Monday, September 26, 2016

உங்கள் எண்ணை 'ப்ரைவேட் நம்பராக' மாற்றுவது எப்படி..?

நமது அன்றாட வாழ்க்கையில் நாம் அனைவரும் பல தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள வேண்டியது இருக்கிறது சில சமயம் முற்றிலும் தெரியாத நபர்களுகளையும் நாம் அழைக்க நேரிடும். ஒரு தெரியாத நபரிடம் நாம் நமது தனிப்பட்ட தொலைபேசி எண்ணை வெளிப்படுத்துவது என்பது சிலசமயம் அச்சுறுத்தல் சம்பவங்கள் மற்றும் தீங்கிழைக்கும் நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும். அப்படியான நிகழ்வுகளை தடுக்கும் வண்ணம் உங்கள் காலர் அடையாளத்தை மறைப்பது என்பது எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதையும் அதை எப்படி நிகழ்த்துவது என்பதை பற்றிய தொகுப்பே இது. பட்டியலிடப்பட்டுள்ள சில தந்திரங்களை பயன்படுத்தி நீங்கள் உங்கள் 10 இலக்க எண்ணை மாற்ற முடியும் (இந்தியாவிற்குள்) ப்ரைவேட் நம்பராக மாற்றி அமைக்க முடியும்.

வழிமுறை :
 அறியப்படாத ஒரு எண்ணிற்கு அல்லது நண்பர்களை முட்டாளாக்கி விளையாட உங்கள் ஸ்மார்ட்போனின் எண்ணை ஒரு ப்ரைவேட் நம்பராக மாற்ற முடியும், அதை நிகழ்த்த கீழ் வரும் வழிமுறைகளை கவனமாக பின்பற்றவும்.

ஆண்ட்ராய்டு 4.0 மற்றும் முந்தைய பயனர்களுக்கு : 
செட்டிங்ஸ் ஆப் > கால் > அடிஷ்னல் செட்டிங்ஸ் > காலர் ஐடி > ஹைட் நம்பர் ஆப்ஷன் நிகழ்த்தவும். இப்போது நீங்கள் உங்கள் நம்பர்களின் எண்ணிற்கு அழைப்பு மேற்கொள்ள உங்கள் எண் ப்ரைவேட் நம்பர் என்று தோன்றும்.




ஆண்ட்ராய்டு 4.1 மற்றும் பிந்தைய பயனர்களுக்கு : 
போன் ஆப் > மெனு > கால் செட்டிங்ஸ் > காலர் ஐடி > ஹேட் நம்பர் ஆப்ஷன் நிகழ்த்தவும். இப்போது உங்கள் அழைப்பு பிறருக்குஒரு ப்ரைவேட் நம்பராகவே தோன்றும்.


ஐபோன் பயனர்களுக்கு : 
உங்கள் ஐபோனில் செட்டிங்ஸ் ஆப் > போன் ஐகான் கிளிக் செய்யவும் > ஷோ மை காலர் ஐடி > பின்னர் அதை ஒரு ப்ரைவேட் நம்பராக மாற்றியமைத்துவிட்டு பின்னர் 'ஆப்' ஸ்லைடருக்கு மாற்றவும்.


விண்டோஸ் பயனர்களுக்கு : 
 மொபைல் > மோர் பட்டன் ஆப்ஷன் > செட்டிங்ஸ் > ஷோ மை காலர் ஐடி > பின் உங்கள் தேவைக்கு ஏற்ப நோ ஒன் அல்லது மை காண்டாக்ட்ஸ் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யவும். முக்கிய குறிப்பு : உங்கள் எண்ணை ப்ரைவேட் நம்பராக மாற்றியமைக்க முதலில் நீங்கள் உங்கள் ஆப்ரேட்டரை தொடர்பு கொள்ள வேண்டும். ஏர்டெல், வோடபோன், மற்றும் பி.எஸ்.என்.எல் ஆகிய நிறுவனங்கள் டயல்போர்ட் (Dialport), விஐபி மொபைல், வோடபோன் விபிஎன், வாய்ஸ் விபிஎன் போன்ற தனி சேவைகளையே கொண்டுள்ளது.

