Sunday, October 16, 2016

நாடி என்றால் என்ன?



நோய் அறிதலுக்கு முக்கியமான நாடி பற்றி காண்போம்.
 
                       நாடி 
     உடலில் உயிர் தங்கியிருப்பதற்குக் காரணமான ஆற்றல் எதுவோ அதுவே நாடி அல்லது தாது எனப்படும்.
          
           நாடிதாது என்னும் பெயராலும் வழங்கப்படும். நாடிவாதம்பித்தம்ஐயம் ஆகிய பொருளில் ஆளப்படும். உயிர்த்தாது உடற்தாதுகளைக் குறிப்பிடவும் தாது என்னும் சொல் பயன்படும்.
சுருங்கக் கூறின்நாடியைக் குறிக்கும் தாது
 
        
 
            தாது ஒன்றாயினும் அதன் தொழில் காரணமாக மூன்று பிரிவுகளாக அல்லது ஒன்றாகக் கூடிய மூன்று புரிகளாகக் கருதப்படு கின்றன. 
             அவையே வாதம்பித்தம்ஐயம்(கபம்)  எனப்படும். இவையே அண்டரெண்டமெல்லாம் நால்வகைப் பிறப்புஎழுவகைத் தோற்றம்எண்பத்தி நான்கு நூறாயிரமாகிய எவ்வுயிர்க்கும் பொருந்தும் என்பர்.
 
நாடிகளின் தொகை
          உடலில் உள்ள நாடிகளின் எண்ணிக்கை 72,000 ஆகும். அவற்றில் கரு உருவாகும் போதே உடன் தோன்றுகின்ற குண்டலி என்னும் மூலத்தைப் பற்றுக் கோடாகக் கொண்டு தோன்றுகின்ற நாடிகள் பத்து ஆகும்.
 
நாடிகளின் எண்ணிக்கை
                 நாடிகளின் தொகை 72,000 ஆனாலும் அவற்றில் பெருமைதரும் நாடிகள் பத்து. அவை இடகலைபிங்கலைசுழிமுனைகாந்தாரிகுகுசங்கினிஅசனிஅலம்புடைபுருடன்சிங்குவை என்பன.
இந்த பத்து நாடிகளிலும் மேலும் சிறந்தனவாகக் கருதப்படுவன மூன்று. அவை இடகலைபிங்கலைசுழு முனை என்பன.
 
நாடிகளும் இயங்கும் இயக்கமும்
          நாடிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடங்களில் பொருந்தி ஒவ்வொரு முறையில் இயங்கிக் கொண்டிருப்பது தெரியவருகிறது.
 
1. இடகலை – வலக்காலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல இடது மூக்கைச் சென்றடையும்.
 
2. பிங்கலை – இடதுகாலின் பெருவிரலிருந்து கத்தரிக் கோல் போல வலது மூக்கைச் சென்றடையும்.
 
3. சுழுமுனை – மூலாதாரத்தைத் தொடர்ந்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாய் நடுநாடியாக சிரசு வரை முட்டி நிற்கும்.
 
4. சிங்குவை – உள் நாக்கில் நிற்கும்.
 
5. புருடன் – வலது கண்ணில் நிற்கும்.
 
6. காந்தாரி – இடது கண்ணில் நிற்கும்.
 
7. அசனி – வலது காதில் நிற்கும்.
 
8. அலம்புருடன் – இடது காதில் நிற்கும்.
 
9. சங்குனி – குறியில் நிற்கும்.
 
10. குகு – அபானத்தில் நிற்கும்
 
என்று நாடிகள் ஒவ்வொன்றும் உடலில் பொருந்தி இயங்கும் இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.


மனித உடலின் நாடிகளும் அவற்றை அறியும் விதமும் பற்றி அறிந்துகொள்வோம்.

  
நாடிகளில் மூன்று
        நாடிகளில் வாதம்பித்தம்ஐயம் என்னும் மூன்று நாடிகள் சிறப்பாகக் கூறப்படுகின்றன. 
       இம்மூன்று நாடிகள் உடலுக்கு நேர்ந்த நோய்களை கணித்து அறிந்துகொள்ள உதவும்.
 
"" மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்
வளிமுதலா எண்ணிய மூன்று''
என்ற திருக்குறள் உரையால், மேற்கண்ட மூன்று நாடிகள் குறைந்தாலும் மிகுந்தாலும் நோயை உண்டாக்குமென்று சொல்வதைக் காண்கிறோம். 
              அவ்வாறேமருத்துவ நூல்களும் வாதம் உட்பட மூன்று நாடிகளாலும் நோய்கள் தோன்றும் என்கின்றன.
    மூன்று நாடிகளும் உடம்பிலிருந்து வெவ்வேறு நற்றொழில்களைச் செய்யும் இன்றியமையாக் கூறுகளேயன்றிநோய்களல்ல. 
மூச்சும் பேச்சும் உட்பொருள் இட மாற்றமும்வெறியேற்றமும்தனித்தும்பிற தாதுக்களோடு கூடியும் நிகழ்த்துவது வாதத்தின் தொழில்கள்;
 உண்ட பொருளின் செரிமானத்திற்கு உதவுவது பித்த நீர் 
        தசைகளின் வழவழப்பான இயக்கத்திற்கு உயவு எண்ணெய் அதாவது மோட்டார் வாகனங்களுக்கு இடும் கிரீஸ் போல  பயன் படுவது ஐயம் அதாவது கபம். 
     இவைஉணவின் செயல்களினாலும்ஒவ்வாமையாலும்இயற்கை மாறுபாட்டினாலும்மிகுதலும்குறைதலும் நேரும் பொழுதுஅவற்றின் விளைவாக நோய்கள் உண்டாகும்.

