெற்றிகரமாகக் கிடைத்த முடிவுகள் போகப்
போகக் குறைய ஆரம்பித்தன. காரணங்களை ஆராய்ந்த போது உற்சாகக்குறைவு, கவனச்சிதறல், வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியுணர்வு ஆகியவை எல்லாம் காரணங்கள் என்பதை ரைன் கண்டுபிடித்தார்.
(இது இன்றளவும் உண்மையாக உள்ளது. பரபரப்பில்லாத உற்சாகம், முழுக் கவனம், வெற்றியடைந்தே ஆக வேண்டும் என்ற வெறியில்லாமல் அமைதியாக முயல்தல், களைப்பின்மை ஆகியவையே ஆழ்மன சக்திகள் வெற்றிகரமாக வெளிப்பட உதவுகின்றன. பின் ஆழ்மன சக்திகளைப் பெறுவதெப்படி, பயன்படுத்துவதெப்படி என்பதை அலசும் போது இது பற்றி
விரிவாகப் பார்க்கலாம்) லின்ஸ்மேயரை விட்டு விட்டு ரைன் ஹுபர்ட் பியர்ஸ் என்பவரை வைத்து 1932ல் தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அந்த கார்டுகளில் சிலவற்றை எடுத்து மறைத்து வைத்துக் கொள்ள அந்தக் கார்டுகளைச் சரியாக யூகித்துச் சொல்லும் அந்தப்
பரிசோதனைகளில் வியக்கத் தக்க சதவீத வெற்றிகள் கிடைத்தன. சில ஆராய்ச்சிகள் கார்டுகள் வைத்திருப்பவருக்கும், யூகிப்பவருக்கும் இடையே நிறைய இடைவெளியில் நடத்தப்பட்டன என்றாலும் அந்த விளைவுகளில் அது அதிக பாதிப்பை ஏற்படுத்தவில்லை.
எடுத்த கார்டுகளை யூகிப்பது போலவே எடுக்கப் போகும் கார்டுகளையும் யூகிக்கும் ஆராய்ச்சிகளையும் ரைன் மேற்கொண்டார். ஜெனர் கார்டுகளைப் போலவே பகடைக் காய்களும் ஆராய்ச்சிகளில் பயன்படுத்தப்பட்டன. கையால்உருட்டிப் போடுவது, ஒரு கப்பில் வைத்து வீசுவது, எந்திரம் மூலமாக எறியப்படுவது போன்ற பரிசோதனைகளும் நிகழ்த்தப்பட்டன. எந்த எண் வரக்கூடும் என்ற யூகங்களையும் ஆராய்ச்சி செய்து சரிபார்த்தனர். அப்படிக் கிடைத்த முடிவுகளும் ஆழ்மன சக்திகளை உறுதிப்படுத்தும் அளவுக்கு உயர்ந்த சதவீதமாகவே இருந்தன.
1934ல் ரைன் தன் ஆராய்ச்சிகளைப் புத்தகமாக (Extra Sensory Perception) வெளியிட்டார். அது பல பதிப்புகளைக் கண்டு வெற்றிவாகை சூடியது. ரைன் மேலும் பல நபர்களை வைத்து தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். 1960களில் ஆழ்மன ஆராய்ச்சிகளுக்காக Foundation forResearch on the Nature of Man என்ற அமைப்பை அவர் ஏற்படுத்தினார். பின்னர் அது மாற்றம் அடைந்து ரைன் ஆராய்ச்சி மையம் (Rhine Research Center) என்ற பெயரில் இன்றும் ஆராய்ச்சிகளை நடத்தியும், மற்றவர்களின் ஆராய்ச்சிகளுக்கு உதவியும் வருகிறது.
முறைப்படியான ஆழ்மன ஆராய்ச்சிகளுக்கு ஜே.பி.ரைன் எடுத்த முயற்சிகள் இன்னொருமைல்கல் என்றால் அது மிகையாகாது. 1930 முதல் தன் மரண காலம் வரை கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அந்த ஆராய்ச்சிகளில் சளைக்காமல் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட அவரது முயற்சிகள் தற்கால அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக அமைந்தன. பின்னால் வந்த பல ஆராய்ச்சியாளர்கள் அவருடைய அடிப்படைகளையே ஒரு அளவுகோலாக வைத்துக் கொள்ளும் அளவு இந்தத் துறைக்கு பெரும்சேவை புரிந்துள்ளார்.
அவர் மனிதர்களிடம் மட்டுமல்லாமல் விலங்குகளிடமும் இது போன்ற அதீத சக்திகள் இருப்பதாகக் கருதினார். சிலர் அதிகமாக அதை வெளிப்படுத்த முடிந்தவர்களாக இருப்பதாகவும், அதுவும் சில குறிப்பிட்ட சமயங்களில் அந்த சக்திகள் அதிகமாக வெளிப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
"விளக்க முடியாத மகாசக்திகளைக் காணும் போது உற்சாகமாக அதைப் பற்றிக் கொண்டு ஆராய முற்படுகிற ஆராய்ச்சியாளன் அதில் ஒரு பெரிய பொக்கிஷத்தையே கண்டுபிடிக்கிறான். அது எந்த அளவு மர்மமானதாகவும் விளக்க முடியாததாகவும் உள்ளதோ அந்த அளவு உயர்ந்த ஞானத்தை அது விளங்கப்பெறும் போது தருவதாக இருக்கிறது," என்று 1947ல் ரைன் கூறியது போல பல ஆராய்ச்சியாளர்கள் ஆழ்மன சக்தியை ஆராய்ந்து மலைத்துப் போனார்கள்.
எத்தனை தான் ஆதாரங்களுடன் சொன்னாலும் ஆழ்மன சக்திகள் ஆர்வத்தைத் தூண்டும் அதே அளவுக்கு "உண்மையில் இப்படி இருக்க முடியுமா?" என்ற சந்தேகத்தையும் படிப்பவர் மனதிலும் கேள்விப்படுபவர் மனதிலும் ஏற்படுத்துவது இயல்பே. எனவே ஆராய்ச்சிகள் மேலும் அதிகமாகவும் ஆழமாகவும் தொடர்ந்தன. ஒரு கட்டத்தில் பூமியில் மட்டுமல்ல விண்வெளியிலும் இந்த ஆராய்ச்சி நடந்திருக்கிறது என்றால் நம்பக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை. அதன் விவரங்களைக் காண்போமா?

ஆழ் மனதின் அற்புத சக்திகள் - 3

மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன. பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் .

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டுபிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.
இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன. இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து
இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார். இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம். இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நம்க்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது. இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது. இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.
முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.
தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.
சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.
முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் 'இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது' என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும்.
அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.
சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும். 55 ஆம் அத்தியாயத்தில் முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.
நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள். அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே "NO" என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.
உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது. ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம். 

ஈர்ப்பு விதி

ஈர்ப்பு விதி - 1


* நீங்கள் அன்புணர்வின் கதிர்களை வெளிப் படுத்திக் கொண்டிருந்தால் மொத்தப் பிரபஞ்சமுமே உங்களுக்காக எல்லாவற்றையும் செய்வது போலவும், அனைத்து மகிழ்க்கியான விஷயங்களையும் உங்களை நோக்கிச் செலுத்துவது போலவும், எல்லா நல்லவர் களையும் உங்களை நோக்கி நகர்த்துவது போலவும் தோன்றலாம். உண்மையும் அதுதான். * உறவு ஒன்றைக் கவர்ந்திழுக்க நீங்கள் விரும்பினால் உங்களுடைய எண்ணங்கள், வார்த்தைகள், செயல்கள் மற்றும் சூழல்கள் ஆகியவை உங்களுடைய விருப்பத்தோடு முரண்படாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். * உங்களுக்கு நீங்களே அன்பும் மரியாதையும் செலுத்திக் கொள்ளுங்கள். உங்களிடம் அன்பும் மரியாதையும் செலுத்தும் நபர்களை நீங்கள் கவர்ந்திழுப்பீர்கள். * நீங்கள் உங்களைப் பற்றி மோசமாக உணரும் போது, அன்பைத் தேடுகிறீர்கள். அதோடு உங்களைத் தொடர்ந்து அந்நிலையிலேயே வைத்திருக்கும் நபர்களையும் சூழல்களையும் கவர்ந்து இழுக்கிறீர்கள். * உங்களிடம் நீங்கள் நேசிக்கும் குணங்களில் கவனம் செலுத்துங்கள். உங்களிடம் இருக்கும் மேலும் அதிகமான சிறப்புகளையும் ஈர்ப்பு விதி உங்களுக்குக் காட்டிவிடும். * உங்களுடைய சக்தியை சரியான முறையில் இடம்பெயரச் செய்து நீங்கள் வேண்டுபவற்றை உங்கள் வாழ்வில் அதிகமாகக் கொண்டு வருவதற்கு சிறந்த செயல்முறை நன்றியுணர்தல் ஆகும். * நீங்கள் வேண்டும் என்று விரும்பிய வற்றிற்கு, முன்னதாகவே நன்றி தெரிவிக்கும் செயல், உங்களுடைய ஆசைகளை முடுக்கிவிட்டு, பிரபஞ்சத்திற்கு இன்னும் சக்தி வாய்ந்த சமிக்ஞையை அனுப்பும். * உங்களுக்கு வேண்டியதை நீங்கள் மகிழ்ச்சியாக அனுபவித்துக் கொண்டிருப்பது போன்ற காட்சியை உங்கள் மனத்தில் உருவாக்குவது தான் அக்காட்சியின் படைப்பாகும். அகக் காட்சிப் படைப்பில் ஈடுபடும்போது அவற்றை இப்போதே கொண்டிருக்கும் உணர்வையும் எண்ணங்களையும் உருவாக்குகிறீர்கள். நீங்கள் உங்கள் மனக்கண்ணால் என்ன பார்த்தீர்களோ? அதே யதார்த்தத்தை ஈர்ப்பு விதி உங்களுக்கு திருப்பி அளிக்கும். * ஒரு நாளின் இறுதியில், தூங்கப் போவதற்கு முன்பு அன்றைய தினத்தின் நிகழ்வுகளை மனக் கண்ணால் பாருங்கள். ஏதாவது ஒரு நிகழ்வோ, அல்லது தருணமோ, நீங்கள் விரும்பியபடி அமைய வில்லை என்றால் அதை அழித்துவிட்டு நீங்கள் எப்படி நிக வேண்டும் என்று விரும்பியிருந் தீர்களோ அப்படி நடை பெற்றதைப் போல உங்கள் மனத்தில் மாற்றி ஓடவிட்டுப் பாருங்கள். அடுத்தநாள் நீங்கள் விரும்பியபடி எல்லாம் மாறிவிடும்.