உங்களுக்கு என்ன நோய்? உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:-

1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி....?
சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது. சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை அகற்றும் வேலையைச் செய்பவை. அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால், உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும். இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும்.
டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும்.
2. கண் இமைகளில் வலி.. என்ன வியாதி....?
அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம். மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது.
டிப்ஸ்: போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும். அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
3. கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி...?
அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது. இந்த ஸ்டிரெஸ்ஸினால் உங்கள் மூளை குழப்பமடைந்து கண்களுக்கு தவறான தகவல்களை அனுப்பிவிடுகிறது. அந்த நேரத்தில் நமக்கு சட்டென அதிகப்படியான வெளிச்சங்களும், புள்ளிகளும் பார்வைக்குத் தெரிகிறது.
டிப்ஸ்: எப்பொழுதும் நிமிர்ந்து நிற்க வேண்டும். அதிகமாக காபி குடிக்கும் பழக்கத்தையும் தவிர்க்க வேண்டும்..
4. கண்கள் உலர்ந்து போவது.. என்ன வியாதி...?
நாம் ஏ.சி. நிறைந்த இடங்களில் அதிக நேரத்தைச் செலவிடும் போதும், கண்கள் அதிக வேலையினால் களைப்படையும் போதும் நம் கண்கள் உலர்ந்து மிகுந்த பாதிப்புக்குள்ளாகிறது.
டிப்ஸ்: குறைந்தது எட்டு மணி நேர இரவுத் தூக்கம் மிகவும் அவசியம். தினமும் கண்களை மேலும்_கீழுமாகவும், பக்கவாட்டின் இருபுறமும் அசைத்தல் போன்ற எளிய உடற்பயிற்சிகளை ஒரு நாளில் இரண்டு முறை செய்யவேண்டும்.
5. தோலில் தடிப்புகள் ஏற்படுதல் என்ன வியாதி...?
இருதய நோய் இருக்கலாம். குறிப்பாக இது காதுகளுக்குப் பக்கத்திலிருக்கும் தோலில் ஏற்படுமானால் உங்களுக்கு இருதய கோளாறு உள்ளது என்று தெரிந்து கொள்ளலாம். ஆனால், இப்படி அந்த இடத்தில் ஏன் தோல் தடிக்கிறது என்று டாக்டர்களுக்கே இன்னும் சரிவர புரியவில்லை என்கிறார்கள்.
டிப்ஸ்: அதிகப்படியான மன அழுத்தம் ‘ஹார்ட்_அட்டாக்’ வருவதற்கான வாய்ப்பை உருவாக்கும். மனதை பாரமில்லாமல் லேசாக வைத்துக் கொள்ள முயற்சிப்பதும், பிரச்சினைகளை நல்ல முறையில் அணுகுவதும் இதைத் தவிர்க்கும்.
6. முகம் வீக்கமாக இருப்பது என்ன வியாதி....?
உடலில் தண்ணீர் இழப்பு அதிகமாக இருப்பது. இப்படி ஏற்படும்போது உடலுக்குத் தண்ணீர் அதிகம் தேவைப் படுகிறது. உடலுக்குப் போதுமான தண்ணீர் கிடைக்காமல் போனால், ரத்த செல்கள் விரிவடைந்து முகம் வீக்கமாகத் தெரியும்.
டிப்ஸ்: ஒரு நாளைக்கு எட்டு கிளாஸ் தண்ணீராவது அருந்துவது அவசியம். எப்போதும் தண்ணீர் பாட்டிலை உடன் வைத்துக் கொண்டால் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட்டு அருந்துவீர்கள்.
7. தோல் இளம் மஞ்சளாக மாறுவது என்ன வியாதி...?
கல்லீரல் நோய். கல்லீரல் பாதிப்படையும்போது உடலிலிருக்கும் பித்த நீர் போன்ற மஞ்சள் நிற திரவங்களை வெளியேற்ற முடிவதில்லை. இதனால் தோல் மஞ்சள் நிறத்திற்கு மாறுகிறது.
டிப்ஸ்: அதிகப்படியான ஆல்கஹாலின் அளவால் இப்படி கல்லீரல் பிரச்சினை ஏற்படுகிறது. குடிப்பழக்கம் இருந்தால், உடனடியாக நிறுத்தி விடுவதே நல்லது.
8. பாதம் கை கால்களில் சில நேரங்களில் சுறுசுறுவென
உள்ளே ஏதோ ஓடுவது போலிருத்தல் என்ன வியாதி...?
சீரான ரத்த ஓட்டமின்மை. ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தால் உடலின் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. இந்த அறிகுறி உங்கள் ரத்தமானது பாதம் வரை சீராக ஓடச் செய்யும் முயற்சியே ஆகும்.
டிப்ஸ்: வைட்டமின் நிறைந்த உணவுகளும் கீரைகளும் சாப்பிட வேண்டும்.
9. பாதம் மட்டும் மரத்துப் போதல் என்ன வியாதி...?
நீரிழிவு நோயின் பாதிப்பு. டயபடீஸ், ரத்தத்திலிருக்கும் செல்களைப் பாதிப்பதோடு, நரம்புகள் செய்யும் வேலைகளையும் தடுத்து விடுகிறது. இதன் விளைவாக சில நேரங்களில் கால்களில் செருப்புக்கள் உராய்ந்து ஏற்படுத்தும் எரிச்சலையோ வலியையோகூட உணர்ந்து கொள்ள முடியாது.
டிப்ஸ்: பிளாக் டீ அல்லது கிரீன் டீ உங்கள் இரத்தத்திலிருக்கும் குளுக்கோஸின் அளவைக் குறைத்து நீரிழிவு நோயைக் கொஞ்சம் கட்டுப்படுத்தும். உடல் பருமனும்கூட டயபடீஸ் வருவதற்கு ஒரு முக்கிய காரணமாகும். அதனால் உடல் எடை அதிகமாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