நாடிகளின் செயல்கள்
மூன்று நாடிகளும் உயிரின் கருதோன்றும் போதே உயிரோடு சேர்ந்தே தோன்றுவதாகக் கூறப்படுகிறது. 
மருத்துவர்கள் நாடிகளைக் கண்டறிந்துஆராய்ந்துநோய்களை அறிந்திடக் கூடிய இடங்களாகப் பத்து இடங்கள் குறிப்பிடப்படுகின்றன. அவை மறைவிடம்குதிக்கால்சந்துஉந்திகைமார்புகழுத்துபுருவமத்தி,காதுமூக்கு ஆகிய பத்து இடங்களைச் சார்ந்த உறுப்புப் பகுதி நரம்புகளில் மூன்று நாடிகளும் செயல்பட்டுக் கொண்டிருப்பதனால்அவ்விடங்களில் நாடியைக் கண்டு உடலின் குண நலனை
ஆராயலாம்  என்று கூறப்படுகின்றன..
        நாடிகளை அறியுமிடங்களில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வேறுபாடுகள் காணப்படுகின்றனஏனெனில் நாபிக் கூர்மமானது பெண்களுக்கு மேல் நோக்கியும்ஆண்களுக்குக் கீழ் நோக்கியும் இருக்கின்றமையால்கைகளில் ஆணுக்கும்பெண்ணுக்கும் வேறுபாடு தோன்றும். அதனால்ஆண்களுக்கு வலது கையிலும் பெண்களுக்கு இடது கையிலும் நாடி பார்க்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுநுட்பமான அறிவியல் உண்மையாகும்.
             நாடிகளை ஆராயும்போதுகையின் பெருவிரலுக்குக் கீழே ஒரு அங்குலத்திற்கும் அப்பால் மூன்று விரல்களால் அழுத்திப் பார்க்கமுதல் விரலான ஆள்காட்டி விரலில் வாத நாடியும்இரண்டாம் விரலான நடுவிரலில் பித்த நாடியும்மூன்றாம் விரலான மோதிர விரலில் ஐய நாடியும் அறியச் செய்யும்.
 நாடி வேளை நேரம்
வாதம் பகலும் இரவும் 6 - 10 மணி
பித்தம் பகலும் இரவும் 10 - 2 மணி
கோழை (ஐயம்) பகலும் இரவும் 2 - 6 மணி
என்று நாடிகள் நடக்கும் வேளைகள் கணித்தறியப்பட்டுள்ளன. 
     இவ்வாறு நாடிகள் நடைபெறாமல் மந்தமானாலோமாறுபட்டாலோ நமக்கு நோயோ மரணமோ ஏற்படும் என்று  உணர்த்தப்படுகிறது.
நாடிகளும் காலமும்:
 " காலையில் வாத நாடி கடிகையில் பத்தாகும்
பாலையில் பித்தநாடி பகருச்சி பத்தாகும்
மாலையாம் சேத்துமநாடி மதிப்புடன் பத்தாகும்''
         பகற்பொழுதில் உதயம் முதல் பத்து நாழிகை வாதமும்அதன் பின் பகல் பத்து நாழிகை பித்தமும்மாலை பத்து நாழிகை கபம் என்னும் ஐயமும் இவற்றிற்குரிய காலமாகும். 
    அதேபோல்சூரியன் மறைந்தவுடன் முன்னிரவு பத்து நாழிகை வாதமும்அதன்பின் நள்ளிரவு பத்து நாழிகை பித்தமும்பின்னிரவு பத்து நாழிகை ஐயமும் நாடிகள் இயங்கும் காலம் என்பர். 
   இதனை வாதபித்தஐயம் ஆகிய நாடிகளின் சிறப்புக்காலம்’’ எனவும் கூறுவர்.
நாடிகளும் மாதங்களும்
 " கடக முதல் துலாம் வரையும் வாதமாகும்
கண்ணாடியைப் பசியுமதுவே யாகும்
விட மீன முதல் மிதுனம் பித்தமாகும்
விரைகமழ் பைங்கூனி ஆனியது வேயாகும்
திடமான விருட்சிக முதற்கும்பஞ் சேத்துமஞ்
சேர்ந்த கார்த்திகை மாசியதுவே யாகும்
நடைமேவும் வாதபித்த சேத்துமத்தானும்
நலமாக மாதமுதல் நடக்குங் காணே.''
கடகம் முதல் துலாம் வரை (ஆடிஐப்பசி) வாதம் வளர்ச்சி பெறும். மீனம் முதல் மிதுனம் வரை (பங்குனிஆனி) பித்தம் வளர்ச்சி பெறும். விருச்சிகம் முதல் கும்பம் (கார்த்திகைமாசி) ஐயம் வளர்ச்சி பெறும் என்பர்,
நாடிபார்க்கும் மாதம்வகை:
  " சித்திரை வைகாசிக்குச் செழுங்கதிருதந் தன்னில்
அத்தமான மானி யாடி ஐப்பசி கார்த்தி கைக்கும்
மத்தியானத்திற் பார்க்க மார்கழி தையு மாசி
வித்தகம் கதிரேன் மேற்கில் விழுகின்ற நேரந் தானே''
 " தானது பங்குனிக்குந் தனது நல்லா வணிக்கும்
மானமாம் புரட்டாசிக்கு மற்றை ராத்திரியிற் பார்க்கத்
தேனென்று மூன்று நாடித் தெளிவாகக் காணுமென்று
நானமா முனிவர்சொன்ன கருத்தை நீ கண்டு பாரே.''
 சித்திரை வைகாசியில் ஞாயிறு உதயத்திலும்ஆனிஆடிஐப்பசிகார்த்திகையில் நண்பகலிலும்மார்கழிதைமாசியில் மாலை ஏற்பாடு வேளையிலும்பங்குனிஆவணிபுரட்டாசியில் இரவிலும் நாடிகளைக் கணிக்க உரிய நேரமாகும் என்பதனால்இயற்கையில் ஏற்படுகின்ற தட்பவெப்பங்களுக்கு ஏற்றவாறு நாடிகளின் இயக்கம் அமைந்திருக்குமென அறிய முடிகிறது. 
        வாதபித்தஐய நாடிகளின் பண்பிற்கு ஏற்றவாறு இரவில் ஐயமும்காலையில் வாதமும் நண்பகலில் பித்தமும் ஆட்சி புரிவதாகக் கருதலாம். 
அதே போல,
         ஆடிஆவணிபுரட்டாசிஐப்பசி ஆகிய திங்களில்வாதம் வளர்ச்சி பெறும். கார்த்திகைமார்கழிதைமாசி ஆகிய திங்களில்ஐயம் வளர்ச்சி பெறும். பங்குனிசித்திரைவைகாசிஆனி ஆகிய திங்களில் பித்தம் வளர்ச்சி பெறும். 
     அவ்வாறேசிறு பொழுதான ஆறில்வைகறையில் வாதமும்நண்பகலில் பித்தமும் எற்பாட்டில் ஐயமும் சிறப்புறுவதாகக் கூறப்படும்.
இயற்கையும் மாந்தர் தம் உடலும் இயைந்து இயங்கும் தன்மையன. ஆதலின் நாடிகளும் இயற்கைக்கு ஏற்ப இயைந்து இயங்குவதாகக் கருதலாம்.
நாடி பிடித்து அறிய முடியாத நபர்கள்....

            பெண்போகர்நீண்டகால நோயாளிகுதிரை ஏற்றம் செய்தோர்யானை ஏற்றம் செய்தோர்வழி நடைப்பயணிபேருண்டி உண்டோர்போதைப் பொருள் கொண்டவர்நீர்ப்பாடுநீரிழிவுபெருநோய்வீக்கம் ஆகிய நோய்களுற்றோர்அத்தி சுரத்தால் இளைத்தவர்பயமுற்றோர்துன்பமுற்றவர்விடந் தீண்டியவர்ஓட்டமுற்றவர்அளவுக்கு மிஞ்சிப் புசித்தவர்சூல் கொண்ட பெண்மாதவிடாயான பெண்பெரும்பாடுற்ற பெண்அதிகம் தூங்கியோர்எண்ணெய் தேய்த்து முழுகியவர்சினங்கொண்டோர்மோகங் கொண்டோர்முதிர்ந்த வயதினால் இளைப்புற்றவர்மதங்கொண்டோர்பெருத்த உடலினர்என்பு முறிந்தோர்சோகை நோயினர்பிணத்தைத் தொட்டோர்வாந்திவிக்கல் எடுத்தோர்விரத மிருப்பவர்மழையில் நனைந்தோர்இசைப் பாடகர்களறி ஆடுவோர்நாட்டியமாடிக் களைப்புற்றோர்மூச்சுப் பயிற்சி மேற்கொண்டோர் ஆகிய இவர்களது நாடி நடை விரைவு கொண்டதாக இருக்குமாதலினால் நாடி ஓட்டத்தை அறிவது இயலாத காரியம் என்கின்றனர்.
மேலே குறிப்பிட்டுள்ளவர்களில் பெரும்பாலோர் உடல் செயல்திறனால்  அதிவேக இரத்த ஓட்டத்தைக் கொண்டவர்களாக இருப்பர். அவ்வாறு அதிவேக இரத்த அழுத்தம் ஏற்படுகின்ற அந்த நேரத்தில் நாடியைக் கணித்தறிதல் கூடாது என்றும்கணித்தறிவது கடினம் என்றும் கருதலாம். அந்த நேரத்தில்  நாடி பிடித்து சோதனை நடத்துவது முறையற்ற மருத்துவத்திற்கு வழி காட்டியதாக அமையும் என்பதனால்மேற்கண்டவர்களை நாடி பிடித்து அறியமுடியாதவர்கள்எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பூத நாடி:
        வாதம்பித்தம்ஐயம் என்னும் நாடியைப் போல பூதநாடி என ஒன்றுண்டு. இதைக் கண்டறிவது எளிதல்ல.

  “நிறைந்த பரிபூரணத்தோர் காண்பார் தாமே’’
என்பதற்கிணங்கநாடி நூல்கள் அனைத்தும் பூத நாடியைக் குறிப்பிட வில்லை. ஒரு சில நூல்கள் மட்டும் சிறிய அளவிலேயே கூறிச் செல்கின்றன.

   " சாற்றுவேன் பெருவிரலில் பூத நாடி
தோற்றுகின்ற சிறுவிரல் தான் பூத நாடி''
என்றதனால்ஐந்து விரலாலும் நோயாளியின் கையைப் பிடித்துப் பார்க்கும் போது பெருவிரலாலும் சிறுவிரலாலும் உணரப் பெறுகின்ற நாடிதான் பூத நாடி எனப்படும்.