ஈர்ப்பு விதி - 2


இந்த உலகில் மனிதன் தனது அறிவை கொண்டு எவ்வளவு பெரிய விசயங்களைஎல்லாம் கண்டு பிடித்து விட்டான் , ஆனால் அவனால் அவனை திருப்தி படுத்தி கொள்ளவோ , தன்னை மகிழ்ச்சியாக வைத்து கொள்ளவோ ,முடியவில்லை , உதரணமாக உலகில் எவ்வளவு வன்முறைகள் நடக்கின்றன , நாடுகள் சண்டையிட்டு கொல்கின்றன , நாடு மக்களை கொல்கிறது , ஏன் தனக்கு என்ன வேண்டும் என்றே தெரியாமல் பல பேர் உள்ளார்கள் , ஏழை மேலும் , ஏழை ஆகிகொன்டே இருகிறார்கள் , வியாதிகள் மேலும் பெருகிகொண்டே இருகின்றன , இவை எல்லாவற்றையும் சரி செய்ய முடியுமா , இவை எல்லாவற்றிற்கும் காரணம் என்ன ?நாம் இவற்றை எல்லாம் மாற்ற முடியாது , ஆனால் நம்மால் நம்மை சரி செய்து கொண்டால் நம் ஒருவர் மூலம் இந்த சமுதாயத்திற்கு நல்ல விசயங்களை கொடுக்க முடியும் , இதே போல் எலோரும் நம்மை சரி செய்து கொண்டால் இந்த நாட்டில் அனைவர்க்கும் எல்லாம் கிடைத்து விடும் , இந்த தொடர் இந்தியாவை மாற்றுவதற்காக எழுதபடுவது அல்ல , ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கு தேவை பட்டதை எவ்வாறு அடைவது என்பதை பற்றித்தான் , பொதுவாக எல்லா மனிதனுக்கும் ஒவ்வொரு ஒவ்வொரு இலக்கு இருக்கும் , உதாரனமாக ஒருவர் I.A.S பரிட்ஷை எழுத்து பாஸ் பண்ண வேண்டும் என்று வைத்து கொள்வோம் , எவளவு பேர் அதை செய்கிறார்கள் , ஏன் செய்ய முடியவில்லை ,? மனித உறவுகளுக்கு உள்ளே எவ்வளவு முரண்பாடுகள் ?மொத்தத்தில் இந்த தொடர் தங்களது ஆளுமை திறனை வளர்த்து கொள்ள உதவியாக இருக்கும் இங்கே அடிக்கடி பிரபஞ்சம் என்ற வார்த்தை உபயோகபடுத்த படும் , பிரபஞ்சம் என்றால் நீங்கள் இயற்கை என்று வைத்து கொள்ளலாம் , அல்லது உங்களுக்கு பிடித்த கடவுள் என்று வைத்து கொள்ளுங்கள் , அல்லது மஹா சக்தி என்று வைத்து கொள்ளுங்கள் . உங்களுக்கு தெரியுமா ? உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை , உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள், அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள் , நமக்கு அது தெரியவில்லை ? அது என்ன வென்று இனி வரும் தொடர்களில் நாம் பார்க்க போகிறோம் . ஒத்தவை தன்னை ஒத்தவற்றையே ஈர்க்கும் என்பது விதி .அதன் விளைவாக மனப்போக்கு அதை ஒத்த சூழல்களை கண்டிப்பாக தன்பால் ஈர்க்கும் . -சார்லஸ் ஹானால் இன்னும் ஈர்க்கும் ...

ஈர்ப்பு விதி - 3


உலகில் சம்பாதிக்கபபடும் மொத்த பணத்தில் தொண்ணூற்றாறு சதவிகிதத்தை , உலகில் உள்ள மக்கள் தொகையில் ஒரு சதவிகிதம் வகிபவர்கள் மட்டுமே சம்பாதிகிறார்கள், அவர்களுக்கு நமக்கும் உள்ள வித்தியாசம் என்ன ?அவர்கள் எதோ ஒன்றை புரிந்து வைத்து இருகிறார்கள் , நமக்கு அது தெரியவில்லை ? அந்த ரசசியம் என்னவென்று பார்ப்போம் !.. நாம் அனைவரும் ஒரே மஹா சக்தியுடன் தான் இணைந்து செயல்படுகிறோம் , ஒரே விதிகள் (சக்தி) தான் எல்லாவற்றையும் வழி நடத்துகின்றன ,அதாவது ஈர்ப்பு விதி தான் அந்த ரகசியம் ! நீங்கள் இப்போது மனதில் என்ன என்ன நினைத்து கொண்டு இருக்கிறீர்களோ அவை அனைத்தையும் நீங்கள் இப்போது நீங்கள் ஈர்த்து கொண்டு இருகிறீர்கள் என்று அர்த்தம்! . உங்களது ஒவ்வொரு எண்ணமும் உண்மையில் ஒரு மெய்யான மெய்பொருள் தான் .அது ஒரு சக்தி . பிரண்டிஸ் மல்போர்ட் (1834-1891) இந்த பிரபஞ்சத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விதி நீங்கள் தான் என்று இந்த உலகில் வாழ்ந்து மறைந்த மாபெரும் ஆசான்கள் கூறியுள்ளார்கள் . வில்லியம் ஷேக்ஸ் பியர் ,ராபர்ட் பிரௌனிங் ,வில்லியம் போன்ற கவிதை மூலமாக இதை கூறி உள்ளார்கள் . இன்னும்பல பேர் தங்களது இசை மூலமும் , ஓவியங்கள் மூலமும் இதை வெளிப்படுத்தி உள்ளார்கள் ,இந்து மதம் ,புத்த மதம் , யூத மதம் ,கிருத்துவ மதம் ,இஸ்லாம் , ஹீர்மேடிக் பாரம்பரியம் போன்ற மதங்களும் மற்றும் பாபிலோனிய மற்றும் எகிப்து நாகரிகங்களும் இதை வெளிப்படுத்தி உள்ளன . காலத்தின் மூலதோடையே இவ்விதி உதித்தது உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கனத்தையும் ,ஒவ்வொரு செயலையும் ,நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு விசயத்தையும் இவ்விதி தான் நிர்ணயிக்கிறது ,இந்த ஈர்ப்பு விதியை நடைமுறை படுத்துவது நீங்கள்தான் ,அதை நீங்கள் உணளது எண்ணங்கள் மூலமாக செய்கிறீர்கள் .இதற்கு இன்னொரு பெயரும் உண்டு " படைப்பு அமைப்பின் சகலமும் சார்ந்து இருக்கும் ஒருபோது பிறலாத மாபெரும் விதி " மெய்யறிவு படைத்தோர் இதை எப்போதும் அறிந்து இருந்தனர் .பண்டைய காலத்தில் பாபிலோனியர்கள் செல்வ செழிப்பாக வாழ்ந்து இருப்பார்கள் , உலகில் உள்ள தொங்கும் தோட்டத்தை உருவாகிய பெருமை அவர்களுக்கு உண்டு , பிரபஞ்ச விதிகளை சரியாக புரிந்து கொண்டு அதை பயன்படுத்தியது மூலம் வரலாற்றிலேயே அவர்கள் செல்வசெழிப்பான முறையில் வாழ்ந்தார்கள் . மிகப்பெரும் பணக்காரர்கள் எல்லோரும் செல்வத்தை ஈர்த்தவர்கள் (அதாவது சம்பாதித்தவர்கள் ) இந்த ரகசியத்தை தெரிந்தோ தெரியாமலோ உபயோகபடுத்தி உள்ளார்கள் , அவர்கள் எப்போது அபரிவிதமான செல்வ செழிப்பான எண்ணங்களை என்னிகொண்டிருகின்றனர் .அதற்கு நேர் மாறான எண்ணங்களை அவர்கள் மனதில் எழாமல் பார்த்து கொண்டனர்.அவர்கள் மனது முழுவது எப்போதும் செல்வ செழிப்பு பற்றி மட்டும்தான் என்று தான் எண்ணிக்கொண்டு இருகிறார்கள் ,அவர்களிடம் இருந்த செல்வ செழிப்பு குறித்த ஆதிக்க எண்ணங்களே அவர்களுக்கு செல்வங்களையும் ,செழிப்புகளையும் கொண்டு வந்து சேர்த்து உள்ளன .அது தான் ஈர்ர்பு விதியின் இயக்க விதி . இன்னும் ஈர்க்கும் ..