10. பாதங்களில் உலர்ந்த வெடிப்புகள் என்ன வியாதி...?
தைராய்டு பிரச்சினையாக இருக்கலாம். இந்த தைராய்டு சுரப்பிதான் நம் தோலுக்குத் தேவையான ஹார்மோன்களை ஒழுங்கு செய்கிறது. இந்த தைராய்டு சுரப்பி சரியாக வேலை செய்யாதபோது, நம் பாதங்களின் தோல் உலர்ந்துபோகும். பாதங்களை சரிவரபாராமரிக்காமல் இருந்தால் அதிக அளவில் பாதிப்படைந்துவிடும்.
டிப்ஸ்: தைராய்டு பிரச்சினையின் வேறு சில அறிகுறிகள், அதிக சோர்வும் உடல்எடை அதிகமாதலும் இதில் எந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரைச் சந்திப்பது அவசியம்.
11. சிவந்த உள்ளங்கை என்ன வியாதி...?
கல்லீரல் பிரச்சினையாக இருக்கலாம். நோய்வாய்ப்பட்ட கல்லீரலால், நம் இரத்தத்திலுள்ள ஹார்மோன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் போகும். அதனால் உங்கள் ரத்தத்தின் நிறம் அதிக சிகப்பாகிவிடும். கல்லீரல் சரியாக வேலை செய்யவில்லை என்பதை, அதிக சிவப்பான உள்ளங்கைகள் தான் சட்டென காட்டிக் கொடுக்கும். காரணம் உடலின் மற்ற பாகங்களைவிட உள்ளங்கையின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதுதான்.
டிப்ஸ்: கீழாநெல்லியை வாரத்தில் ஒருதரம் சாப்பிடுவது கல்லீரலைச் சரிப்படுத்தும். உடம்பின் விஷத்தன்மையை மாதம் ஒரு முறையாவது போக்க, ஒரு நாள் பழம் மட்டும் சாப்பிடுங்கள்.
12. வெளுத்த நகங்கள் என்ன வியாதி....?
இரத்த சோகை இருக்கிறது. இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும்!
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
டிப்ஸ்: இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும். ஈரல், கீரை வகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது டாக்டரின் ஆலோசனையின் படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி_12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
13. விரல் முட்டிகளில் வலி என்ன வியாதி...?
ஆர்த்தரடீஸ் என்னும் மூட்டுவலி இருக்கிறது. இதனால் விரல் முட்டிகளில் வீக்கமும் வலியும் ஏற்படும். இந்த வலி அதிகமாக விரல் முட்டிகளில்தான் காணப்படும். அவை வடிவத்தில் சிறியதாக இருப்பதால், இந்த வலி உடனே வர வாய்ப்புண்டு. வயதானவர்களுக்கு மட்டுமே இந்த மூட்டுவலி வருவதில்லை. எந்த வயதுக்காரர்களுக்கும் வரலாம்.
டிப்ஸ்: உடலுக்குத் தேவையான கால்சியம் மற்றும் வைட்டமின் ஙி சரியான அளவில் எடுத்துக் கொண்டால் மூட்டு வலி வருவதைக் குறைக்கலாம். ஒழுங்கான உடற்பயிற்சிகள் மற்றும் உடல்பருமனைக் குறைத்தல் இரண்டும் மூட்டு வலி வராமல் தடுக்கும்.
14. நகங்களில் குழி விழுதல் என்ன வியாதி...?
சோரியாஸிஸ் இருக்கிறது. இது ஒரு மோசமான தோல் வியாதி. இதன் மூலம் தோலும் நகங்களும் மிகவும் மென்மையாகி விடும். இந்த வியாதி வந்தால் மென்மையான நகங்களில் குழிகள் வரக்கூடும்.
டிப்ஸ்: உடனடியாக சரும வியாதி நிபுணரைக் கலந்தாலோசிக்கவும். ஸ்டிரெஸ்ஸைக் குறைத்துக் கொண்டாலே வியாதி அதிகமாவதைத் தடுக்கலாம்.
16. வாய்ஈறுகளில் இரத்தம் வடிதல் என்ன வியாதி....?
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கிறது. ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்று நோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
டிப்ஸ்: தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது. www.puradsifm.com
17. சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் என்ன வியாதி....?
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமாக ஸ்டிரெஸ் செய்து கொள்வதாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் ஃபோலிக் ஆசிடின் குறைவு மற்றும், இரும்புச்சத்து அல்லது வைட்டமின் பி_12ன் குறைவினாலும் இப்படி ஏற்படுகிறது.
டிப்ஸ்: ‘மல்டி_விட்டமின்’ மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ளவேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் ஸ்டிரெஸ்ஸைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் இன்பெக்ஷன் குறைந்து வாய்ப்புண் ஆறும்.
18. வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது. என்ன வியாதி....?
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக்கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த டீஹைடிரேஷன் ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
டிப்ஸ்: நிறைய திரவ ஆகாரம் எடுத்துக் கொள்ளவேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரைலிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ பழச்சாறோ அருந்துதலும் நல்ல பலன் தரும்.
--------------------------------------------------------------------------------------