    நன்கு ஆராயுமிடத்து வாதபித்தஐய நாடிகளுக்கு முன்னும் பின்னுமாக உணரப்படும் நாடி பூதநாடி எனத் தெரிகிறது.

  இவ்வாறாக மூன்று உயிர்த்தாது நாடிகளும் சிறப்பாகப் பூதநாடியும் நடக்கின்றவனுக்கு சாவு என்பதே இல்லை.அதனால் அவன் காயசித்தி அடைவான். ஆகவே யோக வல்லுனர்கள் காயசித்தி அடைவதால் அவர்களுக்குப் பூதநாடி புலப்படும்.
பூதநாடி நடக்குங்கால் காயசித்தன் சமாதி நிலையை அடைவான். பூதநாடி நடக்கின்ற காலத்தில் சித்தர்கள் சமாதி நிலைக்கு ஏற்ற சமயமென்று பேர் உறக்க நிலையைச் சாதிக்க முயல்வார்கள் என்பதிலிருந்துநாடிகளின் சிறப்பும் உயர்வும் எடுத்துக் காட்டப் பட்டிருப்பது உணர்தற்குரியது.

குருநாடி:
       வாத நாடியையே குருநாடி என்பர் சிலர். நாடிகள் தோறும் ஊடுறுவிப் பாய்ந்து அவற்றிற்கு இயக்கத் தன்மையைக் கொடுப்பதால் குரு நாடி என்கிறார்கள். எனவே தொழில் பற்றியே நாடிகளை வகுத்த போதிலும் குருநாடி எல்லா நாடிகளின் இயக்கத்திற்கும் காரண நாடியாக உள்ளபடியாலும்காரியத்தைச் செய்கின்றபடியாலும் இதனை உன்னதமாகவும்சிறப்பாகவும் போற்றினார்கள். மற்றும்இந்நாடி குற்றமடைவதில்லை. இதற்குக் குணமுமில்லை. ஆனால் ஐந்து நிலையாகிய விழிப்பு நிலைகனவுஉறக்கம்துரியம்துரியாதீதம் என்பவற்றைக் கொண்டது. 

        மற்ற நாடிகள் குற்றமடைந்த காலத்து அக்குற்றங்களுக்கேற்ப இந்நாடியின் நிலைமாறும். வாதபித்த நாடிகளின் தொழிற்கேற்ப முக்கியமாக விழிப்பு நிலைகனவுஉறக்கம் என்ற தொழில்களால் குருநாடியின் நிலைகள் மாறிக் கொண்டே இருக்கும்.

         குருநாடியில் உறக்க நிலை ஏற்பட்டு விட்டால் உடலுக்குச் சலனமில்லை. இந்நிலையைத்தான் பிணம் என்று கூறுகின்றார்கள். ஆனால் உயிர் வெளியாகி விடவில்லை. உயிர் அணுக்கள் உறக்க நிலையை அடைந்து விட்டது என்பதுதான் சரியானது. ஆகவேகுரு நாடியை மருத்துவன் சாதாரணப் பயிற்சியினால் உணரமுடியாத காரியம் ஆதலால்  யோக வல்லமையினால் தான் அறியமுடியும்.  

   குருநாடிவாதபித்தஐய நாடிகள் மூன்றும் தராசு முனை போன்றதாகும்.

  " தம்முடன் வாத பித்த ஐய நடுவிலே தான்
தமரகம் போலாடி நிற்கும் குருவி தாமே''
என்பதினால் 
       குருநாடி வாதபித்தஐய நாடிகளின் மத்தியில் தமரகம் போன்றது எனவும் விளங்குகிறது. தமரகம்’ எனும் இதயம்’ உடற்கு எவ்வளவு முதன்மையானதோ அதே போல குரு நாடியானது வாதபித்த ஐயமாகிய உயிர்த்தாதுவுக்கு முதன்மையானது என்பதை அறிகிறோம். 

    இதனை வேறுபடுத்திக் காண்பது எளிதன்று என்பதால்குருநாடிநாடிகளுக்கெல்லாம் தலைமை பெற்ற நாடியாகவும்மூலநாடியாகவும் ஆதிநாடியாகவும் விளங்குகிறது எனலாம்.

நாடி நடை
     நோய் அற்றபோது ஒரு வகை நடையும்நோய் உற்ற போது ஒருவகை நடையும்நோயின் வேறுபாட்டிற்கு ஏற்ப நாடியின் நடையும் வேறுபட்டிருக்கும். இந்த நாடியின் நடை இம்மாதிரியிருந்தால் இந்த நோய் அல்லது இந்த நோய் வருவதற்குரிய அடையாளம் என அனுபவத்தின் மூலம் உணர்வர். இதைப் பயில்வதற்கு ஏற்றவாறு விலங்குகள்பறவைகள்ஊர்வனபூச்சிபுழுக்கள் போன்றவற்றை எடுத்துக்காட்டி உவமைகள் மூலமாக உணர்த்தப்பட்டுள்ளன.

வாத நாடி
  " வாகினில் அன்னங் கோழி மயிலென நடக்கும் வாதம்''
வாத நாடியானது இயல்பினில் அன்னம்கோழிமயில்போல நடக்கும். உடலின் தன்மை மாறி நிற்குமானால் இந்நடையில் மாற்றம் ஏற்பட்டு நோயின் தன்மைக்கு ஏற்பச் செயல்படும். அவைமண்டூகம் தாவுவது போலும்ஓணான் போலும்பாம்புஅட்டைவேலிக்குருவிஆமை போலவும் நடக்கும்.

பித்த நாடி
  " ஏகிய ஆமை அட்டை இவையென நடக்கும் பித்தம்''
பித்த நாடியானது இயல்பினில் ஆமைஅட்டை போல நடக்கும். பித்த நோய்க்குறி தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவைநாகரிகமான அன்ன நடை போலும்மயில் போலும்தாரா போலும்மாடப் புறாஊர்க்குருவி போலும் கருடப் போத்துசிங்கம்பாம்புபிள்ளை குதிப்பது போலமதயானை போலசிறு காக்கை தூங்குவது போலநடக்கும். 

 ஐய நாடி அதாவது கோழைநாடி..
    " போகிய தவளை பாம்பு பொல்லாத சிலேட்டுமந்தானே''
ஐய நாடியானது இயல்பினில் தவளைபாம்பு போல நடக்கும். ஐய நோய் தோன்றும் போது அந்நோய்க்கு ஏற்ப நடையில் மாற்றம் ஏற்படும். அவை கோழியின் நடைகொக்கினது உறக்கம்ஊர்க் குருவிசிலந்திவலையினில் பூச்சி போல நடக்கும்.
பாம்பு நடையெனப் பதுங்கியும்அரணையினது வால் போலவும் ஐயநாடி நடையிருக்கும். 

பூத நாடி
      பூத நாடியானது இயல்பினில்கல்லெறிதல்ஆட்டுக்கிடா பாய்ச்சல்செக்கிடை திருகல்சீறுகின்ற மூஞ்சூறுபந்தடித்து எழும்புதல்ஏற்றம் போல் ஏறி இறங்குதல் போல இருக்கும்.இதிலிருந்து மாறுபடும் போது,
பூனைபோல நடக்கும்வெள்ளெலி போல குன்றியும் 
வண்டுபோல ஊர்ந்தும் பாம்பு போல நெளிந்தும் 
சங்கு போல ஊர்ந்தும்கார்வண்டு போல ஊர்ந்தும் 
பூதத்தைப் போல ஊர்ந்தும்தேரை போல தாண்டியும் 
காக்கைபோலக் குதித்தும் நெருப்பு போல சுட்டும் 
செக்குபோலச் சுற்றியும் நடக்கு மென்றறியலாம்
என்பதனால்மருத்துவ நாடி நூலார் நாடித் தேர்வின் வளர்ச்சியையும்முதிர்ந்த நிலையையும் காட்டுவதாக அமைந்திருக்க காணலாம். 
          பல்வேறு வகைகளைக் கொண்ட நாடியின் நடைகளை மிகவும் துல்லியமாகவளர்ச்சியடைந்த நிலையிலுள்ள அறிவியல் கருவி களுக்கு ஈடாகவிரலைக் கொண்டு தொடு உணர்வினால் நோய்த் தன்மைநோயுற்ற காலம்முதிர்ச்சிமரணத்தின் எல்லை என்பவற்றை யெல்லாம் அறியும் வகையாக நாடித் தேர்வு அமைந்திருக்கிறது.