ஈர்ப்பு விதி - 4


ஈர்ப்பு விதியின் இயக்க நிதிக்கு ஒரு உதாரணம் : மிகபெரும் பணக்காரர்கள் எல்லோரும் தங்களது செல்வங்களை இழந்தவுடன் , மிக குறுகிய காலத்திலேயே அவைகளை திரும்ப பெற்று விடுகிறார்கள் , இவர்களைபோன்றவர்களை பற்றி நீங்கள் கேள்வி பட்டு இருப்பீர்கள் , இப்படிப்பட்டவர்கள் உணர்ந்து இருந்தார்களோ இல்லையா தெரியாது !அவர்களுடைய எண்ணங்கள் முழுவதையும் செல்வங்கள் மட்டும் ஆக்கிரமித்து இருக்கும் .அதாவது உங்களது எண்ணங்கள் எதுவாக இருந்தாலும் இவ்விதி அதற்கு ஏற்றவாறே இயங்கும் . ஒத்தவை ஒத்வைற்றையே ஈர்க்கும் ஈர்ப்பு விதி என்பது என்னை பொறுத்தவரை , நான் என்னை ஒரு காந்தமாக எண்ணி கொள்வதற்கு ஒப்பானது .-ஜ்ஹோன் அசரப் சுலபமா சொல்றேன் கேளுங்க .... உங்களுடைய நண்பர்களை எல்லோரையும் பாருங்கள் நீங்கள் எல்லோரும் ஒத்த எண்ணங்கள் உள்ளவர்களாக இருப்பீர்கள் , அதே உங்களுடைய எண்ணத்திற்கு எதிரான எண்ணங்கள் உள்ளவர்களுடன் நீங்கள் நெருங்கி பழக மாட்டீர்கள் ,அன்னாஹசாரே ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்தவடன் எப்படி இந்தியாவில் உள்ள லட்சகணக்கான மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு கை கொடுத்தார்கள் , இங்கே பாருங்கள் அன்னா ஹசாரே -வின் எண்ணமும் மக்களின் எண்ணமும் ஒன்றாக இருந்த காரணத்தால் சுலபமாக அவர்களை அவரால் ஈர்க்க முடிந்தது , உங்களது வாழ்கையிலும் இந்த ஈர்ப்பு விதியின் தாக்கத்தை உணர்ந்து இருக்க கூடும் , உங்கள் நடந்த சோகமான நிகழ்வுகளை பற்றி நீங்கள் எண்ண ஆரம்பித்தவுடன் , அது தொடர்பாக மேலும் சோகமான நினைவுகள் உங்களுக்கு வர ஆரம்பித்திருக்கும் ,நீங்கள் நீடித்து இருக்கும் ஒரு எண்ணங்களை பற்றி எண்ணும்போது,ஈர்ர்பு விதி உடனடியாக அதனுடன் ஒத்த எண்ணங்களை உணக்ளுக்கு கொண்டு வந்து சேர்க்கும் ,அதனால் நீங்கள் மேலும் சோகமாக மாறுகிறீர்கள். எந்திரன் படத்தில் உள்ள கிளிமஞ்சாரோ பாடலை நீங்கள் கேட்கும்போது உடனே உங்களது மன திரையில் ரஜினியும் ,ஐஸ்வர்யாராயும் ஆடுவதும் , இந்த பாடல் படம் ஆக்கப்பட்ட விதம் குறித்து டைரக்டர் ஷங்கர் அளித்த பேட்டி உங்களுக்கு எப்படி நினைவுக்கு வருகிறது ?,நீங்கள் எதன் மீது கவனத்தை செலுத்துகிறீர்களோ அது சம்பந்தமாக விசயங்களை ஈர்ப்பு விதி உங்களிடம் கொண்டு வந்து சேர்த்து விடும் . நாம் செய்ய வேண்டியது எல்லாம் நமக்கு என்ன தேவையோ அது குறித்த எண்ணங்களை நம் மனதில் விடாபிடியாக பிடித்து கொண்டிருப்பதோடு ,அவை குறித்த முழுமையான தெளிவையும் நம் மனதில் இறுதி கொள்ள வேண்டும் ,அப்பொழுது நீங்கள் எதை குறித்து அதிகமாக சிந்தித்து கொண்டு இருக்கிறீர்களோ அதுவாகவே நீங்கள் ஆகி விடுவீர்கள். நீ என்ன நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிவிடுவாய் .- சுவாமி விவேகனந்தர் . இன்றைய உங்களது வாழ்க்கை உங்களது கடந்த கால எண்ணங்களின் பிரதிபலிப்பே , அதில் நல்லவையும் அடங்கும் கெட்டவையும் அடங்கும் ,நீங்கள் அதிகமாக யோசிக்கும் விசயங்களை உங்களின் பக்கம் ஈர்ப்பதால் ,உங்களின் வாழ்வில் ஒவ்வொரு அம்சத்திலும் அந்த எண்ணத்தின் ஆக்கிரமிப்பு அடங்கியுள்ளது என்பதை நீங்களே உணரலாம் . உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-

ஈர்ப்பு விதி - 5


உங்களது மனக்கண்ணில் ஒன்றை உங்களால் பார்க்க முடிந்தால் ,அது கண்டிப்பாக உங்களது கைகளில் தவழும் .-பாப் பிராக்டர் உங்களது தேவை என்னவோ அதை பற்றி நீங்கள் சிந்திக்க ஆரம்பித்தால் , உங்களது அந்த எண்ணத்தை ஆதிக்க எண்ணமாக மாற்ற முடியும் என்றால் , கண்டிப்பாக நீங்கள் நினைத்ததை உங்களால் வாழ்வில் கொண்டு வரபோவது உறுதி . ஆற்றல் மிக்க இந்த விதியின் மூலம் எண்ணங்கள் பௌதீக பொருட்களாக பரிணமிக்க போகின்றன . எண்ணங்கள் ஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் பயணிக்கும் என்று பெரும்பாலான மக்கள் புரிந்து கொள்வதில்லை ,நாம்மால் எண்ணத்தை அளவிட முடியும் ,நாம் நமக்கு தேவையான விசயத்தை பற்றி திரும்ப திரும்ப எண்ணிகொண்டே இருக்க வேண்டும் , நான் அதிக மதிப்பெண்கள் வாங்க வேண்டும் , பெரிய வீடு வாங்க வேண்டும் ,கார் வாங்க வேண்டும் ,நீங்கள் இது போல தொடர்ந்து எண்ணிகொண்டே இருக்கும்போது ,நீங்கள் தொடந்து அதன் எண்ணங்களை ஒரு குறிபிட்ட அலைவரிசையில் வெளிப்படுத்தி கொண்டு இருக்கறீர்கள் .எண்ணங்கள் அந்த காந்த சமிகைகளை வெளியே அனுப்பி அவற்றிற்கு இனையானவற்றை உங்களிடம் ஈர்க்கின்றன. எண்ணங்கள் காந்த சக்தி உடையவை ,நீங்கள் சிந்திக்கும் போது எண்ணங்கள் குறிபிட்ட அலைவரிசையில் பிரபஞ்சதினுள் அனுப்பபடுகின்றன ,அவை அதே அலைவரிசையில் உள்ள அணைத்து விசயங்களையும் ஈர்க்கின்றன ,பிரபஞ்சத்திற்கு அனுப்பப்படும் ஒவ்வொன்றும் திரும்ப அதன் மூலத்துக்கே அனுப்பப்படும் ,அந்த மூலம் தான் நீங்கள் . உதரணமாக நாம் தொலைகாட்சி நிகழ்சிகளை நாம் பார்க்கிறோம் , அது எப்படி நம் டிவியை வந்து சேர்கிறது , அதன் ஒளிபரப்பு நிலையத்தில் இருந்து , ஒளிபரப்பபடுகிறது , நாம் வீட்டில் நமக்கு எந்த சேனல் தேவையோ அதற்கு ஏற்ற சேனல் மாற்றும் போது அது சம்பந்தமான அலைகளை உள்வாங்கி நமக்கு படமாக காண்பிக்கிறது டிவி . இதே போல மனிதனும் ஒரு ஒளிபரப்பு கோபுரம் தான் ,அதாவது சிக்னல்களை வெளியே அனுபிகொண்டு இருக்கும் ஒரு உயிர் உள்ள ஒளிபரப்பு கோபுரம் தான் , நாம் எந்த மாதிரி அலைகளை வெளியே அனுப்புகிறோமோ அதற்கு ஏற்றார் போல நமது வாழ்க்கை அமைகிறது , ஏன் என்றால் நாமிடம் இருந்து எந்த மாதிரி அலைவரிசை வெளியே போகிறதோ, அதே மாதிரி தான் நமக்கு எல்லாமும் வந்து சேரும் . உங்களது வாழ்வில் இப்போது நடைபெற்று கொண்டிருக்கும் காட்சிகள் அனைத்தும் , உங்களிடம் இருந்து வெளியே போன எண்ணங்கள் கவர்ந்து இழுத்தவையே ,உங்கள் வாழ்கையில் நீங்கள் எதாவது மாற்ற விரும்பினால் , முதலில் நீங்கள் வெளிப்படுத்தி கொண்டிருக்கும் எண்ணங்களின் அலைவரிசையை மாற்ற வேண்டும் . எப்போதும் நல்ல எண்ணங்களையே சிந்தியுங்கள் . நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , பெரும்பாலான மக்கள் எல்லோரும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் ,பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம்