Thursday, September 22, 2016

இனி ஸ்விட்ச்டு ஆஃப் தேவையில்லை : வீட்டிலேயே மொபைல் ஜாமர் செய்வது எப்படி..?

மொபைல் போன்கள் நம் வாழ்க்கையில் ஒருங்கிணைந்த கருவியாக மாறிவிட்டது. நாம் எங்கு சென்றாலும் அதை எல்லா இடங்களிலும் கொண்டு செல்ல வேண்டிய, செயல்படுத்த வேண்டியபடி நமது தேவைகளுக்கான ஒரு எல்லைக்குள் நிர்ப்பந்தபட்டிருக்கிறோம். ஆனால், சில நேரங்களில் உங்கள் தொலைபேசி உங்களை எரிச்சலூட்ட தவறுவதில்லை குறிப்பாக நெனெகல் எங்கு அமைதியை கடைபிடிக்கிறீர்களோ, எதிர்பார்க்கிறீர்களோ அந்த இடங்களில் மொபைல் சத்தம் உங்கள் பொறுமையை சற்றே சோதித்து பார்க்கும். அதை தடுப்பதறகான ஒரு வழியாய் சமிக்ஞைகளை தடுக்கும் மொபைல் போன் ஜாமர் பயன்படுத்தலாம் என்பது ஒரு நல்ல யோசனை தான் இருப்பினும் அது சட்டவிரோத என்பதால் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு மொபைல் போன் ஜாமர் பயன்படுத்த வேண்டாம் என்று பரிந்துரைக்கிறோம் உடன் உங்கள் வீட்டில் உள்ள எளிய உபகரணங்கள் பயன்படுத்தி ஒரு மொபைல் ஜாமர் உருவாக்குவது எப்படி என்ற வழிமுறைகளையும் உங்களுக்கு வழங்குகிறோம்.

எப்படி வேலை செய்யும்..? 

ஒரு மொபைல் ஜாமரை கட்டமைக்கும் முன்பு அது எப்படி வேலை செய்யும் என்பதை நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும். பெரும்பாலான கையடக்க தொலைபேசிகள் ஜிஎஸ்எம் 800 என்ற பெயர் கொண்ட தகவல் தொடர்பு 800மெகாஹெர்ட்ஸ் பேண்ட்டை தான் தொடர்பு கொள்ள பயன்படுத்திக் கொள்ளும் . எனவே, அடிப்படையில் உங்கள் மொபைல் போன் ஜாமர் கொண்டு அதிர்வெண் வரம்பில் (ஜிஎஸ்எம் 800 ) சுற்றிய சிக்னல்களை தடுக்க வேண்டும்.

என்ன உபகரணங்கள் தேவை.?