நாடிகளும் அளவுகளும்
          நாடிகளை ஆராயும் போது அவற்றுக்கு உரிய அளவுகளின்படி அமையாமல் குறைந்தோ கூடியோ தோன்றுகின்றனவா என்று அறிவதற்கு நாடிகளின் இயல்பான அளவுகள் குறிப்பிடப் படுகின்றன.

வாத நாடி ஒரு மாத்திரை அளவும்பித்த நாடி அரை மாத்திரை அளவும்ஐயநாடி கால் மாத்திரை அளவும் என மூன்று நாடிகளின் அளவும் குறிப்பிடப் படுகின்றது. 

    இந்த அளவுகளில் மூன்று நாடிகளும் தோன்றினால் உடலில் ஒரு குற்றமும் இல்லை என்று உறுதியாகக் கூறலாம். ஒரு மாத்திரை என்பது ஒரு கை நொடி அல்லது கண் இமைக்கும் கால அளவு ஆகும்.

நாடிகளுக்குரிய காலங்கள்
     நாடிகளை எல்லா வேளையிலும்எல்லாக் காலங்களிலும் பார்த்தால் அதற்குரிய இயல்புகள் அறிய முடியாமற்போகும் என்பதால்நாடிகளுக்குரிய காலங்களாகச் சிறுபொழுதுபெரும்பொழுது ஆகியவற்றில் உரிய காலத்தை உரைத்துள்ளனர்.
   " காலமே சேத்தும நாடி கட்டுச்சிப் பித்த நாடி
மாலையில் வாத நாடி வகை தப்பிப் பிதறி நின்றால்

நாலஞ்சில் மரணமென்று நன்முனி யருளிச் செய்தார்.''

        நாடித் தேர்வினால் அறியக் கூடிய நோய்கள்
நாடிகள் நடக்கும் இயல்பைக் கொண்டு உடலில் தோன்றிய நோய்களைக் கண்டறிவது மருத்துவத்தில் இயல்பானதாகும். நாடிகளைக் கொண்டு அறியப்படும் நாடிகள்இயல்புக்கு மாறாக நடந்தால் அதுதொந்தம் என்று குறிக்கப்படும்.

       (டி) வாதம் கால்பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடிகள் தோன்றினால்வாந்திமந்தம்வயிற்றெரிச்சல்சுரம்கண்ணில் காந்தல்பாண்டுமூலம் ஆகிய நோயும்,
செவி அடைப்புஉடல் வெதுப்புஉடல்வலிஉடல் நடுக்கம்மூத்திர எரிச்சல்போன்று உடலில் குணங்களும் காணப்படும். 

     (டிடி) வாதம் முக்கால்பித்தம் அரைஐயம் கால் என்னும் அளவில் நாடிகள் தோன்றினால்உடல் வேர்க்கும்சீதளம் உண்டாகும்மேகம் உண்டாகும்உடல் தடிக்கும்காலில் வெடிப்பு உண்டாகும். 

  (டிடிடி) பித்தம் அரைஐயம் அரைவாதம் கால் என்னும் அளவில் நாடிகளின் நடை தோன்றினால்வாய் காந்தும்வாயில் நீரூரும்கண்ணுழலும்இருமல் உண்டாகும்கால்களில் வெடிப் புண்டாகும். 

  (டிதி) வாதம் ஒன்றுபித்தம் ஒன்றுஐயம் ஒன்று என நாடி நடையிருந்தால்,

சாவில்லை சாகாம லிருக்கலாகும்
சாத்தியத்தில் குணங்களப்பா யிதுகளெல்லாம்
சாவில்லை நோயில்லை வறுமையில்லை''
என்றதனால்மரணமில்லாப் பெருவாழ்வுக்குரிய உடலினர்க்கு இவ்வாறான நாடி நடை அமையுமென்று தெரிகிறது.

     (தி) ஐயம் ஒன்றுபித்தம் கால்வாதம் கால் என்னும் அளவில் நாடி நடை அமைந்தால் காது அடைக்கும்தலையில் வியர்வை உண்டாகும்கண் மூக்கில் நீர் வடியும்மயக்கம் உண்டாகும்.

   (திடி) வாதம் கால்பித்தம் ஒன்று என்னும் அளவில் நாடி நடை அமைந்தால்வாய்வு தொடர்பான நோய்கள் உண்டாகும்.

    (திடிடி) வாதம் ஒன்றுபித்தம் முக்கால்ஐயம் ஒன்று என்னும் அளவில் நாடி நடந்தால் தொப்புளுக்கும்தொண்டைக்கும் மூச்சிழுக்கும்நெஞ்சடைக்கும்உடல் முழுவதும் நோவும்மரணம் நெருக்கத்தில் வந்து விட்டதென்று அறியலாம்.
என்று நாடிகளின் தொந்தத்தால் பல நோய்களைக் கண்டறியும் குறிப்புகள் காணப்படுகின்றன. 

          பெரும் பகுதி நாடிகள் மரணத்தின் அறிவிப்பைத் தெரிவிக்க கூடியதாகக் காணப்பட்டாலும்அவற்றின் அறிகுறியை அறிந்த பின்பு அதற்கான மருந்துகளைக் கொண்டு மரணத்திலிருந்து மீளுகின்ற வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது.

      நாடிமுறைத் தேர்வின் மூலம் அறியக் கூடிய நோய்களாக மருத்துவ நூலார் குறிப்பிடுகின்ற வாத நோய்த் தொகைபித்த நோய்த் தொகைஐய நோய்த்தொகைதொந்த நோய்த் தொகை என்னும் நோய்கள் அனைத்தும் அறியலாம் எனத் தெரிகிறது.

       நாடிகளை அறிக்கூடிய முறைவகுப்புபயிற்சிஅடிப்படைகள் என எதுவும் நாடி நூல்களில் காணப்பட வில்லை. அல்லது கிடைத் துள்ள நாடி நூல்களில் அவ்வாறான பாடல்கள் இணைக்கப் பெற வில்லை.
நோயறியும் முறைகளில் நாடி முறை மிகவும் துல்லியமாகக் கணிக்கப்படுவதாகக் கருத்து நிலவுவதால்அவை பற்றிய அறிவியல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. சித்த மருத்துவத்துக்கு மட்டுமல்லாது உலக மருத்துவத்துக்கே அது உதவியாக இருக்கும்.

வாதம்-பித்தம் -கபம்


”எதைத் தின்னால் இந்த ’பித்தம்’ தெளியும்? ஒருவேளை ’வாதக்’க் குடைச்சலாய் இருக்குமோ? நெஞ்சில் ’கபம்’ கட்டியிருக்கு...”,என்கிற வசனங்கள் இன்று கொஞ்சம் கொஞ்சமாய் வழக்கொழிந்து வருகிறது. ஆனால், நம் மூத்த தலைமுறையில் இவ்வரிகள் ரொம்ப முக்கியமானவை. இன்னும்கூட நம் பாட்டி தாத்தா இப்படிப் பேசிக் கொள்வதை, கிராமங்களில் மருத்துவரிடம் தம் நோயை அவர்கள் இப்படிச் சொல்வதை பார்க்க முடியும். நாகரீக அனாதைகளாகி வரும் இளையதலைமுறையான, இன்றைய ’கூகிள்’ தலைமுறைக்கு, இது புதுசு. லூலூபி பாடுவதில் இருந்து, வெண்பொங்கலுக்கு மிளகை எப்போ போடணும்?, மயிலாப்பூர்ல ஏழு சுத்து கை முறுக்கு எங்கே கிடைக்கும் –ங்கிற வரை எல்லாத்தையுமே கம்ப்யூட்டரில் தேடும் அவர்கட்கு இந்த ”வாதம் பித்தம் கபம்” எனும் வார்த்தைகள்- வரிவிலக்கு பெற்று வந்திருக்கும் தமிழ்ப் பட டைட்டிலோ என்று மட்டுமே யோசிக்க வைக்கும்.