ஈர்ப்பு விதி - 6


நாம் எல்லோருக்கும் பிரச்சினை இங்குதான் உள்ளது , நாம் எப்போதும் தனக்கு என்ன வேண்டாமோ அதை பற்றி மட்டும்தான் சிந்தித்து கொண்டு இருக்கிறோம் ,பிறகு எனக்கு மட்டும் ஏன் வாழ்கையில் எனக்கு பிடிக்காத அல்லது விரும்ப தகாத நிகழ்சிகளாக நடக்கிறது என்று புலம்புகிறோம் . நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளையும் உற்று கவனித்து கொண்டே இருங்கள் , ஏன் என்றால் நீங்கள் உங்களுக்கு தேவையானதைவிட,எது தேவை இல்லையோ அதை பற்றிதான் யோசித்து கொண்டிருப்பதும், பேசிகொண்டிருப்பதும் தெரிய வரும், நீங்கள் ஒரு எண்ணத்தை நினைகிறீர்கள் என்றால் அது நல்லதா கேட்டதா என்றெல்லாம் ஈர்ப்பு விதி சட்டை செய்வதில்லை ,அது வெறுமனே உங்கள் எண்ணங்களுக்கு ஏற்ப இயங்குகிறது . ஈர்ப்பு விதி ஒரு இயற்கை விதி ,அது உங்களது எண்ணங்களை பெற்றுக்கொண்டு அதையே உங்களது வாழ்க்கையின் அனுபவங்களாக உங்களுகே திருப்பி அனுப்பும் , நீங்கள் என்ன என்னிகொண்டிருகிறேர்களோ அதை அப்படியே உங்களுக்கு திருப்பி கொடுக்கும் ஒரு விதியாகும் . ஈர்ப்பு விதி என்பது மிகவும் கீழ்படிதல் உள்ள விதி நான் இனி கடன் வாங்க மாட்டேன் என்பதை பற்றி நீங்கள் சிந்தித்து கொண்டிருந்தால் , உடனே விதியானது நீங்கள் எதை சிந்தித்து கொண்டு இருக்கீரீர்களோ ,அதை உங்களிடம் மீண்டும் கொண்டு வந்து சேர்க்கும் , அதற்கு நல்லது ,கேட்டது தெரியாது . நீங்கள் தவறான எண்ணங்களை சிந்திக்கும்போது அது அப்படியே எடுத்து கொள்ளும் ,அதற்கு சில உதாரணம் " நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போக மாட்டேன் நான் தினமும் அலுவலகத்துக்கு லேட்டாக போவேன் " " இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியாது இவ்வளவு வேலைகளை என்னால் செய்ய முடியும் " "எனக்கு காய்ச்சல் வரகூடாது " எனக்கு காய்ச்சல் வர வேண்டும்" "நான் இனி எந்த விசயத்திலும் தோற்க மாட்டேன் நான் இனி எந்த விசயத்திலும் தோர்ப்பேன் " நீங்கள் நினைத்து கொண்டிருப்பதை ஈர்ப்பு விதி அப்படியே உங்களுக்கு திருப்பி அளிக்கிறது . மொத்த பிரபஞ்சமுமே எண்ணத்திலிருந்து உதித்ததுதான் என்று குவாண்டம் இயற்பியலாளர்கள் கூறுகின்றனர் . நாம் எல்லா சமயங்களிலும் சிந்தித்து கொண்டு தான் இருக்கிறோம் ,நாம் பேசிக்கொண்டிருக்கும்போதும் ,டிவி பார்த்து பேசிக்கொண்டிருக்கும்போதும், கார் ஓட்டும்போதும் , வேலை செய்து கொண்டிருக்கும்போதும் ,நாம் சிந்திக்காத ஒரே நேரம் தூங்கும் நேரம் மட்டும்தான் ,ஆனால் நாம் தூங்க முயலும் பொது கடைசியாக நாம் சிந்தித்த வற்றை ஈர்ப்பு விதியானது , அசை போட்டு கொண்டிருக்கும் ,அதனால் நாம் தூங்க போகும் போது நல்ல எண்ணங்களை மனதில் நினைத்து விட்டு தூங்க வேண்டும். இன்றைய உங்கள் சிந்தனை நாளைய வாழ்க்கை ,நீங்கள் எவற்றை குறித்து அதிகமாக சிந்திக்கிறீர்களோ அவையே உங்களது வாழ்வாக மலரும் .நீங்கள் தான் உங்கள் வாழ்வை சிருஷ்டிகிறீர்கள் .நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதையே அறுவடை செய்வீர்கள் .உங்களது எண்ணங்கள் தான் விதை .உங்கள் அறுவடை நீங்கள் விதைக்கும் விதையை பொறுத்துதான் இருக்கும்.

மனம் எனும் மாமருந்து


1981 ஆம் ஆண்டில் அமெரிக்க விமானத்தை இயக்கிக்கொண்டிருந்த மோரீஸ் விபத்தில் சிக்கிக்கொண்டார். விமானம் வெடித்ததில் அதில் பயணம் செய்து கொண்டிருந்த பயணிகளில் பலர் மரணமடைந்தனர். கடும் காயங்களுடன் சுயநினைவின்றி கண்டெடுக்கப்பட்ட பைலட் மோரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருடைய முதுகெலும்பு, கழுத்தெழும்புகள் முறிந்திருந்தன. உதரவிதானம் பாதிக்கப்பட்டிருந்ததால் அவரால் சுவாசிக்க முடியவில்லை. தொண்டை கடுமையான காயங்களுக்கு ஆளானதால் தண்ணீர் குடிக்கவும், விழுங்கவும் முடியவில்லை. உடல்முழுதும் எழும்புகள் முறிந்தும், தசைகள் செயல் இழந்தும் இருந்தன. சுயமாக கண் விழிகளை இமைக்க மட்டுமே முடிந்த அவருடைய உடல் இனி உயிர் வாழத் தகுதியற்றது என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். ஏராளமான கருவிகள் அவர் உடல் முழுவதும் பொருத்தப்பட்டு ”இப்படியே தொடரலாம்; ஆனால் இமைப்பதைத் தவிர அவரால் வேறொன்றும் செய்ய முடியாது” என்று கூறி மருத்துவம் அவரைக் கைவிட்டது.

இப்போது எல்லோரையும் போல ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கும் மோரீஸின் பெயர் மோரீஸ் குட்மேன். மரணத்திலிருந்து மருத்துவத்தின் உதவியின்றி தப்பிவந்த அதிசய மனிதர் என்று அழைக்கப்படுகிறார். இப்போது அவருடைய முழுநேர வேலை தான் உணர்ந்த மனதின் ரகசியங்களை அனைவருக்கும் கற்றுத்தருவதுதான். உடலை இயக்குவதில் மனம் பெரும் பங்கு வகிப்பதை உணர்ந்து கொண்ட மோரீஸ் குட்மேன் தன் மன இயக்கத்தை உணர்ந்து கொண்டதன் மூலம் உடல் இயக்கத்தை சீராக்க உதவினார். மருத்துவர்களால் தேற்ற முடியாது என்று கூறப்பட்ட சில மாதங்களிலேயே முழு ஆரோக்கியத்திற்குத் திரும்பினார். ”என்னை மருத்துவர்கள் கைவிட்டார்கள். ஆனால் மனம் என் வசம் இருந்தது. என்னால் சிந்திக்க முடிந்தது. என்னைப்பற்றி மருத்துவம் என்ன நினைத்தது என்பதை விட என்னைப் பற்றி நான் என்ன நினைத்தேன் என்பதுதான் முக்கியமானது. உங்கள் மனம் உங்கள் கைவசம் இருந்தால் நீங்கள் செய்ய முடியாதது எதுவுமில்லை.” என்று கூறும் மோரீஸ் குட்மேன் இப்போது உலகின் மிக முக்கியமான தன்னம்பிக்கை உரையாளர்களில் ஒருவர்.

இதே போன்ற அற்புத மனிதர்தான் அயர்லாந்தில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த டாக்டர்.ஜோசப் மர்பி. உளவியலில் டாக்டர் பட்டம் பெற்றிருந்த மர்பி தன் இளம் வயதில் தெற்காசிய நாடுகளின் மதங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். உளவியல் சார்ந்த புதிய கருத்துக்களை நோக்கி அவர் நகர்ந்து கொண்டிருந்த காலத்தில் அவர் தோல் புற்று நோயால் பாதிக்கப்பட்டார். உடலைப் பற்றிய கவனமின்றி அவர் தொடர்ந்து கொண்டிருந்த ஆராய்ச்சியின் இறுதியில் டாக்டர்.மர்பி கைவிடப்பட்ட புற்றுநோயாளிகளில் ஒருவராக மாறினார். அவர் தன்னுடைய உடலை கவனிக்கத்துவங்கிய போது தோல் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.

புற்றுநோய் படிபடிப்படியாக மோசமான நிலையில் பாதிரியார் ஒருவரைச் சந்தித்தார் மர்பி. அவர் கூறினார் “ ஒரு கைக்கடிகாரத்தை ஒருவர் உருவாக்குகிறார் என்றால் அது உருவாக்கப்படுவதற்கு முன்பு அதைப்பற்றிய தெளிவான எண்ணம் அவருக்கு இருந்திருக்கும். அதே கடிகாரம் பின்னால் பழுதடைந்தாலும் அந்த தெளிவான எண்ணத்தால் அதை அவரால் சரியாக்கிவிட முடியும் அல்லவா?” இந்த உவமை மர்பிக்கு மனதைப் பற்றிய தெளிவைக் கொடுத்தது. மனது உடலின் இயக்கத்தில் பெரும் பங்காற்றுகிறது என்றால் மனதின் தெளிவு உடலின் தெளிவாக மாறும் என்பதை டாக்டர்.மர்பி உணர்ந்தார். மூன்றே மாதங்களில் எவ்விதமான மருத்துவத்தின் உதவியும் இன்றி தோல் புற்று நோயிலிருந்து முழுமையாக குணமடைந்தார் மர்பி. ”புற்றுநோய் எப்படி குணமானது என்பது என் மருத்துவருக்கு வேண்டுமானால் அற்புதமாக இருக்கலாம். ஆனால் என் மனதைப் பொறுத்த வரை குணமாதல் என்பது இயல்புதான்” என்கிறார் டாக்டர்.மர்பி. அவருடைய முப்பதிற்கும் மேற்பட்ட உளவியல் நூல்கள் இன்றைய நவீன உளவியலின் போக்கையே திசை மாற்றியிருக்கின்றன. இப்போது நவீன உளவியல் கொள்கையை உலகம் முழுக்க கொண்டு சேர்க்கிறார் மர்பி.

என்னதான் நடக்கிறது நம் உடலில்? உடலுக்கும் மனதுக்கும் அப்படி என்ன தொடர்பு?