 45 மெகாஹெர்ட்ஸ் ப்ரிக்குவன்சி ரேன்ஜ் கொண்ட ஒரு க்ளாக் ஆக்சிலரேட்டர் ஆப்ரேட்டிங் (clock oscillator operating). இது மினி சரக் க்யூட் மிக்ஸரில் (mini-circuit mixer) அமைந்துள்ள லோக்கல் ஆக்சிலரேட்டர் போர்ட்-ல் (Local Oscillator port) நாய்ஸ் சோர்ஸ் (noise source) ஆக செயல்படும். மேலும் : உடன் ஒரு நல்ல ஆர்எப் டெஸ்டிங் சாதனம் (RF-testing equipment), ஒரு அலுமினியம் பாக்ஸ், பழைய போன்களில் காணப்படும் அல்ட்ரா-ஹை ப்ரிக்குவன்சி கனெக்டர்கள் (ultra-high frequency connectors), ஒரு 9-வோல்ட் பேட்டரி, மற்றும் ஒரு வோல்டேஜ் ரெகுலேட்டர் (voltage regulator) உருவாக்குவது எப்படி.? மேலே குறிப்பிடப்ட்டுள்ள அனைத்து உபகரணங்களையும் சேர்த்தவுடன், மொபைல் ஜமார் செய்வதை கீழ் அளிக்கப்பட்டுள்ள 7 எளிய வழிமுறைகளை பயன்படுத்தி செய்ய தொடங்கலாம்.

 வழிமுறை #01 

செய்யபப்டும் உபகரணங்களை பாதுக்கும் வெளி சட்டமாக அலுமினிய பெட்டியை பயன்படுத்தவும். 

வழிமுறை #02 

உள்ளீடு (இன்புட்) மற்றும் வெளியீடு (அவுட்புட்) மூலங்களாக தீவிர உயர் அதிர்வெண் இணைப்பிகளை (ultra-high frequency connectors) பயன்படுத்தவும். 

வழிமுறை #03 

இப்போது மினி சரக் க்யூட் மிக்ஸர் உடன் ஆர்எப் கனெக்ட்டர்களை இணைக்கவும். 

வழிமுறை #04

 இப்பொது 9 வோல்ட் பேட்டரி மற்றும் மின்னழுத்த சீராக்கி (வோல்டேஜ் ரெகுலேட்டர்) பயன்படுத்தி அனைத்து கூறுகளுக்கும் சக்தி வழங்க வேண்டும்.

 வழிமுறை #05

 அலுமினிய பாக்ஸ் உடல் மேல் ஒரு பவர் ஆன் /ஆஃப் பொத்தானை வைக்கவும்.

 வழிமுறை #06

 இறுதியாக, உள்ளீடு மற்றும் வெளியீடு ஆண்டெனாக்களை தீவிர உயர் அதிர்வெண் இணைப்பிகளில் இணைக்கவும்.

வழிமுறை #07 

இப்போது சிக்னல்களை ஜாம் செய்ய ஆன் பொத்தானை அழுத்தி சோதிக்கவும். கவனத்திற்கு: பயனர்கள் தங்கள் சொந்த விருப்பத்தில் இதை நடைமுறைப்பபடுத்தி பார்க்கும்படி கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Tuesday, September 20, 2016

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கறையை மஞ்சளை வைத்து எப்படி போக்குவது என தெரியுமா?

 பற்களில் மஞ்சள் கறை இருப்பது இயல்பாக நீங்கள் சிரிக்கும் முறையை கூட பாதிக்கும். எங்கு யாராவது நமது பற்களில் மஞ்சள் கறை இருப்பதை கண்டால் கேலி, கிண்டல் செய்வார்களோ என வாய் திறக்காமல் மிகவும் ஃபார்மலாக சிரிப்பவர்கள் பல பேர் இருக்கிறார்கள். 

 பலரும் பல டூத் பேஸ்ட்டை பயன்படுத்தியும் இந்த பற்களின் மஞ்சள் கரையை போக்க முடியாமல் தவிப்பதுண்டு. சிலர் எதுவும் வேலைக்கு ஆகவில்லை எனில், நேராக பல் மருத்துவரிடம் சென்று செயற்கை முறைகளை பின்பற்ற ஆரம்பித்துவிடுவார்கள்.

தேவையான பொருள்:
 கடைகளில் விற்கும் மஞ்சள் பொடியை தேர்வு செய்யாமல், இயற்கையான மஞ்சளை அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இந்த இயற்கை மஞ்சளில் தான் செயற்கை இரசாயன கலப்பு இருக்காது. பயன்பாட்டு முறை உங்கள் டூத் பிரஷை ஈரப்படுத்தி எடுத்துக் கொள்ளுங்கள். மிக குறைவான அரை கால் பங்கு (1/8) மஞ்சள் எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு மஞ்சளை தொட்டு மென்மையாக பிரஷ் செய்யுங்கள். 3 - 5 நிமிடங்கள் உடனே வாய் கழுவிவிட கூடாது. பிரஷ் செய்த பிறகு 3-5 நிமிடங்கள் அந்த மஞ்சள் பற்களில் இருக்கும் படி பேசாமல் அமைதியாக உட்கார்ந்துக் கொள்ளுங்கள். மீண்டும் பல் துலக்குங்கள் 5 நிமிடங்கள் கழித்து நன்கு வாய் கொப்பளித்து கழுவி கொள்ளவும். பிறகு சாதாரண பல் போடி அல்லது டூத் பேஸ்ட் பயன்படுத்தி மீண்டும் பல் துலக்குங்கள். இது வாயில் வீசும் அந்த மஞ்சளின் வாசம் போவதற்கு உதவும். ஒரு வாரம் தொடர்ந்து ஒரு வாரம் இதை பின்பற்றி வந்தால் பற்களில் படிந்திருக்கும் அந்த மஞ்சள் கறையை எளிதாக போக்கிவிடலாம். நீங்கள் இதை பின்பற்றிய முதல் நாளிலேயே மாற்றத்தை உணர முடியும்.