”வாதம், பித்தம், கபம்” -அல்லது ”வளி, அழல், ஐயம்” என்னும் மூன்று விஷயங்களும் நம்ம பாரம்பரிய மருத்துவத்தின் அடித்தளங்கள். உடலின் ஒவ்வொரு அசைவையும் நகர்த்தும் உயிர்த் தாதுக்கள் அவை. அப்ப அதல்லாம் சித்தா ஆயுர்வேத டாக்டர்கள் சமாச்சாரமாச்சே.. நமக்கெதுக்கு? என நகர வேண்டாம். இந்த வாத பித்தம் கபம் குறித்த அடிப்படை அறிவு நம் ஒவ்வொருவருக்கும் இருக்க வேண்டும். முன்பு இருந்திருந்தது. ”ஐய்யோ..ஐஸ்கிரீமா? த்ரோட் இன்ஃபெக்‌ஷனாயிடும்! ரோட்டோர பரோட்டாவா..அமீபியாஸிஸ் வந்துடப் போகுது,” என்ற அறிவை வளர்க்கும் நாம், “உருளைக்கிழங்கு போண்டா நமக்கு வேண்டா. அது வாயு கொடுக்கும். வாதக் குடைச்சல் வந்துடும். மழை நேரத்தில தர்பூசணி எதுக்கு கபம் கட்டிக்க போகுது”-என்கிற மாதிரியான நம் தினசரி உணவும் அது அதிகரிக்க அல்லது குறைக்க வைக்கும் உடலின் இந்த மூன்று முக்கிய விஷயங்கள் குறித்த அறிவும் தெரிந்திருக்க வேண்டும். அந்த அறிவை இந்த வாரம் கொஞ்சம் இப்படி தீட்டுவோமா?.
”முத்தாது” என்று தமிழ் சித்தத்திலும் ”த்ரீதோஷா” என்றூ ஆயுர்வேதத்திலும் பேசப்படும் இந்த மூன்று விஷயத்தை தான் ”மிகினும் குறையினும் நோய் செய்யும் நூலோர் தொகுத்த வளி முதலாய மூன்று”- என்று நம் திருவள்ளுவர் நோயின் அடிப்படையாகச் சொல்லியிருக்கிறார்.

இந்த வாதம், நம் உடலின் இயக்கத்தை தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை சரியான மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக் கொள்ளும். பித்தம், தன் வெப்பத்தால் உடலை காப்பது. இரத்த ஓட்டம், மன ஓட்டம், சீரண சுரப்புகள், நாளமில்லா சுரப்புகள் - போன்ற அனைத்தையும் செய்வது. கபம் உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து எல்லா பணியையும் தடையின்றி செய்ய உதவியாய் இருப்பது. இந்த மூன்று வாத பித்த கபமும் சரியான கூட்டணியாய் பணிபுரிந்தால் உடம்பு எனும் பார்லிமெண்ட் ஒழுங்காய் நடக்கும். ஒண்ணு ”காமன் வெல்த்”திலும்-இன்னொன்று அலைக்கற்றை ஒதுக்கீட்டிலும் சேட்டை செய்தால்- ஒரே நோய்களின் கூச்சலும் குழப்பமும் தான் உடம்பு பார்லிமெண்ட்டில் ஓடும்.

இந்தக் கூட்டணி ஒழுங்காய் வேலை செய்ய உணவு, ரொம்ப முக்கியம். மனமும் பணியும் கூட கூட்டணிப் பணிக்கு அவசியமானது. ஒருவருக்கு மூட்டு வலி உள்ளது. கழுத்துவலி எனும் ஸ்பாண்டிலைஸிஸ் உள்ளதென்றால், வாதம் சீர் கெட்டு உள்ளது என்று பொருள். இந்த வியாதிக்காரர்கள் வாதத்தை குறைக்கும் உணவை சாப்பிட வேண்டும். வாதத்தைக் கூட்டும் உணவை காசியில் விட்டு விடலாம். புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமனத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாதத்தைக் கூட்டும். மூட்டுவலிக்காரர், மலக்கட்டு உள்ளோர், ஆஸ்துமாவில் அதிகம் அவதிப்படுவோர் இந்த உணவைக் கூடியவரை தவிர்க்க வேண்டும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உனவ்பில் சேர்ப்பது வாத்தை குறைத்திட உதவும்.

பித்தம் அதிகரித்தால் அசீரணம் முதல் டிப்ரஷன் வரை பல பிரச்னை வரக் கூடும். அல்சர், இரத்தக்கொதிப்பு, ஆரம்பநிலை மதுமேகம் என பித்த நோய் பட்டியல் பெரிசு. இன்றைய நவீன வேகமான வாழ்வியலில் பெருகும் பல நோய்க்கு இந்த பித்தம் ஒரு முக்கிய காரணம். நாம் தான் இப்போது மனசை கல்லில் அடித்து துவைச்சு காயப் போடும் வேகத்தை தானே விரும்புகிறோம்! பித்தம் அதிலும் அதிகம் வளர்கிறது. பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட, அதிகம் சேர்த்தால் பித்தம் கூட்டம். அரிசி அந்த விஷயத்தில் சமத்து.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) சாப்பிடணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என் இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க கிச்சன் கவனம் மட்டும் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம். இன்றைக்கு சர்க்கரை வியாதி பெருக பலரும் அதிக அரிசி உணவைக் காரனமாய்ச் சொல்கிறோம். அளவுக்கதிகமான மனப்பழு, மனஅழுத்தம் தான் அதைவிட முக்கியக் காரணமாகப் படுகிறது.

ஆதலால் சந்தோஷம் கால்படி, சிரிப்பு அரைப்படி போட்டு, அதில் கண்டிப்பாய்“ நான்”-கிள்ளி நீக்கிப் போட்டு, விட்டுக்கொடுத்தலில் வேகவைத்து புன்னகையில் தாளித்தெடுத்து காதலோடு பரிமாறுங்கள். பித்தமென்ன மொத்தமும் அடங்கும்.

அடுத்து கபம். சளி, இருமல், ஆஸ்துமா, மூக்கடைப்பில் இருந்து கபத்தால் வரும் நோய்கள் நிறைய. பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள்.மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவுநேரங்களில் தவிர்க்கலாம். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை- என இவையெல்லாம் கபம் போக்க உதவும். தும்மிக்கொண்டே வரும் வீட்டுக்காரருக்கு கற்பூரவல்லி பஜ்ஜியும் சுக்கு காபியும் கொடுத்துப் பாருங்கள். தும்மல் அன்றிரவின் தூக்கத்தைக் கெடுக்காது.

வாத பித்த கபம்-இந்த மூன்று வார்த்தை மந்திரக் கூட்டணியை அச்சுபிச்சு இல்லாமல் காப்பதில், சமையல்கூடத்திற்கு சந்தேகமில்லாமல் பங்கு உண்டு.அதற்கு பாரம்பரிய அனுபவம் அவசியம். பாரம்பரிய அனுபவங்கள் பாரம்பரிய சொத்தைக் காட்டிலும் பலம் பொருந்தியவை. அதனை மடமை என்றோ பழசு என்றோ ஒதுக்குவது முட்டாள்தனம். அங்கே இங்கே தவறுகள் சேர்ந்திருக்கும். ஆனால் இன்று சந்தையைக் குறிவைத்து ”2020-இல் இந்த நோயை உருவாக்க வேண்டும். அப்பொது இந்த மருந்தை இங்கு விற்கலாம்,’ என திட்டமிடும் கேவலமான எண்ணங்கள் கண்டிப்பாய் அப்போது கிடையாது. இதை புரிந்து பாரம்பரிய அறிவை கவனமாய் பாதுகாப்போம். அது நம்மையும் நம் தலைமுறையையும் பாதுகாக்கும்!

விரல்களை மடக்குங்கள் வியாதிகளை விரட்டுங்கள் .


நமது பிரபஞ்சம் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என் பஞ்ச பூதங்களால் ஆனது. அந்தப் பிரபஞ்சத்தில் ஓர் அங்கமான நமது உடலும் இந்தப் பஞ்ச பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது. உடலின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமனநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன ஆரோக்கியம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

நம்முடைய ஐந்து விரல்களும் ஐந்து மூலகங்களைக் குறிப்பிடுகின்றன.