உடல் என்பது தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளும் ஒரு அற்புத உயிரமைப்பு. அதிலும் மனித உடல் உலகில் உள்ள எல்லா உயிரினங்களை விடவும் பரிணாம வளர்ச்சியின் உச்ச கட்டமாகத் தோன்றிய உயிரினம். டார்வினின் பரிணாமக் கொள்கை பேசும் மிக முக்கிய விஷயங்களில் ஒன்று தகவமைப்பு. புறச் சூழ்நிலைகளுக்குத் தகுந்தவாறு நம் உடல் தன்னைத் தானே தகவமைத்துக் கொள்கிறது. புற மாற்றங்களின் போதும், நம் நடவடிக்கைகளின் போதும் உடலில் உருவாகின்ற கழிவுகளையும் உடலே வெளியேற்றுகிறது. இப்படி வெளியேற்றும் போது உடல் உள்ளுறுப்புகளில் தோன்றும் பலவீனத்தையும் உடலே சரிசெய்து கொள்கிறது. அது மட்டுமல்ல. தனக்குத் தேவையான ஒவ்வொன்றையும் (வைட்டமின், மினரல், கால்சியம்.. இன்ன பிற சத்துக்கள்) தனக்கு கிடைக்கிற சாதாரண உணவுகளில் இருந்தே உருவாக்கிக் கொள்கிறது. நாம் வெளியில் இருந்து உடலுக்கு கொடுக்கும் செயற்கை சத்துக்களுக்கும் உடலே உருவாக்கிக் கொள்ளும் இயற்கை சத்துக்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரசாயனத்தால் செய்யப்பட்ட செயற்கை சத்துக்களை உடல் கழிவுகளாக மட்டுமே பார்க்கிறது.

இதையெல்லாம் கடந்து உடலுடைய நிறைவான வேலை உள்ளுறுப்புகளை மறு உருவாக்கம் செய்வது. உடலின் ஒவ்வொரு செல்லையும் அதனுடைய ஆயுள் முடிந்தவுடன் புதிய செல்களாக மாற்றுகிறது நம் உடல். உடலின் ஒவ்வொரு உள்ளுறுப்பும் குறிப்பிட்ட காலத்தில் முழுமையாக புதிதாக்கப் படுகிறது. சரி. அப்படி உடல் புதிதாக்கப்பட்டால் குறிப்பிட்ட காலத்தில் உடலில் உள்ள எல்லா நோய்களும் மறைந்து விட வேண்டும் அல்லவா? அப்படியென்றால் உலகில் எல்லோருக்குமே நோய்கள் சரியாகிவிட வேண்டுமே? இங்கேதான் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். உடலுடைய புதுப்பிப்பு பணி என்பது இயல்பாக நடந்து கொண்டேயிருக்கும். உடலுடைய இயல்பான இயற்கையான புதுப்பிப்பு இயக்கத்தில் யாரெல்லாம் குறுக்கிட வில்லையோ அவர்களுக்கெல்லாம் நோய் தானாக சரியாகிவிடும். இயக்கத்தில் குறுக்கிடுவது என்றால் என்ன? உடலின் கழிவு வெளியேற்றத்தை தடை செய்வது. ரசாயன மருந்துகளை சாப்பிடுவது. செயற்கை சத்துக்களை உண்பது போன்றவைதான் நம் குறுக்கீடுகளாகும். அது மட்டுமல்ல; உடலின் இயல்பான தேவைகளான பசி, தாகம், தூக்கம், ஓய்வு போன்றவற்றை புறக்கணித்து நம் இஷ்டம்போல் செய்வதும் குறுக்கீடுதான்.

பசிக்கிற போது சாப்பிடாமல் பசியில்லாத போது சப்பிடுவது, பசிக்கிற அளவை விட அதிகமாகச் சாப்பிடுவது, தாகமில்லாமல் லிட்டர் லிட்டராக தண்ணீர் அருந்துவது, தாகமிருக்கும் போது தண்ணீர் அருந்தாமல் இருப்பது அல்லது தண்ணீருக்குப் பதிலாக சுவையூட்டப்பட்ட பானங்களை அருந்துவது, இரவுகளில் தூக்கத்தை புறக்கணிப்பது, ஓய்வு தேவைப்படும் போது உடல் உழைப்பை அதிகப்படுத்துவது போன்றவை எல்லாம் நம்முடைய தினசரி நடவடிக்கைகளாக உள்ளன. இப்படி இயற்கைக்கு மாறான நடவடிக்கைகள் உடலின் இயல்பான இயக்கத்தை பாதிக்கின்றன. ஆரோக்கியமாக உருவாக வேண்டிய செல்கள் பலவீனமாக, பழைய நோய்க்கூறுகளுடன் உருவாகின்றன. ஆக நம்முடைய எல்லா தொந்தரவுகளுமே உடலுடைய இயல்பான இயக்கத்துக்கு கட்டுப்பட்டவை. அவை புறச்சூழல்களுக்கு ஏற்றாற்போல் தானாகத் தோன்றி தானாக மறைபவை. நம்முடைய பொறுப்பான குறுக்கீடுகளால் நோய்களாக உடலில் தங்கி விடுகின்றன.

மனதில் ஏற்படும் எல்லா உணர்ச்சிகளும் புறச்சூழல்களை தகவமைப்பதற்காக தானாகவே ஏற்படுபவை. அவற்றை நாம் சரிசெய்ய வேண்டியதில்லை. அப்படி சரிசெய்கிறோம் என்ற போர்வையில் மனதின் இயக்கத்தில் நாம் குறுக்கிடுகிற போது உணர்ச்சிகள் தங்கிவிடுகின்றன. கால நீட்சியடைகின்றன. ஆக மனதும், உடலும் வெவ்வேறானவை அல்ல. இரண்டின் இயங்கு முறைகளும் ஒரே மாதிரியானவைதான். நாம் உடலின், மனதின் மாறுதல்களை வெறுமனே புரிந்து கொள்வது மட்டுமே அதனுடைய தீர்வாக அமையும். மனதைப் பொறுத்த வரை அமைதியடைகிறது. உடல் தன் ஆரோக்கியத்தை அடைகிறது.

அதெல்லாம் சரி. இப்படி இயற்கையான முறையில் வாழ்வதால் நோய்கள் வராமல் பாதுகாத்துக் கொள்ளலாம். ஆனால் ஏற்கனவே வந்து விட்ட நோய்களை என்ன செய்வது?

ஏற்கனவே இருக்கின்ற தொந்தரவுகள் என்பவையும் உடலால் செய்யப்படுகின்ற தகவமைப்பு வேலைதான். அதற்காக புதிதாக ஒன்றும் செய்யவேண்டியதில்லை. உடலை அதன் போக்கில் அனுமதிப்பதோடு, இயற்கையான வாழ்வியல் முறைக்குத் திரும்புவதுதான் ஆரோக்கியம் பெற ஒரே வழி.

இந்த முறைகளைக் கடைபிடிப்பதால் மட்டும் முன்பு நாம் பார்த்த மோரீஸ் குட்மேனைப் போலவோ, மர்பியைப் போலவோ அற்புத குணங்களைப் பெற முடியுமா? அப்படி பெற வேண்டுமானால் மேற்கண்ட விஷயங்களை கடை பிடிப்பது மட்டுமின்றி மனதின் இயக்கத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். மனதின் இயல்பை புரிந்து கொள்வதன் மூலம் உடலின் முழு சக்தியையும் நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும். இதனை அமெரிக்க மரபியல் விஞ்ஞானி டாக்டர்.புரூஸ் லிப்டனின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் நிரூபித்து வருகின்றன. நம் உடலின் செல்கள் மட்டுமல்ல அதற்குள் உருவாகும் ஜீன்களும் கூட நம் மன இயல்புக்கு கட்டுப்பட்டவை என்பதுதான் மரபியலின் இன்றைய கண்டுபிடிப்பாகும்.

நம் உடலுடைய முழு சக்தியையும் தொந்தரவுகளின் பக்கம் திருப்பி எவ்வாறு நாம் ஆரோக்கியத்தைப் பெறுவது என்பதைப் பார்ப்போம். நம் உடலின் ஆரோக்கியத்தை நிலைப்படுத்துகிற வேலையை பராமரிப்பு சக்தி (இதைத்தான் மருத்துவர்கள் எதிர்ப்பு சக்தி என்று அழைக்கிறார்கள்) செய்து வருகிறது. நம் உடல் செல்களில் புறச்சூழல் காரணமாக ஏற்படுகிற ஏற்றத்தாழ்வுகளை பராமரிப்பு சக்தி சமநிலைப் படுத்துகிறது. இந்த பராமரிப்பு சக்தியின் ஒரே வேலை சமநிலைப் படுத்துவதுதான். சமநிலைப் படுத்துவது என்பது உடல் சார்ந்தது மட்டுமல்ல; மனம் சார்ந்ததும் தான். நம் உடலின் பராமரிப்பு சக்தி மனச் சமநிலை தவறினாலும், உடல் சமநிலை தவறினாலும் அதை சமப்படுத்துகிறது. உடல் சமநிலை தவறுவது என்பது தகவமைப்பு வேலை நடைபெறும் போது நமக்கு ஏற்படும் தொந்தரவுகள் தான் என்பது புரிகிறது. ஆனால் மனச் சமநிலை தவறுவது என்றால் என்ன? மனச்சமநிலை தவறுதல் என்பது உணர்ச்சிவசப் படுவதைத்தான் குறிக்கிறது. உணர்ச்சிகள் என்பவை புறச் சூழல்களால் தானாகத் தோன்றி தானாக மறைபவை. அதாவது மனதுடைய தகவமைப்பு. அப்படி தானாகத் தோன்றுகிற உணர்ச்சிகளை சரிசெய்கிறோம் பேர்வழி என்று நாம் பொறுப்பெடுத்துக் கொள்ளும் போது அந்த உணர்ச்சிகள் நிலைத்து விடுகின்றன. இதைத்தான் கிராமங்களில் உணர்ச்சி வசப்படுதல் அல்லது ”உணர்ச்சியின் வசம் நாம் போய்விடுவது” என்று கூறுவார்கள்.