 மஞ்சள் டூத் பேஸ்ட் தேவையான பொருட்கள்:
 1/4 டீஸ்பூன் இயற்கை மஞ்சள் பொடி ; 1/8 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய்   மஞ்சள் டூத் பேஸ்ட் செய்முறை மஞ்சள் தூள் மற்றும் தேங்காய் எண்ணெய்யை பேஸ்ட் போன்று குழைத்து கொள்ளுங்கள். வெறுமென தண்ணீர் கலந்து பயன்படுத்துவதை விட இது இன்னும் சிறந்த பயனளிக்கும் என கூறப்படுகிறது. ஏனெனில், தேங்காய் எண்ணெயும் சிறந்த இயற்கை சுத்திகரிப்பு மூலப்பொருள் ஆகும்.   தேங்காய் எண்ணெய் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி ஆயில் புல்லிங் செய்து வந்தாலும் கூட வாய் துர்நாற்றம், பற்களில் மஞ்சள் கறை போன்றவற்றில் இருந்து சீரிய முறையில் தீர்வுக் காண முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tuesday, September 13, 2016

Do you know other Android keypad commands (dialer codes)?

Some of them are listed here :
*#*#checkin#*#* Phones home to check for updates.
*#*#info#*#* - Enters a detailed phone information menu.
*#*#1472365#*#* : Access to the GPS config menu (useful for patching Galaxy S GPS failure)

*#*#4636#*#*
This code can be used to get some interesting information about your phone and battery. It shows following 4 menus on screen:
  • Phone information
  • Battery information
  • Battery history
  • Usage statistics
*#*#7780#*#*
This code can be used for a factory data reset. It'll remove following things:
  • Google account settings stored in your phone
  • System and application data and settings
  • Downloaded applications
It'll NOT remove:
  • Current system software and bundled applications
  • SD card files e.g. photos, music files, etc.
PS: Once you give this code, you get a prompt screen asking you to click on "Reset phone" button. So you get a chance to cancel your operation.

*2767*3855#
Think before you give this code. This code is used for factory format. It'll remove all files and settings including the internal memory storage. It'll also reinstall the phone firmware.
PS: Once you give this code, there is no way to cancel the operation unless you remove the battery from the phone. So think twice before giving this code.

*#*#34971539#*#*
This code is used to get information about phone camera. It shows following 4 menus:
  • Update camera firmware in image (Don't try this option)
  • Update camera firmware in SD card
  • Get camera firmware version
  • Get firmware update count
WARNING: Never use the first option otherwise your phone camera will stop working and you'll need to take your phone to service center to reinstall camera firmware.

*#*#7594#*#*
This one is my favorite one. This code can be used to change the "End Call / Power" button action in your phone. Be default, if you long press the button, it shows a screen asking you to select any option from Silent mode, Airplane mode and Power off.
You can change this action using this code. You can enable direct power off on this button so you don't need to waste your time in selecting the option.

*#*#273283*255*663282*#*#*
This code opens a File copy screen where you can backup your media files e.g. Images, Sound, Video and Voice memo.

*#*#197328640#*#*
This code can be used to enter into Service mode. You can run various tests and change settings in the service mode.

WLAN, GPS and Bluetooth Test Codes:
*#*#232339#*#* OR *#*#526#*#* OR *#*#528#*#* - WLAN test (Use "Menu" button to start various tests)
*#*#232338#*#* - Shows WiFi MAC address
*#*#1472365#*#* - GPS test
*#*#1575#*#* - Another GPS test
*#*#232331#*#* - Bluetooth test
*#*#232337#*# - Shows Bluetooth device address

*#*#8255#*#*
This code can be used to launch GTalk Service Monitor.