கட்டை விரல் - நெருப்பையும் சுட்டுவிரல் - காற்றையும் நடுவிரல் - ஆகாயத்தையும் மோதிர விரல் - நிலத்தையும் சுண்டு விரல் - நீரையும் குறிக்கின்றன.

தினமும் காலையில் இருபது நிமிடங்கள் உங்களுக்கு உரிய முத்திரையைத் தேர்வு செய்து தியான நிலையில் அமருங்கள். நன்கு இழுத்து மூச்சை உள்ளேயும் வெளியேயும் விடுங்கள். மந்திரங்களோ வேறு சொற்களோ இதில் இல்லை.

யோக முத்திரைகள் செய்வதற்கு முன்பாக தெரிந்துகொள்ளவேண்டிய அடிப்படை விஷயங்கள்
                ----------------------------------------------------------------------------------------------------------
   விரலின் நுனி மற்ற விரலின் நுனியை குறிப்பிட்ட நேரம் தொட்டுக்கொண்டிருந்தால் சில நோய்கள் குணமாவதாக முனிவர்கள் சொல்லியிருக்காங்க அவை யோக முத்திரை எனப்படும்.

ஏன் முத்திரை என்று சொல்லக்கூடாதா என்றால் சதிர் (பரதநாட்டியம்) ஆட்டத்தில் நிறைய முத்திரைகள் உண்டு (மற்ற நாட்டியங்களிலும் முத்திரைகள் உண்டு) அவை நாட்டிய முத்திரைகள், எனவே முத்திரை என்று சொன்னால் நாட்டிய முத்திரை என்று தவறாக எண்ணக்கூடாது என்பதற்காகவே யோக முத்திரை என்கிறோம்.

இந்த முத்திரைகளை செய்தால் ஒரு வாரத்திலேயே பலன்கள் தெரிய ஆரம்பிக்குமாம். நோய் முத்திப்போய் இருந்தது என்றால் ஒரு வாரத்துக்கு மேல் ஆகலாம். நாள் பட செய்வது நல்லது என்கிறார்கள். முயன்று பாருங்களேன் காசு செலவு பண்ண தேவையில்லை, ஆனா நேரம் செலவு செய்யனும்

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என ஐந்து பூதங்களை உள்ளடக்கியது இந்த அண்டவெளி. இதில் ஓர் உறுப்பாக விளங்கும் நமது உடலும் இந்த ஐந்து பூதங்களால் ஆனவையே. இந்த ஐந்து மூலங்களையும் உடலில் இருந்து பிரிக்க முடியாது காரணம் மனிதனின் ஐம்புலன்களும் செயல்படுவதற்கு இந்த ஐந்து மூலகங்களே காரணமாக உள்ளன. இந்த ஐந்து மூலங்களும் உடலில் சமநிலையில் இருந்தால் நமது உடல் மற்றும் மன நலம் தொடர்ந்து சிறப்பாக இருக்கும்.

பெரு விரல் = சூரியன்

ஆட்காட்டி விரல் = காற்று

பாம்பு(நடு) விரல் = ஆகாயம் (வானம்)

மோதிர விரல் = மண்

சுண்டு விரல் = நீர்

நம்ம உடம்பு மூன்று நாடிகளால் ஆனது அவை வாதம், பித்தம், கபம் (சிலேத்துமம்).

சித்த அல்லது ஆயுர்வேத மருத்துவர்கிட்ட போனா அவர் இதில் எது அதிகம்? எது குறை? என்று பார்த்துதான் மருத்துவம் பார்ப்பார். ஏன்னா வாத, பித்த, கபத்தால் ஆகியது இவ்வுடம்பு என்னும் கருத்துடையவர்கள் இவர்கள். ஐந்து பூதங்களின் முக்கூட்டு வாத, பித்த, கபமாகவும் அறியப்படுகிறது.

அன்றாட வாழ்விலேயே இவற்றை பயன்படுத்துவோம். இப்ப பயன்படுத்துவது குறைந்து விட்டது அல்லது இல்லை எனலாம். ஊர்புறங்களில் உள்ள பெரியவர்கள் இப்போதும் இந்த சொல்லாடலை பயன்படுத்துவார்கள்.

1. நெஞ்சில் கபம் கட்டிக்கிச்சு (நெஞ்சில் சளி கட்டிக்கிச்சு)

2. பித்தம் தலைக்கு ஏறிடுச்சு (சூடு தலைக்கு ஏறிடுச்சு)

3. வாதம் அதிகம் இருக்குன்னு நினைக்கிறேன் (மூட்டு வலி, கழுத்து வலி வந்தா இப்படி சொல்வார்கள்)

வானமும்(ஆகாயமும்), காற்றும் சேர்ந்து வாதமாகவும், வெப்பம் (சூரியன்) பித்தமாகவும், தண்ணீரும் மண்ணும் கபமாகவும் அறியப்படுகின்றன. அறுசுவையிலும் துவர்ப்பும், புளிப்பும் வாதமாகும். உப்பும் கசப்பும் பித்தமாகும். இனிப்பும் காரமும் கபமும் கபமாகும். இதுவன்றி முக்குணங்களாகிய வாதம், பித்தம் மற்றும் கபத்தின் சேர்க்கையே இவ்வுடலாகும்

முத்திரை பற்றி அடிப்படையான குறிப்பு.
   ---------------------------------------------------------------

 விரலின் நுனி பெருவிரலின் நுனியை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை ( காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) சமப்படுத்துவதாக பொருள்.

 விரலின் நுனி பெருவிரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) குறைப்பதாக பொருள்.

 பெருவிரலின் நுனியால் விரலின் அடிப்பாகத்தை தொட்டால் அது அவ்விரலின் உறுப்பை (காற்று, வானம் (ஆகாயம்), நிலம், நீர்) அதிகரிப்பதாக பொருள்.

கவனிக்க:

வாதம், பித்தம், கபம் அதிகரித்தால் நோய், அதனால் சமப்படுத்தினால் மட்டும் போதும் . சமப்படுத்தும் போதே குறைந்திருக்கும் மூலம் அதிகமாகிவிடுகிறது.

வாதம் இயக்கத்துக்கு காரணமானது. நரம்பு தொடர்பான நோய்கள், இதயம், நுரையீரல் தொடர்பான நோய்கள் வாதம் சீர்கேட்டால் வரும். மூன்று நாடிகளில் வாதம் சீர்கேட்டால் வரும் நோய்களே அதிகம். 80 வகையான நோய்கள் வரும் என்று சொல்லப்படுகிறது. வாதத்துக்கு அடுத்து பித்தம் இதனால் சுமார் 40 வகையான நோய்கள் வரும் எனப்படுகிறது. கபம் தான் கடைசி.

வெப்பம் அதிகமானால் பித்தம் வரும், மலச்சிக்கல் இதில் முதன்மையானது. பித்தம் அதிகமானாலும் நரைக்கும், வயதாகாமல் நரை வந்தால் அது பித்த நரையாக இருக்க வாய்ப்பு அதிகம், வயிற்றில் அமிலம் சுரந்து அது வாய் வழியாக வெளிவரும்.

சளி, எச்சில் அதிகம் சுரப்பது முதலிய நீர் தொடர்பான நோய்கள் கபம் சீர்கேட்டால் வரும்.




உணவுகள்:
  ---------------

1.வாதம்:

வாதத்தைக் கூட்டும் உணவு எது என்றால் அது புளி, உருளைக்கிழங்கு, கொண்டைக்கடலை, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வாழைக்காய், கொத்தவரை, காராமணி, குளிர்பானங்கள், செரிமானத்திற்கு சிரமம் தரும் மாவுப்பண்டங்கள் வாயுவைத் தரும். வாயுவை வெளியேற்றும் இலவங்கப்பட்டை, மிளகு, புதினா, பூண்டு சீரகம், மடக்கறுத்தான் கீரை, வாய்விடங்கம், இதனை உணவில் சேர்ப்பது வாதத்தை குறைத்திட உதவும்.

2.பித்தம்:

பித்தம் அதிகமாக துரித உணவு மற்றும் அதிகம் உணவகங்களில் தின்பது காரணம். (நமக்கே தெரியும் அவை நல்லதில்லை என்று).