ஒரு தொந்தரவு ஏற்படுகிற போது பராமரிப்பு சக்தி உடலை சமநிலைப்படுத்த தயாராகிறது. நம் உடலில் தொந்தரவுகள் ஏற்படுகிற போது நம் மனநிலை என்னவாக இருக்கும்? இது கேன்சராக இருக்குமோ? இது சர்க்கரையாக இருக்குமோ? என்ற பயம் ஏற்பட்டு மனப்பதட்டம் வந்து விடுகிறது. இந்த பய உணர்ச்சியை நாம் நொடிக்கு நொடி புதுப்பித்துக் கொள்கிறோம். இப்போது மனச்சமநிலையும் குலைந்து விடுகிறது. உடலில் ஏற்படும் ஒரு தொந்தரவு அதைப்பற்றிய நம் புரிதல் இன்மையால் மனச் சமநிலையையும் பாதிக்கிறது. இப்போது பராமரிப்பு சக்தி என்ன செய்யும்?

இப்படி பராமரிப்பு சக்தி உடலையும், மனதையும் சமப்படுத்த இரண்டாகப் பிரிகிறது. பொதுவாக பராமரிப்பு சக்தி உடலை விட மனதிற்குத் தான் அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. உடல் பாதிப்பு எந்த அளவில் இருந்தாலும், மனபாதிப்பின் தன்மையைப் பொறுத்துத்தான் பராமரிப்பு சக்தி வேலை செய்கிறது. மனச்சமநிலை தீவிரமான அளவு பாதிக்கப்பட்டிருந்தால் உடல் ஆரோக்கியத்தை இரண்டாம் பட்சமாகக் கருதி மனதை நிதானப் படுத்தும் வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறது பராமரிப்பு சக்தி.

இந்த பராமரிப்பு சக்தியை நாம் உடலை நோக்கி முழுமையாகத் திருப்பி விட்டால் என்ன நடக்கும்?

உடல் உள்ளுறுப்புக்களின் தகவமைப்பு மிக வேகமாக நடக்கும். உடல் ஆரோக்கியத்திற்குத் திரும்பும். ஆனால் அப்படி எவ்வாறு உடலை நோக்கித் திருப்பி விடுவது? மிகச் சுலபம்தான். உடலுடைய சமநிலக்குலைவு என்பது இயற்கையானது. அதனை நம் முயற்சியால் மாற்ற இயலாது. மாறாக அது உடலின் தகவமைப்பு தான். கழிவுகளின் வெளியேற்றம் தான் என்பதை நாம் அறிவுப்பூர்வமாக புரிந்து கொண்டால் என்ன நடக்கும்? உடல் சமநிலைக்காக புரிதலோடு காத்திருப்போம். இப்போது மனநிலையின் தன்மை என்னவாக இருக்கும்? உடல் மாறுதல்கள் இயற்கையானவை என்று புரியும் போது மனம் சமநிலை தவறுவதில்லை. அதைப்பற்றிய பயம் ஏற்படுவதில்லை. ”என்னுடைய உடல் என்னை சரி செய்து கொண்டிருக்கிறது” என்பதை நம்மால் உணர முடியும். இப்போது பராமரிப்பு சக்தி நூறு சதமும் உடலை நோக்கி திருப்பிவிடப்படுகிறது. உடல் மிக வேகமாக தன்னைத் தகவமைத்துக் கொண்டு, புதுப்பித்துக் கொள்கிறது. மோரீஸ் குட்மேனைப் போலவும், டாக்டர்.மர்பியைப் போலவும் எல்லோராலும் புரிதலால் நோய்களை வெல்ல முடியும்.

உடல் ஆரோக்கியத்தில் நம்முடைய பங்கு என்பது அதனைப் புரிந்து கொள்வதுதான். அதனுடைய இயக்கங்களில் குறுக்கிடுவது அல்ல. இயற்கையான பழக்கவழக்கங்கள், உடலைப் பற்றிய புரிதல் ஆகியவை மனிதகுல ஆரோக்கியத்தின் மிக முக்கியமான அம்சங்கள். இவற்றைத் தவற விடுகிற மருத்துவங்களால் உடல் நலத்தை மீட்க முடியாது.

மூச்சுக்காற்றே மூலதனம்



காலையில் முழித்த முகம் சரியில்லை! எடுத்த காரியம் எதுவும் நடக்கவில்லை! என்று அலுத்துக் கொள்வோர்களும், இன்றைக்குக் கழுதை முகத்தில் முழித்திருப்பான் போலிருக்கிறது! அதிர்ஷ்டக்காரன், அவனுக்கு அடித்தது, யோகம் என்று வியந்து போவோரும் இருக்கின்றார்கள்.

ஆனால், காலையில் தூங்கி எழும்போதே அன்றைய தினம் எப்படி இருக்கும்! எப்படி இருந்தால் தனக்கு நன்மை உண்டாகும் என்பதை அறிந்து செயல்படுபவர்கள் குறைவு. நாம் நமது மூக்கின் வழியாக விடுகின்ற மூச்சுக்காற்று நம்மை ஆக்குகின்றது. நம்மை ஆள்கின்றது. நம்மை வழி நடத்துகின்றது.

நம்மைப் பற்றியும் நம் உடம்பைப் பற்றியும் முன்னறிவிப்பு செய்யும் மணியாக மூக்கையும் மூச்சையும் குறிப்பிடலாம்.

படுக்கையிலிருந்து எழ வேண்டிய நேரம் அதிகாலை 4.00 மணி. 4.00 மணி என்பது மிகவும் முக்கியமான நேரமாகும். அதிகாலை 4.00 மணிக்கு எந்த நாசிப்பக்கமாக மூச்சு வெளிவருகிறது என்பதைக் கவனித்தால், அன்றைய பொழுதில் என்ன நடக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

மூக்கிலிருந்து வெளிவருகின்ற மூச்சு முறையாக இல்லாமல் தாறுமாறாக இருக்குமேயானால், மதங்கொண்ட யானையைப் போல் தாறுமாறாக நடந்து இன்பங்களை இழந்து துன்பங்களைச் சம்பாதித்துக் கொள்ளவேண்டியிருக்கும். ஒவ்வொரு நாளும் நாம் விடுகின்ற மூச்சு, மூக்கின் இரண்டு நாசிகளில் ஒரு பக்க நாசியில் வெளி வர வேண்டும்.

மூக்கில் விடுகின்ற மூச்சுக்காற்று முறையாக வெளிவர முதலில் இடது பக்கத்து நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து வலது பக்க நாசி வழியாக வெளியிட வேண்டும். அடுத்து, வலது பக்க நாசி வழியாக உள்ளுக்கு இழுத்து இடது பக்கத்து நாசி வழியாக வெளியிட வேண்டும்.

இவ்வாறு, காலையிலும் மாலையிலும் 21 முறை செய்து பழக வேண்டும். அவ்வாறு செய்தால், மூக்கிலும் மூச்சுக் குழாயிலும் நுரையீரலிலும் உள்ள அடைப்புகளும், சளியும் வெளியேறிவிடும். அதன் பின் மூச்சுவிடுவது இயல்பாக இருக்கும்.

அடுத்ததாக, அதிகாலையில் விழித்தெழுந்து மூக்கில் எந்த நாசி வழியாக மூச்சுக்காற்று வெளியே வருகிறது என்று பார்க்க வேண்டும்.

அதிகாலையில் எந்தப்பக்கத்து நாசி வழியாக மூச்சுக் காற்று வெளிவருகிறது என்பதைக் கொண்டு, அன்றைய தினம் நமது உடம்பு எவ்வாறு இருக்கும் என்பதை முன்னரே அறிந்து கொள்ளலாம்.

வலது நாசி என்பது சூரிய கலை.
இடது நாசி என்பது சந்திர கலை.

ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு அன்றைய பொழுதின் உடல் நலம் தொடங்குகிறது. அன்றைய பொழுதின் உடல் நடத்தை அதிகாலையிலேயே கண்டறிந்து கொண்டு, அதற்கு வேண்டிய மாற்ற நடவடிக்கைகளைச் செய்து கொண்டால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல, அதிகாலையிலேயே முடிந்துவிடும்.

எப்படியென்றால், வார நாள்களில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய இம்மூன்று நாள்களில் அதிகாலை நான்கு மணியிலிருந்து காலை ஆறு மணி வரை இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

ஞாயிறு, செவ்வாய், சனி ஆகிய இம்மூன்று நாள்களில் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.

வார நாள்கள் எனில் வியாழக்கிழமை மிகவும் முக்கியமான நாளாகும். மற்ற ஆறு நாள்களைப்போல வியாழக்கிழமையில் மூச்சு விட முடியாது.

வியாழக்கிழமை அன்று பௌர்ணமியாக இருந்தால், அதிகாலை நான்கு மணிக்கு இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

வியாழக்கிழமை அன்று அமாவாசையாக இருந்தால் இடது நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

இவை இரண்டும் இல்லாமல் வளர்பிறையாக இருந்தால் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவர வேண்டும்.

தேய்பிறையாக இருந்தால் வலது பக்க நாசி வாயாக மூச்சு வெளிவர வேண்டும்.

மேலே கூறியது கூறியவாறு மூச்சு வெளிவந்து கொண்டிருந்தால் அந்த ஏழு நாள்களும் உடல் நலமும் மன நலமும் சீறாக இருக்கும். எவ்விதமான நோய்நொடிகளும் அண்டாமல் இருக்கும்.

அதற்கு மாறாக, நடந்தால் என்ன நடக்கும் என்பதைக் காண்பதற்கு முன் ஒரு சிறிய இடைவேளை.

ஞாயிறு அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், தலைவலி, சளி, இருமல், ஈளை, மூச்சடைப்பு நோய்கள் உருவாகும்.