Codes to get Firmware version information:
*#*#4986*2650468#*#* - PDA, Phone, H/W, RFCallDate
*#*#1234#*#* - PDA and Phone
*#*#1111#*#* - FTA SW Version
*#*#2222#*#* - FTA HW Version
*#*#44336#*#* - PDA, Phone, CSC, Build Time, Changelist number

Codes to launch various Factory Tests:
*#*#0283#*#* - Packet Loopback
*#*#0*#*#* - LCD test
*#*#0673#*#* OR *#*#0289#*#* - Melody test
*#*#0842#*#* - Device test (Vibration test and BackLight test)
*#*#2663#*#* - Touch screen version
*#*#2664#*#* - Touch screen test
*#*#0588#*#* - Proximity sensor test
*#*#3264#*#* - RAM version

Monday, September 12, 2016

வாட்ஸ்ஆப் அப்டேட் : இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா.??

வாட்ஸ்ஆப் அப்டேட் : இந்த அம்சங்கள் பற்றி உங்களுக்குத் தெரியுமா.??

வாட்ஸ்ஆப் இல்லாத ஸ்மார்ட்போன்களே இல்லை, இதோடு பெரும்பாலானோர் வாட்ஸ்ஆப் மட்டும் பயன்படுத்த மட்டுமே ஸ்மார்ட்போன்களை வாங்குகின்றனர். 2009 ஆம் ஆண்டு வெளியான குறுந்தகவல் செயலியான வாட்ஸ்ஆப் உலகம் முழுக்க அதிகம் பயன்படுத்தப்படும் செயலியாகவும் இருக்கின்றது. இந்த ஆண்டின் துவக்கம் முதலே வாட்ஸ்ஆப் நிறுவனம் பல்வேறு அம்சங்களை வழங்கி வருகின்றது. இதோடு வாரம் ஒரு அப்டேட் என வாட்ஸ்ஆப் மிக வேகமாக புதிய அம்சங்களை வழங்கி வருகின்றது. அதிகம் பேர் பயன்படுத்தும் வாட்ஸ்ஆப் செயலியில் புதுப் புது அப்டேட்களின் மூலம் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. சீரான இடைவெளியில் செயலியினை அப்டேட் செய்யும் போது புதிய அம்சங்களைப் பற்றி தெரிந்து கொண்டு அவற்றை பயன்படுத்த முடியும்.

குரல் 
மிகப்பெரிய குறுந்தகவல்களை டைப் செய்வதைத் தவிர்த்து மைக் பட்டன் அழுத்தி உங்களது தகவலை குரல் மூலம் அனுப்ப முடியும்

குறுந்தகவல் 
க்ரூப் சாட் செய்யும் போது நீங்கள் அனுப்பிய குறுந்தகவலினை யார் யார் படித்தது என்பதை அறிந்து கொள்ள குறுந்தகவலை அழுத்திப் பிடித்து இன்ஃபோ ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்த பின் குறுந்தகவல் அனுப்பப்பட்ட நேரம் முதல் அனைத்துத் தகவல்களையும் பார்க்க முடியும்.



பதில் 
ஒரே நேரத்தில் அதிகப்படியான குறுந்தகவல்கள் வரும் போது குறிப்பிட்ட குறுந்தகவலுக்கு மட்டும் பதில் அளிக்க முடியும். இதற்குக் குறிப்பிட்ட குறுந்தகவலை அழுத்திப் பிடித்து 'reply' ஆப்ஷனை தேர்வு செய்து பதில் அளிக்கலாம்.



ஷார்கட் 
குறிப்பிட்டவரின் சாட்களை மட்டும் ஹோம் ஸ்கிரீனில் ஷார்ட்கட் போன்று செட் செய்ய முடியும். இதற்குக் குறிப்பிட்ட காண்டாக்ட் சாட் விண்டோ சென்று செட்டிங்ஸ் -- மோர் -- ஆட் ஷார்ட்கட் ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும்.



ஸ்டைலைஸ் 
உங்களது குறுந்தகவல்களுக்கு முன்பும் பின்னும் * பயன்படுத்தினால் குறிப்பிட்ட வார்த்தை போல்ட் செய்யப்படும், இதே போல் _ பயன்படுத்தினால் இட்டாலிக் ஆப்ஷனும் ~ பயன்படுத்தும் போது ஸ்ட்ரைக் கிடைக்கும்.



மியூட் 
அதிகப்படியான குறுந்தகவல்களால் தொந்தரவு ஏற்படும் போது குறிப்பிட்ட க்ரூப் சாட்களை மியூட் செய்ய முடியும். இதற்கு க்ரூப் பெயரை தேர்வு செய்து Mute ஆப்ஷனை கிளிக் செய்து எவ்வளவு நேரம் இந்த ஆப்ஷன் செயல்பட வேண்டும் என்பதை கிளிக் செய்யலாம்.