பித்தம் குறைக்க உணவில் காரத்தை எண்ணெயை குறைக்க வேண்டும் கோழிக்கறி கூடவே கூடாது. கோதுமைகூட அதிகம் சேர்த்தால் பித்தம் கூடும். அரிசி அந்த விடயத்தில் நல்லது.(என்ன கொஞ்சம் அளவோடு அரிசியின் சட்டையை அதிகம் கழட்டாமல்(கைக்குத்தல்) திங்கணும்). கரிசலாங்கண்ணி கீரை, கறிவேப்பிலை, சீரகம், தனியா, எலுமிச்சை, மஞ்சள், இஞ்சி- என இவையெல்லாம் பித்தம் தணிக்கும். பித்தம் குறைக்க சமையலறை மட்டும் கவனித்தால் போதாது. மனம் குதூகலமாய் இருப்பது அவசியம்

3.கபம்:

பால், இனிப்புகள், நீர்க்காய்கறிகளான தர்பூசணி, மஞ்சள்பூசணி, சுரைக்காய், பீர்க்கு, வெள்ளரி, குளிர்பானம், மில்க் ஸ்வீட், சாக்லெட் என இவையெல்லாம் கபம் வளர்க்கும் காரணிகள். மழைக்காலத்திலும், கோடைக் காலத்தில் கபநேரமான அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் தவிர்க்கவும். மிளகு, சுக்கு, திப்பிலி, ஆடாதொடை, துளசி, கற்பூரவல்லி, தூதுவளை என்பவை கபத்தை குறைக்க உதவும்.

வாதம் இல்லையென்றால் மற்ற இரண்டு நாடிகளும் இயங்காது. அதனால் மூன்று நாடிகளில் வாதம் தான் ராசா.

இந்த நாடிகள் மக்களுக்கு அதிகரிக்கும் மிக மிக குறைவான பேருக்கு தான் குறையும். நல்ல சித்த மருத்துவர்கிட்ட கேட்கனும் அல்லது நல்ல நூற்கள் வாங்கி படிக்கனும். வாதம் பித்தம் கபம் பற்றி சிறிதளவு தெரிஞ்சிக்கிட்டோம். இந்த மூன்று நாடிகளை அதிகரிப்பது குறைப்பது சமன் செய்வது என்பது தான் முத்திரை. இப்ப முத்திரைகள் பற்றி பார்க்கலாம்.

முத்திரைகளை எவ்வளவு நேரம் செய்ய வேண்டும் என்ற கேள்வி வரும். பலர் பல விதமா சொல்றாங்க. (24, 45, 60 நிமிடம் என்கிறார்கள்) அதனால் நாம் பொதுவாக 30 நிமிடம் என்று கொள்வோம். முத்திரைகளை எந்த நிலையிலும் செய்யலாம் அதாவது படுத்துகிட்டு, நடந்துகிட்டு, உட்கார்ந்துகிட்டு. ஆனால் பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அமர்ந்து செய்தால் சிறந்தது. நம்மாள அது முடியலை என்றால் சம்மணம் போட்டு முதுகை நேராக வைத்துக்கொண்டு செய்தால் சிறப்பு, சம்மணம் போட முடியா நிலையில் உள்ளவர்கள் நாற்காலியில் முதுகை நேராக வைத்துக்கொண்டு உட்கார்ந்து செய்யலாம். 30 நிமிடத்திற்கு குறைவாகவோ அதிகமாகவோ செய்தால் பாதிப்பு ஏதும் ஏற்படாது. 30 நிமிடமும் ஒரே மூச்சாக (இடைவெளி விடாமல்) முத்திரை செய்தால் சிறப்பு இந்த அவசர உலகத்தில் ஒரே சமயத்தில் 30 நிமிடம் என்பது முடியாது என்று கருதுகிறீர்களா பாதகம் இல்லை, 5 நிமிடம் என்று 6 முறை இடைவெளி விட்டு செய்யலாம். முத்திரைகளை இரண்டு கையால் செய்ய வேண்டும் அது முடியாதவர்கள் ஒரு கையில் செய்யலாம்..

நமக்கு எது (வாதம், பித்தம், கபம்) குறைவு அதிகம் என்று தெரிந்து செய்தல் நலம், அதனால நாடி பார்க்க தெரிஞ்சிருந்தா சிறப்பு.

யோக முத்திரைகள் செய்யும் முன்...நமது உடலை அதற்காக தயார் செய்வோமா...

முதலில் இரண்டு முத்திரைகள் மட்டுமே செய்து உடலை சுத்தப்படுத்திக்கொள்வோம்...

முதலில் யோகாசனத்தில் வரும் முத்திரையை செய்யவேண்டும்:

இந்த முத்திரையை தொடர்ந்து செய்து வருபவர்க்கு முதுகுத்தண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது.இளமை ஏற்ப்படுதின்றது. முதுகுத்தண்டு வழியாக செல்லும் உடலின் முக்கிய நரம்புகள் எல்லாம் பலம் பெறுகின்றது. நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருகின்றோம். இரண்டு குதிக்கால்களும், பெருங்குடலும் இந்த ஆசனத்தின் போது நன்றாக அழுத்துவதால் நீடித்த மலச்சிக்கல் நீங்குகிறது.

குடலை கழுவினால் மட்டுமே உடலை வளர்க்க முடியும் என்பது சித்தர் வாக்கு.

இதின் செய்முறை:

பத்மாசனத்தில் அமரவும்.இரண்டு உள்ளங்கைகளையும், இரண்டு குதின்கால்களின் மேல் வைத்து கைவிரல்களை மூடிக்கொள்ளவும். அல்லது கைகளை பின்புறமாக மூடிக்கொண்டும் செய்யலாம். நிமிர்ந்து நேரே உட்காரவும்.

நுரைஈரல் நிரம்பும் அளவு நன்றாக மூச்சை உள் இழுக்கவும்.இப்போது மூச்சை விட்டுக்கொண்டே முன்பக்கம் தரையை மூக்கு தொடும் வரை குனியவும். இந்த நிலையில் 10 முதல் 15 நொடிகள் இருக்கவும்.பிறகு மூச்சை இழுத்தவாறே நிமிர்ந்து சாதாரண நிலைக்கு வரவும். இதை தொடர்ந்து 3 முதல் 7 முறை செய்யலாம்.

இந்த ஆசனம் பார்ப்பதற்கு எளிதாக இருந்தாலும் செய்வது அவ்வளவு எளிது அல்ல. சிலருக்கு என்ன செய்தாலும் பத்மாசனம் போடவே வராது. அவர்கள் பத்மாசனம் சரியாக வரும் வரையில் சாதாரணமாக சுகாசனத்தில் அமர்ந்து செய்யலாம்.

பலன்கள்:மலச்சிக்கல் நீங்கும்.முதுகுத்தண்டில் இறுக்கம் நீங்கி முதுகுவலி போன்றவை வராது.முகத்தில் பொலிவும்,தேஜசும் ஏற்படுகிறது.நாளடைவில் வயிறு(தொப்பை), இடுப்பு சதை மற்றும் தொடை பகுதிகள் குறைந்து அழகுடன் இருக்கும். இப்பகுதியில் இருக்கும் நரம்புகள் இறுக்கம் பெரும்.இதனால் இந்த அசனம் எளிதில் செய்து மூக்கை வைத்து தரையை தொடலாம்.

குறிப்பு:

இந்த அசனம் கர்ப்பிணிப்பெண்கள் செய்யக்கூடாது.

இரண்டாவதாக கழிவு முத்திரை:

கட்டைவிரலின் நுனிப்பகுதியால் மோதிரவிரலின் கீழ அதாவது மூன்றாவதுரேகை உள்ள இடத்தை தொடவும். மெல்லியஅழுத்தம்போதுமானது.

சம்மணம், பத்மாசனம், சித்தாசனம் இந்தநிலையில் சுவாசத்தை சாதாரணமாகநிலையில் வைத்து அதை கவனித்துவரவேண்டும்.

தினமும் ஒரு நிமிடங்கள் செய்யும்போது 15 நாட்களில் அல்லது அதற்க்கு முன்காகவே உடலின்கழிவுகள் வெளியேற ஆரம்பிக்கும். அப்போது சிறுநீர் அதிகம்போவது, அதில்வாடைவீசுவது, மலம் அதிகவாடையுடன் அடிக்கடிபோவது, கறுத்துமலம் வெளியேறுவது, வியர்வை அதிகம் வெளியேறுவது, அதில் வாடைவீசுவது, பேதி உண்டாவது, இந்த அறிகுறிகள் அனைத்தும் கழிவு நம் உடலைவிட்டு நீங்குவதாக அர்த்தம்.