திங்கள் அன்று காலையில் இடது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவந்தால், ஜலதோசம், ஆஸ்துமா, தும்மல் நோய்கள் உண்டாகும். செவ்வாய் அன்று காலையில் வலது பக்க நாசியில் மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூசு வெளிவந்தால், காய்ச்சல், கண் எரிச்சல், நெஞ்செரிச்சல், பித்த மயக்கம் ஆகியவை ஏற்படும். புதன் அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், உடல் வலி, கைகால் குடைச்சல், மூட்டுவலி, நீரேற்றம், தலைக்குத்தல் போன்ற நோய்கள் உருவாகும். வியாழக்கிழமை நாளில் பௌர்ணமி, அமாவாசை, வளர்பிறை, தேய்பிறை ஆகியவை இருந்தால், முறையே இடது நாசி, வலது நாசி, இடது நாசி, வலது நாசி ஆகிய நாசி வழியாக மூச்சு வெளிவரவேண்டும். அதற்கு மாறாக வெளிவந்தால், அடி வயிற்றில் நோயுண்டாகும். பெண்களுக்குக் கருப்பைக் கோளாறு ஏற்படும். மலட்டுத் தன்மை உருவாகும். இல்லற உறவு கசந்து போகும். வெள்ளி அன்று காலையில் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், கண் வலி வரும். கண் நோய் உண்டாகும். பார்வை குறையும். சனி அன்று காலையில் வலது பக்க நாசி வழியாக மூச்சு வெளிவராமல் இடது பக்க நாசி வழியாக மூச்சு வெளி வந்தால், குளிர் கரம், சரும நோய், குட்டம் போன்ற நோய்கள் உண்டாக வாய்ப்புண்டு.

மூக்கின் வழியாக வருகின்ற மூச்சுக்காற்று தடம் மாறி நடந்தால் உடல்நலம் மட்டுந்தான் பாதிக்கும் என்றில்லை. மன நலமும் பாதிக்கும். மன நலத்தில் ஏற்படுகின்ற பாதிப்பினால், உற்றார் உறவினர்களுடன் பழகும் பழக்கங்களும் பாதிக்கும். அதனால், உறவு முறிவுகள் ஏற்படவும் வாய்ப்புண்டு.

வார நாள்களில் விடுகின்ற மூச்சுக்காற்று தடம்மாறினால் உடல் நலத்தில் குறைபாடுகளும் நோய்களும் உருவாகி, அவற்றின் ஆதிக்கத்தினால் உடல் நலம் பாதிக்கும். உறவும் தொழிலும் உடன்படாமல் எதிர்மறையாகச் செயல்படும். கசப்பும் இழப்பும் வாழக்கையைத் தடம் புரளச் செய்துவிடும்.

இன்பத்துக்கும் துன்பத்துக்கும் காரணமானது மூச்சுக்காற்று. அது, நாள்தோறும் விடியற்காலையில் எவ்வாறு இயங்குகிறது என்பதைக் கொண்டு அன்றைய பொழுதின் ஆரோக்கியத்தை, மன வளத்தை அறிந்து கொள்ளலாம்.

மூச்சுக்காற்று எந்த நாசியில் இயங்குகிறது என்பதைக் கண்டறிந்து அன்றைய பொழுது எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை அறிந்து கொள்வது மட்டும் உடல் நலத்தைப் பேணுவது ஆகாது.

தீங்கும் தீமையும் வரப்போகிறது என்றறிந்து கொண்டு வருவது வரட்டும்! ஒரு கை பார்த்துக் கொள்ளலாம்! என்றிருப்பது அறிவுடமையுமாகாது. எந்தச் செயலுக்கும் ஒரு மாற்று இருப்பதைப் போல, எல்லாவற்றுக்கும் தீர்வு என்பது இருக்கும் என்பதை உணர்ந்து அந்தத் தீர்வு என்ன என்று அறிய முற்பட வேண்டும்.

மூச்சுக்காற்று அதன் இயல்புக்கு மாறாக நடக்கத்தொடங்கும் போதே அதனை மாற்றுவதற்கான தீர்வைச் செய்து முறையாக இயங்கச் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் தீங்கும் தீமையும் நீர்த்துப் போகும்.

கிழமைக்கு ஏற்றவாறு நாசியின் வலப்புறமோ அல்லது இடப்புறமோ இயங்குகின்ற மூச்சானது, சுமார் ஒரு மணி நேரம் வரை இயங்கிவிட்டு அடுத்த நாசிக்கு மாறிவிடும்.

அதிகாலை நான்கு மணி என்பது அன்றையப் பொழுதின் தொடக்க நேரம் என்று முன்னரே சொன்னோம். அந்த நேரத்தைக்குறிப்பிடவே 'வைகறை துயில் எழு’ என்று கூறப்பட்டுள்ளது.

சூரியகலை சூரியனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது வெப்பமானது. சந்திரகலை சந்திரனின் ஆதிக்கத்தில் இயங்குகிறது. இது குளிர்ச்சியானது. குளிர்ச்சியும் வெப்பமும் உடலுக்குத் தேவை என்பதால் அவை இரண்டும் மாறி மாறி இயங்கி உலைப் பாதுகாக்கின்றன.

வெப்பம் மிகுந்தாலும் நோயாகும். குளிர்ச்சி மிகுந்தாலும் நோயாகும். அவை இரண்டும் சம அளவில் இயங்கிக் கொண்டிருந்தால், அல்லது இயங்கச் செய்து கொண்டிருந்தால் நோய் என்னும் பேச்சுக்கே இடமில்லை.

அதிகாலையில் எழுந்திருந்த காலைக்கடன்களை முடித்து விட்டு, முகத்தைச் சுத்தம் செய்துவிட்டு சிறிது நேரம் இளைப்பாறிக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், நாசிக்குக் கீழே கையை வைத்து எந்த நாசியின் வழியாக மூச்சுக்காற்று வந்து போகிறது என்பதைச் சோதிக்க வேண்டும்.

அதன் பிறகு, அன்றைய கிழமை என்ன, அக்கிழமையன்று எந்த நாசியின் வழியாக மூச்சு இயங்க வேண்டும் என்றறிந்து ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, ஞாயிற்றுக்கிழமை அன்றைக்கு வலப்புற நாசி வழியாக மூச்சுக்காற்று இயங்க வேண்டும். அன்றைக்கு அதிகாலையில் வலப்புறத்தில் இயங்கினால் தோஷமில்லை. மாறாக இடப்புறமாக இயங்குகிறது என்று வைத்துக் கொள்வோம். என்ன செய்ய வேண்டும்?

போர்வை, சமுக்காளம் போன்ற துணியைத் தரையில் விரித்துக் கொண்டு, அதன் மீது பத்ம ஆசனம் போட்டு அமர்ந்து கொள்ள வேண்டும். பத்மாசனம் போட முடியாவிட்டால் சுகாசனம் போட்டு அமர்ந்து கொள்ளலாம்.

சுகாசனம் என்பது சாப்பிடும்போது உட்காருவதுபோல் உட்கார்வது. அவ்வாறு உட்கார்ந்து கொண்டு வலது கையின் கட்டை விரல் மோதிர விரல் ஆகிய இரண்ட மட்டும் நீட்டிக் கொண்டு மற்ற மூன்று விரல்களையும் உட்புறமாக மடக்கிக் கொண்டு, கட்டை விரலை வலப்புற நாசியிலும் மோதிர விரலை இடப்புற நாசியிலும் மூக்கைச் சிந்தும்போது வைப்பது போல் வைத்துக்கொள்ள வேண்டும்.

இப்போது, கட்டை விரலால் வலப்புற நாசியை அமுக்கி மூச்சு வராமல் அடைத்துக் கொண்டு இடப்புறத்து நாசி வழியாக மூச்சை மெதுவாக உள்ளுக்குள் இழுக்க வேண்டும். அவ்வாறு இழுக்கும் நேரம் அரை நிமிடம் என்று வைத்துக் கொள்வோம்.

மூச்சை இழுத்தவுடன் மோதிர விரலால் இடப்புறத்து நாசியை அடைத்துக் கொண்டு, கட்டை விரலை எடுத்து விட்டு, வலப்புற நாசி வழியாகக் காற்றை வெளியே விட வேண்டும். மூச்சை வெளியே விடும்போது, இடப்புறமாக மூச்சை இழுக்கும்போது ஆகும் நேரம் அரை நிமிடத்தைப் போல இரண்டு மடங்கு நேரம் (ஒரு நிமிடம்) மூச்சை மெதுவாக வெளியே விட வேண்டும்.

அடுத்து, வலப்புற நாசி வழியாக மூச்சை வெளியே விட்டதும், அந்த நாசியின் வழியாகவே மூச்சை அரை நிமிட நேரம் அளவுக்கு உள்ளே இழுக்க வேண்டும்.

காற்று உள்ளே சென்ற வலப்புற நாசியைக் கட்டை விரலால் அடைத்துக் கொண்டு, இடப்புறத்தை அடைத்துக் கொண்டிருக்கும் மோதிர விரலைத் தளர்த்திக் கொண்டு ஒரு நிமிட நேரம் அளவுக்கு உள்ளே சென்ற காற்றை மெதுவாக வெளியே விட வேண்டும்.

இவ்வாறு, வலப்புறமும் இடப்புறமும் மாறி மாறி விட வேண்டும். வலது புறத்திலும் இடது புறத்திலும் மூச்சு விடுவது ஒன்று எனக் கணக்கிட்டு, இருபத்தொரு முறை விட வேண்டும்.

அவ்வாறு செய்த பின்பு, சிறிது நேர ஓய்வுக்குப் பின்பு நாசியைச் சோதிக்க வேண்டும். அப்போது, இயல்பாக வரவேண்டிய வலது புறத்து நாசி வழியாக மூச்சு வர வேண்டும்- அப்போதும் இடது புறத்து வழியாகவே மூச்சு வந்து கொண்டிருந்தால், கவலைப்படவேண்டாம்.

விரித்து வைத்துள்ள துணியின் மீது, தெற்கில் தலையை வைத்துப் படுத்துக் கொள்ளலாம். இடது கையை மடக்கி தலைக்கு வைத்துக் கொள்ளலாம். உள்ளங்களையில் காதைவைத்து படுத்துக் கொள்ளவும். இடது காலை மடக்கி வலது காலை நீட்டிக் கொள்ளவும். வலது கை வலது தொடையில் இருக்குமாறு நீட்டிக் கொண்டு, பத்துப் பதினைந்து நிமிடங்கள் படுத்திருந்தால், மூச்சு இடது கலையிலிருந்து மாறி வலதுக்கு வந்துவிடும்.