பிராட்காஸ்ட் 
ஒரே நேரத்தில் பலருக்கும் குறுந்தகவல் அனுப்ப பிராட்காஸ்ட் ஆப்ஷனை பயன்படுத்தலாம். இதற்கு சாட் ஸ்கிரீன் சென்று மெனு -- நியூ பிராட்காஸ்ட் ஆப்ஷன் கிளிக் செய்து காண்டாக்ட்களை தேர்வு செய்து ஒரே நேரத்தில் பலருக்கும் குறுந்தகவல் அனுப்ப முடியும்.



வழி 
உங்களது நண்பர்களுக்கு நீங்கள் இருக்கும் இடத்தை வாட்ஸஆப் மூலம் பகிர்ந்து கொள்ள முடியும். இதற்கு ஷேர் ஆப்ஷனை கிளிக் செய்து, விலாசத்தை அனுப்ப கோரு்ம ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இந்த ஆப்ஷன் பயன்படுத்த உங்களது ஜிபிஎஸ் ஆன் செய்யப்பட்டிருக்க வேண்டும்.



வால்பேப்பர்
 உங்களது வாட்ஸ்ஆப் வால்பேப்பரை மாற்ற முடியும். இதற்கான ஆப்ஷன் செட்டிங்ஸ் சென்று செட் செய்ய வேண்டும்.


சாட் வரலாறு
 சில நாட்களுக்கு முன் நீங்கள் அனுப்பிய குறுந்தகவலை தேட முடியும். இதற்கு காண்டாக்ட் திரை சென்று ஆப்ஷன் -- சர்ச் -- நீங்கள் தேட விரும்பும் தகவலை டைப் செய்தால் போதும்

பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் கரையை போக்கும் எளிய வீட்டுமுறை!

பலரும் எதிர்கொள்ளும் சங்கோஜமான நிலை இது. சரியாக பல் துலக்கினாலும் கூட சிலருக்கு பற்களில் இருக்கும் மஞ்சள் கரை போகாது. அதிலும் பற்களின் உட்புறம் படியும் மஞ்சள் கரையை போக்க வேண்டும் என்றால் மருத்துவரிடம் தான் செல்ல வேண்டும் என்ற நிலை தான் நிலவுகிறது. ஆனால், நமது வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே எளிதாக பற்களில் படியும் மஞ்சள் கரையை போக்க முடியும். பற்களின் மஞ்சள் கரையை போக்க உதவும் இந்த வீட்டு முறை நிவாரணி பொருளை எப்படி தயாரிப்பது, அதற்கு என்னவெல்லாம் வேண்டும் என தொடர்ந்து பார்க்கலாம்....

தேவையான பொருட்கள்: 
பேக்கிங் சோடா 
டூத்பிரஷ் 
ஹைட்ரஜன் பெராக்ஸைடு 
உப்பு 
தண்ணீர் 
டென்டல் பிக் 
ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ்

செயலாக்க முறை #1 
முதலில் 1 டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவுடன், 1/2 டீஸ்பூன் உப்பை சேர்த்து ஒரு கப்பில் கலந்துக் கொள்ளவும்.பிறகு தண்ணீரில் நனைத்த டூத்பிரஷ் கொண்டு பற்களில் மெல்ல தேய்த்து, துப்புங்கள். இதை தொடர்ந்து ஐந்து முறை செய்ய வேண்டும்.

செயலாக்க முறை #2 
ஒரு கப் ஹைட்ரஜன் பெராக்ஸைடு மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதை ஒரு நிமிடம் வாயில் கொப்பளிக்க வேண்டும். கொப்பளித்த பிறகு குளிர்ந்து நீரில் ஒரு முறை வாய் கொப்பளியிங்கள்.

செயலாக்க முறை #3 
டென்டல் பிக் பயன்படுத்தி பற்களில் மஞ்சள் கரை படிந்திருக்கும் இடத்தில் தேய்க்கவும். தேய்க்கும் போது ஈறுகளில் படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இல்லையேல் ஈறுகளில் சேதம் அல்லது எரிச்சல் உண்டாக வாய்ப்புகள் உண்டு

செயலாக்க முறை #4 
ஆண்டிசெப்டிக் மவுத்வாஷ் கொண்டு இரண்டு நாளுக்கு ஒருமுறை வாய் கொப்பளித்து வர வேண்டும். இப்படி செய்து வந்தால் பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை எளிதாக போக்கிவிடலாம்.