பின்பு மூன்று மாதங்களுக்கொருமுறை ஏழுநாட்கள் தொடர்ந்து செய்தால் கழிவுகள் மீண்டும் சேராது.

சிந்தனைச் சக்தி வளர தியான முத்திரை!
---------------------------------------------------------------

தியானம் செய்பவர்கள் சுட்டுவிரல் கட்டை விரலைத் தொடும்படி வைத்துக் கொண்டு தியானம் செய்வார்கள் இதே நிலையில் இருபது நிமிடங்கள் கண்மூடி அமர்ந்தால் மூளையின் சக்தி அதிகரிக்கும். ஞாபகசக்தி, ஒரு முகப்படுத்தும் கவனம் முதலியவை அதிகரிக்கும். தூக்கமின்மை, சென்ஷன் முதலியவை அகலும். மன அமைதி கிடைக்கும்.

மூட்டு வலி குணமாக வாயு முத்திரை!
-----------------------------------------------------------

மூட்டுவலி, இரத்த ஓட்டக் குறைபாடு, பார்க்கின்சன் நோய், வாயுத்தொந்தரவு, செரிமானக் கோளாறு உள்ளவர்கள், விரல்களை இப்படி வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். சுட்டு விரலைக் கட்டை விரலின் அடியைத் தொடும்படி வைத்துக் கொண்டு கட்டை விரல் லேசாகச் சுட்டு விரலை அழுத்தும்படி வைத்துக் கொள்ளவும்.

காது நன்கு கேட்க! சூன்ய முத்திரை
-------------------------------------------------------

காதில் வலி என்றால் இது போலக் கட்டை விரலால் நடுவிரலை மடக்கி அழுத்திக் கொண்டு உட்காரவும். நாற்பது நிமிடங்கள் இதுபோல் அமர்ந்தால் காதுவலி பறந்து போகும். காது கேளாதவர்கள் இந்த ( shunya ) ஷன்ய முத்திரையைத் தொடர்ந்து செய்து வந்தால் காது கேட்க ஆரம்பிக்கும்.

சுறுசுறுப்பாக வாழ பிருதிவி முத்திரை!
-----------------------------------------------------------

மனம் மிகவும் பதற்றமாக உள்ளதா? உடலும் உள்ளமும் சோர்ந்து போய்விட்டனவா? நோய் வாய்ப்பட்ட மனிதனுக்கு உடனடியாக திடவலிமையை அளிக்க வேண்டுமா? அனைத்திற்கும் பிருதிவி முத்திரை பயன்படும். மோதிர விரலைக் கட்டை விரல் நுனியின் மேல் வைத்துக் கொண்டு இருபது நிமிடங்கள் தியான நிலையில் அமருங்கள். அவ்வளவு தான். தேவையான ஆக்ஸிஜன் கிடைத்துவிடும். உற்சாகமும் புதுப்பிக் கப்பட்டு விடும். மதிய உணவுக்கு முன்பு இந்த முத்திரையை செய்து விட்டுச் சாப்பிட்டால் அதன் பிறகு வரும் பொழுதுகள் சுறுசுறுப்பான செயல் நிறைந்த நாளாக அமையும்.

இரத்தம் சுத்தமாக வருண் முத்திரை!
----------------------------------------------------------

இரத்தம் சுத்தமாகவும் தோல் நோய்கள் குணமாகவும், தோல் மிருதுவாக மாறவும் சுண்டு விரல் நுனியையும் கட்டைவிரல் நுனியையும் இது போல வைத்துக் கொள்ளவும். வருண் முத்திரை என்று இதற்குப் பெயர். இரைப்பை குடல் சார்ந்த கோளாறுகள், உடலில் நீர் வற்றால் போன்ற கோளாறுகளையும் இந்த முத்திரை குணமாகும்.

கொழுப்பு கரைய சூரிய முத்திரை!
----------------------------------------------------

உடலுக்குத் தேவையான வெப்பம் கிடைக்கவும் செரிமானம் நன்கு நடக்கவும், உடலில் கொழுப்பு அளவு குறையவும் சூரிய முத்திரை உதவும். மோதிர விரலை மடக்கி அதன் மேல் கட்டை விரலை வைத்து அழுத்திக் கொண்டு தியான நிலையில் அமரவும்.

கண்ணாடியைத் தவிர்க்க பிராண முத்திரை!
---------------------------------------------------------------------

நம் உடலில் ஷாக் அடிப்பதை உணர இந்தப் பிராண முத்திரை உதவும். பிராண முத்திரை செய்தால் நரம்புத் தளர்ச்சி, சோர்வு முதலியன அகலும். கண்ணாடி இன்றிச் சிறந்த கண்பார்வை பெற வாய்ப்பு அதிகரிக்கும். இதற்காகக் கட்டை விரல் நுனியைச் சுண்டுவிரல் மற்றும் மோதிரவிரல் நனிகள் தொடுமாறு வைத்துக் கொண்டு தியான நிலையில் அமரவும். பார்வைத் திறன் அதிகரிக்கும்.

காய்ச்சல் குணமாக லிங் முத்திரை!
-------------------------------------------------------

இரண்டு உள்ளங்கைகளையும் விரல்களையும் இதுபோல் கோர்த்து இறுக்கிக் கொள்ளவும். இடக் கைப் பெருவிரல் நிமிர்ந்து நிற்க வேண்டும். அந்த விரலைச் சுற்றி வலக்கைப் பெருவிரல் இருக்க வேண்டும். பருவநிலை மாற்றத்தால் குளிர், ஜலதோஷம், தொற்று நோய் முதலியன பரவும். வெளியூரில் காய்ச்சல் வருவதுபோல் தோன்றினால் இது போல் நுரையீரல்களுக்கு வெப்பத்தை உண்டாக்கும் சக்தியை லிங் முத்திரை கொடுத்துவிடும். சளிக் காய்ச்சல், கொழுப்பு உள்ளவர்கள் இந்த முத்திரையால் பெரிய அளவில் நன்மை அடையலாம். காய்ச்சலின் போது இந்த லிங்( ling ) முத்திரையை அடிக்கடி பயன்படுத்தவும். இதனால் விரைந்து குணம் பெறலாம்.

நெஞ்சுவலியா? அபான் வாயு முத்திரை
-------------------------------------------------------------

நெஞ்சுவலி, இதயம் வேகவேகமாகத் துடித்தல் முதலியவற்றை அபான் வாயு(apan vayu) முத்திரை குணப்படுத்தும். சுட்டுவிரல், கட்டை விரலின் அடியில் இருக்க வேண்டும். அதன் பிறகு நடுவிரலும் மோதிர விரலும் கட்டைவிரல், நுனியைத் தொடுவது போல வைத்துக் கொண்டு தியானம் செய்யவும்.

மாரடைப்பு, பதற்றம் முதலியவற்றைத் தடுக்க....
----------------------------------------------------------------------------

வாயு முத்திரை, அபான் வாயு முத்திரை ஆகியவற்றுக்கு அடுத்து இப்படி விரல்களை வைத்துக் கொள்ளலாம்.

இரத்தக் கொதிப்பா? வியான முத்திரை
--------------------------------------------------------------

இரத்தக் கொதிப்பைக் கட்டுப்படுத்த கட்டைவிரல் நுனி மீது சுட்டுவிரல், நடுவிரல் நுனிகளை வைத்துக் கொண்டு அமரவும். வியான( vyana ) முத்திரை என்று இதற்குப் பெயர்.

எல்லா வயதுக்காரர்களும் தியான முத்திரையை மேற்கொள்ளலாம், பிறகு உங்கள் வியாதிக்குரிய முத்திரையைச் செய்ய வேண்டும். இதனால் நோய்கள் குணமாவதுடன் உடலில் எதிர்ப்புச்சக்தி வளரும். அது மட்டுமல்ல, மனவளமும் ஆரோக்கியமாகத் திகழும்.

அஸ்வின் முத்திரை:
---------------------------------

பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.