மேலும் மற்றொரு முறை சுவர் ஓரமாக நின்று கொண்டு இடது காலைத் தூக்கி வலது கால் தொடை மீது வைத்துக் கொள்ளவும். கை இரண்டையும் ஒன்றாகச்¢சேர்த்து கும்பிடுவதுபோல வைத்துக் கொண்டு, கையைத் தலைக்கு மேலே நீட்டிக் கொள்ளவும். இதற்கு நின்ற பாத ஆசனம் என்று பெயர். இந்த ஆசனத்தில் ஐந்து நிமிடம் நின்றால் மூச்சு இடகலையிலிருந்து வலதுக்கு மாறிவிடும்.

இவ்வாறு கலையை மாற்றிக்கொண்டால், அன்றைய பொழுது ஆனந்தமாக இருக்கும்.

கால் மேல் கால்:

ஒரு சிலர் எந்த இடத்தில் அமர்ந்தாலும் கால் மேல் கால் போட்டுக் கொண்டு அமர்ந்து கொள்வதைப் பார்க்கலாம்.

பெரியவர்கள் முன்னிலையில் கால்மேல் கால் போட்டுக் கொண்டு அமரக் கூடாது! அது மரியாதைக் குறைவு என்றெல்லாம் கூறப்பட்டாலும், யார் எதைச் சொன்னாலும் நான் அப்படித்தான் உட்காருவேன் என்று, உட்காருவோரும் இருக்கின்றார்கள்.

வலது காலின் பெரு விரலிலிருந்து சூரிய கலையும், இடது காலின் பெருவிரலில் இருந்து சந்திர கலையும் தொடங்குகிறது என்பதால், வலது காலைச் சூரியனாகவும் இடது காலைச் சந்திரனாகவும் கருதலாம்.

உட்காரும் போது வலது கால் இடது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சூரிய ஆற்றல் மிகும். இடது கால் வலது காலின் மீது போட்டுக் கொண்டு அமர்ந்தால் சந்திர ஆற்றல் மிகும்.

எப்போதும் வலது காலை இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். இடது காலை வலது கால் மீது போட்டுக் கொண்டு அமர்கின்றவர்கள் சாந்தமானவர்களாக இருப்பார்கள்.

இருக்கையில் அமரும் போது அப்படி அமரலாம். தரையில் அமரும் போது என்ன செய்யலாம்?

தரையில் அமரும் போதும் முதலில் இடது காலை மடக்கிக் கொள்ளவும். அடுத்து வலது காலைத்தூக்கி இடது கால் மீது போட்டுக் கொண்டு அமர்ந்து கொண்டால் சூரிய ஆற்றல் கிடைக்கும்.

சித்த மருத்துவம் என்றால் என்ன?




சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
சித்த மருத்துவம் என்பது தமிழ் மருத்துவ முறையாகும். தமிழ்நாட்டுப் பண்டைச் சித்தர்கள் இதனைத் தமிழ் மொழியில் உருவாக்கித் தந்துள்ளார்கள். சித்தர்கள் தங்கள் அருள் ஞான அறிவால் அதனை நன்குணர்ந்து மிகவும் துல்லியமாகக் கூறியுள்ளனர். சித்த மருத்துவம் எப்போது தோன்றியது என்று வரையறுத்துக் கூறவியலாது. அது பாரம்பரிய மரபு முறைப்படி பரவி வந்துள்ளது.
  
இயற்கையில் கிடைக்ககூடிய எண்ணற்ற புல், பூண்டு,மரம்,செடி, கொடி, வேர், பட்டை, இலை, பூ, பிஞ்சு, காய், பழம், வித்து, முதலியவைகளைத் கொண்டும், நவரத்தின, நவலோகங்களைக் கொண்டும், இரசம், கந்தகம், கற்பூரம், தாரம், அயம், பவளம், துருசு முதலியவைகளைக் கொண்டும், திரிகடுகு, திரிசாதி, திரிபலை, அரிசி வகை, பஸ்பம், செந்தூரம், மாத்திரை, கட்டுகள், பொடிகள், குளித்தைலங்கள், கஷாயங்கள் முதலிய பல பிரிவு வகைகளாக வியாதிகளுக்கு, நல்ல தண்ணீர், கடல் நீர், ஊற்று நீர், கிணற்று நீர், முதலிய பல நீர் வகைகளைக் கொண்டும், பால், தேன், சீனி, நெய் முதலியனக் கொண்டும், தெங்கு, புங்கு,புண்ணை,வேம்பு, எள் முதலிய தாவர எண்ணெய் வகைகளைக் கொண்டும் உருவாக்கப்பட்ட ஒரு மருத்துவ முறையாகும். சித்த மருத்துவம் சித்த வைத்தியத்துடன் நின்றுவிடுவதில்லை. சித்த மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மெய்ஞ்ஞானம், விஞ்ஞானம், உடல் தத்துவம், சமயம், சோதிடம், பஞ்சபட்சி, சரம், மருந்து, மருத்துவம், பரிகாரம், போன்ற ஐயந்திரிபறக் கற்றுணர வேண்டும். சங்க இலக்கியங்களில் மருத்துவத்திற்கு அடிப்படையான பொருள்களுக்கான சான்றுள்ளன.
சோதிடம், பஞ்சபட்சி துலங்கிய
சரநூல் மார்க்கம்
கோதறு வகார வித்தை
குருமுனி ஓது பாடல்
தீதிலாக் கக்கிடங்கள்
செப்பிய கன்ம காண்டம்
ஈதெலாம் கற்றுணர்ந் தோர்
இவர்களே வைத்தியராவர்.....
(-- சித்தர் நாடி நூல் 18 --)
சித்தர்கள் மனித சரீரத்தை மூன்று வகையாக பிரித்து உள்ளார்கள். சரீரமாகிய தேகத்தில் உயிர் தங்கியிருக்க காரணமாகிய வாதம் (காற்று), பித்தம் (உஷ்ணம்), சிலேத்துமம் (நீர்), இரசதாது, இரத்ததாது, மாமிசதாது, மேதோதாது, அஸ்திதாது, மச்சைதாது, சுக்கிலதாது, மலம், மூத்திரம் என்னும் பன்னிரண்டும் நாம் உண்ணும் உணவிலிருந்து பிரிக்கப்பட்டு, பலத்தையும் இயக்கத்தையும் கொடுக்கிறது. நாம் உண்ணும் உணவே உயிர் உடலிருக்க செய்யும் மருந்தாகும். அவரவர் தேகத்திற்குப் பொருந்தாத மற்றும் முறையில்லாமல் உண்பதனாலும் நோய்கள் உற்பத்தியாகின்றன.நம் உடலில் காற்று, வெப்பம், நீர் இவை மூன்றும் தாம் இருக்க வேண்டிய அளவில் குறைவுபட்டாலும், அதிகமானாலும் நோய் தோன்றக் காரணமாக அமையும். இவைகளை வாத, பித்த, கப நோய்களாக பிரிக்கப்படும்.
வாதம் சம்பந்த பிணிகள்
வாதத்தில் முக்கியமாக எண்பது நோய்கள் உள. நரம்பு வலி, நரம்பு பிடிப்பு, காக்காய் வலிப்பு, பக்கவாதம், வாயு, இரத்த அழுத்தம், இருதய நோய் முதலியவை இதில் அடங்கும். கடலும் கடல் சார்ந்த இடமுமாகிய நெய்தல் நிலத்தில் பெரும்பாலும் வாதம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
பித்தம் சம்பந்த பிணிகள்
பித்தத்தில் முக்கியமாக நாற்பது நோய்கள் உள. செரியாமை, வயிற்றுவலி, வயிற்றுப்புண், மஞ்சட் காமாலை, இரத்தச் சோகை, இரத்த வாந்தி, கல்லீரல் மற்றும் பித்தப்பை ஆகியன கெட்டுப் போதல் போன்ற நோய்கள் இதில் அடங்கும். வயலும் வயல் சார்ந்த இடமுமாகிய மருத நிலத்தில் பெரும்பாலும் பித்தம் தொடர்பான நோய்கள் வர வாய்ப்பு உள்ளது.
சிலேத்துமம் சம்பந்த பிணிகள்
சிலேத்துமத்தில் தொண்ணூற்றாறு நோய்கள் முக்கியமானவை. அவற்றில் மூக்கில் நீர்வடிதல், மூக்கடைப்பு, தடிமன், இருமல், சயம், ஆஸ்துமா போன்றவை அடங்கும்.
நோய்களைத் தவிர்க்கும் முறை பற்றி திருக்குறள் கூறுவது, 'மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்'
(நோய் விளைவிக்காதவை என்று கூறப்பட்டவைகளை மட்டும் உண்டு வந்தால் மருந்து என்று எதுவும் தேவையில்லை.)
பரிசோதனை
வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றுமே நோய்களின் ஆதாரங்களாகும். உடலில் நோய் அதிகமாக இருக்கிறதா என்பதை பரிசோதிக்க சித்தர்கள் கூறும் பரிசோதனை முறை வருமாறு. காலையிலேயே சிறு நீரை கண்ணாடி பாத்திரத்தில் எடுங்கள். அதில் இரண்டு சொட்டு நல்லெண்ணையை விடுங்கள். அதன் பின் அது எப்படி செயற்படுகிறது என்று கவனியுங்கள். எண்ணெய்த்துளி பாம்பு போல வளைந்து காணப்பட்டால் உங்கள் உடம்பில் வாதம் உள்ளது. மோதிரம் போல வட்டமாக இருந்தால் உங்களுக்கு பித்த நோய் உள்ளது.
முத்துப்போல நின்றால் உங்களுக்கு கப சம்மந்தமான நோய் வந்துள்ளது. மேலும் எண்ணெய்த் துளி வேகமாகப் பரவினால் நோய் விரைவில் குணமாகும், மெதுவாகப் பரவினால் காலதாமதமாகும், அப்படியே இருந்தால் நோய் குணமாகாது. எண்ணெய்த்துளி சிதறினாலோ, அல்லது அமிழ்ந்துவிட்டாலோ நோயைக் குணப்படுத்த இயலாது.